அரசியல் அழிச்சாட்டியம்

டிரம்ப் ஒரு பொய்யர் என உலகமே சொல்லிகொண்டிருக்கும் பொழுது ஆம், நான் அப்படித்தான் என்பது போல பேசிவிட்டார் டிரம்ப்

அவர் சொல்லியிருப்பது இந்த சங் பரிவார கும்பலுக்கு காதில் தேன் வந்து பாயும் செய்தி.

அதாவது இந்திய அரசு அடிமட்ட மக்களை நடுத்தர மக்களாக்கும் மாபெரும் திட்டத்தில் வெற்றிபெற்று கொண்டிருக்கின்றது, இந்தியாவில் ஏழைகள் குறைகின்றார்கள் இது மோடி அரசின் சாதனை என சொல்லிவிட்டார்

போதாதா? பாஜக கும்பல்களை இனி கேட்க வேண்டுமா? சும்மாவே ஆடுவார்கள் இனி சலங்கை கட்டி ஆடுவார்கள்

ஏன் டிரம்ப் இப்படி சொன்னார்? ஒரு வல்லரசு நாட்டின் தலைவர் இப்படி ஆதாரமின்றி சொல்லமுடியுமா என்றால் சில உண்மைகள் இருக்கின்றனவாம்

அதாவது தென்னிந்தியாவினை விட வட இந்தியாவில் அறியாமையும் வறுமையும் அதிகம், வடக்கு வாழ்கின்றது தெற்கு தேய்கின்றது என்பதெல்லாம் அண்ணா கும்பலின் பகிரங்க பொய்

இப்பொழுது வட இந்தியாவில் ஓரளவு முன்னேற்றமான திட்டங்களை மோடி எடுக்கின்றார் என உலக அமைப்புகள் சொன்னதின் அடிப்படையில் டிரம்ப் சொல்லி இருக்கின்றார் என்கின்றன செய்திகள்

மோடிக்கு இனி கேட்கவா வேண்டும், இப்பொழுதே டிரம்பினை கட்டிபிடிக்க கிளம்பிவிடுவார், ரபேல் நெருக்கடியில் அவருக்கு மிக உற்சாக டானிக் இது.

இனி ஏதாவது ஒரு கூட்டத்தில் டிரம்பிடம் என்ன சொல்வார் மோடி

பாருங்கள் டிரம்ப் காங்கிரஸ் காலத்தில் பெட்ரோல் 40 முதல் 50ரூபாய் மக்கள் தயங்கினார்கள், ஆனால் என் ஆட்சியில் 85 ரூபாய் ஆனால் மக்கள் தயக்கமின்றி வாங்குகின்றார்கள், யாராவது வாங்கமுடியாது என மறுத்தார்களா? பெட்ரோல் தேங்கிற்றா, பல்க் மூடபட்டதா? இல்லை

இதை எல்லாம் நீங்கள் இன்னும் எடுத்து சொல்லவேண்டும் டிரம்ப், மக்களின் வாங்கும் சக்தியினை நான் இப்படி அதிகரித்திருக்கின்றேன், இதை அந்த ராகுல் காந்தி காதில் படும்படி சொல்லுங்கள் சரியா”

Image may contain: 1 person, beard
—————————————————————————————————————————————

பிரபாகரன் படத்தை பிடித்துகொண்டு சிலர் மோடி பெட்ரோல் விலையினை ஏற்றிவிட்டார் என கோஷமிட்ட்டு கொண்டிருக்கின்றார்கள், யாரென பார்த்தால் நாம் தமிழர் கோஷ்டி

ஈழத்தில் பிரபாகரனின் ஆட்சியில் பெட்ரோல் விலை எப்படி இருந்தது?

அவர்களுக்கு பெட்ரோல் தமிழகத்தில் இருந்தும், இலங்கை அரசின் கட்டுபாட்டு பகுதியில் இருந்தும் இன்னும் எங்கெல்லாம் இருந்தும் கடத்தி கொண்டுவரபட்டது, சில வியாபாரிகள் வாங்கி வந்தும், கடத்தி வந்தும் விற்றனர்.

அப்படி கடத்திவரும்பொழுது புலிகள் அரசு என்ன செய்யும்? ஒன்றும் செய்யாது மாறாக பெரும் வரி விதிக்கும்

பின் அதை மக்களிடம் விற்கும்பொழுது அதற்கும் ஒரு வரி, மக்களுக்கும் ஒரு வரி

இதனால் பிரபாகரனின் பொற்கால ஆட்சியில் பெட்ரோல் விலை மற்ற பகுதியினை விட மூன்றுமடங்கு அதிகமாக இருந்தது

எல்லா பொருளுக்கும் இப்படி கொண்டுவர ஒரு வரி, விற்க வரி, வாங்க வரி என பிழித்ததுதான் புலிகள் ஆட்சி

இதனால்தான் அவர்கள் அழியும்பொழுது இலங்கையில் பெரும் சத்தமில்லை, சத்தமெல்லாம் இங்குதான்

அப்படி பெட்ரோல் விலையில் வன்னி மக்களை கசக்கி பிழிந்த பிரபாகரனின் படத்தை வைத்து கொண்டுதான் மோடியினை கண்டிகின்றார்களாம் பரிதாபத்திற்குரியவர்கள்

இன்னொரு கூட்டம் பிரபாகரனின் படத்தை பிடித்து கொண்டு பனைமரம் நடுகின்றதாம்

பனைமரம் ஈழத்திலும் ஏகபட்டது உண்டு, என்ன ஆனது?

பனையினை வெட்டி அரண் அமைக்கின்றேன், பனையினை வெட்டி சிங்களனை தடுக்கின்றேன் என புலிகள் அழித்த பனை ஏராளம்

இதனால்தான் முறிந்த பனை என்ற புத்தகமே வந்தது

இன்னும் புலிகள் பனைக்கு பின்னால் இருந்து தாக்க, இலங்கை அரசின் டாங்கி படை தாக்கி அழிக்கபட்ட பனை ஏராளம்

அந்த பனைவிரோதி பிரபாகரன் படத்துடன் இங்கு பனைமரம் நடுகின்றார்களாம்

ஒரு மண்ணும் தெரியாமல், யார் படம் பிடித்து என்ன செய்கின்ன்றோம் என தெரியாமல் சத்தம் போடுவதில் இவர்களுக்கு ஒரு ஆனந்தம்

இந்த கூட்டத்திடம் புத்தர் ஆடுவெட்ட சொன்னார், காந்தி மதுகடை திறக்க‌ சொன்னார் என்றாலும் கூட உடனே புத்தர் படத்துடன் கசாப்பு கடை திறக்கவும், காந்தி படத்துடன் பார் திறக்கவும் செய்யும் போல..

இப்படி ஒரு பரிதாப கூட்டம் உலகில் எங்குமே இல்லை..


இந்த தீலீபன் சாகும்பொழுது இங்கு ராமசந்திரன் முதல்வர், இவ்வளவிற்கும் புலிகள் அனுதாபி

ஆனால் அன்று ஒரு குரல் திலீபனை காக்காத ராமசந்திரன் பதவி விலகட்டும் என்றோ, இல்லை அமைதிபடையினை அனுப்ப அனுமதித்த ராமசந்திரன் ராஜினாமா செய்யட்டும் என்றோ கேட்கவே இல்லை

ஏன் என்றால் அப்படித்தான்

அமைதிபடை சென்றதும், புலிகள் முரண்டு பிடித்ததும் திலீபன் செத்ததும் எல்லாம் தமிழகத்தை உலுக்கிய காலங்கல்

ஆனால் ராமசந்திரன் கனத்த அமைதி கூடவே ராஜிவோடு கைகோர்ப்பு

ஒரு குரலாவது தமிழினதுரோகி ராமசந்திரன் என்றோ, ராமசந்திரன் ராஜினாமா செய்ய வேண்டும் என கேட்டதா என்றால் இல்லை

இதை எல்லாம் தமிழகம் மறந்துவிட்டது என பழனிச்சாமி, பன்னிர், தமிழிசை எல்லாம் பேசிகொண்டிருக்கின்றார்கள்

அவர்கள் வரலாற்றில் “நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணொம்”

எது பச்சை துரோகம் என்றால் இப்பக்கம் புலிகளுக்கு வாலையும் அப்பக்கம் ராஜிவிற்கு தலையினையும் காட்டி ஈழமக்களுக்கு ராமசந்திரன் செய்தது அப்பட்டமான துரோகம்

உண்மையான “தமிழின துரோகம்” அதுதான்

ஒரு வாதத்திற்கு வைத்தாலும், அமைதிபடையினை வரவேற்க மாட்டேன் என பதவி போனாலும் சரி என நின்ற கலைஞர் அமைதிபடை அனுப்பபட்டு அதன் பின் திலீபன் செத்தபின்பும் ராஜிவோடு கைகோர்த்து நின்ற ராமசந்திரனை விட பன்மடங்கு மேலானவரே..

Image may contain: 2 people, people smiling
———————————————————————————————————————————-

ஈரான் எண்ணெய்க்கு அமெரிக்கா தடை இட்ட நிலையில், மற்ற நாடுகள் உற்பத்தியினை அதிகரிக்க மறுத்த நிலையில் கச்சா எண்ணெயின் விலை 85 டாலராக எகிறுகின்றது, இன்னும் எகிறுமாம்

இனி இந்தியாவில் பெட்ரோல் விலை 100ஐ தொடும் காலம் தொலைவில் இல்லை, அநேகமாக தீபாவளி பரிசாக இருக்கலாம்


 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s