நாட்டுபற்றை வளர்க்க திமுக என்ன செய்தது?

நாட்டுக்கு திமுக என்ன செய்தது என்றால், அது சமூக நீதி காத்தது என சொல்லி சீறுகின்றார்கள்

சர்ச்சையான ஆர்,எஸ்.எஸ் கூட சீனப்போரிலும், வங்கபோரிலும் எல்லையில் சென்று ஏதோ செய்தது, முடிந்த‌ சேவையினை செய்தது

ஆனால் திமுக போன்ற கட்சிகள் என்ன செய்தது என்றால், அதே பதில்தான் இது சமூக நீதிகாத்த இயக்கம்

பெரியார் என்ன அடுத்த நாட்டு நீதியினையா காத்தார்? அவர் அரசியலுக்கா வந்தார்? அரசியலுக்கு வராமல் சமூக நீதியினை காக்க முடியாதா என்றால் நீ சங்கி என பட்டம் கட்டிவிட்டு ஓடிவிடுகின்றார்கள்

நாட்டுபற்றை வளர்க்க திமுக என்ன செய்தது? ஒன்றுமில்லை என்பதை தவிர என்ன சொல்ல முடியும்?

இதற்கு மேல் கேட்டால் நாட்டுபற்றை நாங்கள் ஏன் வளர்க்க வேண்டும்? இது திராவிட இயக்கம் என்கின்றார்கள்,

சரி திராவிட பற்றையாவது வளர்த்து தனி நாடாவது கேட்டீர்களா என்றால் சத்தமே இருக்காது


பெர்முடா முக்கோண மர்மத்தை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர் : செய்தி

முடிந்தால் அவர்களை அப்பல்லோ மர்மத்தை கண்டுபிடிக்க சொல்லுங்கள் பார்க்கலாம், முடியுமா?


தமிழகம் இந்த மராட்டியர்களை போல் சிந்திக்கவில்லை என்பதுதான் ஆறுதல்

Image may contain: sky, tree, plant, cloud, outdoor and nature

1818ம் ஆண்டு தங்கள் ராஜ்யத்தை விஸ்தரித்த ஆங்கிலேயர்கள் தமிழகம், வங்கம் என பிடித்துவிட்டு மராத்தியர் சரிந்த காலங்களில் அங்கும் கால்பதித்தனர்

எங்கு சென்றாலும் சொந்த படையோடு வென்றவன் அல்ல ஆங்கிலேயன், இங்குள்ள மக்களையும் படையில் சேர்த்தே சண்டையிடுவான்

தமிழகம், வங்கம், பீகார் எல்லாம் இதே வேலைதான், அப்படியே மகராஷ்டிரம் பக்கம் கொஞ்சம் உள்ளூர் மக்களை சேர்த்து மராட்டிய ஆளும் வர்க்கத்தை வென்றான்

அங்கு ஒரு நினைவு தூணும் உண்டு, கோரேகான் என்பது அந்த இடம்

இது கர்நாடக போர், பிளாசி போர், பஞ்சாப் போர் போன்று நடந்ததது, அதுதான் வரலாறு

ஆனால் ஆங்கிலேய படையில் தலித் மக்கள் அதிகம் இருந்ததாலும் அவர்கள் உயர்சாதியினை வென்றதாலும் இந்த போர் திசைமாறிற்று

எப்படி மாறிற்று? தலித் புரட்சி, தலித்துகள் மேல்சாதியினை ஓட விரட்டிய புரட்சி நாள் என மாறிற்று

அடிக்க சொன்னது யார் ? தலித்துகள் யாருக்காக சண்டையிட்டார்கள் , போரில் வென்று ஆட்சி செலுத்தியது யார் என்பதெல்லாம் மறந்தாயிற்று

தலித்தோ, மராட்டியரோ இருவருமே வெள்ளையருக்கு அடிமை என்பதும் சுத்தமாய் மறந்தாயிற்று மாறாக தலித்துகள் வெற்றி என்றே அது நிலைத்தது

தலித்துகள் இப்படி மயங்க, அவர்களையும் ஆண்டு கொண்டிருந்தான் வெள்ளையன் என்பதுதான் இன்னொரு கோணம்

தலித் விடுதலை நடந்ததா? இல்லை, ஆளும் வர்க்கம் மாற்றபட்டது அவ்வளவுதான்

இந்த கொண்டாட்ட சிக்கல் அவ்வப்பொழுது வெடிக்கும், தலித் மக்கள் தங்கள் வெற்றியின் அடையாளமாக அங்கு கொண்டாட, நீங்கள் வெள்ளையனோடு சேர்ந்து பெற்ற வெற்றி தேசதுரோகம் என சொல்ல, ஒரே சண்டை

கடந்தமுறை இச்சண்டை மிக பெரிதாகி இப்பொழுது வரை தீவிரம் குறையவில்லை

நேற்றுகூட சில தலித் ஆதரவு எழுத்தாளர்கள் 6 பேரை கைது செய்திருக்கின்றது அரசு, விஷயம் வெடிக்கின்றது

தமிழகம் இன்னும் இதில் பொங்கவில்லை, விரைவில் தலித் தலைவர்கள்,திராவிட சிங்கங்கள் எல்லாம் பொங்கலாம்

இதில் செய்ய வேண்டியது ஒன்றுதான்

வெற்றியோ தோல்வியோ இரு தரப்புமே வெள்ளையனுக்கு அடிமையான கோஷ்டி இதில் என்ன சர்ச்சை வேண்டியிருக்கின்றது என சொல்லி இரு தரப்பையும் கண்டித்து அனுப்ப வேண்டும்

(தமிழகத்தில் கட்டபொம்மன் படை , பூலித்தேவன் படை வரை ஏராளமான தலித் மக்கள் இருந்தார்கள்

அவர்களுக்கு நடந்ததெல்லாம் தலித் தோல்வியா, அல்லது சில இடங்களில் பூலித்தேவன் போன்றோரின் படைகள் வெள்ளையனை விரட்டியது எல்லாம் தலித் வெற்றியா?

தமிழகம் இந்த மராட்டியர்களை போல் சிந்திக்கவில்லை என்பதுதான் ஆறுதல்)

இந்த திரிபுரா முதல்வர் இப்படி சிக்குவது புதிதல்ல

Image may contain: 1 person, text

வாத்து மூளைகாரன் எல்லாம் பிஜேபியில் இருப்பது கொடுமை அல்ல, அதில் சிலர் முதல்வராய் இருப்பதுதான் கொடுமை

குடிநீர் வழங்கும் அணை எல்லாம் இனி வாத்து நீந்துமாம், பிரதமர் மோடி கூட வாத்து நீந்திய நீரினைத்தான் இனி குடிப்பாராம்

ஆனால் தைவான் வாத்து மட்டுமே நீந்த வேண்டும் என அவர் கேட்காமல் இருந்தால் நல்லது

மாட்டு பாசத்தை தொடர்ந்து வாத்து பாசம்.. அடுத்து என்ன பாசமோ நிச்சயமாக மனிதர்கள் மேலாக மட்டும் இருக்கவே இருக்காது

இந்த திரிபுரா முதல்வர் இப்படி சிக்குவது புதிதல்ல,கட்சிக்கு ஏதாவது செய்வதாக இருந்தால் மேலிடம் இவரை ஏதும் தூணில் சங்கிலி போட்டு கட்டி வைப்பது நல்லது

ரஜினி மேல் இவர்களுக்கு ஒரே பயம்

Image may contain: 2 people

ரஜினி மேல் இவர்களுக்கு ஒரே பயம் என்னவென்றால் அவர் தேசியவாதி, இவர்கள் திராவிட பிரிவினை கோஷ்டி

அதனால் அவரை இவர்களுக்கு பிடிக்காது

உண்மையான தேசாபிமானிகளை இந்த கருப்பு சட்டைக்கோ இல்லை கருப்பு சிகப்பு கோஷ்டிகளுக்கோ எப்பொழுது பிடித்தது?

கேட்டால் பெரியார் மண் என்பார்கள், அந்த மண்ணை 16 ஆண்டுகாலம் பிராமணத்தி ஜெயா ஆண்டார்,

பெரியார் மண்ணின் அந்த பெரும் அவமானத்தை மட்டும் சொல்லவே மாட்டார்கள்


தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி என்ற செய்தி பெரும் வருத்தமானது

நிச்சயம் கலைஞரை பிரிந்த நம் எல்லோரின் வலியினை விட அவரின் வலி பெரிது, கடுமையானது

அம்மையார் நலம் பெற்று வரட்டும், கலைஞரின் உடல்நலத்தை நீண்டநாள் காத்து நின்றதில் பெரும் பங்கு அவருடையது

அந்த ஆணிவேரில்தான் கலைஞர் எனும் சகாப்தம் இயங்கிகொண்டிருந்தது

கலைஞரின் மனைவி என்றாலும் வீட்டை தாண்டி எங்கும் கலைஞரோடு சென்றவரும் அல்ல, கட்சி அலுவலகம் கூட வந்தவருமல்ல‌

வீண் சர்ச்சைகளில் சிக்கியவருமல்ல, கட்சி, அரசியல் என‌ ஒரு வார்த்தை பேசியவருமல்ல‌

அவ்வகையில் அவரின் குணநலன்கள் வாழ்த்துகுரியது

தமிழகத்தின் பிரதான அரசியல்வாதிகள் எல்லாம் அவர் கையால் உணவருந்தியிருக்கின்றார்கள்.

அந்த மகராசி நலம்பெற்று திரும்ப வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்

“நீறு இல்லா நெற்றிபாழ்” என்றவன் தமிழன்

“நீறு இல்லா நெற்றிபாழ்” என்றவன் தமிழன்

அதாவது திருநீறு எப்பொழுது நெற்றியில் இருக்க வேண்டும் என்பது இந்துக்கள் தர்மம்.

அது இந்து கலாச்சாரமாகவும் இருந்தது, தமிழனும் இந்து என்பதால் அது அவனுக்கும் முக்கியமாய் இருந்தது

அது உண்மையில் சொல்வதென்ன?

மனித வாழ்வு சாம்பலாக முடிய கூடியது, இறுதியில் சாம்பலாக கூடிய உடல் இது. இதில் துளியும் ஆணவமோ அகங்காரமோ தலை தூக்க கூடாது என்பது

விபூதி தத்துவம் இதுதான்

இதனால்தான் அதை நெற்றியில் எப்பொழுதும் வைக்க சொன்னது இந்துமதம், அதை நினைவிலே நிறுத்து பாவம் செய்யமாட்டாய் என போதித்தது இந்துமதம்

இந்து ஆலயங்களில் அது பூசபடுவதின் அர்த்தமும் இதுவே

ஞானமான தத்துவம் அது

இன்னும் ஒருபடி மேலே போய் சுடுகாட்டில் சிவன் சாம்பல் பூசி ஆடுவதாகவும் அது சொன்னது, அதாவது மனிதனின் கடைசி புகலிடம் சாம்பல், அது சிவனின் காலடியில் சங்கமமாகும் என அறுதியிட்டு சொன்னது

இதனால் இந்தியாவில் உள்ள எல்லா இந்துக்களுக்கும் விபூதி அடையாளம் ஆனது, சிவநேச அடியார்களுக்கு இன்னும் கூடுதலாக அது அமைந்தது

உலகில் சில மதங்களில் அச்சாயல் உண்டு

குறிப்பாக யூதமதத்தில் இருந்திருக்கின்றது, பாவம் செய்தவர்கள் மன்னிப்பிற்காக சாம்பல் பூசி தவமிருப்பார்களாம், அதாவது “நான் தூசு என உணர்ந்துவிட்டேன் இறைவா என்னை மன்னித்துகொள்”

இதிலிருந்து வந்ததே கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன்.

ஆக சாம்பல் எனும் நீறு பூசுதல் இந்து மதத்திலும் இன்னும் சில மதங்களிலும் காணபடும் சம்பிரதாயம்

அதற்குள் அது தமிழர் மரபு, தமிழனுக்கு மதமே இல்லை , தமிழரின் திரு நீறுக்கும் விபூதிக்கும் சம்பந்தமில்லை

தமிழன் சும்மா விபூதி பூசி அழகுபார்த்தான் என்பதெல்லாம் திராவிட புரட்டுக்கள்

உடன்பிறப்புக்களின் பகுத்தறிவு இம்சை தாளவில்லை

இந்த உபிக்களின் பகுத்தறிவு இம்சை தாளவில்லை என்றால், இப்பொழுது தமிழ் அறிஞர்களாகவும் ஆகிவிட்டார்கள்

அதாவது ஆரத்தி என்பது தமிழ் இல்லையாம் சமஸ்கிருதமாம், எந்த புத்தகத்தில் படித்தார்கள் என்றால் தெரியவில்லை

காஞ்சியா? ஈரோடா? திருகுவளையா? எந்த புத்தகத்தில் அப்படி இருந்தது?

ஆரம் என்பது தமிழ்ச்சொல், அதற்கு வட்டம் என பொருள். அந்த சூடத்து தீயினை வட்ட வடிவமாக சுற்றுவார்கள்

சூட்சுமமாக முகத்தை சுற்றி நிற்கும் சக்திகள் அதில் எரியும் என்பது அக்கால நம்பிக்கை, அது இன்றும் தொடர்கின்றது

வட்டம் தீ, தீ வட்டம் என்பது ஆரத்தீ ஆயிற்று

கடவுளுக்கு சூட்டும் மாலையினை கூட ஆரம் என்பது தமிழ்மரபு

இது கூட தெரியாமல்தான் தமிழையும் பகுத்தறிவினையும் வளர்க்கின்றார்களாம்

கலைஞர் இந்தியினை எதிர்க்க தன் கட்சியினருக்கு சொன்னாரே தவிர நல்ல தமிழ்படிக்க சொல்லவே இல்லை போலிருக்கின்றது


Image may contain: one or more people, people sitting and stripesஇப்பொழுதுதான் அழகிரி பின்னால் பாஜக இருக்குமோ என்ற பலத்த சந்தேகம் வருகின்றது

காரணம் தமிழக‌ பாஜக மேடைகளும் இப்படித்தான் இருக்கும்