சிதறல்கள்

தமிழ்நாடு பெரும் ஊழலில் இருப்பதாக சொல்கின்றார் ஆளுநர், இந்த மாநிலத்தின் உச்ச தலமை

மாநிலத்தில் லஞ்சம் ஊழல் பெருகினால் மத்திய அரசுக்கு அதை கலைக்க சொல்லி அறிக்கை அனுப்பும் பொறுப்பும் உரிமையும் அவருக்கே இருக்கின்றது

ஆனால் அவரோ சாலையோரத்தில் அழுது புலம்பும் சராசரி மனிதனாக புலம்பிகொண்டிருப்பதுதான் எரிச்சலை கொண்டு வருகின்றது

முக ஸ்டாலின் இது ஊழல் பெருகிய ஆட்சி என ஆதாரங்களை கொடுத்தபின்னும் ஆளுநர் கமுக்கமாக இருந்துவிட்டு இப்பொழுது அழுகின்றார்

ஆளுநரின் கவலை நியாயமானதென்றால் அவர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி ஆட்சியினை கலைக்கட்டும் [ October 7, 2018 ]

============================================================================

நக்சலைட்டுகளை 3 ஆண்டுகளில் ஒழித்துக்கட்டுவோம் – உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சூளுரை

இவர்கள் ஆட்சிக்கே இன்னும் 3 மாதம்தான் உள்ளது [ October 8, 2018 ]

============================================================================

பிரதமரை சந்திக்க டெல்லி சென்றார் முதல்வர் பழனிச்சாமி

“பாருங்க, இதெல்லாம் தினகரன சந்திச்சி ஆட்சியினை கவிழ்க்க ரகசியமா செயல்பட்டோர் பட்டியல், முதல் பெயர் பன்னீர்செல்வம். நான் என்னங்க செய்யட்டும்? ஒரு பயலையும் நெம்ப முடியல. ரெம்ப பயமா இருக்குங்க, தூங்கி 2 வாரம் ஆச்சுங்கோ.

அரே பையா அர்சியல்னா அப்படித்தான் இர்க்கும், பதவி கிடைக்கும்னா பன்னீர் பாகிஸ்தானுக்கும் போவாருன்னு எங்களுக்கும் தெரியும். பாராளுமன்ற தேர்தல் வரை பொர்த்துக்கோ மேன். நிலமை சரியில்லண்ணா உங்களே ஏதாவது ஒரு மாநிலத்துக்கு கவர்ணர் ஆக்கிரலாம். பயப்படமா போ” [ October 8, 2018 ]

============================================================================

கேரளா சபரிமலை விவகாரத்திற்காக பற்றி எரிய தொடங்கிவிட்டது, ஆங்காங்கே வெடித்த போராட்டங்கள் பந்தள மன்னர் குடும்பத்தின் பகிரங்க எதிர்ப்புக்கு பின் பெரும் போராட்டமாக வெடிக்கின்றன‌

குறிப்பாக பெண்களே திரண்டு சபரிமலைக்கு வரும் பெண்களை தடுப்போம் என கிளம்பி நிற்கும்பொழுது கேரள அரசு அஞ்சத்தான் செய்கின்றது.

கேரள பெண்களே கொதித்து களத்திற்கு வந்துவிட்டது நிச்சயம் பெரும் திருப்புமுனை, 50 வயதுவரை அய்யப்பனுக்காக நாங்கள் காத்திருக்க தயார் என்ற பதாகையுடன் அவர்கள் கேரளம் முழங்க ஊர்வலம் செல்வது தேசத்தையே திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது

எந்த சூழலிலும் சபரிமலைக்கான தனிதன்மையினை விட்டு கொடுக்கமாட்டோம் என வீதிக்கு போராட வந்திருக்கின்றார்கள், அலை அலையாக திரள்கின்றார்கள்

உண்மையில் தலைவர் என்றோ, போராட்ட குழு என்றோ இல்லை தூண்டிவிடும் சக்தி என்றோ எதுவுமில்லை. நிச்சயம் தன்னிச்சையான எழுச்சி. தங்களின் மிக உயர்ந்த பாரம்பரிய ஆலயத்தின் தனிதன்மையினை காத்தே தீரவேண்டும் எனும் எழுச்சி

பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் எனும் தீர்ப்புக்கு எதிராக பெண்களே நாங்கள் செல்லமாட்டோம் இதர பெண்களை அனுமதிக்கவும் மாட்டோம் என தீர்க்கமாக சொல்லி நிற்கும்பொழுது சகல பக்கமும் அதிர்ச்சி பார்வைகள்

எம்மை பொறுத்தவரை அவர்களின் போராட்டம் மிக சரி, நல்ல இந்துபெண்கள் எதை செய்யவேண்டுமோ அதை மிக சரியாக செய்கின்றார்கள்.

பந்தளமன்னரும் போராட்ட குழுவினரும் அரசின் பேச்சுவார்த்தை அழைப்பினை ஏறேடுத்தும் பார்க்காத நிலையில் விஷயம் விஸ்வரூபமாகின்றது

கம்யூனிச அரசை தேர்ந்தெடுத்த மலையாளிகள்தான் கோவில் விஷயத்தில் இவ்வளவு ஆக்ரோஷமாகவும் நிற்கின்றார்கள்

கேரள அரசு திகைத்து நிற்கின்றது, நிச்சயம் அதற்கு மிக சவாலான காலம். உச்சநீதிமன்ற தீர்ப்பினை அங்கு அமுல்படுத்துவது முடியாத விஷயம் என உணர்ந்தே விட்டது

இது எளிதில் தீரும் பிரச்சினை அல்ல, சபரிமலை விவகாரத்தில் பழைய நிலை திரும்பும் வரை நிலமை சுமூகம் அல்ல‌

ஜல்லிகட்டுக்காக தமிழகம் பொங்கியது போல சபரிமலையினை காப்போம் என அவர்கள் கடும் முழக்கத்துடன் கிளம்பியிருக்கின்றார்கள்

கேரளம் ஆணும் பெண்ணுமாக கொந்தளித்து நிற்கும் நிலையில் தமிழகத்தில் சத்தமே இல்லை

ஒருவேளை தமிழக அய்யப்ப பக்தர்கள் ஜோடியாக செல்ல கடும் ஆவலில் இருக்கின்றார்களோ என்னமோ என மலையாளிகள் சந்தேகித்து கொண்டிருக்கின்றார்கள்.

தமிழக பக்தர்களுக்கு வீட்டில் மனைவிமார்களால் அவ்வளவு நெருக்கடியோ என்னமோ? இருக்கலாம், போனால் என்னையும் சேர்த்து அழைத்துகொண்டு செல்லவேண்டும் என மனைவியர் அப்படி மிரட்டி இருக்கலாம்

எப்படியோ ஒரு எதிர்ப்பும் காட்டாத தமிழக பக்தர்கள் இனி சபரிமலைக்கு செல்லும்பொழுது எந்த முகத்துடன் மலையாள பக்தர்களின் முகங்களை ஏறெடுப்பார்களோ தெரியாது

தலைக்கு இருமுடி போல, முகத்திற்கும் சில முடிச்சுகள் கட்டி மறைத்து கொள்ளாமல் தமிழக பக்தர்கள் இனி சபரிமலைக்கு செல்வது சாத்தியமில்லை

[ October 8, 2018 ]

Image may contain: 14 people, people standing, crowd and outdoor
==========================================================================

“சபரிமலைக்கு பெண்கள் போகலாமாம், ஒரு ரயிலை நம்ம கோஷ்டிக்கு புக் பண்ண சொல்லிட்டேன்

படி பூரா உன்ன மாதிரி சீட கோடிகள் நிற்கணும், நான் உங்கமேல் நீந்தி தரிசனம் பார்க்க போகணும் சரியா..” [ October 8, 2018 ]

Image may contain: 2 people, people smiling, people standing
=======================================================================

ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா வழங்கவும், ராமசந்திரன் பெயரை சென்ட்ரல் நிலையத்திற்கு சூட்டவும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன் : பழனிச்சாமி

கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு ராமசந்திரன் பெயரையும், புழல் சிறைக்கு ஜெயா பெயரையும் சூட்ட கோரிக்கை வையுங்கள் உடனே நடக்கும்

அவர்கள் பெயர் சூட்டபட வேண்டிய இடங்கள் அவைதான் [ October 8, 2018 ]

============================================================================

பரியேறும் பெருமாளை கருணாநிதி பார்த்திருந்தால் கொண்டாடியிருப்பார் – ஸ்டாலின்

ஏற்கனவே வேதம் புதிது, பாரதி கண்ணம்மா எல்லாம் பார்த்து கலைஞர் உருகி உருகி அழுது கோட்டைக்கே செல்லாமல் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

அவர் படம், அவர் குடும்பத்தார் படம், இல்லை ரஜினி கமல் படம் , இதை தவிர கலைஞர் எந்த படத்தை பார்த்தார்? [ October 8, 2018 ]

============================================================================

சிதறல்கள்

பொதுவாக பொது இடங்களில் காமராஜர் கோபபடுபவர் அல்ல, ஆனால் சில விஷயங்களை அவர் பதவியிழந்த பின் பேசும்பொழுது கலைஞரால் பொறுக்க முடியாமல் காமராஜர் முதல்வர் பதவி மேல் ஆசைபட்டு பேசிகொண்டிருக்கின்றார் என சொல்லிவிட்டார்

இதுபற்றி பத்திரிகையாளர்கள் காமராஜரிடமே கேட்க சட்டென்று சொன்னார் காமராஜர் “அந்த கருணாநிதி எல்லாம் முதல்வராக அமர்ந்தபின் அந்த நாற்காலிக்கு நான் ஆசைபடுவேனாண்ணேன்?” என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்

காமராஜர் என்ன அர்த்தத்தில் சொன்னார் என்பது தெரியாது, இப்பொழுது இந்த பன்னீர் செல்வமும் அம்மாதிரி பேச ஆரம்பித்துவிட்டார்

என்ன சொன்னார்?

அவருக்கு முதல்வராகும் கேவலமான திட்டம் எல்லாம் இல்லையாம், துணை முதல்வராக நீடிக்கும் நல்ல திட்டம் மட்டும்தான் உண்டாம்

டிடிவி தினகரனுக்கு பதில் சொல்வதாக சொல்லி இப்படி நான் முதல்வர் பதவிக்கு ஆசைபடாத மகான் என சொல்லிவிட்டார் பன்னீர்

அந்த கட்சிக்குள் இப்பொழுது அடுத்த ரவுண்டு அடிக்க தொடங்கிவிட்டார்கள், பன்னீரை இவர் சாட இவர் அவரை சாட அவர் இவரை சாட ஒரே சண்டை

ஆனால் எல்லோர் மேலுள்ள லஞ்ச ஊழல் குற்றசாட்டுக்கள் எல்லாம் அப்படியேத்தான் இருக்கின்றது என்பது வேறு விஷயம்

இதில் ஒரு விஷயம் கவனிக்கதக்கது

பல அணிகளாக பிரிந்து அதிமுக என்றுதான் அடிக்கின்றார்களே தவிர, ஒரு கோஷ்டியாவது திமுகவிற்கோ இல்லை இதர கட்சிக்கோ செல்லவே இல்லை

எதிர்கட்சிகள் இங்கு அந்த லட்சணத்தில் இருக்க்கின்றன, அவை இவ்விஷயத்தில் அனுவமில்லாத கட்சிகள் என்பது அதிமுக கோஷ்டி சண்டையில் நன்றாகவே தெரிகின்றது [ October 6, 2018 ]

============================================================================

பரியேறும் பெருமாள் எனும் தலித் படத்தை 96 என்ற படம் காலி செய்தாயிற்று

தலித்தியம், அம்பேத்கரியம், நீலம் என சொல்லிகொண்டிருந்தவன் எல்லாம் தீடீரென பள்ளி கல்லூரி காதல்களை அசைபோட ஆரம்பித்தாயிற்று, பலர் அதில் நீந்த ஆரம்பித்தாயிற்று

அதில் உருகி உருகி பலர் அழுதுகொண்டிருக்கின்றனர்

தலித் படத்தை, பாலக்காடு பிராமணத்தி திரிஷா மூலம் ஓட வைத்திருகின்றார்கள் அல்லவா?

இதுதான் பார்ப்பண தந்திரம். [ October 6, 2018 ]

============================================================================

இங்கிலாந்தில் பட்ட அடிக்கு எப்படி பழியினை துடைக்கலாம் என சிந்தித்த இந்திய கிரிக்கெட் அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் கிடைத்துவிட்டது

தமிழக காங்கிரஸ் போல் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த அணி அது, இன்று தமிழக பாஜகவினை விட மோசமான நிலையில் இருக்கின்றது

அந்த அணியினை பிடித்து வைத்து அடி அடி என அடித்துவிட்டு மாபெரும் வெற்றி வெற்றி என சொல்லி கொண்டிருக்கின்றது இந்தியா

வெஸ்ட் இன்டீஸ்காரர்களும் சிரித்து கொண்டே தோற்பதில் சிறப்பானவர்கள் என்பதால் அப்படி சிரித்துகொண்டே தோற்றுகொண்டிருக்கின்றார்கள்

எப்படி இருந்த வெஸ்ட் இண்டீஸ் இப்படி ஆகிவிட்டது பாவம்

இந்த அணியினை வைத்து லாரா, சோபர்ஸ், ஹெய்டன், ஜெயசூரியா சாதனைகளை எல்லாம் முறித்துவிட வேண்டும் , இதை விட்டால் வாய்ப்பே இல்லை என இந்திய பேட்ஸ்மேன்கள் கடும் முனைப்பில் உள்ளனர்

[ October 6, 2018 ]

============================================================================

அமெரிக்க எதிர்ப்பினை கொஞ்சமும் இந்தியா கண்டுகொள்ளவில்லை அது போக்கில் அடித்து ஆடுகின்றது

எஸ் 400 ஏவுகனைகளை வாங்கியதை தொடர்ந்து, ஈரானிடம் எண்ணெய் வாங்குவோம் என அறிவித்தும் விட்டது

அமெரிக்காவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கின்றது இந்தியா, உலக நிலவரம் தனக்கு எதிராக திரும்பி இருக்கும் நேரத்தில் அமெரிக்காவிற்கு பல்லை கடிப்பதை தவிர வேறு வழியில்லை

சீனா அதன் போக்கில் இருக்கின்றது, ஜெர்மனி அமெரிக்க்க நடவடிக்கையால் தன் பிரசித்தி பெற்ற பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற கார்களின் விலை அதிகரிப்பால் கடுப்பாகி துருக்கியுடன் டீ குடிக்க சென்றுவிட்டது

இப்படி பல எதிரிகளை உருவாக்கிய டிரம்ப் இந்தியாவினை பார்த்து முறைத்து கொண்டே இருக்கின்றார்

இந்தியா தன்னிடம் எண்ணெய் வாங்கும் என்றவுடன் உற்சாகமான ஈரான் அட்டகாசமாக அமெரிக்காவினை கலாய்க்கின்றது

எப்படி?

“ஈரானை உலகை விட்டு தனிமைபடுத்த முயன்ற அமெரிக்கா இன்று தனிமைபட்டு நிற்கின்றது”

டிரம்ப் இப்பொழுது எதை எல்லாம் போட்டு உடைத்து கொண்டிருக்கின்றாரோ தெரியவில்லை [ October 6, 2018 ]

============================================================================

“ரொம்ப நன்றி புட்டீன், இந்த உறவு எப்பவும் நிலைக்கணும் போயிட்டு வாங்க‌

நான் போனபின்னாடி அடுத்த பிளைட்ல நீங்க வரப்போறிங்க இல்ல மோடி

கண்டிப்பா.. கண்டிப்பா

அப்புறம் மோடி, உங்க நாட்டில் சேகுவேரா, காஸ்ட்ரோ மாதிரி 2 பேர் நாட்டுக்காக வாழுறாங்களாமே அப்படியா? பார்த்துட்டு போகட்டுமா?

அய்யோ மேரிமாதாவே, அவனுக காமெடியனுக. இப்படி அடிக்கடி எதையாவது சொல்லி சிரிப்பு காட்டிட்டே இருப்பானுக , அவங்க தலைவிக்கு நோபல் எல்லாம் கேட்டாங்கண்ணா பார்த்துக்கோங்க‌

நோபலா எதுக்கு?

அட அவனுக அப்படித்தான், எதுக்கு பரிசு கொடுக்குறாங்கண்ணு தெரியாமலே கேட்டுட்டே இருப்பானுக‌

அட உங்கள பார்த்துட்டா “புட்டீன் சார், புட்டீன் சார் எங்க ஆத்தவுக்கு உங்க நாட்டு விருது ஏதாவது கொடுங்க சார்”னு பின்னாடியே வந்துருவானுக‌

அப்போ நான் பார்க்க வேண்டாம் என்க்கின்றீர்களா?

பாருங்க, இந்த மார்க்ஸிஸம் உலக அரசியல் எல்லாம் பேசுங்க அவனுக அம்மா, புர்ச்சி தலைவன் இத தவிர ஒன்னும் சொல்லமாட்டானுக அப்புறம் உங்களுக்கு கோபம் வரும், நீங்க சும்மாவே ஜுடோ பிளேயர்

ஆமாம்

தெரியுதுல்ல உங்க பாட்டுக்கு தூக்கி போட்டு மிதிச்சுட்டு போயிட்டா நான் எப்படி தமிழ்நாட்டை சமாளிக்கிறது, அதனால நேரே மாஸ்கோ போயிருங்க..”

Image may contain: 1 person, smiling, standing and beard
=========================================================================

திருப்பரங்குன்றம் திருவாரூர் இடைதேர்தல் இப்போதைக்கு இல்லை மழையால் இடையூறு ஏற்படும் என அரசு கேட்டுகொண்டதால் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஆக மழையோடு பணமழை கொட்டும் என எதிர்ப்பார்த்திருந்த மக்களுக்கும், தீபாவளி செலவுக்கு பெரும் திட்டம் போட்டு வைத்திருந்த மக்களுக்கும் பெருத்த ஏமாற்றம்.

தேர்தல் கமிஷனுக்கு எதிராக அந்த தொகுதியில் விரைவில் கருப்புகொடி காட்டபடலாம் [ October 6, 2018 ]

============================================================================

ஈரான் கச்சா எண்ணெய்க்க்கு அமெரிக்கா போட்ட தடையால் எண்ணெய் விலை அதிகரித்தது, இது உலக நாடுகளுக்கு சிக்கலாயிற்று

சிக்கலை ஏற்படுத்திய அமெரிக்காவினை நோக்கி அவர்கள் முறைக்க, அமெரிக்காவோ தன் அரேபிய பழனிச்சாமி பன்னீர்செலவங்களான சவுதி, குவைத் போன்ற நாடுகளை உற்பத்தியினை அதிகரிக்க சொன்னது

ஆனால் கொஞ்சம் சிக்கலில் இருக்கும் சவுதி அதற்கு மறுத்தது, காரணம் விலை குறைவதில் அதற்கு உடன்பாடில்லை

அவ்வளவுதான் “எங்கள் ஆதரவில்லாமல் உங்களால் ஒரு நாள் தாக்குபிடிக்க முடியுமா? உங்கள் நாட்டையும் அரசையும் பாதுகாப்பதே நாங்கள்தான்..” என உண்மையினை சொல்லி மிரட்டிவிட்டார் டிரம்ப்

வியர்த்து எழுந்த சவுதி அரசு அண்ணே இப்போ உற்பத்திய கூட்டுறேன்னேன், 2 நிமிஷம்னே என சொல்லிவிட்டு கடும் உற்பத்தியில் இறங்கிவிட்டது

அந்த எச்சரிக்கை சவுதிக்கு மட்டுமல்ல என்பதை உணர்ந்த மற்ற அடிமைகளும் புல் பீக்கில் எண்ணேய் எடுக்க கிளம்பிவிட்டன‌

இதிலிருந்து தெரியும் உண்மை என்னவென்றால், அரபு நாடுகளில் எதெல்லாம் அமைதியாக இருக்கின்றதோ அதெல்லாம் அமெரிக்கா போட்ட பிச்சை

அமெரிக்காவினை எதிர்த்தால் என்னாகும் என்றால் சிரியா, ஏமன், ஈராக் நிலைதான் ஆகும்

ஆக அமெரிக்காவிற்கும் அரபுலகில் பன்னீர்செல்வங்கள் ஏராளமானோர் இருக்கின்றார்கள் [ October 6, 2018 ]

============================================================================

பரதன் ஆண்டதெல்லாம் ராமனுக்காக என்பது போல மோடி ஆள்வதெல்லாம் அம்பானிக்காக எனும் ஒற்றை கொள்கைக்காக பொறுப்பில் இருக்கின்றார் மோடி

ஏற்கனவே உள்நாட்டு எரிவாயு எண்ணெய் எடுத்தல் உட்பட்ட விவகாரங்கள் எல்லாம் அம்பானி வசம் சென்றாயிற்று, போதாகுறைக்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கவும் அவர்களுக்கு சிறப்பு அனுமதி

இது போக மொபைல் உலகில் எல்லா கம்பெனிகளையும் விரட்டிவிட்டுவிட்டு ஜியோவிற்கு தேசத்தை கொடுத்தாயிற்று

இன்னும் என்னென்ன செய்து அம்பானி குடும்பத்தை வளர்க்கலாம் என தீவிரமாக சிந்தித்த மோடி ரபேல் விமான உதிரிபாக தயாரிப்பிலும் அவர்களை இழுத்துவிட்டார்

அதுவும் போதாமல் மிகபெரும் வருமானம் கொட்டும் தொழிலிலும் இறக்கியாயிற்று

ஆம், சமீபத்தில் நாட்டு மக்களுக்கு எல்லாம் இன்சூரன்ஸ் வழங்க போகின்றேன் என கிளம்பிய மோடி , காஷ்மீரில் அதை ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ்க்கு வழங்கி விட்டார்

விஷயம் பற்றி எரிகின்றது

உலகின் மிகபெரும் இன்சூரன்ஸான எல்.ஐ.சி எல்லாம் இங்கு பராகாசுரமாக இருக்க ரிலையன்ஸுக்கு ஏன் மோடி வழங்கினார் என்ற கேள்விகள் எழுகின்றன‌

அவர் ஆட்சி நடத்துவதே அவர்களுக்கு எனும்பொழுது அப்படித்தான் செய்வார்

சுதந்திர இந்தியாவில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் ஆட்டத்தை அடக்கத்தான் நேரு எல்.ஐ.சியினை உருவாக்கினார், அது இன்று வளர்ந்து நிற்கின்றது

அதை உடைத்து அந்த இடத்தில் அம்பானியினை அமர்த்த துடியாய் துடிக்கின்றார் மோடி

இந்தியா பல காலங்களில் பல மாநிலத்தவரால் ஆளபட்டிருக்கின்றது, தமிழர், தெலுங்கர், மராட்டியர் என பல இனங்கள் ஆண்டிருகின்றன‌

இப்பொழுது குஜராத்திகள் காலம், மோடி உருவில் அவர்கள்தான் ஆள்கின்றனர், நாமெல்லாம் கப்பம் கட்ட வேண்டும்

கிட்டதட்ட 50% தொழில்களில் அம்பானியின் அரசு கட்டபட்டாயிற்று, மீதி இருக்கும் எல்லா தொழில்களையும் அம்பானியிடம் கொடுத்து மொத்த இந்தியாவினையும் அவர்களுக்கு அடிமையாக்கும் மாபெரும் திட்டத்தில் இருக்கின்றார் மோடி

இந்த இன்சூரன்ஸ் திட்டங்களில் அம்பானியினை நுழைப்பது என்னை யார் கேள்வி கேட்க முடியும்? என்ற மோடியின் அகம்பாவத்தின் வெளிப்பாடே அன்றி வேறல்ல‌

அகம்பாவங்கள் நெடுநாள் நிலைத்ததில்லை என்பதை விரைவில் மோடிக்கு காலம் தெரியபடுத்தும் [ October 6, 2018 ]