கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி படப்பிடிப்பு வேகமாக நடைபெறுகின்றது : செய்தி

“ரஜினி சார், நானும் உங்கள வச்சி அரசியல்ல இயக்கத்தான் கால்ஷீட் கேட்டுட்டே இருக்கேன்.

எல்லோர் இயக்கத்திலும் நடிக்கிறீங்க, என் இயக்கத்தில் மட்டும் நடிக்கவே வரமாட்டேன்றீங்க ரஜினி சார்

எவ்வளவு ஸ்கிரிப்டு, சீன் எல்லாம் வச்சிருக்கேன் தெரியுமா? ஒரே ஒரு கால்ஷீட் கொடுங்க சார், தயாரிப்பாளர் அமித்ஷா கூட ரெடியா இருக்கார் சார்.”

Image may contain: 2 people, people sitting and indoor
—————————————————————————————————————————————–

எத்தனை படங்கள் வந்தாலும் ரஜினிக்கு பாஷா என்பது நிச்சயம் மாஸ் படம், கிட்டதட்ட 25 வருடம் முடிந்தாலும் படம் இன்றும் கிளாசிக் ரகம்

அப்படிபட்ட ஹிட் எல்லாம் கொடுத்த ரஜினி காலாவில் கந்தல் கோலத்தில் நின்றதெல்லாம் விதிவகை

இது டிவி சானல்கள் நிறைந்துள்ள காலம், அதனால் காலா படத்து பாடல்கள் ஆங்காங்கு ஓடுகின்றன , இல்லாவிட்டால் எச்.ராசா ஸ்டைலில் காலா என்றொரு படம் நான் நடிக்கவே இல்லை என ரஜினி சொல்ல வசதியாக இருக்கும்

ரஜினி என்ன? ராமசந்திரனே முன்பு தன் தோல்வி படமான காதல் வாகனம் பற்றி கேட்டபொழுது அப்படி ஒரு படம் நான் நடிக்கவே இல்லை என சொல்லிவிட்டார்

இதோ பாஷா படத்தில் ரஜினியினை கட்டி வைக்கும் பொழுது “இவன் ஜாதகத்த மாத்தி வச்ச பாவி யாரடா” என்ற வரிகள் பாடலாக ஒலிக்கின்றது

இந்த வரி எங்கு வந்திருக்க வேண்டும்?

காலா படம் முடியும் பொழுது “பீசு பீசா கிழிக்கும் போதும், இயேசு போல பொறுமை பாரு, பச்சை ரத்தம் ஒழுகும் போது பச்ச குழந்த சிரிப்ப பாரு…

இவன் ஜாதகத்த மாத்தி வச்ச பாவி யாருடா..” என ஒலிக்கவிட்டு

பா.ரஞ்சித் பிலிம் என முடித்திருந்தால் மிகவும் பொறுத்தமாக இருந்திருக்கும்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேதனை

நாட்டை நடத்த பணம் இல்லை – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேதனை

அதாவது இவ்வளவு நாளும் அமெரிக்காவும், சீனாவும் கொடுத்த தர்ம பணத்தில் அந்நாடு இயங்கி இருக்கின்றது

சீனா வட்டிமேல் வட்டி கேட்டு இம்சிக்க, அமெரிக்கா தன் நிதி உதவியினை நிறுத்த, தவிக்கின்றது பாகிஸ்தான்

அரசை நடத்தவே பணம் இல்லா பொழுது உங்களுக்கு எதற்கு அணுகுண்டு, ஏவுகனை எல்லாம்? அதை எல்லாம் கடலில் போடுங்கள்

இப்பொழுதும் திவாலானதாக அறிவியுங்கள், பாகிஸ்தான் நிவாரண நிதி என கொட்டி கொடுக்க இந்திய மக்கள் ரெடி

அதன் பின்பாவது இந்த தீவிரவாதத்தை நிறுத்திவிட்டு திருந்துங்கள்

மிஸ்டர் இம்ரான், உங்களால் எம் தேசம் எல்லையில் கொட்டும் பணம் கொஞ்சமல்ல. வேண்டுமானால் அதில் ஒரு பகுதியினை தருகின்றோம் அதற்கு பதிலாக இந்த தீவிரவாதிகளை உருவாக்காமல் காஷ்மீரில் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும் சரியா?

அப்படியானால் இரு பக்கமும் கணக்கு சரியாகும்

—————————————————————————————————————————————–

பாகிஸ்தான் தனது இயல்பை எப்போதும் மாற்றிக்கொள்ளாது – ராஜ்நாத் சிங் கருத்து

ஆமாம், ஒருவேளை அது தன் இயல்பை மாற்றிகொண்டால் இவர்கள் அரசியல் என்னாவது?

அதனால் பாகிஸ்தான் திருந்தவே கூடாது என்பதுதான் இவர்களின் பெரும் அக்கறை


சீனாவினை விடவே கூடாது என முடிவில் இருக்கும் டிரம்ப் அதற்கான வரிகளை மேலும் இறுக்குகின்றார்

இதனால் இன்னும் தொடர்ந்து சீன பொருட்கள் சல்லி விலையில் உலக சந்தையில் கிடைக்கும் என்பது உறுதியில்லை

இனியும் சீனாவால் தொடர்ந்து மிக குறைந்த விலையில் பொருட்களை உற்பத்தி செய்ய முடியாது, விலை எகிறும்

உலக வாணிப பெருந்தலைகள் எதிர்பார்த்தது இதனைத்தான், சீனாவின் சல்லி விலை சந்தையினை அடித்து வீழ்த்தவேண்டும் என்பதுதான்

அதே நேரம் சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவணம் வெளியேறும் பட்சத்தில் அமெரிக்க ஐபொன் முதல் பல பொருட்களின் விலையும் எகிறும்

இது உலகம் முழுக்க பாதிப்பினை கொண்டுவரும்

இந்தியாவில் சும்மாவே விலைவாசி அதிகம், இந்த மோதலால் இனி என்னவெல்லாம் உயருமோ தெரியாது


 

இங்கிலாந்து செயற்கைகோளுடன் இன்று [ September 16, 2018 ] பறக்கின்றது இந்திய ராக்கெட்

இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுங்கள் என சொன்னபொழுது “இந்தியருக்கு என்ன தெரியும்? குண்டூசி கூட செய்ய தெரியாது.” என நக்கல் செய்தவர் சர்ச்சில்

“இந்திய தயாரிப்பா? அது என்றைக்கு உருப்படியாக இருந்தது? வேலை செய்யவேண்டிய நேரத்தில் செய்யாதே?” என மிக மட்டமாக பேசியவர்கள் இங்கிலாந்து மக்கள்

இன்று அவர்களின் செயற்கை கோளினை சுமந்து செல்லும் ராக்கெட்டை தயாரிக்கும் அளவு இந்தியா வளர்ந்திருக்கின்றது

எவ்வளவு மகத்தான சாதனை?

பிரிட்டனின் காலடியில் இருந்த எத்தனையோ நாடுகளில் இந்தியா மட்டுமே இச்சாதனையினை செய்திருக்கின்றது

நாமும் உலக அரங்கில் வளர்ந்திருக்கின்றோம், விஞ்ஞான வித்தைகளுக்கு யாருக்கும் சளைக்காமல் வளர்ந்திருக்கின்றோம் என்பதற்கு இந்த சாதனை மாபெரும் எடுத்துகாட்டு

தேசம் இந்த மாபெரும் சாதனையில் பெரு மகிழ்ச்சி கொள்கின்றது

உண்மையில் இது சினிமா மண்

இது பெரியார் மண், அண்ணா மண் என சொல்பவன் சொல்லிகொண்டே இருந்தாலும் உண்மையில் இது சினிமா மண்

ராமசந்திரன் என்பவர் 11 ஆண்டு முடிசூடா மன்னனாக ஆண்டிருக்க முடியாது

இது பெரியாரின் மண்ணாக இருந்திருந்தால் பிராமண ஜெயலலிதா 17 ஆண்டுகள் முதல்வராக ஆண்டிருக்க முடியாது

விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக இருந்திருக்க முடியாது

இது பெரியாரின் மண்ணாகவே இருந்திருந்தால் பெரியாரின் சீட கோடிகள் இன்று அரசியலுக்கு வருமே தவிர சிஸ்டமும், மையமும் வந்திருக்க முடியாது

விஜயினை வைத்து அவரின் தந்தை கனவு கண்டுகொண்டிருக்க முடியாது

இது பெரியார் மண்ணாக என்றுமே இருந்ததில்லை, சினிமா சாயம் பூசபட்ட திராவிட மண்ணாக மாய கதைகள் சொல்லி ஆட்சிகள் மாற்றபட்டன‌

மற்றபடி இது முழுக்க முழுக்க சினிமாக்காரன் மண், அதை தொடங்கி வைத்த பெருமகனார் அண்ணா

சம்பத் போன்றவர்கள் பேச்சை கேட்டு அண்ணா இந்த சினிமாக்காரர்ளை விரட்டி இருந்தால் தமிழகம் இந்த சீர்ழிவினை கண்டிருக்காது

அந்த சனியனை “இதயகனி” என அண்ணா தூக்கி சுமக்காவிட்டால் , “இவன் நின்றால் பொதுகூட்டம், நடந்தால் ஊர்வலம், பேசினால் மாநாடு” என உச்சத்தில் வைத்திருக்காவிட்டால் இச்சோகம் நிகழ்ந்திருக்காது

ராமசந்திரனுக்கு பேச தெரியாது, ஆனால் அவன் முகம் காட்டினால் போதாதா என அவரை பெரும் பிம்பம் ஆக்காமல் இருந்திருந்தால் இன்று ஜெயக்குமார் எல்லாம் தமிழக நிதி அமைச்சராக இருக்க முடியாது

தினகரன் எல்லாம் எங்கிருந்திருப்பார் என்றே தெரியாது

இந்த தமிழகத்தை திராவிட மண், பெரியார் மண் என்று ஆக்கி இருக்க வேண்டிய தமிழகத்தை சினிமா மண் என ஆக்க விதை போட்டவர் அண்ணா, அதில் சந்தேகமே இல்லை

இதனால் என்னாயிற்று?

போர்கோலம் பூண்ட கட்சி, கூத்தாடி கூட்டமாயிற்று

வாளும், வேலும் ஏந்த வேண்டிய கைகள் அட்டை கத்தியும், வெற்று காகிதமும் ஏந்தின‌

ரத்தம் வழிய வேண்டிய முகங்கள் அரிதாரம் பூசி நின்றன‌

எங்கே பகைவர் என முழங்க வேண்டிய கூட்டம் பாட்டு பாடியது

எதிர்களை மிதிக்க வேண்டிய கால்கள் சலங்கை கட்டி ஆடின‌

இப்படியே திராவிடத்தை போராடி மீட்போம் என கிளம்பியவர்கள் பின் கூத்தாடி மீட்போம் என மாறிவிட்டார்கள்

இது திமுக அதிமுக என இருபக்கமும் நடந்தது, இவர்களை எதிர்த்து வந்த மூப்பனாருக்கு ரஜினி எனும் நடிகர் ஆறுதல் பக்கபலம்

இது இன்னும் மோசமாக தெரிந்தது, அதுவும் இப்பக்கம் வடிவேலு, பாக்யராஜ், குஷ்பு என திமுக பிரச்சாரமும், அப்பக்கம் குண்டு கல்யாணம், விந்தியா என வந்து நிற்கும் பொழுது, திராவிடத்தை மீட்க போன மாபெரும் இயக்கம், போரை மறந்து கூத்து கட்டி நின்ற காட்சிகள் எல்லாம் அழகாய் தெரிந்தன‌

இதில் எதிர்கட்சி விஜயகாந்த் என்பவர் இருந்த காலமும் உண்டு

இதெல்லாம் அண்ணா என்பவர் தொடங்கி வைத்த அட்டகாசம் என்பதில் மாற்று கருத்தே இல்லை

ஆக பெரும் படை திரட்ட போகின்றேன் தம்பி என கிளம்பியவர், பெரும் யுத்தம் நடத்தபோகின்றேன் என கிளம்பியவர் வெறும் கூத்தாடி படைகளை உருவாக்கிவிட்டு தீரா சோகத்திற்கு அடித்தளமிட்டிருக்கின்றார்

அந்த அடிதளத்தில் அவர் எந்த டெல்லியினை எதிர்த்தாரோ அது தமிழகத்தை காலில் போட்டு போட்டு மிதிக்கின்றது

ஏ தாழ்ந்த தமிழகமே என தமிழகத்தை அழைத்த அண்ணா, அதை இன்னும் தாழ வழிவைத்துவிட்டே சென்றிருக்கின்றார்

மாறி மாறி யோசித்தாலும் அண்ணா பிறந்தநாளில் இதுதான் நினைவுக்கு வந்து தொலைக்கின்றது

எம்.எஸ் சுப்புலட்சுமி பிறந்த நாள்

இன்று [ September 16, 2018 ] எம்.எஸ் சுப்புலட்சுமி பிறந்த நாள். நினைவுகள் அவருக்குள் முழ்கி அப்படியே பிராமணரின் இசை அரசாங்க காலாத்திற்குள்ளும் செல்கின்றது

இசை என்பது பிரமண சொத்து , அதை பிராமணர் மற்ற சாதிக்கு தரமாட்டார்கள் என்ற பெரும் கட்டுகதை இங்கு உண்டு

இந்த பெரும் அநியாய பொய்க்கு எதிர் சாட்சியாக, மவுன சாட்சியாக நின்றுகொண்டிருக்கின்றார் இளையராஜா

மனசாட்சியுள்ள இளையராஜா.

ஆம் அவர் தாழ்த்தபட்டவர் ஆனால் சென்னைக்கு வந்து அவர் தன் இசையினை கூராக்கும்பொழுது பல பிராமண வித்வான்கள் அவருக்கு உதவியிருக்கின்றனர், ஆசானாய் நின்றிருக்கின்றனர்

பிராமணர்கள் இசையினை மற்ற சாதிக்கு தரமாட்டார்கள் எனும் மாபெரும் பொய்யினை அன்றே உணர்ந்தவர் இளையராஜா

இதனால்தான் இன்றுவரை ஆன்மீகவாதியாக நிற்கின்றார், பிராமண வெறுப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதை மனமார நம்புகின்றார். பெரியார் படத்திற்கு இசை அமைக்கமாட்டேன் என அவர் சொன்னதெல்லாம் இதற்காகத்தான்

டி.எம் சவுந்திரராஜன் முதல் இளையராஜா, ஜேசுதாஸ் என பல ஜாம்பவான்களை உருவாக்கிய பிண்ணணியில் பல பிராமணர்களும் இருந்தார்கள்

சுப்புலட்சுமி பிறந்த நாளில் இளையராஜா நினைவும் வந்து போகின்றது

திறமை எங்குள்ளதோ அது மதிக்கபடும், மாறாக பிராமணர் இசையினை கற்றுகொடுக்கமாட்டார்கள். அவர்கள் சாதி வெறியர்கள் என்பதெல்லாம் இங்கு அரசியலுக்கு செய்யபடும் பெரும் பொய்கள்


இசை என்பது ஒரு ஆசீர்வாதம், கடவுளின் வரம் மிக சிலருக்கே அந்த பிராப்தம் வாய்க்கின்றது. அதனை முறைபடி பயன்படுத்தியவர்கள் மிக பெரும் உயரத்தை அடைகின்றார்கல், தாம் பிறந்த நாட்டிற்கே பெருமை சேர்க்கின்றார்கள், அவர்களின் ஒருவர்தான் “இசை பேரரசி” என அழைக்கபட்ட எம்.எஸ் சுப்புலட்சுமி

மதுரை சன்முகவடிவு சுப்புலட்சுமி

உலகிலே தாயின்பெயரை இன்சியலாக கொண்ட மிக சிலரில் அவரும் ஒருவர், காரணம் துயரமானது. தாய் பாடகி எனினும் தந்தை சுப்பிரமணிய அய்யர் என்பதை பின்னாளில்தான் அறிந்தார், அதனால் தாயின் பெயரிலே அழைக்கபட்டார்

அவர் தாயும் நல்ல‌ பாடகர் அதனை விட வீணை வித்வான், அவரின் வீணை இசையினை ஒரு நிறுவணம் பதிவு செய்ய வந்தபொழுது என் மகள் பாடுவாள் தெரியுமா என சொல்லி, மகளை அழைத்து பாட செய்தார், கம்பெனியார் அசந்தனர், அங்கு வந்திருந்த அன்றைய ஆளுநரும் அசந்துவிட்டார். வீணை இசை பதிவு செய்ய சென்றோர் சுப்புலட்சுமியின் பாடலையும் பதிவு செய்தனர்

அன்றிலிருந்தே , அந்த 8 வயதில் இருந்தே பாட தொடங்கினார். அவரின் அசாத்திய திறனை உணர்ந்த அன்றைய பெரும் பாடல் ஆசான்களான பல பாகவதர்கள் அச்சிறுமியினை கூர் படுத்தினர்

அவருக்கு 10 வயதாக இருந்த 1926ல் சுப்புலட்சுமியின் முதல் இசைதட்டு வெளிவந்தது, கொஞ்சம் கொஞ்சமாக உலகம் அவரை அறிய தொடங்கியது

அது திரையுலகம் தொடங்கிய காலம், அன்று ஒரே தகுதி பாடல் தெரிந்தவர்களே நடிக்க வேண்டும். காரணம் பிண்ணணி நுட்பங்கள் அன்று வரவில்லை, டப்பிங் எல்லாம் இல்லை

(அதனால்தான் ராமசந்திரன் போன்றோர் அரைகிழடு ஆனபின்னே, தொழில்நுட்பங்கள் மாறியபின்னேதான் நடிகனாக முடிந்தது, யழவு தொழில்நுட்பம் வராமலே போயிருக்கலாம்)

இதனால் பாடகர்கள் மட்டுமே நடிக்கமுடியும் என்பதால் தியாகராஜ பாகவதர் ,கிட்டப்பா போன்று எம்.எஸ் சுப்புலட்சுமியும் நடிக்க வந்தார். 1936களில் நடிக்க வந்தார், அப்பொழுது சதாசிவம் என்பவருடன் காதலாகி 1941ல் திருமணமும் செய்தார்

அப்பொழுது சாவித்திரி படத்தில் நாரதர் வேடத்தில் நடிக்க கேட்டுகொள்ளபட்டார், ஆண்வேடத்தில் நடிக்க சுப்புலட்சுமிக்கு எண்ணமில்லை, சினிமா விட்டு வெளியேறும் முடிவில் இருந்தபொழுது சிக்கல் வேறுவகையில் வந்தது

சதாசிவமும், கிருஷ்ணமூர்த்தி என்பவரும் ஆனந்த விகடனின் இருந்தார்கள், பின் வெளியேறி பத்திரிகை தொடங்க எண்ணினார்கள், பெரும் பணம் தேவைபட்டது. வேறுவழியின்றி நாரதர் வேடத்தில் நடித்து பணம் கொடுத்தார் சுப்புலட்சுமி

அந்த பணத்தில் தொடங்கபட்டதுதான் “கல்கி” பத்திரிகை, அந்த கிருஷ்ணமூர்த்திதான் பொன்னியின் செல்வன் எல்லாம் எழுதிய அசாத்திய எழுத்தாளன்

இதனிடையே காந்திவாதியான சதாசிவம், சுப்புலட்சுமியினை காந்திக்கு அறிமுகம் செய்துவைத்தார். காந்திக்கு விருப்பமான பாடலை பாடி அவரை நெகிழ செய்தார் சுப்புலெட்சுமி

அதுமட்டுமன்றி 4 கச்சேரிகளிலே ஏராளமான பணம் வசூலித்து காந்திக்கு நன்கொடையாக கொடுத்தபொழுது காந்தி உருகி நின்றார், கச்சேரிகளில் அவர் வசூலித்தது 4 கோடி இருக்கலாம் என்கின்றன செய்திகள், அப்படிபட்ட வரவேற்பு அவருக்கு இருந்திருக்கின்றது

பாரதியாரின் பாடல்களுக்கு அன்றே குரல்வடிவம் கொடுத்தவர் சுப்புலட்சுமி

அதன் பின் மீரா படத்தில் அவர் பாடி நடிக்க இந்தியா எல்லாம் கொண்டாடபட்டார், 1945ல் வந்த அப்படம் வட இந்தியாவில் பெரும் வரவேற்பினை பெற்றது, அவரின் அழியா பாடலான “காற்றினிலே வரும் கீதம்” அதில்தான் வந்தது

இப்பாடலுக்கு பின் நேருவும், விஜயலட்சுமி பண்டிட்டும் சுப்புலட்சுமியினை தலைக்கு மேல் வைத்து கொண்டாடினர். இந்தியா முழுக்க பிரபலமான சுப்புலட்சுமி, காட்டுவாசிகள் மொழியினை தவிர எல்லா மொழிகளிலும் பாடினார், அப்படியே அயல்நாடுகளுக்கும் அழைப்பு வந்தது

நான் “இந்நாட்டின் சாதாரண பிரதமன், சுப்புலட்சுமி இசை உலகின் பேரரசி” என நேரு சொன்னபின் உலகம் அவரை அழைத்தது

“இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் இந்தியர் பெருமிதம் கொள்ளலாம்” என சொன்னவர் விஜயலட்சுமி பண்டிட்.

ரஷ்யாவில் அவர் பாட சென்றபொழுது, சில ரஷ்யர்கள் அவமானபடுத்தினர், ஆனால் பாடி முடித்தபொழுது கண்ணீர் மல்க அவர்முன் நின்று, உள்ளத்தை உருக்கும் பாடலை முதன்முறையாக கேட்டதாக சொன்னார்கள்

1966ல் ஐநாவில் உலக அமைதிக்காக பாட சென்றார், ராஜாஜி “லார்டு மே பார்கிவ் அவர் சின்” என்ற பாடலை எழுதிகொடுத்தார், சபையில் சுப்புலட்சுமி பாடியபொழுது அப்படி ஒரு அமைதியும் அவர் பாடி முடித்தபின் பெரும் கரகோஷமும் எழும்பின‌

இன்று சென்னை இசை நகரம் என ஐ.நா சொல்ல சுப்புலட்சுயின் அந்த பாடல் அரங்கேற்றம் மகா முக்கியமானது

எல்லா விருதுகளும் அவரை தேடி வந்தன, சங்கீத கலாநிதி பட்டத்தை வென்ற முதல் பெண் அவர்தான், பிலிப்பைன்ஸ் நாட்டின் ராமன் மகசேச விருதும் அவரை தேடி வந்தது

அந்த அளவு அவர் மக்கள் அபிமானமும், சர்வதேச கவனமும் பெற்றறிருந்தார், கேட்காமலே விருதுகள் குவிந்தன‌

அவர் பாடாத ராகமில்லை, மயங்கா உள்ளமில்லை, பெறாத விருதுகள் இல்லை.

எத்தனை பெரும் புகழை பெற்றாலும், எத்தனை பெரும் சிறப்புக்களை பெற்றிருந்தாலும் ஒருவர் காலத்திற்கு பின் எது நிலைத்திருக்கின்றதோ அதுதான் புகழ்

திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு அவர் பாடிய “கௌசல்யா, சுப்ரஜா..” எனும் பாடல் ஒலிக்கா இந்து நண்பர்கள் வீடு ஏதும் உண்டா? அது அவர் பாடியது, அனுதினமும் அவர் குரல் எல்லா வீடுகளிலும் துயில் எழுப்புகின்றது

இதற்கு நன்றிகடனாக திருப்பதியிலே அவருக்கு சிலை வைத்தது தேவஸ்தானம்

ராஜாஜியின் புகழ்மிக்க வரிகளான ‘குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா” என்ற வரிகளை குரலாக்கி தேனமுதமாக அவர்தான் மாற்றினார், இன்றும் பலமுறை கேட்டாலும் ரசிக்கதக்க பாடல் அது

மகாத்மா காந்தியின் விருப்பபாடலான வைஷ்ணவ ஜனதோ பாடலை இன்றும் நிறுத்தியிருப்பது அவர் குரல்தான்

மதுரையில் பிறந்த அந்த தமிழச்சி தன் இசையால் உலகம் முழுக்க பெரும் பெயர் பெற்றார், பெரும் அடையாளமிட்டார், இத்தேசத்திற்கு பெரும் கலைச்சேவை செய்து மங்கா புகழ் அடைந்தார்

இதனால் அவருக்கு பாரத ரத்னா எனும் மிக உயரிய விருதை இத்தேசம் கொடுத்து கவுரவித்தது

தன் வாழ்வில் தன் தாயும், தன் கணவருமே தன்னை உருவாக்கியவர்கள் என சொல்லிகொண்டிருந்த எம்.எஸ் சுப்புலட்ச்சுமி சாதாசிவம் 1997ல் இறந்தபின் பாடவில்லை

அவர் இல்லாமல் பாடுவதில்லை எனும் வைராக்கியத்திலே இருந்த அவர் 2004ல் மறைந்தார்

இன்று அவர் பிறந்த நாள்.

தமிழகத்து இசையான கர்நாடக (கரைநாடக) இசையினை உலகெல்லாம் கொண்டு சென்று பெரும் புகழை தனக்கும் தமிழகத்திற்கும் கொண்டுவந்தவர் அவர்

ஆணாதிக்கம் நிறை உலகில் அவற்றை எல்லாம் உடைத்தெறிந்து பெரும் பிம்பமாக எழும்பிய பெண் அவர். இசைக்கு ஆண்பெண் பேதமில்லை என நிரூபித்துகாட்டியவர் அவர்

தனக்கு கிடைத்த இசை வரத்தை சமூகம், நாட்டு விடுதலை போராட்டம், சினிமா, மதம் , நாடு என எல்லாவற்றிற்கும் பயன்படுத்திய பாடகி அவர். மறுக்க முடியாது

இசை அரசி சுப்புலட்சுமி மறைந்தாலும் அவர் பாடல்கள் மூலம் அவர் நம்முடன் வாழ்ந்துகொண்டே இருப்பார்

காற்றினிலே வரும் கீதம் கேட்டு கொண்டே இருக்கும்”

Image may contain: 1 person, eyeglasses

தமிழக நீதிமன்றம்

கும்பகர்ணனை போல் தூங்க கூடாது : தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

அட அவனாவது 6 மாதம் விழித்திருப்பான், இவர்கள் அதுவுமில்லை

இந்த விபீஷ்ணன் வேலை செய்யாமல் தமிழக அரசு சுதந்திரமாக செயல்படுவது நல்லது என நீதிமன்றம் சொல்லி இருக்கலாம்


எச்.ராசா உச்சநீதிமன்றமாவது மயிராவது என பேசிவிட்டாராம் உடனே கைது செய்ய வேண்டுமாம் அடுத்த சர்ச்சை ஆரம்பித்துவிட்டது

எச்.ராசா மேல் சர்ச்சைகளுக்கு குறைவே இல்லை, சில இடங்களில் அவரின் அடாவடி அதிகம். ஆனால் இந்த மயிராவது என சொல்லிவிட்டார், அதனால் நீதிமன்ற அவமதிப்பு என்பதெல்லாம் நகைக்க வைக்கும் ரகம்

நீதிமன்ற அவதிப்பு என ராசாவினை கைது செய் என சொல்பவர்கள் யாரென பார்த்தால் பெரியார் மற்றும் திராவிட கும்பல்

பெரியார் முன்பு என்ன சொன்னார்?

“உச்சநீதி மன்றம் அல்ல உச்சகுடுமி மன்றம்” என்றார், உச்ச குடுமி என்றால் உச்சி மயிர் என்றே பொருள், ஆக பெரியார் சொன்னதைத்தான் ராசா சொல்லியிருக்கின்றார்

ராசா தடையினை மீறி இருந்தால் நிச்சயம் கைது செய்திருக்க வேண்டும், கல்லகுடியில் கலைஞரும் இன்னும் பல இடங்களில் திமுகவினரும் தடையினை மீறியபொழுது கைது செய்யத்தான் பட்டார்கள்

சட்டம் ஒழுங்கு என்பது மக்கள் அமைதியாக வாழ்வதற்கான ஏற்பாடு, அதை யார் மீறினாலும் தூக்க வேண்டியது அரசின் கடமை

காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது என பலமுறை சொன்னவர் கலைஞர், ராசாவும் அதையேதான் சொல்கின்றார்

இந்த தடை மீறுதல், காவல்துறையுடன் அடாவடி செய்தல், நீதிமன்ற உத்தரவினை எரித்தல், ஏன் அரசு சட்ட நகலை எல்லாம எரித்து மகா மோசமான வழிகாட்டியது திராவிட கும்பல்

ராசா இன்று அவர்கள் வழியே வருகின்றாரே அன்றி புதுவழி அல்ல‌

இவர்கள் செய்தால் அது போராட்டம் புரட்சி என்பதும் அதையே ராசா செய்தால் அவர் அடாவடி பார்ட்டி , தூக்கி திகாரில் போடுங்கள் என்பதெல்லாம் சரியாகாது

எனினும் எம் நிலைப்பாடு இதுதான். இங்கு எல்லா இந்து திருவிழாவும் அமைதியாக நடக்க, இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தினை தடை செய்தால் ஒன்றும் தவறே இல்லை

ஒரு விஷயம் கவனிக்கதக்கது, முன்பு திமுகவினர் இதே அடாவடி போராட்டம் மூலமே வளர்ந்தது. அதன்பின் அதே வழியில் திராவிட கட்சிகளை எதிர்க்க யாருமில்லை

இப்பொழுது அவர்கள் வழியிலே செல்கின்றார் எச்.ராசா, அவ்வளவுதான் விஷயம்


எச் ராஜா மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் – டி.ஜெயக்குமார்

வேறு யார்மீது என்றாலும் தமிழக அரசு உடனே அவதூறு வழக்கு, கடமையினை செய்தலை தடுக்கும் வழக்கு என பாய்ச்சும்

ஆனால் எச்.ராஜா மீது மட்டும் நீதிமன்றம் வீடுதேடி வந்து வழக்கு பதிவு செய்யவேண்டுமாம், அரசு கண்ணை மூடி கொண்டு இருக்குமாம்


பெரியார் கல்லடிபட்டு இயக்கம் வளர்த்தார், கலைஞர் பல இடங்களில் சாவின் எல்லைக்கு சென்று திரும்பினார், அந்த அளவு கொலைமுயற்சி கூட நடந்தது

அப்படி எல்லாம் தாங்கித்தான் அவர்கள் இயக்கம் வளர்ந்தது

ஆனால் டிவிட்டரில் ஏதும் சொல்ல வேண்டியது, சர்ச்சை வந்தால் அது அட்மின் என ஒதுங்குவது

வசமாக விடியோவில் சிக்கிவிட்டால் அது என் குரல் அல்ல என பதுங்குவது எல்லாம் 4 வோட்டை கூட பெற்று தராது

விரைவில் எச்.ராசா என்பவர் கட்சியில் நானே இல்லை அது என்போல் வேறொருவர் இருந்து சர்ச்சை செய்கின்றார், “நான் அவன் அல்ல” என கதறும் காலம் வரும்

—————————————————————————————————————————————–

பொது இடங்களில் மிக‌ கவனமாக பேச வேண்டும், எச்.ராசா சர்ச்சை குறித்து சீமான் கருத்து : செய்தி

சொல்வது யாரென பார்த்தால் அங்கிள் சைமன், அவரெல்லாம் எச்.ராசாவிற்கு அறிவுரை சொல்வதுதான் பரிதாபம்

சாத்தான் வேதம் ஒதுவது போல் என்பார்கள், ஆனால் அங்கிள் சைமனின் அட்டகாசம் சாத்தான் கோவிலில் பூசை நடத்துவது போல் உள்ளது


நாம் அடிக்கடி சொல்வதுதான், இந்த பாஜக கும்பலுக்கு தமிழகத்தில் கட்சி வளர்க்க வேண்டும் என்ற ஆசையே கிடையாது

இந்த எச்.ராசா என்ன செய்யவேண்டும்? பராசக்தி சிவாஜி ஸ்டைலில் சொல்ல வேண்டும்

“ஆம், அந்த மன்றத்தை மயிர் என சொன்னேன், எதற்காக? காவேரி சிக்கலில் அந்த தீர்ப்பினை கன்னடன் மயிறுக்கு சமமாக மதித்தானே அதற்காக

ஜெயா செத்தபின் வந்த தீர்ப்பு அவர் மயிறுக்கு சமானம் ஆயிற்றே அதற்காக‌

அன்றே இந்த காட்டத்தை காட்டி இருக்க வேண்டும், காவேரியினை காப்பாற்றி இருக்க வேண்டும், ஜெயாவினை பிடித்து உள்ளே போட்டிருக்க வேண்டும் காப்பாற்றி இருக்க வேண்டும் சட்டத்தை நீட்டுவோர்

செய்தார்களா?

ராஜிவ் கொலையிலே ஒருவருக்கும் தண்டனை இல்லை என்றபின் இந்த மன்றம் எதற்கு சமம், மயிறுக்குத்தான் சமம்

எல்லா மதத்தையும் சமமாக நடத்தவேண்டும் என்கின்றது சட்டம், ஆனால் தமிழக அரசியல்வாதிகளோ பக்ரீத்துக்கு கஞ்சி குடிக்கின்றார்கள், கிறிஸ்மஸுக்கு கேக் வெட்டுகின்றார்கள்

ஆனால் இந்துபண்டிகை என்றால் மட்டும் ஓடி ஒளிகின்றார்கள், இவர்கள் எப்படி தேர்தலில் நிற்க நீதிமன்றம் அனுமதிக்கின்றது?

தமிழகத்தின் அட்டகாசம் பொறுக்க முடியாமல் நானே களமிறங்கினேன், பேசினேன் போடா மயிறு என்றார்கள்

பாதிக்கபட்டேன், நானே பாதிக்கபட்டேன், போராடினேன் , பிள்ளையார் ஊர்வலத்தில் பங்குபெற்றேன் எதற்கு கொழுகட்டை தின்னவா அல்ல? கொலுபிள்ளையாரை கரைக்க‌

ஆனால் தடுத்தார்கள், சட்டத்தை காட்டி பயமுறுத்தினார்கள். என் தாய்க்கு சமமான மத ஊர்வலத்தை தடுக்கும் சட்டம் மயிறுக்கு சமம் என்றேன்

அஹிம்சா மூர்த்தி, ஜீவகாருண்ய சீலர் மகாத்மா காந்தியே பல இடங்களில் சட்டத்தை மீறி கைதாகி இருக்கின்றார், அதெல்லாம் வரலாறு ஆனபொழுது இது எப்படி குற்றமாகும்?

குற்றம் என்றால் தண்டியுங்கள் கொற்றவனே, ஆனால் என் உரிமை குரல் நிற்கபோவதில்லை, கம்பிகள் இடையேயும் நான் என் குரலை உயர்த்திகொண்டே இருப்பேன்

தூத்துகுடியிலே 13 பேரை சுட்டார்கள், இங்கும் சுட எவ்வளவு நேரமாகும், ஆயினும் சென்றேன் எதற்காக? என் கடமையினை நிறைவேற்ற அதுவா குற்றமாகும்?

அவர் மட்டும் தண்டவாளத்தில் தலைவைத்து படுக்கலாம் ஆனால் சாலையில் நான் நடந்து செல்ல கூடாதா?

சென்றேன் , தடுக்கபட்டேன், மிரட்டபட்டேன். சத்தியத்தை தவிர எதற்கும் அஞ்சாத என்னை சட்டத்தை காட்டி மிரட்டினார்கள். அதனால்தான் சொன்னேன் என் உயிரே என் மயிறுக்கு சமானம் என்றபொழுது சட்டமெல்லாம் எனக்கு என்னாகும்?

நீங்கள் எல்லாம் நினைப்பீர்கள் நான் மறுப்பேன் என்று இல்லை சத்தியாமாக இல்லை

நீதிமன்றத்தை மதிக்காத கன்னடனையும், இன்னும் பல இடங்களில் நீதிமன்ற தீர்ப்பை கண்டு கொள்ளாதவர்களின் உச்சி மயிரை பிடித்து இழுத்துவிட்டு என்னிடம் வாருங்கள்

இதே தமிழகத்தில் இந்த மன்றத்தை நான் மயிர் என சொன்னதற்காக தடுத்துவைக்கபட்டு இங்கே நிறுத்தபட்டிருக்கின்றேன்

ஆனால் இதே தமிழ்மண்ணில் ராமர் படம் முதல், இதே மன்றத்தின் சட்ட நகல்வரை எரிக்கபட்டதே கணவான்களே, அப்பொழுதெல்லாம் தலையினையா எடுத்தீர்கள்? மாறாக தலைகோதி சிறைக்கு அனுப்பினீர்கள்

என்னையும் அப்படி அனுப்புங்கள், சிறை என்னை என்ன செய்யும்? பகவான் கண்ணனே சிறையில்தான் பிறந்தார், சீதையின் சிறைவாழ்வே ராமாயணம் கொடுத்தது

எல்லோரும் சட்டத்தை மீறலாம், ஆனால் நான் மட்டும் மீறகூடாது என்றால் அந்த தவறை ஆயிரம் முறை செய்வான் எச்.ராசா.

நான் சட்டத்தை மயிர் என்றேன் என்கின்றார்கள், அவர்களோ தமிழிசையின் தலை மயிரை அடிக்கடி சிலாகிக்கின்றார்கள் அதற்காக தமிழிசை தலையும் சட்டமும் ஒன்றாக நோக்குகின்றார்கள் என நான் குற்றம் சாட்டுகின்றேன்…”

இதையும் மீறி ராசாவினை சிறையில் அடைத்தால் அவர் என்ன கேட்கலாம், பாளையங்களோட்டை சிறையினையும் கூடவே 2 பல்லி, பல் பிடுங்கிய பாம்பு, 3 கரப்பான் பூச்சிகளையும் கேட்கலாம்

எதற்காக?

பின்பு தேர்தலில் “பாளையங்கோட்டை சிறையினிலே, பாம்புகள் பல்லிகள் நடுவினிலே” என பாட்டுபாடி பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும்

இதெல்லாம் தமிழகத்தில் செய்து கட்சியினை வளர்க்க வேண்டிய ராசா, எல்.கே,ஜி பையன் போல கண்ணை கசக்கி கொண்டிருக்கின்றார்

பின் எப்படி தாமரை மலரும்?

Image may contain: 1 person, smiling, closeup

சிதறல்கள்

செவ்வாய் கிழமை என்றால் இப்படித்தான் செக்க சிவந்து இருக்க வேண்டும்

செவ்வாய் கிழமையில் “செவ்வாய் நல்லாள்” தரும் அபூர்வ தரிசனம்..

Image may contain: 1 person, smiling, standing
—————————————————————————————————————————————–

“வெண்தாடி வேந்தர் மோடி” என்றவுடன் பகீரென்றது, ஆனால் உற்று பார்த்தால் “கதைகளின் கதை” என நிகழ்ச்சி பெயரை சொல்கின்றார்கள்

கதைதானே, வேறு எப்படி இருக்கும் இப்படித்தான் இருக்கும்

காமெடி கதை போல…

(ஆனாலும் வைகுண்டராஜன் அண்ணாச்சி தாதுமணல் உரிமத்திற்காக இப்படி மோடியினை வெண்தாடி வேந்தர் என்றெல்லாம் சொல்வது கொஞ்சம் ஓவர்தான்

ஒருவேளை லைசென்ஸ் கிடைத்துவிட்டால் அண்ணாச்சி டிவிக்கு மோடி தாடி வைத்த காந்தியாக‌ தெரிவார் போல..)

Image may contain: 1 person, text
————————————————————————————————————————————

அதிமுக தொண்டர்கள் கைகாட்டுபவரே பிரதமர் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

மிஸ்டர் பழனிச்சாமி , மக்கள் கைகாட்ட வேண்டாமா?

எங்கே? மக்களை கைகாட்ட சொல்லுங்கள் பார்க்கலாம், உங்களை நோக்கி செருப்பைத்தான் காட்டுவார்கள் பரவாயில்லையா?.


“பங்கு, தமிழ்நாட்டில என்ன சத்தம்? அந்த ராசா ஏதோ குழப்பிட்டு இருக்காராம் என்னாச்சி?

பங்காளி, 4 நாளா பெட்ரோல் விலை அது இதுன்னு ஒரே சத்தம், என்ன செய்யலாம்னு யோசிக்கும் போது விநாயகர் கிடைத்தார். அதை வைத்து நமது கட்சிக்காரர்கள் விஷயத்தை திருப்பிவிட்டார்கள். எப்படி நமது ராஜதந்திரம்?

அட்டகாசமான திட்டம் அமித், இதற்குத்தான் தமிழகத்தில் அவர்களை வைத்திருக்கின்றோமா?

பின் ஆட்சியினை பிடிக்கவா வைத்திருக்கின்றோம், இவர்களால் நமக்கும், நமது அடிமை பழனிச்சாமிக்கும் எவ்வளவு அனுகூலம் தெரியுமா

அப்படியா?

பின்னே பெட்ரோல் விலை இன்று 85ஐ தாண்டிற்று, ஆனால் தமிழ்நாட்டில் பூரா பயலும் எச்.ராசா என்றே ஊளையிட்டுகொண்டிருக்கின்றான், அவரையோ அவர் ஆட்சி ஊழலையோ பெட்ரோல் விலையினையோ ஒரு பயலும் கண்டுகொள்ளவில்லை

ராமர், விநாயகர் என ஏகபட்ட தெய்வங்கள் இருப்பதன் மகத்துவம் இப்பொழுதுதான் நமக்கு புரிகின்றது பங்கு, ஓவ்வொரு தெய்வத்தையும் வைத்து ஒவ்வொரு அரசியல் செயலாம்

எப்படியோ பங்கு இந்த எச்.ராசாவுக்கும் தமிழிசைக்கும் பாரத ரத்னா கொடுத்துவிட வேண்டும். தமிழக மக்களை திசைதிருப்ப எப்படி எல்லாம் உழைக்கின்றார்கள்?, அந்த பாரத ரத்னாவினை இருவருக்கும் கொடுக்காவிட்டால் அந்த பாவம் நம்மை சும்மா விடாது, விடவே விடாது”

Image may contain: 2 people, beard and text
—————————————————————————————————————————————–

இப்பொழுதெல்லாம் திமுகவினருக்கு சிசிடிவியும் பாஜகவினருக்கு கேமராவும் மகா அலர்ஜி

இப்பொழுதெல்லாம் கேமராவினை கண்டால் கொஞ்சமும் அச்சமின்றி வந்து நிற்பது பழனிசாமி & கோ

ஆம், எல்லாவற்றையும் துறந்த ஜென் நிலைக்கு சென்றுவிட்டார்கள்


திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களின் நிம்மதி போய்விடும் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா செத்ததற்கே கமிஷன் வைத்து விசாரிக்கின்றார்கள், இதை விட என்ன கொடுமை வேண்டும்

மிஸ்டர் பழனிச்சாமி, திமுக ஆட்சியில் நிம்மதி எப்படி பறிபோகும்? இப்பொழுது நிம்மதியாக இருந்தால்தானே பறிபோகும்?

மக்கள் உயிராவது இந்த ஆட்சியில் மிஞ்சுமா என கடும் கவலையில் இருக்கும்பொழுது முதல்வருக்கு காமெடி வருகின்றது

நிச்சயம் திமுக ஆட்சி இந்த ஆட்சியினை விட மகா சிறப்பானதாகவே அமையும்

இதனை விட மோசமான ஆட்சியினை கொடுக்க செத்து போன இடி அமீனாலும் முடியாது என்பதால் நீங்கள் தைரியமாக வீட்டுக்கு செல்லலாம் பழனிச்சாமி