பெரியாரின் தமிழ் சீரமைப்பு காலத்தின் தேவை

பெரியார் பிறந்தநாள் அதுவுமாக அவர்மேல் ஏகபட்ட பழிகளை சுமத்துகின்றார்கள்

எப்படி?

பெரியார் தமிழை சீரமைகின்றேன் என கெடுத்தார், தமிழை கொன்றார் என ஏகபட்ட குற்றசாட்டுகள்

காலத்திற்கு ஏற்ப மொழிமாறும், பெரியார் காலத்து தமிழ் சங்க காலத்து தமிழ் அல்ல, அது மாறி இருந்தது. சம்ஸ்கிருதமும் இன்னும் என்னவெல்லாமொ கலந்திருந்தது

ஏட்டு தமிழுக்கும் தமிழர் பேசும் தமிழுக்கும் ஏக சிக்கல் இருந்தது, உதாரணம் “ஸ்ரிமான்களே பந்து மித்திரருடன்” என எப்படியோ இருந்தது

இன்னொன்று பலருக்கு தமிழ் பேச தெரியுமே தவிர எழுதபபடிக்க தெரியாது

பெரியார் பாமரர்களும் படிக்க எளிய தமிழில் பத்திரிகை நடத்தினார், அதனால் தமிழில் சில சமரசங்களை செய்தார்

இது ஒன்றும் வரலாற்றில் புதிதல்ல, இங்கிலாந்திடம் இருந்து விடுதலைபெற்ற அமெரிக்கா ஆங்கிலத்தில் இதனைத்தான் செய்தது, மொழியினை எளிமையாக்கியது

விளைவு அம்மக்கள் வாசித்தார்கள், சிந்தித்தார்கள் அமெரிக்கா வளர்ந்தது

பெரியாரும் இங்கு அதைத்தான் செய்தார், அவர் பாமர தமிழில் எழுதியபின்புதான் இங்கு வாசிக்கும் பழக்கம் வந்தது, மேட்டுகுடி இங்கு அப்படித்தான் சரிந்தது

பெரியாரின் தமிழ் சீரமைப்பு காலத்தின் தேவை,

பாமரனும் வாசிக்கும் பழக்கம் பெரியாரால் தொடங்கிவைக்கபட்டது சந்தேகமில்லை

அக்கால தமிழ் அப்படி ஒரு மேட்டிமையுடன், சம்ஸ்கிருதம் கலந்து யாருக்கும் புரியாமலே இருந்தது, நிச்சயமாக சொல்லலாம் , ஏன் இப்பொழுது படித்தாலும் நமக்கே புரியவில்லை

வேண்டுமென்றால் அக்கால சுதேச மித்திரனையும், பெரியாரின் விடுதலை , குடி அரசு பத்திரிகைகளை படியுங்கள் புரியும்

அடுத்து பெரியார் இட ஓதுக்கீடு கேட்டு சமூகத்தை சீரழித்தார் என்கின்றார்கள், உண்மையில் இட ஒதுக்கீடு கேட்டது நீதிகட்சி, பெரியார் அதன் தொடர்ச்சியினைத்தான் செய்தார்

தாழகிடக்கும் எல்லா இனங்களையும் கை தூக்கிவிட இலங்கை முதல் பல நாடுகளில் இட ஒதுக்கீடு இன்றும் உண்டு

இதுபோக பெரியார் ஒழுக்கம் இல்லாதவர் என்கின்றது ஒரு கும்பல், அப்படி அவர்கள் வீட்டில் எந்த முப்பாட்டி கையினை பிடித்து இழுத்தார் பெரியார் என்பதுதான் தெரியவில்லை

பெரியார் பெண்களை சுதந்திரமாக சிந்திக்க சொன்னார், பெண் விடுதலையினை பெரியாருக்கு முன் பாடியவர் பாரதியார், எப்படி எல்லாமோ சாடினார்

ஆனால் பாரதியினை மறைத்துவிட்டு பெரியாரின் பெண் விடுதலையினை ஒழுக்கம் கெட்ட செயல் என்பது கடுமையான பிற்போக்குதனம்

இந்த உலகில் பெண்களை சரிசமமாக நடத்தும் நாடுகளே இன்று உச்சத்தில் இருக்கின்றன, பெண்களை அடிமையாக நடத்தும் நாடுகள் எல்லா ஆப்கானிஸ்தான் லெவல்

பெரியார் அதைத்தான் செய்ய சொன்னார், தமிழக பெண்கள் ஐரோப்பிய பெண்களை போல் தன் சொந்த காலில் நிற்கவேண்டும், யாரையும் எதிர்பார்க்க கூடாது என்றார்

இது எப்படி தவறாகும்?

பெரியாரின் ஒழுக்கம் எதில்கெட்டது என்றால் மணியம்மையினை திருமணம் செய்தது தவறாம், தத்து எடுத்திருக்க வேண்டுமாம்

பெரியார் தனக்கு வாரிசு வேண்டுமென தவித்தபொழுது அவருக்கு வயது ஏறிற்று, அந்த கலகக்காருடன் முன்பின் தெரியா பெண் ஒருத்தி குடும்பம் நடத்துவது நிச்சயம் சரிவராது

வயதான கிழவனை மணக்க எந்த இளம்பெண் முன்வருவாள்?அதுவும் சமூக கலகக்காரனை மணக்க யார் வருவா? நிச்சயம் வாய்ப்பே இல்லை

இவர்கள் எல்லாம் இக்காலத்தில் வந்தது பெரியாரின் தவறு அல்ல‌

இன்னொன்று மணியம்மையினை அவர் தத்தெடுக்க அக்கால சட்டங்கள் எல்லாம் குறுக்கே நின்றது

இதனை எல்லாம் யோசித்துத்தான், ராஜாஜியின் ஆலோசனையில்தான் பெரியார் மணியம்மையினை மணந்தார்

மணியம்மைக்கே அதில் ஒரு தயக்கமுமில்லை எனும்பொழுது இவர்கள் ஏன் குதிகின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை

பெரியார் ஏதோ தன் சகாக்களுடன் மணமேடையில் இருந்த மணியம்மையினை கடத்தி வந்து கதற கதற தாலிகட்டியது போல குற்றம் சாட்டுகின்றார்கள்

பெரியார் பெரும் அறிவாளி, தீர்க்கதிரிசியும் கூட, அன்றே அவருக்கு உலக அறிவு நிரம்ப இருந்தது

உலகெல்லாம் சுற்றி அந்நாடுகள் நிலையினையும் தமிழக நிலையினையும் ஒப்பிட்டு பார்த்தார்

அந்த ஐரொப்பிய சுதந்திர மனப்பான்மையில் , சாதி கடந்து மதம் கடந்து, பெண்களை மதிக்க கூடிய சமூகம் உருவாக வேண்டும் என கனவு கண்டார், அதற்காக உழைத்தார்

இறுதிவரை உழைத்தார்

அதனை போற்றவேண்டுமே தவிர தூற்ற கூடாது

பெரியாரை இப்படி எல்லாம் குற்றம் சாட்டுவது யாரென கண்டால் மதவெறியர்கள்

இவர்களுக்கு என்ன வேண்டும் என்றால் ஆப்கன், ஈரான், இன்னபிற நாடுகள் மத இறுக்கத்தால் சீரழிந்துகிடப்பது போல இத்தேசமும் தமிழகமும் சீரழிந்து கிடக்கவேண்டும் என்பது அவர்களின் சீழ்பிடித்த சிந்தையின் ஆசை

அது நடக்கவில்லை என்ற வயிற்றெரிச்சலில் பெரியாரை திட்டிகொண்டே இருக்கின்றார்கள்

பெரியார் விரும்பியது பிரான்ஸ் போல, அமெரிக்கா போல சுதந்திர மனப்பான்மையும், பெண்ணை சரிசமமாக நடத்தும் ஒரு சமூகம்

அதுதான் இவர்களுக்கு பொறுக்கவில்லை என்றால் பெரியார் அவர்களுக்கு பிடிக்காமலே போகட்டும்

இவர்களுக்கெல்லாம் என்ன வயிற்றெரிச்சல் என்றால், அந்த கிழவன் இவ்வளவு பெரும் கூட்டத்தை கூட்டிவிட்டான், செத்து இத்தனை வருடமானாலும் அவனின் சிலையினை கூட தொடமுடியவில்லை எனும் வருத்தமும் கோபமும் அழுகையுமன்றி வேறல்ல‌

அவர்கள் சாதி இல்லாமலும், மனிதரை சரிசமமாக நடத்தியும், பெண் சுதந்திரத்தை காத்தும் இருந்தால் பெரியார் ஏன் எழும்பபோகின்றார்? அவருக்கு பின் இவ்வளவு கூட்டம் திரள போகின்றது

அதை எல்லாம் அக்கும்பல் யோசிப்பதில்லை

முதலில் உங்களை சரிபடுத்துங்கள், இல்லையேல் பெரியார் வழியில் பலர் வந்துகொண்டே இருப்பார்கள்

அதுவும் விநாயக சதுர்த்தி அலப்பறைகளை கண்டு இப்பொழுதே பலர் பெரியாருக்கு மாலை போட்டு வணங்கி கொண்டிருக்கின்றனர்

பெரியாரை இன்னும் இங்கு இருக்க வைப்பதும், அவரை தேட வைப்பதும் இக்கும்பலே அன்றி பெரியார் அல்ல.

Image may contain: one or more people, beard and smoking
————————————————————————————————————————————

பெரியார் சிலை மேல் ஆங்காங்கு செருப்பையும், இன்னும் சிலவற்றையும் எறிந்துவிட்டார்களாம், அவர்களை மாவீரர்கள் என ஒரு கூட்டம் சொல்லி கொண்டிருக்கின்றது

வாழும் காலத்தில் தன் போராட்ட வாழ்வில்மட்டும் பெரியார் மலர் மாலைகளை மட்டுமா பெற்றார்?

அப்பொழுதும் அவருக்கு செருப்பும், கற்களுமே பரிசாக மேடைக்கு வந்தன, அப்பொழுது எறிந்தவன் யாரென தெரியாது என்பது வேறு விஷயம்

வாழும் காலத்திலே செருப்புகளையும் கற்களையும் பெற்ற பெரியாரின் சிலைக்கு இப்பொழுது செருப்பு விழுகின்றது என்றால் அவர் இன்னும் அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கின்றார், போராடி கொண்டிருக்கின்றார் என்றுதான் பொருள்


ராமசந்திரனும், ஜெயலிதாவும் ஏதோ தனிமனித ஒழுக்கத்தில் கரை கண்டவர்கள் போல இந்த பதர்களில் சில பெரியார் ஒழுக்கம் கெட்டவர் என சொல்லிகொண்டிருக்கின்றன‌

ராமசந்திரன், ஜெயா ஒழுக்கம் பற்றி எவனாவது பேசுவானா என்றால் பேசமாட்டான், பெரியார் என்றவுடன் ஒழுக்கம்ம்ம்ம் என ஓடிவருவான்

பெரியார் இரு மனைவிகளை கட்டினார், ஆனால் கைவிடவில்லை

மனைவியினை விட்டுவிட்டு சமூகத்தை காக்கின்றேன் என ஓடிவருவதா ஒழுக்கம்?

அப்படிபட்டவர் பிரதமராய் இருக்கும்பொழுது கட்டிய மனைவியினை காப்பாற்றாத, இல்லற ஒழுக்கத்தை காப்பாற்றா நீரா நாட்டை காப்பாற்ற போகின்றீர் என் ஒருபயலும் கேட்கவில்லை

ஆனால் பெரியார் என்றால் மட்டும் ஓடிவந்து ஒழுக்கம் என்ன விலை என கேட்பார்களாம்

தமிழக சட்டமன்றத்திலே திறக்கபட்டிருக்கும் ஜெயா ஒழுக்கம் பற்றி என்றாவது இவர்கள் பேசுவார்களா என்றால் இல்லவே இல்லை

பெரியாரை தவிர வேறு யாரின் ஒழுக்கமும் இவர்கள் கண்ணில் படவே படாது.


 

என்ன சொன்னாலும் பெரியார் ஒழுக்கம் என சொல்பவன் சொல்லிகொண்டேதான் இருக்கின்றான், அவரின் சிந்தனைகளை பார் என்றால் அவரின் வேட்டியினையே பார்த்து கொண்டிருக்கின்றார்
ஆனானபட்ட இயேசு மேலே விபச்சாரிகளோடு பழகுகின்றார் என்ற குற்றசாட்டு இருந்தது, அதனால் அவரின் போதனைகளை தள்ளிவைக்க முடியுமா?
ஒழுக்கம் கெட்ட யேசுவின் போதனை வேண்டாம் என உலகம் சொல்லுமா?
பெரியார் மணியம்மையினை மணமுடிக்க ஏகப்பட்ட காரணம் இருந்தது, அதை எல்லாம் விளக்கிவிட்டுத்தான், சட்ட சிக்கல்களை எல்லாம் சொல்லிவிட்டுத்தான் செய்தார்
திருமணம் என்பது தனிபட்ட விஷயம்.
சிலர் இன்னும் மேலாக அதுவும் கலைஞர் அப்படி இப்படி என ஒரே சத்தம்
கேட்டால் கண்ணதாசனின் வனமாசம் என்பார்கள், ஆனால் அவரின் வனவாசம் படியுங்கள் காமராஜரை அவர் கிழித்த கிழி இருக்கும்
கண்ணதாசன் அப்படியான மனிதராக இருந்திருக்கின்றார், உதவினால் உத்தமர் என்பதும் உதவாவிட்டால் போட்டு மிதிப்பதும் அவர் குணம்
இந்த வாஜ்பாய், பொன்னார் போல் எல்லோரும் திருமணம் முடிக்காமல் இருக்க கட்சிகள் ஒன்றும் ஆன்மீக மடம் அல்ல‌
வெளிநாட்டு அதிபர்கள் எல்லாம் மனைவியோடு அல்லது மனைவியரோடுத்தான் வருவார்கள்
கென்னடி பெண்கள் விஷயத்தில் வீக், ஆனால் இன்றுவரை அமெரிக்காவின் மிகசிறந்த அதிபர் அவர்தான்
நேரு மகா உத்தமர் அல்ல, ஆனால் இந்தியாவின் மிகசிறந்த பிரதமர் அவர்தான்
நெப்போலியனின் மஞ்ச கணக்கு சொல்லிமுடியாது ஆனால் வரலாற்றில் மிகபெரிய வீரன் அவனே
லிபிய அதிபர் கடாபியின் தனிகணக்கு பெரிது ஆனால் அவனை போல லிபியாவினை இன்னொருவன் ஆளமுடியாது
இன்றிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அதிகார பூர்வ கணக்கு மூன்று
டிரம்ப் சாதிக்காமல் இருக்கவுமில்லை சந்நியாசி மோடி சாதிக்கவுமில்லை
நாட்டை வழிநடத்த திறமை போதும் என்பதே வரலாறு சொல்வது
ஒழுக்கமானவர்கள் எல்லாம் அரசை நன்றாக நடத்தியதுமில்லை, ஒழுக்கம் கெட்டவர்கள் எல்லாம் நாட்டை வாழவைக்காமல் கெடுத்ததுமில்லை
நீங்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு என மடங்களுக்கு ஆளெடுக்கும் கட்டுபாட்டை அரசியலுக்கு விதிக்க முடியாது

ஆனான பட்ட இயேசு பிரான் மீதே தீண்டதகாத சமாரியர் பக்கம் சென்றார், பாவியான பெண்களோடு பழகினார் என்ற குற்றசாட்டு உள்ள உலகிது
பெரியாரும் அதைத்தான் செய்தார், ஆனால் ஒழுக்கம் கெட்டவர் என திட்டுகின்றார்கள்
எல்லோரும் முதுகுளத்தூர் கலவரங்களை பற்றி பேச அஞ்சி, முத்துராமலிங்க தேவரை எதிர்க்க யாருமில்லாமல் பதுங்கிய காலத்தில் , எல்லோரும் தேவரய்யா என வணங்கிய காலத்தில் மிக துணிச்சலாக “அந்த முத்துராமலிங்கம் எனும் பயலை பிடிச்சி உள்ளே போடுங்க” என சொன்னார் பெரியார், அந்த தைரியமே சமூக ஒழுக்கம்
“இது நம் கோவில் ஆனால் நாங்கள் வரமுடியாது, இது நம் கிணறு ஆனால் எங்களுக்கு நீர் இல்லை, இது பொதுதெரு ஆனால் நாங்கள் நடக்க முடியாது ஏனென்றால் நாங்கள் தாழ்ந்த சாதி” 
இது கடவுளின் ஏற்பாடாக இருக்க முடியுமா? அப்படி இருந்தால் நீங்களும் பொய், உங்கள் மதமும் பொய், அந்த ஆண்டவனே பொய் என தைரியமாக சொன்னதுதான் சமூக ஒழுக்கம்
அந்த சமூக ஒழுக்கம் பெரியாரை தவிர யாரிடமும் இல்லை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s