நம்பி நாராயணன், நெல்லை மாவட்டத்து அறிவு சுடர்

“உண்மையான இந்தியனாக இத்தேசத்திற்காக பாடுபட்டால் உனக்கு 10 பைசா தேறாது, மாறாக கடும் அவமானங்களை சந்திக்க நேரும். அது எவ்வளவு பெரும் விஞ்ஞானியாக இருந்தாலும் சரி

ஆனால் தேசத்தை எதிர்த்து பிரிவினை பேசினால் அமெரிக்காவில் அழைத்து டாக்டர் பட்டம் கொடுப்பார்கள், ஜெர்மனில் அழைத்து விருந்து கொடுப்பார்கள், இட்சூ காரில் செல்லலாம், அமெரிக்க தூதர் சென்னையில் வீடு வந்து சந்திப்பார்” என்பதெல்லாம் இங்குள்ள விதி

இந்நாட்டின் மாபெரும் சாபக்கேடு இது, தேசதுரோகிகள் எல்லாம் அரசியல்வாதி, முற்போக்கு, புரட்சி இன்னபிற பெயரில் வாழ்வாங்கு வாழ்வார்கள். நாட்டுக்காய் உழைத்தவனோ எங்கோ இருந்து அழுதுகொண்டிருப்பான்

இந்த இந்திய விதிக்கு அந்த பெரும் விஞ்ஞானியும் தப்பவில்லை, அவர் பெயர் நம்பி நாராயணன்

1995களில் மாலத்தீவு அழகிகள் வழியாக இந்திய விண்வெளி ரகசியத்தை கடத்தினார் என கேரள போலிசாரால் கைது செய்யபட்டு, அடிக்கபட்டு கோர்ட்டில் நிறுத்தபட்டு சொல்லணா சித்திரவதைகளை சந்தித்து இன்று தன் கரங்களும், தன் மனமும் சுத்தமானது என உச்ச நீதிமன்றத்தில் நிரூபித்திருப்பவர்

தேசம் இன்று கண்ணீரொடு அவரை வணங்கி கொண்டிருக்கின்றது, நாட்டுபற்றாளர்கள் எல்லாம் அந்த மனிதனுக்காக கண்ணீரோடு கைதட்டிகொண்டிருக்கின்றார்கள்

நம்பி நாராயணன், நெல்லை மாவட்டத்து அறிவு சுடர். அப்பொழுதே மிக கடினமான விண்வெளி பாடங்களில் அசத்தி இஸ்ரோ பக்கம் வந்தவர், அமெரிக்காவில் அவருக்கு மிக பெரிய எதிர்காலம் இருந்தபொழுதும், பிரான்ஸ் கம்பெனிகள் குனிந்து நின்று வரவேற்றபொழுதும் என் தேசம் இந்தியா, என் பணி இந்நாட்டிற்கே என வைராக்கியமாக இங்கே சேர்ந்தவர்

நிச்சயமாக சொல்லலாம், கலாம் போலவே அப்பழுக்கற்ற விஞ்ஞானி

ஆனால் என்ன நடந்தது?

அக்காலங்கள் இன்று ஈரானை குறிவைத்திருப்பது போல இந்தியாவினை முடக்கியே தீருவது என அமெரிக்கா கங்கணம் கட்டிய 1980கள், இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் முன்னேறி கொண்டிருந்தது அவர்களுக்கு பொறுக்கவில்லை

இந்தியா கிரையோஜெனிக் எந்திரத்தை வாங்க ரஷ்யாவிடம் முயற்சித்தது, காரணம் அதுதான் எடை கூடிய செயற்கைகோளை விண்ணுக்கு கொண்டுசெல்ல கூடிய தொழில்நுட்பம், கூடவே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனைகளையும் தயாரிக்கலாம்

விடுமா அமெரிக்கா 1980கள் அமெரிக்காவின் அட்டகாசம் உச்சத்தில் இருந்த காலம், இந்தியாவோ இந்திராவினை இழந்திருந்தது, ராஜிவினையும் தொடர்ந்து இழந்தது, சோவியத் யூனியனும் உடைந்தது

இந்தியாவிற்கு கிரையோஜெனிக் நுட்பம் கிடைக்காமல் குறி வைத்து அடித்தது அமெரிக்கா, ரஷ்யாவின் போரிஸ் எல்சினை மிரட்டியது, பிரான்ஸ் ஒதுங்கியது

இந்தியாவில் நாமே தயாரிப்போம் என விஞ்ஞானிகள் முடிவு செய்தனர், அந்த குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்தான் நம்பி நாராயணன்

கிரையோஜெனிக் நுட்பத்தினை அவர் அட்டகாசமாக வடிவமைத்தார், தொட்டுவிடும் தூரத்தில் வெற்றி காத்திருந்தது

(பின்னாளிலும் நம்பி நாராயணன் கொடுத்த அடித்தளத்தில்தான் இந்தியா கிரையோஜெனிக் எந்திரத்தை செய்து ஏராளமான செயற்கைகோளை எல்லாம் விண்ணுக்கு அனுப்பி கொண்டிருக்கின்றது)

விடுவார்களா வல்லரசுகள்?

மாலத்தீவின் இரு பெண்கள் சில நாட்டு உளவு அமைப்பு மூலம் தயார் செய்யபட்டு நம்பி நாராயணனை சிக்கலில் ஆழ்த்தினர், அவர் விண்வெளி ரகசியத்தை கடத்தினார், பாகிஸ்தானுக்கு விற்றார் என பெரும் குற்றசாட்டுகள் வெடித்தன‌

ஒரு பெரும் விஞ்ஞானியினை, அதுவும் உலகதரம் வாய்ந்த கிரையொஜெனிக் எஞ்சின் செய்யும் பெரும் விஞ்ஞானியின் மீதான குற்றசாட்டை மத்திய அரசு எவ்வளவு கவனமாக கையாண்டிருக்க வேண்டும்?

ஆனால் அன்றைய அரசு செய்யவில்லை, ஏன் என்று தெரியவில்லை. கண்டும் காணாமல் இருந்தார்கள். அப்பொழுதுதான் இந்தியா உலக நாடுகளுக்கு திறந்துவிட பட்டது. மன்மோகன் சிங்கினை உலகின் சிறந்த நிதி அமைச்சர் என்றேல்லாம் விருது கொடுத்தார்கள்

அதை ரசித்துகொண்டிருந்த மத்திய அரசு கொஞ்சமும் நம்பி நாராயணனை கண்டுகொள்ளவில்லை என்பதுதான் மகா கேவலம்

ஆம், ராஜிவிற்கு பின் இத்தேசம் அப்படி பன்னாட்டு சக்திகளிடம் சிக்கி கிடந்தது. நம்பி நாராயணன் அவமானபட்டபொழுது மத்திய அரசு பார்த்துகொண்டிருந்ததே தவிர , ஒரு ஆறுதலும் சொல்லவில்லை

நம்பி நாராயணன் தன் தரப்பு நியாயத்தை சொல்ல கூட வாய்ப்பு கொடுக்கபடவில்லை

நம்பி நாராயணை கைது செய்தது கேரள காங்கிரஸ் அரசு, அதன் முதல்வர் அன்று கருணாகரன்

நம்பி நாராயணன் கடுமையாக தாக்கபட்டதும், பெரும் சித்திரவதைகளை கேரள போலிஸ் கொடுத்ததும் இத்தேசத்தின் கருப்பு பக்கங்கள்

நம்பி நாராயணன் உண்மையில் அப்பாவி, அவர்கள் குறி அவருக்கும் மேல் அதிகாரியான முத்துநாயகம் என்பவர் மேல் இருந்தது. அதாவது மொத்த இந்திய கிரையோஜனிக் திட்டத்தையும் முடக்க ஏதோ ஒரு சக்தி கொடுத்த அழுத்ததிற்கு இத்தேசத்தின் அரசியல் ஆடியது

ஆயினும் கொஞ்சமேனும் நாட்டுபற்றாளர்கள் உள்ள தேசமல்லவா இது? எதிர்ப்பு கிளம்பியது கேரளம் கொந்தளித்தது கருணாகரன் பதவி இழந்தார்

விஷயம் சிபிஐக்கு மாற்றபட்டது, சிபிஐ நம்பி நாராயணன் மேல் எந்த தவறும் இல்லை, இது கேரள காவல்துறையினரின் சதி என சொல்லிவிட்டது.

நம்பி நாராயணனுக்கு 1 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க சொன்னது கோர்ட் ஆனால் கேரள அரசு கொடுக்கவில்லை. அவர்கள் 1 சொட்டு நீரே கொடுக்காதவர்கள்? நஷ்ட ஈடா கொடுப்பார்கள்?

தன் மேல் தவறில்லை என்ற தீர்ப்பு வந்தவுடன் நிம்மதியான நம்பி நாராயாணன் கேரள காவல்துறை மேல் வழக்கு தொடர்ந்தார்

நேற்று உச்சநீதிமன்றம் கேரள அரசு செய்த முறையற்ற விஷயத்திற்காக, நம்பி நாராயணன் மீது செய்த கொடுமைக்காக 50 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என தீர்ப்பிட்டுள்ளது

இவ்வளவு நாளும் தான் நடத்திய போராட்டத்தில் வென்றிருகின்றார் நம்பி, அவரின் நேர்மை வென்றிருக்கின்றது

இப்பொழுது காரி துப்பி இத்தேசமக்கள் இந்திய அதிகார வர்க்கத்தை கேட்கும் கேள்வி ஒன்றுதான்

அமெரிக்கா சென்றால் பல பில்லியன்கள் சம்பாதிக்க வாய்பிருந்தும், வெறும் சில ஆயிரங்களுக்காக அம்மனிதன் இந்த நாட்டின் விண்வெளி திட்டத்தில் பங்கெடுத்திருக்கின்றார்

ஆனால் அடிப்படையற்ற குற்றசாட்டில் அவரை கைது செய்து அடித்தெல்லாம் இருக்கின்றார்கள், இதெல்லாம் ஏன் முதலிலே கண்டிக்கபடவில்லை

சரி சிபிஐ விசாரணை 1998ல் முடிந்தாலும் 2018வரை அவருக்கான நீதியினை கிடைக்கவிடாமல் செய்த சக்தி எது?

அவரின் பெரும் போராட்டத்தால் நிச்சயம் இந்திய விண்வெளிதுறை பின்னடைந்திருகின்றது, கிரையோஜெனிக் இஞ்ச்னினின் தொடக்கத்தில்தான் நாம் இருக்கின்றோம், இன்னும் முன்னேற வேண்டும்

ஒரு மாபெரும் விஞ்ஞானியினை 25 ஆண்டுகள் அழவைத்ததில் இத்தேசத்தின் விண்வெளி ஆராய்ச்சிக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டிருக்கின்றது?

இன்று ஓரளவு கிரையோஜெனிக் எஞ்சினை செய்து சாதிக்கின்றோம் என்றால் அதற்கு நம்பி நாராயணன் காரணம் என்பது யாருக்கு தெரியாது, அம்மனிதனுக்கான நீதி இவ்வளவு தாமதமா?

ஒரு மாபெரும் விஞ்ஞானிக்கே நீதி கிடைக்க செய்யாமல் மலையாளிகளால் லாபி செய்ய முடியும் என்றால் இத்தேசத்தில் என்ன நடக்கின்றது?

ஒரு நம்பி நாராயணன் அழுது முடித்திருக்கின்றார், இன்னும் எத்தனை பேர் அழுதுகொண்டிருப்பார்கள் என யாருக்கு தெரியும்?

50 லட்சம் நஷ்ட ஈடு என்பது ..கு சமம், அம்மனிதன் நாளையே விமானம் ஏறினால் 1 மணிநேரத்தில் அவன் காலடியில் அது கொட்டி கிடக்கும், அவரின் திறமை அப்படி

அந்த நஷ்ட ஈடு எல்லாம் போதாது

இத்தேசத்து மொத்த மக்களும், கட்சிகளும் அரசும், நீதிதுறையும், அந்த மனிதன் மேல் பழிசுமத்தும் பொழுது பார்த்து கொண்டிருந்த விண்வெளி அதிகாரிகளும் மொத்தமாய் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

அவருக்கு நல்ல பதவிகளை மறுபடியும் விண்வெளி மையத்தில் கொடுத்து பிராயசித்தம் தேடட்டும்

அவரை திட்டமிட்டு கைது செய்து அந்நிய நாட்டின் ஏவல் துறையான கேரள காவல்துறை அதிகாரிகளான மாத்யூஸையும்,ஜோசுவா என்பவனையும் பிடித்து திகாரில் அடைக்கட்டும்

எங்கள் அன்புக்கும் நன்றிக்கும் உரிய நம்பி நாராயணன் அவர்களே,

இத்தேசம் உங்களுக்கு செய்த மாபெரும் அநீதிக்காக இந்தியர்கள் உங்களிடம் மன்னிப்பு கோருகின்றோம்

இந்த அயோக்கியர்களுக்காகவும் அவர்கள் செய்த கொடுமைகளுக்காகவும் இத்தேசத்தையும் அதற்கு நீங்கள் ஆற்ற இருந்த கனவுகளையும் மறந்துவிடாதீர்கள்

மீண்டும் வாருங்கள், இன்னொரு கலாமாய் உங்களை இத்தேசம் வரவேற்கின்றது

கிரையோஜெனிக் விஷயங்களில் இத்தேசம் போக வேண்டிய தூரங்களை கடக்க உதவுங்கள்

எம் மாணவர்கள் உங்களை படிக்கட்டும், இத்தகைய சோதனைகளை கடந்தும் நாட்டிற்காக ஒருவன் உழைத்தான் என வரலாறு எழுதட்டும்

அவர்களில் இருந்து பல நம்பி நாராயணன்கள் உருவாகட்டும், தேசம் நிலைக்கட்டும்

இத்தேசத்தின் நலனுக்காக அந்நிய நாட்டு கைகூலிகளால் நீங்கள் பட்ட பெரும் அவமானம் துடைக்கபட்டிருகின்ற நேரத்தில் எழுந்து வாருங்கள்

தேசாபிமானமிக்கோர் உங்களுக்காக நன்றி கண்ணீர் விட்டு உங்களை வரவேற்கின்றோம்

இவரின் மருமகன் ரவி அருணன் சந்திராயன் திட்டத்தில் மகா முக்கியமானவர், மாமனாருக்கு அநீதி என அவர் தேசத்திற்கான சேவையினை செய்யாமல் இல்லை

நாட்டுபற்று என்பது இதுதான்

(நெல்லை மாவட்டத்து தமிழனுக்கு 25 ஆண்டுகாலமாக பெரும் அநீதி நடந்தது, ஒரு குரலாவது இங்கு தமிழனுக்கு அநீதி என கேட்டதா என்றால் இல்லை

இதுதான் தமிழகத்து கட்சிகளின், தமிழனை காக்க உதித்தவர்களின் அரசியல் புத்தி

ஏன் என்றால் நாட்டுக்காக உழைக்கும் எந்த தமிழனையும் இவர்களுக்கு பிடிக்காது, பெரியார், பிரபாகரன் என பேசினால் ஓடிவந்து தாங்குவார்கள் இங்குள்ள யதார்த்தம் அப்படி

இந்த மாபெரும் விஞ்ஞான தமிழனுக்கு ஆதரவாக குரல் வராத தமிழகத்தில் அந்நிய நாட்டு கொலைகாரர்களை விடுவி, சந்தணமரம் வெட்டிய தமிழனுக்கு அநீதி என குரல்கள் அடிக்கடி வரும்

நாம் கண்டிப்பது இந்த அயோக்கியதனத்தையே

தமிழன் நம்பி நாராயணனை இங்குள்ள கட்சிகளும் தமிழன் தமிழன் என கத்துபவனும் கைவிட்டதுதான் தமிழக அரசியலின் அசிங்கமான முகம்

கலாமை எப்படி கலககாரன் என சொல்லி தமிழக அரசியல் அசிங்கமாக சிரித்ததோ, கலாம் இரண்டாம் முறை ஜனாதிபதி ஆக கூடாது என அரசியல் செய்யபட்டதோ அது நம்பி நாராயணனுக்கும் நடந்தது

நம்பி நாராயனன் வேறு சாதியாக இருந்தால் தாழ்த்தபட்டவன் என்பதால் விரட்டுகின்றார்கள் பெரியார் பெருக்க சொன்னார், அம்பேத்கார் அறுக்க சொன்னார் என கிளம்பி இருப்பார்கள்

அதுவும் நம்பிக்கு வாய்க்கவில்லை

மொத்தத்தில் நாட்டை நேசிக்கும் எந்த தமிழனுக்கும் தமிழ்நாட்டில் ஆதரவு சுத்தமாக வராது, இதுதான் தமிழக அரசியல்

இனியாவது தமிழகம் திருந்தி நல்ல தமிழருக்கு ஆதரவாக திரும்பட்டும், தேசியம் செழிக்கட்டும் தேசம் வளரட்டும்)

Image may contain: one or more people, beard, eyeglasses and closeup
—————————————————————————————————————————————–

 

இதோ நம்பி நாரயணன் எனும் தமிழ் விஞ்ஞானி, 25 ஆண்டு போராட்டத்தில் வென்றிருக்கின்றார், தன் மீதான களங்கம் துடைக்கபட்டு நஷ்ட ஈடும் பெற்றிருக்கின்றார்

இவரை தாக்கி சிறைபடுத்தியது கேரள காவல்துறை, டெல்லியில் இவர் வழக்கு நடத்தி போராடியது 20 ஆண்டுகள்

ஒரு குரல் இவருக்கு ஆதரவாக தமிழகத்தில் வந்திருக்கும்? வராது ஏன் என்றால் இவர் அப்படித்தான்

இதுவே தாழ்த்தபட்ட சாதிக்காரன் ஒருவனை கேரள போலிஸ் அடித்திருந்தால், இப்படி வழக்கு நடந்திருந்தால் தமிழகம் எப்படி எல்லாம் பொங்கும்?

திராவிட அடிமைத்தனம் என்பார்கள், பெரியார் மண் என்பார்கள், ஆளாளுக்கு குதிப்பார்கள் குட்டிகரணம் அடிப்பார்கள்

தமிழுக்கோர் அநீதியா, தனிநாடே தீர்வு என்றெல்லாம் கிளம்புவார்கள்

ஆனால் அப்பாவி தமிழனுக்கு பெரும் அநீதி என்றால் அவன் மாபெரும் விஞ்ஞானியாக இருந்தால் கூட இங்கு சிறுசலசலப்பும் வராது

விமானத்தில் சோபியா.. என பொங்குபவர்கள் இந்த ராக்கெட் விஞ்ஞானிக்காக ஒரு குரல் எழுப்புவார்கள்?

மாட்டார்கள்

தமிழகத்தில் அறிவாளிகள் பிறக்க கூடாது, பிறந்தாலும் நாட்டுபற்றோடு இருக்கவும் கூடாது

இந்த தமிழக அரசியல் அயோக்கியதனம், போலி பெரியாரிஸ்ட் தனம், அய்யகோ தமிழனுக்கு அநீதி என செய்யும் அட்டகாசம் எல்லாம் ஒழிக்கபடாமல் தமிழகத்திற்கு விமோசனமே இல்லை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s