விநாயகர் அல்லது கணேசன்

இந்து சமயத்தில் முப்பது முக்கோடி தேவர்கள் உண்டு என்பது நம்பிக்கை, அந்த முப்பது முக்கோடிகளில் 30 பேருக்கு மேல்தான் வெகு பிரசித்தம் அந்த 30 பேரில் முதல் 5 இடங்களுக்குள் வருபவர்களில் ஒருவர்தான் வடமொழியில் விநாயகர் அல்லது கணேசன்.

நமது தமிழில் பிள்ளையார் என அழைக்கபடுகிறார் அந்த கணபதி ஐந்து கரங்களை கொண்டவர் என்பதால் ஐங்கரன் எனவும் அழைக்கபடுகிறார்.

இந்தியா மட்டுமல்ல ஒருகாலத்தில் ஆசியா முழுக்க (அரேபியா,மங்கோலியா,இந்தோனிசியா வரை) பரவியிருந்த இந்து மதத்தின் பிரதான கடவுளவர், .

இன்றும் இந்தோனேஷியாவில் பிள்ளையார் கோவில் உண்டு , அவர்கள் கரன்சியிலும் பிள்ளையார் உண்டு, அப்படி பல நாடுகளில் பிள்ளையார் இன்றும் உண்டு.

ஒரு காலத்தில் பிள்ளையாரை தனிகடவுளாக கொண்ட கானாதிபத்தியம் என்ற சமயமே இருந்திருக்கின்றது

பின்னாளில் அது அக்கால மோதல்களான சைவ,வைணவத்தோடு இணைந்தது.

கணங்கள் எனப்படும் இயக்கும் சக்திகளுக்கு., அதாவது ஒவ்வொரு கணமும் இயக்கும் சக்திக்கு அதிபதி அவர்தான். அதனால் அவர் கணங்களின் அதிபதி கணபதி ஆனார்,

பெரும் சக்திகொண்டவர், காக்கும் கடவுள் என புகழபடும் திருமாலை கூட இவரே காத்தவர் என பெரும் புகழ்கொண்டவர், மிக பெரும் சக்தியின் வடிவம்.
யாரும் எப்பொழுதும் வழிபடலாம்.

இது தீட்டு என்றோ அல்லது கட்டுபாடுகளோ அவருக்கு இல்லை, இதுதான் பிள்ளையாரின் பெரும் சிறப்பு, சனிக்கே சனிபிடிக்க வைத்தவர்.

மிக மிக எளிமையான தெய்வம், பணம் கொட்டும் பெரும் ஆலயங்களிலும் இருப்பார் , தெருமுனை ஆலயத்திலும் இருப்பார், பக்தர்களின் வேண்டுதல் என்றால் பசுஞ்சாணத்தில் கூட காட்சியளிக்கும் தெய்வம் அவர், வழிபடுவதற்கும் மிக மிக எளிமையானவர்,

சாதாரண வெள்ளெருக்கும், அரும்புல்லும் கூட போதும். கூடுதலாக தமிழர்கள் தேங்காயும் சேர்த்து கொண்டனர்.

16 வகை ஆசீர்வாதத்திற்கும் அவரே அதிபதி என்பதும் நம்பிக்கை, அவரை தொழுதுதான் செயலை தொடங்குவார்கள், வட இந்தியா முழுக்க பிள்ளையாருக்கு செல்வாக்கு அதிகம், முருகனை தெய்வமாக கொண்டாடும் தமிழர்கூட பிள்ளையாருக்கு தனி இடம் கொடுத்திருக்கின்றார்கள்.

முருகனை உருகி உருகி பாடிய அவ்வையும் (கே.பி சுந்தரம்பாள் வடிவில் நாமும் பார்த்திருப்போம் ) முருகனை பழனிக்கு அனுப்பிய விநாயகருக்கு, விநாயகர் அகவல் என ஒரு காவியம் பாட தவறவில்லை என்பதில்தான் விநாயகரின் கனமான இடம் தெரிகிறது.

அக்காலத்தில் வட இந்தியரின் (இந்துக்களின் அடித்தள பூர்வீகமான இமயமலை பகுதிகள்) ஆண்டுகணக்கு ஆவணிமாதத்திலே தொடக்கம், வருட தொடக்கத்திலே பிள்ளையாரை வணங்க அவர்கள் கொண்டு வந்த கொண்டாட்டமே விநாயகர் சதுர்த்தி.

முன்பெல்லாம் பாம்பு புற்றிலிருந்து மண் எடுத்து பிள்ளையார் உருவம் செய்து அவருக்கு பிடித்தமான படையலிட்டு, விரத காலம் முடிந்து அதனை கிணறு மற்றும் ஆறுகள் போன்ற நீர் நிலைகளில் கரைப்பார்கள்.

வளமான களிமண்ணை மண்ணை கரைப்பதன் மூலம் அந்நீர் வயலுக்கு பாயும் பொழுது நிலம் இன்னமும் செழிப்படையும், இந்த பெரிய வேளான்மை தத்துவமும் அதில் அடங்கியிருந்தது, சாணப்பிள்ளையார் தத்துவமும் இதுவே,சிறிதும் ரசாயாண கலப்பற்ற அந்த நீர் நிச்சயம் வளம் கொடுக்கும், விளைச்சல் பெருகும்.

நவராத்திரி கொலு போன்றோ அல்லது கிருஷ்ண ஜெயந்தி போன்றோ மிக அமைதியாக நடந்து கொண்டிருந்த விழாதான் விநாயகர் சதுர்த்தி, அமைதியான தெய்வம் அமைதியான விழா.

ஆனால் இன்று நடைபெறும் பெரும் ஊர்வலங்களுக்கும், காவல்துறையினரின் தூக்கத்தினை கெடுக்கும் அளவிற்கு சில சர்ச்சைகளுக்கு இடமான முறையில் நடைபெறும் அளவிற்கு இதனை மாற்றிய பெருமை பால கங்காதார திலகரையே சேரும்.

மிகபெரும் சுதந்திர போராட்ட வீரர் திலகர், காந்திக்கு முன்பே “சுதந்திரம் எமது பிறப்புரிமை” என முழங்கியவர், ஆனால் அரசுக்கு எதிரான ஊர்வலங்களுக்கு பிரிட்டிஷ் அரசு தடைவிதித்த பொழுது, மிக சாதுர்யமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை நடத்தி “இது மத நம்பிக்கை” என வெளியே சொல்லி, விநாயகர் ஊர்வலத்திலே சுதந்திர வேட்கை ஊட்டியவர்.

மிசா காலகட்டத்தில் அண்ணா சமாதி கூட்டத்திலே அரசியல் நடத்திய கலைஞரை போல )

வெள்ளையரால் தடுக்கவும் முடியவில்லை காரணம் மத சுதந்திரம் அளித்திருந்தது சட்டம், விளைவு இந்தியர்களுக்க் மிக பிடித்த பிள்ளையார் பெரும் இந்திய அடையளாமாக மாறினார்.

சதுர்த்தி ஊர்வலத்தில் சுதந்திர முழக்கங்களும் சேர்ந்தன,

ஆனால் பிள்ளையாரை பிடிக்க குரங்காய் முடிந்தது போல, சுதந்திரம் பெற்ற பின்னும் தொடர்ந்தது, குறிப்பாக மும்பை போன்ற நகரங்களில் அதன் கொண்டாட்டமே தனி, மக்கள் ஆதரவினை பெறவேண்டும் என்பதற்காக வரதராஜ முதலியார் (நாயகன் படத்தின் மூலகாப்பி) போன்றோர் பெரும் செலவுகள் செய்தனர், நாடெங்கும் அது மேலும் பரவியது. இன்று ஏராளமான ரசாயாண பிள்ளையார்கள் வருட வருடம் டன் கணக்கில் நீர் நிலைகளில் கரைக்கபடுகின்றன.

இது மத நம்பிக்கை, ஆனால் பொது அமைதிக்கும் யாருடைய மனதிற்கும் எள்நுனி அளவும் காயபடுத்தாத வகையில் கொண்டாடபடும் பண்டிகைகளே அதன் உண்மை பொருளை உணர்த்தும், மிக சில இடங்களில் இது சர்ச்சைகுள்ளாகும் பொழுது அமைதியின், எளிமையின் சின்னமான பிள்ளையாரை கலங்கிய கண்களோடுதான் பார்க்க தோன்றுகின்றது.

எல்லா இனத்தாருக்கும் இந்தியாவில் பிள்ளையாரை பிடிக்கும், தமிழர்கள் கூட பிள்ளையார் சுழி போட்டுத்தான் தொடங்குவார்கள், அவரை முன்னிறுத்துகின்றார்கள். அவரை தொடங்கி நினைத்த காரியங்கள் பெரும்பாலும் காலத்தை வென்று நிற்பவை.

உதாரணம் மகாபாரத கதையை வியாசர் சொல்ல சொல்ல பிள்ளையார் எழுதினார் என்பார்கள், அவர் ஒரு பக்க தந்தத்தினை உடைத்து எழுத்தாணியாக எழுதினார் என்பது மரபு நம்பிக்கை.

அவர் தந்தத்தை உடைத்தாரா அரச மரத்து கிளையினை உடைத்தாரா என்பது பிரச்சினை அல்ல

அவர் தொடங்கிவைத்திருக்கின்றார் அல்லது அவரை முன்னிறுத்தி தொடங்கியிருக்கின்றார்கள், பாரத கதை காலங்களையும் தாண்டி நிலைத்திருக்கின்றது.

தாயை போல பெண்ணை தேடுகிறேன் என சொல்லி மனிதர்களுக்கு பெரும் தத்துவம் தந்தவர், தாயினை போல குணநலன்களோடு ஒரு மனைவி அமையும் பட்சத்தில் வாழ்வு இனிமையாகும் என்ற அரிய தத்துவத்தை சொன்னவர்

அரசமரம் மனிதருக்கு நல்ல அமைதியை கொடுக்கும் என அமர்ந்து, புத்தருக்கே வழிகாட்டியவர்.

இன்னும் ஏராளமான ஆண்மீக,அறிவியல் தத்துவங்களின் மொத்த வடிவம் பிள்ளையார், அவருக்கு பிடித்த அருகம்புல்லும், இன்றும் மருத்துவ உலகம் ஒத்துகொள்ளும் அருகம்புல் பெருமையும் போல ஏராளமான தத்துவங்களை தனது பெருவயிற்றில் ஒளித்து வைத்திருப்பவர்.

பிள்ளையார் என்பவர் மாபெரும் தத்துவ வடிவம்.

இந்தியாவில் எல்லா மக்களுக்கும் அவரை பிடிக்கும் என்றாலும், தமிழக செட்டியார்களின் இஷ்ட தெய்வம் அவர், பிள்ளையார் பட்டியில் அவரை கொண்டாடும் நாட்டுகோட்டை செட்டியார்களின் பெரும் நம்பிக்கை அவரே.

விநாயர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் உள்ள பெரும் ஆண்மீக தத்துவம் என்னவென்றால், மண்ணில் செய்யபடும் விநாயகர் சிலை குறிப்பிட்டகாலம் முடிந்து நீர் நிலைகளில் கரைந்து விடுகின்றது, அதாவது நிலையானது அல்ல இன்னும் ஆழமாக சொன்னால் மண்ணில் உண்டானது எல்லாம் மண்ணிற்கே திரும்பும்.

அதே தான், யூத மதமும்,இஸ்லாமும், கிறிஸ்தவமும் இன்னும் எல்லா மதங்களும் வலியுறுத்தும் தத்துவம்தான் “மண்ணில் உண்டான மனிதன் மண்ணிற்கே செல்லவேண்டும்”

இந்த உண்மையைதான் சொல்லாமல் சொல்கிறார்கள் விநாயர் சதுர்த்தியன்று இந்தியா முழுக்க வீற்றிருக்கும் கோடிக்கணக்கான பிள்ளையார்கள், இதனை உணர்ந்து கொள்பவர்கள் மிக அமைதியாக சாத்வீக பூஜைகளில் மனதினை செலுத்தி அமைதியை உணர்வார்கள்,அதனை மற்றவர்களுக்கும் கொடுப்பார்கள்.

அங்கே வீண் ஆரவாரமும், முழக்கங்களும், வெற்று கூச்சல்களும் இருக்காது, ஓங்கார பிரவண தத்து பிள்ளையார் போல பெரும் அமைதி மட்டுமே இருக்கும்.

காவல்துறையும் அமைதியாக ஆங்காங்கு இருக்கும் பிள்ளையாரை கையெடுத்து வணங்கிகொண்டிருக்கும்.

இந்த விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் எல்லோருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிக்கும் வேளையில் இருவரை நினைத்தால் சாணி பிள்ளையாரை எடுத்து அடிக்கவேண்டும் என தோன்றுகிறது

ஒன்று ஆயிரம் வழிகள் இருந்தும் மசூதி இருக்கும் தெரு வழியேதான் ஊர்வலத்தை நடத்துவேன் என அடம்பிடிப்பவன்

இன்னொன்று பெரும் தத்துவ பிம்பான பிள்ளையாரை “அழுக்கு மூட்டை” என பேசிவிட்டு, இன்று தமிழருக்கு சதுர்த்தி வாழ்த்து என பேனரில் கையினை தூக்கிகொண்டிருக்கும் பகுத்தறிவு இம்சைகள்

இருவருமே ஒரு வகை மனக்கோளாறு பிடித்தவர்கள் என்பதால் பொறுப்பினை பிள்ளையாரிடமே ஒப்படைத்துவிடலாம், சனியினையே விரட்டியவர், இந்த தமிழக சனியன்களை விடுவாரா?

இந்த தமிழக சனிகளை அவர் விரட்டட்டும்..

எப்படியோ வினை தீர்ப்பான் விநாகயன் என்பார்கள், அவன் எல்லோர் வாழ்விலும் வினை தீர்க்கட்டும், அருள் பொழியட்டும்.

எல்லோருக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

Image may contain: one or more people and people standing
No automatic alt text available.

பாஜகவிற்கும் மோடிக்கும் முட்டு கொடுப்பவனை

உலகின் மோசமான பொருளாதார நெருக்கடி நாடுகளில் இந்தியா உட்பட 15 நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன‌

இந்தியா, அர்ஜென்டினா, வெனிசுலா என பட்டியல் நீள்கின்றது

பெரும் கடனை இந்தியா வாங்காவிட்டால் அது திவாலாகும் வாய்ப்பு இருப்பதாகவும் உலக செய்திகள் சொல்கின்றன‌

டாலருக்கு நிகரான மதிப்பு கழுத்துவரை வந்தாயிற்று, இந்திய பொருளாதார மதிப்புபடி 75 ரூபாயினை தாண்டினால் மகா அபாயம்

பெரும் அளவிலான கடனை இந்தியா வாங்கி ஆகவேண்டும், ஆனால் வாங்கிவிட்டால் அதற்கான வட்டி முதல் பல விஷயங்கள் வருங்காலத்தில் பாதிப்பினை கொடுக்கும்

தேசம் மிகபெரும் நெருக்கடியில் சிக்கியாயிற்று

இன்னும் பாஜகவிற்கும் மோடிக்கும் முட்டு கொடுப்பவனை எல்லாம் பரிதாபமகாகவே பார்க்க வேண்டுமே தவிர ஆத்திரபட்டு ஒன்றும் ஆகாது

கில்லாடி கிளைவ் : 09

கில்லாடி கிளைவ் : 09

கடும் கோபத்தில் வந்த கிளைவ் தன் ஆட்டத்தை தொடங்கினார், ஹூக்ளி கரையோர நகரங்களை எல்லாம் பிடித்தார்

இறுதியாக நவாப் பிடித்திருந்த வில்லியம் கோட்டையினை மீட்டார், நவாபின் படைகள் அலறி அடித்து தலைநகருக்கு திரும்பின‌

தரைப்போரில் கிளைவ் அடிக்க, கடற்பாதுகாப்பினை வாட்சன் செய்து கொண்டிருந்தார், நவாப் படைகள் இந்த வியூகத்தில் சிக்கின‌

நவாப் சிராஜ் உட் டவ்ளா அப்பொழுது முர்ஷிதாபாத் எனும் தன் தலைநகரத்தில் மல்லாக்க கிடந்தார், வில்லியம் கோட்டையினை வெள்ளையர் கைபற்றியசெய்தி தெரிந்ததும் அவனுக்கு வியர்த்தது

காரணம் ஆங்கிலேயர் ஒரு நாளும் இங்கு ராணுவ வெற்றி பெறுவார்கள் என அவன் நம்பவில்லை, அவன் என்ன மொத்த இந்தியாவும் அப்படித்தான் எண்ணி இருந்தது

நவாபின் படைகள் தோற்றது என்ற செய்தி கேட்டதும் அவனின் நரிமூளை வேலை செய்தது

எதற்காக இவர்களிடம் போராட வேண்டும்? வந்திருப்பது கிழக்கிந்திய கம்பெனி படை, அவர்கள் தலமையிடமே பேசிவிட்டால் என்ன?

கம்பெனியாருடன் சமாதானம் பேசினான் சிராஜ் உட் டவ்ளா, பெரும் நஷ்ட ஈடும் வில்லியம் கோட்டையினை செப்பனிட்டும் கொடுப்பதாக வாக்கு கொடுத்தான்

பெரும் பணம் கிடைத்ததால் கம்பெனியும் ஒப்புகொண்டது, கிளைவிற்கோ நவாபினை போட்டு அடிக்கும் வெறி இருந்தது ஆனால் மேலிட உத்தரவினை அவரால் மீற முடியவில்லை

இது அவமானம், சண்டைக்கென்று வந்துவிட்டு காசு கொடுத்தவுடன் திரும்ப சொன்னால் எப்படி என அவன் முணுமுணுத்தாலும் கேட்பார் யாருமில்லை

கட்சி தொண்டர்கள் மோதுவார்கள் ஆனால் தலமை கூட்டணி வைக்கும் அல்லவா? அப்பொழுது தொண்டன் துடிப்பான் அல்லவா? கிளைவின் மனநிலை அப்படி இருந்தது

ஆனால் அவன் மனதில் நவாபினை ஒரு நாள் டூப்ளேயினை அடித்தது போல் அடிக்கவேண்டும் என்ற வெறி இருந்தது

இதனிடையே ஐரோப்பாவில் மறுபடியும் பிரெஞ்ச்காரரும் பிரிட்டானியரும் மோத சென்னை கோட்டை தாக்கபடும் அபாயம் இருந்ததால் கிளைவ் சென்னைக்கு திருப்பி அனுப்பபட்டார்

கிளைவிற்கு இக்காலம் வரை சண்டை தெரியும், வியூகம் தெரியும், தைரியமாக அடிக்க தெரியும்

இந்த போர்களை எல்லாம் அவன் விளையாட்டாகவே நடத்தி வந்தான், பலமுறை சாக முயன்றவன் என்பதால் சாவினை கண்டு அவன் அஞ்சவில்லை

ஆனால் இந்திய யதார்த்தமுறை அவனுக்கு பல விஷயங்களை கற்று கொடுத்தன, குறிப்பாக இந்திய மனநிலை அவனுக்கு வினோதமாக பட்டது, குழப்பியது

அவன் இங்கிலாந்து மனநிலையில் வளர்ந்தவன், அங்கு அப்பொழுது பொய் சொல்லுதல், வாக்கு கொடுக்கு முன் யோசித்தல், கொடுத்த வாக்கை காப்பாற்றுதல், பொய் சாட்சி சொல்லுதல் எல்லாம் கவுரவ பிரச்சினைகள், சுருக்கமாக சொன்னால் பணத்திற்காக மனசாட்சியினை விற்பது அவர்களுக்கு அன்று அருவருப்பானது

அவை எல்லாம் அங்கு மிக மிக இழிவானவையாக இருந்தன‌

ஆனால் இந்திய யதார்த்தமோ அப்படியே தலைகீழாக இருந்தது

இங்கு பொய் சொன்னார்கள், பொய்சாட்சி சொன்னார்கள், பணத்திற்காக ராணுவ சிப்பாய்களகளே விலை போனார்கள், நவாபின் அருகில் இருப்பவரை கூட பணத்த்தால் வளைக்க முடிந்தது

அதிகாரத்திற்கும் பணத்திற்கும் விலைபோக கூடிய கூட்டமும் மக்களும் இங்கு இருந்தார்கள், தேசதுரோகம் அவர்களுக்கு தவறாய் படவே இல்லை, அதன் பெயர் சாமார்த்தியம் என சொல்லிகொண்டார்கள்

இந்த போக்கு கிளைவிற்கு பெரும் குழப்பத்தை கொடுத்தாலும் இறுதியில் தெளிந்தான்

இந்தியாவினை ஆள, இந்த பலகீனங்களை பயன்படுத்தினால் தவறே அல்ல. நாம் என்ன இயேசுநாதாரா இல்லை அவரின் சீடரா? இவர்களை நல்வழிபடுத்த?

நாம் வியாபாரி, வந்த இடத்தில் சண்டை என்றாலும் நமக்கு லாபமே முக்கியம். இந்த மக்களை திருத்தமுடியாது மாறாக நமக்கு ஏற்றவாறு பயன்படுத்தினால் கம்பெனிக்கு நல்லது

வீரனாக இருந்த கிளைவ் ராஜதந்திரியாக மெல்ல மாறினான்

இந்நாட்டை ஆள வீரம் மட்டும் போதாது, இந்நாட்டு கலாச்சாரமான லஞ்சம் இன்னபிறவிஷயங்களில் மூழ்கினால் தவறில்லை என அவனின் உள்மனம் சொல்லிற்று

வீணாக யுத்தம் நடத்தி உயிர்களை கொல்வதெல்லாம் விட எளிதாக லஞ்சம் கொடுத்து சாதிக்கலாம் என்ற திட்டங்கள் எல்லாம் மனதில் ஓடின‌

இப்படியான நிலையில் வங்கத்தில் அவன் அடிக்கடி சுற்றியபொழுது ஒரு வியாபாரி கிளைவ் முன்னால் நின்றான்

அவன் சாதாரண வியாபாரி அல்ல, இக்கால அம்பானி போல அன்று அங்கு மிகபெரும் சக்தி, நவாபிடம் நேருக்கு நேர் பேசும் சர்வ சக்தி படைத்தவன்

ஜெயா அரசில் வைகுண்டராஜன் போல, மோடி அரசின் அம்பானி போல மிக வலுவான வியாபாரி

அவன் பெயர் ஓர்மிசென்ட்

வில்லியம் கோட்டையினை நவாப் படைகள் தாக்கியபொழுது இவரின் வியாபாரமும் நஷ்டமடைந்தது, இப்பொழுது சமாதானம் ஆகி வெள்ளையர் வந்துவிட்டதால் அவர்கள் பக்கம் அனுகூலம் ஏதும் கிடைக்குமா என பார்க்க வந்திருந்தார்

ஓர்மிசென்டை அனுப்பிவிட்டு அவரை பற்றி விசாரித்தான் கிளைவ்

அய்யா அவர் எல்லா இடங்களிலும் இருப்பார்,நவாப்பிடம் இருப்பார், அந்த பக்கம் சந்திரநாகூரில் பிரெஞ்ச்காரரிடம் இருப்பார், நம்மிடமும் இருப்பார்

யாரிடம் சேர்ந்தால் அதிக லாபமோ அவர்களிடம் சேர்ந்து கொள்வார், சந்தர்ப்பவாதி, சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் சாமார்த்திய சாலி

கிளைவிற்கு கோபம் வந்தது, அவன் வியாபாரம் பேசவேண்டுமென்றால் கம்பெனியுடன் பேசலாம், யுத்தம் வேண்டுமென்றால் என்னிடம் பேசலாம்

ஆனால் என்னை பயன்படுத்திகொள்ள எண்ணுகின்றானா? இதென்ன கீழ்தரமான புத்தி. சரி அவன் வழியிலே அவனை அணுகுவோம் என மிக கவனமாக அவனை கையாள ஆரம்பித்தான் கிளைவ்

மாவீரன் கிளைவினை தந்திரமாக கையாள எண்ணி அவனை மாபெரும் தந்திரசாலி ஆக்கியதே இந்த ஓர்மிசென்ட் என்பவர்தான்

அதாவது நவாப் சிராஜ் உட் டவ்ளா என்பவர் தற்காலிகமாக பின்வாங்கினாலும் அயோத்தி சுல்தான், டெல்லி சுல்தானுடன் சேர்ந்து வில்லியம் கோட்டையினை நாசமாக்கி வெள்ளையரை அடியோடு சாய்க்கும் ஆபத்து இருந்தது

அதற்கான அறிகுறிகளும் தென்பட்டன‌

ஆனால் ஒர்ச்சிமின்டோ அஞ்சினான், இது தன் வியாபாரத்தை பெரிதும் பாதிக்கும் என அஞ்சினான்

அடிக்கடி நவாபினை பார்க்க செல்லும்பொழுது அவரின் ஒருமாதிரி போக்கும் குணமும் அவனை எரிச்சலடைய செய்தன‌

வங்கத்தில் இந்துக்கள், இஸ்லாமியர், வணிகர் என பலதரப்பும் நவாபின் மேல் வெறுப்பில் இருந்தன‌

இந்த இடத்தில் ஓர்மிசென்டுக்கு ஒரு ஐடியா உதித்தது, இந்த நவாபிற்கு பதிலாக பொம்மையாக ஒருவரை வைத்தால் என்ன?

கொஞ்சம் அதை பல்ஸ் பார்த்தவனுக்கு ஆச்சரியம் மிகுந்த பதில் கிடைத்தது

சிராஜ் உட்டவ்ளாவினை வீழ்த்த பலர் மனதார விரும்பியிருந்தனர், அவர்கள் யாரெல்லாம் என்றால் நவாபின் தளபதி மீர் ஜாபர், மந்திரி ராய்டுல்லப், பிரபல வியாபாரி ஜெகத்ஷேட் என சிலர் சிக்கினர்

பொல்லாட்சி வழங்கிய சிராஜ் உட்டல்ளா மீது அவனின் நெருங்கிய வட்டமே வெறுப்பில் இருந்தது, நவாபோ அதை அறியாமல் இருந்தான்

இந்த ஓர்ச்சிமென்ட், மீர் ஜாபர், ராய்டுல்லப், ஜெகத்ஷேட் அடங்கிய குழு அடிக்கடி விவாதித்தது

இவர்கள் இன்னொருவனை துணைக்கு அழைக்க முடிவு செய்தனர், ஆம் கிளைவினை இழுக்க முடிவு செய்தனர்

கிளைவிற்கோ இதுவரை வீர ஆட்டம் தெரியுமே தவிர, துரோகம் தெரியாது, ஆனால் இந்த மாதிரி கூட்டம் இருக்கும் பொழுது ஏன் போர்?

இப்பொழுது கிளைவினை பயன்படுத்தி நவாபினை வீழ்த்த வியாபாரி ஓர்ச்சிமென்ட் திட்டமிட்டான்

கிளைவோ இந்த கும்பலை பயன்படுத்தி வங்கத்து ஆட்சியினை பிடிக்க திட்டமிட்டான்

இரு தந்திரசாலிகளும் தங்கள் மனதிட்டம் வெளிதெரியாமல் ஒருவரை ஒருவர் பாவித்து கொள்ளும் திட்டத்தோடு பழகிகொண்டிருந்தனர்

இந்த கும்பல் விவாதிக்கும்பொழுதே கிளைவின் உள்ளிருந்த எச்சரிக்கை உணர்வு அலாரம் அடித்தது

நடப்பது நவாபிற்கு எதிரான சதி, ரகசியமாகத்தான் நடக்கின்றது ஆனால் தெரிந்துவிட்டால் மொத்தமும் காலி, கம்பெனியில் தன் இடமும் காலி

எப்படி நவாபிற்கு தெரிய வரும்? இந்த ஒர்ச்சிமென்ட் சொல்ல வாய்ப்பு இருக்கின்றது, நம்மிடம் அரசனை கவிழ்ப்போம் என வருகின்றவன், ஒருவேளை அரசனின் தூதனாக இருந்துவிட்டால், இல்லாவிட்டாலும் ஒர்ச்மின்ட் நல்லவன் அல்ல, அதனால் நாம் முந்திகொள்வது அவசியம்

இதனால் நவாபிற்கு ஒரு கடிதம் எழுதினான்,” அய்யா, அய்யன்மீர் நாங்கள் ஒரு நாளும் உங்களை எதிர்ப்பவர்கள் அல்ல, எங்கள் கோட்டைக்காகவே போரிட்டோம்

மற்றபடி உங்கள் நிம்மதியான ஆட்சியினை ஆதரிப்போம், அய்யா வாழ்ந்தால்தான் நாங்கள் வாழமுடியும், உங்கள் நீண்ட ஆயுளை விரும்பும் கிளைவ் மற்றும் கிழக்கிந்திய கம்பெனி”

கடிதம் கண்டவுடன் சிராஜ் உத்தவ்லா மகிழ்ந்தான், தன்னிடம் பிரிட்டானியர் சரணடைந்ததாக எண்ணி கொண்டு கவலை மறந்தான்

கிளைவோ மற்றுமோர் ரகசிய கடித்தத்தை இன்னொரு பெயரில் மீர் ஜாபருக்கு அனுப்பினான், எழுதியது கிளைவ் ஆனால் ரகசிய தூது என்பதால் செய்தி மட்டும் இருந்தது

நவாபை வீழ்த்தி உம்மை நவாப் ஆக்க கிழக்க்கிந்திய கம்பெனி உதவும் முடிவில் இருக்கின்றது, கம்பெனிக்கு விசுவாசமாக இருப்பீரா?

மீர் ஜாபர் துள்ளி எழுந்தான்

மிக அட்டகாசமாக காய்களை நகர்த்தினான் கிளைவ், எல்லாம் தனக்கு சாதகமாக இருப்பதாக நம்பினான் ஒர்ச்சிமின்ட்

மிக ராஜதந்திரமாக சிராஜ் உத்தவ்ல்லா, ஒர்ச்சிமென்ட்டை எல்லாம் நம்ப வைத்து, தளபதி மீர் ஜாபருக்கு கனவு மூட்டிகொண்டிருந்தான் கிளைவ்

இப்போது கிளைவின் துருப்பு சீட்டு மீர் ஜாபர், காரணம் அவனே நவாபின் தளபதி

(தொடரும்..)

Image may contain: one or more people and people standing

ரஜினியின் புதிய படத்தில்

ரஜினியின் புதிய படத்தில் வைரமுத்துவிற்கு வாய்ப்பு இல்லை : செய்தி

ரஜினியின் சில படங்களில் வைரமுத்து விடுபட்டாலும் பின்பு சேர்ந்து கொள்வார், கடந்த இரு படங்களிலும் வைரமுத்து இல்லை

ரஞ்சித் படத்தில் வைரமுத்து விரட்டபட்டது ஒன்றும் ஆச்சரியமல்ல, ரஞ்சித் தலித் வெறியர் ஆனால் இளையராஜாவினை கூட அழைக்கமாட்டார் என்பது வேறு விஷயம்

இப்பொழுது இந்த பேட்ட படத்திலும் வைரமுத்து இல்லையாம், கலாந்தி மாறன் படம் என்றாலும், வைரமுத்து இல்லாமல் போனதற்கு காரணம் ஆண்டாள் விவகாரம் என்கின்றன சில செய்திகள்

கலைஞர் இருந்தால் இப்பொழுது வைரமுத்து சும்மா இருப்பாரா?

“பிடர் கொண்ட சிம்மமே பேசு,
உன் குடும்ப நிறுவணத்தில் என் கவி வரிகளுக்குக்கு இல்லையாம் காசு, அவர்களை பிடித்து ஏசு” என அட்டகாச கவிதை வடித்திருப்பார்


 

கட்சி தொடங்குவார் என எதிர்பார்த்தால் ரஜினி எந்திரன் 2.0ல் ஒரு மாதிரி வந்து நிற்கின்றார், தனுஷின் மாப்பிள்ளை படத்தில் விவேக்கினை பார்த்தது போல் சில இடங்களில் இருக்கின்றது

ஆனாலும் டிரைலர் முடிவில் குக்கூ என மகிழ்ச்சியாக கூவி சிரிக்கும்பொழுது மனிதர் மனம் விட்டு சிரிப்பது தெரிகின்றது

எங்கிருந்தோ தப்பி சென்ற நிம்மதி தெரிகின்றது

அந்த குக்கூ யாருக்கு? பாஜகவில் தன்னை இழுத்து போட முயன்ற அமித்ஷா கும்பலுக்க்காக இருக்கலாம் என்கிறது ஒரு செய்தி

இல்லை, குக்கூ என்பது குயிலின் குரல், குயிலின் ஸ்பெஷாலிட்டி அது கூடுகட்டாது மாறாக காகத்தின் கூட்டை பயன்படுத்தும், அதனால் சொந்த கட்சி தொடங்காமல் இன்னொரு கட்சியினை அமுக்கும் திட்டத்தில் ரஜினி இருக்கலாம் என்கின்றது இன்னொரு செய்தி

இந்த விஷயம் கசிந்தால் அமைச்சர் ஜெயக்குமார் இனி காகமாக கத்தபோவது உறுதி

Image may contain: 1 person, sunglasses
—————————————————————————————————————————————-

பெட்ரோல் விலை உயர்வினை இதை விட வலிமையாக சொல்ல முடியாது, முடியவே முடியாது

காரில் மிக சோகமாக அமர்ந்து பெட்ரோல் விலையினை எண்ணி கண்ணீர் விடுகின்றார் தலைவி, இந்த படம் இந்தியா எங்கும் பெரும் சலசலப்பினை ஏற்படுத்திவிட்டது

டைம் பத்திரிகை கூட இந்த படத்தை பிரசுரித்து இந்தியாவின் பெட்ரோல் கொள்ளையினை உலகெல்லாம் கொண்டு செல்லலாமா என யோசிக்கின்றது

காங்கிரஸின் ஆயிரம் போராட்டம் செய்யாத தாக்கத்தை தலைவியின் ஒரு புகைபடம் காட்டிவிட்டது

Image may contain: 1 person, selfie and closeup
—————————————————————————————————————————————–

மிக மிக திறமையானவர்கள், ரசிகர்களை கட்டி போட்ட கலைஞர்களில் பெரும்பான்மையானோர் நெடுநாள் இருப்பதில்லை

திறமையினையும் ரசிக கூட்டத்தையும் அபூர்வ வரங்களையும் கொடுத்த இறைவன் சிலருக்கு ஆயுளை கொடுப்பதில்லை

மிக சிறு வயதிலே பாடவந்து 37 வயதிலே மரித்தும் போன சொர்னலாதாவும் அதில் ஒருவர்

மிக சிறந்த பாடகி, அதனைவிட சிறந்தது அந்த வீணை போன்ற குரல்

அந்த குரல் எவ்வளவு நாள்தான் மானிட உலகிலே பாடுவது? வானுலகிலும் பாடினால் என்ன? என விரும்பிய கடவுள் அழைத்துவிட்டான்

ஆயினும் அந்த குரலும் அவர் விட்டு சென்ற பாடல்களும் பூலோகத்தை விட்டு நீங்குவதே இல்லை

மனதை உருக்கிய அந்த குரலுக்கு சொந்தகாரரான அற்புத பாடகி ஸ்வர்ன லதாவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

ஆண்டுகள் ஓடினாலும் அக்குரல் காற்றில் ஒலித்துகொண்டே இருக்கும்

Image may contain: 1 person, smiling, closeup
—————————————————————————————————————————————–

ஆக ஆதித்யா டிவிக்கு போட்டியாக காமெடி சானல் ரெடி

எப்படியோ நியூஸ் ஜே என வைத்தார்கள், பன்னீர் பழனிச்சாமியின குறிக்கும் வகையில் பி நியூஸ் என்றோ இல்லை பிபி நியூஸ் என வைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

பொருத்தமாகத்தான் இருந்திருக்கும் போல..

Image may contain: 2 people, people smiling

இந்தியாவில் சில நல்ல அரசியல்வாதிகள் மறைக்கபட்டனர்

இந்தியாவில் சில நல்ல அரசியல்வாதிகள் பல அரசியல் காரணங்களுக்காக மறைக்கபட்டனர் அல்லது மறக்கபட்டனர், வெகு சிலருக்கு சூரியன் வெளிச்சத்தில் விண்மீன்கள் தெரியாது என்பது போல விதி இருந்தது, ஆலமரத்தின் அடியில் புற்கள் முளைக்கமுடியாது என்பது போல அவர்கள் வாழ்வு இருந்தது

அவர்களின் உயர்ந்த குணமும், நேர்மையும் வெளிதெரியவில்லை, இவ்வளவிற்கும் பல நல்ல விஷயங்களை நாட்டுக்கு செய்தவர்கள் அவர்கள், அவர்களில் ஒருவர்தான் பெரோஸ் காந்தே அல்லது பெரோஸ் காந்தி

இந்திராவின் கணவரும், இன்றைய ராகுலில் தாத்தாவுமான அந்த பெரோஸ் காந்தி, காங்கிரஸ்காரர்களால் மட்டுமல்ல மொத்த இந்தியாவுமே மறந்துவிட்ட நபர் அவர், அப்படி ஒருவர் காங்கிரஸ் அரசியலில் இருந்த அடையாளம் கூட இன்று இல்லை, சோனியாவும் மேனகாவும் கூட தங்கள் மாமனாரை தேடியது இல்லை

பெண்ணாதிக்க உலகமிது

அவரை பற்றி 3 வித கதைகள் உண்டு. முதலாவது அவர் இஸ்லாமியர் எனவும் அவரை காதலித்து திருமணம் செய்த இந்திரா தன் பெயரை மைமுனா பேகம் என மாற்றியதாகவும், ஜின்னாவிற்கு எதிர் அரசியல் செய்த நேரு இதனால் அஞ்சி அவரை பெரோஸ் கானில் இருந்து பெரோஸ் காந்தியாக மாற்றியதாக ஒரு செய்தி

இரண்டாவது பெரோஸ்கானை காந்தி தத்தெடுத்து தன் மகனாக ஏற்று பெரோஸ் காந்தியாக மாற்றி நேரு மகளுக்கு திருமணம் செய்துவித்ததாக ஒரு செய்தி ஆனால் காந்தி தன் வாழ்வில் எதையும் மறைக்காதவர், இப்படிபட்ட சம்பவம் நடந்ததாக அவர் சொல்லவே இல்லை

மூன்றாவது விஷயம் பெரோஸின் இயற்பெயர் பெரோஸ் ஜெகங்கீர் காந்தெ என்றும் அவர் பார்சி என்றும், பெரோஸ் காந்தே எனும் பெயர் பெரோஸ் காந்தியாக மாறிற்று என்பதும் இன்னொரு செய்தி

அவர் பார்சி என்பதே பலரும் ஒப்புகொள்ளும் விஷயம், காரணம் அன்று அந்த பீர் சப்ளை வியாபாரம் பார்சிகள் கையிலே இருந்தது, பெரோஸ் நேருவின் அலகாபாத் மாளிகைக்கு ஒயின் சப்ளை செய்த வியாபார குடும்பத்துக்காரர்

அடிப்படையில் பெரோஸ் பத்திரிகைக்காரர், நல்ல பத்திரிகைக்காரர். ஒரு பத்திரிகைகாரனுக்குரிய நேர்மை துணிவு எல்லாம் அவரிடம் இருந்தது

இந்திராவும் பெரோஸும் நன்றாகத்தான் லக்னோவில் வாழ்ந்தார்கள், இரு குழந்தைகள் பிறந்த பின்பே தந்தையின் ஆனந்த பவனுக்கு இந்திரா குடிபெயர்ந்தார் அதன் பின்பே நெருடல் வந்தது

நெருடலும் குடும்ப உறவில் வரவில்லை, நேருவின் சில காரியங்களை பரோஸ் வன்மையாக கண்டித்தார் அதிலிருந்தே மோதல் தொடங்கியது

ஆம், பெரோஸ் நாடளுமன்ற உறுப்பினர், ஆனால் எதிர்கட்சி இல்லா காங்கிரஸின் அரசின் நேரு எதிரியே இன்றி செங்கோல் செலுத்தினார். இந்த பலத்தில் பல காங்கிரசார் ஊழலில் ஈடுபட்டனர்

பெரோஸ் அதை துணிச்சலாக அம்பலபடுத்தினார், பல அரசியல்வாதிகள் பெரோஸால் சிறை சென்றனர்

டிடி கிருஷ்ணமாச்சாரி எனும் நிதி அமைச்சர் பெரோஸ் காந்தி வெளிபடுத்திய விஷயங்களால் பதவி இழந்தார். காப்பீட்டு துறையின் ஊழலை பெரோஸ் அம்பலபடுத்த அது அரசுடமையனாது

எல்.ஐ.சி எனப்படும் இந்தியாவின் மிகபெரும் நிதிசுரங்கம் அரசுடமை ஆக்கபட பெரோஸ் காந்தியே காரணம்

ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம், சுதந்திர இந்தியாவின் முதல் ஊழல் ஒழிப்பு போராளி பெரோஸ் காந்தியே

பெரோஸின் இந்த செயல்பாடு நேருவிற்கு கடும் எரிச்சலை கொடுத்தது, கரைபடா கரமாக நேரு இருந்தாலும் சக காங்கிரசாரின் ஊழலை அவர் கண்டும் காணாமல் இருந்தார், பெரோசையும் இருக்க சொன்னார்

ஆனால் பத்திரிகா தர்மத்தை காத்த பெரோஸ் மறுத்தார், இந்திரா தந்தையின் மேலுள்ள பாசத்தில் பெரோஸை எதிர்க்க பிளவு வலுத்தது

ஆனாலும் அஞ்சவில்லை பெரோஸ், 1959ல் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட கேரள கம்யூனிஸ்ட் அரசை நேரு கலைத்தபொழுது இது பாசிசம் என முதலில் சொன்னவர் பெரோஸ்

இந்திரா ஒரு சர்வாதியாக உருவெடுப்பார், இந்தியாவின் தாய் என தன்னை நினைத்து கொள்கின்றார், இந்த பரந்துபட்ட நாட்டில் எல்லோரையும் அரவணைத்து செல்ல அவருக்கு துளியும் விருப்பம் இல்லை என முதலில் சொன்னவர் பெரோஸ்

பின்னாளில் இந்திரா ஜனநாயகத்தை காலில் போட்டு நசுக்குவார் என முதலில் சொன்னவர் பெரோஸ்

காங்கிரசின் சர்வாதிகார போக்கு ஒரு கட்டத்தில் காங்கிரசையே நாசமாக்கும் என முதலில் சொன்னது அவர்தான், இன்று ராகுல் தன் தாத்தாவின் அந்த தீர்க்கதரிசனத்தை நினைக்காமல் இருக்க முடியாது

அதனால்தான் ராகுல் பல இடங்களில் சாமான்யனாக இறங்குகின்றார்.

ப்ரோஸ் காந்தியின் ஒரு மாபெரும் காரியத்திற்காக இத்தேசம் அவருக்கு நன்றிகடன் பட்டிருக்கின்றது

அதாவது அந்நாளில் பாராளுமன்ற நடவடிக்கைகள் வெளிதெரியாது, யாராவது வெளிவந்து பத்திரிகைகளில் சொன்னால், அது சர்ச்சையானால் கூட சட்டம் பாயும்

நாடாளுமன்றம் என்பது ரகசியமாகவே நடைபெற்றது, பத்திரிகையாளருக்கு எல்லாம் ஒன்றும் சொல்லபடாது, நாடாளுமன்ற விவகாரங்களில் பத்திரிகை சுதந்திரம் என்பது அவ்வளவு இல்லை

முதன் முதலில் இதனை எதிர்த்தவர் பெரோஸ், அதற்காக ஒரு மசோதாவே கொண்டுவந்தார், பின்னாளில் அதுதான் “ப்ரோஸ் காந்தி பத்திரிகை சட்டம்” என அறியபட்ட சட்டம்

ஆம் இன்று காணும் நாடாளுமன்ற நேரலை போன்ற விஷயங்களுக்கு மூலமே அந்த சட்டம்தான்

பெரோஸின் அந்த நடவடிக்கை மேல் இந்திராவிற்கு எவ்வளவு வெறுப்பு இருந்தது என்றால், அதை குப்பையில் போட்டுவிட்டுத்தான் அவசர நிலையினை பிரகடனபடுத்தினார்

மீண்டும் பெரோஸ்கானின் சட்டத்தை கொண்டுவந்தது பின்னாளைய ஜனதா அரசு

ஆம், இப்படித்தான் இந்திராவும் பெரோஸும் அரசியல் மோதி இருக்கின்றார்கள்.

ஆழ கவனித்தால் ப்ரோஸ் நிச்சயம் மாமனிதர். அவர் கொஞ்சம் அசைந்து கொடுத்திருந்தால் இன்றைய ராப்ர்ட் வதேரா போல ஹாயாக அமர்ந்து பிசினஸ் செய்திருக்கலாம்

ஒயின் பிசினஸை இந்தியா முழுக்க குத்தகைக்கு எடுத்து உலக பணக்காரன் ஆகியிருக்கலாம்

ஆனால் அந்த மனிதன் பத்திரிகையாளராய் நின்றான், அதற்கு தன் மனைவி மாமனார் எல்லோரையும் பகைத்தான்

ஊழல் , எதேச்சதிரிகாரம், சர்வாதிகாரம் இவற்றை எதிர்த்து தன் இரு குழந்தைகளையும் பிரிந்து தனியாக நின்று போராடினான்

ஓரளவிற்கு வெற்றியும் பெற்றான்

நிச்சயம் காங்கிரசில் அந்த மனிதனுக்கு தனி இடம் உண்டு, ஆனால் இந்திராவிற்கு அஞ்சி அவர் ஒதுக்கபட்டார், அப்படியே மறக்கவும் பட்டார்

பெரோஸை வெறுத்த இந்திரா அவரால் பெற்ற காந்தி எனும் பெயரை மட்டும் வெறுக்கவில்லை தன்னுடனே வைத்து கொண்டார்

அது ராஜிவ், சஞ்சய், சோனியா, மேனகா என தொடர்ந்து இன்று ராகுல், வருண் வரை வந்தாயிற்று

நிச்சயம் மகாத்மா காந்திக்கும் நேருகுடும்பதிற்கும் மண உறவு இல்லை

காந்தி எனும் பெயர் பெரோஸ் கொடுத்தது, இதை எல்லாம் இன்று நினைத்து பார்ப்பார் யாருமில்லை

சுதந்திர இந்தியாவின் முதல் ஊழல் ஒழிப்பு , பத்திரிகை சுதந்திரம், கருத்துரிமை சுதந்திரம் என முதலில் குரல் கொடுத்தவர் பெரோஸ் கான்

அதை தன் சொந்த மாமனாருக்கும் மனைவிக்கும் எதிராக எழுப்பினார் என்பதுதான் கவனிக்கதக்கது

(முதலில் பெரோஸை பழித்து பிரிந்த இந்திரா பின்னாளில் இந்திரா சர்வாதிகாரத்தை விட்டு இறங்கும்பொழுது பெரோஸ் இல்லை என்றாலும் நிச்சயம் அவரிடம் மனதால் மன்னிப்பு கோரியிருப்பார்..)

அவர் எழுப்பிய அந்த குரல்தான் பின் ஜனதா, திமுக என நாடெல்லாம் காங்கிரஸ் எதிர்ப்பினை கொடுத்தது, பாஜகவாக இன்று வளர்ந்து நிற்கின்றது

பெரோஸின் வழியில்தான் மேனகாவும் வருண் காந்தியும் பாஜகவில் நிற்கின்றனர்

பெரோஸின் புதல்வர்களில் அவரின் குணம் ராஜிவிற்கும், இந்திராவின் அடாவடி குணம் சஞ்சய்க்கும் வந்தது

சஞ்சய் காந்தி ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல, ராஜிவின் பெருந்தன்மையும் சாதாரணம் அல்ல‌

ராஜிவினை போலவே பெரோஸ் சாகும் பொழுதும் அவருக்கு வயது 47

ஆம் மிக குறைந்த வயதில் இறந்தார் பெரோஸ், அவரை தொடர்ந்து அந்த துரதிருஷ்டம் அந்த குடும்பத்தையும் பிடித்தது

அந்த மாமனிதனுக்கு இன்று பிறந்த நாள், சர்வ நிச்சயமாக காங்கிரசார் இதனை காங்கிரசார் கொண்டாட வேண்டும் ஆனால் அவர்களுக்கோ அப்படி ஒரு மனிதன் இருந்ததே தெரியாது

இந்தியாவின் நியாயமான பத்திரிகையாளனுக்கு, தன் கடமையினை சரிவர செய்த, தன் சொந்த குடும்பம் இடைஞ்சலான பொழுதும் குடும்பத்தை தியாகம் செய்து நாட்டின் பத்திரிகை சுதந்திரத்தை நிலைநாட்டிய அந்த தியாக தலைவனுக்கு இன்று பிறந்தநாள்

இந்நாள் இந்திய பத்திரிகை சுதந்திர தினமாக கொண்டாட வேண்டியதே அந்த மாமனிதனுக்கான அஞ்சலி

பத்திரிகையால் ஊழலை வெளிகொணர முடியும், நாட்டை சர்வாதிகார பிடியில் இருந்து காக்க முடியும் என செய்து காட்டியவர் பெரோஸ் காந்தி

இன்றைய இந்திய ஊடகக உலகிற்கு அவரின் கொள்கையும் அவரின் போராட்ட குணமே அவசியம் தேவை

அதிகார வர்க்கத்தை ஆட்டுவித்து கட்டுபடுத்தி அதை நாட்டுக்கு ஏற்ற வகையில் வழிநடத்த பத்திரிகை மகா அவசியம் என செய்து காட்டியவர் பெரோஸ்

இன்றைய அவசிய தேவை அதுதான்

பத்திரிகை பொறுப்பு எதுவென முதலில் சுதந்திர இந்தியாவில் காட்டியவர் அவர். அந்த பொறுப்பு எல்லா பத்திரிகைக்கும் வேண்டும்

அந்த மாமனிதனுக்கு தியாக தலைவனுக்கு, தன் குடும்பம் பிரிந்தாலும் தனி மனிதனாய் கருத்து சுதந்திரத்திற்கு போராடிய அந்த பெரோசுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது எல்லா பத்திரிகையாளரின் கடமை

நாம் முகநூலில் எழுதுபவர் ஆயினும் ஓரளவு பத்திரிகை தர்மத்தோடு எழுதுவதாக உணர்வதால் அவருக்கு எம்முடைய சிறப்பான அஞ்சலியினையும் சமர்பிப்போம்

Image may contain: 1 person, text
Image may contain: 2 people, people standing

ராணுவ போர் பயிற்சி நடத்துகின்றார் புட்டீன்

ஊரே கலவரம் ஏற்படும் என அச்சப்படும் அசாதாரண நிலையில் ஒரு பழைய தாதா தன் கத்தியினை தீட்டிகொண்டும், கடப்பாரையினை சரிபார்த்துகொண்டும் இருந்தால் எப்படி இருக்கும்?

அப்படி மிக பதற்றத்தில் இருக்கின்றது மேற்குலகம் , காரணம் மிஸ்டர் புட்டீன்

ஆம், டிரம்ப் ஊரெல்லாம் வம்பிழுக்க , சீனாவுடன் தொடர்ந்து மோத, ஈரான் இன்னும் வலிந்து நிற்க‌ எங்கு எது எப்பொழுது நடக்குமோ என்ற பதற்றத்தில் உலகம் இருக்கும்பொழுது ராணுவ போர் பயிற்சி நடத்துகின்றார் புட்டீன்

அது சாதாரண பயிற்சி அல்ல, உலகில் இதுவரை இல்லா அளவு மிக பிரமாண்டமான போர் ஒத்திகை

கிட்டதட்ட 3 லட்சம் வீரர்கள், 20 கப்பல்கள், ஏகபட்ட நீர்மூழ்கிகள், ஆயிரம் விமானங்கள், செயற்கை கோள் வழிகாட்டும் ஏவுகனைகள் என மிக பிரமாண்டமாய் நிற்கின்றது ரஷ்ய படைகள்

இதை புட்டீன் பார்வையிடுவது சரி, ஆனால் சீன அதிபரும் வந்து பார்க்க போகின்றாராம், முடிவில் சீன படைகளும் பயிற்சி பெறுமாம்

இது வழக்கமான போர் பயிற்சி, அமெரிக்க தென் கொரியா எல்லாம் அடிக்கடி செய்வது போன்றது என சொன்னாலும் தன் முழு படையினையும் ரஷ்யா களத்தில் இறக்கி இருப்பது சாதாரணம் அல்ல‌

நாங்கள் எதற்கும் தயார் என்கின்றார் புட்டீன் என்பதுதான் அதன் பொருள், ரஷ்யா மேல் கூடுதல் தடை என அமெரிக்கா மிரட்டும் வேளை, சிரியாவில் ஐ.எஸ் இயக்கத்தின் கோட்டையான இத்லீப் மாநிலத்தை ரஷ்ய படைகள் கைபற்ற சண்டையிடும் இந்நேரம் ரஷ்யாவின் இந்த மாபெரும் போர் ஒத்திகை கடும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது

புட்டீனோ கொஞ்சமும் அஞ்சாமல் ரஷ்ய போர் ஒத்திகையினை பார்க்க கிளம்புகின்றார்

1983ல் சோவியத் ரஷ்யா மிகபெரும் ஒத்திகை நடத்தியது உலக ராணுவ பயிற்சியில் அதுதான் பெரியது

இப்பொழுது அதையும் தாண்டி மிகபெரும் பயிற்சியினை நடத்தி உலகை மிரட்டுகின்றார் புட்டீன்

Image may contain: 2 people, outdoor
——————————————————————————————————————————

 

உலகில் ஒரு பெரும் ரவுடி காமெடியனாகி போன விஷயம் இந்த வடகொரிய தக்காளி விஷயத்தில் நடந்திருக்கின்றது

சி.ஐ.ஏ தலைவர் மிரட்டிய மிரட்டலில் ஆளே மாறிபோனார், “என் பெயர் பாம்பியோ, எனக்கு இன்னொரு பேர் இருக்கு” என அவர் மிரட்டிய மிரட்டலில் “அண்ணேன்டா…” என குனிந்து கிடக்கின்றார் வட கொரிய கிம்

கடந்த முறை டிரம்பினை சிங்கப்பூரில் பார்த்த பின் , நேற்று அண்ணே இன்னொருமுறை உங்களை பார்க்கணும்னே.. வாங்கண்ணே” என கடிதம் எழுதிவிட்டார் கிம்

“பார்த்தீர்களா என் ராஜதந்திரத்தை, அந்த ரவுடி கிம்மையே கெஞ்ச வைத்துவிட்டான் இந்த டிரம்ப்..” என அந்த கடிதத்தோடு கம்பீரமாக வெள்ளை மாளிகையினை சுற்றி வருகின்றார் டிரம்ப்