லைவி குஷ்பு திமுகவில் இருந்தார்

அப்பொழுது தலைவி குஷ்பு திமுகவில் இருந்தார்

திமுகவின் அடுத்தகட்ட தலைவர் யாரென சர்ச்சை வந்து மதுரை அலுவலகம் எல்லாம் எரிக்கபட்ட நேரமது

“திமுகவின் அடுத்த தலைவர் கட்சியின் உட்தேர்தல் படியே தேர்வு செய்யபடுவார் , இதுதான் கட்சியின் ஜனநாயகம், அதனால் அடுத்த தலைவர் யாரென இப்பொழுது சொல்லமுடியாது” என சொல்ல்விட்டார்

அதில் தவறொன்றும் இருக்க முடியாது, சாதாரண கருத்து , உண்மையான திமுக தொண்டன் அதைத்தான் சொல்வான், தலைவி அதைத்தான் சொல்லி இருந்தார்.

அதற்குள் அவர் வீட்டின் முன்னால் திமுகவினர் கூடினார்கள், கல்வீசினார்கள் இன்னும் கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள்

குஷ்பு சொன்ன கருத்துக்கு அவ்வளவு ஆர்ப்பாட்டம், அத்தோடு “போங்கடா நீங்களும் உங்கள் கட்சியும் என் வெளியேறினா”ர் குஷ்பு

தன் சொந்த கட்சியின் பெண் சொன்ன கருத்துக்கு எதிராக தன் சொந்த கட்சியினர் செய்த அராஜகத்தை மனமார ரசித்தவர் முக ஸ்டாலின்

கட்சியில் ஒரு பெண்ணின் கருத்துக்கு சுதந்திரம் அவர் கொடுக்கவுமில்லை, அவரை தாக்கிய கட்சிக்காரரை கண்டிக்கவுமில்லை

அந்த முக ஸ்டாலின் இன்று சோபியாவின் கருத்து சுதந்திரத்திற்காக பொங்குகின்றாராம்

குஷ்பு கருத்து சொன்னால் அடிக்க்க வருவார்கள், ஆனால் சோபியா கருத்து சொன்னால் கருத்துரிமை வாழ்க என கிளம்புவார்கள்

திமுகவினருக்கு கொஞ்சமாவது மானமும் அறிவும் இருந்தால் தலைவி குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சோபியாவிற்கு குடை பிடிக்கட்டும்

ண்ணாமலை பல்கலைகழக சம்பவம்

அது என்ன அண்ணாமலை பல்கலைகழக சம்பவம் என ஆளாளுக்கு கேட்கின்றார்கள்

விஷயம் இதுதான்

அது 1971ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க அண்ணாமலை பல்கலைகழகம் முடிவு செய்தது, ஏன் செய்தது என்றால் அதற்கும் அரசியல் கணக்கு இருந்தது

அப்பொழுது மாணவ காங்கிரஸார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர், 6ம் வகுப்பினை தாண்டாத கலைஞருக்கு ஏன் டாக்டர் பட்டம் என்பதும்? ஆட்சிக்கு வந்து 2 வருடம் கூட ஆகவில்லை அதற்குள் என்ன சாதித்தார் என்பதுமாக ஏக கேள்விகள், அது போராட்டமாக வெடித்தது

உச்சமாக ஒரு கழுதை கழுத்தில் டாக்டர் என எழுதிகட்டி அண்ணாமலை பல்கலைகழகத்தில் உலவவிட்டனர்

கலைஞர் அதன் பின் அந்த பட்டத்தை வாங்கியிருக்க கூடாது, நிச்சயம் தவிர்த்திருக்க வேண்டும்

ஆனால் அவரோ சென்றார், டாக்டர் ஆனார் திரும்பினார்

அன்று மாலைதான் அந்த கோரம் நிகழ்ந்தது, எல்லாம் முடிந்த பின்பும் போராட்டகாரர்களை அடக்குவதாக விடுதியில் காவல்துறை புகுந்தது, பெரும் அராஜகம் நிகழ்ந்தது

மறுநாள் அருகிலிருந்த குளத்தில் பிணமாக மிதந்தான் உதயகுமார், போராட்டம் தீவிரமானது

உதயகுமாரின் தந்தை ஆசிரியர், ஆனால் அவரே வந்து பார்த்துவிட்டு இது என் மகன் அல்ல என எழுதி கொடுத்தார், அவ்வளவு இறுக்கமான காலம் அது

அது உதயகுமார் இல்லை என்றால் அவன் எங்கே? என மாணவர்கள் போர்கொடி தூக்கினர், ஆனாலும் ஹேவியஸ் மனு எல்லாம் தாக்கல் செய்யவில்லை

இது சட்டமன்றத்தில் எதிரொலித்தபொழுது மாணவர்கள் தன்னை கொல்ல சதி செய்ததாகவும், செத்தது உதயகுமார் இல்லை என காவல்துறை அறிக்கை கொடுத்ததாகவும் சொன்னார் முதல்வர் கலைஞர்

அதன் பின் அரசு ஒரு கமிஷனை அமைத்தது, என்.எஸ் ராமசாமி என்பவர் அதன் தலைவர்

விசாரணை இந்த ஜெயா ஆறுமுகசாமி கமிஷன் போல நடந்தது, ஆளாளுக்கு விசாரித்தார்கள்

முடிவில் இறந்தது உதயகுமார்தான், ஆனால் அது எதிர்பாராதது அதற்கும் போலிஸ் தாக்குதலுக்கும் தொடர்பில்லை என முடித்து கொண்டது

அதாவது தானே செத்தான் உதயகுமார் என்பது போல் எல்லோரும் முடித்துவிட்டார்கள்

இது 1971ல் நடந்தது, 1978ல் ராமசந்திரன் முதல்வரானதும் இந்த விவகாரம் வெடித்தது, அதை தொடங்கியவர் உதயகுமாரின் தம்பி மனோகரன்

அவர் ராமசந்திரனுக்கு கடிதம் எழுதினார், அதில் அந்த சம்பவத்தை தொடர்ந்து அன்றைய முதல்வர் பல வாக்குறுதிகளை கொடுத்ததாகவும் பின் அது நடக்காமல் போனதாகவும், தனக்கு வேலைவேண்டும் என்றும் அக்கடிதத்தில் கூறபட்டது

கலைஞர் உதயகுமார் குடும்பத்தை ஏமாற்றிய வகையினை பாரீர் என அதிமுக கும்பல் அதை ஊரெல்லாம் சொல்லி சந்தோஷபட்டது

அதன் பின் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தன‌

இப்பொழுது அதெல்லாம் பழங்கதை, திமுகவினரிடம் கேட்டால் அண்ணாமலை பல்கலை கழகம் டாக்டர் பட்டம் எல்லாம் கொடுக்கவே இல்லை, இது பார்ப்பண ஆரிய சதி என சொல்லிவிட்டு அவர்கள் போக்கில் இருப்பார்கள்

“இங்கு அரசியல் பேசாதீர்”

சில டீக்கடைகளில் எழுதியிருப்பார்கள் இப்படியாக‌ “இங்கு அரசியல் பேசாதீர்”

உலக வரலாற்றிலே முதன் முறையாக அதை தமிழக விமான நிலையங்களில் இனி எழுத வேண்டிய காலம் வந்தாயிற்று

பொது போக்குவரத்து இடங்களில் அரசியல் பேசுவது சரி அல்ல, பேச வேண்டுமென்றால் பிரச்சாரத்திற்கு வரும்பொழுது பேசலாம் இல்லாவிட்டால் யாருக்கு வாக்களித்தார்களோ அவர்கள் சட்டையினை இழுத்து பிடித்து கேட்கலாம்

அப்படி சோபியா கேட்டிருக்க வேண்டியது தூத்துகுடியில் இருக்கும் திமுக, அதிமுக அரசியல்வாதிகளையே

மாறாக பார்த்துவிட்டார் என்பதற்காக “ஏ தமிழிசையே ஏ பாஜக பாசிசமே ..” என்பது மூளைசலவை செய்யபட்ட ஒருவரின் குரல்

நிச்சயம் இதற்கு ஒரு முடிவு கொடுக்கபடவேண்டும், சோபியாவுக்கு விடபடும் எச்சரிக்கை மொத்த தமிழகத்திற்குமான எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இல்லாவிட்டால் ரயில், பஸ், விமான நிலையம் போன்ற பொதுபோக்குவரத்து எல்லாம் அரசியல் கோஷங்களால் நிறைந்து நாசமாகும்

வாக்களிப்பது ஜெயலலிதாவிற்கும் கலைஞருக்கும் ஆனால் அடிப்பது தமிழிசையினை என்றால் அது என்ன வகை நியாயமோ?

இப்பொழுது நிலமை சரியில்லை என்றால் பழனிச்சாமி கார் முன்பாவது கத்த வேண்டும் அதுவுமில்லை

எது எப்படியோ விமான நிலையங்களில் “இங்கு அரசியல் பேசினால் 1 ஆண்டு சிறை” என்ற அறிவிபினை வைத்து உலகிற்கு வழிகாட்ட போகின்றது தமிழகம்

திராவிட புரட்சி என்பது இதுதான்

ஈரானின் பணமதிப்பு

அரபு நாடுகள் பலவற்றின் டாலருக்கு நிகரான பணங்களை பாருங்கள் மிக உயர்ந்த அளவில் இருக்கும், சில உச்சத்தில் இருக்கும்

அந்த அளவு இருக்க வேண்டிய ஈரானின் பணமதிப்பு அதள பாதாளத்தில் இருக்கின்றது

முன்பே அது சரிவுதான், ஈரான் அமெரிக்க சண்டைகளிலே அது 1 டாலருக்க்கு 200 ஈரான் ரியால் என்ற அளவில் சரிந்தது

இப்ப்பொழுது எவ்வளவு சரிந்தாயிற்று என்றால் 1 லட்சத்து 28 ஆயிரம் ரியால் எனும் அளவிற்கு சரிந்தாயிற்று

ஏன் என்றால் ஒரே காரணம் அமெரிக்காவின் பொருளாதார தடைகள்

அமெரிக்கா என்பது இப்போதைக்கு எதிர்க்க யாருமில்லா அசுரபலமான நாடு, வியாபாரத்தின் எல்லா சரடுகளையும் கையில் வைத்து மிரட்டும் நாடு

அதை இப்போதைக்கு முழுக்க எதிர்ப்பார் யாருமில்லை

யானை போன்ற மிருகங்களை பழக்குவோரிடம் கேட்டால் சொல்வார்கள், எந்த மிருகமும் முதலில் அடங்காது

அடித்தாலும் மிதித்தாலும் திமிருமே தவிர அடங்காது, அதற்கோர் வழி உண்டு

அதை கூண்டில் பட்டினி போட வேண்டும், பசியால் துடிக்கவிட வேண்டும், பின் கொஞ்சம் உணவளித்து ஆசைகாட்ட வேண்டும், கொஞ்சம் கொஞ்சமாக வழிக்கு கொண்டுவரவேண்டும்

இவனை விட்டால் நமக்கு உணவளிக்க‌ யாருமில்லை என்ற நம்பிக்கையினை விதைத்தபின் எந்த மிருகமும் அடிமையே

இந்த தத்துவம் அரசியல் உலகிற்கும் உண்டு

அப்படித்தான் ஈரானை மிரட்டினார்கள், உருட்டினார்கள் இப்பொழுது பொருளாதார தடை என மிரட்டி அதை பிச்சைக்கார தேசமாக்கியாயிற்று

1 டாலருக்கே லட்சத்து 28 ஆயிரம் ரியால் என்றால், 100 டாலர் அமெரிக்க பொருளின் மதிப்பென்ன? இனி ஈரானிய பணத்தில் அதை எண்ண முடியுமா?

இதற்காக இனி ஈரான் பணம் வழக்கொழியும், டாலரோ இல்லை யூரோவோ ஈரானின் கணக்கிற்கு வரும்

ஒரு ஆடை 30 அமெரிக்க டாலர் எனில் என்னாயிற்று? 50 லட்சம் ஈரானிய பணமாயிற்று, உருப்படுமா?

இந்த சரிவால் உள்ளூரில் கடும் கொதிப்பு ஏற்பட்டிருக்கின்றது, அரசு சரியல்ல என மக்கள் பொங்க தொடங்கியாயிற்று

அமெரிக்கா எதிர்பார்த்ததும் அதுதான், எதற்காக நாம் சென்று யுத்தம் புரிய வேண்டும், செய்ய வேண்டியதை செய்தால் மக்களே அரசை விரட்ட போகின்றார்கள்

வாழ வழியில்லா மக்கள் கூட்டம் அதைத்தான் செய்யும்

ஈரானிய நிலமை சிக்கல் ஆகின்றது, பெரும் குழப்பங்கள் அதிகரிக்கின்றன‌

வெனிசுலா, அர்ஜென்டினா வரிசையில் ஈரானும் சேர்ந்தாயிற்று

இது இந்தியாவிற்கு பாதகமா என்றால் இல்லை, டாலரில் வர்த்தகம் செய்யும் இந்தியாவிற்கு இது பாதிப்பினை கொண்டு வராது

இங்கு ஆட்சியாளர்களின் குழப்பத்தால் இந்திய பணம் வீங்குகின்றது என்பது வேறு விஷயம்

1979ல் ஈரானின் அரசரை விரட்டிவிட்டு ஆட்சியினை பிடித்தார் கோமேனி, அது ஈரானிய புரட்சி

இன்று நுட்பமாக ஈரானை காயபோட்டு அடிக்கின்றது அமெரிக்கா, இதனால் மறுபடியும் மக்கள் புரட்சி ஏற்பட்டு ஏதும் நடக்கலாம்

ஈரான் எனும் யானை, ஏகபட்ட எண்ணெய் வளங்களை கொண்ட ராட்சத பலம் கொண்ட நாடு சர்வேதச அரசியலால் தரித்திர கோலம் பூண்டு நிறகின்றது

எனினும் ஈரானின் இந்த மாபெரும் சரிவுக்கு காரணம் அதிதீவிரமான மதவாதம் என்பதை தவிர சொல்ல ஒன்றுமில்லை

பரிட்சைக்கு பயமேன்?”

“பரிட்சைக்கு பயமேன்?” என தான் எழுதிய புத்தகத்தை வெளியிடுகின்றார் மோடி : செய்தி

முறையாக எல்.கே.ஜி முதல் கல்லூரி வரை படித்து படாத பாடு பட்டிருந்தால் மனிதருக்கு பரீட்சை என்றால் என்னவென்று விளங்கி இருக்கும்

சும்மா ஆர்.எஸ்.எஸ்லில் ஹாயாக சுற்றிகொண்டிருந்தவருக்கு பரிட்சை என்றால் என்ன பயம் இருக்கும்? இருக்கவே இருக்காது

டாலருக்கு எதிரான ரூபாய் மிகபெரும் சரிவில் இருக்கின்றது, இது இறக்குமதி பொருட்களின் விலையினல் எல்லாம் பாதித்து பொருளாதாரத்தை நாசமாக்குகின்றது

இவரோ புத்தகம் எழுதிகொண்டிருக்கின்றார்

பேரரிஞர் அண்ணா பல்கலைகழகம்

1978ற்கு முன்பு வரை சென்னையின் தொழில்நுட்ப கல்லூரியாக இருந்தவை 3, முதலாவது கிண்டி பொறியியல் கல்லூரி எனும் பழம்பெருமை வாய்ந்த பொறியில கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்ப கழகம், மெட்ராஸ் தொழில்நுட்ப கழகம்

இவைதான் பொறியியலுக்கு மிக பெரும் கல்வி கேந்திரமாக இருந்தது, பெரும் பொறியாளர்களை உருவாக்கியது

1978ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த‌ ராமசந்திரனுக்கு அண்ணா பெயரில் ஏதும் செய்ய ஆசை வந்தது

ஏற்கனவே மவுண்ட் ரோட்டை கலைஞர் அண்ணா சாலை ஆக்கி இருந்ததால், அப்படியே பழைய கல்லூரிகளை ஒன்றிணைத்து “பேரரிஞர் அண்ணா பல்கலைகழகம்” என மாற்றிவிட்டார்

அது இதே செப்டம்பர் 4.

உண்மையில் அண்ணா என்பவரின் பெயர் விஞ்ஞான கூடத்திற்கு வருவது சரியல்ல, சீனிவாச ராமானுஜமோ இல்லை சர்சிவி ராமன் பெயரோ அதற்கு வைக்கபட்டிருக்க வேண்டும்

ஆனால் அவர்களா ராமசந்திரனை அரசியல்வாதி ஆக்கினார்கள்? அண்ணாதான் ஆக்கினார்

இதனால் புகழ்பெற்ற அந்த மூன்று கல்வி நிலையங்களின் இணைப்பு அண்ணா பெயராயிற்று

1982ல் ராமசந்திரனுக்கு பெரும் சந்தேகம் உண்டாயிற்று, அறிஞர் பேரரிஞ‌கராக இருக்கமுடியாதோ என சந்தேகபட்டாரோ என்னமோ அது அண்ணா பல்கலைகழகம் ஆயிற்று

முன்பு இந்தியாவின் சிறந்த பல்கலைகழகமாக இருந்தது, இப்பொழுது பேராசிரியர் பணி நியமணம் முதல் பலவற்றில் பெரும் சர்ச்சை வெடிக்கின்றது

இப்பொழுது கல்வி தரம் எப்படி என்றால் மதிப்பெண்கள் கூடுதலாக பெற கடந்த ஆண்டு மட்டும் மாணவர்கள் 400 கோடி செலவழித்திருக்கின்றார்களாம்

தமிழக கல்வி வளர்ச்சி இப்படி இருக்கின்றது

பாசிச பாஜக ஒழிக

நடந்திருப்பது ஒரு காமெடி காட்சி, அதாவது தூத்துகுடி விமான நிலையத்தில் ஒரு பெண் தமிழிசையினை பார்த்து கண்டன முழக்கம் இட்டிருக்கின்றார்

உண்மையில் தமிழிசையினை அறிந்தவர்களுக்கு அவரை நேரில் பார்த்தால் சிர்ப்புத்தான் வரும் அல்லது பரிதாப கண்ணீர் வரும் அதையும் தாண்டி ஒருவர் சீரியசாக கண்டித்திருக்கின்றார் என்றால் அந்த அம்மணியினை வித்தியாசமாக நோக்க வேண்டி உள்ளது

இதனை தமிழிசை கடந்து சென்றிருக்கலாம், வழக்கமாக அப்படி செல்பவர்தான் அவர், ஆனால் இந்த கண்டனம் மிக கடுமையாக இருந்ததோ என்னமோ உடனே புகார் ஆகிவிட்டது

என்ன செய்தால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கும் பலர் இதை கண்டிக்க வந்தாயிற்று அதில் முக ஸ்டாலினும் ஒருவர்

அகில இந்திய கட்சியான பாஜகவினை தமிழக கட்சியான திமுக அழித்துவிடும் என்ற பெரும் கனவில் இருப்பவர் ஸ்டாலின், அது கடல்நீரை கிணற்றில் அடைப்பேன் என்பதற்கு சமமான காமெடி என்றாலும் கட்சியின் உடன்பிறப்புக்கள் நம்புகின்றன‌

அந்த ஸ்டாலின் விடுவாரா? இதோ நானும் சொல்கின்றேன் “பாசிச பாஜக ஒழிக” என கிளம்பிவிட்டார்

எங்கே “அராஜக அதிமுக ஒழிக” என அன்னார் சொல்வாரா என்றால், “பாசிச பழனிச்சாமி அரசு ஒழிக” என சொல்வாரா என்றால் இல்லை

இங்கு முதலில் ஒழியவேண்டியது அராஜக அதிமுக அரசு அதை பற்றி எல்லம் ஸ்டாலின் பேசமாட்டார்