வெங்கடேச பண்ணையார்

தென் தமிழ்நாடு வெங்கடேச பண்ணையாரின் நினைவுநாள் என பரபரப்பில் இருக்கின்றது. தூத்துகுடி பகுதி 144 உத்தரவில் இருக்கின்றது
இன்று ஒரு நிலச்சுவாந்தாராக, தொழிலதிபராக இல்லை கபடி ஆட்டக்காரராக இருந்திருக்க வேண்டிய வெங்கடேசன் இப்பொழுது தீரா உறக்கத்தில் இருக்கின்றார்
எப்படி மாறியது அவரின் வாழ்வு?
அவர் குடும்பம் மிகபெரும் நிலச்சுவாந்தர் குடும்பம், அவர்களுக்கும் சிலருக்கும் பகை இருந்தது. சாதி வேறாய் இருந்ததுதான் சிக்கல்
பொதுவாக தொழில் இருப்பவன் பொறுத்து செல்வான், தொழிலே இல்லாதவனே வம்புக்கு வருவான். வெங்கடேசன் குடும்பத்தை அப்படித்தான் பலர் வம்புக்கு இழுத்தார்கள், கப்பம் கட்டியும் சிக்கல் தீரவில்லை
வெங்கடேசன் குடும்பத்தில் பலர் தொடர்ந்து கொல்லபட்டனர், அதுவரை அக்குடும்பம் வம்புக்கு செல்லவில்லை, ஒதுங்கித்தான் இருந்தது
தாத்தா, சித்தப்பா என பலரை பலிகொடுத்த வெங்கடேசன் முதலில் திருப்பி அடிக்க ஆரம்பித்தான் அப்பொழுது 20 வயதுதான் இருக்கும். சிக்கல் அப்படி திருப்பி அடிக்காவிட்டால் வாழமுடியாது
ஆனால் அது பெரும் சண்டையாக வெடித்தது. வெங்கடேசன் பரம்பரை நிலக்கிழார் வசதிக்கும் ஆளுக்கும் குறைவில்லை ஆனால் பசுபதி பாண்டியன் என்ன வேலை செய்தார் எப்படி வசதி வந்தது என யாரும் கேட்க கூடாது
மோதல் பெரும் கொலைகளாக வெடித்தது, இரு பக்கமும் தலைகள் உருண்டன. இதில் வாக்கு அரசியலும் சேர்ந்து சாதி சிக்கலாயிற்று
இரு தனிபட்டவர்களுக்கான விரோதம் சாதி சிக்கலாயிற்று, இரு பக்கமும் இருவரும் விடவில்லை
வெங்கடேசன் தனிபட்ட விரோததிதிற்காக அடித்த அடி அவர் சாதிய காவலர் என சிலரால் உருவாக்கபட்டது, வெங்கடேசனுக்கும் வேறு வழி தெரியவில்லை
எதிரி ஜாதிவட்டத்தில் பாதுகாப்பாய் இருந்தபொழுது அவரும் அதேவழி சென்றார்
ஜாங்கிட் எஸ்பியாக இருந்தபொழுது கடும் நடவடிக்கை எடுத்தார், அப்படி ஒரு எஸ்பி வெங்கடேசனின் தாத்தாவும் சித்தப்பாவும் கொல்லபடும்பொழுது இருந்திருந்தால் இந்த ரத்த சரித்திரம் உருவாகி இருக்காது, விதி அது அல்ல‌
ஒரு கட்டத்தில் சமாதனமாக சென்று, சராசரி வாழ்வுக்கு ஆசைபட்டார் வெங்கடேசன். அதற்கான வழி சாத்தான்குளம் இடைதேர்தலில் வந்தது
ஜெயலலிதாவினை வெற்றிபெற வைத்தால் வெங்கடேசனின் எல்லா வழக்கும் வாபசாகும் என்ற உறுதிமொழி கொடுக்கபட்டதாக செய்திகள் உண்டு ஆதாரமில்லை
ஆனால் சாத்தான்குளத்தில் அவரை ஜெயிக்க வைத்தவர் வெங்கடேசன் சந்தேகமே இல்லை. மாபெரும் வெற்றியினை ஜெயா பறிக்க வெங்கடேசனின் உழைப்பு அடித்தலமாய் இருந்தது
ஒரு கட்டத்தில் வெங்கடேசனுக்கு திருமணமும் ஆனது, ஜெயலலிதாவிற்காய் உழைத்துவிட்டோம் இனி நமக்கு ஆபத்தில்லை என கொஞ்சம் தன்னை மறந்தார் வெங்கடேசன்
அரசனுடன் உறவு என்பது சிங்கத்தின் உறவுக்கு சமம் என முன்பே பெரியவர்கள் சொன்னார்கள், அது உண்மை ஒரு காலலும் ஆளும் வர்க்கத்துடன் நட்பு பாராட்டவே கூடாது, அது நன்மையில் முடியாது. அரசியல் அப்படித்தான்
வெங்கடேசன் அந்த தவறை செய்தார். பெப்சி முரளி எனும் நண்பருக்காக சில சாகச செயல்களில் ஈடுபட முயன்றார்
விடுமா அதிகார வர்க்கம்?
ஒரு என்கவுண்டரில் கொல்லபட்டார் வெங்கடேசன், பெரும் சர்ச்சை வெடித்தது. ஜெயா வாயே திறக்கவில்லை, அன்றைய ஆளுநர் பாத்திமா பீவியும் கனத்த அமைதி
ஆனால் நாடார் சங்கங்கள் போராட தொடங்கின, சிவந்தி ஆதித்தன் நேரடியாக களத்திற்கு வந்தார்
அரசு ஒரு கமிஷனை விசாரிக்க அமைத்தது, இந்தியாவில் எந்த கமிஷனும் முடிவு சொல்லாததை போல அந்த கமிஷனும் முடிவு சொல்லாமலே காணாமல் போனது
நடந்ததை அமைதியாக பார்த்துகொண்டிருந்தார் கலைஞர், கை குழந்தையுடன் நின்ற ராதிகா செல்வி எனும் வெங்கடேசனின் மனைவி நிலை அவரை பாதித்தது
தேர்ந்த அரசியல்வாதியான கலைஞர் அவரை திருச்செந்தூர் தொகுதி வேட்பாளராக்கி வெல்ல வைத்து மத்திய அமைச்சரும் ஆக்கினார்
ஆயிரம் சொல்வார்கள் கலைஞர் குடும்பத்தை தவிர யாருக்கும் உதவ மாட்டார் என, ஆனால் உண்மையில் அவரின் உண்மை மனம் வேறு
ராதிகா செல்வி மத்திய அமைச்சர் ஆனாலும் வெங்கடேசனுக்கான நீதி கிடைக்கவே இல்லை. ஏன் என்றால் அப்படித்தான் இந்திய அமைப்பு அப்படி அதை கண்கூடாக கண்டவர் ராதிகா செல்வி
வெங்கடேசன் என்கவுண்டரில் அடிபட்ட பெயர் அனிதா ராதா கிருஷ்ணன், வெங்கடேசனை கடைசியாக தொடர்பு கொண்டவர் அவர் என செய்திகள் வந்தன‌
அப்பொழுது அதிமுகவில் இருந்தவர் பின் திமுகவிற்கு வந்தார்
அத்தோடு ராதிகா செல்வியும் அரசியலில் இருந்து ஒதுங்கினார். ஆனால் கலைஞர் இன்றைக்கும் அவருக்கு நன்றிகுரியவர்
இன்று அமைதியாக தன் மகனை வளர்த்து வருகின்றார் ராதிகா
பசுபதிபாண்டியனும் பின்னாளில் கொல்ல்பட்டார்
ஒருநாளும் அதிகாரமிக்கோருடன் மிக இயல்பாய் உறவு கொள்ளாதே , அவர்கள் மனதை அறிய முயற்சிக்காதே, அது மகா ஆபத்து என்பதற்கு சாட்சியாய் நிற்கின்றது வெங்கடேசனின் கல்லறை
தாளமுடியாத வலியில் திருப்பி அடிக்க தொடங்கிய வெங்கடேசன், எதிரிகளை அடக்கினான் சந்தேகமில்லை ஆனால் அவன் சாய்ந்ததில் ஏகபட்ட துரோகங்கள் உண்டு
35 வயதுவரையே வாழ்ந்தாலும் வெங்கடேசனுக்கென்று ஒரு சரித்திரம் இருக்கத்தான் செய்கின்றது,
நிச்சயம் அவன் தனக்காக அரிவாள் எடுக்கவில்லை. குடும்பம் காக்க எடுத்தான், அதை கீழே வைக்க விரும்பி அடைக்கலம் தேடி, அந்த அடைக்கலம் கொடுத்தவர்களால் கொல்லவும் பட்டான்
இன்று வெங்கடேசனும் இல்லை, பசுபதி பாண்டியனும் இல்லை ஆனால் தூத்துகுடி காற்றில் இன்னும் அந்த படுபயங்கர ரத்த்வாடை வீசிகொண்டே இருக்கின்றது
Image may contain: 11 people, people standing and text

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s