சிதறல்கள்

கட்சி தொடங்கி தமிழகத்தை சுற்றிவருவார் என ரஜினியினை நம்பினால் அவர் மலேசிய எஸ்டேட்டை சுற்றினார், அப்படியே மும்பை சேரியினை சுற்றினார்

இப்பொழுது ஏதோ பேட்டையினை சுற்ற போகின்றாராம்

இடையில் அடிக்கடி இமயமலை வேறு

பேட்ட என்பது இந்த பீட்டா (PETTA) என்பது போல் நமக்கு தெரிகின்றது, தனுஷ் வேறு அதில் உறுப்பினர் என்பதை எதற்கும் சொல்லி வைப்போம்


மலேசியாவில் ரஜினிகாந்திற்கு ஏகபட்ட ரசிகர்கள் உண்டு, அவர்களில் சில‌ தமிழர்களே தவிர தமிழ் என்பது ஆங்கிலம் கலந்தே இருக்கும், காந்தியினை கூட கேந்தி என்றுதான் சொல்வார்கள்

இப்பொழுது சிலர் கேட்கின்றனர், பிரதர் ரஜினியின் புதுபடம் “பெட்டே” என்றால் என்ன அர்த்தம்?

“பெட்டே ” இல்லை “பேட்ட” என சொல்லி தீரவில்லை.

Image may contain: 1 person, standing and text

—————————————————————————————————————————————–

சீனாவின் இறக்குமதி பொருளுக்கு இன்னும் கூடுதல் வரியினை விதித்துவிட்டார் டிரம்ப், இதனால் சீன அமெரிக்க மோதல் இன்னும் வலுக்கின்றது

முதலில் சில பொருளுக்கு வரி என்ற டிரம்ப் , இப்பொழுது எல்லா சீன பொருளுக்கும் வரி என்கின்றார், சீன சுற்றுபயணிகளுக்கும் வரி இருக்கும் போல‌

பொதுவாக ஆசிய நாடு எதில் ஆதிக்கம் செலுத்தினாலும் மேற்குநாடுகளுக்கு பொறுக்காது, ஜப்பான் அப்படி செய்ததால் முன்பு அணுகுண்டு வீசி அடக்கினார்கள்

சீனா முன்பு நோயாளி நாடு, மாவோவின் காலத்தில் புரட்சி நடந்தாலும் பொருளாதாரம் சொல்லிகொள்ளும் அளவு இல்லை

தமிழக அமைச்சர்கள் போல எல்லோருடனும் மோதும் சீனா அப்படி சோவியத் யூனியனுடனும் எல்லை தகறாறில் மோதியது

1972 வங்கப்போரில் அமெரிக்க செல்வாக்கு சரிவு, இந்தியாவினை அடக்குதல் கூடுதலாக சோவியத்திற்கு செக் வைத்தல் என்ற கணக்கில் சீனாவினை நெருங்கியது அமெரிக்கா

பொதுவுடமைவாதி மாவோ அதை தயக்கமின்றி ஏற்றார், அதன் பின் டெங் ஜியோ பிங் வலுவாக பற்றினார்

விளைவு சீனா சீறி எழுந்தது, சோவியத் சிதறினாலும் சீனா பெரும் வலுவான நாடாக மாறிற்று

விடுவார்களா? இப்பொழுது சீனாவினை அடக்கி வைக்க அமெரிக்கா துடியாய் துடிக்கின்றது

நன்றாக இருவரும் மோதட்டும்

இதில் யார் நாசமாய் போனாலும் இந்தியாவிற்கு மிகவும் நல்லது


குட்கா ஊழல் விஸ்வரூபமாகின்றது, சில அமைச்சர்களே கைதாகலாம் என்ற அளவில் செல்கின்றது விஷயம்

ஜெயா வழியில் ஆட்சி என்றபொழுதே இவர்கள் இப்படித்தான் சிக்குவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது, இதில் ஆச்சரியபட ஒன்றுமில்லை


நெடுநாளைக்கு பின் கிரிக்கெட் பார்த்தால் ரவீந்திர ஜடஜே என்பவர் விளையாடி கொண்டிருந்தார்

அப்பொழுது பார்த்தது போல இப்பொழுதும் சொத்தையாகவே ஆடிகொண்டிருந்தார்

ஏனோ பழனிச்சாமி நியாபகம் வந்து போனது, அவரையும் யாரோ ஒரு மோடி காப்பாற்றி ஆடவைத்து ரசித்துகொண்டிருக்கின்றார்


பூலோகம் என்றொரு படம் ஓடிகொண்டிருக்கின்றது, எருமை கிடாவிற்கு கிளவுஸ் போட்டது போல ஒரு வெள்ளைக்காரன் ஜெயம் ரவியுடன் குத்துசண்டை போட்டு கொண்டிருக்கின்றான்

ஜெயம் ரவிக்கு முகம் துடைப்பது, தண்ணீர் கொடுப்பது போன்ற வேலைகளை அருகிருந்து செய்கின்றார் திரிஷா

ஒருவேளை ஜெயம் ரவி விழுந்துவிட்டால் திரிஷா வெள்ளைக்காரனை நானே தியாக தலைவி என களத்தில் இறங்கி குத்த வந்துவிட்டால் எப்படி இருக்கும்?

கேட்டால் அவனுக்கு நான் சோறு போட்டேன், தண்ணீர் கொடுத்தேன் இதனால் குத்துசண்டைக்கு வரும் தகுதி எனக்கு உண்டு அவர் சொன்னால் எப்படி இருக்கும்?

சிரிப்பு வருமா வராதா?

ஆனால் சசிகலாவும் தினகரனும் அப்படி அரசியலுக்கு வந்துவிட்டால் மட்டும் யாரும் சத்தம் போட்டு சிரிப்பதில்லை

ஆச்சரியமாக தினகரன் வெற்றியும் பெருகின்றார்

இப்படிபட்ட தமிழகத்தில் திரிஷா அந்த வெள்ளைகாரனை குத்தி வீழ்த்தியதாக படத்தை முடித்திருக்கலாம்

தமிழகத்தில் சினிமாதான அரசியல், அரசியல்தான் சினிமா