ஜப்பான் சூறாவளி

கேரளாவினை தொடர்ந்து அடைமழையில் சிக்கி இருக்கும் நாடு ஜப்பான்

சூறாவளியும் மழையுமாக பெரும் வெள்ளத்தை சந்தித்திருகின்றது, வடக்கு ஜப்பானில் கடும் நெருக்கடி

நமது பக்கத்து நாடாக இருந்தால் நூடுல்ஸும், சுஷி எனும் அரிசி கேக்கும் செய்து அனுப்பலாம் , அவர்கள் சமையல் மிக எளிது, பன்றியோ மீனோ அடுப்பில் வைத்தவுடன் எடுத்துவிட வேண்டும்

அடுப்பில் வைக்காவிட்டால் கூட சிக்கல் இல்லை, அவ்வளவு எளிது

ஆனால் தொலைதூரத்தில் இருப்பதால் இங்கிருந்து நிவாரணப்பொருள் அனுப்ப முடியாது

பெரும் மழையில் ஒரு சவாலும் வந்திருக்கின்றது அதாவது ஒரு தீவு ஊரின் விமான நிலையத்தில் ஏகபட்ட பயணிகள் இருக்கும் பொழுது ஒரு கப்பல் சூறாவளியில் சிக்கி அலைமோதி பாலத்தை இடித்துவிட்டது

ராமேஸ்வரம் பாலம் இடிந்தால் என்னாகும் அப்படி இருக்கின்றது நிலை

இப்பொழுது அந்த விமான நிலையத்திலிருக்கும் மக்களை மீட்க மாபெரும் நடவடிக்கை எடுத்துகொண்டிருக்கின்றது ஜப்பான்

கருத்து சுதந்திரம்

முதலில் குஷ்பு சொன்ன கருத்துக்காக அவர் வீட்டை தாக்கிய திமுகவினரை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள் அய்யா

குஷ்புவின் கருத்து சுதந்திரம் நசுக்கபட்டதற்கு முதலில் மன்னிப்பு கேளுங்கள்

சோபியாவின் கருத்து சுதந்திரம் பற்றி பின்னர் பார்க்கலாம்

மிஸ்டர் ஸ்டாலின் இந்த பச்சை மண் முகத்தை பார்த்தால் கல்வீச தோன்றுமா? இல்லை கல்லில் சிலைவடிக்க தோன்றுமா?

ஆனாலும் காட்டுமிராண்டிகளான உம் கட்சிக்காரர்கள் அவர் கருத்துக்காக கல்வீசினார்கள்

ஒரு வார்த்தை திமுகவினரை கண்டித்தீரா? இல்லை தலைவி குஷ்புவிற்கு ஆறுதல் சொன்னீரா?

பிரியாணி கடை எல்லாம் ஓட தெரிந்தவருக்கு , சோபியாவிற்காக கத்துபவருக்கு குஷ்வு வீட்டில் எறிந்த கல் கண்ணுக்கு தெரியாதா?

ஆக திமுகவினர் முக ஸ்டாலின் இருக்கும் தைரியத்தில் எந்த அராஜகத்திலும் ஈடுபடலாம் அது சரி, ஆனால் பாஜக இருக்கும் தைரியத்தில் யாரும் அராஜகத்தில் ஈடுபட்டால் அது தவறா?

சொந்த கட்சியின் கருத்துரிமை நசுக்கலை ஆசீர்வதித்து ரசித்துவிட்டு, சோபியா கருத்துக்கு வால்பிடிக்க என்ன தகுதி இருக்கின்றது மிஸ்டர் ஸ்டாலின்?


ஆமாம், அதேதான்

ஏர்போர்ட்டில் தன் கட்சியின் சீனியர் திருச்சி சிவாவினை ஏர்போர்ட்டில் எதிர்கட்சி எம்.பி சசிகலா புஷ்பா மல்யுத்த வீரராக தூக்கி போட்டு மிதித்து, மைக் டைசன் அளவில் முகத்தில் குத்தியபொழுது மகா அமைதி காத்த கட்சி திமுக‌

அப்பொழுதெல்லாம் “ஏ பாசிச ஜெயா..” என்றோ குறைந்தபட்சம் “ஏ பாசிச சசிகலா புஷ்பாவே..” என்று கூட அக்கட்சி சொல்லவில்லை

இவ்வளவிற்கும் விமானநிலையத்தில் பகிரங்கமாக திருச்சி சிவா முகத்திலே கும்மாங்குத்து குத்தினார் புஷ்பா.

இப்பொழுது சோபியா என்பவருக்காக பொங்குகின்றார்கள்

திருச்சி சிவா இப்பொழுது எந்த முட்டுசந்தில் அழுது கொண்டிருப்பார் என்பதுதான் தெரியவில்லை..

திருச்சி சிவா எனும் ஜாம்பவானுக்கே இப்படி ஒரு நிலை என்றால் இந்த முகநூலில் கம்பு சுற்றுபவர்கள் நிலை மகா பரிதாபம்


 

மாணவர்கள் அரசியலுக்கு வரலாமா என கேட்டால் அண்ணாவின் பதில் இப்படி இருந்தது

“அரசியலில் அவர்கள் பார்வையாளராக இருக்கலாமே தவிர பங்கேற்பாளராக வர கூடாது

அத்தை மகளை சுற்றி சுற்றி வருவது போல வரலாமே தவிர தொட கூடாது”

இப்படி சொல்லும்பொழுது திமுக பெரும் கட்சி அல்ல,

ஆனால் இந்தி எதிர்ப்பில் மாணவர்களை திமுக அழைத்தபொழுது, பெரும் மாணவர்கள் படிப்பை விட்டு போராட வந்து செத்து, காயம்பட்டபொழுது அண்ணா வாயே திறக்கவில்லை

திமுகவினை ஆட்சியில் அமர்த்தியது மாணவர்களின் பங்களிப்பே என அண்ணா புரிந்தபொழுது தன் பழைய “அத்தை மகள்..” டயலாக்கினை எல்லாம் மறைத்தே விட்டார்

அப்போது இருந்து பல இடங்களில் மாணவர்களை உள்ளிளுப்பது திமுக வழக்கம், குறிப்பாக 1980 ஈழவிவகாரங்களில் மாணவர்களை மிக நுட்பமாக களமிறக்கினார்கள்

இப்பொழுது ஷோபனா விவகாரத்திலும் அதையே செய்ய நினைக்கின்றார்கள்

ஆனால் இப்போதிருக்கும் மாணவர்கள் புத்திசாலிகள் என்பதால் சிக்கல் இல்லை..


 

தமிழிசை தாய் ஸ்தானத்தில் இருந்து சோபியாவிடம் பேசி இருக்கலாம் – சோபியாவின் தந்தை

ஏன் சோபியா கூட சகோதரி ஸ்தானத்தில் இருந்து அமைதியாக நாகரீகமாக பேசியிருக்கலாம்

செக்க சிவந்த வானம் படத்தின் ஆடியோ

மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்திருக்கின்றது

வைரமுத்து , ஏ.ஆர் ரகுமான் முதல் அரவிந்தசாமி வரை ஆளாளுக்கு பேசியிருக்கின்றார்கள், நிறைய பேசியிருக்கின்றார்கள்

வழக்கம் போல மணிரத்னம் ம்ம், ஹம்ம் தவிர ஏதும் பேசவே இல்லை

(இன்னும் சில நடிகர்கள் மேடையில் நிறைய பேசியிருக்கின்றார்கள், இப்படித்தான் பேசமுடியும் பாவம், பின்ன? மணிரத்னம் படததில் அதிகம் பேசவா முடியும்?)

மோடி ஆட்சியினை விடவா நம்ம பொருளாதார தடை இந்தியாவ பாதிச்சிரும், யோசிங்கய்யா..”

மோடிக்கு நிதின் கட்காரி , ராஜ்நாத் சிங் போல இந்த டிரம்பானவருக்கு வலது கை, இடது கை, அல்லக்கை எல்லாம் மைக் பாம்பியோ

அவர் அமெரிக்க பாதுகாப்பு செயலாளார் , முன்னாள் சிஐஏ தலைவரும் கூட‌

அதாவது அமெரிக்க அதிபருக்கு அடுத்த சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவர்

பத்தாண்டு காலம் அரேபிய அமைதியினை நிர்ணயித்தவர் இவர், ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக சிரியாவிலும் ஈராக்கிலும் அமெரிக்கா செய்த அனைத்து காரியங்களுக்கும் சூத்திர கர்த்தா.

இவர் அதிரடியாக சென்று பார்த்தபின்புதான் வடகொரிய அதிபரே அலறி அடித்து அணுகுண்டை எல்லாம் தூக்கி போட்டு சமத்து பிள்ளையானார், அப்படிபட்ட அதிரடியான மனிதர்

மிகபெரும் திட்டம் இல்லாமல் அன்னார் வெளிவருவதில்லை அதைவிட முக்கியம் மாபெரும் விவகாரம் இல்லாமல் அவர் இன்னொரு நாட்டுக்கு விமானம் ஏறுவதுமில்லை

அப்படிபட்ட மாய மனிதர் இன்று இந்தியா வருகின்றார், எதற்காக வருகின்றார்?

சும்மா மோடியினை கட்டிபிடிக்க என அவர் சொல்லி கொண்டாலும் ஈரானில் இருந்து இந்தியா வாங்கும் எண்ணெய் விவகாரம், ரஷ்யாவிலிருந்து இந்தியா வாங்கும் ஏவுகனை தடுப்பு சாதன விவகாரம் நிச்சயம் இடம்பெறும்

இவரின் சந்திப்பிற்கு பின் இந்தியா இவ்விவகாரத்தை தொடர்ந்தால் இந்தியாவின் வெற்றி, மேற்கண்ட விஷயத்தை நிறுத்தினால் அமெரிக்காவின் வெற்றி

இந்தியா நிறுத்த மறுத்தால் அது பொருளாதார தடையாக மாறலாம்

பார்க்கலாம், இந்த சந்திப்பு உலக முக்கியத்துவம் பெருகின்றது

மோடி “வல்லவராயனே நான் வாழவேண்டுமய்யா..” என காலில் விழுகின்றாரா இல்லை “மாமனா மச்சானா மானம் கெட்டவனே..” என வசனம் பேசுகின்றாரா என்பது விரைவில் தெரியும்

ஒருவேளை இந்தியா வழிக்கு வராவிட்டால் என்னாகும், பொருளாதார தடை விதிப்பது பற்றி அமெரிக்கா விவாதிக்கும்

அங்கு என்ன பேசுவார்கள், வீ.கே ராமசாமி ஸ்டைலில் டிரம்ப் சொல்வார்

“பிளடி அங்க என்ன வாழுது? அவனுக ரூபாய் கீழே போய்ட்டே இருக்கு, இதுக்கு நாம பொருளாதார தடை போட்டுத்தான் அவனுகள நாசமாக்கணுமா

அவனுகளே ஆயிக்குவானுக, வேணும்னா ஒண்ணு செய்வோம், மோடி வல்லவர் நல்லவர்னும் நம்ம டைம் பத்திரிகை , இன்னும் ஏக பத்திரிகையில எழுத வைப்போம்

பார்த்துட்டு இந்தியா நம்பி அவரையே பிரதமராக்கட்டும், நாம பொருளாதார தடை போடாமலே இந்தியா நெருக்கடில சிக்கி நம்ம கிட்ட வரும்

மோடி ஆட்சியினை விடவா நம்ம பொருளாதார தடை இந்தியாவ பாதிச்சிரும், யோசிங்கய்யா..”

ரஜினியின் அணுகுமுறை

பிள்ளைகளை கொன்று ஓடிய அந்த நாசக்காரி அபிராமியின் கணவன் விஜயினை ரஜினி சந்தித்திருக்கின்றார்

ரஜினியின் இந்த அணுகுமுறை பாராட்டதக்கது, மனிதருக்கு அந்த குழந்தைகளின் மரணம் அந்த அளவு உருக்கத்தை கொடுத்திருக்கின்றது

இம்மாதிரி விஷயங்களில் ரஜினியினை வாழ்த்தலாம்

ஆயினும் இந்த சந்திப்பில் ரஜினியின் “எங்கேயோ கேட்ட குரல்” படம் நினைவுக்கு வருகின்றது

இந்த அபிராமி அந்த படத்து அம்பிகா சாயலில் அப்படியே சிக்கி இருக்கின்றார்

இந்த அபிராமி கணவனை பார்க்கும்பொழுது ரஜினிக்கு அந்த படத்தில் தன் பாத்திரம் நினைவுக்கு வந்திருக்கலாம் அந்த கொடும் வலியினை ரஜினி உணர்ந்திருக்கலாம்

அந்த வலியில் உடனே அவரை சந்தித்து ஆறுதல் சொல்லி இருக்கலாம், வாய்பிருக்கின்றது

ரஜினிக்குள்ளும் ஒரு நல்ல மனது இருக்கின்றது. அவர் அரசியலுக்கு வராமல் போனால் அது அப்படியே இருக்கும்

கலைஞருக்கு ஆழ்வார்கள்

கலைஞருக்கு ஆழ்வார்கள் மையம் சார்பில் அஞ்சலி செலுத்தபட்டிருக்கின்றது

ஆக சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதை நிரூபித்திருகின்றார்கள் ஆழ்வார்கள்

மேன்மக்கள் என்றும் மேன்மக்களே..

இன்னும் தீபாவளிக்கும், கோகுலாஷ்டமிக்கும் வாழ்த்து சொல்லாமல் பக்ரீத்திற்கும், கிறிஸ்மஸ்க்கும் திமுக தலமை நல்வாழ்த்து சொல்லிகொண்டிருந்தால் அது அர்த்தமற்றது

ராகுலுக்கு உரிமை இல்லை

மோடி ஆட்சி பற்றி கேள்வி கேட்க ராகுலுக்கு உரிமை இல்லை: அமித்ஷா

வேறு யாருக்கு உரிமை இருக்கின்றது அமித்ஷா? பாகிஸ்தானின் இம்ரான்கானுக்கா?

எதிர்கட்சி தலைவர் என்பதை விடுங்கள், இந்திய குடிமகனாக கேள்வி கேட்க ராகுலுக்கு உரிமை இல்லையா?

இனி அமித்ஷாவின் விமான பயணத்திலும் “பாசிச பாஜக” எனும் கோஷம் வரும் , இப்பொழுது அதுதான் டெரெண்ட்


 

60 ஆண்டுகால குடும்ப ஆட்சியில் சாதித்தது என்ன?: ராகுலுக்கு அமித் ஷா கேள்வி

இப்படி கேட்டு இவர்கள் அடுத்த 60 வருடம் ஆள திட்டம்.

காங்கிரஸ் நாட்டில் சாதித்தது இருக்கட்டும் , பாஜகவே அவர்கள் திட்டத்தைத்தான் காப்பி அடித்து கொண்டிருக்கின்றது , அதை விட்டுவிடலாம்

இந்த 4 வருடத்தில் என்ன கிழித்தீர்கள் மிஸ்டர் அமித்?

சுருக்கமாக சொன்னால் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கெடுக்காத தேசத்தை 4 ஆண்டுகளில் சீரழித்துவிட்டதை தவிர என்ன செய்தீர்கள்??

மீனாட்சிபுரம் சம்பவத்தில் திருமா ஆராய்ச்சி

மீனாட்சிபுரம் சம்பவத்தில் திருமா ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கிவிட்டார், அவர் விருப்பம் ஆய்வு செய்தார் வாங்கினார்

ஆனால் கீழவெண்மணி படுகொலைமுதல், முதுகுளத்தூர் கலவரம் முதல் பாபர் மசூதி இடிப்பு வரை ஏகபட்ட சம்பவங்கள் டாக்டர் பட்டம் வாங்க தயாராக இருக்கின்றன‌

ஆராய்ச்சி செய்யத்தான் யாருமில்லை, செய்துவிட்டு இருக்க போவதுமில்லை

ஆனாலும் மீனாட்சிபுரத்தில் தலித்துக்கள் மதம் மாறினார்கள் என்பதற்காக ஆராய்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கிய திருமா, அதே நெல்லைமாவட்டத்தின் கொடியங்குளம் படுகொலைகள் இன்னபிற சம்பவங்களுக்காக ஏன் டாக்டர் பட்டம் வாங்கவில்லை என கேட்க கூடாது

மீனாட்சிபுரம் சம்பவம் வாஜ்பாய் முதல் அன்றைய முதல்வர் ராமசந்திரன் வரை அலறியடித்து ஓடிவர செய்த மதமாற்ற சம்பவம் என்பதால் திருமாவின் ஆராய்ச்சி இருந்தது

மற்ற சம்பவங்களில் மதம் இல்லாமல் வெறும் சாதிமோதல் என்பதால் திருமாவிற்கு டாக்டர் அல்ல, கம்பவுண்டர் பட்டம் வாங்க கூட ஆசை இல்லை


 

மிஸ்டர் தொல்.திருமா வளவன், முன்பு குஷ்பு இந்த பாலியல் பற்றி ஏதோ சொன்னபொழுது எவ்வளவு வழக்கு தொடர்ந்தீர்

எவ்வளவு வழக்குகள் தொடுத்தீர்? நீதிமன்றம் இருக்கும் இடமெல்லாம் எம் தலைவியினை இழுத்து பாடாய் படுத்தினீர்

இப்பொழுது இந்த Devi Somasundaram என்பவர் அதே விவகாரத்தை பேசுகின்றார்

எங்கே போய் தொலைந்தீர் அய்யா?

ஒழுங்காக வந்து இந்த Devi Somasundaram மீது பத்து வழக்குகளை பாய்ச்சவும், இல்லாவிட்டால் சங்கம் சும்மா இருக்காது.

உடனே தேவி மீது வழக்கு பதியவில்லை என்றால் உமது டாக்டர் பட்டத்தை பறிக்க சங்கம் களமிறங்கும்

ஏம்பா கலாச்சார காவலர்களா? எங்கே போய் தொலைந்தீர்கள்

இந்த தேவியினை பிடித்து உள்ளே போடுங்கள் இல்லை ஒழுங்காக வந்து சங்கத்தில் சேர்ந்து பரிகாரம் தேடுங்கள் ரேஸ்கெல்ஸ்….

வ.உ.சிதம்பரம்

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் பல சிதம்பரங்கள் உண்டு, தில்லை சிதம்பரம், விஞ்ஞானி சிதம்பரம், முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் என வரிசை பெரிது,

அவற்றில் முக்கியமானவர் வ.உ.சிதம்பரம்.
அந்த காலத்திலே படித்தவர், அதுவும் வழக்கறிஞருக்கு படித்தவர். தொழிலை சுத்தமாக செய்தவர், வசதி குறைந்தவருக்கு இலவசமாக வாதாடினார் என்றெல்லாம் அவருக்கு அப்பொழுதே பெருமை உண்டு.

ஆனாலும் சுதந்திர தாகமெடுத்தது, அது அவருக்கு மட்டுமல்ல, அந்நாளைய பொதுநலவிரும்பிகள் மற்றும் பலருக்கும் எடுத்தது, நாடு சுதந்திரம் அடையவேண்டும் என்பது அவர்கள் ஆசை, அவர்கள் நாசமாய் போகவேண்டும் என்பது வெள்ளையன் ஆசை.
பாரதியாரின் நட்பு இவரின் பாதையை மாற்றின,

பாரதியாரின் கனவுகளுக்கு வடிவம் கொடுக்க நினைத்தார். அதாவது மேலைகடல் முழுதும் கப்பல் விடுவோம் எனும் பாரதியின் கனவை கீழ் கடலில் இருந்து ஆரம்பித்தார்,

சுதேசி கப்பல் போக்குவரத்து கழகம் தொடங்கினார், வெள்ளையனின் தொழில் எல்லாம் நாம் ஏற்று நடத்தினால் அவர்கள் தானாக அடங்குவார்கள் என்பது சிதம்பரனாரின் கொள்கை, அதில் சில உண்மையும் இருந்தது.

கொழும்பிற்கு கப்பல் விட்டார், காகித கப்பலே ஒரு காகிதத்தை கிழித்தால் தான் உருவாகும். நிஜ கப்பலுக்கு அப்படி பெரும் கரன்சி நோட்டுகள் தேவை அல்லவா?, சம்பாதித்ததும் மேலும் பரம்பரை சொத்துக்களும் கப்பலாய் மாறின, ஒரு கட்டத்தில் வெள்ளையன் கப்பலை விட சுதேசி கப்பல் பெரும் லாபம் ஈட்டியது.

தென் தமிழகமெங்கும் அவரின் புகழ் பரவியது, பல சங்கங்கள் , தொழிற்சாலை என அவரின் செல்வாக்கும் பரவியது. சொல்லப்போனால் தென்மாவட்டங்களை கையில் வைத்திருந்தவர். அவர் சொல்லுக்கு தீராத பிரச்சினைகள் இல்லை, மக்கள் செல்வாக்கு அப்படி.

வெள்ளை அரசாங்கம் அவரை குறிவைத்தது, சுப்பிரமணிய சிவா எனும் அறிஞனுக்கு அடைக்கலம் கொடுத்தார் என பல குற்றச்சாட்டுக்களில் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு, மறைமுக தொந்தரவில் கப்பல் கம்பெனியை முடக்கியது.

சிறையில் செக் இழுக்க வைத்து அவரை பழிதீர்த்தனர் ஆங்கிலேயர், பல வகையான கொடுமைகள், அதில் தனி சிறையும் உண்டு. உடல்நலம் குன்றி அவர் வெளியே வந்த பொழுது, கப்பல் கம்பெனி பெரும் நஷ்டம், விளைவு கப்பல் கம்பெனி ஆங்கிலேயர் வசம் சென்றது.
மார்கெட் இழந்த நட்சத்திரம் சினிமாவில் தூக்கி வீசபடுவதை போல, சிறை மீண்ட சிதம்பரனார் கிட்டதட்ட கைவிடபட்டார்,

காங்கிரஸ் காந்தி வசம் சென்றது, இவரோ திலகர் வழி, சில காந்திய கொள்கைகள் அவருக்கு விருப்பமானது அல்ல, சுருக்கமாக சொன்னால் அவர் சிறைவாசத்தின் பொழுது என்னவெல்லாமோ நடந்து, போராட்ட முறை மாறியது, தானாக ஒதுங்கிகொண்டார் வ.உ.சி

தமிழுக்கு வ.உ.சி செய்த தொண்டு கொஞ்சமல்ல, ஏராளமான புத்தகங்களும் எழுதியிருக்கின்றார்.

வறுமை அவரை விரட்டியது, வெள்ளையரிலும் சில ஈரமுள்ளோர் இருந்தனர், வாலேஸ் எனும் அதிகாரி அவர் மீண்டும் வழக்கறிஞராக உதவினார், நன்றிகடனாக தனது கடைசிமகனுக்கு “வாலேஸ்வரன்” என பெயரிட்டார் வ.உ.சி.

ஒரு வெள்ளையனுக்கு இருந்த மனப்பான்மை பல இந்தியருக்கு அன்று இல்லவே இல்லை.
பின்னர் பத்திரிகை,வழக்கறிஞர் என பாதையை மாற்றினார், காரணம் கப்பல் கம்பெனி அவரின் வாழ்க்கையை புரட்டி போட்டது, கடமைக்கு வாழ்ந்து இந்தியா சுதந்திரம் வாங்கும் முன்பாக இறந்தார்.

இது கிட்டதட்ட 100 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சுதந்திர போராட்ட போராளியின் வரலாறு.

சமீபத்தில் ஒரு மனு கொடுப்பதற்காக ஒரு பாமர தொழிலாளி, சுவருக்கு வண்ணம் பூசும் சாதாரண தினக்கூலி ஒரு மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வருகின்றார், அந்த கலெக்டர் ஒரு வரம்,

பழைய நியாய தர்மங்களின் ஒரே நம்பிக்கை. அவர் இவரை பற்றி விசாரிக்கும் பொழுதே கண்கலங்குகின்றார்.

அந்த சாமான்ய தொழிலாளி வ.உ.சி பேரன், சொத்துக்களை எல்லாம் நாட்டிற்காக கொடுத்து தன் சந்ததியை மிகசரியாக நடுத்தெருவில் விட்டுவிட்ட அதே வ.உ.சியின் பேரன்.

இன்று சொந்த கப்பல்கள் இல்லாத அரசியல்வாதிகள் குறைவு,

தொழிற்சாலைகள் இல்லாத அரசியல்வாதிகள் இல்லை. இவர்களில் பெரும்பாலானோர் எல்லாம் கைவீசி கொண்டுதான் அரசியல் சந்தைக்கு வந்தவர்கள் என்பது ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல.

இவர்கள் கப்பல் வாங்குவதற்குதான், தன் சொந்த சொத்துக்களை இழந்து வ.உ.சி போன்றவர்கள் கப்பல் விட்டு போராடி, செக் இழுத்திருக்கின்றனர்.

இன்றுவ.உ.சி பிறந்தநாள் நாள் , கப்பல் விட்டு அவர் போராடிய அதே கடல்வழியில் தான், இன்று பல வளங்கள் கப்பல் கப்பலாக அனுப்பபட்டு கொண்டிருக்கின்றது.

அதில் பரிதாபத்துகுரிய வ.உ.சியின் கொள்கையும், போராட்டமும் அடக்கம்.

அழகிரிக்கும் கூட்டம்

அழகிரிக்கும் கூட்டம் இருந்திருக்கின்றது, ஆக இன்னொரு தினகரன் ரெடி

அன்றே சொன்னான் தலைவன் எம்.ஆர் ராட்ஜா

“என்னடா நாடு இது? ஊருக்கொரு லீடர் , ஆளுக்கொரு கொள்கை, அவனவனுக்கு ஒரு டஜன் பட்டினி பட்டாளம் நான்சென்ஸ்…”


 

கட்சி அரசியல் தவிர எங்கள் குடும்பத்தில் சிக்கல் இல்லை : அழகிரி

அதாவது திமுக என்பது கலைஞர் குடும்ப சொத்து , அதை முறையாக பிரித்தால் சண்டையே இல்லை என்கின்றார் அழகிரி

—————————————————————————————————————————————–

தமிழர்களின் அடங்கா சினத்தை பாஜக அரசு சந்திக்க வேண்டியதிருக்கும்- முக ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழரின் சினம் பாஜகவினை என்ன செய்யும்? இங்கே பாஜகவிற்கு 50 எம்.எல்.ஏவும் 20 எம்பியுமா இருக்கின்றார்கள்??

இவர் இதில் எச்சரிக்கை செய்கின்றாராம்

தமிழர்களுக்கு அடங்கா சினம் வருவது இருக்கட்டும், பாஜகவிற்கு தமிழர்மேல் கோபம் வந்தால் என்னாகும்? பழனிசாமி அரசு காக்கபடும் தமிழகம் இன்னும் நாசமாகும்

முக ஸ்டாலின் அதைத்தான் விரும்புகின்றார்..

 


 

அழகிரி கூட்டிய அமைதிப்பேரணி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்

அழகிரி பின்னால் பாஜக இருக்கின்றது என்பதை இனியும் மறைக்க முடியும்?

இப்படியா பகிரங்கமாக அழகிரி பின்னால் நாங்கள் இருக்கின்றோம் என ஒப்புகொள்வார்கள்?

உங்களை எல்லாம் வைத்து கொண்டு இங்கு பாஜக ஒரு புல்லை கூட பிடுங்க முடியாது

இதில் உங்களையும் சீரியசாக‌ நம்பி ஒன்று விமானத்தில் நரம்பு புடைக்க கோஷம் போட்டு மாட்டிகொண்டிருக்கின்றது என்பதுதான் பரிதாபம்

ஒழிக கோஷம் போட்டா பாஜக அழியவேண்டும்? பின் எதற்கு பொன்னார் எல்லாம் இருக்கின்றார்கள்?

————————————————————————————————————————————

 

என்னதான் இந்துத்வா, இந்துமதம் , ஆர்.எஸ்.எஸ் கொள்கை அகண்ட இந்தியா, உருண்ட இந்தியா என பெரும் தத்துவம் பேசினாலும், இஸ்லாமியரின் இந்திய துரோகம் என கண்ணீர்விட்டாலும் மதியம் ஆனவுடன் பூரா பயலும் ஓடிசென்று நிற்கும் இடம் பிரியாணி விற்கும் இஸ்லாமிய‌ பாய் கடை

இந்த ஒற்றுமை இருக்கும் வரை இந்தியாவினை அசைக்க முடியாது, அசைக்கவே முடியாது

இந்த தேசத்தை பிணைத்து நிற்கும் விஷயங்களில் பிரியாணியும் ஒன்று


 

இந்த கலெக்டர் ரோகினி என்பவரின் பல வகையான டிசைன்களை பார்த்து கொண்டே இருக்கின்றோம்

திடீரென ஆஸ்பத்திரியில் புகுந்து யாருக்காவது அறுவை சிகிச்சை செய்வது, சுடுகாட்டில் வெட்டியானுக்கு பதில் பிணத்தை எரிப்பது தவிர எல்லா மக்கள் பணிகளையும் செய்துவிட்டார்

மேற்கண்ட விஷயங்களையும் செய்துவிட்டால் 100% மக்கள் கலெக்டர் ஆகிவிடுவார்