சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்

இந்த சைமன், திருமுருகன் காந்தி, திருமாவளவன், சத்தியராஜ், வைகோ, பழ.நெடுமாறன் போன்ற இன்னும் சிலரை பிய்ந்த செருப்போடு தேடிகொண்டிருக்கின்றேன், கைவசம் கொஞ்சம் சாணியும் இருக்கின்றது

முதலில் அவர்களை பிடித்து முகத்தில் அறைய வேண்டும், அறைந்துவிட்டுத்தான் இந்த செய்தியினை சொல்ல வேண்டும்

என்ன நடந்திருக்கின்றது?

இலங்கையோடு நல்லுறவு கொள்ள டெல்லி முடிவு செய்து, ராஜபக்சே வந்து நாங்கள் தமிழர்களை கொல்ல யுத்தம் நடத்தவில்லை, அது பிரபாகரனின் முடிவு எனசொல்லி மோடி, மன்மோகன், ராகுல் எல்லோரையும் சந்தித்துவிட்டு சென்றாயிற்று

ஆம் இலங்கையின் அடுத்த அதிபர் அவர்தான் என்ற வகையில் ராஜபக்சேயின் டெல்லி வருகை கவனம் பெற்றது

இந்நிலையில் டெல்லி அடிமையான தமிழக அரசிடமும் இலங்கையிடம் சமாதானமாக போகவேண்டும் புரிகின்றதா? என்ற கண்சிமிட்டல் டெல்லியில் இருந்து வந்திருக்கின்றது

அவர்கள் காலால் இட்ட வேலையினை தலையால் செய்துமுடிக்கும் தமிழக அரசு சும்மா விடுமா?

தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் , சைதை துரைசாமி, MGR பல்கலைக் கழக அதிபர் ஏ.சீ. சண்முகம் மற்றும் குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.

பல ஆண்டு காலத்துக்கு பின்னர் இவர்கள் அரச விருந்தினர்களாக இலங்கை வந்துள்ளனர்

கொழும்பு சென்றுவிட்டு அரச நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துவிட்டு பின்பு கண்டிக்கு சென்றுள்ளனர்

கண்டிக்கு எதற்கு? புத்தரின் பல்லை பார்க்கவா? இல்லை இவர்கள் பிதாமகன் ராமசந்திரன் பிறந்த இடத்தை பார்த்து பல்லை காட்டுவதற்கு

இப்படியாக இலங்கையினை சுற்றி சுற்றி வந்து சிங்கள அரசுடன் கைகுலுக்கி தோள்மேல் கைபோட்டு, பால்சோறு தின்று ஹாயாக பொழுதை போக்கி பரிசையும் வாங்கி சுற்றுகின்றார்கள்

இப்பொழுது இந்த ஈழ அழிச்சாட்டிய கும்பலை பிடித்து நாம் கேட்கும் கேள்வி இதுதான்

இலங்கைக்கு கப்பல் செல்லகூடாது, கிரிக்கெட் அணி செல்ல கூடாது என சத்தமிட்டவனெல்லாம் எங்கே?

இலங்கைக்கு ரஜினி சென்றால் விடமாட்டோம் என கத்திய திருமா எங்கே?

இலங்கை அரசின் தமிழரை கொன்ற ரத்த பழிஉள்ளது அதோடு கைகுலுக்கினால் தமிழருக்கு செய்யும் துரோகம் என முழங்கியவன் எல்லாம் எங்கே?

போர்குற்றத்தில் சிக்கியுள்ள இலங்கை அரசோடு தமிழகத்தார் உறவுபாராட்டினால் விடமாட்டோம் என கொதித்த வைகோ எங்கே?

பூரா ஈழவியாபாரிகளின் திருட்டு முகமூடிகளும் கிழிந்து தொங்கும் நேரமிது

ஏண்டா டேய்

ரஜினி போக கூடாது, ஆனால் ஓவியா செல்லலாம் அதை தொடர்ந்து தமிழக அரசே இலங்கைக்கு செல்லலாம், சத்தமே எழுப்ப மாட்டீர்கள்

650 தமிழ்மீணவனை கொன்ற சிங்கள அரசோடு தமிழக அரசு கை குலுக்குகின்றது என் இப்பொழுது சொல்லுங்கள் பார்க்கலாம்

நல்லவர்கள் என்றால், மானமுள்ள தமிழ்பிள்ளைகள் என்றால் சொல்லுங்கள் பார்க்கலாம். சொல்லாவிட்டால் நீங்கள் எல்லாம் இனி மானம்கெட்டவர்கள் ஆவீர்கள்

அடேய் பதர்களா

இனி எவனாவது ஈழம்பற்றி வாயினை திறந்தால் அதன் பின்பு இருக்கின்றது

எப்படியோ இலங்கைக்கும் தமிழகத்திற்கும் தொடங்கிவிட்ட நல்லுறவு நிலைக்கட்டும்

சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்ற பாரதியின் வரிகள் நனவாகட்டும்

ஆக ராமசந்திரன், கலைஞர், ஜெயா எல்லாம் ஒடுக்க முடியாத தமிழ்போராளிகளை, யாரும் அவர்கள் முகத்தில் பூசமுடியாத கரியினை பழனிச்சாமி பூசியிருகின்றார்

தமிழகம் கண்ட தனிபெரும் முதல்வர் பழனிச்சாமி வாழ்க, கடல் கடந்தும் தன் இரும்பு கரங்களை நீட்டிய இரும்பு கையோன் பழனிச்சாமி வாழ்க‌

அடேய் ஈழ அல்ட்ராசிட்டிஸ், முன்பு கலைஞரை “இனதுரோகி ” என காய்ச்சியது போல இப்பொழுது பழனிச்சாமியினை “”இனதுரோகி ” என காய்ச்சுங்கள் பார்க்கலாம்?

இவ்வளவிற்கும் பழனிச்சாமி பச்சை தமிழன், தமிழனே தமிழகத்தை ஆளும் பொழுது இப்படி நடந்தால் அதுதான் “இன துரோகம்””

ஆக நீங்கள் இப்பொழுது இனதுரோகி பழனிச்சாமி ஒழிக என சொல்லி ஆகவேண்டும் இல்லாவிட்டால் ஒழுங்காக கலைஞர் சமாதியில் மன்னிப்பு கேட்டுவிட்டு இனியாவது திருந்துங்கள்

இனியும் வாய்திறப்பீர்கள்? ரஜினி உங்களை எல்லாம் பார்த்து பரிதாபமாக சிரிப்பது கேட்கின்றதா இல்லையா?

மானமிருக்கின்றதா? இன்னுமா உயிரோடு இருக்கின்றீர்கள்??

Image may contain: 5 people, people smiling, people standing
Image may contain: 1 person, standing
Image may contain: 7 people, people standing
Image may contain: 7 people, people smiling, people standing
Image may contain: 5 people, people smiling, people standing

அன்புள்ள‌ மோடிக்கு

அன்புள்ள‌ மோடிக்கு,

அய்யன்மீர் உங்களுக்கு இன்று [ September 17, 2018 ] பிறந்தநாளாம், இந்திய குடிமகனாக வாழ்த்துக்கள், நீங்கள் பல்லாண்டு நலமாக வாழ பிரார்த்தனைகள்

நீங்கள் குஜராத் முதல்வராக ஜொலித்தீர்கள், சந்தேகமில்லை. அந்த குஜராத் கலவரங்களை மாநில முதல்வராக அடக்கினீர்கள், அதில் ஏராளமான இந்துக்களும் கொல்லபட்டனர் என்பதும் உண்மை. குஜராத்தில் வெற்றிகொடி நாட்டிய நீங்கள் தேசத்தை வளப்படுத்துவீர்கள் என்ற பெரும் நம்பிக்கையில் தேசம் உங்களிடம் ஆட்சியினை கொடுத்தது

நீங்களும் பொறுப்பை உணர்ந்துதான் செயல்பட்டீர்கள், உலகெல்லாம் சென்று இந்தியாவிற்கு முதலீடு ஈர்க்க ஓடினீர்கள், இந்திய நலனுக்காக உலகெல்லாம் பிச்சை எடுத்தீர்கள், அதெல்லாம் வாழ்த்துகுரிய விஷயம்

அம்பானியினை நீங்கள் வளர்ப்பதாக சொல்கின்றார்கள், டாட்டாவிடம் காந்தி நன்கொடை பெற்றதில் இருந்தே இது தொழிலதிபர்களுக்கு ஆதரவான அரசை கொண்டது என்பதில் சந்தேகமில்லை

தொழில் வளரட்டும், தொழிலதிபர்களும் வளரட்டும், ஆனால் மக்கள் வளரவேண்டாமா? வாழ்க்கை தரம் உயரவேண்டாமா?

உங்களின் பணமதிப்பு ஒழிப்பு நல்ல திட்டம், ஆனால் செயல்படுத்த தெரியாமல் அல்லது அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் நாட்டு மக்கள் பாதிக்கபட்டு அது உங்களுக்கு பெரும் பழியாயிற்று

ஆனால் அந்த பணமதிப்பு ஒழிப்பு வந்தபின்புதான் வெறும் கடனில் பெரும் பிம்பம் காட்டிகொண்டிருந்தவர்கள் எல்லோரும் வெளிநாட்டிற்கு ஒடினார்கள், நீங்கள் அவர்களை தப்பவிட்டிருக்க கூடாது

மற்றபடி உங்கள் அரச சர்ச்சையில் சிக்க பெரும் காரணம் என்ன தெரியுமா? விஷயம் இரண்டு

முதலில் இந்த காங்கிரஸ் போட்ட திட்டங்களை அப்படியே நீங்கள் பின்பற்றியது. ஜிஎஸ்டி எல்லாம் அந்த வகை, மானியம் ஒழிப்பு எல்லாம் அந்த ரகம்

ஏன் இந்த ரபேல் கூட அவர்கள் முடிவுதான், நீங்கள் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு இஸ்ரேலிய விமானமோ இல்லை வேறு ரக விமானங்களையே வாங்கி இருக்கலாம்

ஆக அவர்கள் செய்து சுமக்க வேண்டிய பெரும் பழியினை நீங்கள் சுமக்கின்றீர்கள், காங்கிரசுக்கு நல்ல காலம்

இரண்டாவது உங்களின் சிக்கல், அருண் ஜெட்லி தவிர உங்கள் அமைச்சரவையில் அறிவு ஜீவி என ஒருவரும் இல்லை, இருப்பவர் எல்லாம் தாஜ்மகால் இடிப்பு, இஸ்லாமியரை பாகிஸ்தானுக்கு விரட்டு, கூகுள் என்பது மகாபாரத கண்டுபிடிப்பு என புலம்பும் ரகம்

இந்த இரண்டும்தான் உங்கள் தோல்விக்கு காரணம், இன்னொன்று இந்த மதவாத சில்லுண்டிகளை நீங்கள் கண்டிக்காதது பெரும் வருத்தம்

தமிழகத்தின் எச்.ராசா, தமிழிசையினை சொல்லவில்லை இவர்கள் எல்லாம் காமெடி ரகம், அவர்களை நீங்கள் கண்டிக்காமல் இருப்பதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி

மற்றபடி உங்களை குறை சொல்லமுடியாது, உங்களுக்கு குடும்பம் இல்லை, வாரிசு இல்லை. யாருக்கும் தேடி வைக்கும் அவசியமில்லை

நாட்டுக்காக நீங்கள் உழைக்கின்றீர்கள் என்பதில் மாற்று கருத்தே இல்லை, ரபேல் தவிர ஊழல் சர்ச்சையுமில்லை

அவ்வகையில் உங்களை வாழ்த்துகின்றோம்

நீங்கள் வந்தபின் ராமேஸ்வரம் மீணவர்மேல் துப்பாக்கிசூடும் இல்லை, அதில் எல்லாம் உங்கள் பணிக்கு நன்றி

உங்கள்மேல் பெரும் வருத்தம் என்னவென்றால் தமிழக அழிச்சாட்டிய அரசு உங்களுக்கு தெரியாமல் இல்லை. இந்த அரசு மேல் குவியும் ஊழல் குற்றசாட்டு உங்களுக்கு தெரியாததல்ல‌

ஆனால் ஏன் கலைக்காமல் வைத்திருக்கின்றீர்கள் என்பதுதான் எங்கள் கவலை, இந்த ராணுவ கண்காட்சிக்கு நீங்கள் வரும்பொழுது உங்களை ஓடவைத்தார்கள் என்பதற்காக அந்த அரசை நீட்டிக்க வைத்து தூத்துகுடியில் சுடவைத்தீர்கள் என்ற அபாண்ட குற்றசாட்டுக்கு நீங்களும் பதில் சொல்லவில்லை

தமிழக எதிர்கட்சி தங்களை அணுகி ஆட்சியினை கலைத்தால் என்ன என்ற அரசியல் கணக்கு உங்களுக்கும் இருக்கலாம்

உண்மையில் அந்த மதிப்பிற்குரிய கண்காட்சிக்கு வந்த உங்களை திமுக விரட்டியது மாபெரும் கண்டத்திற்குரியது, அப்படியே தூத்துகுடி சம்பவம் பற்றி நீங்கள் வாய்திறக்காததும் வருத்ததிற்குரியது

மற்றபடி உங்களுக்கும் தமிழகத்திற்கும் நெருக்கமில்லை, ஏன் என தெரியவில்லை. யாரும் செத்தால் மட்டும் வருகின்றீர்கள், அடிக்கடி வந்து இங்கு மக்களை சந்தித்தால்தான் என்ன? நாங்களும் இந்ந்தியர் அல்லவா

தமிழகத்தை சில நேரங்களில் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் எங்கள் வருத்தம்

சுருக்கமாக சொன்னால் நீங்கள் நல்ல பிரதமர். அசுர பலத்தில் இருந்தும் ராமர்கோவிலை கட்டுவோம் என்று கிளம்பவில்லை, கலவரங்களை தூண்டவில்லை அதற்காக வாழ்த்து

யோகா என்பது இந்திய அடையாளம் அதை உலகில் பிரபலபடுத்தி அடையாளபடுத்தியதற்கும் நன்றி, ஆனால் அதை ஹோவர்கர் பிறந்தநாளில் செய்ததுதான் சரியில்லை

நீங்கள் தனி மனிதர் மோடி, குடும்பம் குட்டி இம்சை இல்லாதது உங்களுகு பெரும் பலம்

நாட்டிற்கு ஏதாவது செய்ய நீங்கள் துடிக்கின்றீர்கள் புரிகின்றது, ஆனால் உங்களோடு இருப்பவர்களும் உங்கள் அமைச்சரவை சகாக்களும் சுத்தமாக சரி இல்லை

பிறந்த நாளில் அதை எல்லாம் பேசகூடாது அழுதுவிடுவீர்கள், நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

ராமர்கோவிலை கட்டாமல், பெரும் ஊழலில் சிக்காமல், வீண் போர்களை நடத்தாமல், சில நல்ல காரியங்களை செய்ய முயன்று நீங்கள் சறுக்கிவிட்டு , நாட்டுக்காக ஏதோ செய்ய முயன்ற நல்ல பிரதமர் நீங்கள்

எப்படி ஆயினும் சோழரின் பெருமையும், பாரதியின் வரிகளையும் பேசி தமிழரும் இந்தியரே என சுட்டிகாட்டிய முதல் பிரதமர் நீங்கள்

அவ்வகையில் ஒவ்வொரு தமிழனும் நன்றியோடு வாழ்த்துகின்றோம்

நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும், ஆனால் மறுமுறை பிரதமராக வந்தால் நல்ல அறிவு ஜீவிகளுடனும் நாட்டை வழிநடத்தும் நல்ல சக்திகளுடன் பதவிக்கு வாருங்கள்

அப்படி வந்திருந்தால் இந்த கச்சா எண்ணெய் விலை உயர்விலும், டிர்மபின் அழிச்சாட்டியத்திலும் உங்களுக்கு ஆலோசனை சொல்ல நல்ல அறிவார்ந்த கூட்டம் இருந்திருக்கும்

ஆனால் அப்படி யாரும் உங்களை சுற்றி இல்லாததே உங்கள் மீதான சர்ச்சைக்கு காரணம்

முதலில் கட்சிக்கு நல்ல அறிவு ஜீவிகளையும், கற்றவர்களையும் கொண்டு வந்துவிட்டு ஆட்சிக்கு வாருங்கள், இல்லாவிட்டால் வரவே வேண்டாம்

நீண்ட ஆயுளோடு நீங்கள் வாழ வாழ்த்துகின்றோம்

Image may contain: 1 person, smiling, beard and closeup