என்னோடு சேர்ந்து நன்றாய் குழம்புங்கள்

உன்னை நம்ப முடியவில்லை, உன் பதிவில் முரண்பாடுகள் பல உள்ளது, குழப்பத்தின் உருவம் நீ என பலர் சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்

நிச்சயம் வரலாறு என்பதை மாற்றமுடியாது, முடிந்தவரை உள்ளதை உள்ளபடி எழுதுகின்றோம்

ஆனால் அரசியல் அப்படி அல்ல, அது மகா மர்மமும் குழப்பமும் நிறைந்தது

அதில் எல்லாம் முழுக்க உண்மையுமில்லை, அதே நேரம் பொய்யுமில்லை

உண்மை என நம்பி அருகே சென்றால் அதன் பல பொய்முகம் தெரியும், பொய் என விலகி என்றால் அதன் ஒருபக்க உண்மை முகம் நம்மை பரிதாபமாய் பார்க்கும்

தமிழக அரசியல் களம் அது.

ஆனால் ஆளாளுக்கு அரை உண்மைகளை வைத்து நன்றாக சம்பாதிக்கின்றார்கள், கொடி கட்டுகின்றார்கள் என்பது வேறு விஷயம்

உண்மை என்ன என்பதே குழப்பமானது, புரியும் ஆனால் புரியாது. புரியாது ஆனால் கொஞ்சம் புரியும்

ஐன்ஸ்டீனின் சார்பியல் தியரி புரிந்தாலும் தமிழக அரசியல் புரியாது

இதை எல்லாம் பார்த்து முடிந்தவரை படித்து குழம்பி ஒரு மாதிரி ஆகிவிட்டது, தெளிவிற்கு வரவே முடியாது

குழப்பமே தமிழக அரசியல் தர்மம்

நானே குழம்பி தவிக்கும் பொழுது உங்களை எல்லாம் விடுவேனா?

என்னோடு சேர்ந்து நன்றாய் குழம்புங்கள்.

ஒரு பாலின உறவு குற்றமல்ல : உச்சநீதிமன்றம்

ஒரு பாலின உறவு குற்றமல்ல : உச்சநீதிமன்றம்

பழமைவாத காவிகளின் ஆட்சியில் இந்த மிக மிக முற்போக்கான தீர்ப்பு வந்திருக்கின்றது

உலகம் ஓரின உறவை எல்லாம் தாண்டி, சில இன, பல இன உறவுகள் போன்ற கருமாந்திரங்களுக்கு வந்தாயிற்று

சில விஷயங்களை சட்டம் போட்டு தடுக்க முடியாது, இதெல்லாம் தனிபட்ட விஷயங்கள்

மானிட குலம் இருக்குமட்டும் இதெல்லாம் ஆங்காங்கு இருந்தே தீரும், ஆதிகாலத்தில் இருந்ததாக பைபிள் எல்லாம் சொல்கின்றது, இன்றும் இருக்கின்றது, வருங்காலத்திலும் இருக்கும்

மதுவும் , பாலின உறவும் சட்டத்தால் தடுக்கமுடியாத விஷயங்கள்

ஒருபால் உறவு குற்றமல்ல என்ற தேசத்தில் இனி விபச்சாரம் தடை செய்யபட்ட ஒன்றாகவா இருக்க முடியும்?

இனி அதுவும் தடை இல்லை என்ற பட்சத்தில் அது அங்கீகரிக்கபட்ட தொழிலாகலாம்

மதுகடைகளை நடத்தும் அரசு, அதை மட்டும் விடுமா? எதுவும் நடக்கலாம்

புதிய இந்தியா பிறந்தே விட்டது


ஒருபால் உறவுக்குத்தான் தண்டனை இல்லையாம், இந்த எருமை மாடு, கோழி , கன்றுகுட்டி எல்லாம் தேடி சென்றால் அடித்து துவைக்க இன்னும் சட்டத்தில் இடம் இருக்கின்றதாம்

குறிப்பாக இந்த வடநாட்டு தொழிலாளர்கள் இதை கவனித்தில் கொண்டால் நல்லது


 

மறுபடியும் 7 தமிழர் விடுதலை

மறுபடியும் 7 தமிழர் விடுதலை என களம் என சத்தம் வர ஆரம்பித்துவிட்டது

இதில் 7 தமிழர் என்பதே பெரும் தவறு, மூவர் இந்தியர் மற்ற நால்வர் இலங்கையர் என்பதே உண்மை

இதில் 4 பேரை கேட்க வேண்டியது இலங்கை அரசு, இந்தியர்களான தமிழகத்தினர் அந்நியநாட்டு குடிகமன் 4 பேரை விடுவி என சொல்வது உலகிலே எங்குமே இல்லாத அதிசயம், அப்பட்டமான தேச துரோகம்

மீதி 3 இந்தியரும் என்ன தியாகிகளா? நளினி பேரரிவாளன் உட்பட்ட மூவரும் நிச்சயம் பெரும் குற்றவாளிகள்

சந்தேகமில்லை பேரரிவாளன் என்பவன் யாழ்பாணத்திற்கே சென்று புலிகளை சந்தித்து பயிற்சி எல்லாம் எடுத்தவன், இந்திய ராணுவத்திற்கு எதிராய் இங்கே “சாத்தானின் படைகள்” என்ற புத்தகம் எல்லாம் அச்சிட்டவன்

நளினி முதலில் விவரம் புரியாமல் சிக்கினாலும் காதலுக்காக, காதலுக்காக நாட்டின் தலைவனையே கொல்ல துணை போனவர்

இவர்கள் எல்லாம் நீண்ட நாள் சிறையில் இருந்தார்கள் என்பதற்காக விட முடியாது, நடந்த சம்பவம் அவ்வளவு கொடூரமானது

இந்நாட்டில் நடந்து உலகை உலுக்கிய படுகொலைகளில் காந்தி, இந்திராவினை தொடர்ந்தது ராஜிவ் கொலை

காந்தி இந்திரா கொலையாளிகள் சம்பவ இடத்திலே பிடிபட்டதும் அவர்களை தூக்கில் இட்டதும் யாவரும் அறிந்தது

ஆனால் ராஜிவ் கொலை உலகிற்கே சவால்விட்டது, கொலையாளிகளான புலிகளே முடிந்தால் இந்தியா கண்டுபிடிக்கட்டும் என சவால் விட்டனர், லண்டனில் இருந்து கிட்டு அப்படித்தான் சொன்னான்

ஆனால் மிக அழகாக, தைரியமாக குற்றவாளிகளை அடையாளம் காட்டி நின்றது இந்திய புலனாய்வு துறை புலிகளின் சால்ஜாப்புகள் எல்லாம் கலைந்தது

இதில் 24 புலிகள் தேடுதலிலே சயனைடு கடித்தனர், சிவராசனும் தனுவும் தற்கொலை செய்தார்கள்

பின் 26 பேருக்கு தூக்கு அறிவிக்கபட்டு பின் அவர்கள் விடுவிக்கபட்டு 7 பேருக்கு ஆயுள் என்றானது, இப்ப்பொழுது அவர்களையும் விடுவிக்க வேண்டுமாம்

நிச்சயம் கூடாது, அப்படி விடுவித்தால் மாபெரும் தவறான முன் உதாரணமாக அமையும்

அப்துல் குரு, யகூப் மேமனை எல்லாம் தூக்கிலிட்ட இந்திய அரசு இந்த சண்டாளர்களை விட்டிருக்க கூடாது

கேட்டால் சோனியா மன்னித்தாராம், ராகுல் உருகினாராம். ஆனால் ராஜிவ் மட்டுமா செத்தார்?

16 பேர் செத்தனர், அங்ககீனமானவர்கள் ஏராளம்

ராஜிவ் குடும்பம் அரசியலுக்காக சிலதை சொல்லலாம், மீதி 16 பேரின் குடும்ப உணர்வுகள் என்ன? அவர்களுக்கான நியாயம் என்ன?

சரி இந்த சண்டாளா நளினி, பேரரிவாளன் கும்பலாவது ஒரு இடத்தில் ஒரே ஒரு இடத்தில் இந்த புலிகளாலே நாங்கள் நாசமானோம் என சொன்னார்களா?

அழுது புலம்பி திரியும் பேரரிவாளனை பெற்ற மகராசி ஒரு இடத்திலாவது புலிகளால் என் குடும்பம் அழிந்தது என சொல்லி இருக்கின்றாரா?

இல்லை, நிச்சயம் இல்லை. அதாவது இன்னும் தங்கள் மீதான தவறை அவர்கள் ஒப்புகொள்ளவே இல்லை பின்னர் எப்படி விடுதலை பற்றி யோசிப்பது?

இவர்கள் துயரத்திற்கு முதல் பொறுப்பு சனியன் பிரபாகரன், ஆம் அவனே முதல் பொறுப்பு

ஒரு இடத்திலாவது அவர்கள் குற்றமற்றவர்கள், இயக்கம் அவர்களுக்கு கொலைதிட்டத்தை சொல்லவில்லை என்றால் எப்போதோ முடிவு வந்திருக்கும்

ஆனால் அவனோ ஒருவார்த்தை சொல்லவிலை, ராஜிவ் கொலை ஒரு ” துன்பியல் சம்பவம்” என சொல்லி நகர்ந்தானே தவிர இவர்களை பற்றிய கவலை இல்லை

(ஆனால் நளினி மகள் டாக்டர் ஆனாள், பேரரிவாள்ன் தாய்க்கு சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும் அளவு பணம் வருகின்றது எப்படி என்றெல்லாம் நாம் கேட்க கூடாது)

அவனை பொறுத்தவரை கிட்டு செத்தான், ஹரிபாபு செத்தான், தனு செத்தாள், சிவராசன் செத்தான் அப்படியே இவர்களும் செத்து தொலையவேண்டும் , இயக்க விதி என்பது அதுதான்

அது சயனைடு கடித்து செத்தால் என்ன? தூக்கில் தொங்கினால் என்ன? புலி என்றால் சாகவேண்டும்

ஆக அவனை பொறுத்தவரை இவர்கள் சாக வேண்டும் ஆனால் காத்து நிற்பது இந்தியா

இவர்களை தூக்கில்தான் போட வேண்டும், இல்லாவிட்டால் என்ன செய்யலாம்?

அமெரிக்காவில் இரட்டை கோபுர தகர்ப்பில் சிக்கிய தீவிரவாதிகளுக்கு 200 ஆண்டுகால ஆயுள் விதித்து குவாண்டமாவோ தீவு சிறையில் வைத்தது போல் வைக்கலாம்

ஆம், அமெரிக்காவில் நடந்த மாபெரும் அழிவு அது என்றால், ராஜிவ் கொலை இந்திய ஆன்மாவில் விழுந்த அடி

அதற்காக இவர்களை விடுவிக்காமல் வாழ்நாள் சிறையில் வைப்பதுதான் சரி, இல்லாவிட்டால் சட்டத்தை திருத்தி தூக்கிலும் இடலாம் ஒன்றும் தவறில்லை

நடந்த கொடூரம் அப்படி

வஞ்சகமாக வலைவிரித்து ராஜிவினை கொடூரமாக கொல்லும் திட்டத்தில் பங்கெடுத்து அதை நிறைவேற்ற உதவியர்கள் இவர்கள்

பல இடங்களில் தெரிந்தே உதவியிருகின்றார்கள், பேரரிவாளன் சிவராசனின் சதிதிட்டம் இலங்கைக்கு வயர்லெஸில் விவாதிக்கபடும் பொழுதெல்லாம் பேட்டரி முதல் சகல விஷயங்களில் உதவி இருக்கின்றார்

அதிலும் சாந்தனும், நளினியும் அவர் கொல்லபடும் வரை அருகிருந்தே பார்த்தவர்கள் என்றால் எவ்வளவு கொடூர மனம்?

இப்பொழுது நடந்திருக்கும் நல்ல விஷயம் என்னவென்றால் திமுக ஆளும் கட்சியாக இல்லை, இருந்திருந்தால் இப்பொழுது 7 தமிழர் விடுதலை என நாடகம் ஆடுவார்கள்

நமக்கு திமுகவினை பற்றி நன்றாய் தெரியும், நிச்சயம் அவர்கள் 7 பேரையும் விடுவிக்கவே பார்ப்பார்கள் அதுவும் பாஜக டெல்லியில் இருக்கும்பொழுது அது தீவிரமாக முயற்சிக்கபடும்

காரணம் 7 பேரை விடுவித்தால் வடக்கே பெரும் கலவரம் வெடிக்கும், பாஜக அரசுக்கு சிக்கலாகும் என்ற அரசியல் கணக்கு தமிழக வாக்கு கணக்கு இன்னபிற‌

கலைஞரே ராஜிவ் கொலையில் திமுக சிக்கிய பொழுது 1990க்கு முன்பிருந்தே இந்திரா காலத்தில் இருந்தே புலிகளோடு தொடர்புடையவர்களை விசாரிக்க வேண்டும் என சொல்லி பார்த்தார்

1987ல் இந்திய ராணுவத்தை புலிகள் கொல்ல தொடங்கிய காலத்தின் பின்னரான நிலையினைத்தான் பார்க்க வேண்டும், பத்ம்நாபா கொலையாளி எப்படி தப்பினான்? யார் உதவினார் என கேட்ட பின்பு கலைஞர் அமைதியானார்.

ராஜிவ் கொலை எனும் மீறமுடியாத கயிறு அவரை கட்டிபோட்டதே அன்றி இல்லாவிட்டால் திமுகவின் ஈழ அழிச்சாட்டியம் எங்கோ போயிருக்கும்

இப்பொழுது பாஜகவினை எதிர்த்து தமிழ் அரசியல் செய்யவேண்டிய நேரத்தில் இந்த 7 பேர் விடுதலை எல்லாம் திமுக சும்மா விடாது

திமுக சுபாவம் அப்படி

நல்ல வேளையாக அவர்கள் பதவியில் இல்லை என்பதால் ஆறுதல் பெரும் ஆறுதல்

இந்த 3 இந்தியரையும் , 4 இலங்கையர்களையும் விட முடியாது. அதுவும் எல்லை தாண்டிவந்து பெரும் கொலை செய்த அந்த 4 பேரையும் இத்தேசம் மன்னிக்காது

முடிந்தால் இவர்களை தூக்கில் இடலாம், இல்லை 200 ஆண்டுகால சிறை என அமெரிக்க பாணியில் நிர்ந்தரமாக வைக்கலாம்

அதுவே மாபெரும் முன்னுதாரணமாகவும் , தண்டனையாகவும் அமையும்

பழனிச்சாமி அரசு அதை செய்யட்டும், நிச்சயம் அவர்களுக்கு அடுத்த தேர்தல், வோட்டு வங்கி இன்னபிற இம்சைகள் இல்லை

அதனால் துணிந்து செய்யட்டும், இந்த மாநிலத்தின் நாட்டுபற்று மிக்கோர் நிச்சயம் அவருக்கு ஆதரவு கொடுப்பர்

மிஸ்டர் பழனிச்சாமி , அடுத்த நாட்டில் இருந்து வந்து இங்கு பெரும் தலைவனை கொன்ற 4 அடுத்தநாட்டு குடிமக்களை விடுவிக்க துணைபோனால், அவர்களுக்கு உதவிய உள்நாட்டினர் 3 பேரை விடுவிக்க‌ நீர் ஏற்ற ரகசிய காப்பு பிரமாணத்திற்கு என்ன அர்த்தம்?

மேன்மைதங்கிய ஆளுநரே, அடுத்த நாட்டு குடிமக்கள் இந்நாட்டில் வந்து செய்த பெருங்கொலைக்கு விடுதலை அளித்து அவர்களை விடுவிக்க பரிந்துரை செய்வீரா? செய்தால் அது தேசவிரோதம் ஆகாதா?

அதிகார வர்க்கம் இந்நாட்டு தலைவரை கொன்ற அடுத்தநாட்டுகாரனை விடுவித்து டாட்டா காட்டினால் அதைவிட பெரும் மானகேடு இத்தேசத்திற்கு உண்டா?

இத்தேசம் தன் கவுரவத்தை நிலைநாட்ட இந்த சண்டாளர்களை விடவே கூடாது என்பதுதான் நாட்டுபற்றுள்ளோரின் உருக்கமான கோரிக்கை

Image may contain: 7 people, people smiling

7 பேர் விடுதலை – உச்ச நீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலைக்கான முடிவை தமிழக அரசே முடிவெடுக்கலாம் : உச்ச நீதிமன்றம்

பழனிச்சாமிக்கு மோசமான காலகட்டம், குட்கா விவகாரத்தில் மனிதர் வசமாக சிக்கி இருக்கும் பொழுது கூடுதல் நெருக்கடி வேறு

ஆயினும் தமிழக அரசு என்ன செய்யும்?

மத்திய அரசோடு கலந்து ஆலோசிப்போம் என சொல்லும், மத்திய அரசோ பல காரணங்களை காட்டி முடியாது என சொல்லும்

பின் அரசுகளின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என இதுவும் ஒதுங்கும்

எனினும் இந்த விவகாரம் ஒரு ரவுண்டு வந்துவிட்டுத்தான் ஓயும்

இப்பொழுது இன உணவாளர்கள் எல்லாம் பொங்குவார்கள், ஆனால் எதற்கெடுத்தாலும் கைது, மிதி, அடி என இருப்பதால் கொஞ்சம் யோசித்து முணங்குவார்கள்

அவர்கள் வருத்தம் எல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா?

இப்பொழுது கலைஞர் முதல்வராக இருந்தால் எவ்வளவு அரசியல் செய்யலாம், குதிக்கலாம், துள்ளலாம், பொங்கலாம்

ஆனால் இந்த பழனிச்சாமி அல்லவா அமர்ந்துவிட்டார் ஐயகோ எல்லாம் வீணாயிற்றே….

சோபியா விவகாரம்

பொதுவாக விமான பயணத்தில் யாரும் இடைஞ்சல் செய்தால், சர்ச்சைகள் செய்தால் அவர்களை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள்

விமான விதிமுறைகள் அதற்கு இடமளிக்கின்றன, காரணம் மற்ற பயணங்களை போல் அல்லாமல் விமான பயணம் சவால் மிக்கது, எல்லோரின் ஒத்துழைப்பும் அவசியம் இல்லாவிட்டால் ஏற்படும் விபரீதம் ஏராளம்

யாராவது பயணி குடித்துவிட்டு கலாட்டா செய்தல், பணிப்பெண்ணிடம் வம்பிழுத்தல், அடுத்திருப்பவனை இம்சை செய்தல் இல்லை ஏதும் மிரட்டல் என்றால் உடனே அவனை பிடித்து விமான நிலைய அதிகாரியிடம் ஒப்படைப்பார்கள்

சோபியா விவகாரத்திலும் இதுதான் நடந்திருக்க வேண்டும்

ஆனால் தமிழிசையினை விட்டால் தன் குரலை யாரும் கேட்கமாட்டார்கள் , இதை விட்டால் வாய்ப்பில்லை என்ற சோபியாவின் கணக்கும்

தனக்கொரு வாய்ப்பு வராதா? வந்தால் தன்னை ஒருமாதிரி கிண்டலடிக்கும் எல்லோர் மேலான கோபத்தையும் காட்ட முடியாதா? எல்லோருக்கும் அது ஒரு பாடமாக இருக்கமுடியாதா என்ற தமிழிசையின் கணக்கும் ஒரே மாதிரி ஆனதுதான் சர்ச்சைக்கு காரணம்

தவறு இருபக்கமும் உள்ளது, தமிழிசையிடமும் உள்ளது.

இதுவே கலைஞரிடம் ஒருவர் இப்படி விமானத்தில் , திமுக ஒழிக என சொல்லி இருந்தால் என்ன சொல்லி இருப்பார் தெரியுமா?

ஏன் தனியாக கத்துகின்றாய், அதோ அந்த பைலட் அறையில் இருக்கும் மைக்கினை வாங்கி தருகின்றேன் சத்தமாக கத்து

இப்படிபட்ட பெண்ணுரிமை குரல்கள் வரவேண்டும் என்றுதான், பெரியாரும் அண்ணாவும் நானும் விரும்பினோம், அது வந்தே விட்டதில் மகிழ்ச்சி

ஆனாலும் திமுக ஒழிக என விரும்புகின்றாய் அல்லவா? அதுதான் வருத்தம். அது ஒழிந்துவிட்டால் அடுத்த தலைமுறை பெண்கள் இப்படி உரிமையோடு கத்தமுடியும் என கருதுகின்றாயா? நிச்சயம் முடியாது”

இதற்கு மேலும் வம்பிழுத்தவள் அழாமல் இருக்க முடியுமா?

என்ன இருந்தாலும், ஆயிரம் சர்ச்சை இருந்தாலும் பெரியாரும், அண்ணாவும் அவர்களிடம் கலைஞர் பெற்ற பயிற்சியும் பல இடங்களுக்கு முன் உதாரமானவை

காரணம் அவர்கள் அடிதாங்கி தாங்கி வளர்ந்தார்கள், சிந்திக்க சொல்லி சொல்லி அடிவாங்கினார்கள்

திமுக இன்றும் பலமாக இருப்பது அதில்தான், கட்சி வளர்ப்பது என்பது அப்படித்தான்

மசூதி இடித்த அகம்பாவத்தில் வளர்ந்த கட்சியிடம் இப்படிபட்ட தன்மையினை எதிர்பார்க்க முடியாது

சோபனா விமானத்தில் சத்தமிட்டது தவறு, அதை தமிழிசை பெரும் விஷயமாக்கியது அதைவிட தவறு

இதற்காக வழக்கு பதிந்து பாஸ்போர்ட்டை முடக்கியது எல்லாம் பெரும் தவறு, சந்தேகமில்லை

ஆனால் இதில் அரசியல் செய்வது எல்லாவற்றையும் விட தவறான முன்னுதாரணம்

தமிழிசை அக்கா கொஞ்சம் நிதானித்து வழக்கினை முடித்தால் அவருக்கும் அவர் கட்சிக்கும் நல்லது

விட்டுகொடுக்காமல் அரசியல் இல்லை

இப்படி தமிழிசை அடம்பிடித்தால் தமிழகத்திற்கு இன்னும் நல்லது, ஆம் பாஜக இங்கு வரவே வராது