சிம்பு வீட்டில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யபடும் : உயர்நீதி மன்றம்

அரசன் படத்திற்காக சிம்பு வாங்கிய தொகையினை திருப்பி கொடுக்காவிட்டால் வீட்டில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யபடும் : உயர்நீதி மன்றம்

என்னது சிம்பு வீட்டில் உள்ள பொருட்களா? டி.ராஜேந்தரையா ஜப்தி செய்ய போகின்றீர்கள்

தொட்டு பாருங்கள், முடிந்தால் இதோ சிம்பு வீட்டு பொருள் என எதிர்தரப்பிடம் கொடுத்து பாருங்கள்

பணமே வேண்டாம் மேற்கொண்டு என் சொத்துக்களை வேண்டுமானால் வைத்துகொள் சிம்பு என சொல்லிவிட்டு எதிர்தரப்பு ஓடிவிடாதா?

சிவன், விநாயகர் எல்லாம் தமிழ் கடவுள் இல்லையாம்

Image may contain: 4 people, text

சிவன், விநாயகர் எல்லாம் தமிழ் கடவுள் இல்லையாம்

தஞ்சை பெரியகோவில் யாருக்கான ஆலயம்? சிதம்பரம் கோவில் யாரின் ஆலயம்?

திருவேங்கடத்தில் பெருமாள் ஆலயமும் கன்னியாகுமரியில் பகவதி அம்மன் ஆலயமுமாக எல்லை கட்டி இருந்த தமிழகம் இது

அவை இன்றும் உண்டு

சங்க இலக்கியம் எல்லாம் சிவன் முதல் எல்லா தெய்வங்களையும் பாடுகின்றன, முருகன் தமிழ்கடவுளாகவே அறியபடுகின்றான்

மாணிக்க வாசகர் முதல் இந்து கடவுளை பாடாத புலவர்கள் இல்லை

அவ்வையார் கூட விநாயகர் அகவல் எல்லாம் எழுதி இருக்கின்றார்

பண்டைய கோவில் முதல் இலக்கியம் வரை தமிழனின் வாழ்வு இந்துமதத்தை சார்ந்தே இருந்தது

உண்மை இப்படி இருக்க அன்னார் தத்துவம் பேசுகின்றாராம்

அதெல்லாம் சரிண்ணே

பக்கத்தில் தாடியும் குல்லாவுமாக இருவர் நிற்கின்றார்களே அவர்கள் தமிழர்கள் இல்லையா

தமிழனுக்கு இந்துமதம் தவிர எல்லா மதமும் உண்டு அப்படித்தானே திருதிரு முருகன்?

தமிழனுக்கு தமிழ் தெரியாது .. அதை சொல்லி கொடுத்தவர் அண்ணா…

இந்த Senthil Vasan M போன்றவர்கள் விரும்புவது இதுதான்

தமிழ்மொழி என்பது இலக்கணம் இல்லாமல் இருந்தது முதன் முதலில் இலக்கணம் எழுதியது கலைஞர்

தமிழன் ஆடையின்றி அமேசான் காட்டுக்குள் இருந்தான் அவனுக்கு ஆடை கட்டி கூட்டி வந்தது பெரியார்

தமிழனுக்கு தமிழ் தெரியாது அதை சொல்லி கொடுத்தவர் அண்ணா

திருகுறளை எழுதி திருவள்ளுவர் என பெயரிட்டவர் கலைஞர், தமிழ் மொழியின் சங்க இலக்கியம் எல்லாம் அண்ணாவால் எழுதபட்டது

1930 வரை தமிழன் தமிழகத்திலே கிடையாது, பெரியாரும் அண்ணாவும் இந்திய பெருங்கடலில் மூழ்கி இருந்த தமிழனை இழுத்து வந்தார்கள்

அதன் பின் சுதந்திர இந்தியா தமிழகத்தை அபகரித்தது அந்த சுதந்திரபோரினை கலைஞர் நடத்தினார், கடந்த மாதம் விழுப்புண் பட்டு இறந்துவிட்டார்

இனி தனிதமிழ்நாடு காண முக ஸ்டாலின் பின்னால் தமிழர்கள் எல்லாம் சென்று சாக வேண்டும்

இப்படி எல்லாம் எழுத முடியுமா? ஒருவன் கேட்கின்றான் இதெல்லாம் ஒரு பிழைப்பா?

அப்படி என்ன பிழைத்துவிட்டேன் என்பதுதான் புரியவில்லை, எனக்கென்ன திமுக குடும்ப சொத்தில் அள்ளி கொடுத்தார்களா?

உங்கள் விருப்பம் எதுவோ ,அதெல்லாம் எழுத‌ முடியாது, விருப்பமில்லை என்றால் இடத்தை காலி செய்யவும்

எம் ஐடி முடக்கபட்டாலொ, இல்லை மிரட்டல்கள் வந்தாலோ முதல் சந்தேகம் இந்த Senthil Vasan M என்பவர் மேல்தான் எனபதை சொல்லிகொள்கின்றோம்

மனிதர் திமுக சொம்பு, அதை தாக்கும் யாரையும் விட்டு வைத்ததில்லை

நம் ஐடியினைனையும் முடக்க பல முயற்சிகளை செய்கின்றார்கள், சில எச்சரிக்கை செய்திகள் வருகின்றன‌

Senthil Vasan Mஅவர்களே இந்த வேலை வேண்டாம், பிடிக்காவிட்டால் விலகி செல்லவும்

முகநூல் என்பது திமுக குத்தகைக்கானது, அதற்கு பாதகம் வந்தால் ஐடி முடக்குவோம் என்பதெல்லாம் அபத்தம்

எத்தனை ஐடிக்களை முடக்கினாலும் உண்மையினை முடக்க முடியாது

நாம் இல்லை என்றாலும் இன்னொருவன் உண்மையினை எழுத்தத்தான் செய்வான்

பொய்பிம்பங்கள் நெடுநாள் நிலைப்பதில்லை, மாயமான்கள் வாழ்வதில்லை

மாவீரன் புலித்தேவனுக்கு வீரவணக்கம் செலுத்துவதில் தேசம் பெருமை அடைகின்றது

Image may contain: outdoor

முன்பே பல இடங்களில் பார்த்திருக்கின்றோம், அலாவுதின் கில்ஜியின் படைகள் மதுரையினை தாக்கும் வரை சிக்கல் இல்லை

இங்கே பாண்டிய மன்னரின் வாரிசு சண்டை அவனுக்கு வாய்ப்பாகவும் இருந்தது

இஸ்லாமிய படையெடுப்பினை தடுக்க நாயக்கர்கள் மதுரை வந்தனர், இத்தோடு பாண்டிய வம்சம் மதுரையில் இருந்து அகற்றபட்டது

ஆனால் பாண்டியர்கள் முழுவதும் ஒழியவில்லை, தென்காசி , செவல், வள்ளியூர் போன்ற பகுதிகளில் சிற்றரசர்களாக நீடித்தனர்

அவர்கள் நாயக்க மன்னர்களோடு உறவு கொண்டாலும் தனி அரசர்களாகவே நீடித்தனர்

மதுரையினை ஆண்ட வெள்ளையர்கள் 72 பாளையாமாக தமிழகத்தை பிரித்து ஆண்டனர், அதில் இந்த சிற்றரசுகள் எல்லாம் வராது

இப்படியாக சென்றுகொண்டிருந்த காலத்தில் நாயக்க அரசில் உட்கட்சி தகறாது வந்தது, தஞ்சை நாயக்கருக்கும் மதுரை நாயக்கருக்கும் மோத தஞ்சையருக்கு மராட்டியன் உதவிக்கு வந்து சர்போஜி மன்னன் வம்சம் நீடித்தது

இக்காலத்தில்தான் அவுரங்கசீப் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை தென்னகம் வரை நீட்டித்தான், ஆற்காடு நவாவ் உருவானது இக்காலத்தில்தான்

ஆற்காடு நவாபிற்கு மதுரையின் 72 பாளையங்களும் கட்டுபட்டன, சிற்றரசுகளும் கப்பம் கொடுத்தன‌

ஆற்காடு நவாப் குடும்ப வாரிசு சண்டையில்தான் பிரெஞ்ச் மற்றும் பிரிட்டன் வியாபாரிகள் உள்ளே வந்தனர்

கிளைவ் என்பவனின் வீரதீர செயலில் ஆற்காடு அரசின் கட்டுபாடு பிரிட்டானியர் வசம் சென்றது, கிளைவ் பெரும்படை திரட்டி இருந்தான் அவனின் தளபதிதான் மருதநாயகம்

ஆற்காடு நவாபிடம் பெரும் பங்கு போருக்காக வெள்ளையன் கோரியபொழுது தனக்கு அடங்கா அரசுகள் அல்லது அடங்க மறுத்தவர்களை கைகாட்டிவிட்டான் நவாப்

வசூல் வேட்டையில் இருந்த வெள்ளையர் குறிப்பிட்ட கப்பமோ இல்லை அதற்கு மேலோ கேட்டு சிற்றரசர்களை கட்டாயபடுத்தினர்

அப்படி வெள்ளையனால் மிரட்டபட்டவர்தான் புலித்தேவன்

வாசுதேவநல்லூர் அவனின் கோட்டை, நெல்கட்டும் ஜமீன் பாண்டிய அரசின் எச்சம்

ஆற்காடு நவாபிற்கு தலைவலியான பூலிதேவன் வெள்ளையனுக்கும் சவால் விட்டான்

சில போர்களில் அவர்களை விரட்டியும் விட்டான், ஆனால் மருதநாயகத்தின் அபாரமான ஆட்டம் முன்னாலும் வெள்ளையரின் நவீன ஆயுத பலத்தாலும் அவனால் நிற்க முடியவில்ல்லை

கைது செய்யபட்டான்

அவனை தூக்கிலிடும் முடிவில் மருதநாயகம் இழுத்து வர, ஒரு ஆலயத்தின் உள்ளே சென்று வணங்க உத்தரவு கேட்ட பூலித்தேவன் அப்படியே மாயமானான்

உள்ளிருந்த சுரங்கம் வழியே தப்பினான் இல்லை வெறு வழியில் தப்பினான் என ஏக தகவல்கள்

ஆனால் அவன் வெள்ளையர் கையால் கொல்லபடவில்லை என்பது உண்மை

அவன் மீண்டு வந்து கோட்டையினை ஆள கூடாது என்பதற்காக அவன் கோட்டையினை அழித்தான் மருதநாயகம்

ஒரு விஷயம் சொல்ல வேண்டும்

முதன் முதலில் வெள்ளையனை எதிர்த்தவன் அவனே, அவனுக்கு பின் நெடுங்காலம் கழித்தே கட்டபொம்மன் எதிர்த்த்தான்

சுதந்திர போரினை இத்தேசத்தில் தொடங்கிய முதல் வீரன் புலித்தேவன் என்பதில் சந்தேகமில்லை

மிக வீரமான போரினை நடத்தினான் புலித்தேவன், வெள்ளையர் திகைத்தனர், கிளைவ் வங்கபக்கம் இருந்ததால் வரமுடியவில்லை

மருதநாயகமே அவனை வென்றான், அதனால்தான் சாகிப் என்றிருந்த அவன் பெயர் தலைவன் சாகிப் என கான் சாகிப் ஆனது

வாசுதேவநல்லூர் அவனின் கோட்டை, நெல்கட்டும் ஜமீன் பாண்டிய அரசின் எச்சம்

ஆற்காடு நவாபிற்கு தலைவலியான பூலிதேவன் வெள்ளையனுக்கும் சவால் விட்டான்

எளிதாக அடக்கிவிடலாம் என வந்த ஆங்கிலேய படையினை ஓட விரட்டினான் புலித்தேவன், உண்மையில் அவன் புலி என கண்டுகொண்டனர் வெள்ளையர்

புலித்தேவன் அசரவில்லை களக்காடு கோட்டை, திருவில்லிபுத்தூர் கோட்டை என தொடர்ந்து பிடித்து அசத்தினான்,

வெள்ளையர் அவனை தொட முடியவில்லை பின் வாங்கினர்

இனி நெல்லையினை பிடித்து தன் அரசை விரிவுபடுத்தி வலுவானதாக ஆக்க திட்டமிட்டான் புலித்தேவன்

உண்மையில் அவன் பழைய பாண்டிய மன்னரின் சாம்ராயத்தை அமைக்க விரும்பினான், நெல்லையினை தொடர்ந்து மதுரையினை கைபற்றி தமிழ் மன்னனாக நிலைக்கும் திட்டம் அவனிடம் இருந்தது

அதற்கான தகுதியும் இருந்தது

ஆனால் மருதநாயகத்தின் அபார போர்முறை, வெள்ளை தளபதி ஹெரோன் என்பவரின் வஞ்சகம் எல்லாம் அவருக்கு எதிராக மாறிற்று

உண்மையில் நவாபின் சகோதரன் ஒருவனை யுத்த கைதியாக பிடித்தான் புலித்தேவன், அவன் உள்ளிருந்தே கருவருக்கும் வேலையினை செய்தான்

அவனை நம்பியதே புலித்தேவனின் வீழ்ச்சி, பல கோட்டைகளை வைத்திருந்த புலித்தேவன் ஒவ்வொன்றாக இழந்து, மருதநாயகத்தால் கைது செய்யபட்டான்

அவனை தூக்கிலிடும் முடிவில் மருதநாயகம் இழுத்து வர, ஒரு ஆலயத்தின் உள்ளே சென்று வணங்க உத்தரவு கேட்ட பூலித்தேவன் அப்படியே மாயமானான்

உள்ளிருந்த சுரங்கம் வழியே தப்பினான் இல்லை வெறு வழியில் தப்பினான் என ஏக தகவல்கள்

ஆனால் அவன் வெள்ளையர் கையால் கொல்லபடவில்லை என்பது உண்மை

அவன் மீண்டு வந்து கோட்டையினை ஆள கூடாது என்பதற்காக அவன் கோட்டையினை அழித்தான் மருதநாயகம்

ஒரு விஷயம் சொல்ல வேண்டும்

முதன் முதலில் வெள்ளையனை எதிர்த்தவன் அவனே, அவனுக்கு பின் நெடுங்காலம் கழித்தே கட்டபொம்மன் எதிர்த்த்தான்

சுதந்திர போரினை இத்தேசத்தில் தொடங்கிய முதல் வீரன் புலித்தேவன் என்பதில் சந்தேகமில்லை

மிக வீரமான போரினை நடத்தினான் புலித்தேவன், வெள்ளையர் திகைத்தனர், கிளைவ் வங்கபக்கம் இருந்ததால் வரமுடியவில்லை

மருதநாயகமே அவனை வென்றான், அதனால்தான் சாகிப் என்றிருந்த அவன் பெயர் தலைவன் சாகிப் என கான் சாகிப் ஆனது

புலிதேவனின் வீரப்போர் பின்னாளில் பெரும்போர் நிகழ்த்திய திப்பு சுல்தானுக்கு முன்னோடி போர், அவனின் வீரம் அத்தகையது வெற்றிபெற்றதும் அப்படியானது

இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரன் என வரலாறு அவனைத்தான் காட்டுகின்றது

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையினை விட வீரம் மிகுந்தது வாசுதேவநல்லுர் பூமி

அந்த மாவீரனின் பிறந்த நாள் இன்று, வரலாற்றில் வெள்ளையனை முதலில் எதிர்த்து சில வெற்றிகளையும் பெற்ற அந்தமாவீரனுக்கு வீரவணக்க்கம்

அவன் பாண்டிய வம்சத்தில் வந்தவன் அவனுக்கு கீழ் எல்லா சாதிகளும் ஒற்றுமையாக இருந்து வெள்ளையனை எதிர்த்திருக்கின்றன‌

ஒண்டிவீரன், வென்னிகாலடி போன்ற மாபெரும் வீரர்கள் இருந்திருக்கின்றார்கள் அவர்கள் தளபதிகள்

சாதி கொடுமை இருந்தது, ஒடுக்கபட்டோம் மிதிக்கபட்டோம் என்பதெல்லாம் சுத்த பொய் , புலித்தேவனின் ஆட்சியில் இந்த தாழ்த்தபட்டதாக சொல்லபடும் சாதியினர் தளபதிகளாகவே இருந்திருக்கின்றனர்

புரட்சி, வெங்காயம், தலித்தியம் இன்னபிற இம்சைகள் எல்லாம் அன்று இல்லை, இருந்திருந்தால் புலித்தேவனின் வீரகாவியம் இல்லை

அந்த நவாபின் சகோதரன் புலித்தேவனுடம் இருந்த காலங்களில் அவன் தொழுகை நடத்த தனி மசூதியே கட்டி கொடுத்திருக்கின்றான் புலித்தேவன், அவன் மனது அப்படி இருந்திருக்கின்றது, அவனின் இன்னொரு தளபதி கூட இஸ்லாமியரே

சாதிய ஒற்றுமைக்கும், மத ஒற்றுமைக்கும் நாட்டுபற்றுக்கும் புலித்தேவனின் வீர வாழ்வு பெரும் எடுத்துகாட்டு, அது இன்றைய தேவையும் கூட‌

அந்த மாவீரனுக்கு வீரவணக்கம் செலுத்துவதில் தேசம் பெருமை அடைகின்றது

இலங்கையில் ஏகபட்ட தமிழர்களை காணவில்லை : அங்கிள் சைமன் கவலை

Image may contain: 1 person, standing and outdoor“ஆமாங்க முதல்வர் பேட்மிட்டன் ஆடுனாருங்க‌

எம்ஜிஆரும், ஜெயாவும் முதல்வரா இருக்கும்பொழுது கருணாநிதின்னு ஒரு ஆளு இருந்தாரு , 24 மணிநேரமும் அவங்க ஆட்சிக்கு இடைஞ்சல் குடுத்திட்டே இருந்தாரு

Image may contain: 1 personஊரெல்லாம் நடப்பாரு, கமிஷன் ஏதும் இருந்தா ரசியமா ரிப்பொர்ட் கடத்திட்டு வந்து அசத்துவாரு , கூட்டணி எல்லாம் வச்சி நெருக்கடி கொடுத்திட்டே இருப்பாரு

நிம்மதியா ஆளவிடுவாரா? ம்ம்ஹூம்

எங்க யோகம், எதிர்கட்சி யாருமில்ல, ஒரு நெருக்கடி இல்ல, வெரி ஹாப்பியா இருக்கோம்

இங்க என்ன? அறிவாலயம் முன்னால் கூட கால்பந்து விளையாடுவோம் பார்க்கத்தான் போறீங்க”


இலங்கையில் ஏகபட்ட தமிழர்களை காணவில்லை அங்கிள் சைமன் கவலை

தமிழகத்தில் போலி இலங்கை பாஸ்போர்ட் தயாரித்து சிலர் சிக்கியது குறிப்பிடதக்கது

ஆக இப்படி போலிபாஸ்போர்ட் மூலம் ஈழத்தவரை கடத்தினால் இலங்கையில் திடீரென காணாமல் போகாமல் இலங்கை அரசிடம் சொல்லிவிட்டா போவார்கள்?

இலங்கையில் காணாமல் போனதாக அங்கிள் சொல்லும் பூரா பயலும் போலி பாஸ்போர்ட்டில் ஐரொப்பா ஆஸ்திரேலியாவில் உட்கார்ந்து கொண்டு சைமன் வாழ்க என சொல்லி கொண்டு நிதி அனுப்பிகொண்டிருக்கின்றான்

அது தெரியாமல் அங்கிள் அவர்களை காணவில்லை என அழுதுகொண்டிருக்கின்றார், காமெடியான‌ ஆளாக இருப்பார் போல‌


கட்சி என்றால் அதிமுக போல் இருக்க வேண்டும்

அண்ணே நீங்க திமுகவினை சாடுகின்றீர்கள், கட்சி என்றால் அதிமுக போல் இருக்க வேண்டும் என சொல்லவந்தது ஒரு ரத்த துளி

அவனுகளாவது கொள்கை என்று ஒன்றை வைத்திருப்பார்கள், உங்கள் கொள்கை எது என கேட்டால் மனிதர் சீறிவிட்டார்

அவர் சொன்னதிலும் சில கருத்துக்கள் இருந்தன‌

“கொள்கை எல்லாம் ராஜாஜி காலத்திலே போய்விட்டது, வெள்ளையனொடு அதையும் அனுப்பியாயிற்று

(பெரியார் மண் எல்லாம் கணக்கிலே வராது, வந்திருந்தால் வீரமணி பெரும் சக்தி ஆகியிருப்பார்..)

அதன் பின் நடப்பதெல்லாம் அரசியல். அண்ணாவின் எழுத்துக்கும் கலைஞரின் சுவாரஸ்யத்தையும் மீறி ராமசந்திரனுக்கு மக்கள் அபிமானம் இருந்தது

இதை கணகிட்ட டெல்லி அவரை பிரித்து காமராஜருடண் இணைக்க முயற்சித்தது கிட்டதட்ட ஆந்திர சிரஞ்சீவி ஸ்டைல்

ஆனால் காமராஜருக்கு தயக்கம் இருந்தது, காமராஜரிடம் ஒருவித மோசமான குணம் இருந்தது, அதாவது அரசியலில் நேர்மையாளர் சந்தேகமில்லை ஆனால் கட்சிக்குள் இன்னொருவரை வளரவிட மாட்டார்

ஈவிகேஎஸ் சம்பத் எல்லாம் இப்படித்தான் காணாமல் போனார், ராமசந்திரனை இணைக்கவும் தயக்கம் இருந்தது

இதனால் தனிகட்சி கண்டார் ராமசந்திரன் நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கை எல்லாம் இல்லை ஆனால் தமிழகம் அவரை கொண்டாடியது

அண்ணே அவருக்கு அரசியல் தெரியாது, திராவிடம் புரியாது ஆனால் தன்னை நம்பியவர்களுக்கு கொடுத்தார்

யார் யாரை எல்லாமோ தூக்கிவிட்டார், தமிழகம் அவரை கொண்டாட அதுதான் காரணம், கட்சிக்குள் புதிதாய் வந்தவரை எல்லாம் அமைச்சர் ஆக்கினார், பெரும் பொறுப்பு கொடுத்தார்

அதிமுகவில் சேர்ந்தால் சீக்கிரம் பொறுப்பு கிடைக்கும், அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நிலைக்கு அது கியாரண்டியான கட்சியாக இருந்தது அவர் முதல்வராகவே இறந்தார்

பின் ஜெயா அப்படி வந்தார், அவரும் அப்படியே புதுமுக எம்.எல்.ஏ எல்லாம் அமைச்சராக முடிந்தது, பெரும் பொறுப்பு பெற முடிந்தது

காலில் விழுந்தொம், டயரை நக்கினோம் என்பதெல்லாம் வேறுகதை, அவனவன் கம்பெனியில் முதலாளி முன் குனியவில்லையா? குட்டிகரணம் அடிக்கவில்லையா அப்படி

ஆனால் அவர் முன்னால் குனிந்தோமே தவிர கட்சிக்குள் நிமிர்ந்தோம் , யாரும் எப்பொழுதும் அமைச்சராகலாம் எந்த பதவிக்கும் வரலாம் என்ற நிலை இருந்தது

அதே நேரம் மாவட்ட செயலாளரோ வட்டமோ அமைச்சரோ ஏதும் நிரந்தரம் என நினைத்தால் முதுகில் மிதிக்கபட்டு விரட்டவும் பட்டார்கள்

புதுமுகங்களை தூக்கிவிட்டதுதான் அதிமுகவின் வெற்றிக்கு காரணம், சாகும் பொழுதும் ஜெயா முதல்வராகவே மறைந்தார்

இப்பொழுதும் பாருங்கள் ஜெயாவிற்கு பின் கட்சி தலமையாக பன்னீர் செல்வம், பழனிச்சாமி என யாரோ வரமுடிகின்றது

திமுகவில் இதெல்லாம் முடியுமா? அதிமுகவில் இருக்கும் இம்மாதிரி விஷயங்கள் திமுகவில் நடக்குமா?

ஒருகாலமும் நடக்காது

அங்கு தலமை முதல் மாவட்ட செயலலாளர் வரை 50 வருடமாக எல்லாம் விளம்பரம்

ஒப்புகொள்கின்றோம் அவர்களுக்கு கொள்கை உண்டு, வரலாறு உண்டு இன்னபிற அடையாளம் உண்டு

ஆனால் மக்கள் பெரும் ஆதரவு ஏன் கிடைக்கவில்லை என்றால் எல்லாமே அங்கு நிரந்தரம், அடுத்து இவர்தான் என எளிதாக கணிக்கபடும் விஷயம் இன்னபிற‌

ஆனால் அதிமுகவில் சுவாரஸ்யமே அடுத்தவர் யாரென தெரியாது, அடுத்தது நாம் என ஆளாளுக்கு துடிப்பார்கள் அதில் சிலருக்கு வாய்ப்பும் கிடைக்கும்

இதுதான் அதிமுகவின் வெற்றி, இன்னும் நிலைத்து நிற்கும் காரணம்

இப்பொழுதும் பாருங்கள் பழனிச்சாமி அமைதியாக ஆட்சி புரிகின்றார், டெல்லி காக்கின்றது மோடி பிடி கொடுக்கின்றார் என்பதெல்லாம் இன்னொரு பக்கம்

ஆனால் தமிழக அரசியல்வாதியாக பழனிச்சாமி உருவாகின்றார், அவர் இன்னும் சில வருடங்களை நிறைவு செய்துவிட்டால், வெற்றிகரமாக முடித்துவிட்டால் தனி அடையாளம் பெற்றுவிடுவார்

பழனிச்சாமிக்கே வாய்ப்பு அப்படி என்றால் நமக்கும் வராதா என ஆளாளுக்கு அவர் பின் வருவார்கள், காரணம் யாரும் முதல்வராக வாய்ப்பு உள்ள கட்சி அதிமுக‌

இது நிச்சயம் நடக்கும் இருந்து பாருங்கள், அடிதட்டு தொண்டனும் மிக உயரிய இடத்திற்கு வருவது பாஜகவிலும், அதிமுகவிலும் மட்டுமே சாத்தியம்

டீக்கடை மோடி பிரதமராக முடிகின்றது , பால்பண்ணை பன்னீர் செல்வமும், மாட்டுபண்ணை பழனிச்ச்சாமியும் முதல்வராக முடிகின்றது

காங்கிரஸிலோ திமுகவிலோ இது சாத்தியமா? விடுவார்களா?

அவை ஆளும் கட்சியாக வலுவோடு இருப்பது இதனால்தான், ஊழல் குற்றசாட்டு தீர்ப்பு இன்னபிற விஷயங்கள் நடந்தும் ஜெயா நிலைத்து நின்றது இந்த நுட்பத்தில்தான்

நிச்சயம் இரண்டும் கொள்கை பிடிப்போ, கோட்பாடோ கொண்ட கட்சி அல்ல, காமெடி ரகம் சந்தேகமில்லை

டீக்கடை மோடி பிரதமராக முடிகின்றது , பால்பண்ணை பன்னீர் செல்வமும், மாட்டுபண்ணை பழனிச்ச்சாமியும் முதல்வராக முடிகின்றது

காங்கிரஸிலோ திமுகவிலோ இது சாத்தியமா? விடுவார்களா?

உழைப்பிற்கும் உண்மையான தொண்டிற்கும் மரியாதை கொடுக்கும் கட்சி, தொண்டனுக்கு அதிசய வாய்ப்புகளை கொடுக்கும் கட்சி

இதனால்தான் இவை ஆளும் கட்சியாக நிற்கின்றது, காங்கிரசும் திமுகவும் வாரிசு அரசியல், உட்கட்சி வாரிசு அரசியலால் தவிக்கின்றன‌

திமுகவில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு அடுத்த தலைவர் யார் என இப்பொழுதே எல்லோராலும் சொல்லமுடியும், காங்கிரசிலும் சொல்ல முடியும் , பிரியங்காவிற்கும் குழந்தைகள் உண்டு

ஆனால் அதிமுகவில் அடுத்த தலைவர் யாரென சொல்ல முடியுமா? யாரும் வரலாம்

எங்கள் கட்சி அசைக்கமுடியா இடத்தில் இருக்க இதுதான் காரணம்

அடுத்த தேர்தலிலும் பாருங்கள் எங்களுக்கும் குறிப்பிட்ட இடம் கிடைக்கும், காரணம் இது லக்கி பிரைஸ் கட்சி அதிர்ஷ்டம் யாருக்கும் அடிக்கலாம் எனபதால் உற்சாகமாக உழைக்க வருவார்கள்

மற்ற கட்சிகளில் எல்லாமே நிரந்தரம் என்பதால் தங்கள் எல்லை அவர்களுக்கு தெரியும் என்பதால் சுணங்குவார்கள்

எதிர்கட்சிகள் இப்படி இருக்கும் வரை எங்களுக்கு என்ன கவலை, அரசியல் கொள்கை வேறு, யாதார்த்த களம் வேறு

களத்தில் நாங்கள்தான் ஹீரோ

பாருங்கள் ராமசந்திரன் இறந்தார் ராமாவரத்தில் ஒருமாதம் அன்னதானம் வழங்கினார்கள், அறிவாலயத்தில் ஒரு பிஸ்கட் கொடுப்பார்களா என்றால் இல்லை, காரணம் அவர்கள் அப்படித்தான்

திமுகவின் சரிவு இதுதான் , இதே பிஸ்கட் கொடுக்காத கதைதான் கட்சி பதவிகளிலும் இருக்கின்றது, அதன் இயக்கத்திலும் இருக்கின்றது

டீக்கடை மோடி பிரதமராக முடிகின்றது , பால்பண்ணை பன்னீர் செல்வமும், மாட்டுபண்ணை பழனிச்ச்சாமியும் முதல்வராக முடிகின்றது

காங்கிரஸிலோ திமுகவிலோ இது சாத்தியமா? விடுவார்களா?

இருந்து பாருங்கள் இன்னும் வெல்வோம், முகநூலில் உங்களை சீண்டி பின்னூட்டமும் நீ சங்கி என திட்டுகின்றார்களே அவர்களால் கட்சிக்கு 5 பைசா லாபமுமில்லை, லாபம் வந்தாலும் இவர்களுக்கு ஒன்றும் கிடைக்க போவதுமில்லை

அதனால் அந்த இம்சைகளை கண்டுகொள்ளாமல் உங்கள் போக்கில் எழுதுங்கள்

அவர்களை நினைத்தால் எங்களுக்கே பாவமாகத்தான் இருக்கின்றது, விட்டு தள்ளுங்கள்”

டிஜிஎஸ் தினகரனும், கி.வீரமணியும் வகுப்பு தோழர்கள் என்கின்றது செய்தி

வட பழனி என்பது பாவத்தின் இடமாம், விபச்சாரம் எல்லாம் நடக்கின்றதாம், அதனை தடுக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரிடம் வந்து “ஏ வேலை வெட்டி இல்லாதவனே , உனக்கோர் வேலை தருகின்றேன் அங்கே சர்ச்சை கட்டி பாவத்தை தடுப்பாயாக” என சொல்லிவிட்டாராம்

ஆனால் சர்ச் கட்ட சொன்ன‌ பணத்தினை கர்த்தர் கொடுக்கவில்லை என்பதால் அதை மக்களிடமே பிரிக்க இவர் வீடியோ வெளியிட்டுள்ளார்

இது நிச்சயம் கண்டிக்கதக்க ஒன்று, முடிந்தால் அவரை பிடித்து மனநலமருத்துவ மனையில் சேர்க்க வேண்டும் இல்லை கதற கதற பைபிள் கற்றுகொடுக்க வேண்டும்

விபச்சார குற்றம் என்பது இயேசு முன்னாலே வைக்கபட்டது, விபச்சாரத்திற்கு கல் எறிந்து கொல்லுதல் என்பதுதான் யூத சட்டம்

இயேசு அப்படிபட்ட பெண் பிடிபட்டபொழுது ஒரு கல் அவள் மேல் விழாமல் காப்பாற்றி, இனி பாவம் செய்யாதே என சொல்லி அனுப்பினார்

விபச்சார பாவிகள் என அச்சமூகம் ஒதுக்கி வைத்த பெண்களில் பலர் அவருக்கு மனம் மாறி சீடர்களாயினர்

இயேசு யாரையும் பாவிகள் என ஒதுக்கவில்லை மாறாக போதித்தார், மனம் திருப்பினார்

இது தெரியாமல் இந்த போலி பாஸ்டர் வாயில் வந்ததை எல்லாம் வாந்தி எடுக்கின்றான், அயோக்கிய பயல்

இவர் நல்ல கிறிஸ்தவனாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

அந்த பாவிகளிடம் சென்று பழகலாம், கிறிஸ்துவினை எடுத்துரைக்கலாம், அவர்களிடமே நன்கொடை பெற்று சர்ச் அமைக்கலாம்

அவர்கள் மனம் திரும்பினால் திரும்பட்டும், இல்லை செவிட்டில் அடித்தால் வாங்கி கொண்டு அவர்களுக்கு ஆசி சொல்லிவிட்டு திரும்பலாம்

கிறிஸ்தவம் அதைத்தான் போதிக்கின்றது, பாவிகளை திருத்த பார் என சொல்கின்றதே தவிர அவர்களை ஒதுக்கி வைக்காதே, கேவலபடுத்தாதே எனும் தத்துவத்தை அது போதிக்கின்றது

இவருக்கு கிறிஸ்துவும் தெரியாது, கிறிஸ்தவமும் புரியாது ஆனால் ஆசை மட்டும் வடபழனியில் பல கோடி மதிப்பில் கட்ட‌டம் கட்ட வேண்டும் என்பது

இதற்கு பாவம் என சொல்லபட்ட விஷயங்கள் எல்லாம் முதலீடு என கணக்கு போட்டுவிட்டார் மனிதர்

இவர் யூதாஸை விட, கிறிஸ்துவினை சிலுவையில் அறைந்த ரோமரை விட மகா மோசமானவர்

கிறிஸ்து பெயரால் சம்பாதிக்கலாம் என வழிகாட்டிய தினகரன் குடும்பமே இவருக்கு முன்னோடி என்பதில் சந்தேகமில்லை

டிஜிஎஸ் தினகரனும், கி.வீரமணியும் வகுப்பு தோழர்கள் என்கின்றது செய்தி, அதாவது எப்படி சுருட்டுவது என்பதை அன்றே அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பகிந்திருக்கலாம்

இருவருமே அள்ளி குவித்துவிட்டார்கள்

ஆக பயிற்சி என்பது அப்படி இருக்க வேண்டும், எல்லோரும் தினகரன் ஆகமுடியாது

இந்த அறைகுறை கிறிஸ்தவ போதகருக்கு பரிதாபங்கள் மற்றும் கண்டனங்கள்

இப்படி அரைகுறையாக எதையாவது உளற வேண்டியது, ஏதும் யாரும் சொன்னால் “அய்யகோ இந்துத்வா, ஆர்.எஸ்.எஸ் கொடுமை..” என குதிக்க வேண்டியது