தமிழிசைக்கே அப்பொறுப்பு மறந்துவிட்டது போல

பெட்ரோல் விலை உயர்வு அமித்ஷாவே அலறும் அளவு சென்றாயிற்று, அவரே களத்தில் குதித்து பெட்ரோலிய துறை அமைச்சரை சந்திக்க வந்துவிட்டார்

தமிழிசையோ இதுதான் எங்களால் முடிந்த அதிகபட்சம் என சொல்லிகொண்டிருக்கின்றார்

இப்பொழுது ஒரு விஷயத்தை எல்லோரும் மறக்கின்றார்கள் அல்லது மறைக்கின்றார்கள்

கொஞ்ச காலத்துக்கு முன்பு தமிழிசை அக்காவிற்கு பெட்ரோலிய துறையில் கவுரவ பதவி ஒன்று அளிக்கபட்டது பலருக்கு நினைவிருக்கலாம்

அந்த பதவி அவருக்கு கிடைத்தபின்பே இந்த மாபெரும் விலை உயர்வு ஏற்பட்டிருக்கின்றது

நிச்சயம் தமிழிசை விலை உயர்வுக்கு காரணமல்ல எனினும் விலை உயர்வுக்கு உண்மையான காரணத்தை தமிழிசை அக்கா சொல்ல்த்தான் செய்யலாம்

பாரத் பெட்ரோலியத்தின் பொறுப்பான பதவிக்கு நியமிக்கபட்டவர் என்ற முறையில் அக்காவிடம் அதனை நினைவுறுத்த யாருமில்லை, எந்த பத்திரிகையாளரும் அதை அவரிடம் கேட்கவுமில்லை

தமிழிசைக்கே அப்பொறுப்பு மறந்துவிட்டது போல..


 

இந்திய ரூபாய் கடுமையாக வீழ்ச்சி அடைவது கவலை தரும் விஷயம்

டாலரில் கச்சா எண்ணெய் வரவு செலவு நடப்பதால் டாலருக்கு எதிரான மதிப்பு சரிய சரிய பெட்ரோல் விலை உயரத்தான் செய்யும்

மிக அவசரமான நடவடிக்கை எடுத்து நாட்டை காப்பாற்ற வேண்டிய நேரமிது

இல்லாவிடில் கிரீஸ், வெனிசுலா போல பெரும் பொருளாதார நெருக்கடியினை இத்தேசம் எதிர்கொள்ளும்

அந்த அபாயத்தை தடுக்க இந்த அரசு அதிரடியான காரியங்களை செய்யட்டும் இல்லாவிட்டால் நடையினை கட்டட்டும்

நாடு திவாலாகும் நிலையினை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது என்பது
மட்டும் மிக வேதனையான விஷயம்

இது கிட்டதட்ட சோவியத் யூனியனில் அந்த கோர்பசேவ் பெரோஸ்திகா திட்டத்தை அறிவித்து ஏதோ செய்யபோக சோவியத்தே சிதறியது அல்லவா? அந்த சாயல் தெரிகின்றது

மோடியும் அப்படித்தான் நாட்டை சீரமைக்கின்றேன் என கருப்புபண ஒழிப்பு என இறங்கி கிட்டதட்ட அதே நிலைக்கு இந்தியாவினை இழுத்துவிட்டார்

நாடு திவாலாவதை தடுக்க ஏதேனும் செய்யவேண்டிய இக்கட்டான நிலையில் இருகின்றது இந்தியா

ஒரு வளரும் நாடு விஷபரீட்சைகளில் இறங்க கூடாது, அது பல சிக்கலை கொண்டு வரும்

இதோ வந்திருக்கின்றது, மோடி கும்பல் நடையினை கட்டி வேறு ஒருவருக்கு வழிவிடுவதே அவர்கள் இந்நாட்டிற்கு செய்யும் மாபெரும் சேவை


 

குட்கா வழக்கில் சிக்கிய அமைச்சர்களை தற்காத்து பேசியுள்ளார் பழனிச்சாமி, அதாவது வழக்கு பாய்ந்தால் மட்டும் அவர்கள் குற்றவாளி இல்லையாம்

சரி குற்றவாளி இல்லை என நிரூபிக்கும் வரையாவது அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமா? வேண்டாமா? என்றால் சத்தமே இல்லை

விஜயபாஸ்கரும், வேலுமணியும் பதவி விலக வேண்டும், ஆனால் தூக்கி போட்டு மிதித்தாலும் இருவரும் விலக மாட்டார்கள்

இந்நேரத்தில் முதல்வர் அமைச்சர் பதவியிலிருந்து அவர்கள் இருவரையும் விரட்ட வேண்டும் அவரும் செய்யமாட்டார், காரணம் அவர் மேலும் சில சர்ச்சைகள் உண்டு

இந்த ஆளுநர் என்பவர் ஏதாவது செய்யட்டும்

அந்த இருவரும் குற்றவாளி இல்லை என தீர்ப்புவருமட்டும் பெஞ்சில் இருப்பதுதான் சரி


 

இந்த 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் இருந்து ஒரு சமிக்ஞையும் இல்லை, அந்த தீர்மானத்தை அவர் கண்டு கொண்டதாக தெரியவில்லை

7 பேரையும் விடுவிக்கும் தீர்மானத்தை தனியாக கொடுத்திருந்தால் கூட அது ஏதாவது அதிர்வு கொடுத்திருக்கும், ஆனால் கூடவே ஜெயாவிற்கு பாரத ரத்னா என சில காமெடிகளை செய்ததால் தீர்மானம் மொத்தமும் காமெடி என ஆளுநர் தள்ளிவிட்டார் போல..

எப்படியோ 7 பேர் விடுதலையில் ஆளுநரின் அமைதி வரவேற்கதக்கது

ஆட்டுக்கு தாடி தேவையோ இல்லையோ நாட்டுக்கு கவர்னர் தேவை என்பது தெளிவாக தெரியும் நேரமிது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s