அரசியல் அழிச்சாட்டியங்கள்

பகல் கனவை ராகுல் நிறுத்த வேண்டும்: பாஜக தலைவர் அமித் ஷா

ஆம் அந்த கனவை காண தமிழிசைக்கு மட்டுமே உரிமை உண்டு, தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்

[ September 28, 2018 ]


மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தர் நியமிக்கப்பட்டது செல்லும்: உயர்நீதிமன்றம்

சும்மாவே நித்தி ஒரு மந்தகாச புன்னகையோடு இருப்பார்,தீர்ப்பினை கேட்டு எப்படி சிரிப்பாரோ?

எல்லாம் அந்த சிவபெருமானை சொல்லவேண்டும் அவர்தான் அந்த ஆதீனத்து கனவில் வந்து நித்தியினை வாரிசாக‌ நியமிக்க சொன்னாராம்

[ September 28, 2018 ]


இந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் பாலசந்தர் படங்களை அதிகம் பார்த்து தொலைத்தார்களா? இல்லை கமலஹாசன் ரசிகர்களா என்பது மகா குழப்பமாக இருக்கின்றது

இந்த இரு வகையறாக்களில் ஒன்றில் அவர்கள் இல்லாமல் இப்படியான தீர்ப்புகள் வராது

சமீபத்தில் ஓரின சேர்க்கை குற்றமல்ல என்றார்கள், இப்பொழுது எல்லா உறவும் குற்றமே அல்ல என்கின்றார்கள்

எமக்கென்னமோ பாலசந்தர் படங்களை அதிகம் இவர்கள் பார்த்திருப்பார்கள் என்றே தோன்றுகின்றது…

ஒருவேளை நித்திசாமி ஆதரவாளர்களாகவும் இருக்கலாம், என்கின்றது இன்னொரு தரப்பு, அதற்கும் வாய்பிருக்கின்றது

[ September 28, 2018 ]


தகாத உறவு குற்றம் அல்ல – உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

“அட, முன்னாடி மட்டும் தண்டனைக்குரிய குற்றமாகவா இருந்தது???. எனக்கு தெரியாம போச்சே..”

[ September 28, 2018 ]
Image may contain: 1 person, closeup
—————————————————————————————————————————————-

பெண்கள் ஒடுக்கபடுகின்றார்கள், சில கட்சிகள் கூட பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லை : கனிமொழி

அண்ணனிடம் பேசமுடியாததை , கட்சி பொதுகுழுவில் பேசமுடியாததை எல்லாம் அம்மணி மறைமுகமாக கொட்டி தீர்க்கின்றது பாவம்.

[ September 28, 2018 ]

============================================================================

“உச்சநீதிமன்றம் தகாத உறவை இனி தகும் என்பதால் அது தகுந்தது என்றல்ல, முன்பு தாகத உறவு இங்கு தகுந்து இருந்தது என இல்லாமலுமல்ல‌

தாகத உறவு இனி தகுமெனில் தகுந்த உறவு என்னாகுமோ, தாகததோ தகுந்ததோ எல்லாம் கடந்தவன் நான். அன்றே தகாதது தகுந்ததென்றேன் அது தகாது என்றார்கள், இன்று தகாதது தகும் என்றால் அன்றே தகுந்தவன் நான்”

[ September 28, 2018 ]
Image may contain: 1 person, sitting
=======================================================================

ரன்வீர் ஷா என்பவர் வீட்டில் 82 சிலைகள் மீட்கபட்டிருக்கின்றன என்பது சாதாரண விஷயம் அல்ல‌

சிலைகடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கபட்டாலும் , கடத்துபவர்கள் கடத்திகொண்டேதான் இருக்கின்றர்கள் எனும் பெரும் அதிர்ச்சியூட்டும் செய்தி இது

சட்டம், ஒழுங்கு, அறநிலையதுறை என எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் காட்சி இது

இன்னும் எத்தனை ரன்வீர் ஷாக்கள் எத்தனை சிலையினை மறைத்து வைத்திருக்கின்றார்களோ தெரியவில்லை, மிக அவசரமாக செயல்பட்டு எல்லா சிலையினையும் மீட்க வேண்டிய நேரமிது

மிக சரியாக நூல்பிடித்து சிலைகளை மீட்ட பொன்மாணிக்கவேலுக்கு பாராட்டுக்கள்

என்ன நாடு இது? சில தொழிலதிபர்கள் நாட்டை விட்டு ஓடுகின்றார்கள், சில தொழிலதிபர்கள் சிலைகளை நாட்டை விட்டு விரட்டுகின்றார்கள்

தொழிலதிபர்கள் என்றால் இந்த நாட்டில் மிக கவனமாக இருக்க வேண்டும் போல..  [ September 28, 2018 ]

============================================================================

உணவுக்கும் நீருக்கும் அடுத்த அவசியமானது மருந்து, எப்பொழுது யாருக்கு அது பயன்படும் என்றே தெரியாது, சமூகத்தில் மிக முக்கியமான பொறுப்பு மருந்து கடைகளுக்கு உண்டு

உயிர்காக்கும் மாபெரும் கடமையினை செய்பவை அவை

ஆனால் தங்களின் பொறுப்பினை மறந்து பெரும் தவறான காரியத்தை செய்கின்றார்கள்,அதாவது ஆன் லைனில் மருந்து விற்பதை கண்டித்து இன்று கடை அடைக்கின்றார்களாம்

இது எப்படி இருக்கின்றது என்றால், தனியார் பாதுகாப்பு காவலர்கள் அமைப்பதை கண்டித்து காவல்துறையினர் வேலை நிறுத்தம் செய்வது போல் உள்ளது

தனியார்கள் செக்கியூரிட்டிகளை நியமிக்க கூடாது, நாங்களே எல்லோருக்கும் காவல் என காவல்துறை வேலை நிறுத்தம் செய்தால் என்னாகும்?

இவர்கள்தான் மருந்துகளை விற்க போகின்றோம் என அரசிடம் அனுமதிபெற்று மருந்து கடைகளை திறந்திருக்கின்றார்கள்

இப்பொழுது இவர்கள்தான் அரசை கண்டித்து ஆர்பாட்டமும் செய்கின்றார்களாம்

மருந்து என்பது அத்திவாசியமானது, அதை அவசியமாக தேவைபடுபவர்கள் எங்கும் வாங்கலாம்

இதை கண்டித்து அரசை எதிர்த்து மக்களுக்கு மருந்து கொடுக்கமாட்டோம் என்பதெல்லாம் அயோக்கியதனமும் சுயநலமும் மிக்க விஷயம்

உயிர்கொல்லும் மதுபான வியாபாரத்தை அரசே நடத்திவிட்டு உயிர்காக்கும் மருந்து விற்பனையினை தனியாரிடம் கொடுத்திருக்கும் மாநிலத்தில்

ஆற்றுமண்ணை அரசு விற்றுவிட்டு உயிர்காக்கும் மருத்துவத்தை தனியாரிடம் கொடுக்கும் இம்மாதிரி விஷயங்கள் நடப்பதை பார்த்து பரிதாபடத்தான் முடியும்

[ September 28, 2018 ]

============================================================================

“தப்பு பண்ணிட்டோம் அமித்து, இந்த இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்திற்கு இங்கே அனுமதி கொடுத்திருக்க வேண்டும்

நாம என்னமோ நினைச்சி அனுமதி கொடுக்கல, பாகிஸ்தானை துபாய்ல போட்டு இந்திய அணி அடிச்சிருக்கு, குனிய வச்சி குத்திருக்கு

இதுவே இந்தியாவில் நடந்திருந்தால் ரபேலாவது, ஜீபேலாவது. அடுத்தவாட்டி நல்லா யோசிக்கணும் அமித்து.

நல்ல வாய்ப்பை விட்டுட்டோம்..”

Image may contain: 2 people, beard
===========================================================================

சபரிமலை கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி – உச்சநீதிமன்றம்

தீர்ப்பு சொல்லிவிட்டால் மட்டும் நல்ல இந்துபெண்மணிகள் செல்ல போகின்றார்களா என்ன? நிச்சயம் மாட்டார்கள்

மக்களின் தலைமுறை தலைமுறையான நம்பிக்கை என்பதை சட்டம் போட்டு உடைக்க முடியாது. [ September 28, 2018 ]

===========================================================================

அரசியல் அழிச்சாட்டியங்கள்

மோடி மிகபெரும் தலைவர், அவர் இந்தியாவினை வளர்கின்றார் ஏழ்மையினை ஒழிக்கின்றார் என சொல்லிவிட்டு அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு வேட்டு வைத்துகொண்டிருக்கின்றார் டிரம்ப்

அமெரிக்க இந்தியர்களுக்கு ஏகபட்ட கட்டுபாடுகளை விதித்துகொண்டிருக்கின்றார்

இனி ஏதும் கேட்டால், இந்தியாவினை மிகபெரும் வல்லரசு நாடாக்கிவிட்டார் மோடி இனி இவர்கள் அங்கு செல்வதுதான் சரி என சிரிக்காமல் சொன்னாலும் சொல்வார் போல..  [ September 26, 2018 ]


ஈரான் எண்ணெய்க்கு அமெரிக்கா தடை இட்ட நிலையில், மற்ற நாடுகள் உற்பத்தியினை அதிகரிக்க மறுத்த நிலையில் கச்சா எண்ணெயின் விலை 85 டாலராக எகிறுகின்றது, இன்னும் எகிறுமாம்

இனி இந்தியாவில் பெட்ரோல் விலை 100ஐ தொடும் காலம் தொலைவில் இல்லை, அநேகமாக தீபாவளி பரிசாக இருக்கலாம்   [ September 26, 2018 ]


இந்த மனிதர் கிறிஸ்தவர், நாமும் கிறிஸ்தவர் ஆனால் இவரின் பேச்சை கண்டிகின்றோம்

வடக்கே இந்து ஆலயம் அதிகம் இல்லையாம், தமிழகத்தில் நிரம்ப இருகின்றதாம் எல்லாம் சாத்தானாம்

வரலாறு என்ன?

வடக்கே முகமதியர் ஆட்சியில்பல ஆலயம் அழிக்கபட்டன, தெற்கே நாயக்க மன்னர்களின் காவலில் இங்கு அழிவு அதிகமில்லை

காஞ்சியும், கும்பகோணமும் அப்படித்தான் தப்பின‌

ஆனால் இவரோ வரலாறு தெரியாமல் வடக்கே சாத்தான் இல்லை எனவும் தமிழகம் சாத்தான்களின் கூடம் எனவும் சொல்லிகொண்டிருகின்றார்

நல்லவர் அந்த கோவில்கள் சாத்தான்களின் கூடம் என நிரூபிக்கட்டும், முடியுமா?

எங்கே அந்த இந்து தெய்வங்கள் இவரின் முன்னால் வந்து நாங்கள் சாத்தான்கள் என சொல்லட்டும் பார்க்கலாம்?

இதெல்லாம் இவர் கிளப்பிவிடும் கட்டுகதைகள், கண்டிக்க வேண்டிய விஷயங்கள்

காஞ்சியும் கும்பகோணமும் இந்துக்களுக்கு புனிதமான இடங்கள் , அவர்களின் தாய் போன்றவை

அவர்களிடம் சென்று உன் தாய் சாத்தான் என்பது ஏற்றுகொள்ள முடியாதது

பைபிளில் சில இடங்கள் உண்டு, இயேசுவின் சீடர்கள் சில ஆலயங்களுக்கு சென்றவுடன் அங்கிருந்த பிசாசுகள் அலறி அடித்துஓடியதாம்

இவர் இயேசுவின் நல்ல சீடர் என்றால் அப்படி செய்யட்டும் பார்க்கலாம், நிச்சயம் முடியாது

அட அவ்வளவு வேண்டாம், எங்காவது கொடை நடக்கும்பொழுது அதை இவர் தடுக்கட்டும் பார்க்கலாம்

அதெல்லாம் முடியாது, நிச்சயம் முடியாது

மதவெறியினை ஏற்படுத்தும் இம்மாதிரி நபர்களிடம் கிறிஸ்தவர்களும் தமிழர்களும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது

கருணாசுக்கும் இவருக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை

சட்டம் தன் கடமையினை செய்யவேண்டிய நேரமிது [ September 26 2018 ]


உ.பி.யில் மதக் கலவரத்தை தடுத்த தமிழ் ஐபிஎஸ் அதிகாரி ஜி.முனிராஜ்: ‘பரேலியின் சிங்கம்’ என பாராட்டு குவிகிறது
பெரியார் மண்ணில் விளைந்த நன்முத்து , பெரியார் குகையில் வளர்ந்த சிங்கம் என இப்பொழுதுதான் சொல்ல வேண்டும்
ஆனால் பெரியாரிஸ்டுகள் சொல்லவே மாட்டார்கள்
பெரியார் விருது எல்லாம் கொடுக்கத்தான் வேண்டும், ஆனால் கமுக்கமாக இருப்பார்கள்
எங்கோ கடல்கடந்த தமிழன் தன் தலைவனால் பட்டினி போட்டு கொல்லபட்டால் அவனுக்காக கொடிபிடிப்பார்கள்
காரணம் இந்தியாவிற்காக உழைக்கும் எந்த தமிழனையும் இவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.
இதுவே மத கலவரம் நிகழ்ந்திருக்கட்டும், பெரியார் பிறக்காத மண் அப்படித்தான் இருக்கும் என ஆளுக்கு முன் வருவார்கள்
இந்த தமிழக அதிகாரியினை வாழ்த்துவோம், சிங்கத்தின் பணி தொடரட்டும்

[ September 26 2018 ]

Image may contain: 1 person, standing and text
——————————————————————————————————————————-

இதுதான் உண்மையான நீல கலர் சேலன்ஞ்…. யாராவது பதில் கொடுக்க முடியுமா?

நெவர்…

நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா.. என்பது இதுதான்

[ September 26 2018 ]
Image may contain: 1 person, smiling, standing
————————————————————————————————————————————-

தாதுமணல் என்றார்கள் அதில் அணுசக்தி தோரியம் கடத்தபட்டது என்றார்கள்

தாதுமணல் தொழில் செய்த தயா தேவதாஸ், தனுஷ்கோடி ஆதித்தன், வைகுண்டராஜன் எல்லாம் தேச பாதுகாப்பு சட்டத்தில் சிக்க போகின்றார்கள் என முன்பொரு காலத்தில் சொன்னார்கள்

இப்பொழுது நியூஸ் 7 சேணல் மோடி இரண்டாம் காந்தி, ஆக்ஸ்போர்டு போகாத நேரு, சட்டம் படிக்கா அம்பேத்கர் எனு அளவிற்கு செல்லுவதை பார்த்தால் தோரிய சமாச்சாரம் நினைவுக்கு வரத்தான் செய்கின்றது

கொடுத்து வைத்தவர் மோடி, அவருக்குத்தான் தமிழகத்தில் எத்தனை அடிமைகள்??

புதிது புதிதாக எல்லாம் கிடைத்து கொண்டே இருக்கின்றார்கள், மோடி தாடிக்குள் மச்சம் இருக்கும் போலிருக்கின்றது [ September 26, 2018 ]


அடுத்த குஜராத் தொழிலதிபர் 5 ஆயிரம் கோடி மோசடியில் நாட்டை விட்டு ஓட்டம்

இனி அங்கிருந்துகொண்டு நான் ஜெட்லியிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தேன் என சொல்வார் என்பது வேறுவிஷயம்

முதலில் இந்த குஜராத் தொழிலதிபர்களின் பாஸ்போர்ட்டை எல்லாம் முடக்கி வைக்க வேண்டும், இல்லாவிட்டால் ஒரு பயலும் இங்கே இருக்கமாட்டான் போல‌

இப்படி எல்லாம் தப்புகின்றார்களே என கேட்டால், “மோடி ஆட்சியில் கருப்பு பணம் எல்லாம் ஒழிந்துவிட்டது அதனால் தாக்குபிடிக்க முடியாமல் தப்புகின்றார்கள்..” என முகம் மலர சொல்கின்றனர் பாஜகவினர்

[ September 26, 2018 ]


டிடிவி தினகரனும் ஜெயாடிவியும் நொடிக்கு ஒருமுறை அரசை காரி துப்புகின்றார்கள், அவர்கள் நாக்கை அறுங்கள் பார்க்கலாம்

கத்தி வேண்டுமானால் நாங்கள் தருகின்றோம்

 [ September 26 2018 ]
Image may contain: 4 people
————————————————————————————————————————————

ஆதார் என்பது பின்பற்ற வேண்டிய சட்டம் என உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது

எல்லா நாடுகளும் மக்களுக்கு ஒரு அடையாள எண் கொடுத்து நிர்வாகத்தை சீர்ப்ட நடத்தும்பொழுது பெரும் மக்கள் தொகை கொண்ட‌ இந்தியாவும் அதை பின்பற்றியே தீரவேண்டும்

வருங்காலங்களில் அது டிஜிட்டல் அட்டையாக மாறும்பட்சத்தில் பல நிர்வாக விஷயங்களை நொடியில் தீர்க்க முடியும்

ஆதார் கட்டாயம் என்பதை வரவேற்றே ஆகவேண்டும் [ September 26, 2018 ]


நீதிமன்ற நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்யலாம்- உச்ச நீதிமன்றம் அனுமதி

நல்லது இனி முக்கிய வழக்குகளை இந்த கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது போல பார்க்கலாம்.

இதில் வரும் மேட்ச் பிக்ஸிங் என்ற சூதாட்டத்தை எப்படி தடுக்க போகின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை..

மிக நல்ல அறிவிப்பு இது

பொதுவாக இந்த சினிமாவில் வரும் கவுரவம் சிவாஜி போலவோ இல்லை விதி சுஜாதா போலவோ ஒரு வக்கீலும் வாதிடுவதில்லை, எல்லாம் வடிவேலு சொன்னது போல “தங்களுக்கு தெரியாத சட்டமில்லை யுவர் ஆணர்..” எனும் ரகம்

அப்படித்தான் நீதிமன்றங்கள் நடக்கின்றன என்கின்றார்கள்

இருக்கட்டும், இனி வீட்டில் “நான் கோர்ட்டில் எப்படி வாதாடினேன் தெரியுமா? ஜட்ஜே அரண்டுவிட்டார்” என சொல்லும் வக்கீல்களுக்கு எல்லாம் ஆப்பு

பின்னே, அவர்கள் மனைவியும் குடும்பத்தாரும் டிவி முன் அமர்ந்துவிட மாட்டார்களா?

இனி போலி வக்கீல் உருவாக முடியும்??  [ September 26, 2018 ]

மன்மோகன் சிங்

உலகம் கொண்டாடும் ஒரு பொருளாதார மேதை, தன் கல்வி தகுதி 17 டாக்டர் பட்டம் என அமைதியாக சொன்ன அறிவாளி
உலகம் தடுமாறிய மந்தநிலை காலங்களில் இந்திய பொருளாதாரத்தை காத்து நின்ற பெரும் நிபுணர்
இன்று இந்தியா காட்டும் பொருளாதார பாய்ச்சலுக்கு அன்றே அஸ்திவாரமிட்ட பெரும் சிந்தனையாளன்
மாற்றுகட்சி ஆயினும் அவர்களும் வந்து ஆலோசனை கேட்கும்பொழுதும் நாட்டுமுன்னேற்றத்திற்காய் நல்ல ஆலோசனைகளை வழங்கும் பெருமகன்
அவர் பதவிவகித்த காலங்களில் அவரை தேடிவந்து பாராட்டியவர்களே அதிகம் தவிர, அவர் தேடிசென்ற நாடுகள் குறைவு. காரணம் நல்ல அறிவும் சிந்தனையும் எங்கிருந்தாலும் தேடி வரும் உலகமிது, அப்படித்தான் வந்தது
இந்நாட்டிற்காய் உழைத்த சீக்கிய மக்களின் மொத்த நாட்டுபற்றும் ஒன்றாய் சேர்ந்த உருவம் அது. ஒரு வார்த்தை அதிர்ந்து பேசாமல் நாட்டை அமைதியாய் வழிநடத்திய கோமான் அவர்.
எமக்கு வருத்தமெல்லாம் ஒன்றே ஒன்றுதான்
இன்று மோடிக்கு கிடைத்திருக்கும் பெரும் பலம்போல அவருக்கும் கிடைத்திருந்தால் இன்னும் பெரு வெற்றிகளை அவர் குவித்திருப்பார், நாடு இன்னும் வளம் பெற்றிருக்கும்
இன்று மோடிக்கு கிடைத்திருக்கும் அடிமை தமிழகமும் அவருக்கு இல்லை
கடும் கூட்டணி குழப்பத்தில் கல்மாடி, அழகிரி, தயாநிதி என ஏக இம்சைகளுக்கு மத்தியில்தான் அவரால் ஆளமுடிந்தது.
அதாவது ஏக சங்கிலிகட்டுகளுடன் தான் அந்த சிங்கம் நடந்தது
பெரும் அதிகாரம் கொண்டு நாட்டை நடத்துவது சிக்கல் இல்லை, ஆனால் ஒவ்வொரு திசையில் நடக்கும் 4 குழப்பவாதிகளை கால கொடுமையால் கொண்டும் வெற்றிபயணம் செய்ததுதான் திறமை.
அப்படி இந்த கூட்டணி இம்சைகளை கொண்டும் இந்த நாட்டினை நடத்தினார் என்பதில்தான் அவர் வெற்றி இருக்கின்றது, மனிதரை அப்படி பாடாய் படுத்தினார்கள்.
கூட்டணி என்ற பெயரில் அவர் காத்த அமைதி முள் இருக்கையின் மீது ரத்தம் கசிய அமர்ந்திருக்கும் வலிக்கு சமம், அப்படித்தான் அவருக்கு நெருக்கடிகள் இருந்தன. அந்த சிங்கம் சில இடங்களில் ஓநாய்கள், நரிகள், கூவைகள் சொல்லுக்கும் கட்டுபடும் காலம் இருந்தது.
(கலைஞருக்கு அஞ்சலி செலுத்த மன்மோகன் ஏன் வரவில்லை என்பார்கள், கலைஞரின் வற்புறுத்தலால் அழகிரியினை தன் அமைச்சரவை அமைச்சராக்கி அவர் சந்தித்த கசப்பான அனுபவங்கள் கொஞ்சமா
மறந்திருப்பாரா? )
மக்களாட்சி, அரசுக்கு ஆதரவு, வெளியிருந்து ஆதரவு, நாற்காலிக்கு கீழ் இருந்து ஆதரவு, மாடியிலிருந்து ஆதரவு என பல இம்சைகளுக்கு மத்தியில்தான் அவர் நிர்வாக தேர் ஓட்டினார்.
ஆனாலும் சலித்துகொண்டு விட்டு ஓடியவர் அல்ல‌,
முடிந்தவரை நாட்டினை பாதுகாத்து நின்றார், ஊழல்வாதிகள் பிடிபடும்போது அவர் காட்டிய கனத்த மவுனமே அவரின் கைகள் அன்று கட்டபட்டிருந்ததை அழகாக காட்டின‌
இப்படிபட்ட மாமேதைகளையும், கலாம் போன்ற பெரும் தியாகிகளையும் திகைக்க வைக்கும் ஒரு கேடு கெட்ட அரசியல் நடக்கும் நாடு இது, நாட்டின் கட்சிகள் அப்படி, குறிப்பாக மாநில கட்சிகளின் அட்டகாசம் அப்படி, கண்ணார பார்த்தோம்
விடுங்கள் எரிச்சல்தான் மிஞ்சும், மன்மோகனும் அப்படித்தான் சிக்கி இருந்தார், இருந்தாலும் அவரின் நிர்வாகத்திற்கு ஒற்றை சாதனை போதும்
அவர் காலத்தில் 120 டாலருக்கு கச்சா எண்ணெய் விலை இருந்தது, அவரோ 63 ரூபாய்க்கு மக்களுக்கு கொடுத்துகொண்டிருந்தார், அது திறமை
இன்றோ 70 டாலருக்கு வாங்கியும் அதே விலையில்தான் கொடுத்துகொண்டிருக்கின்றார்கள் இதுவும் திறமை
இன்றைய ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கு முன்னோடி திட்டமிட்டவரும் அவரே.
இன்றும் மோடியின் பல திட்டங்கள் சொதப்பும்பொழுது மன்மோகன் சிங் உயர்ந்து நிற்கின்றார், அவரின் அருமையினை பாஜகவினர் நன்றாகவே உணர்ந்திருக்கின்றார்கள்.
அவரை கை நீட்டி குற்றம் சொல்ல எந்த பாஜக காரனாலும் முடியவில்லை, அவரை எல்லோரும் மதிக்கின்றார்கள்.
அசுர பலத்தோடு ஆட்சியில் இருந்தாலும், ஒரு மன்மோகன் சிங் இல்லாமல் தடுமாறுகின்றது பாஜக.
வரலாற்றில் இடம்பிடித்துவிட்ட அந்த பெருமகனுக்கு டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஆச்சரியமான மனிதர் அவர், 10 வருடம் பிரதமராக இருந்தும் தனக்கொரு கோஷ்டியோ, 4 அல்லக்கைகளோ கொண்டிராமல் மகா அமைதியாக தனியாக‌ இருப்பவர், பாராட்டவேண்டிய ஒன்று.
எல்லோருக்கும் அது சாத்தியமில்லை, வார்டு கவுன்சிலர் பதவியில் இருந்தவனே அதனை எளிதில் விடமாட்டான், பதவியின் சுகம் அப்படி, போதை அப்படி
தமிழகத்து பன்னீரும், தினகரனுமே அதற்கு பெரும் சான்று
ஆனால் பாரத பிரதமராக இருந்தும் கட்சிக்குள் அவர் காட்டும் அமைதிக்கும் பெரும் பண்புக்கும் ஒரு சிகரமாகவே நோக்கபடவேண்டியவர் அவர்.
காங்கிரசில் மன்மோகன் சிங் கோஷ்டி என ஏதாவது உண்டா? அதுதான் பெருந்தன்மை,
தன் பணியினை நாட்டிற்கு கொடுத்துவிட்டு அமைதியாக ஒதுங்கி நிற்கும் பெரிய மனம்,
பதவிக்கும், பகட்டிற்க்கும், 4 வாழ்க கோஷங்களுக்கும் ஒதுங்கி நிற்கும் பெரிய மனம்
அந்த ஒன்றிற்காகவே அவரை வாழ்த்தலாம். நிச்சயம் கலாம் போல பெரிய மனதிற்கு சொந்தக்காரர் அவர்.
தமிழக காங்கிரசார் இவரிடமிருந்து படிக்கவேண்டிய பெரும் பாடம் அது, ஆனால் நிச்சயம் படிக்க மாட்டார்கள்.
இவர்கள் அப்படித்தான்.
தமிழக காங்கிரசாரே அம்மாமனிதனிடமிருந்து கொஞ்சமாகவது கற்றுகொள்ளுங்கள்.
அவரும் காங்கிரஸ்காரர்தான், நீங்களும் காங்கிரசார் என சொல்லிகொள்கின்றீர்கள்.
இதில் எது கட்சி அபிமானம் எனும் கேள்வியினை நீங்களே கேட்டுகொள்ளுங்கள், சத்யமூர்த்திபவனில் இம்மானிதனின் படத்தினையும் வையுங்கள், அவரை மனதினில் வையுங்கள்
உங்கள் கட்சி நிச்சயம் புத்துயிர் பெறும். ஏராளமான முன் உதாரணங்கள் உங்கள் கட்சியிலே இருக்கின்றன.
அந்த மாமனிதனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் [ September 26, 2018 ].
இப்படிபட்ட மாமனிதர்கள் இருப்பதால்தான் குஷ்பூவும் காங்கிரசில் இருக்கின்றார் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை
மன்மோகன் சிங்கிற்கு தமிழக குஷ்பூ அணி சார்பாக ஸ்பெஷல் வாழ்த்துக்கள்
வாழ்க நீ எம்மான், தன் தலையின் சீக்கியகொண்டைக்குள் முழுக்க பெரும் அறிவு உண்டு என காட்டிய அந்த இந்திய பெருமகனுக்கு வாழ்த்துக்கள்
பெருமகனுக்கு வாழ்த்துக்கள்
Image may contain: 1 person, hat, beard and closeup