முளையில் அல்ல, விதையிலே நசுக்க வேண்டும்

இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல திட்டம் தீட்டியதாக பலர் கைது செய்யபட்டிருக்கின்றனர்

தமிழகம் ஒன்றும் பாதுகாப்பான மாநிலம் அல்ல‌

ராஜிவ் கொலை இங்குதான் நடந்தது, அத்வாணி இங்குதான் மயிரிழையில் உயிர்தப்பினார்

ராஜகோபாலன் என்ற இந்து அமைப்பு நபரின் கொலை எல்லாம் இங்குதான் நடந்தது

ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பு, மணிரத்னம் வீட்டில் குண்டுவெடிப்பு என பல விஷயங்கள் நடந்தன‌

இமாம் அலி போன்றவர்கள் கொடூர தீவிரவாதி ஆனதும், பெங்களூர் வரை சென்று கடும் போராட்டத்திற்கு பின் அவன் கொல்லபட்டதும் வரலாறு

கோவை குண்டுவெடிப்புகள் , கலவரங்கள் என்றும் நீங்கா ரணம்

இம்மாதிரி செய்திகளை வெற்று விளம்பரம், திசை திருப்பல் என கடந்து செல்லமுடியாது, இரும்புகரம் கொண்டு ஒடுக்கி இவற்றை முளையில் அல்ல, விதையிலே நசுக்க வேண்டும்

Vanamalai Ramamoorthi

நெஞ்சை பிளக்கும் செய்தி ஒன்று தாக்கி இருக்கின்றது

எம் தந்தை , கலைஞர் என அடுத்தடுத்த இடிகளில் நிலைகுலைந்த எனக்கு இது மூன்றாம் அடி, மனம் நொறுங்கி கிடக்கின்றது

நினைவுகள் மங்கிவிட்டன, மனம் அந்த மனிதரையே தேடுகின்றது

ஆம் பெரியவர் Ramamoorthy Vanamamalai Nanguneriமறைந்துவிட்டாராம்

அவருக்கும் எனக்கும் ஏற்பட்ட தொடர்பு 2012 வாக்கில் தொடங்கியது, நான்குநேரிக்காரர் என்பதால் வள்ளியூர் முகநூல் குழுவில் அறிமுகமானார்

நான் ஒரு உபயோகமற்றவன் என்பதில் பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் தந்தையும் அலுவலத்தில் மேல் அதிகாரியும் அபார நம்பிக்கை வைத்திருந்தார்கள்

எமக்கும் அதில் சந்தேகமே இல்லை, அதனால் நாம் செய்யும் எந்த வேலையும் சரிவராது என இன்றும் மனமார நம்புகின்றேன்

அப்படித்தான் முகநூல் எழுத்தையும் இதுகாறும் நினைத்திருக்கின்றேன்

ஆனால் அந்த மனிதர் என் எழுத்துக்களை நேசித்தார், பாதுகாக்க நினைத்தார் எனக்கும் அவருக்குமான வயது இடைவெளி 40க்கும் மேல் இருக்கும்

அவர் குரலை கூட சில இடங்களில்தான் கேட்டிருக்கின்றேன்

பெரும் படிப்பு படித்து , கெமிக்கல் துறையில் மிகபெரும் உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்று ஐதராபாத்திலே வசித்தவர்

ஐதரபாத்தில் வசித்தவர் என்பதால் அவரை பார்த்தது கூட இல்லை

ஆனால் ஒருநாள் என் பதிவு இல்லை என்றாலும் உடனே செய்தி அனுப்பி விசாரிப்பார்

எமக்கே ஆச்சரியமான மனிதர் அவர், அவரின் சுபாவம் அப்படி

பேசமாட்டாரே தவிர என்னை கண்காணித்துகொண்டே இருப்பார்

சனிகிழமை வரை என் பதிவுகளை பிளாக்கில் போட்டுகொண்டே இருந்தார், நேற்று இல்லை

இன்று கேட்டால் அவரே இல்லை

மிக மிக துயரத்தில் மனம் நசிந்து கிடக்கின்றது, என் எழுத்தையும் ரசித்து எம்மை எழுத தூண்டியவரில் அவர் முக்கியமானவர்

மூட்டையிலிருந்து விழும் தானியங்களை எறும்பு சேமிப்பது போல் சேர்த்து வைத்தவர்

எப்பொழுதோ உருப்படியாக நாம் எழுதியதை முத்துக்களாக கோர்த்தவர், சில நேரம் அதை பார்வையிடுவேன், நாமா இப்படி எல்லாம் எழுதினோம் என்ற ஆச்சரியம் மேலிடும்

என்னை என்னைவிட நன்றாக புரிந்த மனிதர், உறுதியாக சொல்வேன்

முகநூலில் வந்து பழகி சண்டையிட்டு பிரிந்தவர் ஏராளம், அவரோ இறுதிவரை என்னோடு பயணித்தார், கோர்த்தார்
முகநூலில் நான் தொடர்ந்து எழுத அவரே பெரும் காரணம்

எம் பதிவுகள் பலரை சென்றடையவும், இன்று பல இடங்களில் அது சுற்றவும் பலர் எம்மை கவனிக்கவும் அவரே காரணம்

என் எழுத்து கைவிளக்கு அணைந்தது போலவும், என் எழுத்தை சுமந்த ஓடம் மூழ்கிவிட்டது போலவும் மனம் கதறுகின்றது

எப்பொழுதோ உருப்படியாக நாம் எழுதியதை முத்துக்களாக கோர்த்தவர், சில நேரம் அதை பார்வையிடுவேன், நாமா இப்படி எல்லாம் எழுதினோம் என்ற ஆச்சரியம் மேலிடும்

என்னை என்னைவிட நன்றாக புரிந்த மனிதர், உறுதியாக சொல்வேன்

முகநூலில் வந்து பழகி சண்டையிட்டு பிரிந்தவர் ஏராளம், அவரோ இறுதிவரை என்னோடு பயணித்தார், கோர்த்தா

இனி என் எழுத்தை சேமிப்பவர் யார் என தெரியவில்லை, என் கணக்கு பிள்ளையினை இழந்துவிட்டேன்

மிக சிறந்த மனிதரையும், கண்காணா மிகபெரும் நண்பரையும் இழந்துவிட்டேன்

இனி அவர் இல்லை, அவரின் செய்தி இல்லை

ஆனால் என் எழுத்தின் முதல் ரசிகன் என்ற வகையில் எந்நாளும் என் நினைவில் அவர் வாழ்வார்

காலம் வாய்ப்பளித்தால் நான் எழுதும் நூல்களை அவருக்கே சமர்பிப்பேன்

நிறத்தால் மட்டுமல்ல மனதாலும் வெண்மையான அந்த மனிதரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்

அவர் என் எழுத்துக்களை கோர்த்தெடுத்த அந்த பிளாக் அனாதை ஆயிற்று

இப்போதைக்கு ஓ என அழுவதை தவிர வேறு எண்ணம் ஏதுமில்லை

அவருக்காக அழவேண்டும், நிச்சயம் கதறி அழவேண்டும். எமக்காக பெரும் சிரத்தை எடுத்தவர் அவர்

கொஞ்சம் அழுதால்தான் நிம்மதி, அந்த கண்ணீர் நன்றி காணிக்கை கண்ணீராகவும் இருக்கும்

Image may contain: 2 people, including Ramamoorthy Vanamamalai Nanguneri, people standing and outdoor

அந்த அபிராமி என்பவள்

அந்த அபிராமி என்பவள் மாபெரும் பாதக செயலை செய்திருக்கின்றாள் என நெஞ்சார உணர்ந்த பின்னும் பெரியாரிஸ்டுகள், பெண்ணுரிமை போராளிகள் எல்லாம் அவளுக்கு வக்கலாத்து வாங்க கிளம்பிவிட்டார்கள்

பெண்ணுரிமை என்பது பெற்ற குழந்தையினை கொல்வது என சொன்னவன் எவன்?

சிலர் ஒருபடி மேலே போய் நல்லதங்காள் குழந்தைகளை கொன்றுவிட்டு தெய்வம் ஆகவில்லையா என கூக்குரல் வேறு

நல்லதங்காள் கணவன் இல்லா நிலையில் , உறவுகள் கைவிட்ட நிலையில் வாழவழியற்ற நிலையில் குழந்தைகளை கொன்று தானும் செத்தாள்

அடுத்த வீட்டுகாரனுடன் ஓடி செல்ல அவள் கொல்லவில்லை

ஆளாளுக்கு அவள் மன உரிமை என்ன? மன நிலை என்ன? வாழ்வில் அவளுக்கான இடத்தை கணவன் கொடுத்தானா? என சீறிகேட்கின்றார்கள்

அட பதர்களா? அவன் செய்த தவறு என்ன? ஆண் என்பவன் யார்?

இது வேகமான உலகம் , பொருளாதார சிக்கலில் பின்னி எடுக்கும் வாழ்க்கை இது. ஒவ்வொருவனுக்கும் குடும்பத்திற்காக பணத்தின் பின்னால் ஓடிகொண்டே இருக்கும் தேவையும் அவசியமும் இருக்கின்றது

அவனும் அந்த விதிக்கு தப்பமுடியுமா? அந்த அப்பாவி கணவனும் ஓடினான்

யாருக்காக ஓடினான்? அவனுக்கா?

அவனுக்கே தேவை 3 வேளை உணவும், படுக்க ஒரு அறையும் அதற்காகவா இரவெல்லாம் உழைத்தான்

தன்னை நம்பி வந்த அவளுக்காக, அந்த குழந்தைகளுக்காக அவன் ஓடி ஓடி உழைத்திருக்கின்றான்

அலுவலகம் என்பது சுகமாக வந்து போகும் விஷயமா? கொடுக்கும் ஒவ்வொரு காசுக்கும் ஒவ்வொரு நரம்பினை முறுக்குவார்கள்

உடலால் பாதி மனதால் மீதி என செத்து செத்தே ஒவ்வொருவனும் சம்பாதிக்கின்றான்

மகிழ்வோடு வேலைக்கு செல்பவன் ஒருவனை காட்டுங்கள், நிச்சயம் முடியாது

அந்த ஓடி ஓடி களைக்கும்பொழுதெல்லாம் குடும்பமும் அந்த குழந்தைகள் எதிர்காலமுமே அவன் கண்முன்னால் வரும், மறுபடி ஓட வைக்கும்

அந்த குடும்பமே அவன் நிம்மதி, அவன் உழைப்பின் மொத்த கனவும் எதிர்ப்பார்ப்பும் அதுவே

அவனவன் மனைவியினை முதுகில் மிதித்து வேலைக்கு போ என விரட்டும் உலகில் அவளை வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்துகொள் என சுதந்திரமாக விட்டிருக்கின்றான்

அவளின் மேக் அப்பிலும் உடையிலும் , ஸ்டைலாக வந்திறங்கும் இருசக்கர வாகனதிலுமே அது தெரிகின்றது

அவளுக்காக அவ்வளவு உழைத்திருக்கின்றான்

அவன் அவள்மேலும் குடும்பம் மேலும் கொண்ட பாசத்தினால் கொடுத்த சுதந்திரம் அது, அதற்கான மரியாதை அவளுக்கு புரியவில்லை விளங்கவில்லை

வேலை இல்லாத மனித மனத்தில் சாத்தான் புகுந்துவிடும் என்பது அவள்விஷயத்தில் சரியாயிற்று

குடும்பம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதும் புரியவில்லை, எவ்வளவோ சிக்கலில் ஒவ்வொருவரும் தவிக்கும் உலகில் தனக்கு கிடைத்த அருமையான வாழ்வினை அவள் உணரவில்லை

கணவன் வெளிநாட்டிலும் மனைவி தனியாகவும் போராடும் குடும்பம் எத்தனை?

ஒரு 200 ரூபாய் சம்பாதிக்க முடியாதா என கணவனும் மனைவியும் தெருதெருவாக அலைந்து உழைக்கும் குடும்பங்கள் இதே சென்னையில் எத்தனை?

ஒரு குழந்தைக்காக கோவில்களிலும், கருத்தரிப்பு நிலையங்களிலும் கண்ணீரோடு காத்திருக்கும் தம்பதியர் எத்தனை ஆயிரம்

நோயிலும் நொடியிலும் இன்னும் பல சிக்கல்களிலும் இருந்து வெளிவரமுடியாமல் தவிக்கும் குடும்பம் எத்தனை ஆயிரம்?

உடல் நலம் குன்றிய தன் குழந்தைக்காக மனதில் கண்ணீரும் அக்குழந்தை முன் புன்னகையுமாக நம்பிக்கையுடன் போராடும் தாய்மார்கள் எத்தனை?

பலருக்கு கிடைக்கா ஆசீர்வாதம் அவளுக்கு கிடைத்திருக்கின்றது, அவள் உணரவில்லை

பறவைகளில் கூட ஆண்பறவை இரைதேட செல்லும்பொழுது பெண்பறவை கூடை பார்த்துகொள்ளும் என்ற நம்பிக்கையிலேதான் பறக்கின்றது

அந்த நம்பிக்கையினை இந்த அப்பாவி கணவனும் கொண்டிருந்ததில் ஆச்சரியமில்லை

ஆனால் கருநாகம் ஒன்று வந்து அக்குஞ்சுகளை கொல்ல சொல்லி அந்த பெண்பறவையினை தூக்கி செல்லும் என கனவிலும் நினைப்பானா?

எல்லா உயிரிலும் பெண் படைப்பின் மிகபெரும் பலம் தாய்மை

கோழி கூட பருந்தை கண்டால் குஞ்சுகளை செட்டையில் அடைத்து சீறும், கிளி கூட்டம் கூட தன் வீட்டருகில் பாம்பை கண்டால் அலறும்

பூனை கூட அதன் குட்டியினை தொட்டால் புலியாக பாயும்

விலங்குகளுக்கு கூட இருக்கும் உணர்ச்சி இந்த சண்டாளிக்கு இல்லை என்பதுதான் பெரும் அதிசயம்

எந்த வீட்டில் சிக்கல் இல்லை? எந்த வீட்டில் சண்டை இல்லை, கதவில்லா வீடு இருந்தாலும் இருக்குமே தவிர சண்டையில்லா வீடு இல்லை

குடும்பம் என்பது அப்படித்தான், சண்டையே இல்லாவிட்டால் சில பிணங்கள் வாழ்வதாக அர்த்தம் இல்லை போலியாக நடிக்கின்றார்கள் என அர்த்தம்

ஆனால் சண்டைகள் முடியும், பாசம் தொடரும் இப்படி கலந்தே செல்வதே வாழ்வு

கணவன் மேல் உள்ள கோபத்தை குழந்தைகளை கொன்று காட்டுகின்றேன் என பெண்ணுரிமையில் கிளம்பினால் சுடுகாடுகள் எல்லாம் அந்த குழந்தை பிணங்களாலே நிரம்பி இருக்கும்

எது பெண் உரிமை? எது பெரியாரிசம்?

கணவன் ஆதிக்கம் செலுத்தினாலோ இல்லை அடக்குமுறை செய்தாலோ இல்லை சம்பாதிக்காவிட்டாலோ கொடுமை புரிந்தாலோ போடா டேய் என் பிள்ளைகளை நான் தனியே வளர்த்து காட்டுகின்றேன் என சவால் விட்டு வளர்த்து காட்டுவாளே அவளே பாரதியாரும் பெரியாரும் கண்ட பெண்

மாறாக கணவன் மாடுபோல உழைத்துகொண்டிருக்க, அதை எல்லாம் சட்டை செய்யாமல் குழந்தைகளை கொன்றுவிட்டு அடுத்தவனுடன் ஓடுவது பெரியாரிசம் அல்ல பேயிசம்

எல்லா பெண்ணிடமும் குழப்பம் உண்டு, எல்லா பெண்களுக்கும் இரு மனது உண்டு சந்தேகமில்லை

அவள் தன் குழந்தைகளுக்காக மனதை மாற்றி இருக்க வேண்டும் இல்லை பெரியவர்களிடம் பேசியிருக்க வேண்டும்

மாறாக பிரியாணிகடைக்காரனிடம் ஆறுதல் தேடியதும், அந்த சண்டாளன் அதை பயன்படுத்தி அக்குருவி கூட்டை கலைத்து போட்டதும் விதி அல்லது மயங்கிவிட்ட மதி

அன்றே சொன்னான் கண்ணதாசன் “தேகம் துடித்தால் மிஞ்சுவது கண்ணீரே”

இப்பொழுது அதுதான் மிஞ்சி இருக்கின்றது

இந்த சண்டாளி சூர்ப்பநகை வடிவாள் என அவ்வை சொன்னவளை ஏறேடுத்து பார்க்கவும் மனவில்லை

ஓடியதும் ஓடினாள் அக்குழந்தைகளை விட்டு ஓடியிருந்தால் அவைகளும் இப்பூமியில் வாழ்ந்திருக்கும், அனாதையாகவோ இல்லை தந்தையுடனோ வாழ்ந்திருக்கும்

ஆனால் அவனை கதற வைக்க வேண்டும் என்ற வன்மத்தில் அக்குழந்தைகளை கொன்றிருக்கின்றாள் என்றால் அவன் அக்குழந்தைகள் மேல் எவ்வளவு பாசம் வைத்திருப்பான் என்பதை நமக்கே புரிந்து கொள்ள முடிகின்றது

பாசங்களில் பொல்லாதது புத்திர பாசம், துரோகங்களில் பொல்லாதது மனைவியின் துரோகம்

அந்த துரதிருஷ்டசாலிக்கு இரண்டுமே அமைந்துவிட்டதுதான் சோகம்

அவன் செய்த தவறென்ன? குடும்பத்திற்காக ஓடி ஓடி உழைத்ததும், இவள் செய்த தவறுகளை குழந்தைகளுக்காக பொறுத்ததுமே அவன் செய்த தவறு

அவனுக்கு ஆழ்ந்த இரங்கல்களும் ஆறுதல்களும்

நிச்சயம் அவன் ஒரு தவறும் செய்யவில்லை, அவனை பிடித்த பெரும் பீடை அவன் குழந்தைகளோடு சென்றுவிட்டது

அவனுக்காகவும் அக்குழந்தைகளுக்காகவும் அழுவோம், நாம் அழுகின்றோம்

கருநாக பாம்பு தன் குட்டியினை விழுங்குவது போல அவள் விழுங்கி இருகின்றாள் சண்டாளி, மனமே இல்லாதவளுக்கு ஏது பெண்ணுரிமை?

அந்த அப்பாவி கணவன் இந்த துயர காலத்தை கடந்து செல்லட்டும்

வாழ்விழந்த ஏதாவது ஒரு பெண் அவனை வருங்காலத்தில் ஏற்றுகொண்டால் அதுதான் பெரியாரும் பாரதியும் சொன்ன பெண் உரிமை

அப்படி ஒரு வாழ்வு அவனுக்கு பின்னாளில் அமையட்டும், இந்த கருகிவிட்ட மொட்டுக்கள் மீண்டும் மலரட்டும்

சிறையில் இருக்கும் அவள் இதை பார்த்து பார்த்து சாகட்டும், அதை விட அவளுக்கு தண்டனை கொடுக்க முடியாது.

“பெண் புத்தி பின் புத்தி” என்பார்கள், புத்தியே இல்லாத இவள் அந்த பெண் வரிசையில் வரமாட்டாள்

முன்பெல்லாம் கூட்டு குடும்பம் இருந்தது, ஒவ்வொருவரும் எல்லோரையும் கவனித்துகொண்டே இருப்பார்கள், இம்மாதிரியான விஷயங்கள் நடக்க வாய்ப்பில்லை

இப்பொழுதோ தனித்துவிட்ட காலங்கள், போதா குறைக்கு பழகவும் பார்த்து கெடவும் ஏகபட்ட விஷயங்கள்

இதற்கெல்லாம் நல்லோர் தொடர்பும், ஆன்மீகத்தில் மனதை செலுத்துதலின்றி தீர்வில்லை

முன்னோர் ஏராளம் சொல்லி வைத்தனர், “ஆணுக்கு ஒன்று என்றால் கூட குடும்பம் நிற்கும், பெண் அகலகால் வைத்தால் குடும்பம் தாங்காது”

இதை எல்லாம் அவள் மண்டையில் உரைகும்படி சொல்லி கொடுக்க யாருமில்லை

வாழ்வில் வரும் நெருக்கடிகளை வென்றுகாட்டுவதே பென் உரிமை , பெண் விடுதலை எனப்படுமே தவிர கணவனை பழிவாங்க குழந்தையினை கொல்லுதல் என்பது கொடூர குற்றம் என்ற வரிசையில் வரும்

மிருகம் கூட செய்யாத பாதகம் இது

இதற்கு வக்கலாத்து வாங்குபவர்கள் பெரியாரையோ, அம்பேத்கரையோ படித்தவர்களாக இருக்க முடியாது

ஆட்டோ சங்கர், சந்தண வீரப்பன்
, பூலன் தேவி, பிரபாகரன் போன்ற அயோக்கியர்களை பின் தொடர்பாகவே இருப்பார்கள்

குடும்பத்தை நேசித்து அதற்காக உழைத்து அதனாலே நொறுங்கி கிடக்கும் அந்த மனிதனுக்கு ஆறுதல்கள், அந்த பிஞ்சு குழந்தைகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

அவனின் பொறுப்பான உழைப்பே அவனை காப்பாற்றியும் இருக்கின்றது, இல்லாவிட்டால் அந்த சண்டாளி இவனையும் கொன்றிருப்பாள்

அந்த குடும்பத்திற்காக அவன் செய்த தியாகத்தை உணர்ந்த தெய்வம் அவனைமட்டும் காப்பாற்றி தீராசோகத்து சாட்சியாக நிறுத்திற்று

அவன் வாழட்டும், எங்கிருந்தாலும் வாழட்டும். துளியும் அவன் மேல் தவறு இல்லை அதனால் பழியுமில்லை

பாரதத்தில் பாண்டவர் மகன்களை வஞ்சகமாக கொன்ற அஸ்வத்தாமன் இன்னும் நிம்மதியின்றி அலைவதாக சொல்கின்றது பாரதம்

இந்த சூர்ப்பநகைக்கும் ஒரு காலமும் இனி நிம்மதி இல்லை. இப்பெரும்பழி எப்பிறப்பிலும் தீராது

குஷ்பு மெய்கீர்த்தி

முகநூல் என்பது வெட்டியாக சாதி சண்டை, மத சண்டை, கட்சி சண்டை, நடிகை சண்டை போடும் இடமல்ல சில மகத்தான காரியங்களை செய்ய முடியும் என முதலில் காட்டிய நாடு எகிப்து

அந்த மல்லிகை புரட்சி 2011ல் முகநூல் வழியாகத்தான் நடந்தது, 27 ஆண்டுகால முபாராக்கின் ஆட்சியினை அது தூக்கி எறிந்தது, அந்த மனித வெள்ளத்தை பெருக்கியது முகநூல்

தொடர்ந்து அப்புரட்சி டூனிசியா, பக்ரைன் என பரவியது, முதலில் தடுமாறிய அரசுகள் பின் முகநூலை குறிவைத்தது, அதன் பின் எல்லா நாடுகளும் விழித்தன‌

ஏதும் கலவரமோ இல்லை போராட்ட சூழலோ வந்தால் மிஸ்டர் மார்க் எக்ஸ்கியூஸ் மீ, கொஞ்சம் முகநூலை மூடுகின்றோம் என அரசுகள் தொடங்கிவிட்டன‌

அந்த அளவு முகநூல் அரசுகளை பயமுறுத்த தொடங்கிற்று, ஜல்லிகட்டு மெரினா புரட்சியில் முகநூல் பங்கும் இருந்தது, இப்பொழுதும் அரசால் முகநூல் கண்காணிக்கபடுகின்றது சந்தேகமில்லை

ஆயினும் பகிரங்கமாக சொல்வார்களா என்றால் இல்லை, ஆனால் முதன் முதலில் முகநூலால் ஆட்சியினை மாற்றிய எகிப்து அதற்கு துணிந்தது

பொதுவாக எதன் மூலம் ஆட்சிக்கு வருகின்றார்களோ அதனிலிருந்து இன்னொருவர் வந்துவிட கூடாது என்பதில் ஆட்சியாளர் கவனமாக இருப்பார்கள்

தமிழக ராமசந்திரன் அப்படி இருந்தார், தனக்கு பின் ரஜினி போன்றவர்கள் உருவாகிவிட கூடாது என கவனமாக திரையுலகினை கண்காணித்துகொண்டே இருந்தார்

இப்பொழுது எகிப்தும் அதனை செய்கின்றது

ஆம் இனி எகிப்தில் 5000 நண்பர்கள் பட்டியல் கொண்ட ஒவ்வொருவரையும் அரசு கண்காணிக்குமாம், அவர்கள் எழுதுவதை அரசு படிக்குமாம், ஏதும் வில்லங்கம் என்றால் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி அக்கவுண்டை முடக்குவார்களாம்

அரசே சொல்லியாயிற்று இல்லை மிரட்டியாயிற்று

இதே நிலை விரைவில் பல நாடுகளில் பரவி இந்தியாவிற்கும் வரலாம் வாய்ப்பு இருக்கின்றது

அப்படி வரும் பட்சத்தில் நம்மை கண்காணிப்பார்களா என தெரியாது, தலைவி குஷ்புவே திரும்பி பார்க்காத இப்பக்கத்தை அரசு பார்க்கவே பார்க்காது

எனினும் சில நேரங்களில் அரசு ஏதும் கேட்டால், என்ன நோக்கத்திற்காய் எழுதுகின்றாய் என கேட்டால் அட்டகாசமான பதில் உள்ளது

தலைவி குஷ்புவினையும் அவரின் மெய்கீர்த்தியினை பாடி அவர் புகழை உலககெல்லாம் கொண்டு சேர்ப்பதே சங்கத்தின் நோக்கம் என்றும், இடையில் சில விஷயங்களை பக்கவாட்டில் சொல்வது சும்மா என்றும் சொல்லிவிடலாம்

உண்மையில் சங்கம் முகநூலில் எழுதுவதும் அவருக்காகத்தான்

தலைவி இயக்கம் ஒன்றும் தடைசெய்யபட்ட இயக்கம் அல்ல என்பதால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது

இதையும் மீறி தடை அது இது என அரசு கிளம்பினால் சங்கம் பொறுக்காது..

தலைவி குஷ்புவின் புகழை பரப்புவதும் அவருக்கு பக்கபலமாக இருப்பதும் தவறேன்றால் அந்த தவறை சங்கம் ஆயிரம் முறை திரும்ப திரும்ப செய்யும், தடைகளை தாண்டி திரும்ப திரும்ப‌ செய்யும்

அது இந்திய அரசு அல்ல, அமெரிக்க தலமையிலான பன்னாட்டு படை என்றாலும் சங்கம் அஞ்சாது

Image may contain: 1 person, close-up

கில்லாடி கிளைவ் : 08

அது 1754ம் வருடம், லெப்டினல் கர்னல் என்ற பட்டத்துடன் இந்தியா திரும்பினார் கிளைவ்

அப்பொழுது மாவீரன் சத்ரபதி சிவாஜி இறந்து 80 வருடம் ஆகி இருந்தது, அவன் அரசு வலுவோடு இல்லை ஆனால் அழிந்துவிடவும் இல்லை

அப்பொழுது கொடூரமான கொள்ளை கூட்டங்களும் ஆங்காகங்கு தோன்றின, உண்மையில் பல இனங்களை அடக்கி ஒன்று சேர்த்து மாவீரன் சிவாஜி பெரும் சாம்ராஜ்யம் அமைத்திருந்தான்

அப்பொழுதே பிரிட்டிசார் பம்பாயில் வியாராம் செய்தாலும் அதிகாரம் செய்யும் திட்டமெல்லாம் இல்லை, சிவாஜி பிரிட்டானியரை வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருந்தான்

கம்பெனியாரும் நாம் வியாபாரம் செய்யத்தான் லாயக்கு என பம்பாயில் செய்துகொண்டிருந்தனர்

அவனுக்கு பின் அது சிதறியது, அரசு ஒருபக்கம் கொள்ளை கூட்டம், கூலிபடை இன்னொரு பக்கம் என பெருகிற்று

அப்படி ஒரு கொடூர கொள்ளை கூட்டம், பம்பாய்க்கு தெற்கே இருந்தது, விஜயதுர்க்கம் என அந்த தீவிற்கு பெயர் அதிலிருந்த கொள்ளை கும்பலின் பெயர் ஆங்கிரியா

அது தீரன் அதிகாரம் சினிமாவில் வருவது போல பவேரியா போன்ற கொடூர கொள்ளை கும்பல், இப்பொழுது ஏடன் வளைகுடாவில் கப்பலை கொள்ளையிடும் சோமாலியர்கள் எல்லாம் அதனருகில் வரமுடியாது

கம்பெனி கப்பல்கள் எல்லாம் கொள்ளையிடபட்டன, பிரிட்டிஷ் கப்பல் மட்டுமல்ல போர்த்துகீசிய கப்பல்களும் அடிபட்டன‌

அந்த கொடூர கும்பலான ஆங்கிரியா கும்பலை அடக்கத்தான் கிளைவ் நேரடியாக சென்றார்

கிளைவோடு இம்முறை வாட்சன் எனும் கடற்படை தளபதியும் அவனுக்கு வலுசேர்க்க வந்திருந்தார், காரணம் கிளைவ் தரைபோரில் கில்லாடி ஆனால் கடல் அனுபவம் போதாது

இதனால் வாட்சன் கடல்வழி முற்றுகையும், கிளைவ் தீவில் இறங்கியும் தாக்கினர், ஆங்கிரியா கும்பலை சோலி முடித்தார் கிளைவ், கொள்ளை கும்பல் வைத்திருந்த ஏராளமான பணமும் தங்கமும் மீட்கபட்டது, அதில் கொஞ்சம் வாட்சனுக்கும் கிளைவிற்கும் போனது

ஆங்கிரியாக்களை அடக்கியபின் சென்னை கோட்டைக்கு வந்தார் கிளைவ்

இந்தியாவில் வியாபாரத்தை பெருக்க வேண்டும் என்றே லெப்டினென்ட் கர்னல் பட்டமும், கவர்னர் பட்டமும் அவருக்கு கொடுக்கபட்டது

கம்பெனியின் போர்டு ஆப் டைரக்டர்ஸ் எனும் குழுவும் அவர்மேல் பெரும் சுமை சுமத்தி அனுப்பி இருந்தது. நிறைய சம்பாதித்து கிழகிந்திய கம்பெனியினை வளர்க்க வேண்டும் என்ற வெறி ஊசி போட்டு அனுப்பி இருந்தார்கள்

கிளைவ் எனும் மாவீரன் முதலாளிகளுக்கு பதில் சொல்லி ஆகவேண்டிய நிலை, இப்பொழுது சென்னையில் அவர்களுக்கு நல்ல வியாபாரம், எதிரிகள் இல்லை. டூப்ளே பிரான்ஸ் சென்று இறந்தபின்பு பிரெஞ்ச்காரர் சத்தமே இல்லை

இனி மற்ற இடங்களில் கவனம் செலுத்த சிந்தித்தார் கிளைவ்

அந்நேரம் பிரென்ஞ், போர்ச்சுக்கல், டச்சு ஆகிய நாடுகளும் இங்கு வியாபாரம் செய்தன, அவர்களுக்குள் சில எல்லை கோடுகளும் இருந்தன‌

ஐரோப்பிய வாரிசு உரிமைக்காக நடந்த போரின் தொடர்ச்சியாக அப்படியே ஏதோ ஆற்காடு நவாப் குடும்பத்திற்காக உள்ளே போய் பிரிட்டானியாரும் பிரெஞ்ச்காரரும் மோதி கிளைவ் எனும் மாவீரனால் ஆற்காடு சமஸ்தானம் பிரிட்டானியர் ஆதிக்கத்தில் இருக்கலாம்

அதற்காக எல்லா இடத்திலுமா முடியும்? மும்பை, சென்னை, கல்கத்தா என முக்கிய பகுதிகளில் பிரிட்டிசார் இருந்தனர்

கோவா, டையூ , கோழிக்கோடு சென்னையின் சில பகுதிகள் போர்த்துகீசியர் கையில் இருந்தனர், வங்காளத்தில் பெட்டிகடை வைத்திருந்தனர்

இந்தியாவினை விட தொடக்கத்தில் இலங்கையில் போர்ச்சுகீசியர் அதிக கவனம் செலுத்தினர், காரணம் கேரள மிளகு போலவே இலங்கையின் லவங்க பட்டைக்கு கிராக்கி அதிகம்

டச்சுக்காரர்கள் கொச்சி, குளச்சல் பக்கம், மசூலிபட்டினம் என வலுவாக இருந்தார்கள்

பிரான்சுக்கு கேரளத்தில் மாஹி, தமிழகத்தில் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால், ஒரிசா பக்கம் யானோன், அப்படியே கல்கத்தா பக்கம் சந்திரநாகூர் என பல ஏரியாக்கள்

ஐரோப்பியர் தங்களுக்குள் பாகம் பிரித்து வியாபாரம் செய்த வரலாறு இது

இப்பொழுது கேரளாவில் வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்றால் டச்சுக்காரர், போர்த்துகீசியரோடு மல்லுகட்ட வேண்டும், பிரான்சும் உண்டு

பம்பாய் வெள்ளையருக்கானது சூரத்தும் உண்டு இதனால் கேரளா பக்கம் செல்வது அரிது

என்ன செய்யலாம், கிளைவின் கண் இரு இடங்கள் மேல் விழுந்தது ஆம் அவை இரண்டும் வலுவான மிக செழிப்பான இடங்கள்

ஒன்று பஞ்சாப், இன்னொன்று வங்கம்

இதில் பஞ்சாபில் சீக்கியர் வலுவாக‌ இருந்தனர், இன்னொன்று அதை அடைவது சிக்கலான நிலவழி இன்னபிற, சில வலுவான அரசுகளும் இருந்தன‌

ஆனால் வங்காளம் அன்று அதைவிட செழிப்பாய் இருந்தது

கங்கை நதியின் டெல்டா பகுதி அது, கங்கை பல ஆறுகளாக பிரிந்து வங்காளத்தை எப்பொழுதும் பசுமையாகவே வைத்திருந்தது, நெல் என்பது அளவுக்கு மீறி விளைந்தது

வங்க காடுகளில் புலிகளும் மான்களும் செழித்திருந்தன, புலிகளின் வேட்டை பொருட்களுக்கான சந்தையே இருந்தது

கரும்பும், பருத்தியும் அதிகம் விளைந்தன, மெல்லிய துணி அங்கு நெய்யபட்டது அதற்கு ஐரோப்பாவில் கனத்த வரவேற்பு இருந்தது

காய்கறிகள் எக்கசக்கம் விளைந்தன, கடலிலும் ஆற்றிலும் மீன் வளமும் நிறைந்திருந்தது, உப்பு வியாபாரமும் நடந்தது

மொத்த்தில் இந்தியாவின் மிக வளமான பகுதியாகவும் , பெரும் ஆலயங்கள் கொண்ட மக்கள் எப்பொழுதும் குவியும் இடமாகவும் வங்கம் இருந்தது

இதனால் ஹூக்ளி ஆற்றின் கரையில் பிரெஞ்ச்காரர்கள் சந்திரநாகூர் எனுமிடத்தில் கோட்டை கட்டினர், டச்சுக்காரர் சின்சுரா ஆற்றங்கரையில் இருந்தார்கள்

ஹூக்ளி நதிகரையில் வில்லியம்கோட்டை பிரிட்டானியருக்காக இருந்தது, கிளைவ் அதில்தான் கால் வைத்து வியாபாரத்தை பெருக்க எண்ணினார்

ஆனால் கல்கத்தாவிற்கு இன்னொரு கவர்னர் இருந்ததால், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை போட்டுவிட்டு சென்னை வந்தார் கிளைவ்

வில்லியம் கோட்டையினை சுற்றி மாதா கோவிலும் வந்தது சில குடோன்களும் வந்தது, முதலைகள் வாழ்ந்த அந்த சேறுபகுதி சென்னையில் கருப்பர் நகரம் ஆனது போல் நகரமானது

கிளைவ் அந்த தங்கம் விளைந்த வங்கத்தை நோட்டமிட்டான், அங்குள்ள நிலமையினை ஆராய்ந்தான்

அன்று வங்கம் என்பது தனியாக அல்ல, இன்றைய வங்கம் (இன்றைய வங்கதேசமும் அடக்கி), பீகார், ஒரிசா என மூன்றும் கலந்த தேசமாக இருந்தது, அது முகலாய சாம்ராயத்தின் அங்கமாகவும் இருந்தது

முகலாய சாம்ராஜ்யம் சரியும் பொழுது தெற்கே ஆற்காடு நவாப் தனி ஆவர்த்தனம் செய்தது போல அங்கே அன்வர்தீன்கான் என்பவர் தனி அரசரானார்

1756ல் அவர் இறக்க அவரின் பேரன் சுராஜ்‍ உட் டொவ்ளா என்பவன் மன்னரானார் அவருக்கு வயது 20

மனிதர் மிக செல்லபிள்ளையாக வளர்ந்திருந்தார், படிப்பு இல்லை பண்பும் சுத்தமாக இல்லை, எப்பொழுதும் போதை பெண்கள் என ஆட்டமும் கூத்துமாக வசந்த மாளிகை சிவாஜி கணேசன் போல் ஆடிகொண்டிருந்தார்

அது முற்றி சித்தபிரம்மை பிடித்த அளவு சென்றது, யாரையும் மதிப்பதில்லை, துதிபாடிகளை மட்டும் முக ஸ்டாலின் போல் அருகில் அமர்த்தி கொண்டார், ஜெயாவிற்கு குனிந்து நின்ற‌ அமைச்சர்கள் போல் அவருக்கும் எல்லோரும் குனிந்து நிற்க வேண்டும்

அவரின் அமைச்சரவை எப்படி இருந்தது என்றால் ரமாவரத்தில் ராமசந்திரன் செங்கோல் செலுத்திய காட்சி போல் இருந்தது, அவரை புகழ்ந்தவர்களுக்கு வாழ்வு இல்லையேல் முதலில் மன்னர் மிதிப்பார் அதன் பின் யானை மிதிக்கும்

இம்சை அரசன் வடிவேலு போலவே ஆட்சி செய்து கொண்டிருந்தார் இந்த சுராஜ்‍ உட் டொவ்ளா

இவரிடம் இருந்த கொடூர குணம் நேரம் போகவில்லை என்றால் விலங்குகளை சித்திரவதை செய்து ரசிப்பது அதாவது குதிரைக்கு வாலை வெட்டி ரத்தம் கசிய அது ஓடுவதை ரசிப்பது, மாட்டிற்கு கழுத்தில் வெட்டி அது துடிப்பதை ரசிப்பது

ஏதும் பறவை கிடைத்தால் ஒரு இறக்கையினை முறித்து பறக்கவிட்டு மகிழ்வது என்ற கொடூர விளையாட்டு இருந்தது, மன்னன் ஆசைபட்டால் மறுக்க முடியுமா?

ஆளாளுக்கு புதுபுது ஐடியா கொடுத்து விளையாட வைத்தார்கள், ஓணானை கள்ளியில் சிலுவையில் அறைவது அவரின் கண்டுபிடிப்பாக இருக்க கூடும்

இந்த சுல்தானுக்கு இருந்த இன்னொரு கொடும் விஷயம் ஐரோப்பியர் வெறுப்பு, 20 வயதுதான் ஆகியிருந்தாலும் இனம்புரியா வெறுப்பு இருந்தது அதை விளையாட்டாக ஆடினார்

தெளிவாக சொல்லவேண்டும் என்றால் அரேபிய நாடுகளில் சில அரபிகள் பிழைக்க வந்த வெளிநாட்டவரை ஒரு மாதிரி பார்ப்பது, வெளிநாட்டு தமிழர்கள் இந்திய தமிழர்களை மட்டமாய் நடத்துவது போன்ற தன்மை அது

அடிக்கடி பிரெஞ்ச்காரர், பிரிட்டானியர் கோட்டைக்குள் புகுந்து அவர்கள் கல்லாபெட்டியினை தூக்கிவருவார், அவர்கள் விட்டுவிடுமாறு கெஞ்சுவர், இவர் ரசிப்பார் கடைசியில் அவர்களை கொன்றுவிடுவார்

இதெல்லாம் அவரின் பொழுது போக்கு ஆனால் மன்னராயிற்று எதிர்க்க முடியாது, அவ்வப்பொழுது அடிவாங்கினாலும் வங்கத்தில் சம்பாதிக்கலாம் என்பதால் புதிய பாதை பார்த்திபனிடம் அடிவாங்கும் சிறுவன் போல ஐரோப்பியர் இருந்தனர்

இந்நிலையில் ஒரு பெரும் பணக்காரனை மிரட்டினார் சுராஜ்‍ உட் டொவ்ளா, பெரும் பணம் கோரினார், அவனோ உயிர்தப்ப வெள்ளையரிடம் சரண்டைந்தான்

வில்லியம் கோட்டை பிரிட்டானியர் அவனுக்கு அடைக்கலம் கொடுத்தனர், அவனை சுராஜ்‍ உட் டொவ்ளாவிடம் ஒப்படைக்க மறுத்தனர்

அவ்வளவுதான் அந்த ஐரோப்பிய வெறுப்பு சாமியாய் இறங்க தன் படையுடன் கோட்டைக்குள் புகுந்தார் சுராஜ்‍ உட் டொவ்ளா, அதுவரை பிரிட்டானியர் வெறும் வியாபாரிகள் அவ்வப்பொழுது பிரெஞ்சுக்காரரோடு கும்மாங்குத்து போடுவார்கள்

பெரும் படையினை எதிர்த்து பழக்கம் இல்லை என்பதால் வில்லியம் கோட்டை கவர்னரே படகேறி நடுகடலில் இருந்த கப்பலில் பதுங்கினார்

கோட்டையில் இருந்த 150 பிரிட்டானியரை இழுத்து சென்றான் சுராஜ்‍ உட் டொவ்ளா, எனக்கு அந்த வணிகன் தரவேண்டியதை விட பல மடங்கு தந்தால் இவர்களை விடுவிப்பேன் என அறிக்கையிட்டான்

அதன் பின் அவன் செய்ததுதான் கொடூரம்

மிக சிறிய நிலவறை சிறையில் காற்றோ, வெளிச்சமோ இல்லாத, 30 பேர் மட்டுமே இருக்க கூடிய அறையில் அவர்களை மொத்தமாக விலங்கிட்டு அடைத்தான்

கொஞ்சநேரம் தன் வழக்கமான விளையாட்டினை ஆடினான், அதாவது அவர்கள் தாகத்தால் நீர் கேட்டால் கொடுப்பது போல் காட்டுவான் அவர்கள் ஓடிவந்து விழுவார்கள் ஆனால் கொடுக்கமாட்டான்

பின் ஜெபிக்க சொல்வான், அவர்கள் ஜெபிப்பார்கள் இவன் சிரிப்பான்

இந்த விளையாட்ட்டு விளையாடிகொண்டே நன்றாக குடித்துவிட்டு நான் சொல்லும் வரை இவர்களுக்கு உணவோ நீரோ கொடுக்க கூடாது என சொல்லிவிட்டு தூங்க சென்றுவிட்டான்

அந்த உத்தரவினை மறந்தும் விட்டான், ஆனால் அந்த வெள்ளையர் இருட்டறையில் துடிதுடித்தனர், பலர் செத்தனர்

அவர்கள் கெஞ்சியும் லஞ்சம் கொடுத்தும் மன்னனின் உத்தரவின்றி காவலர்களால் செயல்படமுடியாமல் போயிற்று

பலர் இறந்தனர், இரு நாள் கழித்து வந்த சுராஜ்‍ உட் டொவ்ளா கையில் பணம் இருப்பவர்களை வைத்துவிட்டு போக சொன்னான், மன்னனிடம் அவர்களை விடுவிக்க பேரம் பேச வந்த வில்லியம் கோட்டை கவர்னர் (கப்பலில் பதுங்கியவர்) ஹால்வெல் என்பவரையும் பிடித்து இருட்டு அறையில் அடைத்தான் சுராஜ்‍ உட் டொவ்ளா

அவர் கோட்டையின் ரகசிய செல்வங்கள் அனைத்தையும் ஒப்படைக்கும் வரை விடமாட்டேன் என சொல்லி சித்திரவதை செய்தான் பின் சுராஜ்‍ உட் டொவ்ளாவின் சொந்தகார பெண்ணே இரக்கம் கொண்டு ஹால்வெல்லை பணம் கொடுத்து விடுவித்தாள்

இப்படியான காரியங்களை மன சுத்தியோடு செய்த சுராஜ்‍ உட் டொவ்ளா, டெல்லி சுல்தானுக்கு தான் வெள்ளையர்களை வென்றுவிட்டதாகவும், கல்கத்தாவில் ஈ அவர்களுக்கு இடமில்லை எனவும் அறிவித்தான்

கல்கத்தாவின் பெயர் அலி நாகூர் ஆனது, ஆம் அது அவனின் வெற்றிக்கு அர்த்தமாம், கடவுளின் துறைமுகம் என பெயராம்

கிட்டதட்ட 90 பிரிட்டானியர் அந்த இருட்டறையில் இறந்தனர், எஞ்சியோர் வெளிவந்து இறந்தனர்

விஷயம் சென்னைக்கு எட்டியது, அழுகையும் கோபமும் கொண்ட பிரிட்டிசார் ஏதாவது செய்யுங்கள் என கிளைவ் முகத்தை பார்த்தனர்

அவரை தவிர அவர்கள் யார் முகத்தை பார்க்க முடியும்?

கிளைவும் வாட்சனும் படை திரட்டினர், கிட்டதட்ட 4 ஆயிரம் பேர் கொண்ட படை அது

ஆகஸ்டில் புறப்பட்ட கிளைவ் வங்க கடலுக்க்கே உரித்தான புயல்களை கடந்து கல்கத்தாவினை அடைய டிசம்பர் ஆனது

விஷயம் சுராஜ்‍ உட் டொவ்ளா காதிற்கு சென்றது, போதையில் சொன்னான், என்னது பிரிடிசாரா? என்னிடம் மோதவா?

மொத்த ஐரோப்பாவிலே பத்தாயிரம் பேர் தேறமாட்டார்கள், இவர்கள் எத்தனை பேர்?

கிளைவோ வெறியோடு வந்தான், கூடவே வாட்சனுக்கும் கடுமையான கோபம் இருந்தது

அதுவரை வங்காளம் பெரும் போரினை கண்டதில்லை, காரணம் வங்காளிகள் சுவாவம் அப்படியாக அன்று இருந்தது

கடும் உழைப்பு இல்லாதவர்களாகவும், ஒரு மாதிரி மனநிலை கொண்டவர்களாகவும் , வெறும் பேச்சு வீரர்களாகவும், அரட்டை அடிப்பதிலுமாக இருந்தார்கள்

சண்டையோ, மோதலோ, வீர விளையாட்டோ அவர்களுக்கு தூரமாய் இருந்தது. சுராஜ்‍ உட் டொவ்ளா சுகமாக ஆள அதுவும் ஒரு காரணம்

வழக்கமாக உள்ளூரில் சண்டைக்கு ஆள் எடுக்கும் பிரிட்டாருக்கு அது பெரும் சவாலை கொடுத்தது எனினும் முடிவோடு வந்திருந்தான் கிளைவ்

ஏற்கனவே வந்து போயிருந்ததால் யுத்தம் என வந்தால் என்ன செய்யவேண்டும் என்ற திட்டம் அவனிடம் இருந்தது

களமிறங்கினான், வங்கத்தின் தலைவிதி வேகமாக மாற தொடங்கியது

(தொடரும்..)

No automatic alt text available.
Image may contain: 1 person, standing