மோடியின் அரசு நாட்டு பொருளாதாரத்தை சரித்ததா?

மோடியின் அரசு நாட்டு பொருளாதாரத்தை சரித்ததா, கறுப்பு பண ஒழிப்பு தோல்வியா என ஏகபட்ட கருத்துக்கள்

உண்மையில் நடந்தது என்ன என்பதை நிபுணர்கள் இப்படித்தான் சொல்கின்றார்கள், நடந்தது இதுதான்

இந்தியா வளரும் நாடு, பெட்ரோல் போன்ற வளங்களோ தொழில்துறை ஏற்றுமதியோ இன்னபிற வருமானமோ பெருமளவில் இல்லை

அந்நிய முதலீடும் இன்னபிற சங்கதிகளுமே நாட்டை தாங்கிகொண்டிருந்தன, அதுவும் 1990க்கு பின் தாராளமயமாக்கலில் நாடு நாலுகால் பாய்ச்சலில் மாறியது

உண்மையில் 2008 பொருளாதார மந்தம், பெட்ரோல் விலை எகிறல் போன்ற காலங்களில் மன்மோகன்சிங் இந்த நாட்டை காத்தார், அந்நிய முதலீட்டாளர்களுக்கும் அச்சமில்லாமல் இருந்தது

மோடி வந்ததிலிருந்து உலக நாடுகளின் இந்திய அபிமானம் மாறியது, இவர்கள் காட்டிய பிம்பம் அப்படி, இது ஒருமாதிரியான கோஷ்டி, இந்த மதவிவகாரம் போன்றவற்றை கிளப்பினால் எங்கிருந்து தொழில் நடக்கும் என வெளிநாட்டு நிறுவணங்கள் எல்லாம் தயங்கின‌

அதை நம்ப வைப்பது போல் மாட்டுகறி முதல் ஏக சிக்கலும் வந்தது, உலக நாடுகளின் நம்பிக்கைகுரிய நாடாக மோடி அரசு இருக்கவில்லை

மோடியும் உலகெல்லாம் ஓடித்தான் பார்த்தார், அவர் நினைத்த‌
பலனை அடைய முடியவில்லை, இந்திய பொருளாதாரம் சரிந்தது

சரியும் பொருளாதாரத்தின்படி 2000ரூபாய் நோட்டு அடிக்கபட்டிருக்க வேண்டும், கரன்சியில் நம்பர் கூட கூட நாடு நாசமாகின்றது என்பது பொருள்

சும்மா 2000 நோட்டு அடிக்க முடியுமா? இதனால் கறுப்பு பணத்தை ஒழிக்க போகின்றோம் என நாடகம் ஆடினார்கள். அதன் உண்மையான பொருள் 2000 நோட்டினை கொண்டுவருவது

ஆயிரம் ரூபாயினை பதுக்குகின்றார்கள் அதனால் 2 ஆயிரம் ரூபாய் என சொல்லும்பொழுது உலகம் சிரிக்கத்தான் செய்தது, உண்மையில் பொருளாதாரம் சரிந்தது

இந்த வாஜ்பாய் தேவை இல்லாமல் அணுகுண்டை வெடித்தது போல் மோடியும் கால நேரம் அறியாமல் இந்நாடகம் ஆட பொருளாதாரம் சரிந்தது

கச்சா எண்ணெய் விலை கொஞ்சம் கொஞ்சம் உயர உயர அது வெளிதெரிந்தது, இன்று இந்திய வரலாற்றில் இல்லாத அளவு டாலருக்கு எதிராக குப்புற கிடக்கின்றது ரூபாய்

நிச்சயம் சொல்லலாம் இந்த அரசின் ஒரு மாதிரி மதவாத பிம்பமும் அவர்கள் காட்டிய சிலவகையான விவகாரங்களும் சிக்கலின் முதல்படி

அருண்ஜெட்லி தவிர உருப்படியான முகங்கள் எதுவும் இல்லாத குழப்பமான மந்திரி சபை இரண்டாம் படி

இன்னும் நாட்டின் உண்மையான நிலைக்கும் இவர்கள் செய்த வாய்வழி சவுடால்களுக்கும் ஏகபட்ட இடைவெளிகள்

சில விவகாரங்கள் உண்மைதான், நாட்டின் பொருளாதாரம் சரிவதை திசைமாற்ற ரூபாய் நோட்டு ஒழிப்பு என நாடகம் ஆடியது இன்னும் நிலமையினை மோசமாக்கிற்று

புதிய இந்தியா ஒன்றும் பிறக்கவில்லை , பிறந்த இந்தியா நோயாளியாக படுக்கையில் தள்ளபட்டது

மோடி அரசு நிதிகொள்கையில் தடுமாறி நாட்டை தள்ளாட வைத்துவிட்டது என்பதை ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்

இனி புதிய அரசு அமைந்தாலும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயினை உயர்த்தி , இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவது நிச்சயம் சவால்

மறுபடி இவர்களே வந்துவிட்டால் என்னாகும்? இந்திய கரன்சி 3 ஆயிரம், 5 ஆயிரம் என உயர்ந்துகொண்டே இருக்கும்

ஒரு கட்டத்தில் இந்தோனேஷுயா, ஜிம்பாப்வே போல மில்லியன் நோட்டு அடிக்கும் காலமும் வரலாம்

நாளை மலேசிய சுதந்திர தினம்

Image may contain: 1 person, close-up

நாளை மலேசிய சுதந்திர தினம்,வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட நாடு தயாராகி விட்டது.

அக்காலத்தில் இருந்தே எல்லா கிழக்காசிய நாடுபோல இங்கும் தமிழர் தொடர்பு இருந்திருக்கது, மலைநாடு என்ற பெயர் மலேயா ஆனது என்பார்கள், ஆனால் பின்னாளில் பர்மா போல மிக நெருக்கமான தொடர்பு இல்லை. காரணம் பர்மீய நிலம் நெல்லுக்கு உகந்தது, ஆறுகள் அதற்கு பெரும் உதவி. அதனால் செட்டியார்கள் கவனம் அங்கேதான் குவிந்தது.

இந்தியா போலவே மலேயாவிற்கு போர்த்துகீசியர் முதலில் வந்தனர், தொடர்ந்து டச்சுக்காரன் அதன் பின் பிரிட்டிசார் வந்து ஆட்சியினை பிடித்தனர். வெள்ளையன் எதனையும் வியாபார கண்ணோட்டத்தோட பார்ப்பவன், அதுவும் மக்கள் ஒத்துழைத்துவிட்டால் அத்தேசத்தையே மாற்றிவிடுவான்

மலேசியா மலை+மழை வளம் மிகுந்த நாடு,அரிசி, கரும்பு, பருத்தி சரிவராது, இம்மாதிரி இடங்களில் தேயிலைதான் உகந்தது. ஆனால அதற்கு அதிகாலை பனிவேண்டும். அதற்காக பனியினை இறக்குமதி செய்யவோ உருவாக்கவோ முடியாது. அம்மண்ணிற்கு ஏற்ற பொருத்தமான பணபயிர் ரப்பர் மரம்.

அதனை ஆரம்பித்தான் குறைவான மக்கள் தொகை கொண்ட மலேய மக்களை கொண்டு பெரும் ரப்பர் தோட்டத்தை பராமரிக்கமுடியவில்லை, தமிழகத்திலிருந்து தொழிலாளர்களை கப்பல் கப்பலாக ஏற்றிவந்தான்.

மலேசியாவின் இன்னொரு வளம் தாதுமணல் போன்றது, சீனத்திலிருந்து ஏராளமான சீனர்கள் வந்து குவிந்தனர், அப்படியாக வளர்ந்த மலேயா ஜப்பானியரிடம் சில காலம் சிக்கி இருந்தனர், பின் மறுபடியும் பிரிட்டன் பிடித்துகொண்டது.

ஆசிய காலணிகள் எல்லாம் விடுதலைபெற்றபோது அவர்களும் பெற்றார்கள், அதாவது இரண்டாம் உலகப்போர் முடிந்து இந்தியா போன்ற யானைகளை அவிழ்த்துவிட்ட வெள்ளையன் , மலேசியா போன்ற கன்றுகுட்டிகளையும் சுதந்திரமாக விட்டான்

மலேசியா வெள்ளையன் காலத்தில் தன்னை உருமாற்றிகொண்ட நாடு, வளர்ந்துகொண்டே இருந்தார்கள், இந்தியா அளவு பெரும் சுதந்திர போராட்டம் நடந்ததாக சொல்லமுடியாது, ஆனால் மலேசிய நலன்களை பெற அவர்கள் தவறியதே இல்லை, அதற்காக கட்சிகளும் சங்கங்களும் இருந்தன.

இந்தியா அவ்வகையில் சுதந்திரத்திற்கு பெரும் போராட்டம் நடத்தியது, ஆனால் ஆனந்த சுதந்திரம் கிடைத்ததும் நாம் தூங்கிவிட்டோம், இன்னும் எழவில்லை.

அதாவது சுதந்திரம் மட்டும் போராட்டமல்ல, கிடைத்த சுதந்திரத்தில் நாட்டை நாடாக வைத்திருக்க தினமும் போராட்டம் தேவை, விழிப்பு தேவை

மலேசியர்கள் அப்படி சுதந்திரத்திற்கு பின்பே கடுமையாக போராடி அந்நாட்டின் நற்பெயரினை நிலைக்க செய்துகொண்டிருக்கின்றார்கள். வெள்ளையன் காலத்தில் உச்சத்தில் இருந்து இன்று தரித்திர தேசமாக மாறிவிட்ட எத்தனையோ நாடுகள் உண்டு.

ஆனால் மலேசியா அவ்வகையில் தொடர்ந்து தன் நிலையினை தக்க வைத்தே வருகின்றது.

இந்நாடு எதிர்கொண்ட சவால்கள் கொஞ்சமல்ல, ஆனால் மக்கள் ஒற்றுமையாக தேசம் எதிர்கொண்ட சவாலை எல்லாம் முறியடித்தார்கள்.

சுதந்திர தொடக்கத்தில் கம்யூனிச போராளிகள் பெரும் சவால், தைரியமாக எதிர்கொண்டார்கள், அதில் முழுவெற்றி பெற்றார்கள். சிங்கப்பூருடன் சர்ச்சைகள் வந்தபொழுது தனியாக பிரித்துகொடுத்து அமைதி காத்தார்கள்.

விட்டுகொடுத்தார்கள், இதோ இருவருமே வாழ்கின்றார்கள். இலங்கை போல யுத்தம் நடத்தி பின் தங்கவில்லை அல்லது இந்தியா பாகிஸ்தான் போல பெரும் ராணுவம் திரட்டி வன்மம் வளர்க்கவில்லை, அமைதி அவர்களை வாழவைக்கின்றது

அதன் பின் செயற்கை ரப்பர் வந்து அவர்கள் பொருளாதரமான ரப்பரை அடித்தது, அதனை பாமாயிலுக்கு மாறி தாக்கு பிடித்தார்கள்.

தாதுமணல் சுரங்கங்களால் சுற்றுசூழல் பிரச்சினை வந்தபொழுது அதனை மூடிவிட்டு தொழில்துறையால் ஈடுகட்டினார்கள். எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொண்டு, போராடிவென்று நிற்கின்றார்கள் என்றால் அதன் முதல்காரணம் மக்களும், அவர்களை காத்து நிற்கும் அரசாங்கமும்.

அரசும் மக்கள் மேல் வைத்திருக்கும் அக்கறை கொஞ்சமல்ல, மக்களின் வாழ்க்கையினையும் அவர்கள் பாதுகாப்பினையும் அரசாங்கம் உறுதிசெய்துகொண்டே இருக்கும், எல்லா வகைகளிலும்.

உதாரணம் ஒருவனுக்கு டெங்கு என வந்து அது மருத்துவமனையில் உறுதிசெய்யபட்டால் சுகாதாரதுறைக்கு தெரிவிக்கபடும், அவர்கள் வீட்டிற்கே வந்து அதன் சுத்தம், நீர் வடிகால் என எல்லாம் சோதிப்பார்கள், அப்படி அவ்வீடு நோய்களின் கூடாரம் என்றால் வீட்டுக்காரருக்கு கடும் அபராதம்.

ரெஸ்டாரண்டுகளின் சமையல் கூடம் கூட அடிக்கடி சோதனைகு உட்படுத்தபடும்.

இதுபோன்ற ஏராளமான விஷயங்களை சொல்லலாம், இரவில் மட்டும் செய்யபடும் சாலை பராமரிப்பு, மின் தடங்கல் என்றால் ஜெனரேட்டர் கொடுத்து மக்கள் வாழ்க்கை பாதிக்கபடாத வசதி கொடுப்பது, குடிநீர் பாதுகாப்பு என விழுந்து விழுந்து பராமரிக்கின்றது அரசு.

அதனால்தான் எல்லாம் முறையாக இயங்குகின்றன, முடுக்கு தகறாறு, வரப்பு தகறாறு , வம்புகளுக்கு எல்லாம் மக்களுக்கு வாய்பில்லை

மக்களும் அரசினை கண்காணித்துகொண்டே இருக்கின்றார்கள், எல்லோர் வீட்டிலும் காலை 5.30 மணிக்கெல்லாம் செய்திதாள் விழுகிறது. எல்லோரும் அரசினை பற்றிய விழிப்புடனே இருக்கின்றார்கள். அரசும் ஒரு சலசலப்பு ஏற்பட்டாலும் மக்கள் குரலுக்கு செவிசாய்க்க தயங்குவதில்லை.

மூவினங்களுக்கும் எல்லா பிரதிநிதித்துவமும் கிடைப்பதில் கவனமாக இருப்பார்கள், அரசு முதல் எல்லா இடங்களிலும் எல்லா சர்விகிதமும் சரியாக இருக்குமாறு பார்த்துகொள்வார்கள், மத கொண்டாட்டமும் அப்படியே

உலகிலே தைபூசத்திற்கு விடுமுறை அளித்திருக்கும் நாடு இது ஒன்றே, அந்த அளவு மன உணர்வுகளை மதிக்கின்றார்கள்.

எல்லா மக்களும் கல்வி பெறவும், எல்லா மக்களுக்கும் வேலை கொடுப்பதிலும் அரசு கருத்தாக இருக்கின்றது, காலியிடங்களை வெளிநாட்டு பணியாளர்களை கொண்டு நிரப்புவதிலும் அது உதவுகின்றது.

நாம் பாகிஸ்தானை பார்த்து ஒப்பீட்டுகொள்வது போல அல்ல இவர்கள், மக்களுக்கு மேல்நாட்டு அரசுகள் எப்படி வசதி செய்துகொடுக்கின்றன என்பதில் கருத்தாக இருப்பார்கள். அது நவீன ரயிலோ, பேருந்தோ இன்ன பிற வசதிகளோ

அங்கு அறிமுகமான கொஞ்ச்நாளில் இங்குள்ள மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுவார்கள், எது எப்படி போனாலும் நாடு நவீன மயத்தில் தன்னை மேம்படுத்தி கொள்ளவேண்டும், மேல்நாட்டு மக்களுக்கு தங்கள் மக்கள் பின் தங்கிவிட கூடாது எனும் அசாத்திய கவனம், அக்கறை.

ஒரு ஐரோப்பிய வெளிநாட்டவன் வந்தால் அவன் சொந்த நாட்டிற்கும் இந்த ஊருக்கும் எந்த வித்தியாசமும் கண்டுவிட கூடாது என கவனமாக அமைக்கபட்டிருக்கும் நகரம் இது.

நான் பார்த்து சிலாகிப்பது ஒரே ஒரு விஷயம், மக்கள் மகா சுதந்திரமான வாழ்வு வாழ்கின்றனர். தனிபட்ட சுதந்திரத்தினை கொண்டாடி தீர்க்கின்றனர், ஆனால் எது அதன் எல்லை என்பது தெரிகின்றது. சமூக அமைதி என்பதை பெரிதும் விரும்புகின்றனர். அது பொதுஇடங்கள் முதல் எல்லா இடங்களிலும் தெரிகின்றது. நெரிசலில் ஒரு ஹாரன் சத்தம் கூட கேட்காது.

அழகான நாடு, அழகான சாலைகள். போக்குவரத்து நெரிசலில் கூட அழகு தெரிவது அங்கேதான். நூல் பிடித்தது போல அழகான நேர்த்தியான வரிசையில் வாகனம் நிற்கும்.

மக்களுக்கு தங்கள் பொறுப்பு தெரிகின்றது. எந்த இனமானாலும் புன்னகை பூத்த முகத்துடன் தாங்கள் மலேசியர் என்றே பெருமை கொள்கின்றனர். புன்னகை பூத்த மக்கள், காவலர்கள் கூட புன்னகைத்தபடியேதான் பணிபுரிவர், ஆனால் குற்றவாளிகளை வேறாகவும், பொதுமக்களை வேறாகவும் அவர்கள் கையாள்கின்றனர். பொது இடங்களில் முகவரி தெரியாதவர்களை மிக கனிவாக உதவுவார்கள்.

வஞ்சமிலா புன்னகை மலேசிய மக்களின் பெரும் அடையாளம், பெரும் பேராசை பொதுவான மக்களிடம் இல்லை. ஒரு வீடு ஒரு வாகனம் ஓரளவு வருமானம் போதும், குழந்தைகளை வளர்க்கலாம் பெரியவர்களானதும் அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையில், அவர்களும் அரசு கடனோ சொந்த உழைப்பிலோ படிப்பார்கள், வரதட்சனை இல்லை, பேராசை இல்லை பின் என்ன?

பணம் இருக்கின்றதா உலகம் சுற்றுவார்கள், ஜப்பான் முதல் கனடா வரை சுற்றி கொண்டாடுவார்கள், கடைசி காலத்தில் அமைதியாக கண்மூடுவார்கள்

எனக்கு தெரிந்த ஒரு வடைசுடும் பாட்டி உலகெல்லாம் சுற்றி இருக்கின்றார், கிழக்காசிய நாடு எல்லாம் சுற்றியாகிவிட்டதாம், சமீபத்தில் ஐரோப்பா பார்த்துவிட்டாராம், இனி கனடா செல்லவேண்டுமாம். அவரது பணியாள் ஒரு இந்தோணேஷிய பெண். அவரையும் கூட்டிகொண்டே செல்வாராம்.

அவருக்கு மாவாட்டிகொடுத்திருந்தால் கூட நானும் உலகம் சுற்றி இருக்கலாம், என்னசெய்ய அதற்கும் விதிவேண்டும்.

நாட்டு பொறுப்பு நிறைந்த மக்களும், மக்கள் பொறுப்பு கொண்ட நிர்வாகமும் அமையும் பட்சத்தில் ஒரு நாடு எப்படி உயரமுடியும் என்பதற்கு இந்நாடே சாட்சி. அதுவும் பல இன மக்கள், பல சமய மக்கள் எப்படி மகா ஒற்றுமையாக வாழமுடியும் என்பதற்கும் இந்நாடே சாட்சி.

இங்கு எல்லா நாட்டு மனிதர்களும் உண்டு, எல்லா நாட்டு உணவுகளும் உண்டு. ரசித்து பார்க்க அவ்வளவு விஷயங்கள் உண்டு.

எல்லாவற்றையும் புன்னகையால் கடந்து செல்லும் மலேசிய மக்கள் மனதிற்கு மழை அப்படி கொட்டுகின்றது.

அலுவலகம் தோறும், இல்லங்கள் தோறும் அவர்களின் தேசியகொடி கம்பீரமாக பறக்கின்றது, வானொலி பத்திரிகை எல்லாம் அவர்கள் கடந்துவந்த பாதைகளை, மக்கள் பொறுப்பினை சொல்லிகொண்டே இருக்கின்றார்கள், அப்படி ஆவணபடுத்தி இருக்கின்றார்கள்.

நிச்சயமாக சொல்லலாம் பல இனம் கலந்து வாழும் நாடு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அவர்களே சாட்சிகள், எடுத்துகாட்டுகள்.

இரண்டாம் உலகபோரின்பொழுது மலேயா கடுமையாக பாதிக்கபட்டது, அதன் பின் எழும்பியது. பொதுவாக பிரிட்டிசார் அடிப்படை அமைப்புக்களை அழகாக அமைப்பார்கள், மலேசியா அதனை தொடர்ந்து புதுப்பித்துகொண்டது, இந்தியா அதனை செய்ய தவறிவிட்டது, இங்கு ஆயிரம் சிக்கல்கள், வேறுமாதிரியான பிரச்சினைகள்,

சமூக அமைதியும் விட்டுகொடுத்தலும் மகா அவசியம், சிங்கப்பூர் மலேயா அப்படித்தான் அமைதியாக் வாழ்கின்றன, இரண்டும் பகை நாடுகள் அல்ல, இருவரும் ராணுவத்திற்கு செலவழிப்பவர்கள் அல்ல‌

ஆனால் பாகிஸ்தானும் இந்தியாவும் அதில்தான் தங்கள் பணத்தினை செலவளிக்கின்றன, அதுவும் 10 வருடம் முன்பு வாங்கிய ஆயுதம் இன்று பழையதாகிவிடும், வாங்கிகொண்டே இருக்கவேண்டும், பின் எப்படி தேசம் வளரும்.

ஆயுதம் விற்கும் தேசம்தான் வளரும்.

பிரிட்டிசார் எங்கும் பிரிவினை வைத்தே ஆண்டனர், இந்தியாவில் இந்து முஸ்லீம், இலங்கையில் தமிழர் சிங்களர், பர்மாவில் தமிழர் பர்மீயர் என அவர்கள் அரசியல் அப்படி இருந்தது, பின்னாளில் மலேசியாவும் அப்படியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தது

பர்மா சீரழிந்துவிட்டது, இலங்கை விவகாரம் உலகறிந்தது, இந்தியா பாகிஸ்தான் மகா பிரசித்தம்.

ஆனால் அசால்ட்டாக தாண்டி இன்று பலநாட்டு மக்களை விட‌ முண்ணணியில் தன் மக்களை வாழ்வாங்கு வாழ வைக்கின்றது மலேயாவும் சிங்கப்பூரும்

வன்மத்தாலும் விரோதத்தாலும் வீழ்ந்தவர்கள் அவர்கள். அன்பாலும் சகோதரத்துவத்தாலும் வாழ்வாங்கு வாழ்பவர்கள் இவர்கள், அன்பும், நம்பிக்கையும், சகோதரத்துவமே அமைதியாக வாழ வழி என சொல்லிசாதித்திருப்பவர்கள் இவர்கள்.

அதனைத்தான் நினைத்தாலே இனிக்கும் படத்தில் பாடலாக வைத்தார் கவியரசர்,” நண்பர் உண்டு , பகைவர் இல்லை. நன்மை உண்டு தீமை இல்லை” என அந்நாடுகளை அழகாக பாடலில் வைத்தார்

சுதந்திர தினத்தினை கொண்டாடும் அவர்கள் பெருமிதத்தோடு கொண்டாடுகின்றார்கள், இன்னும் போராடி அவர்கள் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் காத்துகொண்டிருக்கும் பெருமையான அவர்கள் கொடி எல்லா இடங்களிலும் பறக்கின்றது.

பல இனங்கள் வாழும் நாடு எப்படி இருக்க வேண்டும், நாட்டு மக்கள் எப்படி பொறுப்பாக இருக்க வெண்டும் என்பதற்கு மிக சிறந்த நாடு மலேசியா

மிகசிறந்த ஆட்சியாளரான மகாதீர் முகமது மறுபடியும் நாட்டின் சுக்கானை பிடித்து வழிநடத்துவதால் அவர்களுக்கு கூடுதல் உற்சாகம்

அவர்களுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

தெய்வீக கவிஞர் கண்ணதாசனின் “யாதும் ஊரே யாவரும் கேளிர், அன்பே எங்கள் உலக தத்துவம்” பாடல் மனதோரம் ஒலிக்கின்றது, அவ்வளவு அர்த்தமுள்ளதாக அவர் எழுதியிருப்பார்

மலேய மக்களின் மனமும் நாட்டின் செழுமையும் அப்படி சொல்லியிருப்பார் அவர்.

அந்த பாடல் எல்லா காலமும் பொருந்திவருகின்றது என்பதுதான் மகிழ்ச்சிகுரியது, அவர்கள் நாட்டிற்காக அவர் எழுதிய அற்புதமான பாடல்.

எனக்கு மிக பிடித்தபாடலும் அதுவே, குஷ்பூ நடித்திருந்தால் அது இன்னும் மிகசிறந்தபாடலாக இருந்திருக்கும்..

மூப்பன் என்ற வார்த்தைக்கு பெரியவர், வழிகாட்டுபவர் என பொருள்

Image may contain: 1 person, smiling, close-upதமிழகத்தில் உண்மையான மக்கள் அபிமானிகளும் , காந்திய வாதிகளும், தேசியவாதிகளும் நிரம்ப இருந்தனர், அவர்களில் நாம் கண்ட முக்கியமான தலைவர் மூப்பனார்

பெரும் பண்ணையார், அதுவும் காவேரிகரையில் பண்ணையார். கிட்டதட்ட அரசகுடும்பம் போன்றது அது, செட்டிநாட்டு மன்னர்களுக்கு சற்றும் குறையாத செல்வாக்கு கொண்டது

அவர் குடும்பமே காங்கிரஸ் குடும்பம் என்ற வகையில் அதில் தொடர்ந்தார் மூப்பனார்

அரசியலுக்கு வந்து கோடி குவிப்போர் மத்தியில் நேரு போலவே பெரும் செல்வாக்கான குடும்பத்தில் பிறந்து உண்மையான தொண்டனாக வந்து நின்றார்

அவருக்கு பசப்பு தமிழில் மயக்க தெரியாது, மேக் அப் போட்டு சிரிக்க தெரியாது. தெரிந்ததெல்லாம் நாட்டின் நலம் தமிழத்தில் இந்திய தேசியம் வளர்ப்பது, தமிழக‌ மக்களை வலுவான இந்தியாவில் இந்தியனாய் வாழசெய்வது

காங்கிரஸில் காமராஜரின் வலதுகரம் ஆனார், காங்கிரஸ் என்றால் காமராஜருக்கு அடுத்து மூப்பனார் என்ற நிலையினை எட்டினார்

சிதம்பரம், நெடுமாறன், குமரி அனந்தன் இன்னும் பலர் காமராஜரின் கரங்களை அருகிருந்து வலுபடுத்திய காலம் அது, பின்னாளில் சம்பத்தும் கண்ணதாசனும் சேர்ந்துகொண்டார்கள்

ஆனால் ராமசந்திரன் சுடபட்டதற்கும் காங்கிரஸ் ஆட்சிதான் காரணம், இன்னபிற அபாண்ட பிரச்சாரங்களுக்கு மத்தியில் காமராஜர் தோற்கடிக்கபட்டார்

இந்திராவின் திட்டபடி திமுக பிளக்கபட்டும் ராமசந்திரனை கட்சியில் சேர்க்க காமராஜர் விரும்பவில்லை, அதை தொடர்ந்து காமராஜர் இந்திரா மோதல் தொடர்ந்து கட்சி உடைந்தது

காமராஜர் ஸ்தாபன காங்கிரஸாக தொடர்ந்தார், திண்டுக்கல் இடைதேர்தலில் இரண்டாம் இடம், நாகர்கோவில் தேர்தலில் வெற்றி என காமராஜருக்கு ஆறுதல் கொடுத்த வெற்றிகளில் எல்லாம் மூப்பனாருக்கு பங்கு இருந்தது

காமராஜரின் உண்மை சீடராக இறுதிவரை நின்றார் மூப்பனார், காமராஜர் சம்பாதித்த மிகபெரும் சொத்து அவர்தான்

காமராஜருக்கு பின் அந்த கட்சியினை தாய் காங்கிரசோடு இணைத்தார், உண்மையான காங்கிரஸ் தொண்டனாக களத்தில் நின்றார்

டெல்லி காங்கிரஸ் தலைவர்களிடம் தனி மரியாதை பெற்றிருந்தார், அவர்களுடன் நேருக்கு நேர் வாதிடும் அளவு அவருக்கு அங்கு செல்வாக்கு இருந்தது

காங்கிரஸ் தமிழகத்தில் மலர அற்புதமான திட்டத்தை கொடுத்தார், அது இந்திரா தஞ்சாவூரில் போட்டி இடுவது

அதுமட்டும் நடந்து வெற்றிபெற்றிருந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் நிச்சயம் மலர்ந்திருக்கும், விடுவார்களா கழகத்தார்?

தமிழக அரசியலில் அதிமுக திமுக அடித்துகொண்டது போல் தோன்றினாலும் உள்ளூர ஒரு இழைஉண்டு, அது என்னவென்றால் தேசிய கட்சியினை வளரவிடமாட்டோம், நம் இருவரை தவிர இன்னொருவன் வரவே கூடாது என அண்ணா சமாதியில் ரகசிய சத்தியம் செய்திருந்தார்கள் என எண்ணும் அளவு காட்சிகள் இருந்தன‌

அதிமுகவிற்கும் காங்கிரசுக்கும் எப்பொழுதும் உறவு உண்டு, ஆனால் இந்திரா தமிழகத்தில் போட்டியிடுவதை உள்ளூர ராமசந்திரன் விரும்பவில்லை, வழக்கம் போல் குழப்பினார்

திமுகவோ மதுரையில் அவர்மேல் கல்வீசி தாக்கியது, பழநெடுமாறனும் மூப்பனாரும் இந்திராவினை கார் சீட்டுக்கு கீழ் மறைத்து காப்பாற்றினர், அப்பொழுதும் கல்வீச்சில் காயம்பட்டார் இந்திரா

திமுகவினரின் கலாச்சாரம் அப்படி, தேசிய கட்சி என்றால் அவர்களுக்கு அவ்வளவு வெறுப்பு

இப்பொழுதும் பாருங்கள், பாஜக மதவாத கட்சி என்பார்கள், சரி காங்கிரஸ் வளரட்டும் என்றால் பின் நாங்கள் எப்படி அரசியல் செய்வது என்பார்கள்

தேசிய அரசியலில் உங்கள் பங்கு என்ன என கேட்டால் தமிழகம் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும், நாங்கள் டெல்லியில் அவர்களுக்காக போராடுவோம் என்பார்கள்

அதற்கு ஏன் இடையில் உங்களுக்கு வாக்கு? நீங்கள் என்ன தரகர்களா? நேரடியாக டெல்லிக்கே வாக்களித்தால் என்ன என கேட்டால் நாம் பிராமண அடிவருடி ஆகிவிடுவோம்

மிக சாமார்த்தியமாக கட்சி நடத்துவதாக அவர்களே நினைத்து கொள்வார்கள் ஆனால் அவர்களை எதிர்த்து பெரும்பாலும் பலனடைவது அதிமுக, சத்தமில்லாமல் அவர்கள் அள்ளிகொண்டு போவார்கள்

அதிமுக ஆண்டு நாசமாக தமிழ்நாடு போனாலும் சரி, தேசியகட்சி வரகூடாது என்பது திமுக கொள்கை

இப்படி மூப்பனாரின் திட்டமும் பாழானது, இந்திரா தஞ்சாவூருக்கு வருவது தடைபட்டது

அதன் பின் இந்திராவும் கொல்லபட்டு ராஜிவ் வந்தார், மூப்பனார் அவருடனும் தொடர்ந்தார்

1987 தேர்தலில் ராஜிவோடு அரும்பாடுபட்ட மூப்பனாரை மறக்க முடியாது

1991ல் ராஜிவ் கலந்துகொண்ட சென்னை கூட்டத்தில் மூப்பனாரும் இருந்தார், ஆனால் மேடைக்கு ஏறும் முன்பே ராஜிவ் கொல்லபட்டதால் மூப்பனாரும் தப்பினார்

மூப்பனார் எப்படி தப்பினார் என்றால், கலைஞர் அஞ்சலிக்கு வந்த ராகுலே சாட்சி. அன்றும் கூட்ட நெரிசலில் ராஜிவ் அவசரமாக முன்னே செல்ல இந்திரா சிலை அருகே மூப்பனார் சிக்க, குண்டுவெடித்தது

நிச்சயம் அந்த கொடூர மரணத்தில் காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும், ஆனால் டெல்லி காங்கிரஸ் அரண்டு கிடந்ததில் தமிழக காங்கிரஸ் கரங்கள் கட்டுபட்ட நிலையில் அதிமுக வெற்றியினை அறுவடை செய்தது

ராஜிவின் ரத்தத்தில் ஆட்சிக்கு வர காங்கிரசுக்கும் விருப்பமில்லை, அதன் பெருந்தன்மை அப்படி

1991 முதல் 1996 வரையான காலங்கள் தமிழகத்தின் கருப்பு நாட்கள், ஜெயா எனும் முகமூடி போட்டு சசிகலா கும்பல் தமிழகத்தினை அதிர வைத்த காலங்கள்

மூப்பனார் கூட தாக்கபட்டார், அசரவில்லை

அடுத்த தேர்தலில் ஆட்சியினை மாற்றும் கடப்பாட்டினை மூப்பனாரே கையில் எடுத்தார்

ஆனால் டெல்லியோ அதிமுகவோடு உறவு எனும் நிலைபாட்டில் இருந்தது, காரணம் ஜெயின் கமிஷன் விவகாரங்களில் திமுக காங்கிரஸ் உறவு ஏற்பட வாய்பின்றி இருந்தது

மூப்பனாருக்கு ஜெயாவோடு கூட்டணி வைக்க விருப்பமில்லை ஆனால் டெல்லி உறுதியாக நின்றது

மிக தைரியமாக தனிகட்சி தொடங்கினார் மூப்பனார், மக்களிடம் மகிழ்ச்சி பெருகிற்று

காமராஜர் திரும்ப வந்தது போல ஆதரவு கொட்டிற்று

ஜெயகாந்தன் முதல் பல எழுத்தாளர் வரை, மாலன் முதல் பல பத்திரிகையாளர் வரை மூப்பனாரின் கரைபடியா கரங்கள் மேல் பெரும் நம்பிக்கை வைத்திருந்தது போல ரஜினியும் ஆதரித்தார்

விளைவு மூப்பனார் பெரும் சக்தியானார், காலம் அவருக்கு வாய்ப்பு கொடுத்தது

யாரை எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்பதில் கரைகண்ட கலைஞர் மூப்பனாரோடு கூட்டு சேர்ந்தார், உண்மையில் அன்று திமுக எம்.எல்.ஏ கணக்கு 1, காங்கிரஸுக்கு சொல்லிகொள்ளும் வகையில் கணக்கு இருந்தது

திமுகவினை விட காங்கிரஸ் கரம் ஓங்கித்தான் இருந்தது ஆனால் மூப்பனார் தனித்து வந்ததால் கலைஞரின் தந்திரம் வென்றது

மாபெரும் வெற்றியினை அக்கூட்டணி பெற்றது, மூப்பனாரின் செல்வாக்கு கூடிற்று

உண்மையில் அன்று ரஜினியின் பெருந்தன்மை வாழ்த்துகுரியது, அந்த கூட்டணிக்கு உதவினாரே அன்றி தனக்கும் தன் ரசிகர்களுக்கும் கைமாறு ஏதும் கொடுங்கள் என அவர் கேட்டதே இல்லை

மூப்பனார் எனும் தேசியவாதி பெரும் சக்தியாக உருவாக வேண்டும் என்ற எண்ணம் ரஜினிக்கு இருந்தது தவிர வேறொன்றும் இல்லை

ரஜினி நிச்சயம் தேசியவாதி சந்தேகமில்லை, மாநில கட்சி நடத்தி தன் தேசிய சிந்தனைக்கு இழுக்கு வர கூடாது என இக்காலம் வரை நழுவுகின்றார்

அது வேறுகதை, மூப்பனாருக்கு வரலாம்

தமிழ் மாநில காங்கிரஸ் பெரும் சக்தியாயிற்று, பாரத பிரதமரை நிர்ணயிக்கும் அளவு அது செல்வாக்கு பெற்றது

ஏன் மூப்பனாரே பிரதமராகும் அளவு வாய்ப்பும் இருந்தது

இந்திராவினையே தஞ்சாவூருக்கு வரவிடாமல் தடுக்க கொலைமுயற்சிவரை சென்ற கூட்டம் அது, இவரை விடுவார்களா?

தமிழன் தேசியவாதி ஆக கூடாது, அதுவும் பிரதமர் ஆகவே கூடாது, அப்படி நடந்துவிட்டால் கட்சி வளர்ந்துவிடும் என பல கணக்குகள் போடபட்டன‌

அரசியல் களத்தில் நம்பியவர்களால், அதுவும் தமிழர்களால் முதுகில் குத்தபட்டார் மூப்பனார்

மிக நுட்பமாக அவரை சாய்த்துவிட்டுத்தான் கன்னடன் தேவகவுடாவினை பிரதமராக்கினார்கள்

தமிழன் மூப்பனார் பிரதமராகி இருந்தால் முதல் தமிழன் என்ற பெருமையோடு காவேரி சிக்கலுக்கு முடிவு கட்டி இருப்பார்

அதையும் கெடுத்து, காவேரியினையும் கெடுத்தார்கள்

இவ்விஷயத்தில் மனம் நொந்தார் மூப்பனார், பெரும் மனநெருக்கடிக்கு தள்ளபட்டார்

நடந்த சூதுகளை அறிந்த ரஜினி அதன் பின் அமைதியானார், தமிழக அரசியல் என்றால் என்ன என்பது அப்பொழுதுதான் புரிந்தது

மூப்பனாரும் முதல் முறையாக தடுமாறினார்,உடல் நலம் குன்றினார், நண்பன் என முதுகில் குத்தியவர்களை விட எதிரியே பரவாயில்லை என்ற முடிவிற்கு வந்தார்

(அவ்வகையில் மூப்பனார் விஜயகாந்திற்கு முன்னோடி, தமிழத்திற்கு ஏதும் மாற்றம் வரவேண்டும் என பாடுபட்ட மூப்பனாருக்கு நிகழ்ந்ததுதான் பின்பு விஜயகாந்துக்கும் நடந்தது)

அத்தோடு அவர் காலமும் முடிந்தது, அவருக்கு பின்னர் அவர் கட்சி அவர் மகனால் காங்கிரஸில் இணைந்தது, பின் கொஞ்சவருடம் முன்பு அவர் மகன் மறுபடி தனிகட்சி தொடங்கினார்

அதன்பின் அவரையும் காணவில்லை, கட்சியினையும் காணவில்லை

மூப்பனார் காமராஜரின் வாரிசாகவே இங்கு காங்கிரஸில் வலம் வந்தார், காமராஜரை டெல்லி புரிந்து கொள்ளாதது போலவ பின்பு மூப்பனாரையும் புரிந்து கொள்ளவில்லை

காங்கிரஸில் இருந்து பிரிந்து தன் பலம் என்ன என காட்டினாரே தவிர காங்கிரஸுக்கோ இந்திய தேசியத்திற்குமான எந்த விஷயத்தையும் அவர் சிந்திக்க கூட இல்லை

ராஜிவ் காந்திக்கு பின் மூப்பனாரை புரிந்து கொள்ள டெல்லி தடுமாறியது, தமிழ்மாநில காங்கிரஸ் எனும் பெரும் எதிர்காலம் கொண்ட இயக்கத்தை கூட அது நல்ல வகையில் கட்சிக்காக பயன்படுத்தவில்லை

கூட்டி கழித்து பார்த்தால் மூப்பனாருக்கு ஒரு இழப்புமில்லை, அவரை சரியாக பயன்படுத்தாத காங்கிரஸ் கோபாலபுரத்தில் சில சீட்டுகளுக்காக காத்திருக்கின்றது

1967ல் அரியணை இழந்த காங்கிரஸின் பலம் ஒன்றும் அழிந்துவிடவில்லை என 1996ல் காட்டியவர் மூப்பனார்

ரஜினி ஆதரவில் வென்றார் என்பர் சிலர்

உண்மையில் திமுக என்பது ராமசந்திரன் எனும் நடிகனிடமே இருந்தது, அவர் பிரிந்த பின் திமுகவால் பெரும் வெற்றி பெற முடியவில்லை

பெரியார் மண், கருப்பு மண் என்பதெல்லாம் சும்மா, இது உண்மையில் சினிமா மண்

ராமசந்திரனுக்கு பின் ஜெயா வந்தது அப்படித்தான்

சினிமாவால் வீழ்ந்த தமிழக காங்கிரஸை சினிமாக்காரன் ரஜினியினை கொண்டே நிமிர்த்த முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார் மூப்பனார்

ஆனால் டெல்லியின் கணக்குகள் குழப்பமானவை, தமிழக யதார்த்திற்கும் அவர்கள் கணக்கிற்கும் ஏகபட்ட இடைவெளிகள், இல்லாவிட்டால் திருநாவுக்கரசர் எல்லாம் தலைவர் ஆவாரா?

அந்த டெல்லி காங்கிரஸின் குளறுபடியே இங்கு மூப்பனார் பெரும் பதவிக்கு வராமல் போனதும், இன்னும் காங்கிரஸ் தொங்கி கொண்டிருப்பதும்

காமராஜருக்கு பிறகு மூப்பனார் வடிவில் வந்த வாய்பினையும் வீணாக்கியது டெல்லி

எது எப்படி ஆயினும் உண்மையான தேசபக்தனாக, கரைபடியா கரங்களுடன் இறுதிவரை காங்கிரஸ்காரனாக நின்ற அந்த மக்கள் தலைவனை மறக்க முடியாது

காமராஜரை சத்தம் போட்டே சரித்தவர்கள், அவரின் சீடரான மூப்பனாரை சத்தமில்லாமல் சரித்தார்கள், இங்குள்ள அரசியல் அப்படி

இந்திய தேசியவாதி யாரும் இங்கு அரசியலில் ஜொலிக்க‌ பல சக்திகள் விரும்புவதில்லை, தமிழத்தின் நிலை அப்படி

இன்று அவரின் பிறந்த நாள், காமராஜருக்கு பின் தமிழகம் கண்ட அந்த தவபுதல்வனுக்கு, தேச பக்தனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

அவரின் சுலோகமான “வளமான தமிழகம் வலிமையான பாரதம்” என்பது ஒவ்வொரு தமிழனும் பின்பற்ற வேண்டியது

மூப்பனாரின் வாழ்வு ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டியது, தமிழக அரசியலின் கேவலமான முகங்களால் இங்கு எவ்வளவு சீரழிவு வந்தது என்பது அப்பொழுது தீர்க்கமாய் விளங்கும்

நல்லவர்களின் வாழ்வினை படிக்கும் பொழுதுதான் அயோக்கியர்களின் கோரமுகம் நன்கு விளங்கும்

மூப்பனார் போன்ற தேசியவாதிகளை தமிழக‌ அரசியலில் பிரகாசிக்க கூடாது என கங்கணம் கட்டி இறங்கியவர்கள் என்ன சாதித்தார்கள்? பன்னீரையும் பழனிச்சாமியினையும் ஆள வகை செய்துவிட்டு போய் சேர்ந்துவிட்டார்கள்

இப்போதுள்ள அரசியல் நிலையில் மூப்பனார் போன்றவரை ஒவ்வொரு தமிழனும் மனதிற்குள் தேடிகொண்டுதான் இருகின்றான், ரஜினி போன்ற தேசியவாதிகளும் அப்படி ஒரு மனிதனைத்தான் தேடிகொண்டிருக்கின்றார்கள்

அந்த மாபெரும் தலைவன் வழியில் இனியாவது நல்ல தேசிய தலைவர்கள் தமிழகத்தில் உருவாகி வரட்டும்

மூப்பன் என்ற வார்த்தைக்கு பெரியவர், வழிகாட்டுபவர் என பொருள்

உண்மையிலே இந்த கருப்பையா என்பவர் மூப்பன் என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர், தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் நல்வழி காட்டினார், மறக்க முடியாது

அந்த மக்கள் தலைவனுக்கு மாபெரும் அஞ்சலிகள்

(மூப்பனாருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு ஏறேடுத்து பார்க்க வேண்டிய நபர் ரஜினிகாந்த்

அன்று அபார பலம் படைத்த ஜெயலலிதாவிற்கு எதிராகவே மூப்பனாரை ஆதரித்தார்

இன்று கலைஞர் இல்லை, ஜெயா இல்லை மூப்பனார் இல்லை

ஆனால் தாமாகாவின் மூளையான ப.சிதம்பரம் இருக்கின்றார்

ரஜினி ஏன் தயங்குகின்றார், சிதம்பரம் போன்ற தேசியவாதிகளை ஆதரித்து களம் இறங்கினால்தான் என்ன?

மூப்பனார் போன்ற நல்லவர்களை தேசியவாதிகளை ஆதரித்த ரஜினி, நாட்டுக்கு ஏதும் செய்வதாக இருந்தால் திராவிட கழுதை புலிகளுக்கு அஞ்சாமல் நல்ல தேசியவாதிகளுக்கு ஆதரவாய் களமிறங்கட்டும்)

விசால் மக்கள் நற்பணி இயக்கம் தொடஙகிவிட்டாராம்

அறிவாலயத்து வாட்ச்மேன் வேலையினை இப்படியா கேட்பது?

Image may contain: 1 person, text

Image may contain: one or more people1967க்கு பின் சினிமாக்காரர் அல்லாத முதல்வர்கள் பன்னீர் செல்வமும் பழனிச்சாமியும்

சசிகலா அதை தவறவிட்டார்

அப்படி சினிமா பிடியில் இருந்து தமிழக அரசியல் விடுபட்டது சினிமாக்காரர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, அவர்களுக்கென்ன தங்கள் துறை அரசியலை கட்டுபடுத்த வேண்டும், அதில் இருக்கும் முதல்வரை சுற்றி ஆடிகொண்டே இருக்க வேண்டும், சலுகைகளை கறக்க வேண்டும்

இது பச்சை தமிழன் பழனிச்சாமியின் இரும்பு ஆட்சியில் எடுபடுமா?

இதனால் சினிமாக்காரர்கள் ஒரு முடிவோடு களமிறங்குகின்றார்கள், ரஜினி கமல் தொடர்ந்து இப்பொழுது விசால்

அன்னாரும் மக்கள் நற்பணி இயக்கம் தொடஙகிவிட்டாராம்

வீதியில் நடப்பதை பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியாது என வசனம் வேறு

இவரின் படத்தை பார்த்துவிட்டே அமைதியாக நகரும் தமிழகம் இது, அது ஏனோ இவருக்கு பிடிக்கவில்லை

அன்னார் தமிழத்திற்கு ஏதும் செய்ய நினைத்தால் நடிப்பதை நிறுத்தட்டும், அதற்கு வேண்டுமானால் 4 வோட்டு கண்டிப்பாக விழும்


 

பெரியார் மட்டும் போராடவரவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும் ?

டேய் ஆரிய அடிவருடி, கொண்டை மறைக்கா சங்கி , பெரியார் மட்டும் போராடவரவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும் தெரியுமா?

ஒரு மண்ணும் ஆகியிருக்காது, வீரமணி கோடிகளில் புரண்டிருக்க மாட்டார்..

அண்ணாவின் கல்லறை உட்பட ஒரு கல்லறையும் மெரினாவிர்கு வந்திருக்காது.

அண்ணா ஒழுங்கான பேராசிரியராக இருந்திருப்பார், கலைஞர் நல்ல வசனகர்த்தாவக நீடித்திருப்பார்

ராமசந்திரன் அவர்போக்கில் நடித்துவிட்டு இறந்திருப்பார்.

அதாவது எல்லோரும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருப்பார்கள், பழனிச்சாமி பன்னீர் உட்பட‌


தமிழகத்தில் ஊழல் இல்லா துறை உண்டா? : கமலஹாசன்

ஏன் இல்லை? இந்த திரைப்பட துறை என்பது என்ன? ஒரு பயலாவது உண்மை சம்பளத்தை சொல்லட்டும் பார்க்கலாம்

கருப்பு பணம் இல்லாமல் சினிமா ஏது ஆண்டவரே?


சமூக நீதி என்றால் என்ன?

சமூக நீதி என்றால் என்ன?

சமூகத்தில் யார் திறமைசாலியோ அவனை சாதி பெயரால் ஒடுக்கிவிட்டு, யாருக்கு திறமை சுத்தமாக இல்லையோ அவனை பொருத்தமற்ற பதவிக்கும் அவனுக்கு பின் அவன் சந்ததியினை சாதி பெயரை சொல்லி அமர வைப்பது சமூக நீதி எனப்படும்

நாடு எக்கேடும் கெட்டு போகட்டும், நாட்டு பற்று எல்லாம் யாருக்கு வேண்டும்? என் சாதி மட்டும் வாழவேண்டும் அல்லது திறமையானவன் எல்லாம் எங்காவது ஓட வேண்டும் என்பது அதன் முக்கிய இலக்கு

இவ்வாறு செய்வதுதான் சமூக புரட்சி, போராட்ட வெற்றி இன்னபிற‌

திறமை இருப்பவனை பயன்படுத்தி சகல துறைகளையும் முன்னேற்றி, நாட்டையும் முன்னேற்றும் காரியங்கள் எல்லாம் சமூக நீதிக்கு எதிரான கொடுமை எனப்படும்


கோவில் சிலையும் தமிழனின் அடையாளம் தமிழனின் கலை, அது பெருமளவில் கடத்தபட்டாயிற்று தமிழனின் அடையாளம் அது என சொல்வார் எவருமில்லை

மாறாக கல்லறையில் பால் ஊற்றுதல், பஜனை பாடுதல், விபூதி பூசுதல் தமிழர் மரபு உரிமை என ஏகபட்ட விளக்கம்

சரி அந்த மதம் காக்க வந்த மகான்களுக்காவது அதில் அக்கறை இருக்கின்றதா என்றால் அவர்களும் ஏக அமைதி

ஆக சிலை கடத்தல், ஆலய சொத்துக்களை அமுக்குதல், ஆலயத்திற்கு சொந்தமான நிலத்தை வளைத்தல் என்பதில் எல்லா கட்சியின் கரங்களும் இருக்கின்றன‌

இதனால் யாவரும் அமைதி….


உலகிற்கு கிடைத்த அதிசயம் இன்று

Image may contain: 2 people, people smiling, selfie and close-up

இரட்டை நிலா தோன்றுவது உலகில் ஏற்படும் சில மாற்றங்களுக்கு அறிகுறி என சில மதங்களின் குறிப்புகள் சொல்கின்றன‌

உலகம் இனி கொஞ்சம் விழிப்பாய் இருத்தல் வேண்டும்

(எப்படியோ இரு நிலவு இணைந்த காணற்கரிய காட்சி உலகிற்கு கிடைத்த அதிசயம் இன்று நிகழ்ந்திருக்கின்றது)


விடுமுறை விடபட்டதால் தமிழ் திரையுலகில் வந்த மிக சிறந்த படங்கள் சிலவற்றை பார்த்துவிடுவது என சங்கம் முடிவு செய்திருக்கின்றது

பட்டியலிட்டு சலித்து பார்த்தால், வரலாற்றில் நிலைத்துவிட்ட இந்த 5 படங்களை தவிர ஏதுமில்லை, அவை எந்த படங்கள்?

1) வருஷம் 16
2) சின்னதம்பி
3) அண்ணாமலை
4) சிங்கார வேலன்
5) கிழக்கு கரை

இதை தவிர மிக சிறந்த படங்கள் வரவே வராது