மத வாத இம்சைகளில் சிக்கினால் நாடு என்னாகும் ?

இரண்டாம் உலகப்போர் முடிந்த காலங்களில் உலகில் சரிபாதி செங்கொடி பறந்தது, இதில் இந்தியாவும் அணிசேரா நாடாகவும் சோஷலிஸ்ட் நாடாகவும் மாறி போனதில் அமெரிக்காவிற்கு கவலை அதிகம்

எப்படியாவது ஆசியாவில் காலூன்றிவிட முடியாதா என தலையினை பிய்த்து திரிந்தது, சீனா ரஷ்யா இடையேயும் அரபி கடலை சார்ந்த பகுதியிலும் அவர்கள் கால்பதிக்க ஒரு இடம் அவர்களுக்கு அவசர தேவையாய் இருந்தது

அப்பொழுது தொடங்கியது அமெரிக்க பாகிஸ்தானிய உறவுகள், அரேபியாவில் எண்ணெய் வளம் அறியபட அது இன்னும் கூடியது

ஈரானிய புரட்சி, ஆப்கனில் ரஷ்யா போன்ற காலங்களில் மடியில் வைத்து கொஞ்சி, சீராட்டி பாலூட்டி அதை வளர்த்தது அமெரிக்கா

இந்தியாவுடன் பலமுறை அதற்கு கொம்பு சீவி விட்டது, வங்கப்போரின்பொழுது அந்த ஹாஜி நீர்மூழ்கி கப்பல் முதல் தன் 7ம் கடற்படை பிரிவினை அனுப்ப முயன்றது முதல் பாகிஸ்தானுக்கு அவர்கள் உதவி மிக அதிகம்

பாகிஸ்தான் அணுகுண்டு முயற்சி செய்தாலும், ஏன் அணுகுண்டையே வெளிநாடுகளுக்கு விற்க முற்பட்டாலும் செல்லமாக “நாட்டி பாய்,, இனி இப்படி செய்ய கூடாது செல்லமே” என சொல்வார்களே அன்றி தடுக்க மாட்டார்கள்

யாராவது பாகிஸ்தானிய பிரதமர் கொஞ்சம் எல்லை மீறினால் ராணுவத்தை கொண்டு மண்டையில் தட்டுவார்கள்

அவர்களும் பாகிஸ்தானும் கொஞ்சட்டும் குலாவட்டும் ஆனால் அந்த உறவால் இத்தேசம் பட்ட பாடு கொஞ்சமல்ல‌

பாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்கி அனுப்புவது முதல் எல்லையில் தீரா தொல்லை கொடுப்பது வரை அமெரிக்க ஆசி உண்டு

அது போக வருடாவருடம் அமெரிக்கா கொடுக்கும் 300 பில்லியன் டாலர் வெளிபட்ட நிதி உண்டு, இது போக மறைமுக உதவியும் உண்டு

ஆனால் ஊர்பட்ட தீவிரவாதம், உற்பத்தி இன்மை, ஊழல் மதவாதம் இன்னபிற சிக்கல்களில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு இதெல்லாம் போதாமல் சீனாவிடமும் கையேந்ந்தியது

சீனா அதை வளைத்தேவிட்டது, இன்று சீன ஆதிக்கம் அங்கு அதிகம் துறைமுகம் முதல் பல இடங்களை அது கிட்டதட்ட பட்டா போட்டு வாங்கியது போல் அமர்ந்துகொண்டது

இது போக ஆப்கனில் அட்டகாசம் புரியும் பல தீவிரவாத கும்பலின் தலமையிடம் பாகிஸ்தான், அதை தடுக்கும் சக்தி பாகிஸ்தானுக்கே இல்லை, பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்த கதை அது

இதனால் நாம் கொடுக்கும் பணம் எல்லாம் நம் கணக்கையும் மீறி எங்கோ செல்கின்றது என கணக்கிட்ட அமெரிக்கா அவர்களுக்கான நிதியினை 15 பில்லியன் டாலராக குறைத்தாயிற்று

டிரம்பானவர் செய்த நற்காரியங்களில் இதுவும் ஒன்று

ஆக அமெரிக்க நிதி மிகசிறிய அளவாக குறைக்கபட்ட நிலையில், சீனா தன் பிடியினை இறுக்கிவிட்ட நிலையில் ஆப்பசைத்த குரங்காக, அதுவும் கத்தமுடியா குரங்காக சிக்கி நிற்கின்றது பாகிஸ்தான்

விரைவில் திவால் நிலைக்க்கு சென்றாலும் ஆச்சரியமில்லை

இந்தியாவிற்கு தலைவலி கொடுப்பது ஒன்றையே முழுநேர கொள்கையாக கொண்டு அதற்கு யார் எது கொடுத்தாலும் வாங்கி கொண்ட பாகிஸ்தான் இப்பொழுது சில நாடுகளின் கைதி கோலத்தில் நிற்கின்றது

பாகிஸ்தானை பார்த்தாவது மத வாத இம்சைகளில் சிக்கினால் நாடு என்னாகும் என இந்தியா பாடம் படித்துகொள்ளும் என நம்புவோம்


ராமர் கோவில் கட்டுவதை ராமர்தான் முடிவு செய்வார் : உபி முதல்வர் யோகி

ஆனால் பாபர் மசூதியினை இடிப்பதை மட்டும் இவர்கள்தான் முடிவு செய்வார்கள் , கட்டுவதற்கு ராமர்தான் வரவேண்டுமாம்

நாம் அடிக்கடி சொல்வோம், பாஜக என்பது கண்டு அச்சபட வேண்டிய கட்சியே அல்ல அது ஒரு காமெடியான கட்சி. இதோ அதை மறுபடியும் நிரூபிக்கின்றார்கள்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s