தமிழ்காத்த அற்புத வரலாறு

இந்தியினை எதிர்க்க முண்ணணியில் நின்றது திமுக, செத்தது 100 பேர். வாழ்வினை தொலைத்தது ஏராளம்

இந்தியினை கறுவருப்போம் என முழங்கியவர் முரசொலிமாறன். அவரின் திராவிட எழுத்தும் அவரின் முழக்கமும் கொஞ்சமல்ல‌

திராவிட தூணாகவும், தமிழ்போராளியாகவும் தமிழர் பிம்பமாகவும் முரசொலிமாறன் நின்றதெல்லாம் ஒரு காலம்.

அவரின் மகன் கலாநிதி மாறனின் நிறுவணம் சன் புரடக்சன்

அது சர்க்கார் எனும் படத்தினை தயாரிக்கின்றதாம், சர்க்கார் என்பது தமிழா என கேட்க கூடாது, சாட்சாத் இந்தி வார்த்தை

சன்டிவி தமிழ்பெயரா? என யாரும் கேட்காததால் சர்க்கார் இந்தி பெயரா எனவும் கேட்க கூடாது

இப்பொழுது அந்த முரசொலிமாறனின் மகன் தயாரிக்கும் சர்க்கார் படத்தில் ஒரு பாடல் வந்திருக்கின்றது பாருங்கள்..

அவர்கள் இந்தியினை விரட்டி தமிழ்காத்த அற்புத வரலாறு அப்படியே தெரிகின்றது…

“நிக்கலு நிக்கலுமா.” என இந்தி வார்த்தையோடே தொடங்குகின்றது, சிம்டாங்காரன் என்ன மொழி என்றே தெரியவில்லை

அட கூகுள் ஆண்டவருக்கே தெரியவில்லை

“பல்தே”, “பிஸ்தே” என வரும் இந்த பாடல் நிச்சயம் ” நீராடும் கடலுடுத்த..” என்ற தமிழ்தாய் வாழ்த்திற்கு பதிலாக திராவிட வாழ்த்தாக வரகூடிய பாடல்..

அவசபட்டு காலா படத்தின் பாடல்களை திட்டியதற்காக வருந்துகின்றேன்…

இப்பாடலில் ஒரு நல்ல தமிழ்வார்த்தையினை கண்டுபிடிப்பனுக்கு ஆயிரம் பொற்காசுகள் எனும் போட்டியினை தாராளமாக வைக்கலாம்…

ஆம் தமிழ்நாட்டில் தமிழ்திரைப்பட பாடலுக்குத்தான் அப்படி ஒரு போட்டி வைக்கும் சூழல் வந்திருக்கின்றது, கொண்டு வந்திருப்பவர்கள் சாட்சாத் கலைஞர் குடும்பத்தினர்.


“பின்ன என்னங்க, செக்க சிவந்த வானம் படத்தின் பாட்டு மோசம்னு சொன்னாங்க, மணிரத்னம் வருத்தபட்டாரு

நமக்கு அடையாளம் கொடுத்தருக்கு இதுதான் நன்றியான்னு யோசிச்சேன், “சர்க்கார்” படத்துல பாட்டை எல்லாம் கொன்னுட்டேன்

இப்போ பாருங்க, செக்க சிவந்த வானம் பாட்டு ரொம்ப நல்லாயிருக்கும்னு உலகமே சொல்லும், குருநாதருக்கு நன்றிகடன் செலுத்தியாச்சி”

Image may contain: 1 person, indoor
—————————————————————————————————————————————-

சிம்டங்காரன் யார் என்ற ஆராய்ச்சிக்கு விடை கிடைத்தாயிற்று

அது வேறுயாருமல்ல, இந்த டிடிவி தினகரன் என்பவரைத்தான் அப்படி சொல்கின்றார்கள். தினகரனை நன்றாக கவனியுங்கள் அந்த நடை உடை பாவனை எல்லாம் சிம்டாங்காரனுக்கு சரியாக இருக்கும்

இடைதேர்தலில் “வெர்ல்டு முழுதும் அர்ல விடனும் பிஸ்தே..” என சொல்லி கொண்டிருப்பவரும் அவர்தான்.

இதற்கு மேலும் ஒரு ஆதாரம் உண்டு

“மக்கரு குக்கரும்மா” என்ற வரி அது, குக்கர் என்றால் யார்? ஆர்.கே நகர் தேர்தலுக்கு பின் யாரை குறிப்பது என தெரியாதா என்ன?

ஆக யாரோ டிடிவியின் ஸ்லீப்பர் செல் விஜய்படத்தில் ஊடுருவி டிடிவிக்கு பாடல் எழுதிவிட்டார்

ஆக சிம்டாங்காரன் யார் என்றால் “மக்கரு குக்கரு” டிடிவி தினகரன் என்பவராகத்தான் இருக்க முடியும்

[ September 26, 2018 ]

Image may contain: 1 person, smiling, eyeglasses and closeup

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s