திமுக என்றால் மட்டும் பூதகண்ணாடி போட்டு பார்க்கும்

கலைஞரே சொன்னது போல, “சில பத்திரிகைகள் எல்லா கட்சியினையும் சாதரண‌ கண்ணாடி போட்டு பார்க்கும், திமுக என்றால் மட்டும் பூதகண்ணாடி போட்டு பார்க்கும்”

நடக்கும் காட்சிகளும் அப்படித்தான் இருக்கின்றது, ஸ்பெக்ட்ரம் என இல்லாத இலக்கத்திற்கு பொங்கிய பத்திரிகைகள் ரபேல் ஊழலில் கனத்த அமைதி

தாமரைகனி போன்ற பிரபல அடிதடி பார்ட்டிகள் இருந்த கட்சி அதிமுக, ஏன் இப்பொழுதும் சொல்லிகொள்ளும் பலர் அங்கு உண்டு , ஆட்டோவில் ஆள் அனுப்புதல், கலெக்டர் மேல் ஆசீட் ஊற்றுதல் என அவர்களின் கிரைம் ரேட் மிக பெரியது

அவ்வளவு ஏன் சசிகலா புஷ்பாவே என் கட்சி வீட்டு வேலைகாரி என்னை அறைந்தார், எனக்கு பாதுகாப்பில்லை என பாராளுமன்றத்திலே ஒப்பாரி வைத்தார், அதெல்லாம் என்ன வகை?

அதெல்லாம் விட கட்சி தலைவி சாவே மர்மம் என ஒரு குழு விசாரிக்கின்றது என்றால் அதன் நிலை எப்படி இருக்கும்?

கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் எத்தனை பேர் முகத்திலும் முதுகிலும் வாங்கினார்களோ தெரியாது, ஏன் பன்னீர் செல்வமே என்னை கையினை முறுக்கி கையெழுத்து வாங்கினார்கள் என பகிரங்கமாக சொன்னார்

ஆனால் பத்திரிகைகள் மூச் விடாது , அதிமுக மேல் ஒரு இமேஜ் வராதவாறு பார்த்து கொள்வார்கள்

பாஜக செய்யாத அட்டகாசமில்லை மசூதி இடிப்பு முதல் பிரியாணி அண்டா தூக்கி கொண்டு ஓடியது வரை ஏக பிரபலம், இப்பொழுது விநாயகர் சிலையோடு அவர்கள் செய்யும் அலப்பறை கொஞ்சமல்ல, விநாயகரை மூஞ்சூறு ஆக்கி இவர்கள்தான் பவனி வருகின்றார்கள்

அதை எல்லாம் யாரும் சொல்லமாட்டார்கள்

காடுவெட்டி குரு, திருமாவின் கையாட்களில் சிலர், ஜாண் பாண்டியன் எல்லோரும் எப்படிபட்டவர்கள் என்பது பல செய்திகளில் பார்த்தாலே புரியும்

ஆனால் அவர்களுக்கெல்லாம் அடாவடி கட்சி என்ற பட்டமில்லை

ஆனால் திமுகவின் சில்லுண்டிகள் எங்காவது சிக்கிவிட்டால் இதோ திமுகவின் யோக்கியதை என கிளம்பிவிடுவார்கள்

கலைஞர் சொன்னது மிகவும் சரி, “எல்லோருக்கும் கண்ணாடி, திமுக என்றால் மட்டும் பூதகண்ணாடி”


 

கொஞ்ச நாளாக தலைவி குஷ்புவினை காங்கிரஸ் மேடைகளில் காண முடியவில்லை

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்திலும் அவர் காங்கிரஸில் அழைக்கபட்டதாக தெரியவில்லை

கனி இருக்க காய்கவர்ந்தற்று என்பார்கள், குஷ்பு இருக்க திருநாவுக்கரசை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்வது சரி அல்ல‌

தமிழகத்தில் பாஜகவினை வளர்க்க டெல்லிக்கு எப்படி ஆசை இல்லையோ அப்படி காங்கிரசை வளர்க்கவும் டெல்லி காங்கிரசுக்கு சுத்தமாக ஆசை இல்லை

தமிழக காங்கிரஸுக்கு காலம் கொடுத்த கடைசி கருணை குஷ்பு,

அவரையும் விட்டுவிட்டால் தமிழக‌ காங்கிரஸை காப்பாற்ற கடவுளாலும் முடியாது

Image may contain: 1 person, selfie and closeup
———————————————————————————————————————————–

 

அப்பல்லோவில் சிசிடிவியினை ஏன் கழற்றினார்கள் என கேட்க மனமில்லாதவன் எல்லாம், போயஸ் கார்டனில் சிசிடிவி இல்லையா என கேட்க தெரியாதவன் அல்லது பயந்தவன் எல்லாம் சிசிடிவி திமுக என கலாய்த்துகொண்டிருக்கின்றான்

திமுகவிலும் பதில் சொல்ல யாருமில்லை

கலைஞர் பாணியில் “மருத்துவமனையில் சிசிடிவினை கழற்றி விட்டு மர்ம கொலை செய்ய திமுககாரனுக்கு தெரியாது” என ஒரே போடாக போட்டால் தீர்ந்தது விஷயம்.

பக்கிங்காம் அரண்மனையினை விட சொகுசானவை

புழல் சிறை நவீனமான கட்டபட்டது, அதன் திறப்பு விழாவில் கலைஞர் சொன்னது இன்னும் நினைவில் இருக்கின்றது

“இந்த சிறை சகல வசதிகளும் நிரம்பியது என்பதற்காக குற்றவாளிகள் இங்கேயே தங்க நினைக்க கூடாது..” என தனக்கே உரித்தான ஸ்டைலில் முடித்திருந்தார்

திமுக ஆட்சி முடிந்து கிட்டதட்ட 8 ஆண்டுகளில் அதிமுக அரசு அந்த வசதிகளை பன்மடங்கு பெருக்கி இருக்கின்றது

அதாவது கிட்டதட்ட தாஜ் ஹோட்டல் அளவிற்கு வசதிகள் நிரம்பி இருக்கின்றன, சொகுசுஅறைகளாக பல படங்கள் வருகின்றன‌

அரசு சிறையினை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் பெரும் விஷயம் நடந்திருக்கின்றது, டிஜிபி மீதே குட்கா ஊழல் என்றால் சிறைதுறை எப்படி இருக்கும்?

இதில் பணத்திற்கு ஏற்ப வசதிகள் கிடைத்திருக்கின்றன, “அன்பே வா” படத்தில் நாகேஷ் சுருட்டுவது போல சுருட்டி இருக்கின்றார்கள்

இவ்வளவு வசதியுள்ள சிறையிலிருந்து அரசு வாகனத்தில் இன்ப சுற்றுலா அடிக்கடி கூட்டி சென்றிருக்கமாட்டார்களா என்ற சந்தேகம் வலுக்கின்றது

புழலில் தமிழக குற்றவாளிகள் மட்டுமல்ல , பன்னாட்டு குற்றவாளிகளும் அடக்கம், அவர்களும் வாழ்வாங்கு வாழ்ந்திருகின்றார்கள், பாகிஸ்தான் தீவிரவாதி பாகிஸ்தானில் ஸ்கைபில் எல்லாம் பேசி மகிழ்ந்திருக்கின்றான்

டென்னிஸ் கோர்ட் எல்லாம் இருந்திருக்கின்றது, பார் நீச்சல் குளம் எல்லாம் இருந்திருக்கலாம்

எப்படி இவ்வளவு வசதிகள் பெருகின? சசிகலாவிற்காக தயார் செய்துவிட்டு மற்றவர்களுக்கு வாடகைக்கு விட்டுவிட்டார்களோ என்னமோ?

அரசு நிர்வாகம் எவ்வளவு சீரழிந்திருக்கின்றது என்பதற்கு இது எடுத்துகாட்டு

இந்த விஜய் மல்லையா என்பவர் வசமாக சிக்கி கொண்டார், இனி லண்டன் கோர்ட்டில் இந்தியாவில் புழல் சிறை எல்லாம் பக்கிங்காம் அரண்மனையினை விட சொகுசானவை என்றால், படங்களை கொடுத்தால் லண்டன் கோர்ட் என்ன செய்யமுடியும்?

பிரிட்டனிலே இனி சிறைகள் புழல் சாயலில் இருக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் வெடிக்கும்

இந்த படங்களை பார்த்தால் இனி கோர்ட்டில் நீதிபதிகளுக்கு கனத்த சிக்கல் வரும் போல் தோன்றுகின்றது, இனி அவர்கள் தீர்ப்பு எழுதியவுடன் குற்றவாளி எல்லாம் “எசமான் என்னை புழலுக்கு அனுப்புங்கள்..” என கதறி கதறி அழப்போகின்றார்கள்

மயிரிழையில் உயிர் தப்பிய அனுசுயா

ராஜிவ் கொலையின் பொழுதே கொலையுண்ட ராஜகுரு போன்ற காவலர்களை போல, காயம்பட்ட சில காவலர்கள் உண்டு, அதன் பின் வழக்கை விசாரிக்கும்பொழுது சாகசம் செய்து இறுதியில் வாழ்வினை தொலைத்த Jebamani Mohanraj போன்றவர்களும் உண்டு

இதில் களத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய அனுசுயா என்பவரும் ஒருவர்

அவர் அப்பொழுது பெண் காவலர், ராஜிவினை தனு நெருங்கும் பொழுது ஓடி சென்று தடுத்தவர் இந்த அனுசுயா. ஆம் களத்தின் நேரடி சாட்சி.

ஆனால் பெருந்தன்மையான ராஜிவ் அனுசுயாவினை பார்த்து தனுவினை அனுமதிக்குமாறு கையசைத்தார், தன் விதியினை தானே முடித்தார் ராஜிவ்

அந்த வெடிப்பில் தீயில் கருகினார் அனுசுயா

அந்த விசாரணையின் பொழுது வாழை இலையில் படுக்க வைக்கபட்டிருந்த அனுசுயா, விசாரணை குழுவினரிடம் தனுவினை தான் தடுத்ததையும், ராஜிவ் அவளை விட சொன்னதையும் அதன் பின் குண்டு வெடித்ததையும் சொன்னதே ராஜிவ் வழக்கின் பெரும் திருப்பம்

அப்பொழுது அனுசுயா கண்ணீரோடு சொன்ன வார்த்தைகள் மறுக்க முடியாதது

அந்த எரிந்த கோலத்திலும் சொன்னார், நான் தனுவினை முன்பே தடுத்து அனுமதியில்லாதவள் மாலை போட விடாதவாறு அனுப்பி இருக்க வேண்டும்

அதையும் மீறி ராஜிவ் அழைத்தபொழுது கடமையில் நின்று அவளை தடுத்திருக்க வேண்டும், ராஜிவ் சொல்லுக்கு கட்டுபட்டது என் தவறு, அதில் தேச தலைவனை கடைசி கட்டத்தில் காக்க நான் தவறிவிட்டேன்”

எப்படியான வார்த்தைகள்?

தமிழக காவல்துறை ஏன் ஒரு காலத்தில் மாண்போடு இருந்தது என்றால் இப்படித்தான்

இன்று முகநூலில் சிலர் கிண்டலாக பார்க்கும் Jebamani Mohanrajஎன்பவரின் தியாகமும் சாகசமும் கொஞ்சமல்ல, திருச்சியில் அவர் புலிகள் மேல் நடத்திய என்கவுண்டரும், புலிகள் எங்கும் தாக்கலாம், போலிசாரை தாக்கலாம் எனும் அச்சுறுத்தலான நிலையிலும் அவர் தைரியமாக களத்தில் நின்றார்

இப்பொழுது அனுசுயா ராஜிவ் கொலையாளிகளை விட கூடாது என்கின்றார், அப்படி சொல்ல முழு தகுதியும் அவருக்கு உண்டு. நிரம்ப உண்டு

அவரை போலவே பாதிக்கபட்ட, குடும்ப உறுப்பினர்களை பறிகொடுத்த 16 குடும்பங்களுக்கும் உண்டு

இப்பொழுது ஒரு கும்பல் சஞ்சய்தத்துக்கு ஒரு நீதி, ராஜிவ் கொலையாளிக்கு ஒரு நீதியா என கிளம்பி இருக்கின்றது, இது மூளையினை வாடகைக்கு விட்டிருக்கும் நாம் தமிழர் கும்பலின் கூப்பாடு

முதலாவது சஞ்சய் தத்திற்கும், இலங்கையில் இருந்து வந்த 4 கொலையாளிகளுக்கும் வித்தியாசம் உண்டு

இவர்கள் 4 பேரும் இந்த யகூப் மேமன், கசாப் வகையறா. எல்லை தாண்டி கொலை திட்டத்தோடு வந்தவர்கள்

சஞ்சய்தத் என்பவர் குண்டு வைத்தவர்களை தன் வீட்டில் வைத்து சோறு போடவில்லை, சம்பவ இடம் வரை சென்று குண்டு வைப்பதை பார்த்து ரசிக்கவில்லை

அதன் பின் குண்டுவெடித்து பலர் சாகும் பொழுது பிரியாணி சாப்பிட வில்லை , அதன் பின் பாயாசம் வைத்து குடிக்கவில்லை

(ஆம், ராஜிவ் கொல்லபட்டபின் சிவராசன் கும்பலோடு நளினி ஆம்பூர் பிரியாணி உண்டதும், இரு நாள் கழித்து சுபா பாயாசம் செய்து கொண்டாடியதும் விசாரணையில் தெரிந்தது)

சஞ்சய்தத் தான் போதை பழக்கத்திற்கு அடிமையானதை ஒப்புகொண்டார், அந்த தொடர்பில் சில ஆயுதங்களை தன் வீட்டில் வைக்க சிலர் தன்னை பயன்படுத்தினர் என்பதை ஒப்பு கொண்டார்

எந்த இடத்திலும் மறைக்கவில்லை

ஆனால் நளினி, பேரரிவு கும்பல் இன்னனும் நாங்கள் நிரபராதி என சொன்னதையே சொல்லிகொண்டிருக்கின்றன‌

இந்த அனுசுயாவின் நிலை பரிதாபமானது, எந்த குண்டுவெடிப்பில் அவர் சாவின் விளிம்பு வரை சென்றாரோ, அந்த குண்டுவெடிப்பிற்கு துணை போன நளினியின் காவலாளி அவர்தான்

நளினி பிரசவம் நடக்கும்பொழுது அனுசுயாதான் காவல்

எப்படி இருந்திருக்கும் அனுசுயாவிற்கு? எப்படி எல்லாம் துடித்திருப்பார்

பாதிக்கபட்ட அனுசுயா ராஜிவ் கொலையாளிகளை விட கூடாது என சொல்லும்பொழுது எப்படி மறுக்க முடியும்?

அவரின் வலி அவருக்குத்தான் தெரியும்

இப்படி பாதிக்கபட்டவர்கள் பேச தொடங்கி இருப்பது நல்ல விஷயம், இன்னும் புலிகளால் பாதிக்கபட்ட குடும்பம் ஏராளம் உண்டு

உறுதியாக சொல்லலாம் அனுசுயா போல பாதிக்கபட்டவர்தான் பேரரிவாளனின் தாயார் அற்புதம்மாள், அதில் சந்தேகமில்லை

ஆனால் தாய்பாசம் மகன் செய்த குற்றத்தையும், அந்த வழக்கிற்காக புலி பினாமிகள் செலவழிப்பதனால் உள்ள நன்றிகடனும் அவரை பேச விடவில்லை

அனுசுயா பேசிவிட்டார், அற்புதம்மாள் தாய்பாசத்திலும் நன்றிகடனிலும் தள்ளாடுகின்றார்

அனுசுயாவும், அற்புதம்மாளும் புலிகளால் தீரா சோகத்திற்கு உள்ளானவர்கள்

அனுசுயா போல எல்லா குடும்பமும் பேசட்டும் , குறிப்பாக நெல்லை மாவட்டம் திருமலாபுரத்தை சேர்ந்தவரும் ராஜிவோடு செத்தவருமான ராஜகுரு குடும்பத்தாரும் பேசட்டும்

வலிபட்டவர்கள் சொன்னால்தான் பல விஷயங்கள் சரியாக வரும்

Image may contain: 2 people, people smiling, people sitting and hat
————————————————————————————————————————————-

 

“தம்பி ராகுல், அந்த 7பேரில் 4 பேர் இலங்கைக்காரங்க, இங்க அவங்களை விடுவிச்சாலும் அங்கதான் வரணும்

முருகனை கட்டிய வழியில் நளினியும் இலங்கைதான் வரணும்

வரட்டும் பார்த்துக்கலாம்…நாங்கெல்லாம் எதற்கு இலங்கையில இருக்கோம்

அதனால 7 பேரையும் விடுவித்தால் இலங்கை அரசிடம் ஒப்படைப்போம்னு சொல்ல சொல்லுங்க, தக்காளி எவன் தமிழ்நாட்டில வாய் திறக்கான்னு பாத்திரலாம்”

Image may contain: 1 person, sitting and indoor

சிதறல்கள்

பெட்ரோல், டீசலில் அதிக வரி கிடைக்கிறது: மாநில அரசு ரூ.6.5 வரை குறைக்கலாம்: ஆதாரத்துடன் ராமதாஸ் விளக்கம்

காமெடி கருத்துக்களை சீரியசாக இவர் அடிக்கடி சொன்னதால் இப்பொழுது நல்ல கருத்தை சொன்னாலும் கேட்க யாருமில்லை

ராமதாஸ் சொல்வது சரியான விஷயம், ஆனால் பழனிச்சாமியா செய்வார்?


பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் , மாட்டுகறி கொலைகள் என கலவரத்தையும் கொலைகளையும் மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கும் பாஜகவினர் திமுகவினை அடிதடி கட்சி என்பதுதான் இன்றைய காமெடி
எல்லோரு அடிதடி பற்றி பேசுகின்றார்கள் என்பதற்காக அகில இந்திய பெரும் கலவர கட்சியான பாஜக உறுப்பினர்களா பேச வருகின்றார்கள்?
திமுக அடிதடி எல்.கே.ஜி லெவல் என்றால் பாஜக அடிதடி பி.எச்டி லெவ‌ல்
பாஜகவினர் இதில் எல்லாம் பேசவே முடியாது, ஆனாலும் பேசிகொண்டிருக்கின்றார்கள் பரிதாபம்
சந்தடி சாக்கில் உலகமகா கொலைகாரன் பிரபாகரனின் படம் பிடித்து கொண்டு நாம் தமிழரும் “திமுக அடிதடி கட்சி” என‌ கத்துவது அதை விட காமெடி

குழப்பிகொண்டே இருக்கின்றாய் உன் அரசியல் நிலைப்பாடுதான் என்ன என சிலர் கேட்பதால் சொல்லிவிடலாம்

தனிபட்ட விருப்பு வெறுப்பு வேறு, கள யதார்த்தம் வேறு

நாம் தேசியவாதி என்றாலும் தேசிய கட்சிகளே தமிழகத்தில் கட்சி வளர்க்க சுத்தமாக விரும்பவில்லை, அக்கறையுமில்லை

அது வளராது என அவர்களே மனமார நம்புகின்றார்கள்

தமிழகத்தை பொறுத்தவரை ஜாதி மதம் தாண்டிய கட்சிகளே வேண்டும், இதில் அதிமுக என்பது உருப்படாத கொள்கையற்ற ஊழல்கட்சி.

அதனால் காங்கிரஸும் திமுகவுமே தமிழக சூழலுக்கு பொருந்த கூடியவை

இதில் ராஜிவ் செத்துமே கட்சி வளர்க்க தெரியாத கட்சி காங்கிரஸ், காங்கிரசுக்கு எதிரி அதன் கட்சிக்காரர்களே

இதனால் இப்போதைக்கு பொருத்தமான கட்சி திமுக, அது இந்து எதிர்ப்பு இந்திய எதிர்ப்பு என்ற இரண்டையும் கையில் எடுக்காதவரை அது தமிழகத்திற்கு சரியான தேர்வு


 

இந்த விவகாரம் இப்படித்தான் நிற்கின்றது, மொத்தத்தில் ஆளுநர் 7 பேர் விடுதலை, இந்த ஜெயாவிற்கு பாரத ரத்னா போன்ற அரசின் தீர்மானங்களுக்கு சிரித்து முடித்து விட்டு கோபமாக ஆட்சியினை கலைக்க வேண்டிய நேரமிது

இப்படி ஒரு சிக்கலும் அவமானமும் எந்த அரசுக்கும் வந்ததில்லை, அப்படி ஒரு மாபெரும் அவமானம்

எப்படி?

எடப்பாடி பழனிச்சாமி மேல் சில குற்றசாட்டு உண்டு அதை விசாரிக்க வேண்டியது விஜிலென்ஸ் துறை, ஆனால் அதன் தலைவரான ஐஜி பாலியல் குற்றசாட்டில் சிக்கி இருக்கின்றார், அதாவது காமசேட்டை

இந்த விஜிலென்ஸ் ஐஜியினை 
விசாரிக்க வேண்டிய காவல்துறை டிஜிபிகுட்கா வழக்கில் சிக்கி இருக்கின்றார்

இந்த டிஜிபி என்பவர் யாரால் விசாரிக்க படவேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமியால் விசாரிக்க பட வேண்டும்

புரிந்ததா? சரி இன்னொரு முறை சொல்லலாம்

எடப்பாடி குடுமி விஜிலென்ஸ் ஐஜியிடம் இருக்கின்றது, விஜிலென்ஸ் ஐஜி குடுமி டிஜிபியிடம் இருக்கின்றது

டிஜிபியின் குடுமி பழனிசாமியிடம் இருக்கின்றது

இவர்கள் எப்படி விசாரிப்பார்கள்? ஒருவரை ஒருவர் பார்த்து கவுண்டமணி ஸ்டைலில் சிரித்து கொண்டே இருப்பார்கள்

மூவரும் அவரவர் துறையில் உச்ச தலைவர்கள் என்றபின் தமிழக நிலை எப்படி இருக்கும்?

ஆளுநர் மிக அவசரமாக அறிக்கை தயாரித்து இந்த காமெடி ஆட்சியினை வீட்டுக்கு அனுப்பும் நேரமிது

Image may contain: 1 person, smiling, closeup

அணுவுலை முதல் ஏராளமான சிக்கலுக்கு காரணம் தேசிய கட்சிகள்

“ராமேஸ்வரம் மீணவர் பிரச்சினையினை தேசிய கட்சிகள் கண்டுகொள்ளவில்லை, காவேரி பிரச்சினைக்கு காரணம் தேசிய கட்சிகள்

இங்குள்ள அணுவுலை முதல் ஏராளமான சிக்கலுக்கு காரணம் தேசிய கட்சிகள்

இந்த பெட்ரோல் விலை உயர்வுக்கும் காரணம் மத்திய அரசு

இப்படி இந்த திராவிட கட்சிகளும் அதன் கூட்டு ஒட்டு கட்சிகளும் சொல்லிகொண்டே இருக்கின்றன‌”

மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள்? சாட்சாத் இவர்களுக்கு, ின் யாரிடம் எதிர்பார்ப்பார்கள்? இவர்களிடம்தான் எதிர்பார்ப்பார்கள்

எல்லா சிக்கலுக்கும் மத்திய அரசே காரணம் என்றால் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு வாக்களித்து தங்களை சரிசெய்து கொள்ளட்டும், தேசிய கட்சிக்கு வாக்களித்தோமே என்னாயிற்று என கேட்கட்டும்

தேர்தலில் குறுக்கே வராமல் இருக்க இவர்கள் தயாரா? நிச்சயம் இல்லை

உண்மையில் இவர்களால் இந்திய அளவிலானா பிரச்சினைகளை தீர்க்கவே முடியாது, இவர்களின் எல்லை எல்லாம் மேம்பாலம் கட்டுதல், குடிநீர் குழாய் பதித்தல், குட்டியாக அணைகட்டி போஸ் கொடுத்தல், டாஸ்மாக்கில் கொள்ளை அடித்து ஸ்கூட்டியோ இல்லை மிக்ஸியோ கொடுத்தல்

இவர்கள் எல்லை அவ்வளவுதான், அந்த எல்லைக்குள் இவர்கள் நின்றால் சிக்கலே இல்லை

பெட்ரோல் விலை கொழுந்துவிட்டு எரிகின்றது, நாடாளுமன்றத்தில் 36 அதிமுக எம்பிக்கள் என்ன செய்கின்றார்கள் என யாராவது கேட்டோமா?

இல்லை இருக்கின்றோம் என அவர்கள்தான் சொல்வார்களா?

தமிழ்நாடு நலம்பெற தேசிய அரசியலில் இந்த திராவிட கட்சியும் அதன் ஒட்டுண்ணி இம்சைகள் தலையிடாமல் இருப்பது நல்லது, மாநில அரசியலில் தலை இடாமல் இருப்பது அதை விடவும் நல்லது

ராஜபக்சே டெல்லி வந்திருக்கின்றார்

மறுபடியும் ராஜபக்சே டெல்லி வந்திருக்கின்றார் , அதுவும் சும்மா வரவில்லை மகன், அப்பா, அப்பப்பா, அம்மா அம்மம்மா , அக்கா அக்கக்கா என குடும்பதோடு வந்திருக்கின்றார் போல

பஸ் பிடித்து செல்லும் வைகோவுமில்லை, இங்கே அழிச்சாட்டியம் செய்யும் சைமனோ, திருமுருகன் காந்தி போன்றோர் சத்தமுமில்லை

“அடேய் ராஜபக்சே வந்திருக்கின்றார், அதுவும் முள்ளிவாய்க்கால் கொள்ளி வைத்த ராஜபக்சே வந்திருக்கின்றார்..” என்றால் “அட போடா..” என சொல்லிவிட்டு எல்லாம் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாயிற்று

எப்பொழுது இவர்கள் கத்துவார்கள் என்றால் திமுக காங்கிரஸ் கூட்டணி இருந்து டெல்லிக்கு ராஜபக்சே வந்தால் கத்துவார்கள்

இப்பொழுது பழனிச்சாமி முதல்வராகவும், மோடி பிரதமராகவும் இருப்பதால் சத்தமே இல்லை

ராஜபக்சே சென்னை வந்து சாதாரணமாக டீ குடித்தாலும் இவர்கள் கண்டுகொள்ள போவதில்லை

இவர்கள் கண்டுகொள்ள வேண்டுமென்றால் மாநிலத்தில் திமுக ஆளவேண்டும் , மத்தியில் காங்கிரஸ் இருக்க வேண்டும்

இல்லாவிட்டால் ராஜபக்சே மெரீனா பக்கம் கிரிக்கெட் விளையாடினாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்

Image may contain: 2 people, people smiling, people standing and beard
—————————————————————————————————————————————–

 

ஈழமக்கள் இந்த புலி இம்சைகளை சுத்தமாக மறந்து வாழ ஆரம்பித்தாயிற்று, அந்த கொடும் காலங்களை மறக்க நினைகின்றார்கள்

கம்போடியாவின் போல்பாட் போல புலிகள் கசந்த அனுபவத்தின் எச்சம் ஆகிவிட்டார்கள், அவர்களை நினைக்க யாரும் விரும்பவில்லை

அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வந்தாயிற்று, இலங்கை சென்ற ஓவியாவிற்கு கிடைத்த பெரும் வரவேற்பே அதற்கு சான்று

கவனியுங்கள் அவ்வளவு பெரிய கூட்டம் ஓவியாவிற்கு கூடி இருக்கின்றது, தமிழர் கூட்டம்

ஒருவனாவது ராஜிவ் கொலையாளியான‌ முருகனை விடு, சாந்தனை விடு என கத்தினானா? இல்லை. அவர்கள் அந்த நினைப்பே இல்லாமல் இருக்கின்றார்கள்

சத்தம் உள்நாட்டில்தான் கேட்கின்றது

ஓவியாவிற்கே இப்படி என்றால் ரஜினி சென்றால் எப்படி இருக்கும்?

ஈழமக்கள் முழுக்க மகிழ்வாய் இருப்பதாக தோன்றும், இந்த சைமானிய திருமா திருமுருகன் கதை எல்லாம் கிழிந்துவிடும்

இதனால்தான் ரஜினி செல்வதை குறுக்கே விழுந்து தடுக்கின்றார்கள்

எமது அனுமானம் சரியென்றால் நிச்சயம் 2.0 படத்தினையொட்டி ரஜினி இலங்கை செல்லலாம், ராஜபக்சே போன்றோரின் வருகையும் இன்னபிறவும் அதற்கு கட்டியம் கூறுகின்றன‌

அன்று எவனாவது ரஜினி ஈழம் போக கூடாது என சொன்னால், அவனை பிடித்து முருகன், நளினி இடையே ஆயுள் கைதியாக வைத்துவிட வேண்டும்

தாமிரபரணி நதியில் புஷ்கரணி விழா

தாமிரபரணி என்பது கங்கை காவேரி போல புண்ணிய நதி, அதன் கரைகளில் ஏராளமான புண்ணிய ஸ்தலங்கள் உண்டு

அந்த புனிதமான நதியில் புஷ்கரணி விழா கொண்டாட கூடாது என திருமா, வைகோ , நல்லகண்ணு எல்லாம் கிளம்புவது சரியல்ல. கண்டிக்க வேண்டிய விஷயம்

இவர்கள் இந்துமதம் தொடர்பான பண்டிதர்களோ இல்லை மத அபிமானிகளோ அல்ல, மக்கள் தாமிரபரணியில் விழா கொண்டாடினால் அதை தடுக்க கிளம்பும் உரிமையினை இவர்களுக்கு யார் கொடுத்தது?

விட்டால் நெல்லையப்பர் கோவில் தேர் எங்களை கேட்டுவிட்டுத்தான் நகர வேண்டும் என கிளம்புவார்கள் போலிருக்கின்றது


 

இதோ தாழ்த்தபட்டவர்களுக்காக கட்சி நடத்தும் ஜாண்பாண்டியனும் , அய்யரும் ஆண்டவன் சன்னிதானத்தில் ஒன்றாக மரியாதையாக நிற்கும் காட்சி

புரட்சிகளை செய்ய பெரியார் வேண்டுமென்றில்லை, ரவுடிகளும் செய்யலாம்

Image may contain: 4 people, people standing
—————————————————————————————————————————————–

 

விநாயகர் சதுர்த்திக்கு எல்லோரும் வாழ்த்து சொல்லும்பொழுது மு.க ஸ்டாலினை காணவில்லை

இந்துக்களுக்கு வாழ்த்து சொல்லாமல் புறக்கணித்துவிட்டு பக்ரீத்துக்கும், கிறிஸ்மஸ்தக்கும் வாழ்த்து சொல்லி உங்களுக்கு திமுக செய்த சலுகைகளை பாரீர் என்பதெல்லாம் சரி அல்ல‌

புது வழி, நேர்வழி, பின்வாசல் வழி இல்லா முன்வாசல் அரசியல் என நடக்கும் ஸ்டாலின் இந்துக்களுக்கு வாழ்த்து சொல்வதால் ஒன்றும் குறைந்துவிட மாட்டார்

கலைஞர் டிவி, சன்டிவியில் எல்லாம் இந்துமத கடவுள்களின் சீரியல், சாமி சீரியல் ஓடும்பொழுது ஸ்டாலின் இப்படி பகுத்தறிவில் நிற்பது நகைப்புகுரியது

எங்கள் டிவியில் ராமானுஜர் சீரியல் முதல் பல சீரியல்களை ஒளிபரப்பி சம்பாதிப்போம், ஆனால் இந்துக்களுக்கு வாழ்த்து சொல்லாமல் புறக்கணிப்போம் என்பதெல்லாம் அப்பட்டமான காமெடி

இன்னும் இந்து விரோத போக்கினை திமுக கொண்டிருந்தால் அது பலன் தராது

காலத்திற்கு ஏற்ப மாறாத எதுவும் நிலைக்காது


 

ஆக திமுகவில் இருக்கும் யாரும் பிரியாணி கடையில் யார் முகத்திலாவது குத்தலாம், அழகு நிலையத்தில் கிக் பாக்சிங் செய்யலாம்

கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவார்கள், அதன் பின்னர் பின்வாசல் வழியாக சேர்த்துகொள்வார்கள் அதன்பின் அவர்கள் கட்சிபணி ஆற்றலாம்.

இனி முக ஸ்டாலின் அந்த அழகு நிலையத்திற்கு ஆறுதல் சொல்ல செல்வார், அவர்களும் ஆறுதலடைவார்கள்


இந்த பக்கமாவது அடிதடி என்றால் தற்காலிக நீக்கமாவது உண்டு, பழனிச்சாமி பக்கம் பலநூறு கோடி ஊழல் என்றாலும் சிக்கலே இல்லை, அமைச்சர்களை அருகிலே வைத்து கொள்வார்கள்

அவர்கள் மகா மோசம்


 

தரம் கெட்ட செயலை செய்த தன் கட்சிக்காரனை கட்சியினை விட்டு நீக்கி, மற்ற அடாவடி திமுகவினருக்கும் எச்சரிக்கை செய்திருக்கின்றார் ஸ்டாலின்

அப்படியே முகநூலில் அழிச்சாட்டியம் செய்யும் திமுகவினரையும் அவர் கண்டிப்பது நல்லது

தன் கட்சிக்காரன் அழிச்சாட்டியம் செய்தவுடன் களையும் ஸ்டாலின், தன் அமைச்சர்கள் மேல் ஊழல் குற்றசாட்டு வெடித்தாலும் அடைகோழி போல காக்கும் பழனிச்சாமியினை விட மேலானவராகத்தான் நிற்கின்றார்


அடிதடியில் ஈடுபடுவோரை கட்சியிலிருந்து நீக்கத்தான் வேண்டும்

திமுக அப்படியான கட்சி என்பதை நிரூபித்துவிட்டது, கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிலே கும்மாங்குத்து குத்தியும் கட்சியில் விட்டு வைக்க அது என்ன தமிழக காங்கிரஸ் கட்சியா?

காங்கிரஸார் இனியாவது பாடம் படிகட்டும்