அரசியல் அழிச்சாட்டியங்கள்

மோடி மிகபெரும் தலைவர், அவர் இந்தியாவினை வளர்கின்றார் ஏழ்மையினை ஒழிக்கின்றார் என சொல்லிவிட்டு அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு வேட்டு வைத்துகொண்டிருக்கின்றார் டிரம்ப்

அமெரிக்க இந்தியர்களுக்கு ஏகபட்ட கட்டுபாடுகளை விதித்துகொண்டிருக்கின்றார்

இனி ஏதும் கேட்டால், இந்தியாவினை மிகபெரும் வல்லரசு நாடாக்கிவிட்டார் மோடி இனி இவர்கள் அங்கு செல்வதுதான் சரி என சிரிக்காமல் சொன்னாலும் சொல்வார் போல..  [ September 26, 2018 ]


ஈரான் எண்ணெய்க்கு அமெரிக்கா தடை இட்ட நிலையில், மற்ற நாடுகள் உற்பத்தியினை அதிகரிக்க மறுத்த நிலையில் கச்சா எண்ணெயின் விலை 85 டாலராக எகிறுகின்றது, இன்னும் எகிறுமாம்

இனி இந்தியாவில் பெட்ரோல் விலை 100ஐ தொடும் காலம் தொலைவில் இல்லை, அநேகமாக தீபாவளி பரிசாக இருக்கலாம்   [ September 26, 2018 ]


இந்த மனிதர் கிறிஸ்தவர், நாமும் கிறிஸ்தவர் ஆனால் இவரின் பேச்சை கண்டிகின்றோம்

வடக்கே இந்து ஆலயம் அதிகம் இல்லையாம், தமிழகத்தில் நிரம்ப இருகின்றதாம் எல்லாம் சாத்தானாம்

வரலாறு என்ன?

வடக்கே முகமதியர் ஆட்சியில்பல ஆலயம் அழிக்கபட்டன, தெற்கே நாயக்க மன்னர்களின் காவலில் இங்கு அழிவு அதிகமில்லை

காஞ்சியும், கும்பகோணமும் அப்படித்தான் தப்பின‌

ஆனால் இவரோ வரலாறு தெரியாமல் வடக்கே சாத்தான் இல்லை எனவும் தமிழகம் சாத்தான்களின் கூடம் எனவும் சொல்லிகொண்டிருகின்றார்

நல்லவர் அந்த கோவில்கள் சாத்தான்களின் கூடம் என நிரூபிக்கட்டும், முடியுமா?

எங்கே அந்த இந்து தெய்வங்கள் இவரின் முன்னால் வந்து நாங்கள் சாத்தான்கள் என சொல்லட்டும் பார்க்கலாம்?

இதெல்லாம் இவர் கிளப்பிவிடும் கட்டுகதைகள், கண்டிக்க வேண்டிய விஷயங்கள்

காஞ்சியும் கும்பகோணமும் இந்துக்களுக்கு புனிதமான இடங்கள் , அவர்களின் தாய் போன்றவை

அவர்களிடம் சென்று உன் தாய் சாத்தான் என்பது ஏற்றுகொள்ள முடியாதது

பைபிளில் சில இடங்கள் உண்டு, இயேசுவின் சீடர்கள் சில ஆலயங்களுக்கு சென்றவுடன் அங்கிருந்த பிசாசுகள் அலறி அடித்துஓடியதாம்

இவர் இயேசுவின் நல்ல சீடர் என்றால் அப்படி செய்யட்டும் பார்க்கலாம், நிச்சயம் முடியாது

அட அவ்வளவு வேண்டாம், எங்காவது கொடை நடக்கும்பொழுது அதை இவர் தடுக்கட்டும் பார்க்கலாம்

அதெல்லாம் முடியாது, நிச்சயம் முடியாது

மதவெறியினை ஏற்படுத்தும் இம்மாதிரி நபர்களிடம் கிறிஸ்தவர்களும் தமிழர்களும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது

கருணாசுக்கும் இவருக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை

சட்டம் தன் கடமையினை செய்யவேண்டிய நேரமிது [ September 26 2018 ]


உ.பி.யில் மதக் கலவரத்தை தடுத்த தமிழ் ஐபிஎஸ் அதிகாரி ஜி.முனிராஜ்: ‘பரேலியின் சிங்கம்’ என பாராட்டு குவிகிறது
பெரியார் மண்ணில் விளைந்த நன்முத்து , பெரியார் குகையில் வளர்ந்த சிங்கம் என இப்பொழுதுதான் சொல்ல வேண்டும்
ஆனால் பெரியாரிஸ்டுகள் சொல்லவே மாட்டார்கள்
பெரியார் விருது எல்லாம் கொடுக்கத்தான் வேண்டும், ஆனால் கமுக்கமாக இருப்பார்கள்
எங்கோ கடல்கடந்த தமிழன் தன் தலைவனால் பட்டினி போட்டு கொல்லபட்டால் அவனுக்காக கொடிபிடிப்பார்கள்
காரணம் இந்தியாவிற்காக உழைக்கும் எந்த தமிழனையும் இவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.
இதுவே மத கலவரம் நிகழ்ந்திருக்கட்டும், பெரியார் பிறக்காத மண் அப்படித்தான் இருக்கும் என ஆளுக்கு முன் வருவார்கள்
இந்த தமிழக அதிகாரியினை வாழ்த்துவோம், சிங்கத்தின் பணி தொடரட்டும்

[ September 26 2018 ]

Image may contain: 1 person, standing and text
——————————————————————————————————————————-

இதுதான் உண்மையான நீல கலர் சேலன்ஞ்…. யாராவது பதில் கொடுக்க முடியுமா?

நெவர்…

நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா.. என்பது இதுதான்

[ September 26 2018 ]
Image may contain: 1 person, smiling, standing
————————————————————————————————————————————-

தாதுமணல் என்றார்கள் அதில் அணுசக்தி தோரியம் கடத்தபட்டது என்றார்கள்

தாதுமணல் தொழில் செய்த தயா தேவதாஸ், தனுஷ்கோடி ஆதித்தன், வைகுண்டராஜன் எல்லாம் தேச பாதுகாப்பு சட்டத்தில் சிக்க போகின்றார்கள் என முன்பொரு காலத்தில் சொன்னார்கள்

இப்பொழுது நியூஸ் 7 சேணல் மோடி இரண்டாம் காந்தி, ஆக்ஸ்போர்டு போகாத நேரு, சட்டம் படிக்கா அம்பேத்கர் எனு அளவிற்கு செல்லுவதை பார்த்தால் தோரிய சமாச்சாரம் நினைவுக்கு வரத்தான் செய்கின்றது

கொடுத்து வைத்தவர் மோடி, அவருக்குத்தான் தமிழகத்தில் எத்தனை அடிமைகள்??

புதிது புதிதாக எல்லாம் கிடைத்து கொண்டே இருக்கின்றார்கள், மோடி தாடிக்குள் மச்சம் இருக்கும் போலிருக்கின்றது [ September 26, 2018 ]


அடுத்த குஜராத் தொழிலதிபர் 5 ஆயிரம் கோடி மோசடியில் நாட்டை விட்டு ஓட்டம்

இனி அங்கிருந்துகொண்டு நான் ஜெட்லியிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தேன் என சொல்வார் என்பது வேறுவிஷயம்

முதலில் இந்த குஜராத் தொழிலதிபர்களின் பாஸ்போர்ட்டை எல்லாம் முடக்கி வைக்க வேண்டும், இல்லாவிட்டால் ஒரு பயலும் இங்கே இருக்கமாட்டான் போல‌

இப்படி எல்லாம் தப்புகின்றார்களே என கேட்டால், “மோடி ஆட்சியில் கருப்பு பணம் எல்லாம் ஒழிந்துவிட்டது அதனால் தாக்குபிடிக்க முடியாமல் தப்புகின்றார்கள்..” என முகம் மலர சொல்கின்றனர் பாஜகவினர்

[ September 26, 2018 ]


டிடிவி தினகரனும் ஜெயாடிவியும் நொடிக்கு ஒருமுறை அரசை காரி துப்புகின்றார்கள், அவர்கள் நாக்கை அறுங்கள் பார்க்கலாம்

கத்தி வேண்டுமானால் நாங்கள் தருகின்றோம்

 [ September 26 2018 ]
Image may contain: 4 people
————————————————————————————————————————————

ஆதார் என்பது பின்பற்ற வேண்டிய சட்டம் என உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது

எல்லா நாடுகளும் மக்களுக்கு ஒரு அடையாள எண் கொடுத்து நிர்வாகத்தை சீர்ப்ட நடத்தும்பொழுது பெரும் மக்கள் தொகை கொண்ட‌ இந்தியாவும் அதை பின்பற்றியே தீரவேண்டும்

வருங்காலங்களில் அது டிஜிட்டல் அட்டையாக மாறும்பட்சத்தில் பல நிர்வாக விஷயங்களை நொடியில் தீர்க்க முடியும்

ஆதார் கட்டாயம் என்பதை வரவேற்றே ஆகவேண்டும் [ September 26, 2018 ]


நீதிமன்ற நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்யலாம்- உச்ச நீதிமன்றம் அனுமதி

நல்லது இனி முக்கிய வழக்குகளை இந்த கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது போல பார்க்கலாம்.

இதில் வரும் மேட்ச் பிக்ஸிங் என்ற சூதாட்டத்தை எப்படி தடுக்க போகின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை..

மிக நல்ல அறிவிப்பு இது

பொதுவாக இந்த சினிமாவில் வரும் கவுரவம் சிவாஜி போலவோ இல்லை விதி சுஜாதா போலவோ ஒரு வக்கீலும் வாதிடுவதில்லை, எல்லாம் வடிவேலு சொன்னது போல “தங்களுக்கு தெரியாத சட்டமில்லை யுவர் ஆணர்..” எனும் ரகம்

அப்படித்தான் நீதிமன்றங்கள் நடக்கின்றன என்கின்றார்கள்

இருக்கட்டும், இனி வீட்டில் “நான் கோர்ட்டில் எப்படி வாதாடினேன் தெரியுமா? ஜட்ஜே அரண்டுவிட்டார்” என சொல்லும் வக்கீல்களுக்கு எல்லாம் ஆப்பு

பின்னே, அவர்கள் மனைவியும் குடும்பத்தாரும் டிவி முன் அமர்ந்துவிட மாட்டார்களா?

இனி போலி வக்கீல் உருவாக முடியும்??  [ September 26, 2018 ]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s