திரைச்செய்திகள்

குஷ்பு குளிர்முகம் காண்டல் இனிதே
அவர்புகழ் பாடுதல் அமிழ்தின் இனிதே
எஞ்சா விழுச்சீர் இனிய மகளை
கண்டெழுதல் காலை இனிதே..

Image may contain: 1 person, smiling, closeup
———————————————————————————————————————————

யார் செய்த புண்ணியமோ, இல்லை முற்பிறவி பலனோ நமது மனத்தையும் நம்மையும் தலைவி குஷ்பு ஆட்கொண்டுவிட்டார்

இல்லாவிட்டால் இந்த நித்யாமேனன் நிச்சயம் தலைவி ஆகியிருப்பார் போல, இப்பொழுதும் மனம் சிந்திக்கத்தான் செய்கின்றது

ஆனால் குஷ்புவிற்கு கொடுத்த இடம் , இன்னொருவருக்கு சொந்தமில்லை என்பதால் ஆபத்தில்லை.

நாமெல்லாம் குஷ்புவிற்கு அடிமையாக எழுதி கொடுத்த கட்டப்பா வம்சம்

“ஏ மனமே இந்த வைராக்கியத்தை விட்டுவிடாதே, நித்யா மேனனிடம் சிக்கி விடாதே..”

இந்த அதிமுக பார்டர் சேலையின் விளைவு சும்மா இராது, நிச்சயம் “நித்யா மேனன் அதிமுக” என்றொரு பிரிவு பின்னாளில் வரலாம்

ராமசந்திர மேனனின் கட்சிக்கு நித்யா மேனன் வாரிசாகலாம் எனும் இன்னொரு கோணமும் வலுசேர்க்கின்றது

ஆக அதிமுகவினருக்கு “சிலிர்ப்பு தலைவி” ரெடி

Image may contain: 1 person, closeup
————————————————————————————————————————————-

ஜெயலலிதா வேடம் கொடுத்தாங்க, அப்படியே போயஸ் கார்டனையும் கொடநாட்டையும் கொடுப்பீங்களான்னு கேட்டால், கொடுக்கலாம் ஆனால் அப்படியே பெங்களூர் ஜெயிலுக்கும் போகவேண்டி இருக்கும் அப்பல்லோவுக்கும் போகணும்னு சொல்றாஙக..

என்ன தமிழ்நாடு இது.”

Image may contain: 1 person, closeup
———————————————————————————————————————————–

“எங்க அத்தை வாழ்க்கை கதையில நான் தான நடிக்கணும், என்னை விட்டுவிட்டு எப்படி அந்த நித்யாமேனன் நடிக்கலாம்?

எனக்கென்ன நடிப்பு வராதா? இல்லை எங்கள் குடும்பத்திற்கு வராதா?

இதை எல்லாம் நீங்கள்தான் சொல்ல வேண்டும்”

Image may contain: 1 person

சிதறல்கள்

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்பது போல எச்.ராசாவும், எஸ்.வீ சேகரும் கைது , சிறைக்கு எல்லாம் அப்பாற்பட்டவர்கள்

இது புரியாமல் ஆளாளுக்கு பேசி ஒன்றும் ஆகபோவதில்லை. இது அதிமுக ஆட்சி என்றல்ல, திமுக என்றாலும் நிலை நிச்சயம் இதுவேதான்

ஆம், சோ ராமசாமி கிழியாய் கிழித்தபொழுதும் அவர்மேல் துரும்பினை போட கூட யோசித்த கட்சி திமுக..

இங்குள்ள சிக்கல் அப்படி…

—————————————————————————————————————————————-

கருணாஸை பிடித்து உள்ளே போட்ட அரசு ஏன் எச்.ராசாவினை பிடிக்கவில்லை என ஆளாளுக்கு கேட்கின்றார்கள்

எச்.ராசாவினை பிடித்து உள்ளே போட்டால் நம்மை சும்மாவிடுவார்களா?

ஆட்சி கலையும் அத்தோடு கருணாசுக்கு அடுத்த செல்லில் நாமெல்லாம் இருப்போம் அவ்வளவு வழக்குகள் இருகின்றது இன்னும் வரும்

வெரி டெலிகேட் பொசிஷன்..

Image may contain: 6 people, people smiling, people sitting

இது என்ன சடையப்ப வள்ளலே??

“குட்கா அள்ளலே” என்றல்லவா இருக்க வேண்டும்?, ஆயினும் கம்பனுக்கு இப்படி ஒரு அவலநிலை வந்திருக்க கூடாது

Image may contain: 2 people, people smiling, outdoor
————————————————————————————————————————————–

பொதுதுறை வங்கிகள் இணைப்பு தவறானது, எலியும் தவளையும் எப்படி ஒரே இடத்தில் இருக்க முடியும்? : அன்புமணி ராமதாஸ்

ஆனால் தேர்தலில் மட்டும் மதவாதம்,சாதி வாதம், தலித் கட்சிகள் , கம்யூனிஸ்டுகள், தேசியவாதிகள், பிரிவினைவாதிகள் எல்லாம் கூட்டணியாக இருக்கலாம், தேர்தலில் வெல்லலாம்

அந்த ஆட்சியில் அவை பங்கும் பெறலாம் என்கின்றார் லவ்பெல்


சுப்பிரமணிய சாமிக்கு இந்த திராவிட கட்சிகளை வம்புக்கு இழுப்பது என்பது மிக விருப்பமான பொழுது போக்கு, மறுபடியும் வம்பிழுக்கின்றார்

இம்முறை என்ன சொல்கின்றார், கலைஞர் சொன்னது போல ராவணன் திராவிடன் அல்ல, அவன் இலங்கையில் இருந்தாலும் திராவிடன் அல்ல. அவனுக்கு உபியில் கோவில் உண்டு என்றெல்லாம் சொல்லியிருக்கின்றார்

அத்தோடு விட்டால் எப்படி? தன் பிரயத்யோக ஸ்டைலில் கலைஞரை எப்படி சீண்டி இருக்கின்றார் என்றால் பின்வருமாறு இழுத்திருக்கின்றார்

”ராவணன் சாம வேதம் அறிந்த அறிஞர். ஆனால் ராவணனைத் தன்னைப் போல் எனத் தவறாகக் கருணாநிதி கருதிவிட்டார்”

போதாதா? ஆயிரம் அர்தங்களை சொல்லும் வம்பு இது, விஷயம் பற்றி எரிகின்றது

கலைஞர் இருந்தால் “ஆம் நான் ராவணனே எனக்கு ராமனை போல மறைந்திருந்து கொல்ல தெரியாது, பெண்ணின் மூக்கை அறுத்து ஈவ்டீசிங் செய்ய தெரியாது , பத்தினியார் கோட்டை தாண்டி செல்ல தெரியாது

சொந்த சகோதரனை அண்ணனுகு எதிராக கிளப்பிவிடும் சூது தெரியாது” என பட்டீரென்று சொல்லி இருப்பார்

ஆனால் அவர் இல்லை என்பதால் சு.சாமிக்கு பதில் சொல்ல யாருமில்லை

விஷயம் பற்றி எரிகின்றது

சுவாமி சொன்னது புதிதல்ல, ராவணன் பிராமணன் சிவபக்தன் என்றே ராமாயணம் சொல்கின்றது, ராமனே சத்திரியனாம்

இன்னொன்று வால்மீகி எங்கும் இலங்கை என்ற தேசத்தை சொன்னதாக தெரியவில்லை, அது இலங்கை என சொன்னவன் கம்பன்

அந்த பாவத்திற்கு கம்பனை இன்று குட்கா ஊழல் விஜயபாஸ்கர் எல்லாம் விழா எடுத்து கொண்டாடுகின்றார் என்ற தண்டனை எல்லாம் உண்டு, இதனை விட என்ன கொடுமை கம்பனுக்கு வேண்டும்

ராமன் ஆரியனுமல்ல, ராவணன் திராவிடனுமல்ல இதெல்லாம் இடையில் வந்த திரிபுகள் என்பதில் சந்தேகமில்லை

எனினும் சு.சாமி வம்பிழுத்தாகிவிட்டதால் உடன்பிறப்புக்கள் எப்படி எல்லாம் சீறுவார்கள் என்பது இனிதான் தெரியும்


இந்திய கபடி அணி ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் எல்லாம் வென்றிருகின்றது, இன்னும் பல சாதனைகளை புரிந்திருக்கின்றது

ஆயினும் அந்த மாபெரும் கபடி வீரனுக்கு ஏன் வாய்ப்பில்லை என்றால் அதுதான் தமிழின வெறுப்பு, தமிழின துரோகம்

இந்த மாபெரும் தமிழ்கபடி வீரனை, தமிழனாக இருந்த சிவந்தி ஆதித்தன் கூட கண்டுகொள்ளவில்லை என்பதுதான் தமிழகத்தின் சோகமான வரலாறு

யார் அந்த கபடி வீரன்?, கபடியினை வேடிக்கை பார்த்தே கற்று, தன் அறிமுக ஆட்டத்திலே அனைவரையும் அவுட்டாக்கி,அப்படியே அம்பையரையும் பிடித்து கோட்டுக்கு வெளியே வீசிய அந்த மாபெரும் தமிழ்கபடி வீரன் யார்?

நம் அங்கிள் சைமன், யார் சொன்னார் என்றால் அவரேதான்
. என்ன சொன்னார்? தன் கபடி பெருமைகளை சொன்னார்

இவர் கல்லூரியில் படித்தபொழுது கபடி வேடிக்கை பார்த்தாராம், யாரோ வரவில்லையாம் இவரை ஆட சொன்னார்களாம் அங்கிள் கலக்கிவிட்டாராம், உடனே நிரந்தரமாக்கிவிட்டார்களாம்

இது “வெண்ணிலா கபடி குழு” படத்தை பார்த்து அன்னார் புளுகுவது என்பது எல்லோருக்கும் தெரியும்

ஆனாலும் அங்கிளுக்கு கொஞ்சம் அறிவு கம்மி என்பதால் வழக்கம் போல் மாட்டிகொண்டார்

எப்படி?

இவர் கபடி விளையாடியபொழுது எல்லோரும் “சீமான், சீமான்” என உற்சாகபடுத்தினார்களாம்

அப்பொழுது அன்னார் பெயர் சைமன், அவர் சீமான் ஆவார் என்பது அவருக்கே தெரியாது, ஆனாலும் சுற்றி இருந்தவர்களுக்கு தெரிந்து ” சீமான் சீமான்” என கத்தினார்களாம்

இப்படி கல்லூரியில் தன்னை சீமான் என அழைத்தார்கள் எனும் பொய்யினை சொல்லி கபடி கப்சாவிலும் பிடிபட்டு அவுட் ஆகின்றார் அங்கிள் சைமன்…


முன்பொரு காலம் ரஷ்யா விண்வெளி போட்டியில் முன்னணியில் இருந்தது

பொறுக்காத அமெரிக்கா நிலவினை உடைத்து தன் பலத்தை காட்ட நினைப்பதாக கதைகள், பரபரப்புக்கள் எல்லாம் வந்தன‌

அமெரிக்கா நிலாவினை இரண்டாக பிளக்க போவதாக எல்லாம் அன்றைய பரபரப்புகள் இருந்திருக்கின்றன‌

அதெல்லாம் நடக்கவில்லை, ஆனால் இன்று நடக்கும் நிலவு இம்சைகளுக்கு அதெல்லாம் நடந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் போல…


ஆதாரம் கிடைத்தால் ஹெச் .ராஜா கைது செய்யப்படுவார் : ஓபிஎஸ்

( ஒபிஎஸ்க்கு காதும் செவிடு கண்ணும் குருடு என்பதால் ஆதாரம் கிடைத்தும் ஒன்றும் ஆகபோவதில்லை..)

ஆதாரம் கிடைத்தால் கைதுசெய்யபடும் ராசா, இவர்களுக்கு ஆதாயம் கிடைத்தால் வெளிவரபோகின்றார், அவ்வளவுதான்


திமுக இந்துக்களுக்கு எதிரி அல்ல, ஆனால் இந்துக்களின் சடங்குகளையோ இல்லை பண்டிகைகளயோ ஆதரிக்கவே மாட்டோம் எனபது போல் விளக்கி இருக்கின்றார் முக ஸ்டாலின்

இதில் அண்ணா, கலைஞர் என வசமாக வசனங்களை காட்டுகின்றாரே அன்றி பெரியாரை மிக வசதியாக மறந்தும்விட்டார் என்பது வேறுகதை

நிச்சயம் இன்னும் இந்து எதிர்ப்பு என்பது திமுகவிற்கு கைகொடுக்காது, சுத்தமாக கொடுக்காது

இது மாறிவிட்ட காலங்கள், ஆனானபட்ட கம்யூனிசமே பல மாற்றம் கண்டுதான் சீனாவினை உச்சத்தில் வைத்திருக்கின்றது

காலத்திற்கு ஏற்ப மாறா எதுவும் நிலைக்காது,

இந்து பண்டிகைகளுக்கு தன் ஊடகத்தில் சிறப்பு நிகழ்ச்சியும், வெறும் விடுமுறை தினம் என சொல்லி நகர்வதும், இந்து புராணங்களை தங்கள் டிவிக்களில் காசாக்கிவிட்டு அதன் பின் நாங்கள் இந்து எதிரி அல்ல, ஆனால் இந்து கொள்கைகளில் நம்பிக்கை இல்லை என்பது சரியல்ல‌

நிச்சயம் இதெல்லாம் திமுகவிற்கு பலத்த பின்னடைவினைவே கொண்டு வரும், ஸ்டாலின் ஒன்றும் கலைஞர் அல்ல‌

ஸ்டாலின் ஒரு மாதிரி செல்கின்றார் என்றால் சுற்றி இருப்பவர்கள் அதை சுட்டிகாட்ட வேண்டும் ஆனால் செய்யமாட்டார்கள்

ஒரு திரிகடுக‌ம் பாடல் உண்டு, இந்நிலையில் அது திமுகவிற்கு மிக பொருந்தும்

“வாளை மீன் உள்ளல் தலைப்படலும், ஆள் அல்லான்
செல்வக் குடியுள் பிறத்தலும், பல் சவையின்
அஞ்சுவான் கற்ற அரு நூலும், – இம் மூன்றும்
துஞ்சு ஊமன் கண்ட கனா”

என்ன பொருள்?

“உள்ளன் என்னும் பறவை வாளை என்னும் மீனைப் பிடிக்க முயற்சிப்பதும், திறமையில்லாதவன் உயர்ந்த குடியில் பிறத்தலும், அவனை சுற்றி இருக்கும் அஞ்சும் இயல்புடைய கற்றாரின் கல்வியும் ஊமை கண்ட கனாவைப் போல யாருக்கும் பயன்படாதது ஆகும்..”

ஆக திமுக அப்படி யாருக்கும் பயன்படா நிலையினை நோக்கி செல்கின்றது


உதயநிதி என் மகன், அவர் நான் இருக்கும் திமுகவினை விட்டு எங்கு செல்வார்? : முக ஸ்டாலின்

மிஸ்டர் ஸ்டாலின், அழகிரியும் இதனைத்தான் சொல்கின்றார். திமுக அவர் தந்தை கட்சி அவர் அங்கு வராமல் எங்கு செல்வார்?

அவரை ஏன் தடுக்கின்றீர்கள்?

சிதறல்கள்

சர்ச்சை பேச்சு பேசிய கருணாஸ் கைது

சினிமாவில் வசனம் பேசியது போல் பொதுகூட்டத்திலும் பேசிவிட்டார், சட்டையினை கழற்றிவிட்டு சண்டைக்கு வாடா என காவல்துறையினை அழைக்காமல் நிஜத்தில் உள்ளே சென்றுவிட்டார்

எனினும் அந்த கூட்டத்தின் எடப்பாடிக்கே தன் மீது பயம் என்றும், தன் மேல் கைவைத்தால் இன்னும் பல ரகசியங்களை வெளியிடுவேன் என மிரட்டினார்

அந்த ரகசியம் வருமா வராதா என தெரியாது, எனினும் கருணாஸ் அமைச்சராகி பழனிச்சாமியின் வலது பக்கம் அமர்ந்துவிட்டால் ரகசியம் இருப்பதாகவே அர்த்தம்

ஆம் இந்த பன்னீர்செல்வமும் ரகசியம் வெளியிடுவேன் என்றார் துணை முதல்வரானார்

விஜயபாஸ்கர் குட்கா ஊழலில் சிக்கியபின் ரகசியம் காக்கவே கட்சியில் முக்கிய பொறுப்பு அளிக்கபட்டது

இனி கருணாசும் சபாநாயகராகவோ இல்லை அமைச்சராகவோ ஆனாலும் ஆச்சரியமே இல்லை

அக்கட்சியின் நிலவரம் அப்படி

—————————————————————————————————————————————–

வேலூர் சிறைக்கு அனுப்பட்டார் கருணாஸ்

பின்னே பேசிய பேச்சுக்கு பாளையங்கோட்டைக்கும், நாகர்கோவிலுக்குமா அனுப்ப முடியும்???


இந்தி எதிர்ப்பு என அதை விரட்டி விட்டாலும் விட்டார்கள், இப்பொழுது மோடியினை பலர் இந்தியில் திட்டும் பொழுது ஒரு மண்ணும் புரியவில்லை

இது இந்தியினை விரட்டி விட்ட வீரமண் அல்லவா? பின்னர் ஏன் இந்தியிலே அவரை கலாய்க்கின்றார்கள்?

மேரா பிஎம் சோர் ஹே என்பதை தமிழ்படுத்தி ஒரு பயலும் சொல்வானா என்றால் இல்லை

இந்த விஷயத்தில் இந்தியினை எதிர்க்காத அயோக்கியர்களை கண்டிக்கின்றோம்

இனி தமிழிசை என்ன சொல்வார், “அட இந்தி பேசமாட்டேன் என சொன்னவனை எல்லாம் பேச வச்சிட்டார் பாத்தியா மோடி, என்னாமா சைஸ் போடுறார்..”


 

என்னதான் சர்ச்சை இருந்தாலும் பாஜக அரசின் சில முக்கிய சாதனைகளை சொல்லித்தான் ஆகவேண்டும்

நிச்சயம் தங்கநாற்கர சாலை திட்டம் அவர்களின் முத்தாய்ப்பு, நாட்டிற்கு மிக அவசியமான திட்டமும் கூட. அது வந்தபின் நாடுமுழுக்க சாலை பயணம் எளிதாயிற்று

சாகர்மாலா திட்டமும் வரவேற்கதக்கது

இந்த வரிசையில் பாஜக அரசின் மகத்தான திட்டம் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம், நேற்று மோடி அறிவித்திருக்கின்றார்

நிச்சயம் ஏழை மக்களுக்கு வரபிரசாதமான திட்டம், ஏன் அரசு மருத்துவமனைகளை பெரிதாக்கி தரமான மருத்துவர்களை நியமித்தால் என்ன? என ஆளாளுக்கு கிளம்புவார்கள்

அவர்கள் கிளம்பட்டும், எல்லா விஷயமும் சாத்தியமில்லை, ஆனானபட்ட அமெரிக்காவிலே தனியார் மருத்துவமனைகள் அதிகம்

மருத்துவ செலவுகள் மிகுந்துவிட்ட இக்காலத்தில் பல கோடி இந்திய மக்கள் பயன்பெறும் இந்த மகத்தான திட்டத்தை அறிவித்ததற்காக மோடியினை பாராட்டலாம்

இதை தமிழகத்தில் கலைஞர் செய்தார் என்பார்கள், அதற்கு முன்பே அமெரிக்காவில் ஓபாமா செய்தார்

சோவியத ரஷ்யாவும் கியூபாவும் எல்லா மக்களுக்கும் அதற்கு முன்பே இலவச மருத்துவம் கொடுத்திருந்ததால் காப்பீடு அவசியமில்லை

ஓபாமா கேர், கலைஞர் காப்பீட்டு திட்டம் என தனிபட்ட விளம்பரம் செய்தார்கள், ஆனால் மோடி “பிரதமர் காப்பீட்டு திட்டம்” என செய்திருக்கின்றார். அப்படித்தான் செய்யவும் வேண்டும், பாராட்டுக்கள

இதை எல்லாம் தமிழக பாஜகவினர் எடுத்து சொல்ல வேண்டும், ஒவ்வொரு தமிழனும் இதனால் பயன்பெறுவான் என மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்

அவர்களோ கருணாஸ் பின்னால் ஓடுகின்றார்கள், பிள்ளையார் சிலைபின்னால் ஓடுகின்றார்கள், வாய்ப்பு கிடைத்தால் பிரியாணி அண்டா தேடி ஓடுகின்றார்கள்

இதெல்லாம் அக்கட்சிக்கு நல்லதல்ல‌

தேசமே பிரதமரின் காப்பீடு திட்டத்தை கொண்டாடும் பொழுது, காஷ்மீர் தீவிரவாதிகளே நமக்கும் காப்பீடு உண்டா? என மனம் உருகி நிற்கும்பொழுது தமிழக பாஜகவிடமிருந்து மட்டும் சத்தமே இல்லை

அது வரவும் வராது.

Image may contain: 1 person, text
—————————————————————————————————————————————–
“தோன்றிற் குஷ்புகாலத்து தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”
—————————————————————————————————————————————–

“செக்க சிவந்த வானம் ” படத்தின் இரண்டாம் டிரைலர் வந்திருக்கின்றது, என்ன பேசுகின்றார்கள் என பார்த்தால் அதிர்ச்சி வருகின்றது

“பெரியவருக்கு பிறகு அந்த இடம் யாருக்கு?” என அணல் பறக்கின்றது

இது என்ன வசனம் என யோசித்தால் கலைஞர் சமாதி வந்து போகின்றது, அப்படியே இந்த சிம்பு அரவிந்த்சாமி விஜய் சேதுபதி எல்லாம் மோதுவதை பார்த்தால் அழகிரி கனிமொழி முகமெல்லாம் வருகின்றது

படத்தின் அடிதடி காட்சிகளை பார்க்கும் பொழுது மதுரை சம்பவங்களும் நினைவுக்கு வருகின்றன.

படத்தின் பெயர் “செக்க சிவந்த வான”மாம், வானம் எப்பொழுது சிவக்கும்? சூரியன் உதிக்கும் பொழுதும் அடையும் பொழுதும் சிவக்கும்

ஆக உதயசூரியன்

சந்தேகமில்லை, கலைஞருக்கு பின்னரான திமுகவின் கதையினை மையமாக வைத்து மணிரத்னம் இந்த படத்தை தீட்டி இருக்கலாம்


நிலாவிற்கு 2025ல்குள் சுற்றுபயணிகளை அழைத்து செல்ல அமெரிக்க ஐரோப்பிய நிறுவணங்கள் இலக்கு வைத்து செயல்படுகின்றன‌

இங்கோ சாய்பாபா தெரிகின்றார் , இன்னும் யாரோ தெரிகின்றார் என ஏக அழிச்சாட்டியம்

உருப்படும் வழி இருப்பதாக கொஞ்சமும் தெரியவில்லை.. நிலாவிற்கு சென்றாலும் அங்கும் ஆசிரமம்தான் அமைப்பார்கள் போல..


தேசியமும் தெய்வீகமும் கண்கள் என சொன்ன தேவர் அய்யாவினை விழுந்து விழுந்து கும்பிடுங்கள்

ஆனால் வோட்டினை மட்டும் ராமசந்திரனுக்காக போட்டுவிட்டு கருணாஸ் போன்றோரை வளர்த்துவிடுங்கள்

தேவர் என்ன தமிழக கட்சிகளுக்கு வாக்களிக்க சொன்னாரா? இல்லை திராவிட கும்பலுக்கு பல்லாக்கு தூக்க சொன்னாரா?

தேவரை கும்பிடுவார்களாம், ஆனால் அவர் சொன்ன தேசிய அரசியலை மட்டும் பின் தொடராமல் தேவர் வாழ்க என சொல்லிகொண்டே அதிமுகவிற்கு வோட்டு அழிப்பார்களாம், இனி தினகரனுக்காம்

ஏதும் சொன்னால் பசும்பொன் சிங்கம்.. என கிளம்புவார்கள். அவர் சொன்ன நல்ல விஷயத்தை பின்பற்றுவார்களா என்றால் சுத்தமாக இல்லை


முன்பொரு காலத்தில் தெற்கு திசை ஆண்ட மன்னர் அவர்தான், நிச்சயம் அவர்தான்

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்த ஒரே தமிழன்

தென்னக விளையாட்டு போட்டிகளுக்கும் தடகள போட்டி, கபடி போட்டிகளுக்கும் அவர் உதவியதையும் , விளையாட்டை வளர்த்த விஷயங்களையும் சொல்லியே ஆக வேண்டும்

குறிப்பாக கைபந்து விளையாட்டு.

எல்லாவற்றிற்கும் மேலாக அவரின் சயமதொண்டு வாழ்த்துகுரியது, தமிழகத்தின் பிராதன ஆலயங்களை எல்லாம் சீரமனைக்க உதவினார், அதில் குறிப்பிடதக்கது தென்காசி ஆலயம்

திருச்செந்தூர் பகுதியில் அவரின் கல்விபணியும் கொஞ்சமல்ல, மிகபெரும் சாதனை அது. நடத்திய கல்லூரிகள் ஏராளம்

ஆதித்தனாருக்கு பின் தினதந்தியினை தூக்கி நிறுத்தியவர் சிவந்தி ஆதித்தன் என்பதில் மாற்றுகருத்தில்லை, அதன் திராவிட ஆதரவினை இறுதிவரை நிலை நிறுத்தியவர். அவருக்கு பின் காட்சிகள் மாறி இருக்கலாம்

இன்று அவருக்கு பிறந்த‌ நாள், அஞ்சலிகள்.

தமிழக பத்திரிகை உலகில் தவிர்க்கவே முடியாதவர் சிவந்தி ஆதித்தன்

Image may contain: 1 person, selfie and closeup
—————————————————————————————————————————————–

எப்படி போபர்ஸ் சர்ச்சையில் ராஜிவ் மேல் துளியும் குற்றம் இல்லையோ அப்படி இந்த ரபேல் சர்ச்சையில் மோடியினை சாடுவதும் அபத்தம்

சிக்கல் எங்கோ இருக்கின்றது

உண்மையில் மோடி அரசு செய்த தவறு இந்த காங்கிரஸ் அரசினை அப்படியே பின்பற்றி நாசமாய் போவது, ரபேலும் அப்படித்தான்

மற்ற நாடுகளின் விமான படைக்கும் இந்திய விமான படைக்கும் வித்தியாசம் உண்டு, நமது விமானபடை இயமலை மேல் பறக்க வேண்டும், சியாச்சினில் பறக்க வேண்டும், ராஜஸ்தான் பாலை நிலத்தின் மேல் புழுதி காற்றில் பறக்க வேண்டும், கடல் மேல் பறக்க வேண்டும் என ஏகபட்ட நிர்பந்தங்கள்

இதற்கு முன்னரும் பிரான்ஸ் விமானங்கள் இந்திய விமானபடையில் உண்டு, மிராஜ் , ஜாகுவார் ரக விமானம் அவை, கார்கில் யுத்தத்தில் மிராஜ் விமானமே மானம் காத்தது சந்தேகமில்லை

ஆனால் இன்னும் நவீனபடுத்துகின்றோம் என்றுதான் இந்த காங்கிரஸ் அரசு ரபேல் பக்கம் சென்றது, அதன் பின் ஆட்சி மாறி வீட்டுக்கும் சென்றது

பின் வந்த மோடி அரசு என்ன செய்திருக்கலாம்? இந்த ரபேலை நிறுத்திவிட்டு பேசாமல் வேறு நல்ல நவீன விமானங்களை வாங்கி இருக்கலாம் அதனைத்தான் இவர்கள் செய்யவில்லை

மாறாக ரபேலைத்தான் வாங்குவோம் என ஒற்றைகாலில் நின்றார்கள், சிக்கினார்கள்

இதற்கெல்லாம் ஒன்றுதான் தீர்வு

கிரையோஜெனிக் எந்திரம் வரை செய்து, விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் திட்டம் வரை வெற்றிபெற்ற இந்தியா ஏன் சொந்தமாக நவீன ஜெட் விமானங்களை செய்ய கூடாது?

சீனா செய்யவில்லையா? இஸ்ரேல் செய்யவில்லையா? நாம் ஏன் செய்ய கூடாது

அட ஈரானே சமீபத்தில் செய்துகாட்டியது.

அதை இந்தியா செய்யாத பட்சத்தில் இப்படித்தான் சர்ச்சைகள் வரும், நாட்டின் பாதுகாப்பில் சந்தேகம் எழும்

நவீன விமானங்களை நாமே தயாரிக்க வேண்டும், ஏன் சொந்தமாக ஏவுகனை தயாரிக்கவில்லையா?

அதை செய்யாமல் பல்லாயிரம் கோடிகளில் இறக்குமதி செய்தால் இடைதரகர்கள் புகுந்து குழப்பத்தான் செய்வார்கள், இது உலக யதார்த்தம்

ரபேல் எனும் யூத வார்த்தைக்கு “காப்பாற்ற வருபவன்” என பொருள்படும், அப்படி ரபேல் இந்த காங்கிரசை காப்பாற்ற இந்தியா வந்திருக்கலாம்.