ஒரு நாடோ மாநிலமோ வளர துறைமுகம் அவசியம்

ஒரு நாடோ மாநிலமோ வளர துறைமுகம் அவசியம், இந்தியாவில் துறைமுகம் கொண்ட மாநிலங்கள் எல்லாம் கடும் வளர்ச்சியினை எட்டும்

குஜராத் , மும்பை, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, வங்காளம் வரை அப்படித்தான்

கடலோர மாநிலங்களின் வளர்ச்சி 4 பக்கமும் நிலத்தால் சூழ்ந்த மாநிலங்களுக்கு கிடைக்காது

நாடுகளில் கூட நேபாளம், மங்கோலியா, தர்கிஸ்தான் இன்னும் பல நாடுகள் இச்சிக்கலுக்கு ஆளாகும்

கடல் இல்லா நாடுகளை போல, கடல் இல்லா மாநிலங்களும் கடும் சிக்கலை எதிர்கொள்ளும்

கடல் என்பதும் துறைமுகம் என்பதும் பெரும் வளம், தமிழகத்திற்கு அது கிடைத்தது, மும்பைக்கு கிடைத்தது, குஜராத்திற்கு கிடைத்தது

இதனால் இவை எல்லாம் வளர்ந்தன‌

பீகார், மபி, உபி எல்லாம் இந்த வளம் கிடைக்காமல் சிக்கி கொண்டன‌

இதற்காக பெரியார்தான் தமிழகத்தை வளர்த்தார், திமுகதான் வளர்த்தது என்பதெல்லாம் அபத்தம், இவர்கள் வரவில்லை என்றால் தமிழகம் பீகார் போல் ஆகியிருக்கும் என்பதெல்லாம் உளறல்

மும்பை, கொச்சி எல்லாம் பெரியாரால்தான் வளர்ந்ததா? என கேட்டால் பதிலுக்கு சங்கி என்பார்கள்

ஒருவேளை பெரியார் பீகாரிலோ அல்லது மபியிலோ பிறந்து அங்கு திமுக போல உருவானால் கடலை உருவாக்காக்கி இருப்பார்களோ என்னமோ?

இந்த ஊதியகுழு இனி கிடையாது என்பது போல சில செய்திகள்

இந்த ஊதியகுழு இனி கிடையாது என்பது போல சில செய்திகளை மத்திய அரசு சொல்லிவிட விவகாரம் வெடிக்கின்றது

ஊதிய குழு என்ன செய்யும்?

அரசு அலுவலர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை அப்பொழுதிருகும் விலைவாசிக்கு தக்கபடி சம்பளம் வழங்க அறிக்கை சமர்பிக்கும், அரசு அதை பொறுத்து சம்பளத்தை உயர்த்தும்

அதாவது அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்ந்தால் சம்பளம் உயர்த்தி சொல்லி கொடுக்க ஒரு குழு

இதை போல அன்றே ஒரு குழுவினை அமைத்து விவசாயி வாங்க வேண்டிய இடுபொருள் அவன் கொடுக்க கூடிய வேலையாள் சம்பளம் இதர சிக்கல்களை எல்லாம் கணித்து அவனின் விளைபொருளுக்கான விலைவைக்க ஒரு குழுவினை அமைத்திருந்தால் விவசாயம் இந்த அளவு சீரழிந்திருக்காது

விவசாயியும் வாழ்ந்திருப்பான்

“காதல் தேசம்” என்றொரு படம்

“காதல் தேசம்” என்றொரு படம் ஓடிகொண்டிருக்கின்றது, தோல்வியினை காணசகிக்காத ஒருவனுக்கு ஏழை எதிராளி வெற்றியினை விட்டு கொடுக்கின்றான் இருவரும் நண்பராகின்றார்கள்

பின் ஒரே பெண்ணை காதலித்து கதை மாறுகின்றது

இது அன்றே “ஆலயமணி” படத்தில் சொல்லபட்ட கதை, சிவாஜியும் எஸ்.எஸ் ராஜேந்திரனும் இப்படித்தான் நண்பராவர்கள்,

இப்படித்தான் சரோஜா தேவிக்காய் சண்டை இடுவார்கள்

ஆக அந்த “ஆலயமணி” கதையினை “காதல் தேசம்” எடுத்து அதற்கு அக்காலத்தில் ஏக விளம்பரம் வேறு

இப்படி காப்பியடித்த இயக்குநர் யாரும் நிலைத்ததாய் சரித்திரமில்லை, இயக்குநர் கதிர் காணாமல் போனதில் ஆச்சரியமுமில்லை

குலகல்வின்னா என்னடா?

Image may contain: 1 person, textஅண்ணே ராஜாஜி பற்றி, அவரோட குலக்கல்வி பற்றி உங்களுக்கு தெரியாது

அப்படியா

குலகல்வின்னா என்னடா?

அப்பன் வேலைய மகனே செய்யணும், அப்படி விவசாயி மகன் விவசாயி, கூலிக்காரன் மகன் கூலிக்காரன், நெசவாளி மகன் நெசவாளின்னு அவர் செய்ய சொன்னார், ஆரிய சூது பிடிச்சவர்ணே அந்த ஆளு

ஏண்டா பள்ளிகூடம் போக மீதி நேரம்தான செய்ய சொன்னார், இப்போ வரைக்கும் விவசாயி வீட்டு பிள்ளைகள் அப்படித்தானடா வேலை செஞ்சிட்டு இருக்காங்க‌

இல்லண்ணே, அது ஆரிய சூது அப்பன் வேலைய மகன் செய்யணும்ங்குற ஆரிய தந்திரம், பெரியார்தான் அதை முறியடிச்சாரு

ஒஹோ

ஆமாண்ணே இல்லண்ணா எல்லோரும் அப்பன் வேலையத்தான் செஞ்சிட்டு இருப்போம், இது தெரியாம நீங்க அவனுகளுக்கு முட்டு கொடுக்கிறீங்க‌

அப்படியா

ஆமாண்ணே அப்பா வேலையின மகன் செஞ்சா எப்படிண்ணே? பெரியார் திமுக எல்லாம் அதை போராடி மாத்திட்டாங்க, புரட்சிண்ணே

சரி கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் கட்சி தலைவர் ஆனது, அதாவது அப்பன் வேலையினை மகன் செய்றது குலகல்வி இல்லையா? இதில் கனிமொழி வேற‌

அண்ணே அது வேற‌

என்னடா வேற, பெரியார் அறக்கட்டளைக்கு வீரமணிக்கு பிறகு அவர் மகன் வந்தது எப்படிடா?

அண்ணே அது வேற , குலகல்வி வேற‌

என்னடா வேற, திமுகவிலும் திகவிலும் மட்டும் அப்பன் வேலை மகனுக்கு, ஆனா வேற யார் செஞ்சாலும் சமூக நீதிக்கு ஆபத்து அப்படித்தான?

அண்ணே நீங்க ஆரிய அடிவருடி, சங்கி கும்பல்

வைகுண்டராஜன் அண்ணாச்சிக்கும் அங்கிள் சைமனுக்கும் கடுமையாக மோதல்

 

ஏதோ வைகுண்டராஜன் அண்ணாச்சிக்கும் அங்கிள் சைமனுக்கும் கடுமையாக மோதி இருக்கின்றது

அல்லது சைமனை பொட்டு சாத்தும்படி எங்கிருந்தோ அண்ணாச்சிக்கு உத்தரவு வந்துவிட்டது

போட்டு தாக்கி உரித்து தொங்கவிட்டு விட்டார்கள்…

விரைவில் வைகுண்டராஜன் தமிழர் இல்லை எனும் சான்றிதழ் அங்கிள் சைமனின் சோதனை சாலையில் இருந்து வெளியாகும்

திமுகவில் இணைந்தார் கருப்பசாமி பாண்டியன் : செய்தி

திமுகவில் இணைந்தார் கருப்பசாமி பாண்டியன் : செய்தி

ராமசந்திரன் இறந்த பின்பே அடிக்கடி அதிமுகவில் உள்ளே வெளியே ஆடிகொண்டிருப்பர் கருப்பசாமி பாண்டியன்

அடிக்கடி திமுகவிற்கு வருவார் பின் ஓடிசென்று அதிமுகவில் சேர்வார், இரு கட்சிகளும் ஏன் போனார் என கேட்காது

காரணம் அவர் திரும்ப வருவார் என அவர்களுக்கே தெரியும்

அப்படியே திரும்ப வரும்பொழுதும் தயக்கமில்லாமல் சேர்த்துகொள்வார்கள், இப்பொழுது திமுக சேர்ந்திருக்கின்றது

இது ஸ்டாலினுக்கு மகிழ்ச்சி, காரணம் கருப்பசாமி பாண்டியன் நெல்லையின் சக்தி, என்றுமே ஒரு வோட்டுவங்கி அவருக்கு உண்டு சந்தேகமில்லை

ஆனால் நெல்லை திமுகவினர் மகிழ்வார்களா என்றால் இல்லை

ஏற்கனவே ஆவுடையப்பன் கோஷ்டி, அப்பாவு கோஷ்டி, ஞானதிரவியம் கோஷ்டி என ஏகபட்ட கோஷ்டிகள் உள்ள இடம் நெல்லை திமுக‌

இனி கருப்பசாமி பாண்டியன் கோஷ்டியும் உருவாகும்

எனினும் சிலர் அடுத்த தேர்தலில் தினகரன் அதிக இடங்களை பிடித்தால் கருப்பசாமி பாண்டியன் அங்கே சென்றுவிடுவார் என ஆறுதல் அடைகின்றனர்.

அது நடந்தாலும் நடக்கலாம்

பகுத்தறிவு பொங்கிய கதை இதுதான்

கடவுள் இல்லை என்பது 18ம் நூற்றாண்டின் உலக ஸ்டைல், நாத்திகவாதம் ரஷ்யாவில் தொடங்கி சீனாவில் பரவி பல நாடுகளில் பரவிற்று

இந்தியாவிலும் அது பரவியது, அதில் ஈர்க்கபட்டவர்தான் பெரியார்

ஆனால் சிகப்பு சட்டை போட அவருக்கு இரு தயக்கம் இருந்தது, ஒன்று அவருக்கு இருந்த ஏகபட்ட சொத்து, இன்னொன்று கம்யூனிசம் பேசினால் தூக்கிபோட்டு மிதிக்கும் வெள்ளையன்

இதனால் கம்யூனிசத்தை தமிழக ஸ்டைலில் இந்து எதிர்ப்பு, சாதி ஒழிப்பு ஆக்கினார்

செஞ்சட்டையினை கருப்பு கொடி ஆக்கினார் தீர்ந்தது விஷயம்

இதனால் பெரியார் அரசால் ஏற்படும் நெருக்கடிகளை தவிர்த்தார் , திராவிட நாடு அது இது என சொல்லிகொண்டிருந்ததால் வெள்ளையனுக்கும் ஜின்னா போல பெரியார் மனதிற்குள் மகிழ்வானார்

ரஷ்யாவிலும் ஐரோப்பாவிலும் கிறிஸ்தவ சபைக்கு எதிராக கேட்கபட்ட கேள்விகள் எல்லாம், கட்டுரைகள் எல்லாம் அண்ணாவின் ஆங்கில புலமையால் தமிழுக்கு வந்தது

அது பெரியாரின் பகுத்தறிவு சுய அறிவு என அவர் கும்பலால் கொண்டாடபட்டது

மார்க்ஸும், இங்கர்சாலும் கேட்ட கேள்விகள் எல்லாம் பெரியாரின் சிந்தனையாக இங்கு கொண்டாடபட்டது

திருச்சபை இருக்கும் இடத்தில் இந்துமதத்தையும், கிறிஸ்தவ துறவிகள் இருக்க்கும் இடத்தில் பிரமாணரையும் வைப்பது மிக எளிதாயிற்று

பகுத்தறிவு பொங்கிய கதை இதுதான், ரஷ்ய பொதுவுடமை இங்கு இட ஒதுக்கீடு என சுருங்கியது

ஆனால் வெளிதெரியாமல் பார்த்துகொண்டார்கள் என்பதுதான் சாமார்த்தியம்

இது எதில் முடிந்தது?

கேரளாவில் ஏற்பட்ட கம்யூனிச வளர்ச்சி போல் இங்கும் அக்கட்சி வளர்ந்திருக்க வேண்டும், ஆனால் பாட்டாளிகள் வர்க்கமோ பெரியார் கும்பலால் வளைக்கபட்டு கம்யூனிஸ்டுக்கு பதில் இங்கு திராவிடம் வளர்ந்தது

பின் என்னாகும்? திராவிட தலைவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாக உயர்ந்தார்கள், சமூகம் உயரவில்லை

இன்று பெரியாரின் சொத்துக்களை பாதுகாக்க வீரமணிக்கு பெரியாரும், திரண்டுவிட்ட சொத்துக்களையும் சுவைத்துவிட்ட அதிகாரத்தையும் பாதுகாக்க அந்த திராவிட கொள்கைகள் தேவைபடுகின்றன‌

உலகெல்லாம் கம்யூனிசம் துடைக்கபட்டது பாலத்தின் விதி , அப்படியே இங்கும் அதனால் ஏற்பட்ட அதிர்வுகளும் ஒரு காலத்தில் நடக்கத்தான் செய்யும்

இதில் எம்மை திட்டி ஒன்றும் ஆகபோவதில்லை