சிதறல்கள்

September 22, 2018

எல்லையில் இஸ்ரேலிய பாணியில் மின் அலை வேலி அமைத்துவிட்டோம் இனி ஒரு பயலும் ஊடுருவமுடியாது என்றார் ராஜ்நாத் சிங்

ஆனால் பாகிஸ்தானியரோ அவர்கள் போக்கில் வந்து ஒரு ராணுவ வீரரையும் சில போலிஸ்காரர்களையும் கொடூரமாக கொன்றிருக்கின்றார்கள்

ஆக இவர்கள் மின் வேலி எல்லாம் சும்மா கட்டுகதை, தமிழிசை போலத்தான் உச்ச தலமை வரை பேசிதிரிகின்றார்கள்

மின்வேலி அமைத்துவிட்டோம் வந்துபார் என சீண்டியது இவர்கள்தான் வேறுயாருமல்ல‌

நாட்டுக்காக உயிரை நீத்த அந்த தியாகிகளுக்கு அஞ்சலி


கருணாசுக்கு ஏன் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவில்லை : ஜெயக்குமார் வருத்தம்

கருணாஸ் யார் கட்சி என்றால் ஜெயகுமார் கட்சியின் கூட்டணி, ஜெயகுமார் கட்சியின் அடிப்பொடி

இதில் ஆளும் அரசாக தமிழக அரசும் கருணாசை கண்டிக்காதாம், கட்சியாக இவர்களும் கண்டிக்க மாட்டார்களாம்

ஆனால் ஸ்டாலின் கண்டிக்க வேண்டுமாம்

ஆக ஜெயக்குமார் வீட்டு நாய் குரைத்தாலும் ஜெயகுமார் கண்டிக்க மாட்டார், மாறாக ஸ்டாலின் வந்து உன் வீட்டு நாய் ஏன் குறைக்கின்றது என்றால்தான் நாய் பக்கம் வருவார்


இதை படித்து முடிப்பதை விட “லாலா கட சாந்தி..” என ஆடுவது எவ்வளவு எளிது..

ஆனாலும் என்ன செய்ய? இப்படி எல்லாம் போஸ் கொடுத்தால்தான் கட்சியில் அடுத்த தலைவராக வரமுடியும்

வருங்கால சந்ததி நாம் பிறந்திதிலிருந்து பெரியாரிஸ்ட் என சொன்னால் நம்பாமலா இருக்க போகின்றது???

Image may contain: one or more people and text
—————————————————————————————————————————————–

இலங்கை அமைச்சரும், பல முறை புலிகளிடமிருந்து தப்பிய ஆயுசு கெட்டியுமான டக்ளஸ் தேவானந்தா இன்றொரு முக்கிய அறிவிப்பினை செய்திருக்கின்றார், ஆனால் இந்த சைமானிய கும்பல்கள் சத்தமே இல்லை

விஷயம் இதுதான்

அதாகபட்டது, 2006ல் ரணில்தான் தேர்தலில் வெல்லும் வாய்ப்பு இருந்தது, ராஜபக்சே வெற்றிபெற வாய்பில்லை

இந்நிலையில் ரணிலுக்கு எதிராக வாக்களிக்க மக்களை திருப்ப புலிகளுக்கு ராஜபக்சே பணம் கொடுத்தார் என்ற சர்ச்சை 10 வருடமாக உண்டு

இது ராஜபக்சே முதல்முறை அதிபரானபொழுதே வந்தது. அனுபவஸ்தரான ரணிலை விட அனுபவமில்லா ரஜபக்சே நமக்கு ஆபத்தாக இருக்கமாட்டார் என கணக்கிட்டனர் புலிகள்

நிச்சயம் ராஜபக்சே அதிபரானதில் புலிகளின் பங்கு அதிகம், அதற்கு ராஜபக்சே கொடுத்த பணமும் அதிகம், பின்பு அவர் காட்டிய நன்றியும் அதிகம்

இப்பொழுது அது உண்மைதான் என்கின்றார் டக்ளஸ் தேவானந்தா

அமைதிபடை காலத்திலே, அதாவது ஈழதமிழரை காக்க வந்த இந்திய அமைதிபடையினை விரட்ட சிங்கள பிரேமதாசாவோடு கை கோர்த்தவர்கள் புலிகள் என்பதால் இதுவும் நிச்சயம் உண்மையாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

ஆக எவன் பணம் கொடுத்தாலும் வாங்கிவிட்டு பின் அவன் கையிலே சிக்குவது என்பது பிரபாகரன் பாணி, அங்கிள் சைமனும் அதையே செய்துவிட்டு தமிழகத்தில் தவிப்பது வேறு கதை

இவ்விஷயத்தில் பிரபாகரனின் தம்பி சைமன் என்பதை மறுக்கவே முடியாது


காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு ஆளும் பொழுதுதான் இலங்கையில் போர்குற்றம் நடந்தது : தமிழிசை

அக்கோவ் அந்த போர்குற்றம் செய்த ராஜபக்சே மூன்றாம் முறையாக டெல்லியில் மோடியோடு கைகுலுக்குவது என்ன வகை?

ஆக காங்கிரசும் பாஜகவும் ஒன்றுதான் இல்லையா?


பாஜக அரசு எல்லை தாண்டி ஒருமுறை தாக்கிவிட்டதாம், அதன் நினைவு நாள் நேற்று கொண்டாடபட்டதாம், இதை பெரும் வெற்றிவிழாவாக கொண்டாட எண்ணி பின் எதிர்ப்புகளால் வெட்கபட்டு பின்வாங்கிவிட்டது பாஜக அரசு

இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எல்லாம் எல்லா நாடும் செய்வதுதான், ஆனால் சொல்லமாட்டார்கள். காரணம் சொன்னால் அது உலக சிக்கலை ஏற்படுத்தும்

இதில் கில்லாடி இஸ்ரேல் லெபனான், சிரியாவில் அடிக்கடி எல்லை தாண்டி தாக்குவார்கள், எப்படி தாக்குவார்கள்?

அப்படியே எதிரி நாட்டு ராணுவ உடை அணிவார்கள், அவர்கள் ராணுவம் போலவே வாகனம் , முத்திரை, கொடி எல்லாம் தயார் செய்வார்கள், இஸ்ரேல் ஒழிக என கோஷமிட்டு கொண்டே செல்வார்கள் திடீரென எதிரியினை தாக்கிவிட்டு திரும்புவார்கள்

சொந்த நாட்டு ராணுவம் ஏன் நம்மை தாக்கியது என எதிரி ராணுவம் குழம்பி தெளிந்து முடிப்பதற்கும் சில வருடம் ஓடிவிடும்

இன்றும் இஸ்ரேல் என்ன செய்கின்றது? ரஷ்ய விமானம் போல தன் விமானங்களை பெயின்ட் அடிக்கின்றது, பின் சிரிய வானில் அச்சமின்றி பறக்கின்றது, ஏதோ ரஷ்ய விமானம் தீவிரவாதிகளை தாக்குகின்றது என சிரியர்கள் விட்டுவிடுவதால் சிரியரையே தாக்குகின்றது

இந்த தந்திரம் போனவாரம் புரிந்து சிரியர் பதிலுக்கு ஒரிஜினல் ரஷ்ய விமானத்தையே தாக்கி சில ரஷ்யர்களை கொன்றும் விட்டார்கள்

திறமையான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்பது இதுதான், அதாவது ஆதாரம் இல்லாமல் அடிப்பது. அடித்துவிட்டு கம்மென்று இருப்பது

இன்றும் இஸ்ரேலிடம் கேட்டால் நாங்கள் எல்லை தாண்டா அமைதிவிரும்பி என சொல்லிவிட்டு அவர்கள் போக்கில் இருப்பார்கள்

முட்டாள் அரசுதான் நான் தாக்கினேன், நானே தாக்கினேன் என ஊரெல்லாம் சொல்லிகொண்டிருக்கும்

கொஞ்சமும் தந்திரமுமில்லை, அறிவுமில்லை எதை விளம்பரபடுத்தவேண்டும் என்ற சிந்தனையுமில்லை

எல்லாம் வெற்று விளம்பரம்

பாகிஸ்தானுடன் எத்தனையோ சிறிய பெரிய போர்களையும். வங்க போர் எனும் வரலாற்று வெற்றியினையும் கொடுத்தது காங்கிரஸ் அரசு

அது என்றாவது இப்படி விளம்பரம் செய்யுமா? செய்யாது காரணம் நிறைகுடம் நீர்தளும்பல் இல்


அடுத்த வியாழ கிழமை குவலயம் காணா குணவதி, வையகம் காணா வைரம், தங்க தலைவிக்கு பிறந்தநாள், எப்படி கொண்டாடலாம் என சங்கம் கடும் ஆலோசனையில் உண்ணாமல் உறங்காமல் செயல்படுகின்றது

மகா சிறப்பாக இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போல பல சிலைகளை செய்து ஊர்வலம் செல்லலாம் என்ற செயலாளர் Periya Samyஅவர்களின் கோரிக்கை பரீசீலிக்கபட்டது

ஆனால் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும், இந்த Babu Rao கோஷ்டி எல்லாம் கல் எறியும் என்பதால் அதுபற்றியும் கவனத்தில் எடுத்துகொள்ளபடுகின்றது

அமெரிக்காவில் சுதந்திர தேவி சிலை அருகே குஷ்பூ தேவி சிலையினை அமைத்துவிட்டால் உலக கவனம் பெறலாம் என்கின்றார் Venkatesh Mothilal

அதை முழுக்க தங்கத்தால் வைக்க வேண்டும் என்கின்றார் Bilal Aliyar

இது சம்பந்தமாக டிரம்பிடம் பேச குழு ஒன்று அனுப்படுகின்றது, அனுமதி கிடைக்காவிட்டால் புட்டீனிடம் சொல்லும் திட்டமும் உண்டு. பார்க்கலாம்

குஷ்பு ஜெயந்தி மிக விமரிசையாக கொண்டாடபட வேண்டும், அது உலகமே திரும்பி பார்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதில் சங்கத்திற்கு மாற்று கருத்தே இல்லை

தலைவி பிறந்த நாள் கொண்டாட்டம் தொடங்கிவிட்டதாக சங்கம் உலகிற்கு அறிவிக்கின்றது

அதனால் உலகெல்லாம் இன்றே சர்வமத பிரார்த்தனைகளும், எல்லா ஆலயங்களிலும் தலைவிக்கான சிறப்பு வழிபாடும் தொடங்கியாயிற்று

அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் விரைவில் அறிவிக்கபடும்

Image may contain: 1 person, smiling

 

 

 

 

 

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s