சிதறல்கள்

பெரியார் சிலை அவமதிப்பு: தூண்டியோர் மீதும் கடும் நடவடிக்கை தேவை; ராமதாஸ்

பெரியார் சிலைக்கே இந்தபாடு என்றால், விரைவில் இவர் திறக்க இருக்கும் காடுவெட்டி குருவின் சிலை என்ன பாடுபடும்?

அந்த பயம் டாக்டருக்கு இருக்குமா இருக்காதா?


அடேய் ஆண்டிபெரியார்ஸ் பண்டாரங்களா…

இங்கு பெரியாரின் சித்தாந்தமோ இல்லை அவரின் கொள்கைகளோ அரசியலை பிடிக்கவில்லை, ஆட்சி அமைக்கவில்லை

ஆட்சியினை பிடித்தது சினிமா, இன்றுவரை அதை ஆட்டிவைப்பதும் சினிமா, ஏதோ பெரியார் தங்கள் அரசியல் வாழ்வினை தொடங்கியதற்காக சில காரியங்களை செய்தார்கள், அத்தோடு பெரியாரை தூக்கி வீசினார்கள்

பெரியார் சொன்ன மகத்தான சிந்தனையில் ஒன்று “கூத்தாடிகளை அரசியலில் சேர்க்காதீர்கள்” குறிப்பாக ராமசந்திரன் சுடபட்டபொழுது பெரியார் தீர்க்கமாக சொன்னார்

“இரண்டு கூத்தாடிபயலுக சுட்டுகொண்டதை அரசியலாக்குற அளவு, அந்த ராமசந்திரன் எனும் நடிகனுக்காக இந்த மாகாணமே பதறுற அளவு நாடு கெட்டு போச்சுங்க”

பக்தவச்சலத்திற்கு பின் வந்த சினிமாக்காரர் அல்லாத முதல்வர்கள் பன்னீரும் பழனிச்சாமியும் என்றால் நீங்களே பார்த்துகொள்ளுங்கள்

பெரியாரை திட்டாதீர்கள், அவரை வைத்து அயோக்கிய அரசியலை சினிமா முகங்களை காட்டி செய்த இன்னும் செய்ய துடிக்கும் அயோக்கியர்களை திட்டுங்கள்

அவரை வைத்து பிழைப்பு நடத்துபவனை திட்டுங்கள்

பெரியாரே ஒரு கட்டத்தில் தேசியவாதி காமராஜரைத்தான் ஆதரித்தார் , தன்னால் வளர்ந்த கூட்டத்தை தள்ளியே வைத்திருந்தார்,

இறுதிவரை அவர்களோடு சேரவுமில்லை அவர்களை அழைக்கவுமில்லை என்பதை மறக்காதீர்கள்

இங்கு உடைக்க வேண்டியது பெரியார் சிலையினையோ இல்லை அவரின் சிந்தனையினையோ அல்ல. அதெல்லாம் வேறுரகம்

மாறாக ஒழிக்கவேண்டியது சினிமா எனும் சாக்கடையினையே அன்றி வேறல்ல‌

தமிழ்நாட்டை நாசமாக்கியது நிச்சயம் பெரியார் அல்ல, இந்த சினிமா கூட்டமே

இடிப்பதாக இருந்தால் திரையரங்குகளை இடியுங்கள், செருப்பு வீசுவதாக இருந்தால் அந்த சினிமாக்காரர்கள் மேல் வீசுங்கள்.

(குஷ்புவினை மட்டும் விட்டுவிடுங்கள்)

அதை செய்யாமல் பெரியார் மேல் வன்மம் கொண்டு அலைவது அறிவுடமை ஆகாது

————————————————————————————————————————————-

நீதிமன்றத்தை விமர்சித்த விவகாரம்: ஹெச்.ராஜா ஆஜராக உத்தரவு

கோர்ட்டில் “நான் அவன் இல்லை” என அன்னார் வசனம் பேசுவார் என எதிர்ப்பார்க்கலாம், இதனால் ஒரிஜினல் எச்.ராசாவினை பிடிக்க கோர்ட் உத்தரவிடலாம்


எல்லா மாநில அரசுகளும் பெட்ரோலுக்கான வரியினை இரண்டு ரூபாய் குறைக்கும் பொழுது பழனிச்சாமி அரசு மட்டும் அப்படி குறைக்காமல் மாறாக அரசு பணியாளர்களுக்கு அகவிலைபடி 2% அதிகரித்துள்ளது

இந்த பழனிச்சாமிதான் முன்பு அரசு ஊழியர்களால் பெரும் நிதி இழப்பு ஏற்படுகின்றது என்றவர், இப்பொழுது அவர்தான் படியினையும் உயர்த்தி இருக்கின்றார்

அரசு ஊழியர்கள் மட்டும்தான் தமிழக மக்கள் என நினைத்துகொண்டார் போலும்


பேசியதை கூட “ஆமாம் நானே பேசினேன்..” என ஒப்புகொள்ள தைரியம் இல்லாதவர்கள் எல்லாம் பாகிஸ்தானை பிடித்து அகண்ட பாரதம் அமைத்து சீனாவினை பிடித்து சீறும் பாரதமும் அமைப்பார்களாம்

அட அது டப்பிங் வேலையாகவே இருக்கட்டும், ஆம் நானே சொன்னேன் என தைரியமாக சொல்லி ஸ்கோர் செய்ய வேண்டாமா? அது அல்லவா அரசியல்..

இவர்களை எல்லாம் நம்பி ராமர் வேறு அயோத்தியில் அனாதையாக நிற்கின்றார்


இன்று எடப்பாடி பழனிச்சாமியின் ஊழல் அரசை கண்டித்து, தமிழகமெங்கும் திமுக போராட்டம் நடத்துகின்றது, நிச்சயம் செய்யவேண்டிய போராட்டம்.

ஆனால் ஒரு பத்திரிகை பரபரப்புமில்லை அதனை பரவலாக்கவில்லை

இதுவே திமுக உட்கட்சி தகறாறு என்றால் ஆளாளுக்கு செய்தியாக வெளியிட்டு கொண்டே இருப்பார்கள், பிளாஷ் நியூஸ் எல்லாம் ஓடும்

அட அதுகூட வேண்டாம், திமுக உறுப்பினர் எங்காவது காமிராவில் சிக்கினாலும் போதும், ஓடிவந்து குவிவார்கள்

ஏன் என்றால் அப்படித்தான்


 

நாளை ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன, பரபரப்பிற்கு பஞ்சமில்லா ஆட்டமிது

இப்பொழுதுவரை பெரியார் வாழ்க, திராவிடம் வாழ்க என சொல்பவன் பூரா பயலும் நாளை இந்தியா வாழ்க , இந்தியா வெல்க என சொல்லிகொண்டிருப்பான்

அவனுக்கு கைதட்ட ஓரு சீசனும், ரீசனும் வேண்டும் அவ்வளவுதான்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s