ராணுவ போர் பயிற்சி நடத்துகின்றார் புட்டீன்

ஊரே கலவரம் ஏற்படும் என அச்சப்படும் அசாதாரண நிலையில் ஒரு பழைய தாதா தன் கத்தியினை தீட்டிகொண்டும், கடப்பாரையினை சரிபார்த்துகொண்டும் இருந்தால் எப்படி இருக்கும்?

அப்படி மிக பதற்றத்தில் இருக்கின்றது மேற்குலகம் , காரணம் மிஸ்டர் புட்டீன்

ஆம், டிரம்ப் ஊரெல்லாம் வம்பிழுக்க , சீனாவுடன் தொடர்ந்து மோத, ஈரான் இன்னும் வலிந்து நிற்க‌ எங்கு எது எப்பொழுது நடக்குமோ என்ற பதற்றத்தில் உலகம் இருக்கும்பொழுது ராணுவ போர் பயிற்சி நடத்துகின்றார் புட்டீன்

அது சாதாரண பயிற்சி அல்ல, உலகில் இதுவரை இல்லா அளவு மிக பிரமாண்டமான போர் ஒத்திகை

கிட்டதட்ட 3 லட்சம் வீரர்கள், 20 கப்பல்கள், ஏகபட்ட நீர்மூழ்கிகள், ஆயிரம் விமானங்கள், செயற்கை கோள் வழிகாட்டும் ஏவுகனைகள் என மிக பிரமாண்டமாய் நிற்கின்றது ரஷ்ய படைகள்

இதை புட்டீன் பார்வையிடுவது சரி, ஆனால் சீன அதிபரும் வந்து பார்க்க போகின்றாராம், முடிவில் சீன படைகளும் பயிற்சி பெறுமாம்

இது வழக்கமான போர் பயிற்சி, அமெரிக்க தென் கொரியா எல்லாம் அடிக்கடி செய்வது போன்றது என சொன்னாலும் தன் முழு படையினையும் ரஷ்யா களத்தில் இறக்கி இருப்பது சாதாரணம் அல்ல‌

நாங்கள் எதற்கும் தயார் என்கின்றார் புட்டீன் என்பதுதான் அதன் பொருள், ரஷ்யா மேல் கூடுதல் தடை என அமெரிக்கா மிரட்டும் வேளை, சிரியாவில் ஐ.எஸ் இயக்கத்தின் கோட்டையான இத்லீப் மாநிலத்தை ரஷ்ய படைகள் கைபற்ற சண்டையிடும் இந்நேரம் ரஷ்யாவின் இந்த மாபெரும் போர் ஒத்திகை கடும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது

புட்டீனோ கொஞ்சமும் அஞ்சாமல் ரஷ்ய போர் ஒத்திகையினை பார்க்க கிளம்புகின்றார்

1983ல் சோவியத் ரஷ்யா மிகபெரும் ஒத்திகை நடத்தியது உலக ராணுவ பயிற்சியில் அதுதான் பெரியது

இப்பொழுது அதையும் தாண்டி மிகபெரும் பயிற்சியினை நடத்தி உலகை மிரட்டுகின்றார் புட்டீன்

Image may contain: 2 people, outdoor
——————————————————————————————————————————

 

உலகில் ஒரு பெரும் ரவுடி காமெடியனாகி போன விஷயம் இந்த வடகொரிய தக்காளி விஷயத்தில் நடந்திருக்கின்றது

சி.ஐ.ஏ தலைவர் மிரட்டிய மிரட்டலில் ஆளே மாறிபோனார், “என் பெயர் பாம்பியோ, எனக்கு இன்னொரு பேர் இருக்கு” என அவர் மிரட்டிய மிரட்டலில் “அண்ணேன்டா…” என குனிந்து கிடக்கின்றார் வட கொரிய கிம்

கடந்த முறை டிரம்பினை சிங்கப்பூரில் பார்த்த பின் , நேற்று அண்ணே இன்னொருமுறை உங்களை பார்க்கணும்னே.. வாங்கண்ணே” என கடிதம் எழுதிவிட்டார் கிம்

“பார்த்தீர்களா என் ராஜதந்திரத்தை, அந்த ரவுடி கிம்மையே கெஞ்ச வைத்துவிட்டான் இந்த டிரம்ப்..” என அந்த கடிதத்தோடு கம்பீரமாக வெள்ளை மாளிகையினை சுற்றி வருகின்றார் டிரம்ப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s