இலங்கை பிரதமரானார் ராஜபக்சே : செய்தி

இந்தியா மேல் பாகிஸ்தான் பலமுறை போர் தொடுக்க காரணமானவன் ஜியா உல் ஹக், அவனை தொடர்ந்து கார்கில் போரினை நடத்தினான் முஷாரப்

அவர்கள் எல்லாம் பாகிஸ்தான் அதிபர் ஆகும்பொழுது இங்கு சத்தமில்லை

இந்தியா மீது அறிவிக்கபடாத யுத்தம் நடத்தியவர் ஜின் பெங், அவர் நிரந்தர சீனா அதிபராகும் பொழுது சத்தமில்லை

இப்படி இந்நாட்டின் மேல் பெரும் வன்மம் கொண்டவர்கள் எல்லாம் அதிபராகும் பொழுது இந்நாட்டிற்கு ஒரு துரோகமும் செய்யாத ராஜபக்சே அந்நாட்டின் பிரதமராகும் பொழுது இங்கு கத்துவார்களாம்

இதுவா நாட்டுபற்று? அவமானம் வெட்கம்..

2009க்கு பின் அதிபராகவே இருந்தார் ராஜபக்சே அப்பொழுதெல்லாம் சத்தமில்லை

2009 யுத்ததித்தினை பாதுகாப்பு அமைச்சராக முன்னெடுத்தார் சீறிசேனா அவர் அதிபராகும் பொழுது சத்தமில்லை

ஆனால் ராஜபக்சே பிரதமர் ஆனால் குதிப்பார்களாம், இவர்கள் எல்லாம் மனநோயாளிகளோ எனும் சந்தேகம் வலுக்கின்றது

[ October 27, 2018 ]

============================================================================

இலங்கையில் இந்தியா ஏதோ வலுவாக செய்கின்றது, சந்தேகமில்லை

என்னை கொல்ல இந்தியா சதி என ஒப்பாரி வைத்தார் மைத்திரிபாலா, ஆனால் அதற்கு முன்பே அங்கு உள் அரசியல் குழப்பத்தில்தான் இருந்தது

டெல்லி வந்து மோடியினை பார்த்து பேசிவிட்ட் சென்றார் மகிந்த‌

அச்சம்பவம் நடந்து சில நாட்களுக்குள் அவர் பிரதமர் ஆகியிருப்பது என்ன நடந்திருக்கும் என்பதை காட்டுகின்றது

இலங்கையில் அதிபர்தான் உச்ச பதவி, பிரதமர் என்பது முக்கிய பதவி அல்ல எனினும், வருங்கால அதிபர் யார் என்பதை காட்டுவது பிரதமர் பதவியே

அதனால் ராஜபக்சே மறுபடியும் அதிபர் ஆக பிரகாசமாக வாய்ப்புள்ளது

2009க்கு பின் இரண்டாம் முறை அவர் அதிபராகும் பொழுது வாக்கு எங்கே அதிகம் வாங்கினார் என்றால் யாழ்பாணம் ஏரியாவில்

அதாவது அங்குள்ள தமிழரே ராஜபக்சேவினை ஆதரிக்கும் பொழுது இங்கு பலர் குதிப்பதுதான் காமெடி

[ October 27, 2018 ]

============================================================================

முக ஸ்டாலின் இலங்கை நிலவரம் குறித்து ஏதோ சொன்னதாக சில செய்திகள் சுற்றுகின்றன, அது உண்மை என்றால் மனிதர் “நாம் தமிழர் , எடப்பாடி கும்பல் உட்பட அனைவரையும் என் மேல் காரி துப்புங்கள்..” என அழைப்பதற்கு சமம்

அன்னார் மகிந்த ராஜபக்சே பிரதமர் ஆவதை இந்தியா அனுமதிக்க கூடாது , அவர் மேல் விசாரணை வேண்டும் இன்னும் பல வேண்டும் 7 தமிழர் விடுதலை வேண்டும் என அறிக்கை விட்டதாக தகவல்கள் வருகின்றன‌

அது உண்மை என்றால் ஸ்டாலினுக்கு மனபதற்றம் முற்றிவிட்டது, அரசியல் சுத்தமாக புரியவில்லை, பெரும் சேற்றில் கால் வைக்கின்றார் என்பதே உண்மை

2009ல் முள்ளிவாய்க்கால் கொடுமையில் திமுக காங்கிரஸ் அரசில் இருந்தது, நெருக்கடி ஒன்றும் கொடுக்கவில்லை அந்த கரும்புள்ளி இன்றுவரை அதன் மேல் உண்டு

கலைஞர் மேல் படிந்த கறை அது, அதற்கும் மேல் கனிமொழி எல்லாம் ராஜப்க்சேவினை சந்தித்த காலமும் உண்டு

அப்படியாக ராஜபக்சே அட்டகாசம் செய்தபொழுது இங்கு மத்திய அரசில் இருந்த திமுக, இப்பொழுது அமைதி காப்பதே நல்லது

ஆனால் ஸ்டாலினோ பாஜகவினை எதிர்ப்பதாக சொல்லி கொண்டு மல்லாக்க துப்புகின்றார்

அன்னார் சொல்லி இருப்பதை பாருங்கள், இலங்கை கொலையாளி ராஜபக்சே தண்டிக்கபட வேண்டுமாம், ஆனால் இங்கு ராஜிவ் கொலையாளிகள் இலங்கை குடிமக்கள் விடுதலை செய்யபட வேண்டுமாம்

ஒரு பொறுப்பான தலைவர் பேச கூடிய பேச்சா இது?

நாம் தமிழர் தும்பிக்கும் முக ஸ்டாலினுக்கும் வித்தியாசம் இருப்பதாக கருத முடியுமா?

இதெல்லாம் திமுக அமைதியாக கடந்து செல்ல வேண்டிய நேரம், ஆம் இதை தொட்டால் பூமராங்காக திருப்பி அடிக்கும்

எப்பொழுதடா சீண்டலாம் என காத்து கொண்டிருக்கும் எடப்பாடி, பாஜக கும்பலுக்கு பெரும் வாய்ப்பாகும்

சந்தடி சாக்கில் என் இனமே… என சைமன் கோஷ்டி பொங்கி வரவும் வாய்ப்பு உண்டு

ஸ்டாலினின் இந்த மிக குழப்பான அணுகுமுறை என்னாகும் என்றால் கடந்த தேர்தலில் திமுக பெற்ற 80 தொகுதிகளும் அடுத்த தேர்தலில் இருக்குமா? இருக்காதா? எனும் பெரும் கேள்வி குறியினை எழுப்பும்

மிக பெரும் தவறான அடிகளை எடுத்து வைக்கின்றார் ஸ்டாலின்

ஒருவர், யாராவது ஒருவர் “ஏன்யா, நீங்கள் மத்தியில் இருந்தால் ராஜபக்சேக்கு இந்தியா ஆயுதம் கொடுக்கும் பொழுது அமைதியாக இருப்பீர்கள்

ஆனால் பாஜக ஆளும்பொழுது மகிந்தா குற்றவாளி என கிளம்புவீரா” என கேட்டுவிட்டால் நிச்சயம் அந்த கணத்தை ஸ்டாலினால் எதிர் கொள்ளவே முடியாது

இதற்கும் முக ஸ்டாலினுக்கு திமுகவில் எவனாவது முட்டு கொடுத்தால் அவனே 200 ரூபாய் பதிவாளன் என அறிக..

[ October 27, 2018 ]

============================================================================

கொஞ்சமும் தமிழகத்தில் நடக்கும் மிக கோமளித்தனமான ஊழல் ஆட்சியினை கண்டு கொள்ளாமல், இலங்கை பிரதமர் யார் என கவலைபடுகின்றான் அல்லவா?

இவனே தமிழன், இப்படிபட்ட மாநிலத்தில் எடப்பாடி என்ன? தமிழிசை கூட ஒரு காலத்தில் முதல்வராகலாம்..

அடேய் உணர்வாளர்களா? சொந்த‌ தமிழக அரசு பற்றி எல்லாம் யோசிக்கவே மாட்டீர்களா? [ October 27, 2018 ]

============================================================================

ராஜபக்சே பிரதமரானதில் சீனாவின் தூண்டுதல் உள்ளது, அவர்கள்தான் நியமித்திருக்கின்றார்கள் : திருமா

சார், இந்த பழனிச்சாமியினை முதல்வராக்கியது சசிகலா, அதை காத்து நிற்பது மோடி என சத்தமாக சொல்லுங்கள் பார்க்கலாம்..

[ October 28, 2018 ]

============================================================================

இலங்கையில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் நடக்கும் சண்டையில் மகிந்தா பிரதமராகிவிட்டார்

மகிந்தா இனி அதிபர் ஆனாலும் ஆகலாம்

இதில் யாருக்கு வெற்றி தோல்வி என்பதல்ல விஷயம், ராஜபக்சே அதிபரானால் யாருக்கு லாபம் என்றால் இந்தியாவிற்கும் அல்ல,சீனாவிற்கும் அல்ல‌

லாபம் அமெரிக்காவிற்கு

இலங்கையின் மேல் அமெரிக்காவிற்கும் தீரா காதல் உண்டு, தன் டீகோ கார்சியோ தீவினை காலி செய்யும் நிலையில் இருக்கும் அமெரிக்கா தன் முகாமை இலங்கைக்கு மாற்றும் பரீசிலனையிலும் உண்டு

ராஜபக்சே அதிபர் ஆனால் அமெரிக்கா என்ன செய்யும்?

2009 இறுதி போரின் ஒவ்வொரு நொடியின் ஆதாரமும் அமெரிக்காவிடம் உண்டு, பிரபாகரன் கொல்லபட்டது வரை உண்டு

சிங்கள ராணுவத்தினை செயற்கை கோள் மூலம் கண்காணித்த அமெரிக்கா ஒவ்வொரு சிங்கள குற்றத்தையும் பதிவு செய்திருக்கின்றது

எப்பொழுது தேவையோ அப்பொழுது வெளிவிடுவார்கள்

உதாரணம் ராஜபக்சே இருந்த வரை சாணல் 4 அதிரடி வீடியோக்களை வெளியிட்டது நினைவிருக்கலாம்

மைத்ரிபாலா வந்தபின் சாணல் 4 ஏதும் வெளியிட்டது இல்லை

ஆனால் ராஜபக்சே அதிபனால் வெளிவரும், அமெரிக்க கோரிக்கை வரும் வரை வரும்

நம்புகின்றீர்களோ இல்லையோ ராஜபக்சே அதிபராகி அமெரிக்காவிற்கு பணியவில்லை என்றால் போர்குற்ற சர்ச்சை சூடுபிடிக்கும்

அதற்கு ஆதரவாக தமிழகத்திலும் ஈழ அல்ட்ராசிட்டிகள் குட்டி கரணம் அடிக்கும்

ஆம், இங்குள்ள ஈழ அல்ட்ராசிட்டிகளுக்கும் அமெரிக்காவின் கண்ணசைவிற்கும் மறைமுக தொடர்புகள் அந்த காலத்தில் இருந்தே உண்டு

[ October 28, 2018 ]

============================================================================

தோசை அலம்பல்கள் தொடர்ச்சி…

பொன்னி அரிசி ஆதிக்க சாதி, புழுங்கல் அரிசி ஒடுக்கபட்ட சாதி

ஆப்பிள், சிகப்பு தொழுவன் ஆதிக்கசாதி பழம், தக்காளி ஒடுக்கபட்ட சாதி பழம்

டைனிஷ் பிஸ்கட் ஆதிக்க சாதி, டைகர் பிஸ்கட் ஒடுக்கபட்ட சாதி

பென்ஸ் கார் ஆதிக்க சாதி, மாருதி 1000 ஒடுக்கபட்ட சாதி

இப்படி பார்க்கும் பொருளில் எல்லாம் ஆதிக்க சாதியும், ஒடுக்கபட்ட சாதியும் மாறி மாறி தெரிந்தால் என்ன செய்ய?

போதா குறைக்கு டிவியில் புல்லட்டில் செல்கின்றார் விணுசக்கரவர்த்தி

போதாதா? புல்லட் ஆதிக்க சாதி, சைக்கிள் ஒடுக்கபட்ட சாதி என சிந்தனை செல்கின்றது

இதிலிருந்து மீள என்ன செய்யலாம்?

96 படத்தினை இன்னொரு முறை பார்க்கலாம்

என்ன பெரிய 96? தலைவி குஷ்பு வைத்து 86 என்றொரு படத்தை எடுத்தால் அட்டகாசமாக காவியம் படைத்துவிட போகின்றது

சங்கம் அதுபற்றி யோசிக்க தொடங்கிவிட்டது..

[ October 27, 2018 ]

===========================================================================

சென்னையில் இருக்கும் மிக பெரும் ரெஸ்டாரண்ட் மேனேஜர்களிடம் விசாரித்தால் திமுக அதிமுக உட்பட எல்லா கட்சி கூட்டங்களுக்கும் அவர்கள் சாப்பாடுதான் செல்லுமாம்

சைவத்திலும் அசைவத்திலும் தனி முத்திரை பதித்த கடைகள் அவை, சுருக்கமாக சொன்னால் ஆதிக்க சாதி உணவு

ஆக ஆதிக்க சாதி உணவினை உண்டுவிட்டுத்தான் பலகாரங்களுக்கு சாதி பெயர் சூட்டும் சடங்கினை இந்த கும்பல் செய்து கொண்டிருக்கின்றது

திக உட்பட எல்லா கூட்டங்களிலும் பிரியாணி எனும் ஆதிக்க சாதி உணவுதான் அக்காலங்களில் இருந்து பிரசித்தி

பிரியாணி என்பது ஆதிக்க சாதி நெய்யும், பெரும் ஆதிக்க சாதியான பிரியாணியும் கலந்தது

இன்றும் வோட்டுக்கு பிரியாணி, கூட்டத்திற்கு பிரியாணி என ஆதிக்க சாதி உணவுதான் அடிப்படை

ஆனால் இதை பற்றி எல்லாம் நாம் பேச கூடாது

[ October 27, 2018 ]

============================================================================

அப்பல்லோ, குளோபல், காவேரி என்பதெல்லாம் ஆதிக்க சாதி மருத்துவமனை, அரசு மருத்துவமனையே ஒடுக்கபட்டோருக்கான மருத்துவமனை

நிறுத்துங்கண்ணே சும்மா ஆதிக்க சாதி அது இதுண்ணு, மதிமாறன் யாரு தெரியுமாண்ணே சிங்கப்பூர் எல்லாம் போய் பேசியிருக்காரு

எதுக்கு?

பெரியார் கொள்கையினை பரப்ப…

ஏண்டா சிங்க்ப்பூருல ஏது பிராமணன் அவனுக்கு அதிகாரம்? அங்க ஏன் திராவிட முழக்கம் பேச இவர் போனார்?

அது தமிழர் இருக்கும் இடமெல்லாம் போய் விழிப்புணர்வு கொடுக்கணும்ணே, அதுக்கு பெரியாதான் வழி

சிங்கப்பூர் சீன அதிகாரம், இவர் நல்ல புரட்சியாளர்னா அங்க போய் சீனர்களை கண்டிக்கணும் அத விட்டுபுட்டு அங்க போய் பிராமணன் ஒழிக திராவிடம் வாழ்கன்னா என்னடா அர்த்தம்

ஆமாண்ணே எனக்கே கொழப்பமா இருக்குண்ணே

சரி எந்த பிளைட்ல போனாரு?

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

டேய் விமான போக்குவரத்துல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மாஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ் எல்லாம் ஆதிக்க சாதி, இந்த சில்க் ஏர், ஏர் ஏசியாதான் ஒடுக்கபட்ட சாதி

அப்படியாண்ணே

பின்ன உங்க அண்ணன் ஏன் சீன ஆதிக்க சாதி நாட்டுக்கு ஆதிக்க விமானத்தில் சென்றார்?

அட போங்கண்ணே, நீங்க ஆரிய அடிவருடி, ஆர்.எஸ்.எஸ் ஏஜென்ட்

[ October 27, 2018 ]

Image may contain: 2 people
==========================================================================

ஏம்பா மதிமாறா

டிவியில் சாதி, அரசியல் எல்லாம் இல்லையா?

சன்டிவி என்பது ஆதிக்க சாதி டிவி, இந்த வின் டிவி ராஜ் டிவி இன்னும் பல பரிதாப டிவி எல்லாம் ஒடுக்கபட்ட டிவி என சொன்னால்தான் என்ன?

அப்படியே பாண்டி பஜார், திநகர் பக்கம் சென்று பார்த்துவிட்டு வியாபார ஆதிக்க சாதி எது என சொல்ல முடியுமா?

அட அவ்வளவு ஏன் விஜிபி கடற்கரை போன்ற ரிசார்ட் எல்லாம் ஆதிக்கசாதி கடற்கரை, மெரினா கடற்கரை ஒடுக்கபட்டோருக்கான கடற்கரை என சொல்ல மாட்டீரா? [ October 27, 2018 ]

============================================================================

தோசை விவகாரத்த வச்சி நாம பால்பாயாசம் வச்ச கதையினை மறக்க வச்சிட்டான்ல, அவன் தாண்டா மனுஷன்

அவனுக்கு ஏதாவது செய்யணும், மெயின் ரோட்டு பக்கம் வர சொல்லிருக்கேன்

[ October 27, 2018 ]
Image may contain: 1 person, closeup
============================================================================

உண்மையில் கொடூரமாக‌ சுரண்டபடும் சாதி ஒன்று உண்டென்றால் ஆட்டு எலும்பு சாதிதான்

எவ்வளவு கொடூரமாக சுரண்டுகின்றார்கள் பாவிகள்? கொஞ்சம் சதையினை வைத்தால்தான் என்ன?

தனிகறி வாங்கும் ஆதிக்க சாதிக்கு, எலும்பில் ஒட்டியிருக்கும் கறியினை சுரண்டி சுரண்டி கொடுப்பதுதான் சமூக நீதியா?

ஆட்டுகறி ஆதிக்க சாதி என்பதும் , எலும்பு ஒடுக்கபடும் சாதி என்பதும் , குடல் தீண்டதகாத சாதி என்பதும் யாருக்கு தெரியும்?

ஆட்டுகறியிலும் அரசியல் இருகின்றது

[ October 28, 2018 ]

============================================================================

சிதறல்கள்

ஆ.ராசாவுக்கு பிறந்த நாளாம், உபிக்கள் எல்லாம் வாழ்த்துகின்றன‌

ஸ்பெக்ட்ரம் வழக்கு பொய்யாக இருக்கட்டும் , கலைஞர் டிவி 200 கோடி ரூபாயினை கடன் வாங்கி ஒரேமாதத்தில் சம்பாதித்து கட்டியது எல்லாம் தொழில் நேர்த்தி ஆக இருக்கட்டும், ஆனால் ராசா குற்றாவாளி அல்ல என்பது கோர்ட் சொன்னது

இப்பொழுது உடன்பிறப்புக்கள் எப்படி வாழ்த்துகின்றன என்றால் பாசிஸ்டை வென்ற ராசாவே, ஆதிக்க சாதியினை நொறுக்கிய போராளியே, ஆரிய சூழ்ச்சியினை வென்ற ஆலமரமே என என ஒரே வாழ்த்து

கவனியுங்கள்

ராசா மேல் வழக்கு தொடுத்தது காங்கிரஸ் அரசு, அவரை கைது செய்தது காங்கிரஸ் அரசு, எனக்கு எதுவும் தெரியாது என கைவிரித்தவர்கள் காங்கிரஸ் தலைவர்கள்

ஆனால் ஆச்சரியமாக பாஜக ஆட்சியில் அவர் நிரபராதி என வெளி வந்திருக்கின்றார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவினை பிடித்து உள்ளே போட்டது காங்கிரஸ் அரசு ஆனாலும் கடந்த பாராளுமன்றம், சட்ட மன்ற தேர்தலில் காங்கிரசும் திமுகவுமே கூட்டணி

இன்றுவரை கூட்டணி, அடுத்த தேர்தலிலும் கூட்டணி

ஆனால் திட்டுவது எப்படி தெரியுமா?

பாசிசம் வென்ற ராசாவே, ஆரிய படை கடந்த நெடுஞ்செழியனே., இந்துத்வ சூழ்ச்சிகளை தகர்த்த இந்திரஜித்தனே

காங்கிரஸ் பிடித்து போட்ட வழக்கில், இந்துத்வா பிராமணியம் எல்லாம் எங்கிருந்து வந்தது?

ஏதாவது புரிகின்றதா? புரியாது. டெல்லி நோக்கி திட்டிவிட்டு இங்கு அதே கட்சியுடன் கூட்டணி

கேட்டால் ராஜதந்திரம் என்பார்கள்

ராசா வெளிவந்த ஒரே காரணம் சிபிஐ தன் தரப்பு ஆதாரங்களை சரியாக சமர்பிக்கவில்லை என்பது , அது ஒன்றுதான் காரணம்

இத்தோடு நிறுத்திகொள்வோம், இதற்கு மேல் சென்றால் ஆம் காங்கிரஸ் காலத்தில் சிபிஐ ஊழலில் திளைத்தது அதில்தான் ஆதாரம் கொடுக்காமல் திமுக தப்பியது திமுக காங் கள்ள கூட்டணி.

மோடிதான் சிபிஐயினை இப்பொழுது சீரமைக்கின்றார் என பாஜக கோஷ்டி பொங்கும் வாய்ப்பு உண்டு.

[ October 26, 2018 ]

Image may contain: 1 person, closeup
============================================================================

விசில் அடித்த மாணவர்களை
கம்யூனிஸ்ட்கள் என்று விமர்சித்த இளையராஜா

இதே இளையராஜா எத்தனை மேடைகளில் அண்ணன் பாவலர் வரதராஜனுடன் கம்யூனிச மேடைகளிலும் கூட்டங்களிலும் பாடிய , இசை அமைத்த அனுபவமே என்ன இசை அமைப்பாளராக மாற்றிற்று என சொல்லி இருக்கின்றார்

இளையராஜாவினை உருவாக்கியவர் பாவலர் வரதராஜன் அவர் ஒரு கம்யூனிஸ்ட்

இன்று வளர்ந்துவிட்ட இளையராஜாவிற்கு அந்த கம்யூனிஸ்டுகள் விசில் அடிப்பது அவமானமாக தெரிகின்றது

காலம் எப்படி எல்லாம் ஒரு மனிதனை மாற்றுகின்றது

[ October 26, 2018 ]

============================================================================

குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் – லதா ரஜினிகாந்த்

ஆமாம்மா, அப்படியே நீங்கள் கடத்திய‌ அந்த ரஜினிங்கிற பச்ச குழந்தையினையும் விடுவியுங்கள் தாயே, பாவம் அந்த பிள்ளை படாதபாடு படுகின்றது

============================================================================

போங்கடா போலி பெரியாரிஸ்டுகளா..

கடைசி வரைக்கும் தனக்கொரு ஒரிஜினல் வாரிசு வேண்டும் என அந்த கிழவன் ஏன் ஒற்றைகாலில் நின்றான் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது

============================================================================

அடிக்கடி சலசலப்பினை ஏற்படுத்தும் டிரம்ப் இப்பொழுது தன் ஐபோனை சீனாவு ரஷ்யாவு ஒட்டு கேட்பதாக சொல்லிவிட்டார்

ரஷ்யா உங்கள் பேச்சை ஒட்டா கேட்க வேண்டும்? என தலையில் அடித்து கொண்டு நகர்ந்துவிட்டது

சீனா அட்டகாசமாக சீண்டி இருக்கின்றது எப்படி?

உங்கள் நாட்டு ஐபோன் பாதுகாப்பு இல்லாதது என்றால், ஏன் நீங்கள் சீன நாட்டு போனை பாவிக்க கூடாது, மிக பாதுகாப்பானது தெரியுமா என கேட்க பல்லை கடித்து கொண்டிருக்கின்றார் டிரம்ப்

============================================================================

“லேய் மாமா இத பாருல‌

இது கடிகாரம்

அது தெரியும்ல ஆனா இத செஞ்சவன் பெரிய சோம்பேறில‌

ஏம்ல‌

பாருல 1 , 2ன்னு 12 வரை எழுத சோம்பேறிதனபட்டு சும்மா 12 3 6 9ன்னு மட்டும் எழுதிட்டாம்ல கிறுக்கு பய , இதுல எப்படில மணி பாக்க‌

லேய் இதுல ஈசியா பாக்கலாம்ல, நிறைய கடிகாரம் இப்படி லேட்டஸ்ட்ல‌

லேய் உன்ன மாதிரி பெரிய ஆட்கள் பாக்கும்ல, என்ன மாதிரி புதுசா கடிகாரம் படிக்கவங்க என்னல செய்வாங்க‌?

உனக்கு இதால பிரச்சினை

ஆமால, புதுசா கடிகாரம் படிக்கவங்க இதுல எப்படில படிக்க முடியும். சோம்பேறி பயலுவ எப்படி செஞ்சிருக்கானுவ பாத்தியால‌, அவனுக ஸ்கூல் கணக்கு டீச்சர் சரி இல்லல, இவ்வளவு நம்பர் மிஸ் பண்ணிருக்கான் பாரு

ஆமால‌

நீ இப்படி கடிகாரம் வாங்காதல, நல்ல வேலை செஞ்சவன் 1,2 , 3 ந்னு 12 மணிவரை வச்சிருப்பான், அதை வாங்குல இல்லண்ணா மிஷலுக்கு மணிபாக்க தெரியாம போய்ரும்ல‌

சரில‌

சின்ன பிள்ளைகள் கஷ்டம் யாருக்கும் தெரியலலல, எங்களுக்குதாம்ல தெரியும்”” 

No automatic alt text available.
============================================================================

இலங்கை பிரதமரானார் ராஜபக்சே : செய்தி

இடையில் இல்லாமல் போன வேலை திரும்ப கிடைச்சாச்சி என் சொந்தமே., இனி பாரு இனவிடுதலைக்கான அண்ணன் போராட்டம் எப்படி இருக்கும்னு

[ October 27, 2018 ]
Image may contain: 2 people, closeup

தோசை அலம்பல்கள்

தோசையில் சாதி இருக்கின்றது, ஆதிக்க சாதி தோசையினை ஒடுக்கபட்டவன் சுட முடியாது

இப்படிபட்ட அபார கண்டுபிடிப்பினை செய்தவர் யாரென்றால் பெரியாரிஸ்ட் மதிமாறன் என்பவர்

அதாவது பிராமணர் நெய் ஊற்றி பொடி போட்டு சுடுவார்களாம், தாழ்த்தபட்டவன் எண்ணெய் கூட இல்லாமல் வறட்டி மாதிரி சுடுவானாம், இதனால் தாழ்த்தபட்ட பெண் பிராமணன் வீட்டில் வாழமுடியாதாம்

தோசைக்குமா ஆதிக்க சாதி?

சரவணபவன் ஹோட்டல் என்பது நாடார் எனும் தாழ்தபட்ட சாதியினரால் நடத்தபடுகின்றது, அங்கு இல்லாத ருசியா?

உணவினை நிர்ணயிப்பது வருமானம், நல்ல வருமானம் இருந்தால் வகை வகையாக செய்து உண்ண போகின்றார்கள் இதில் சாதி எங்கிருந்து வந்தது?

தோசைக்கு வழி இல்லா பிராமணனும் உண்டு , வருமானத்தில் கொழுத்திருக்கும் தாழ்த்தபட்டவனும் உண்டு

தோசையிலும், அடுப்பு கரியிலும் சாதி பார்க்கும் ஒரு மாதிரி மனோவியாதி நிலைக்கு பெரியாரிஸ்டுகள் வந்துவிட்டதுதான் சோகம்

இப்போது உள்ள பெண்களுக்கு தோசை சுடவே தெரியவில்லை,

இதில் ஆதிக்க சாதி தோசை வேறாம், கிராதகர்கள்.

[ October 26, 2018 ]

============================================================================

ஆத்தாடி, எவ்வளவு பெரிய கோதுமை தோசை..

ஆதிக்க சாதி நாடுகளின் தோசை இப்படித்தான் இருக்கும் போல…

[ October 26, 2018 ]
Image may contain: food and text
============================================================================

உங்க நாட்டுல நூடுல்ஸ் மட்டும்தானா? அதுவும் சரிதாங்க தோசைன்னா சாதிக்கொரு தோசைன்னு வரும்

நூடுல்ஸ்னா எல்லோருக்கும் ஒண்ணுதான், கம்யூனிசம்னா இதுதானுங்க…

[ October 26, 2018 ]
Image may contain: 1 person, standing and suit
———————————————————————————————————————————-

நல்ல தோசை சுடுபவன் எல்லாம் ஆதிக்க சாதி என்றால், செட்டி நாட்டு சமையல்காரன் கடவுள் சாதி..

[ October 26, 2018 ]
Image may contain: food
========================================================================

மிஸ்டர் மதிமாறன்

இது என்ன சாதி தோசை என கொஞ்சம் பார்த்து சொல்லமுடியுமா?

[ October 26, 2018 ]
Image may contain: 3 people
=========================================================================

உணவிலும் சாதி உண்டு, சாதி வன்மம் உண்டு என சில கிளம்பி இருக்கின்றன, அபத்தமான வாதம் இது. குறிப்பிட உணவு சில சாதி அடையாளம் என்பதெல்லாம் சாதிய வாதம்

உண்மையில் உணவு என்பது வர்க்கம் சார்ந்தது, வர்க்கமும் அதன் வருமானமே உணவினை தீர்மானித்தது

அக்காலத்தில் உணவில் உச்சத்தில் இருந்தது அரசர்கள், ராஜபோஜனம் என்பது அதுதான்

இரண்டாம் வகையில் இருந்தது வியாபாரி முதலான செட்டியார்கள், செட்டிநாட்டு உணவு இன்றும் தனித்து நிற்க காரணம் அவர்கள் சாதி அல்ல மாறாக அன்றைய பெரும் செல்வம்

அக்கால செட்டியார்களுக்கும் அரசர்களுக்கும் விருந்து வைப்பதில் சண்டையே நடந்திருகின்றது இறுதியில் அரசன் உயர்ந்தவன் செட்டி வீட்டு கல்யாணத்தில் முக்கனியில் ஒன்று குறைய வேண்டும் என தீர்ப்பாகி இருக்கின்றது

நாயக்கர் கால சாம்பார் வகையாறாவும், மொகலாயர் கால பிரியாணியும், செட்டி நாட்டு வகைகள் இன்றும் நிலைத்து நிற்பது இப்படித்தான்

நிலக்கிழார்களின் உணவு முறை இவர்கள் அளவு இல்லாவிட்டாலும் திருப்திகரமாக இருந்திருக்கின்றது

ஆனால் நிலமில்லா ஏழைகள் நிலை பரிதாபம், அவர்கள் உழைத்தால் கஞ்சியோ கூழோ கிடைத்திருக்கின்றது

இதை சாதி என சொல்லமுடியாது உலகெல்லாம் அப்படித்தான் இருந்திருக்கின்றது, கருப்பின மக்களுக்கு ஒரு நாள் கூலி சோளமும் பன்றிகறியும் என்கின்றது மேற்கத்திய வரலாறு

உணவு என்பது வர்க்க பேத அடையாளமே தவிர சாதி அல்ல‌

பிரட் இல்லாவிட்டால் கேக் சாப்பிடுங்கள் எனும் பிரான்ஸ் மன்னனின் விளையாட்டு பேச்சு அந்நாட்டு புரட்சிக்கு வழிவிட்டது

உன் தட்டில் ரொட்டில் இல்லை என்றால் ஆண்டவனை கேட்காதே, அதை தடுத்து வைத்திருக்கும் அதிகாரம் மிக்கவனிடம் அடித்து கேள் என்ற லெனினின் வாசகம் ரஷ்யாவில் புரட்சி வெடிக்க வைத்தது

ஆக இந்த வர்க்க பேதம் என்பதைத்தான் சாதி பேதம் என மாற்றி குறுகிய மனப்பான்மையுடன் பலர் சொல்லி திரிகின்றனர்

இதெல்லாம் சாதிவெறி பிடித்த சாதி ஒழிப்பாளர்களின் சீழ் பிடித்த சிந்தனையே அன்றி வேறல்ல‌

அதுவும் மாறிவிட்ட இக்காலங்களில் எல்லா சாதியும் எதனையும் எதுவும் எப்பொழுதும் எங்கும் உண்ணலாம் எனும் நிலையில் இன்னும் சாதிய உணவு என்பதெல்லாம் எரிச்சலான காமெடி வகை

சோற்றுக்கு வழி இன்றி தவித்தான் பாரதி, ஒரு வேளை உணவுக்காக கெஞ்சி நின்றான் கனித மேதை ராமானுஜம். அவர்கள் எல்லாம் பிராமணர்கள் என்பது பற்றி யாரும் பேசமாட்டார்கள்

எந்த சாதிக்காரன் இப்பொழுது எந்த உணவினை சாப்பிட முடியாது? என்ன தடை?

இந்த சாதி இந்தவகை உணவினை சாப்பிட கூடாது, இதைத்தான் சாப்பிட வேண்டும் என யார் இங்கு கத்தி அரிவாளோடு சுற்றுகின்றார்கள்??

[ October 26, 2018 ]

============================================================================

தோசைக்கு ஆயிரம் பிரிவுகள் இருக்கலாம், ஆனால் இட்லிக்கு ஒரே உலக அடையாளம் தலைவி குஷ்பு ஒருவரே..

அதில் பிரிவே இல்லை.. [ October 26, 2018 ]

============================================================================

ஒருத்தன் என்னடான்னா கோட் மாட்டினாலும் அரசியல், கழற்றினாலும் அரசியல்னு சொல்றான்

இன்னொருத்தான் என்னடான்னா தோசை மாற்றி போட்டால் ஒரு அரசியல், மாற்றி போடாவிட்டால் இன்னொரு அரசியல்ங்கிறான்

எங்க இருந்துடா வாரீங்க…. [ October 26, 2018 ]

============================================================================

தோசையே தமிழர் உணவு இல்லை, வந்தேறி தோசை என ஒரே போடாக போட்டு விடுவோமா….

[ October 26, 2018 ]
Image may contain: 1 person, closeup
============================================================================

அந்தமான் பழங்குடி முதல் அமேசான் பழங்குடி வரை அரிசிசோறு சாப்பிடாதற்கு சாதியே காரணம்

விண்வெளியில் ஆய்வாளர்கள் உண்ணும் உணவுக்கும் சாதியே காரணம்..

சோமாலியா பஞ்சம் முதல் விழா காலங்களில் உலகெல்லாம் வீணாகும் உணவுவரை சாதியே காரணம்.. [ October 26, 2018 ]

============================================================================

வரலாறு இதைத்தான் சொல்கின்றது

உலகெல்லாம் இருந்தது மூன்று சாதி, ஒன்று மத குருமார் சாதி இன்னொன்று நிலமுடைய முதலாளி / வியாபாரி சாதி இன்னொன்று உழைக்கும் சாதி அல்லது அடிமை சாதி

முதன் முதலில் அடிமைகள் இனி இல்லை அவர்கள் சுதந்திரமானவர்கள் என சொல்லி உயிரை கொடுத்தார் ஆபிரகாம் லிங்கன்

தொடர்ந்து மார்க்ஸும் இங்கர்சாலும் முழங்கிய முழக்கத்தில் தொழிலாளர் உலகம் திரண்டது, உரிமை கோரியது

மத குருமார்களும், நில சுவாந்தர்களும் ஆளும் உலக நாமும் ஆள்வோம் என கிளம்பினான் லெனின்

உலகெல்லாம் இது அதிர்வலைகளை ஏற்படுத்திற்று, அரசுகள் அஞ்சின. பிரிட்டன் போன்ற ஏகாதிபத்தியங்கள் கலங்கின‌

அமெரிக்காவில் அது கருப்பர் எழுச்சியாக தொடங்கியது

சீனாவில் சன்யாட்சன் அதை தொடங்கி வைத்தான்

பிரிட்டனின் காலணி ஆதிக்கமான இந்தியாவிலும் அது வர்க்க பேத போராட்டமாகவே தொடங்கும் சாத்தியம் இருந்தது

ஏழைகளும், பாட்டாளிகளும் நிரம்பிய இத்தேசம் சரியான தலைவன் இருந்தால் அப்படி திரும்பி இருக்கும்

விடுவானா வெள்ளையன்?

சாதி, ஆரிய திராவிட , சமூக நீதி என எல்லாவற்றையும் கிளறிவிட்டான்

அதுவரை கேட்காத குரல்கள் எல்லாம் உலகம் வேகமாக புரட்சிக்கு மாறிகொண்டிருந்த பொழுது இங்கே கேட்டது

லெனினும் மாவோவும் போராடிய பொழுது இங்கோ சாதி, சமூக, நீதி, திராவிட நீதி அது இது என கனத்த சத்தம் வந்தது

வெள்ளையன் அதை மனமார ரசித்தான், ஆம் இங்கு வர்க்க பேதத்தை விரட்டும் போராட்டம் நடக்கவே இல்லை அதை சாதி சண்டையாக மத சண்டையாக மாற்றிவிட்டு அவன் போக்கில் இருந்தான்

விளைவு என்னாயிற்று?

வர்க்க பேத போராட்டம் வந்திருக்க வேண்டிய நாட்டில் சாதிய போராட்டம், ஆரிய திராவிட போராட்டம் என திசைமாறி போய் இன்று தோசைக்கு சாதிபட்டம் கொடுக்கும் அளவு நிலமை சென்றாயிற்று

வர்க்க பேதம் என்பதை சாதியாக மாற்றி, அதிலும் உட்சாதியாக மாற்றி இங்கு இன்னும் மோதிகொண்டே இருகின்றார்கள்

அவர்களும் உருப்படமாட்டார்கள், இத்தேசம் உருப்பட விடவும் மாட்டார்கள்

சாதி, ஆரியம் திராவிடம், தலித்தியம் அது இது என சொல்லிகொண்டு முதலாளிகளின் சொத்துக்களுக்கு ஒரு ஆபத்து வராமல், முதலாளி வர்க்கத்தின் மேல் ஒரு தூசும் படாமல் ஏழைகளை ஏழைகளாகவே வைத்துவிட்ட தந்திரம் இங்கு நடந்துவிட்டது

இதை சொன்னால் நாம் தலித் விரோதி ஆகிவிடுவோம்

வரலாற்றில் சீன மன்னன் குடும்பம் சீன புரட்சியில் ஒழிந்தது நிலமெல்லாம் ஏழைகளுக்கு சொந்தமாயின‌

ரஷ்ய புரட்சியில் அதுவே நடந்தது

வர்க்க புரட்சி அப்படித்தான் நடக்கும், இந்தியாவில் நடந்திருந்ந்தால் நிலச்சுவாந்தார்களும் முதலாளிகளும் ஒழிக்கபட்டு நாட்டின் தலைவிதி மாறி இருக்கும்

ஆனால் என்ன நடந்தது?

உழைக்கும் வர்க்கத்தை சாதி, சமூக நீதி என திசை திருப்பிவிட்டு முதலாளி வர்க்கம் தன் சொத்துக்களையும் அதிகாரங்களையும் தக்க வைத்து கொண்டது

இதை சொன்னால் நாம் ஆரிய அடிவருடி, திராவிட எதிரி, தலித் விரோதி

[ October 26, 2018 ]

============================================================================

இன்று காலை மீன் சந்தையில் அந்த ஞானம் பிறந்தது, அட இது தெரியாமல் இவ்வளவு நாள் மீன் சந்தைக்கு வந்தோமா? என்ற அறியாமை இருள் அகன்றடு

ஆம் மீன்களிலும் சாதி உண்டு என்பது புரிந்தது

சால்மன் என்பது பேராதிக்க வகை, நெருங்க முடியா உயர் சாதி, ஆம் அது இனவெறி மீன், ஐரோப்பிய வெள்ளையர் தட்டில் இருக்குமே அன்றி கருப்பருக்கு கிடைக்காது

வஞ்சிரம், லாப்ஸ்டர் , சிகப்பு இறால், வாவல் எல்லாம் ஆதிக்க சாதி

நெய்மீன், அசலை, பாறை என்பதெல்லாம் இடைபட்ட சாதி

நெத்திலி, சாளை , மொரல் என்பதெல்லாம் ஒடுக்கபட்ட சாதி

நண்டு, கணவாய் என்பதெல்லாம் திருநங்கை வகையறா

இந்த சாதிய பிரிவில்தான் இனி மீன் வாங்க வேண்டும் என தீர்மானித்தாயிற்று உலகோடு ஒட்ட வேண்டும்

இதனால் ஆதிக்க சாதி மீன் கொடுங்கள் என கேட்டேன்? அவர் திருக திருக முழித்தார், இன்னும் உமக்கு தகவல் வரவில்லை என நினைக்கின்றேன் என சொல்லிவிட்டு வஞ்சிரத்தோடு வந்துவிட்டேன்

பக்கத்தில் சால்மன் எனும் பேராதிக்க சாதி படுத்திருந்தது, நெருங்க முடியாதது,

சந்தையினை பார்த்து கொண்டே இருந்தேன், ஆதிக்க சாதி மீன்களை ஆதிக்க சாதியே வாங்கி கொண்டிருந்தது

சில இஸ்லாமிய பெண்கள் ஆதிக்க சாதி மீன்களை வாங்கினார்கள் ஆனால் அவர்கள் என்ன சாதி என தெரியவில்லை

சிலர் இந்த நெத்திலி , சாளை, சார்டின் எல்லாம் பொறுக்கி கொண்டிருந்தார்கள் அவர்கள் ஒடுக்கபட்ட சாதியாக இருக்கலாம்

கருவாடு பொறுக்கிகொண்டருந்தது அடிமட்ட சாதியோ என்னமோ?

குளத்து மீனை தேடிகொண்டிருந்தவர்கள் ஆதிவாசி இனமாக இருக்கலாம்

ஆழ்ந்த சிந்தனையில் நான் மீன்கடையினை சுற்றி சுற்றி வந்ததை பார்த்து மீன்வியாபாரி அழைத்து காரணம் கேட்டார்

சொன்னேன், மீன்கள் சமைப்பதை வைத்து யார் ஆதிக்க சாதி, யார் தாழ்த்தபட்ட சாதி என்பதை கண்டுபிடிக்கலாம் என்றேன்

அப்படியா என்றார், செட்டி நாட்டு சமையல் சிவகாசி நாடார் சமையல் , தஞ்சாவூர் மீன் குழம்பு, வேலூர் முதலியார் மீன் குழம்பு கேரள நாயர் மீன் ஸ்பெஷல், மதுரை வகை மீன் எல்லாம் சாதிய அடையாளம் என விளக்கினேன்

இதெல்லாம் எங்கிருந்து வந்தது, மீன் உணவில் இத்தனை சாதிகளா என வாய்பிளந்து கேட்டார், இதை உருவாகியது யார்?

யாரா? இதெல்லாம் அந்த பிராமணன் உருவாக்கியது அய்யா, கொடுமையான அவனின் வன்மத்தில் உருவானது

பிராமணரா? அவர்கள்தான் மீனே சாப்பிடுவதில்லையே என்றார்

இருக்கலாம், ஆனாலும் யாருகு என்ன மீன் என பிரித்து வைத்த கூட்டம் அதுதான், அப்படித்தான் பகுத்தறிவாளர்கள் சிந்திக்க சொல்லி இருக்கின்றார்கள் என்றேன்

மனிதர் குழம்பிவிட்டார்

நாளை கறிகடைக்கு சென்று வெள்ளாடு ஆதிக்க சாதி, செம்மறி இடைபட்ட சாதி, நாட்டுகோழி அடுத்த கட்ட சாதி , பிராய்லர் கோழி ஒடுக்கபட்ட சாதி என சொல்லிவிட்டு வர வேண்டும்

கொக்கு, குருவி, காக்கா எல்லாம் நரிகுறவர் சாதி

பிராமணருக்கும் மீன் ஆடு கோழிக்கும் சம்பந்தமில்லை, ஆனால் இந்த ஆதிக்க சாதி மீன், ஆடு கோழி எல்லாம் அவர்களால் வந்தது என நீங்கள் நம்பியே தீரவேண்டும்

இதுதான் பகுத்தறிவு இல்லை பசியறிவு, இதுதான் சுயஉணவு

அதனால் சாதி பார்த்து மீனும், கறியும் வாங்கி வாரவிடுமுறையினை பகுத்தறிவுடன் கொண்டாடுங்கள்..

[ October 27, 2018 ]

============================================================================

இதோ பிராமண சாதிவெறி என பலர் ஸ்வீட் பாக்ஸோடு கிளம்பியாயிற்று..

செட்டிநாட்டு மட்டன், செட்டிநாட்டு வறுவல் மொகல் பிரியாணி, பாய்கடை பிரியாணி, மதுரை கோனார் கடை கறி தோசை, விருதுநகர் நாடார் கடை பரோட்டா, நாயர் கடை டீ, கேரள மீன்கறி என வாங்கி வாங்கி விழுங்குபவனுக்கு

பிராமணர் பெயரில் ஸ்வீட் மட்டும் வந்தால் பொறுக்காதாம்…

இதுதான் திராவிடமாம், இதுதான் சுயமரியாதையாம்..

[ October 29, 2018 ]
Image may contain: 1 person
============================================================================

இலையில் சாப்பிட்டால் ஆதிக்க சாதி, தட்டில் சாப்பிட்டால் ஏழை சாதி : மதிமாறன்

அடேய் அமெரிக்க அதிபர், ஜெர்மன் பென்ஸ் கம்பெனி ஓணர் எல்லாம் தட்டில்தான் பிரட் சாப்பிடுவார்கள், ஜப்பானிய யமஹா கம்பெனி ஓணர் கோப்பையில்தான் சூப் குடிப்பார்

அவர்கள் எல்லாம் ஏழைகளா?

ரோட்டோரம் தட்டில் இலை வைத்து இட்லி உண்டால் அவன் ஆதிக்க சாதியா?

அட சாப்பிட்டு விட்டு தூர எரியும் இலையிலுமா சாதி பார்ப்பீர்கள்? இதையா பெரியார் சொல்லி கொடுத்தார்?

வாழை இலை என்பது தமிழ் கலாச்சாரம், அது ஒரு சாதிக்கு மட்டும் பொதுவானது என சொன்னவன் பைத்தியகாரன் அன்றி வேறு எதுவாக இருக்க முடியும்?

உண்மை என்னவென்றால் அன்று சோறு என்பது அரிது, அதை பணக்காரர் மட்டுமே உண்டனர், அதற்கு இலை சரிவரும்

ஏழைகள் கஞ்சி, கூழ் என உண்டுகொண்டிருந்தனர், இலை அதற்கு சரிவராது

இந்த வர்க்க பேதைத்தான் சாதி என மாற்றி புலம்பி திரிகின்றது திருட்டு திராவிட கூட்டம்

மற்ற நாடுகள் எல்லாம் வர்க்க பேதத்தை ஒழிக்க புரட்சி செய்த பொழுது, இவர்கள் பிராமணனை மட்டும் குறிவைத்து இதர முதலாளிகளின் சொத்துக்களுக்கு பங்கம் வராமல் ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்க துணை இருந்தனர்

பொருளாதார ஏற்றதாழ்வு ஒழிந்தால், அதாவது பண்ணையாரின் நிலமெல்லாம் தாழ்த்தபட்ட சாதிக்கு பகிர்ந்தளிக்கபட்டால், பெரும் தொழில்களில் தாழ்த்தபட்டவர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமளவு சமத்துவம் வந்திருந்தால் இங்கு என்றோ சாதி ஒழிந்திருக்கும்

ஆனால் ஏழைகளை, அன்றாடங்காய்ச்சிகளை சாதி என்ற அடையாளம் காட்டி, அவனை வைத்து பிராமணனை சாடி கொண்டே அரசியல் செய்ததை அன்றி வேறு எதனையும் இந்த திராவிட கும்பல் செய்ததில்லை

இவர்களால் பிராமணனுக்கு ஆபத்து வந்ததே தவிர, ஒரு பண்ணையாருக்கோ இல்லை பெரு முதலாளிக்கோ ஆபத்து வந்ததா?

வராது, வரவே வராது

பண்ணையாரின் நிலத்தில் ஏழைகளுக்கு பங்கு கொடு என்றால் கொன்றுவிடுவார்கள், பெரும் ஆலையில் ஏழைகளுக்கு பங்குகொடு என்றால் குதறிவிடுவார்கள்

அதனால் இவர்களுக்கு கிடைத்தது அப்பாவி பிராமணனும் அவனை காட்டி இங்கு சாதியினை உசுப்பேற்றும் ஏழை தாழ்த்தபட்டவனுமே

[ October 29, 2018 ]

============================================================================

 

சிதறல்கள்

ஜமால் கொலையில் பல தகவல்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றது
முதலில் நம்பியார் ஸ்டைலில் “டேய் அந்த கசோகியினை தூக்கிட்டு வந்து என் முன்னால உயிரோடு போடுங்கடா” என்றுதான் மன்னர் சொல்லியிருகின்றாராம்
அப்படி அந்த 15 பேர் கொண்ட குழு சென்றிருக்கின்றது, முதலில் ஜமாலை பேசி மசியவைத்து சவுதிக்கு கொண்டு செல்லத்தான் திட்டமாம், முடியாத பட்சத்தில் மயக்க ஊசி போட்டு கொண்டு செல்ல டாக்டர் சகிதம் சென்றிருக்கின்றார்கள்
மிக நுட்பமான திட்டம்தான், ஜமால் சவுதி தூதரகம் உள்ளே வந்தது சிசிடிவில் இருப்பது போல் அவர் வெளி சென்றார் என்பதை காட்டுவதற்காக அவரை போல் ஒருவரை வெளியே எல்லாம் அனுப்பியிருக்கின்றார்கள்
விஷயம் எதில் சொதப்பியது என்றால், இவர்கள் சவுதிக்கு வா என்றதும் ஜமால் கத்தியிருக்கின்றார், அது பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது
கத்திவிட்டார் இனி இவரை சவுதிக்கு அழைத்தது தெரிந்துவிடும் என்ற அச்சமும், மன்னர் உத்தரே மகேசன் உத்தரவு என்ற கடமை உணர்வும் சேர்ந்த குழப்பத்தில் இருந்திருக்கின்றது சவுதி உளவுதுறை
இவர் வரமாட்டேன் என்கின்றார், மன்னரோ தூக்க சொல்லியிருக்கின்றார், போடு ஊசியினை என குத்தியிருக்கின்றார்கள்
ஏற்கனவே வெளிதெரியாத நோயால் இருந்த ஜமால் பொட்டென போய்விட்டார் என்கின்றார்கள்
எப்படியோ அவரை கொல்ல திட்டமிடவில்லை, மாறாக அவரை கடத்த முயன்றபொழுது ஏற்பட்ட சிக்கலில் அவர் தவறுதலாக இறந்துவிட்டார் என்கின்றன சில செய்திகள்
இன்னும் பரபரப்பு ஓயவில்லை, ஓய்போவதுமில்லை
இம்மாதிரியான விஷயங்களில் மொசாத் புலி, அவர்கள் பயிற்சி அப்படி
சவுதி எனும் பூனை புலிபோல வேடம் போட்டு மாட்டிகொண்டது
நல்ல வேளையாக நம்ம ஊர் வைரமுத்து இப்படியாக பாடகிகளை கடத்தமுயன்று கொலை வழக்கில் எல்லாம் மாட்டவில்லை [ October 26, 2018 ]

============================================================================

ஹாங்காங் என்பது சீனாவின் கவுரவ அடையாளமாக சீனா கருதுகின்றது. சீனாவுடன் போர் புரிந்த வெள்ளையரிடம் அதை சமாதானத்திற்காக‌ குத்தகைக்கு வைத்தது
அந்த போர் அபினி போர் என வரலாறு சொல்லும், தன் குடிமக்களை போதை அடிமையாக்கி பிரிட்டிசார் ஹாங்காங்கை கைபற்றியதாக அது கருதிற்று
ஒப்பந்தம் முடிந்து 1997ல் ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கபட்டபொழுது சுயமரியாதை காக்கபட்டதாக கர்வபட்டது சீனா
ஆனால் ஹாங்காங் என்பது வளர்ந்துவிட்ட பகுதியும் மாறுபட்ட சுதந்திர கலாச்சாரமும் கொண்டது என்பதால் இன்றுவரை சுயாட்சி பிரதேசமாகவே சீனா கையாள்கின்றது
அந்த ஹாங்காங்கிற்கு இதுவரை கடல்வழிமட்டும்தான் இருந்தது, இப்பொழுது உலகம் வியக்கும் வகையில் பாலம் கட்டி அசத்திவிட்டார்கள்
உலகின் மிக நீண்ட பாலம் இதுதான், பாம்பன் பாலத்தை விட பல மடங்கு நீளமாது
இதில் ஒரு சிக்கலும் வந்தது, பாலம் கட்டினால் கப்பல் எப்படி போகும்? சிக்கலை எளிதாக தீர்த்தார்கள்
பாதி பாலத்தை கடலுக்குள் சுரங்கமாக விட்டு, பாதாளம் வழியாக ஹாங்காங்கோடு இணைத்தாயிற்று, மேலே கப்பல் கீழே சுரங்கத்தில் கார்கள்
இப்படி ஹாங்காங்கை மட்டுமல்ல அருகிருக்கும் மக்காவ் தீவினையும் பாலம் கட்டி இணைத்துவிட்டார்கள், ஹாங்காங் வியாபாரத்திற்கு என்றால் மக்காவ் சூதாட்டத்திற்கு பேர் போன தீவு
ஆம், சீனர்களின் சூதாட்டம் உலகறிந்தது, இன்னொன்று மக்காவ் போர்த்துகீசியரின் கையில் இருந்ததால் கோவா போன்று பல காரியங்களுக்கு பிரசித்தி
இப்படியாக அருகிருக்கும் தீவுகளுக்கு எல்லாம் பாலம் கட்டும் சீனா, விரைவில் தைவானுக்கு கட்டுவோம் என காமெடி செய்தாலும் செய்யலாம்
தைவன் தனிநாடு என்றாலும் எங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா சொல்ல, தைவானோ மறுக்கின்றது
சொல்லமுடியாது விரைவில் தைவானுக்கு பாலம் கட்டினாலும் கட்டும் சீனா
நாம் தமிழர் ஆட்சியில் கச்சதீவுக்கும் இப்படி அங்கிள் சைமன் பாலம் கட்டுவார் என உற்சாகமாக கனவில் இருக்கின்றது அங்கிள் கோஷ்டி
[ October 26, 2018 ]

============================================================================

ஒரு விஷயம் உன்னிப்பாக கவனித்தால் புரிகின்றது
இதுகாலம் கலைஞரின் உற்ற நண்பர்களாக இருந்தவர்கள் மேல் புகார்கள் குவிகின்றன‌
வைரமுத்தினை தொடர்ந்து சுபவீ என்பவரும் சிக்குகின்றார். சுபவீ மீது பாலியல் சர்ச்சை இல்லை எனினும் பாலியல் சர்ச்சையில் சிக்கியவரை காப்பாற்ற கட்ட பஞ்சாயத்து செய்ததார் என்ற சர்ச்சை வருகின்றது
மேடையில் பகுத்தறிவு பெண் விடுலை என பேசும் சுப வீ, உண்மையில் பெண் உரிமையினை மதிக்காதவர் என பாதிக்கபட்ட பெண்கள் கிளம்புகின்றார்கள்
வைரமுத்துவின் மேலான புகாரை சின்மயி தொடங்கி வைக்க, ஒரு டஜன் புகார்கள் குவிந்தாயிற்று. அவர்கள் சொல்லும் குற்றசாட்டு “மேலிடத்தில் என் செல்வாக்கு என்ன தெரியுமா?” என மிரட்டினார் வைரமுத்து
இப்பொழுது சுபவீ மேலான குற்றசாட்டை Kavignar Thamaraiதொடங்கி வைக்க‌ பல பெண்கள் வந்து நிற்கின்றனர், அதே சாயல் குற்றசாட்டுக்கள், “கலைஞரிடம் சொல்லியாச்சி” என்றே சுபவீ மிரட்ட தொடங்குவார்.
ஆக கலைஞர் பெயரை சொல்லி பலர் கடும் அழிச்சாட்டியம் செய்திருகின்றன, கலைஞர் இல்லா நிலையில் பலமிழந்த அவர்களை நேரம் பார்த்து ஆளாளுக்கு போட்டு அடிக்கின்றார்கள்
பல பெண்கொடுமை குற்றசாட்டுகளை எதிர்கொள்வோ, கலைஞர் நண்பர்கள் எனும் சங்கிலியில் இணைகின்றார்கள்
இன்னும் யாரெல்லாம் சிக்குவார்களோ தெரியாது, ஆனால் பட்டியல் நீளலாம்
உண்மையிலே கலைஞர் இவர்கள் அழிச்சாட்டியத்தினை கண்டு கொள்ளாமல் இருந்தாரா என்பது அவர் வந்து சொல்லாமல் யாருக்கும் தெரியபோவதுமில்லை என்பது வேறு விஷயம்
ஆனால் அவர் இல்லாத காலத்தில்தான் அவர் பெயரை சொல்லி எப்படி எல்லாம் அட்டகாசம் செய்திருக்கின்றார்கள் என்பது வெளிவருகின்றது
விரைவில் கலைஞர் சமாதியிலும் தர்மயுத்தம் அல்லது அடித்து சத்தியம் செய்தல் போன்ற காட்சிகள் நடைபெறலாம் போலிருகின்றது
[ October 26, 2018 ]
Image may contain: text
============================================================================

தீர்ப்பு கொடுத்துட்டாங்க‌ தீர்ப்பு, அண்ணன் ராசா சொன்னது சரியாகத்தான் இருக்கின்றது

ஏன்யா, திடீர்னு 20 தொகுதிக்கு தேர்தல் என அறிவித்தால் நாங்கள் வேட்பாளருக்கு எங்கே போவோம்?

[ October 26, 2018 ]
Image may contain: 1 person, closeup
============================================================================

20 தொகுதிக்கு தேர்தல் வந்தால் யாரை எதிர்த்து என்ன பேசுறது? எத சொல்லி வோட்டு கேட்க?

இந்த‌ முன் ஜாமீன் எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு உள்ளே போயிர வேண்டியதுதான், வேற வழி இல்ல‌

தம்பிக கேட்டால் “தந்திரோபயமான பின்வாங்கல்” ன்னு சொல்லி சமாளிப்போம்

[ October 26, 2018 ]
Image may contain: 1 person, closeup
============================================================================

மக்கள் டிவியில் சில மருத்துவர்கள் மருத்துவ ஆலோசனை வழங்கி கொண்டே இருக்கின்றார்கள், எல்லா நோய்க்கும் அவர்களிடம் குணப்படுத்தும் ஆலோசனை இருக்கின்றது, இலவசமாக அள்ளி அள்ளி வழங்குகின்றார்கள்

ஆனால் இப்படிபட்ட மிகசிறந்த மருத்துவ சிகாமணிகள் இருந்தும் காடுவெட்டி குருவினை அவர்கள் தவறவிட்டதுதான் சோகம்

[ October 26, 2018 ]

============================================================================

 

 

சிதறல்கள்

கோலி ஆயிரம் சதங்கள் அடிக்கட்டும், ஆனால் லாரா அடித்த ஒரு ஹூக் ஷாட்டுக்கு ஈடாகாது. [ October 25, 2018 ]

============================================================================

கபில் தேவ் ஆடியது மால்கம் மார்ஷல், விவியன் ரிச்சர்ட்ஸ் இன்னும் ஏகபட்ட ஜாம்பவான்கள் நிரம்பிய காலம், கபில் தேவின் தைரியமும் போராட்டமும் கொஞ்சம் அல்ல‌

சச்சின் காலமோ வால்ஷ், அம்புரோஸ் எனும் அரக்க பவுலர்கள் காலத்தில் தொடங்கியது

பின் மெக்ரத், ஆலன் டொனால்டு என பெரும் ஜாம்பவான்களோடு போராடினார்

வாசிம் அக்ரம், வாக்கர் யூனுஸ், சமிந்தா வாஸ் என்பவர்களோடு போராடினார்

சுழற்பந்து வித்தகர்கள் என வரலாறு எழுதிவிட்ட இந்த வார்னே, முரளிதரனோடு போராடினார்

உலகின் மிகவேக பந்து வீச்சாளர் என்ற நிலையில் இருந்த அக்தரை சமாளித்தார்

சச்சினின் காலம் உலகின் அதி அற்புத பந்துவீச்சாளர்கள் நிரம்பிய காலம்

ஆனால் கோலி காலம் அப்படியா? இன்றைய தேதியில் அச்சுறுத்தும் பவுலர்கள் என ஒருவரை காட்டுங்கள் பார்க்கலாம்

சச்சினின் காலம் கலைஞர் அரசியல் போல் போராட்டம் நிறைந்த காலம்

ஆனால் கோலிகாலம் பழனிச்சாமிக்கு முக ஸ்டாலின் வைடு பாலாக வீசும் காலம் போன்றது.

எப்படி சிவாஜி கணேசனையும் விஜய்சேதுபதியினையும் ஒப்பிடுவது அபத்தமோ, எம்.ஆர் ராதாவினையும் சந்தாணத்தையும் ஒப்பிடுவது அபத்தமோ அப்படித்தான் சச்சினையும் கோலியினையும் ஒப்பிடுவதும் மகா அபத்தம்

[ October 26, 2018 ]

============================================================================

சர்க்கார் விவகாரம் சன் பிக்சர்சுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ், படம் வெளிவருவதில் சிக்கல்

ஏம்பா விஜய், இரும்பு மனிதர் பழனிச்சாமி ஆட்சியில் நீர் மைக் கிடைத்தவுடன் என் சர்க்காரில் அது ஒழிக்கபடும் அது கிழிக்கபடும் என பேசினால் இப்படித்தான் ஆகும்.

கனவிலே சர்க்கார் காணும் உமக்கே இப்படி என்றால், சர்க்கார் நடத்துபவர்களுக்கு எப்படி இருக்கும்?

அந்த தலைவா படத்து காட்சிகள் திரும்ப நடக்கின்றதா இல்லையா?

இனி என்ன செய்ய வேண்டும் “அம்மா எனக்கு உதவுங்கள்” என முன்பு அழுதது நினைவிருக்கின்றதா?

அப்படி “அய்யா பழனிச்சாமி அய்யா” என அழுங்கள்.

“தலைவா” என்றாலே அந்த அடி,

இதில் “சர்க்கார்” என்றால் அடி எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்

[ October 25, 2018 ]

============================================================================

இந்தியாவில் ஆபாச இணைய தளங்களை முடக்குகின்றார்களாம், எங்கோ வட இந்தியன் ஒருவன் இந்த தளத்தினை பார்த்து கற்பழித்துவிட்டேன் என்றானாம், அதனால் முடக்க போகின்றார்களாம்

இந்தியா எப்படி நாடு?

உலகிற்கே காம சூத்திரமும், கொக்கோகமும் கொடுத்த நாடு

(அதை படித்துவிட்டு வெள்ளையன் ஜெயதேவனை கைது செய்ய தேடியதும் பின் அவர் என்றோ வாழ்ந்த முனிவர் என உணர்ந்து ஹிஹீஹ் என்றதும் வேறுகதை)

இங்கா இவற்றை தடை செய்ய போகின்றார்கள்??

வள்ளுவனே காமத்துபால் என எழுதும் அளவு அது இங்கு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது

தலைவன் எம்.ஆர் ராதா ரத்த கண்ணீரில் சொல்வார்

“முன்னோர்கள் எவ்வளவு ஆராய்ச்சி செய்தார்கள் என்பதை கஜுரகோ கோவிலில் பார், மற்ற‌ ஆலய சிற்பங்களில் பார்

அஜந்தா எல்லோரா குகைகளில் பார்

எப்படிபட்ட ஆராய்சி அது, அவர்கள் விட்டு சென்ற ஆராய்ச்சியினைத்தான் நான் காந்தாவிடம் செய்து கொண்டிருக்கின்றேன்”

உண்மை அதுதான், இந்நாட்டின் ஓவியங்களும், ஆலய சிலைகளும் அதனை புனிதமாக கொண்டாடி கொண்டிருக்க, அதை ஆபாசம் என்பது எப்படி சரியாகும்

இந்துமதம் காமத்தை தன் வாழ்வின் அங்கமாக கொண்டாடியது, அதை ஆலய சிற்பங்களில் வடிக்கும் அளவு புனிதமாக போற்றியது

அதையும் மீறி முடக்குமோம் என்றால் முதலில் தாலிபான்கள் புத்தர் சிலையினை உடைத்தது போல இந்தியாவில் அனைத்து ஆலயங்களையும் தகர்க்க வேண்டும்

முடியுமா?

அதனால் சொல்லலாம், இந்த ஆலயங்களில் அது புனிதமாக கொண்டாட படும்பொழுது, ரதி மன்மதன் என அதற்கு உருவம் கொடுத்து கொண்டாடும் நாட்டில் ஆபாச தளங்கள் இருந்தால் என்ன இருக்காவிட்டால்தான் என்ன?

[ October 25, 2018 ]

===========================================================================

இடைத்தேர்தல்கள் நடத்துவதைவிட முழு சட்டமன்றத் தேர்தலை நடத்தலாம்- ப.சிதம்பரம்

அருமையான யோசனை, நிச்சயம் அதனை செய்யலாம்

ஆனால் அப்பொழுதும் காங்கிரசுக்கு கிடைக்ககூடியது 8 தொகுதிதான் மிஸ்டர் சிதம்பரம் [ October 25, 2018 ]

============================================================================

இந்த ஏ.ஆர் ரகுமான் இனி வைரமுத்துவிற்கு வாய்ப்பு தரமாட்டாராம் சொல்லிவிட்டார் என்கின்றார்கள்

வாலியும், முத்துகுமாரும் இல்லா நிலையில் வைரமுத்துவும் இல்லை என்றால் ரகுமானின் பாடல் எப்படி இருக்கும்?

சர்க்கார் படத்தில் நிக்கலு பிக்கலும்மா, மக்கரு குக்கரும்மா என்ற வகையில்தான் இருக்கும்

அன்றொரு நாள் ஒரு கச்சேரியில் நிகழ்ந்துவிட்ட விரும்பதாகாத சம்பவத்தில் இருந்து டி.எம் சௌந்தரராஜனுடன் பாடுவதில்லை என சொல்லி அதில் நிலையாய் நின்றார் பி.சுசிலா

ஆம் அவள் உத்தமி

இந்த திடீர் கண்ணகிகள் அன்றே வைரமுத்துவினை கன்டித்து அவர் வரிகளை பாடமாட்டோம் என கிளம்பி இருக்கலாம், செய்தார்களா?

செய்யவில்லை, மாறாக எவ்வளவோ காலம் கடந்தபின், நன்றாக கச்சேரி செய்து கல்லா கட்டியபின் இன்று சும்மா ஒரே சத்தம்.

இளையராஜா வைரமுத்து பிரிந்தார்கள், நஷ்டம் இளையராஜாவிற்கே அன்றி வைரமுத்துவிற்கு அல்ல‌

இப்பொழுது ரகுமான் இல்லை என்றாலும் வைரமுத்துவால் நிற்க முடியும், ரகுமானால் முடியுமா என்பதுதான் கேள்வி

தமிழும், கிராமத்திய மனமும், சொல்லாட்சியும் இருக்கும் வரை வைரமுத்துவிற்கு கவலை இல்லை

இந்த சின்மயி கும்பலிடம் கேட்கும் கேள்வி ஒன்றுதான்

அம்மா சின்மயி, வைரமுத்து எழுதிய வரிகளை நான் கச்சேரியில் பாடமாட்டேன் என சொல்லமுடியுமா?

சொல்லிவிட்டு கச்சேரி நடத்த முடியுமா?

வைரமுத்துவின் அழிக்கமுடியா முத்திரை என்பது இதுதான், அவர் வரியினை எந்த பாடகியும் பாட கூடும், ஆனால் உங்கள் நிலை?

வைரமுத்து தமிழ் சொத்து, அவர்மேல் குற்றம் இருந்தால் ஆதாரத்தோடு நீதிமன்ற கதவுகளை தட்டலாம், அதை விடுத்து அவரை புறக்கணிப்போம் என்பதெல்லாம் முடியா காரியம்

வைரமுத்து தமிழ் நதி, ஆயிரம் சோலைகளை அதனால் உருவாக்க முடியும்

வைரமுத்து தென்றல், எந்த புல்லாங்குழலிலும் அதனால் இனிய இசையினை வரவைக்க முடியும்

ரகுமான் இந்த பூச்சாண்டி காட்டாமல், பில்தே பல்தே என பாட்டு போடுவது அவருக்கு மிக நல்லது [ October 25, 2018 ]

============================================================================

இந்த சண்டைகோழி 2 படத்தின் சில‌ காட்சிகள் ஓடிகொண்டிருக்கின்றன‌

நடிகனாக வாழ்ந்தால் ராஜ்கிரனாக வாழவேண்டும், எல்லா படங்களிலும் நல்லி எலும்பு கடிக்கும் யோகம் அவருக்குத்தான் இருக்கின்றது, கொடுத்து வைத்த மகராசன்

இந்த வரலட்சுமியினை பார்க்கும் பொழுது இறுதி சுற்று படத்தில் ரித்திகா சிங்கிற்கு பதிலாக இவரை அமர்த்தி இருக்கலாம், அட்டகாசமாக பொருந்தி இருப்பார் என்றே தோன்றுகின்றது.. [ [ October 25, 2018 ]

============================================================================

சின்மயி அங்கு சுற்றி இங்கு சுற்றி இப்பொழுது தலைவி குஷ்புவிடம் வம்பிழுப்பது போல் தெரிகின்றது

தலைவியினை டிவிட்டரில் வம்பிழுக்கின்றார் சின்மயி

ஆனால் தலைவி மகா அமைதி ஏன்?

தெரிந்த கதைதான். சுத்தமாக குளித்து விபூதி பூசி வரும் கோவில் யானை சாக்கடை பன்றியினை பார்த்து ஒதுங்கி சென்றால் அது பயம் அல்ல‌

அச்சேறு தன் மேல் பட்டுவிட கூடாது எனும் கவனம்

தலைவி அதைத்தான் செய்கின்றார்

ஆனால் சங்கம் பொறுக்காது,
அம்மணிக்கு சங்கம் பகிரங்க எச்சரிக்கை விடுகின்றது

தலைவியினை தேவை இன்றி சீண்டினால் சின்மயி என்பவர் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

[ October 26, 2018 ]

============================================================================

மக்கள் அந்த அம்மா முதலமைச்சர் என்றுதான் வாக்களித்தார்கள், அவர் இல்லா நிலையில் ஆட்சி கலைத்துவிட்டு தேர்தலை நடத்துவதுதான் முறை

ஆனால் அவர்களோ விளையாடி கொண்டிருக்கின்றார்கள். 18 பேர் செல்லாது என அறிவிக்கபட்டாயிற்று

ஆக தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கு பிரதிநிதிகள் இல்லை, ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் ஏக பட்ட குழப்பங்கள்

உள்ளாட்சி பிரதிநிதியுமில்லை, எம்.எல்.ஏவும் இல்லை என்றால் அத்தொகுதிகளின் நிலை என்ன?

இதை எல்லாம் கேட்க வேண்டியவர் ஆளுநர், அவரோ நக்கீரன் பத்திரிகையினை முறைத்தபடி அமர்ந்திருக்கின்றார், இதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை

ஏக குழப்பம், ஏக அழிச்சாட்டியம் என தமிழக மக்களுக்கு கடும் வெறுப்பினை கொடுக்கின்றார்கள்

இதை எல்லாம் பார்க்கும் பொழுது எம்.ஆர் ராதா அந்த ராமசந்திரனிடம் சொன்னதுதான் நினைவுக்கு வருகின்றது

அழகாக சொன்னான் தலைவன்

“டேய் ராமசந்திரா, உனக்கு எதுக்குடா அரசியல்? அங்கெல்லாம் காமராஜர் மாதிரி நல்லவங்க இருக்காங்க, அண்ணா மாதிரி அறிவாளி இருக்காங்க அவங்க பாத்துபாங்க‌

நீ இங்க‌ ஒழுங்கா நடிச்சா மட்டும் போதும், போய் ஒழுங்கா சினிமாவுல நடி”

[ October 26, 2018 ]

============================================================================

பெரியம்மை (small pox) , சின்னம்மை (chicken pox) என பல நோய்கள் அக்கால உலகில் இருந்தது. இன்று மத ,சாதி கலவரங்களுக்கு இருக்கும் பயம் அன்று அந்த நோய்க்கு இருந்தது

வந்துவிட்டால் சில விக்கெட்டுகளை அல்ல, சுனாமி போல வாரி சுருட்டிவிட்டு செல்லும்

இதற்கு மருந்து கண்டுபிடித்தவர் எட்வர்ட் ஜென்னர் என்பவர், அதன் பின் யாரும் அந்நோயால் சாகவில்லை.

இதே நாளில் 1977ல் பெரியம்மை ஒழிந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது

ஆனால் இதே பெரியம்மையும் சின்னமையும் தமிழகத்தில் வேறு வடிவில் வந்தன‌

கிட்டதட்ட 30 ஆண்டுகள் கடுமையாக பாதித்தது, தமிழகம் கடும் அவஸ்தைபட்டது

அப்படி ஒரு அவஸ்தை, அது படுத்தியபாட்டின் பல வடுக்கள் தமிழகமெங்கும் இருக்கின்றன‌

இதில் பெரியம்மை இப்பொழுது இல்லை, சின்னம்மை வைத்தியசாலையில் முடக்கபட்டு, அதை முற்றிலுமாக தடுக்கும் கட்டத்தில் இருக்கின்றது.

பழைய வீரியம் இல்லை என்பதால் இப்போதைக்கு ஆபத்த்தில்லை

இதனால் உலகம் போலவே பெரியம்மை சின்னம்மை நோயிலிருந்து தமிழகமும் விடுபட்டாலும் பெரியம்மை விட்டு சென்ற கிருமிகளின் தாக்கம் ஓரளவு இருக்கின்றது

அந்த கிருமிகளை ஒழிக்காமல் செய்து தமிழக நலன் கெடுக்க பலர் சதி செய்கின்றார்கள். அந்த மனிதகுல விரோதிகளை ஐநாவில் புகார் செய்ய வேண்டும்

எஞ்சி இருக்கும் அந்த கிருமிகளும் விரைவில் அழிக்கபட வேண்டும்

[ October 26, 2018 ]

============================================================================

சிறையில் கன்னடம் கற்கின்றார் சசிகலா : செய்தி

நிரந்தரமாக கர்நாடகாவிலே தங்கிவிடும் திட்டம் இருக்கலாமோ என்னமோ?

கன்னடர்களுக்கும் ஒரு தியாக தலைவி கிடைக்க வேண்டுமா இல்லையா?

[ October 26, 2018 ]

============================================================================

சிதறல்கள்

இன்றைய என்ன கைய பிடிச்சி இழுத்தியா சீரியலுக்கு வந்திருப்பவர் அமலா பால்

அவர் சுசிகணேசன் மேல் அம்மணி புகார் சொல்லியிருகின்றது

அமலா பால் சொல்ல வருவது என்னவென்றால் சுசி கணேசன் தவிர எல்லோரும் உத்தமர்கள் தனுஷ் உட்பட…

[October 25, 2018 ]

============================================================================

வைரமுத்து மேல் இன்னொரு பாடகி புகார்

யோவ் வைரமுத்து என்னய்யா ஆளு நீர்? ஒரு நடிகையோ இல்லை வேறு பெண்களோ உம்மீது புகாரே தெரிவிக்கவில்லை

அது என்ன பாடகிகளிடம் மட்டும் சிக்கி இருக்கின்றீர்? அவர்கள் முகம் ஒன்றும் பார்க்கும்படியும் இல்லை

பாடலில் அவ்வளவு விருப்பம் போலிருக்கின்றது

எல்லாம் திருப்பாவை பாடகி ஆண்டாளை சீண்டிய நேரம்

[October 25, 2018 ]

============================================================================

அரே பையா அழாதே, நாம சிபிஐ எல்லாம் ஏன் கரெக்ட் பண்றான் , நிர்ய ஏற்பாடு செய்றான்

இந்த ஜட்ஜ்மென்ட் எல்லாம் நினைச்சி பயப்பபடாதே மேன், அந்த ஜட்ஜ் என்ன சொன்னாலும் ஜி பாத்துக்குவான்

டோன்ட் கிரை மேன்.. மோடிஜி கைவிட மாட்டான்

உங்க ஆட்சி உங்கள விட எங்களுக்குத்தான் ரொம்ப முக்கியம், புர்யுதா மேன்?

[October 25, 2018 ]
Image may contain: 2 people, people smiling, people sitting
===========================================================================

கடவுள் இருக்கான்னு சொல்றான் இந்த‌ குமாரு……கண்டிப்பா கடவுள் இருக்காருங்க..

[October 25, 2018 ]
Image may contain: 1 person, smiling
============================================================================

பகவானே இதோ வந்துண்டே இருக்கேன் பகவானே

மூக்குபொடி சித்தர் எல்லாம் சும்மா, திருப்பதி சாமிதான் நமக்கு அம்மா..

அடேய் மொட்டை எங்கடா போடனும், உடனே இடத்தை காட்டுங்கடா….
[October 25, 2018 ]

Image may contain: 4 people, people standing
==========================================================================

எலேய்…தீபாவளி வெடிய இப்பவே போடுங்கல‌.. நம்ம ரைடு கதை அமுங்கி போச்சில…

பூரா பயலும் 18 எம்.எல்.ஏ கதைக்கு போயிட்டானுவல, நம்மள ஒரு பயலும் கண்டுக்கல‌

ஏல மாசத்துக்கு 2 மொட்ட போட்டா திருச்செந்தூரான் காப்பாத்தாம போய்ருவானால?

அவந்தாம்ல ஜட்ஜ் வடிவத்துல வந்திருக்கான், மண்டக படிக்கு ஏற்பாடு பண்ணுங்கல‌

ஆண்டவன் நம்ம கூடத்தாம்ல இருக்கான்…

[October 25, 2018 ]
Image may contain: 2 people
============================================================================

இன்னும் ஏதும் சிடி ஆடியோ எல்லாம் இருக்கா வெற்றிவேல்?

இனி நான் சன்னிலியோன் கூட நடிச்ச வீடியோவ நீ விட்டாலும் நோ யூஸ்…

[October 25, 2018 ]
Image may contain: 5 people
============================================================================

உள்ளாட்சி தேர்தலே நாம நடத்தல, நடத்துனா கவுன்சிலர் போஸ்டு கூட நமக்கு கிடைக்காது

இரண்டு தொகுதி இடைதேர்தல தடுத்துட்டோம், நடந்திருந்தா அவ்வளவுதான்

இனி 20 தொகுதிக்கும் தேர்தல் வருமே, என்ன செய்ய போறோம்? நிச்சயம் ஜெயிக்க மாட்டோம். திமுக ஜெயிச்சா போச்சி, குக்கர் கோஷ்டின்னா மறுபடியும் சிக்கல்

அதனால மழை, குளிர், பன்றிகாய்ச்சல், டெங்கி காய்ச்சல், கிரிக்கெட், புதுபடம் ரீலீஸ் , ஐபிஎல், கடும் வெயில், புழுதி காற்று, வெப்பம் ஒன்னும் இல்லண்ணா ஜெயாவுக்கு நீதிகேட்டு போராட்டம், ஈழதமிருக்கு நீதி கிடைக்கவில்லை சின்மயிக்கு நீதி கிடைக்கல‌ அப்படி எதையாவது சொல்லி தேர்தல நடக்க விடாம பண்ணுவோம்

வேற என்ன செய்ய சொல்லுங்க‌……

[October 25, 2018 ]

Image may contain: 5 people
============================================================================

“அட இவர் என்னங்க சொல்றது நாங்க சொல்றோமுங்க‌

உங்களுக்கு எல்லாம் அமைச்சர் பதவி வாங்கிதாரேன்னு கூட்டி வந்தாருங்க, ஒண்ணும் கிடைக்கல இப்போ வாங்கிட்டு இருந்த எம்.எல்.ஏ சம்பளமும் போச்சி

இனி விட்டுட்டு ஓடிடலாம்னா ஜெயகுமாருக்கு வச்சிருக்க மாதிரி நமக்கும் வீடியோ ஏதும் வச்சிருப்பார்னு பயமா இருகுங்க‌

இனி கூவத்தூரும் கிடையாது, குற்றாலமும் கிடையாது பிளாட்பாரந்தாங்க, அத நினைச்சாத்தாங்க வருத்தமா இருக்கு..”

[October 25, 2018 ]
Image may contain: 6 people, people standing
============================================================================

“ஏண்டா மணியா அந்த 18 பேரும் இனி என்ன செய்வானுகன்னு நினைக்கிற‌

அட அவனுக என்ன இருமுடி கட்டி 18 படியேறவா போறானுக, சபரிமலையே சிக்கல்ல இருக்கு

என்னடா செய்வானுக? மானத்தோட அரசியல விட்டு போய்ருவானுகளா இல்ல தினகரன் பக்கமே நிற்பானுகளா?

அட அவனுக எட்டப்பனுக்கு தூரத்து ரிலேஷன், கொஞ்ச நேரத்துல எப்படி எடப்பாடி கார் முன்னால கும்பிட்டு கிடக்கபோறானுகன்னு பாருங்க”

[October 25, 2018 ]
Image may contain: 2 people
===========================================================================

என்னடா இது?

தமிழ்நாட்டுல 20/20 கேம் ஆட போறாங்களாம்.. [October 25, 2018 ]

============================================================================

18 பேரையும் வோட்டு போட்டு தேர்ந்தெடுத்தது மக்கள், அதற்காக பல கோடிகள் செலவழித்தது நாங்கள்

ஆனா அவங்க எம்.எல்.ஏ இல்லை என சொல்வது நீதிமன்றமாம், ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் தேர்தல் செலவு, கூவத்தூர் செலவு, குற்றால செலவு எல்லாம் எவ்வளவு தெரியுமாங்க‌

தண்ணி செலவு இதர செலவெல்லாம் கருணாஸ்கிட்ட வேணா கேட்டுகோங்க, அதை எல்லாம் யாருங்க திருப்பி தருவாங்க?

இந்த நீதிமன்றம் தருமா? அந்த நஷ்ட ஈடுபற்றி ஏதாவது நீதிபதி சொல்லியிருக்காரா?

இத சொன்னா நீதிமன்ற அவமதிப்புன்னு சொல்றாங்க..

[October 25, 2018 ]
Image may contain: 1 person
===========================================================================

20 தொகுதிகளிலும் உடனே தேர்தல் நடத்தபட வேண்டும் : முக ஸ்டாலின்

தம்பி ஆர்.கே நகர்ல ஆனது மாதிரி ஆகிபோச்சுதுன்னா என்ன செய்வீங்க, அவங்களுக்கு மட்டும் அல்ல, நமக்கும் தேர்தல் சவால்தான் தம்பி

[October 25, 2018 ]
Image may contain: 1 person

சிதறல்கள்

டைட்டானிக் கப்பலை யாரும் மறக்கமுடியாது, அந்த சோகத்தை காவியமாக்கி எல்லோர் மனதிலும் இடம்பெற செய்தார் அந்த ஜேம்ஸ் காமரூன்

இப்பொழுது டைட்டானிக் கப்பலை அச்சு அசலாக செய்து அது சென்ற பாதையிலே பயணிக்க வைத்து அமெரிக்காவிற்கு அனுப்ப போகின்றார்கள்

இப்பொழுது உள்ள கப்பல் போல் அல்லாமல், 100 வருடத்திற்கு முந்தைய பர்னிச்சர் முதல் அமைப்பு வரை எல்லாம் அச்சு அசலாக உண்டாம், இன்சின் மட்டும் வேறாம்

அதில் பயணிக்க கடும் போட்டி நிலவுகின்றது

ஆக அவர்கள் மூழ்கிவிட்ட கப்பலை மறுபிரதி எடுக்கின்றார்கள்

சங்கமும் சின்னதம்பி, வருஷம் 16 போன்ற படங்களை மறுவெளியீடு செய்யும் திட்டத்தில் இருக்கின்றது

இந்த புது டைட்டானிக் வசூலை விட அது அதிகமாக வசூலிக்கும் என அந்த கப்பல் கம்பெனிக்கு சங்கம் சவால் விடுகின்றது

[ October 25, 2018 ]

============================================================================

விவி மினரல்ஸ் அலுவலகங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை

தானுண்டு தன் தாதுமணல் உண்டு என்றிருந்த வைகுண்டராஜனை முதன் முதலில் சோதனை இட்டது கலைஞர் அரசு.

அன்றே ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அண்ணாச்சி , சோதனை என்றால் எப்படி இருக்கும் என அன்றே அறிந்துகொண்டார்.

இப்பொழுது சோதனையில் அரை கிலோ இலுமினைட், கார்னெட் போன்ற தாதுக்கள் கிடைத்தாலே பெரும் விஷயம்

தாதுக்களை விடுங்கள், பிய்ந்த செருப்பு கூட கிடைக்காது, அண்ணாச்சி செருப்பும் அணிவதில்லை..

(இப்பொழுது மனதிற்குள் நன்றி கலைஞரே நன்றி என சொல்லிகொண்டேதான் இருப்பார் அண்ணாச்சி..) [ October 25, 2018 ]

============================================================================

“அட போங்க தம்பி, மோடியினை வெண்தாடி வேந்தர்னு கூட நம்ம டிவில சொல்லியாச்சி

பழனிச்சாமி இரும்பு மனிதர்னு கூட ஒரு கதை நம்ம டிவில வந்தாச்சி, ஆனாலும் ரெய்டு நடக்குது?

இனி என்ன செய்ய சொல்லுதிய?

வருமானவரிதுறை பற்றி நல்லதா 4 விஷயம் நம்ம டிவில சொல்ல சொல்லிருக்கேன்,

தாது மணல் தொழில் நடக்கும்பொழுதெல்லாம் விட்டுபுட்டு இப்போ குவாரி மூடுன பிறவு ரெய்டுன்னா என்ன சொல்லுதிய?

சொல்லுங்க, என்ன சொல்லுவிய?

அதைத்தான் நானும் சொல்றேன் தம்பி, தொழில் நடக்கும் பொழுது விடுவாவளாம், நம்ம கம்பெனிக்கு டெல்லில விருது எல்லாம் தருவாவளாம்

ஆனா கம்பெனி மூடி கிடக்கும் போது ரெய்டாம் தம்பி

மூடி கிடக்குற குவாரில என்ன வருமானம்? அதுக்கு என்ன வரி தம்பி??.

எப்படி இருக்கு பாத்தியளா, வருமான வரிதுறை லட்சணம்?”

[ October 25, 2018 ]

Image may contain: 1 person, closeup
===========================================================================

என்னது அண்ணாச்சி ஆபிஸ்ல இருந்து போனா?

ரெய்டை கண்டித்து அறிக்கை விடனுமா?

நான் ஊர்ல இல்லணு சொல்லிட்டு போனை வச்சிரு, அவர் நம்ம கல்யாணத்துக்கு வந்திருக்கலாம், பல அன்பளிப்பு கொடுத்திருக்கலாம்

அதுக்காக இந்த ஆட்சியில போய்…. அடிபட்டு சாகவா? திருமுருகன் காந்தியிய பார்த்தல்ல, நானும் அப்படி ஆகணுமா?

முக ஸ்டாலின் எல்லாம் வந்து பார்த்தா நான் உயிரோட இருப்பேன்னு நினைக்கிறியா?

[ October 25, 2018 ]
Image may contain: 4 people, people smiling, people sitting
============================================================================

இந்த ஏ.ஆர் முருகதாஸ் திருட்டித்தான் கதை எடுக்கின்றார் எந்த சர்ச்சை தொடர்கின்றது

அது உண்மை என்றும் ஆகிவிட்டது

இப்பொழுது சர்க்கார் படத்திற்கும் வந்தாயிற்று, படம் ஏன் அவசர அவசரமாக திரைக்கு வருகின்றது என்ற மர்மத்தை விளக்குகின்றார் Anthanan Shanmugam

[October 25, 2018 ]
NEWTAMILCINEMA.IN
வழுக்கை தலையில் முடி நடுவதுதான் பேஷன் என்றால், வறண்ட தலைக்குள் இரவல் சிந்தனைகளை நட்டு வாழ்க்கை நடத்துவதும் கூ….
============================================================================

பத்திரிகையாளர் ஜமால் கொலையில் சவுதி இளவரசர் சல்மான் இருந்தாலும் இருக்கலாம் என பகிரங்கமாக சொல்லிகின்றார் டிரம்ப்

டிரம்ப் ஆதாரம் இல்லாமல் பேசமுடியாது என்பதால் உலகம் அரண்டு பார்க்கின்றது, நிச்சயம் சவுதி இளவரசர் பெயரை சொல்வது பெரும் அதிர்ச்சி

இதுபற்றி தான் பலமுறை சவுதியிடம் பேசினேன் என சொல்லிகொண்டிருந்த டிரம்ப் இப்பொழுது இப்படி அதிர்ச்சி கொடுக்கின்றார்

ஏதோ சவுதிக்கு எச்சரிக்கை கொடுக்கின்றது அமெரிக்கா, ஏதோ ஒரு முடிவுக்காக சவுதியினை கார்னர் செய்கின்றது அமெரிக்கா

இந்நிலையில் அமெரிக்க ஆதரவு ஜோர்டானிய உளவுதுறை தலைவர் சுட்டு கொல்லபட்டிருப்பது இன்னொரு சலசலப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது

விரைவில் அடுத்த புயல் கிளம்பலாம்

அல்லது தன் ஆதரவாளர் சுட்டு கொல்லபட்ட விஷயத்தினை தொடர்ந்து டிரம்ப் கடுப்பாகியிருக்கலாம்

அதிர்ச்சியான மோதல்கள் அரேபியாவில் தொடங்கிவிட்டன‌

[October 25, 2018 ]

============================================================================

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று காலை தீர்ப்பு

எல்லா தரப்புமே எதிர்பார்க்கும் தீர்ப்பு இது

இதனால்தான் தினகரன் அந்த 18 பேரையும் குற்றாலத்தில் அடைத்து வைத்து குறவஞ்சி பாடிகொண்டிருக்கின்றார்

தீர்ப்பு எதுவானாலும் அவர்களுக்கு பின்புதான் தெரியவரும் அல்லது தெரிய வரவே வராது

அவர்கள் நிலமை அவ்வளவு பரிதாபம் [October 25, 2018 ]

============================================================================

சாதி ஒற்றுமை

பெரியாரால் கூட கொண்டுவரமுடியா சாதி ஒற்றுமையினை பல நூறு சொத்துமதிப்பு கொண்ட சங்கங்களால் செய்ய முடிகின்றது
தெட்சன நாடார் சங்கம் என்பது அபராதத்தில் ஓடும் சங்கம் அல்ல, கிட்டதட்ட 500 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்களை கொண்டது என சொல்லபட்டாலும் மதிப்பு அதை விட அதிகம் இருக்கலாம்..
வியாபாரத்தில் கொடிகட்டி பறந்த சிவகாசி விருதுநகர் நாடார்கள் தங்களுக்காக உருவாக்கியது நாடார் சங்கம்
நாடார்கள் கல்வியிலும் வியாபாரத்திலும் வளர வேண்டும், அச்சமூகம் வளர வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கபட்டது அது
அதாவது கால சூழல் அப்படியானது, திராவிட குரல்களுக்கும் முந்தைய காலமது
ஆனால் தென்னகத்து நாடார்கள் அதில் ஒட்டமுடியவில்லை, பெயர்தான் நாடார் சங்கமே தவிர, விருதுநகர் நாடாருக்கும் நெல்லை நாடாருக்கும் இடைவெளி அதிகம்
இதில் இந்த ஆதித்த வம்சவளி நாடார்கள் என சொல்லிகொண்டவர்கள் தெட்சன நாடார் சங்கத்தை தொடங்கினார்கள், அவர்கள் தலைநகரம் நெல்லை
வியாபார கோட்டையான சிவகாசி சாத்தூருக்கு பதிலாக தூத்துகுடி மற்றும் நாகர்கோவில் கோட்டார் வளர தொடங்கியதும் சங்கம் உருவாக இன்னொரு காரணம்
சிவந்தி ஆதித்தனின் முப்பாட்டன் காலத்தில் தொடங்கபட்டது , நெல்லை தூத்துகுடி நாடார்கள் பணத்தில் அது வளர்ந்தது
நெல்லையர் எங்கெல்லாம் உண்டோ அங்கெல்லாம் வளர்ந்தது மும்பையிலும் வளர்ந்தது
பள்ளி, கல்லூரிகள் அது இது என வளர்ந்த சங்கம் பல நூறு கோடிகளை இன்று கொண்டிருக்கின்றது, பெரும் பணம் புரளும் இடம் அது
அப்படிபட்ட சக்திவாய்ந்த சங்கத்தை 
சிவந்தி ஆதித்தன் குடும்பம் அதை வைத்திருந்தது, பின்பு தென்னகத்து அம்பானி வைகுண்டராஜன் கைபற்றினார்
மணல் விவகாரத்தில் அவருக்கு நெருக்கடி வந்தபொழுது எதெல்லாம் தனக்கு இல்லாததை உணர்ந்தார், அவரின் சிந்தனையில் தனக்கென ஒரு ஊடகம் , பெரும் சங்கம் இல்லை என்பது அவருக்கு தெரிந்தது
நியூஸ்7 வந்தது போலவே சங்கமும் அண்ணாச்சி கைக்கு சென்றது, ஆனால் இதுவரை சங்கம் அண்ணாச்சிக்கு ஆதரவாக என்ன குரல் எழுப்பிற்று என்றால் ஒன்றுமே இல்லை, ஒரு முறை விஜயகாந்தினை கண்டித்ததோடு சரி.
இப்படியாக சங்கத்தை ஆளாளுக்கு வைத்திருந்தார்கள், சில நேரங்களில் சில ரவுடிகளின் கரங்களும் இருந்தன‌
இப்பொழுது என்னாயிற்று என தெரியவில்லை
கரகாட்டகாரன் கவுண்டமணி பாணியில் சொல்வதென்றால் சிவந்தி வைத்திருந்தார், தூத்துகுடி தொழிலதிபர்கள் வைத்திருந்தனர், வைகுண்டராஜன் வைத்திருந்தார், இப்பொழுது சங்கத்தை யார் வைத்திருக்கின்றார்கள் என்றே தெரியவில்லை
ஆனால் முதல் முறையாக தேவர் சமூகம் நாடார் சமூகத்திற்கு வாழ்த்து தெரிவித்திருப்பது மகிழ்ச்சி என்றாலும் உண்மை நிலவரம் அது அல்ல‌
ஒளித்து சொல்ல ஒன்றுமில்லை, திறந்தே சொல்லலாம். ஒரு காலத்தில் கமுதி மறவருக்கும் சிவகாசி நாடார்களுக்குமான கலவரங்களே இம்மாதிரி சங்கம் தொடர ஆரம்ப புள்ளி
பின் அது தொடர்ந்தது, இரு சமூகத்திற்கும் பசும்பொன் தேவர் காலத்தில் முறுக்கியது, சசிவர்ண தேவர் காலத்திலும் நிலமை சுமூகமாக இல்லை
1997 வரை இருபக்கமும் முட்டிகொண்டேதான் இருந்தது,இன்றும் கணல் உண்டு
இதில் இன்று 
எப்படி சாத்தியம் என்றால் அதுதான் அரசியல் விளையாட்டு
சாதிகள் எல்லாம் அரசியலாகிவிட்ட நிலையில் எல்லா சங்கங்களிலும் எல்லா சாதியினையும் அனுசரித்து செல்ல வேண்டிய நிலை
காரணம் சங்கத்து சொத்து, பணம், பதவி, அனுகூலம் இன்னபிற, வளைந்து நெளிந்து செல்லாமல் எதிர்காலம் இல்லை
போதாதா?
நாடார் சங்கத்தை தேவர் வாழ்த்த தொடங்கியாயிற்று
அதைத்தான் சொன்னோம், பெரியாரால் முடியாத சாதி ஒழிப்பினை பணம் செய்கின்றது
அப்புறம் என்ன?
இனி பசும்பொன் குருபூஜைக்கு வரலாற்றில் முதல் முறையாக இந்த நாடார் சங்க தலைவர் காளிதாச நாடார் செல்ல வாய்ப்பு இருக்கின்றது
ஒழிக சாதிகள், பெருகட்டும் ஒற்றுமைகள்
பசும்பொன் தேவரையும், காமராஜரையும் ஒன்றாய் பார்க்க நன்றாகத்தான் இருக்கின்றது
அதற்காக விரைவில் சரத்குமாரையும், கார்த்திக்கையும் ஒரே போஸ்டரில் போடுவார்கள் பாருங்கள் அதுதான் சகிக்க முடியாதது
அதைவிட ஆபத்து இந்த கராத்தே செல்வினும் கட்டதுரையும் ஒரே போஸ்டரில் வந்துவிட்டாலும் உண்டு
அப்படி ஒரு போஸ்டர் வருமா என்றால் நிச்சயம் வரும், காரணம் அரசியலும், பணமும் எல்லாம் செய்யும்
(என்னை அடிக்கடி பஸ்டாண்டுக்கு வா என சொல்லும் சாதி வெறியர்கள் இந்த போஸ்டரை பார்த்து விட்டு எந்த மருத்துவமனையில் கிடக்கின்றார்களோ தெரியாது)
ஒரு கோஷ்டி இதில் தினகரனின் அரசியல் விளையாட்டும் உண்டு என்கின்றது , சொல்லமுடியாது ஆர்.கே நகர் இடைதேர்தலில் இதே நாடார் சங்க கோஷ்டியான சபாபதி, வைகுண்டராஜன் எல்லாம் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து அவர் வென்ற சம்பவமும் நடந்தது
அதனால் இதில் டிடிவி தினகரனின் கரங்கங்களும் உண்டு என்பதையும் மறுக்க முடியாது
அது ஒரு வேளை உண்மையாக இருந்தால் 
“இரண்டாம் பெரியார்” யார்?
சாட்சாத் டிடிவி தினகரனே தான் [ October 25, 2018 ]
Image may contain: 3 people, people smiling
Image may contain: 9 people, people smiling, people standing

சிதறல்கள்

இவ்வளவு நாள் இல்லாமல் சிபிஐ, ரா மேல் மோடிக்கு என்ன அக்கறை? அதுவும் ஆட்சி முடியும் பொழுது என்ன அக்கறை

ஆழ யோசித்தால் புரியும் விஷயம் இதுதான்

ரபேல் விவகாரத்தில் அடுத்த ஆட்சி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு விட்டால் தீரா சிக்கலில் விழநேரிடும் எனும் அஞ்சும் பாஜக அதற்கான தற்காப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது

ஆதாரங்களை அழிக்க பொம்மை அதிகாரிகளை வைக்கும் வேலை நடைபெறலாம்

ரபேலின் தொடர்புகள் வெளிநாடுகளில் இருப்பதால் ராவிலும் ஆதாரம் சிக்காமல் இருக்க சில வேலைகள் நடக்கலாம்

இப்போதைக்கு சிபிஐல் குழப்பம் வர இதை தவிர வேறு வாய்ப்பு இல்லவே இல்லை…

அவ்வளவு நல்ல அரசு என்றால் தமிழக அரசு மீது சீர்திருத்தம் செய்யட்டும் பார்க்கலாம் [ October 24, 2018 ]

============================================================================

”ஏழை, பணக்காரர் இடையிலான வித்தியாசத்தைக் குறைத்தவர்” :-

மோடிக்கு 2018 க்கான சியோல் அமைதி விருது வழங்குகின்றது தென்கொரியா

எப்படி குறைத்தார் என்பது நமக்குத்தான் தெரியும்?

தொழில் நடத்த முடியாமல் பலர் கம்பெனி மூடி தெருவுக்கு வந்தாயிற்று

பெட்ரோல் விற்கும் விலையில் காரினையும் பைக்கினையும் விட்டு விட்டு பலர் ரோட்டில் ஏழைகளோடு நடக்க ஆரம்பித்தாயிற்று

சிலிண்டர் விலை கூடியதால் பலருக்கு பழையபடி விறகு அடுப்பு

பணக்காரர்களை எல்லாம் ஏழையாக்கி ஒரே வரிசையில் உட்கார வைத்தார் மோடி , ஏழைகள் ஏற்கனவே ஏழைகள் என்பதால் இழக்க ஒன்றுமில்லை

ஆக வித்தியாசம் குறைந்தது என்பதால் விருது கொடுக்கபடலாம்

ஏம்பா தென் கொரியா பயலுகளா, உங்க சாம்சுங் போன் விற்கணும், ஹூன்டாய், கியா கார் விற்கணும் இன்னும் நிறைய எலக்ட்ரானிஸ் பொருள் எல்லாம் விற்கணும்ன்னா அதுக்காக இந்த அளவு பொய் சொல்வீர்களா?

உங்களுக்கெல்லாம் வடகொரிய தக்காளிதான் சரி.

[ October 24, 2018 ]

============================================================================

`சர்கார்’ படத்தை தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு

பின்னே?

யார் கதையினையோ ஏ.ஆர் முருகதாஸ் திருடிவிட்டார் என்ற சலசலப்பு வந்தாயிற்று, சம்பந்தபட்டவர் கோர்ட்டுக்கு செல்லுமுன் படத்தை வெளியிட்டால் சிக்கல் இல்லை என்பது தயாரிப்பாளருக்கு தெரியாதா?

[ October 24, 2018 ]

============================================================================

ஆத்தா, உனக்கு தெரியாததில்ல‌

நம்ம தலைவருக்கும் வாரிசு இல்ல, உனக்கும் வாரிசு இல்ல. இதனால எவ்வளவு கஷ்டம் ஆத்தா

அந்த கஷ்டம் உங்களோட போகட்டும், வருங்காலத்துல கட்சி நல்லா இருக்கட்டுமேன்னு சில வாரிசுகள நான் கூட உருவாக்குனது தப்பா ஆத்தா?

[ October 24, 2018 ]
Image may contain: one or more people and people standing
=====================================================================

Saravanan Chandran என்பவர் நல்ல எழுத்தாளர், இப்பொழுதும் சுபிட்ச முருகன் என்றொரு நாவல் எழுதியிருக்கின்றார்

நாவல் எழுதியது சரிதான், ஆனால் முன்னுரை எழுத ஜெயமோகனை அழைத்ததுதான் அதிர வைக்கின்றது

மனிதர் ஒரு முன்னுரை எழுதியிருக்கின்றார் பாருங்கள், தமிழ்தான்

ஆனால் பலமுறை வாசித்தும் புரியவில்லை, தலை ஒரு பக்கம் வாசித்தும் தலைகீழாக நின்று வாசித்தும், ஏன் கம்பியூட்டரை சரித்து போட்டு வாசித்தும் புரியவில்லை

இனி இரவு டாஸ்மாக் சரக்கு ஒன்றை அடித்துவிட்டு வாசிக்கலாம் என்ற முயற்சி தவிர வேறு வழி இல்லை

இந்த முன்னுரை வாசகனை பின்னங்கால் பிடறியில் அடித்து ஓட செய்துவிடும் என்பதால்
Saravanan Chandran என்பவர் கொஞ்சம் விளக்கவுரையினை எழுதி அதோடு இணைத்துவிடுவது நல்லது.

JEYAMOHAN.IN
  ‘மெய்யறிதல் என்பது ஒரு திரிபுநிலை’ என்ற சொல்லை எப்போதோ என் குறிப்பேடு ஒன்றில் எழுதிவைத்திருந்தேன்.
[ October 24, 2018 ]
============================================================================

இன்னொரு புதிய படத்தில் நடிகின்றார் ரஜினிகாந்த்

என்ன நடந்திருக்கும்?

“யோவ் வீட்டில் வாக்கிங் போறத கேமரா முன்னால் போ, வீட்டில் சாப்பிடுவதை கேமரா முன் சாப்பிடு, வீட்டில் சண்டை போடுவதை கேமரா முன்னால் போடு

வீட்டில் தனியாக பேசுவதை கேமரா முன்னால் பேசு, அப்பாவி ரசிகர்களை நினைத்து சிரிப்பதை கேமரா முன்னால் சிரி

கொஞ்சம் மேக் அப் மட்டும் போட்டுக்கோ, கோடி கோடியாய் கொட்டும்..” என வீட்டில் அந்தம்மா விரட்டும் போல [ October 24, 2018 ]

============================================================================

கூத்துபட்டறை முத்துசாமி இறந்துவிட்டார் என செய்திகள் வருகின்றன‌

நாடக குருமார்களான அவ்வை சன்முகம், பம்மல் கல்யாண சம்பந்தம் முதலியார் போன்ற வரிசையில் வரும் நபர் முத்துசாமி

ஏராளமான அற்புத நடிகர்கள் அவரின் நாடக பயிற்சியிலிருந்து வந்தார்கள். மக்கள் ஜனாதிபதி சோமசுந்தரம் முதல் இன்று உச்சத்தில் இருக்கும் விஜய் சேதுபதி வரை அவரால் உருவாக்கபட்டவர்கள்

நடிகர்கள் பசுபதி, விமல், விதார்த், கலைராணி, தேவி, மீனாட்சி, ஜார்ஜ்,ஜெயராவ்,ஜெயக்குமார்,
குரு சோமசுந்தரம், குபேரன், சஞ்சீவி, கவின் ஜெ.பாபு என பெரும் வரிசையினை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு

ஆண்டவன் கட்டளை படத்தில் நாசர் பாத்திரத்தில் அவரின் சாயலும், கூத்துபட்டறையும் நன்றாக தெரிந்தது

திரையுலகம் அவருக்கு செய்த நன்றிகடன் அது ஒன்றுதான்

நல்ல நடிகர்களை உருவாக்கிய அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

[ October 24, 2018 ]

Image may contain: 1 person, eyeglasses
==========================================================================

நிதி கொடுங்கள், கட்சியினை இத்தோடு மூடுகின்றோம் அரசியலுக்கு வரமாட்டோம் என மட்டும் சொல்லுங்கள்.

கடன் வாங்கியாவது மக்கள் கொட்டுவார்கள்

[ October 24, 2018 ]
Image may contain: 1 person, text
=======================================================================

இந்த சிபிஐ, ரா எல்லாம் சீரமைக்கின்றார்களாம், மகா திறமையான ஆட்கள் வேண்டுமாம்

ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகரான தமிழக போலிசுக்கே தண்ணி காட்டிய எச்.ராசாவினையும் எஸ்.வீ சேகரையும் சிபிஐக்கும், ராவுக்கும் அனுப்ப முடியுமான்னு டெல்லியில இருந்து சீரியசா கேக்குறாங்க‌

முடியவே முடியாது, அவங்க கட்சிக்கு தேவைன்னு சொன்னாலும் விடவே மாட்றாங்க, ஹாஹஹஹஹஹஹ்

ஹய்யோ..ஹய்யோ..

Image may contain: 5 people, people smiling, people sitting
=========================================================================

“மாமா லேய் இங்க ஒரு பிரச்சினைல‌

என்னல பிரச்சினை

இங்க கொஞ்சம் பேர் ஒருமாதிரி அலைதானுவல, என்ன மட்டம் தட்டிகிட்டே இருக்கானுவல, அவனுக ஏதோ பிர்மானனாம்ல‌

ஒ பிராமணனா?

என்னமோல அப்படித்தான் சொல்றானுவல, கலரா இருக்கானுவளா நான் கருப்பா இருக்கேன்னு அவனுகளுக்கு இளக்காரமா இருக்குல‌. நானும் கருப்பு அப்பாவும் கருப்பா அம்மாவும் கருப்பா, அத வச்சி கிண்டல் பண்ணிட்டே இருக்கானுவல‌

அவனுக நல்லா படிப்பானுவல, அப்படித்தான் இருப்பானுக, நீனும் நல்லா படி

கிழிச்சானுவ நான் பத்து மார்க் எடுத்தா அவனுக 5 கூட இல்ல ஆனாலும் நாங்கதான் பெருசுன்னு நிக்கானுவல‌

அப்டியால‌

ஆமால ஆனா அடிச்சா செத்துருவானுவ அப்படித்தான் இருக்கானுவ ஆனாலும் கொசரு

அப்படி என்னதாம்ல செய்றானுவ‌

என்ன கூப்டுவச்சி நாங்க வெள்ளையா இருக்கோம் நீ கருப்புங்காரானுவ, ஏதோ சர்ஸ்வதியாம்ல அத கும்பிடனுமாம், ஜீசஸ்ன்னு ஒன்னு கிடையவே கிடையாதாம்

ஒஹோ

அவனுக செய்றது எல்லாம் சரியாம், நா செய்றது எல்லாம் தப்பாம். அவனுகளத்தான் நான் பாலோ பண்ணனுமாம்ல , சேட்டையா பண்றானுவல‌

அப்படியால‌.

ஆமால, எத சொன்னாலும் நீ சொல்றது தப்பு, நாங்க சொல்றதுதான் சரி, எங்க ஆத்துல பெரியவா சொல்லிருக்கான்னு சொல்லி சொல்லி அவனுக அதிகாரம் பண்ணிட்டே இருக்கானுவல‌

ஓஹோ வேற..

நிறையால… எதுக்கு எடுத்தாலும் கருப்பா இருக்கவனுக்கு ஒண்ணும் தெரியாது, நாங்க சொல்றத கேட்டுட்டு ஒழுங்க இருன்னு சொல்றானுவ, ஆனா சொல்றது பூரா தப்புல‌

அப்படியால, அவனுகளுக்கு எல்லாம் அந்த பெரியார் கிழவர்தாம்ல சரி

அவர் எங்கல இருக்காரு, போன் போட்டு இங்க வர சொல்லுல‌

அவர் இல்லல, ஆனா இவனுகள எப்படி அடக்கனும்னு அவர் நிறைய எழுதி வச்சிருக்காருல‌

அப்படியால மாமா

ஆமால, உனக்கு தமிழ் வாசிக்க தெரிமால‌

தெரியும்ல, உடனே புக் அனுப்பி வைல‌

சரில‌

அவனுகள விட கூடாதுல, ஓட ஓட அடிக்கணும்ல, பெரிய இவனுக மாதிரி அலையுறானுவல.

சரில அடிச்சிருவோம்ல‌

(இரண்டாம் வகுப்பு படிக்கும் தங்கை மகனுடன் பேசியது இது, நம் வீட்டிலும் ஒரு தீவிர பெரியாரிஸ்ட் உருவாகி கொண்டிருக்கின்றார்

[ October 24, 2018 ]

============================================================================