சிதறல்கள்

தினதந்தி ஒரு இந்திய எதிர்ப்பு பத்திரிகை அதே நேரம் “தமிழகத்தை கெடுக்கும் பத்திரிகை” என எதற்காக சொல்கின்றோம் என்றால் இதற்காகத்தான்

Image may contain: 3 people, people smiling
————————————————————————————————————————————–

டிரைவரை தன் கட்சியில் இருந்து நீக்கினார் தீபா

எவ்வளவு பெரும் முக்கிய முடிவு இது?, இதனால் என்னென்ன விளைவெல்லாம் ஏற்படும் என நினைத்தால் அச்சமாக இருக்கின்றது

இந்த விவகாரத்தால் பங்கு சந்தை சரிந்து மேலும் பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்காமல் இருக்கட்டும்


 

பிரியாணி கடை முதல் அழகுநிலையம் வரை தாக்குதல் நடத்துவது திமுகவினர்தான்: தமிழிசை சௌந்தரராஜன்

ஆமாம் திமுக லெவல் அப்படித்தான், ஆனால் பாஜக அளாவிற்கு மசூதி இடிப்பது, அகில இந்திய கலவரங்களை நிகழ்த்துவது போன்றவற்றையா திமுக செய்ய முடியும்? முடியவே முடியாது


நான் பாகிஸ்தானுக்கு உலக கோப்பையினையே கொடுத்தவன், என் ஆட்சியில் இந்த பாகிஸ்தான் அணி ஹாங்காங் அணியினை விட மோசமாகிவிட்டது.

யா அல்லாஹ், இந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பயங்கரவாதிகளை விட என் ஆட்சிக்கு அச்சுறுத்தலாகிவிட்டார்கள், அவர்களை மன்னிக்காதே

Image may contain: 1 person, standing
———————————————————————————————————————————–

ஒரத்தநாடு டாஸ்மாக்கில் ஓசி சரக்கு கேட்ட டிடிவி கட்சி ஒன்றிய செயலாளர் கைது.

இனி அக்கட்சி “ஓசிகுடி’ கட்சி என அழைக்கபடும்

————————————————————————————————————————————-

நல்ல மறவர் சாதியினர் இருந்தால் இந்த கருணாஸை அவர்களே அடித்து கட்டி வைத்திருப்ப்பார்கள்

ஆனால் பொதுநலமும், சமூக அமைதியும் விரும்பும் ஒரு மறவர் கூட தமிழகத்தில் இல்லை என்பதுதான் சோகம்

ஆனால் கருணாஸ் பேசியது ஒன்றும் புதிதல்ல, ” ராமராதபுரத்து மறத்திகள் எடுக்கும் பருத்தி, விருதுநகர் நாடாத்திகள் காதிலும் கழுத்திலும் தங்கமாக தொங்குகின்றது..” என்ற முத்துராமலிங்க தேவர் வார்த்தைகளின் தொடர்ச்சி அது


கருணாஸ் பேசியதற்காக ஆளாளுக்கு பொங்குகின்றார்கள், அவரை பிடித்து உள்ளே போட வேண்டும் என்றெல்லாம் சீறுகின்றார்கள்

இது ஒன்றும் தமிழகத்திற்கு புதிதல்ல, நாடார் சமூகத்திற்கும் புதிதல்ல‌

அன்று முத்துராமலிங்க தேவரே “சாணாபயலை முதல்வராக்குகும் அளவுக்கு நாடு கெட்டுவிட்டது, சாணன் புத்தி தெரியாதா? மாநிலம் உருப்படுமா?” என பகிரங்கமாக கேட்ட மாநிலம் இது

ஆனால் அவருக்கு குருபூஜை, கருணாசுக்கு செருப்படி


உணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் – கருணாஸ் விளக்கம்

அது உணர்ச்சி வசம் அல்ல, கொழுப்பெடுத்து பேசிய திமிர் பேச்சு மிஸ்டர், அதை எல்லாம் வருத்தம் தெரிவித்து சமாளிக்க முடியாது


 

முதல் விடுதலைபோர் அல்லது சிப்பாய் கலகம்

முதல் விடுதலைபோர் அல்லது சிப்பாய் கலகம் என சொல்லபடும் வீரமிக்க சம்பவத்தின் நினைவு நாள் இன்று, 1858ம் ஆண்டு இதே நாளில் நடந்தது முடிந்தது
என்ன நடந்தது? ஆங்கில படைகளுக்கு எதிராக வட இந்தியாவின் மீரட்டில் தொடங்கி பல இடங்களில் சண்டை நடந்தது, கிட்டதட்ட இந்தியா வெல்லும் நிலைதான்
ஆனால் ஒரே தலைவனோ இல்லை வழிநடத்த சரியான தளபதியோ இல்லாததால் அது தோற்றது
எனினும் இச்சம்பவத்திற்கு பின்பே பிரிட்டன் அரசு இந்தியாவினை கிழக்கிந்திய கபெனியிடம் இருந்து பறித்தது, அதன் பின்பே பல சீர்திருத்தம் தொடங்கபட்டு அது 1947ல் சுதந்திரமாக முடிந்தது
1857ல் நடந்ததுதான் முதல் இந்திய விடுதலைபோரா என்றால் இல்லை, 1500களில் வாஸ்கோடகாமா கால் வைத்ததில் இருந்து அவனை கொன்று இத்தேசம் தன் போராட்டத்தை தொடக்கியது
ஆங்கிலபடைகளில் இருந்த சிப்பாய்கள் அவர்களை எதிர்த்ததை மருத நாயகம் தொடங்கி வைத்தான்
1806ல் வேலூர் கோட்டை புரட்சியே 1857 புரட்சிக்கு முன்னோடி, ஆனால் வரலாறு வட இந்தியாவினை முன்னுறுத்துவதால் வேலூர் புரட்சி பின்னுக்கு தள்ளபட்டது
உண்மையில் வேலூர் புரட்சி என்பது திப்பு சுல்தானின் வாரிசுகள் நடத்திய வீரப்போர்,
அது இருக்கட்டும் 1857ல் என்ன நடந்தது?
இந்துமதம் மகா உயர்வானது, அது இயற்கையோடு இணைந்தது, கிட்டதட்ட எல்லா மிருகங்களையும் அது தன் மதத்தின் ஒரு அங்கமாகவே இணைத்துகொண்டது.
காகம் பித்ரு, மயில் முருகனுக்கு, சிம்மம் துர்க்கைக்கு, புலி ஐயப்பனுக்கு, யானை பிள்ளையாருக்கு, எருமை எமனுக்கு, கருடன் விஷ்ணுவுக்கு,குரங்கு அனுமாருக்கு, மான் சீதைக்கு, என சகல விலங்குகளையும் தன் மதத்தோடு இணைத்துகொண்ட மதம் அது.
அப்படியானால் இந்துக்கள் எல்லோரும் ஜெயின்களை போல மகா சைவமாக இருந்துவிட்டாலாவது பரவாயில்லை. தமிழ்நாட்டில் அசைவமான மீன் வங்கத்து பிராமணருக்கு சைவமாயிற்று.
இந்துமதம் எல்லாவற்றையும் இப்படி ஏற்றுகொள்கின்றது, சிலவிஷயங்களை சகித்துகொள்கின்றது
1854ல் இந்தியா என்பது கிழக்கிந்திய கம்பெனியின் நிலம், இந்திய அடிமை வீரர்களுடன் திபெத், ஆப்கன் என அக்கம்பெனி கடும் யுத்ததில் இருந்த நேரம். ஆப்கனையும் பிடித்து , அப்படியே உஸ்பெக் பிடிது, ரஷ்யா பிடித்து “அகண்ட இந்தியா” அமைக்கும் திட்டம் அவர்களுக்கு இருந்தது.
காரணம் ஐரோப்பாவிற்கு நிலவழிச்சாலை துருக்கி வழியாக ஐரோப்பா சென்றது, அது அப்பொழுது ஆட்டோமான் துருக்கியர் வசம் இருந்தது, வலுவான அரசு அது, பிரிட்டிசாரை சுக்குநூறாக்கும் பலம் அவர்களிடம் இருந்தது.
பலசாலியிடம் ஒருநாளும் மோதமாட்டான் பிரிட்டிஷ்காரன், இதோ இப்பொழுது சிரியாவில் யாராவது ரஷ்யாவிற்கு எதிராக இறங்குவார்களா? ம்ஹூம்.
இதனால் பட்டுசாலையினை குறிவைத்து திபெத்தையும், நிலம் வழியாக ரஷ்யாவினை அடைவதற்காக ஆப்கனையும் குறிவைத்து கம்பெனியின் யுத்தம் நடந்தது
அப்படி ஆப்கன் போரில் புதுவித தோட்டாக்களை இந்திய ராணுவ வீரர்களுக்கு கொடுத்தார்கள், அன்று கீரீஸ் ஆயில் இல்லை, அதனால் தோட்டா சுலபமாக வெளியேற பசு கொழுப்பு அல்லது பன்றிகொழுப்பு பூசபட்ட தோட்டாக்களை கொடுத்தார்கள், சில நேரங்களில் அந்த உலோக உறை பற்களால் இழுக்கபடும் அவசியமும் இருந்தது.
பசு கொழுப்பு இந்து வீரன் வாயிலும், பன்றி கொழுப்பு இஸ்லாமிய வீரன் வாயிலும் பட முடியுமா? பட்டால் சும்மா இருப்பார்களா?
கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கிழக்கிந்திய கம்பெனி அடங்கவில்லை. வீரர்கள் புரட்சியில் இறங்கினர். புரட்சி என்றால் தலைவர்,தளபதி,திலகம் வரிசை புரட்சி அல்ல வெள்ளையரை அடித்துவிரட்டுவது.
அது பெரும் கலவரமாகி 1857ல் சிப்பாய் கலகமுமாகி, கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டிஷ் அரசால் எடுத்துகொள்ளபட்டு, கம்பெனி முக்காடு போட்டு உட்கார்ந்திருந்தது.
இந்த பசு,பன்றி தகறாறு மட்டும் இல்லை என்றால் ஆப்கன் தாண்டி கிழக்கிந்திய கம்பெனி பிடித்திருக்கும், இந்த நாடும் பிரிட்டிஷ் அரசுக்கு சென்றிருக்காது.
இன்றைய ஊழல் அரசுகளை போல ஜாம் ஜாம் என்றிருந்த கம்பெனி நொடிந்துபோனது இப்படித்தான், அந்த சாம்ராஜியத்தை அசைத்தது பன்றிகறியும், மாட்டுகறியும்.
இன்றைய பாஜ அரசும் அதே தவறினை தொடங்கி வைத்தது, முளையிலே கிள்ளவேண்டிய இந்த நச்சுக்கள் வளர்ந்தால், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐக்கு நிரந்தர ஓய்வு அளித்துவிடலாம், காரணம் இவர்களே கலவரங்களை உருவாக்கி நாட்டை நாசமாக்குவார்கள்.
உங்கள் மதம் பெரிது என்றால், இன்னும் இந்த நாட்டில் மிக பெரும்பான்மையான அந்த மதம் வாழவேண்டுமென்றால் அதற்கு ஆயிரம் வழிகள் உண்டு, இந்தியா முழுக்க பழுதடைந்த ஆலயங்கள் உண்டு, அங்கெல்லாம் விளக்கு ஏற்றுங்கள்.
டோராவிலும், வீடியோ கேமிலும் புகுந்திருக்கும் இந்து குழந்தைகளுக்கு மகாபாரதம் போன்ற கதைகளை சொல்லிகொடுப்பது கூட நல்ல வழிதான், அதாவது இந்துகுழந்தைகள் இந்துவாக வளரட்டும், விவேகானந்தரின் வழிகளை சொல்லுங்கள் அது மத சகிப்புதன்மையினை வளர்க்கும்.
இவர்கள் எல்லாம் ஒன்றை நிச்சயம் நினைவில் கொள்ளவேண்டும், காலமாற்றதிற்கேற்ப தன்னை மாற்றிகொள்ளா எம்மதமும் வாழமுடியாது.
வாழ்வாங்கு வாழ்ந்த பௌத்தமும்,சமணமும் அப்படியே காணாமல் போயின, ரோம மதமும், கிரேக்க மதமும் இன்று ஏடுகளில் மட்டும் உண்டு.
ஆனால் அதற்கெல்லாம் முன் தோன்றி, காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி பெரும் ஆச்சரியமாக வளர்ந்து கண்முன் நிற்பது யூத மதமே.
இந்துக்களை விட பல மடங்கு உயிர்பலி கொடுக்கபடும் மதம் அது, இன்று ஒரு கோழிகுஞ்சினை மதத்தின் பெயரால் பலியிடுவார்களா? என்றால் இல்லை மாறிவிட்டார்கள், இன்று அசைக்கமுடியா ஸ்தானம் உலகில் அவர்களுக்கு.
ஆனால் ஐ.எஸ் இயக்கத்தின் நிலை என்ன? அணுகுண்டு வீசியாவது இவர்களை அழிக்கமுடியாதா? எனும் நிலைக்கு வந்துவிட்டது உலகம், காரணம் மத மூர்க்கம்.
இந்த மூர்க்கம் இந்த திருநாட்டிலும் வந்துவிட்டால், உலகெல்லாம் ஓடி முதலீடு தேடும் மோடிக்கு கிடைப்பது என்ன? மதகலவரம் வரும் அபாயம் உள்ள நாட்டில் யார் முதலீடு செய்வார்கள்?.
இந்துக்களில் ஏகபட்ட சாதிகள் உண்டு, அதில் கீழ்சாதி இந்துக்கள் மாட்டுகறி தவிர வேறு அறியாதவர்கள். இந்து தர்மம் அதுவென்றால் அவர்களிடம் அல்லவா இவர்கள் போதிக்கவேண்டும், ஆனால் செல்லமாட்டார்கள், காரணம் சாதி.
ஆனால் ஆச்சரியமாக சொந்த மதத்தானை விட்டுவிட்டு, அடுத்த மதத்துகாரனை வெட்டுவேன் என்றால் அது நிச்சயம் அரசியல் அல்லது மத துவேஷம்.
பசுமாடு தாய் என சொல்பவர்கள் அது தானாக இறந்தால் தோலை உரிக்கின்றார்களா? கழுகுக்கு இடுகின்றார்களா? அல்லது அடக்கம் செய்து கல்லறை எழுப்புகின்றார்களா?,
பசு மாமிசத்தை கழுகு தின்னலாம், தெருநாய் தின்னலாம் ஆனால் மனிதன் தொடகூடாதாம்.
இந்துமதமும் அதன் தர்மமும் மிக மிக உயர்வானவை, அதன் சிறப்பே எது தெரியுமா? கடும் கட்டுப்பாடுகளை அது விதிக்காது, ஆனால் போதிக்கும்.
தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகள் என்பதை கண்டிக்காது, ஆனால் ராமனுக்க் ஒருத்தி என்பதை போற்றி பாராட்டும், மாமிசத்தை உண்ணாதே என தடுக்காது ஆனால் உடல்கொழுப்பேறாமல் பார்த்துகொள் என போதிக்கும்.
அந்த அருமையான மதத்தினைத்தான் மசூதிகளுக்கு அடியிலும், பசுமாட்டின் கழுத்திலுமாக இவர்கள் தேடிகொண்டிருக்கின்றார்கள்.
இதில் முதலில் கைவைத்த பாஜக அரசு இப்பொழுது கனத்த அமைதி காக்கின்றது
இந்தியாவில் பசுகொழுப்பும், பன்றி கொழுப்பும் மாபெரும் இரும்பு திரையான கிழக்கிந்திய கம்பெனி எனும் பெரும் திமிங்கலத்தையே கவிழ்த்துபோட்ட விஷயங்கள், அதன் முன் பாஜ அரசு என்பது வெறும் சாதாரணம் என்பது அவர்களுக்கு புரிந்துவிட்டது
1857 முதல் இந்திய விடுதலைப்போர் மத‌ விவகாரங்களில் அந்த அரசு கை வைத்ததால் வந்தது, அது அழிந்தும் போனது
இப்போதுள்ள அரசும் அதில் கைவைத்து சூடுபட்டு கொஞ்சம் யோசிக்கின்றது, இது இப்படியே தொடர்ந்தால் நாட்டுக்கும் நல்லது அவர்களுக்கும் நல்லது
1857 சிப்பாய் கலகம் அதனைத்தான் போதிக்கின்றது, அந்த வரலாற்றில் இருந்து பாடம் கற்கட்டும்
அந்த கலகத்தில் உயிரிவிட்டு கிழகிந்திய கம்பெனியின் காட்டாட்சிக்கு முடிவு கட்டி, பிரிட்டன் அரசு வந்து இந்தியா ஓரளவு உரிமை பெற காரணமான அந்த தியாகிகளுக்கு மகத்தான அஞ்சலி
அப்படியே இந்திய மத விவகாரம் எவ்வளவு சிக்கலானது என சொன்ன கிழக்கிந்திய கம்பெனிக்கும் நன்றிகள்
அப்படி இருந்த கிழக்கிந்திய கம்பெனி 1857க்கு எப்படி இருக்கின்றது?
அந்த மாபெரும் சாம்ராஜ்யம் மதவிவகாரங்களை மதிக்கா ஒரே காரணத்திற்காக, கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி இன்று பெட்டி கடையாக சுருங்கி லண்டன் தெருவில் இருக்கின்றது, ஒரு இந்தியந்தான் வாங்கி இருக்கின்றார்
அப்படிபட்ட மாபெரும் சாம்ராஜ்யயமே அழிந்தபொழுது பாஜக என்பது ஏது?
Image may contain: one or more people and outdoor

இந்த பழனிச்சாமி கோஷ்டி

ஒரு மனிதன் தடுமாறலாம் ஆனால் இப்படி குப்புற விழகூடாது, டாஸ்மாக் நடத்தும் அரசுதான் ஆனால் இப்படி போதை போடாமலே உளற கூடாது

அப்படி என்ன உளறல்?

இலங்கையில் நடந்த இன அழிப்பினை திமுக எதிர்க்கவில்லையாம், அதை எதிர்த்து அதிமுக ஆர்பாட்டமாம்

அட பதர்களா? அது நடந்து 10 வருடம் ஆக போகின்றது, அவர்களே மறந்தாயிற்று, இவர்கள் இப்பொழுதுதான் விழித்திருக்கின்றார்கள்

சென்னையில் பிரபாகரனை வீட்டு காவலில் வைத்தவர் ராமசந்திரன், கண்டித்தது கலைஞர்

ஈழசிக்கலில் அமைதிபடையினை அனுப்பாதே என்றவர் கலைஞர், அமைதிபடையினை அனுப்பிய ராஜிவோடு கைகோர்த்து நின்றவர் ராமசந்திரன், அமைதிபடை சென்றதுதான் முதல் சிக்கல்

ராஜிவ் கொலையில் அவருடன் அன்று கூட்டணியில் இருந்த ஜெயா ஏன் திருபெரும்புதூர் செல்லவில்லை என்ற சர்ச்சை இன்றுவரை உண்டு

எல்லாவற்றிற்கும் மேல் “2009ல் ஈழநெருக்கடிக்காக கலைஞர் மத்திய அரசுக்கான ஆதரவினை விலக்கினால் அதிமுக காங்கிரசை ஆதரிக்கும்” என வலிய சொன்னவர் ஜெயலலிதா
2009 முள்ளிவாய்க்கால் உச்சத்தில் இருக்கும்பொழுது கலைஞராவது உண்ணாவிரதமாவது இருந்தார், ஆனால் ஜெ என்ன செய்தார்?
“போர் என்றால் மக்கள் சாவத்தான் செய்வார்கள்” என அசால்ட்டாக சொல்லிசென்றார். அதுதான் அநியாயம்

பிரபாகரனை இந்திய ராணுவத்தை அனுப்பி பிடித்து வந்து தூக்கில் இடவேண்டும் என தீர்மானமிட்டவர் ஜெயலலிதா

ஆக இந்த பழனிச்சாமி கோஷ்டி ஈழவிவகாரத்திற்காக கண்டித்து போராடவேண்டும் என்றால் ஜெயா சமாதி முன் போராடட்டும், சட்டசபையில் உள்ள ஜெயாபடத்தினை செருப்பால் அடித்து கண்டனம் தெரிவிக்கட்டும்

அதனை செய்துவிட்டு இப்பக்கம் வரட்டும்

கோமாவில் இருந்த பழனிச்சாமி கோஷ்டி இனி படிபடியாக இந்திராவினை கொன்ற பியாந்த்சிங்கிற்கும், காந்தியினை கொன்ற கோட்சேவிற்கும் அவனை ஆதரித்த ஆர்.எஸ்.எஸ்க்கும் எதிராக போராடும்

அப்படியே வெள்ளையனை எதிர்த்து சுதந்திரத்திற்காக‌ போராடும் காட்சிகளும் வரலாம்

(சரி 2011ல் இருந்து இன்றுவரை ஆளும் அதிமுக அதன் பின் ஈழமக்களுக்கோ இல்லை போர்குற்றத்திற்கோ என்ன செய்தது என் யாரும் கேட்டுவிட கூடாது

டெல்லியில் இருக்கு 37 ..கள் என்றாவது டெல்லியில் ஈழம்பற்றி பேசினார்களா எனவும் கேட்க கூடாது

அப்படியே செங்கோட்டையனும், ஏ.சி சன்முகமும் எதற்கு இலங்கை சென்றார்கள், சிங்கள அரசுடன் அவர்களுக்கு என்ன பல்லிளிப்பு எனவும் கேட்க கூடாது..)


 

மிஸ்டர் எடப்பாடி & கோ, உங்கள் தகவலுக்காக…
சொன்னது யாருமல்ல, உங்கள் தலைவி புரட்சி தலைவி அம்மாவே தான். கொஞ்சம் அறிவிருந்தால் இந்த போராட்டத்தை நிறுத்திவிட்டு வேறு வேலை பார்க்கவும்
இதில் பின்வாங்கினால் உங்களுக்கு ஒன்றும் மானம் போய்விடாது, ஏனென்றால் இருந்தால் தானே அது போவதற்கு?
Image may contain: 1 person

மிஸ்டர் எடப்பாடி
மோடியே ராஜபக்சேயோடு டெல்லியில் கைகுலுக்கி ரொட்டி சாப்பிடும்பொழுது இந்த ஈழ‌ போராட்டம் என்ன ரகம்?
முடிந்தால் “ரத்தகறை படிந்த ராஜபக்சேயுடன் கை குலுக்கிய அராஜக மோடியே …” என சொல்லுங்கள் பார்க்கலாம்
அட உங்கள் அமைச்சர்களில் ஒருவரை சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்
முடியாதல்லவா? பின்னர் ஏன் இந்த மோசடி போராட்டம்
உலகிலே ஆளும்கட்சி எதிர்கட்சியினை கண்டித்து போராடும் அதிசயத்தை நீங்களே நிகழ்த்துகின்றீர்கள்

பங்கு, பெட்ரோல் விலை ஏறிகிட்டே போகுது, இதனால மத்திய அரசுக்கு நல்ல வருமானம்னு அருண்ஜெட்லி ஆபீஸ் பக்கம் பேசிக்கிறாங்க, நாமும் டாஸ்மாக் சரக்கின் விலையினை கூட்டினால் என்ன?

பங்கு, பெட்ரோல் விலை 100 வந்தாலும் திட்டுவானே தவிர ஒரு பயலும் பெட்ரோல் ஊற்றாமல் இருக்கமாட்டான், ஊற்றிவிட்டு அவன் போக்கில் போய்விடுவான்

ஆனால் டாஸ்மாக்கில கைவைத்தால் அவ்வளவுதான், தமிழகம் தாங்காது. குடிமக்கள் நம்மை சும்மா விடுவார்களா? அவர்களே டெல்லிக்கு நடைபயணம் செய்து நம்மை கவிழ்த்துவிடுவார்கள்

ஆமாம் பங்கு, அவனுகள மட்டும் பகைக்கவே கூடாது, வாங்க குடிமக்களை பார்த்து கும்பிட்டுக்குவோம்

Image may contain: 2 people, people smiling

கொன்றதற்கான காரணம் சாதிவெறி

அது தமிழக கோகுல்ராஜோ, இளவரசனோ இல்லை ஆந்திர பிரணவ் என்பவரோ சாதிக்காக கொல்லபட்ட எல்லோருமே இந்துக்கள்

ஆனால் இந்து கொல்லபட்டான் என யாரும் கிளம்பவில்லை காரணம் கொன்றதற்கான காரணம் சாதிவெறி, அது இந்துக்களின் தேசம் என சொல்லபடும் இத்தேசத்தின் அடிப்படை விதி

சாதிமாறி திருமணம் செய்ததற்காக நிகழ்ந்த இப்படுகொலைகளில் ஒரு பரபரப்புமில்லை. ஆனால் இதுவே மதம் மாறி நிகழ்ந்திருந்த படுகொலை என்றால் இந்நேரம் தேசம் தாங்காது

என்று செத்தவன் எந்த சாதி ஆனாலும் அவன் இந்து என சொல்லி பரிகாரம் தேடுகின்றார்களோ அந்த நாளில் அன்றி இங்கு இந்துத்வா உருப்படாது

அட இருவரும் என்ன சாதி என்றால் என்ன? இரு இந்துக்கள் என நினைத்தாலே இக்கொலை நிகழ்ந்திருக்காது

இந்துக்களை காக்க வந்திருப்பவர்கள் செய்ய வேண்டியது இம்மாதிரியான சாதி ஒழிப்பும் , எல்லா சாதிக்காரர்களுக்கும் இந்து மதத்தில் பாதுகாப்பும்

இதை செய்தால் மதமும் நன்றாக இருக்கும், நாடும் அமைதியாக இருக்கும்

அதை விட்டுவிட்டு விநாயர் சிலை முன்பே நான் இந்து, மற்றபடி நான் இந்த சாதிக்காரன் என ஒதுங்குவது இந்துதன்மை மட்டுமல்ல மனித தன்மையே அற்ற விஷயம்

முதலில் இந்துக்களை காக்க வந்திருப்பவர்கள் சாதியினை ஒழித்து சொந்த மதத்தினை காக்கட்டும், அதன் பின் தாமரை மொட்டாவது வைக்கும்

இல்லாவிட்டால் தாமரை செடி வேர் கூட விடாது

இக்காலமே இப்படி என்றால் பெரியார் காலம் எப்படி இருந்திருக்கும்?

அந்த மனிதன் ஏன் அவ்வளவு மூர்க்கமாக சாதியினை சாடினான், சாதிக்கு மூலகாரணமான மதத்தை வெட்ட கோடரி எடுத்தான் என இப்பொழுது நன்றாக புரிகின்றது

சொந்த மதத்துகாரன் சாதி பெயரால் செத்தாலும் கண்டு கொள்ளாமல் மதம் காக்க கிளம்பியிப்பவர்களை விட, மனிதனை மனிதனாக மதிக்க சொன்ன பெரியார் எவ்வளவோ உயர்ந்தவர்