சே குவேரா

இந்த உலகம் மகா சுயநலமானது, போராட வருபவர்கள் கூட தன் இனம், தன் மதம், தன் மொழி, தன் நாடு என்றுதான் போராட வருவார்கள். அப்படித்தான் பல புகழ்பெற்ற போராளிகளை உலகம் கண்டிருக்கின்றது, அதாவது கலைஞரின் வசனத்தில் சொல்வதென்றால் “அந்த பொதுநலத்திலே சுயநலமும் கலந்திருக்கின்றது” மறுக்க முடியாது.
ஆனால் முதலும், கடைசியுமாக மனித அடக்குமுறைகு எதிராக, ஒருவன் நாடு கடந்து, எல்லை கடந்து, போராடும் மக்களுக்காக சென்று போராடி உயிர்விட்டான் என்றால் வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரே பெயர்
சே குவேரா.
அவர் இயற்பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா, அதாவது வாய் நிறைய கூழாங்கற்களை போட்டு , ஸ்பானிய‌ மொழியினை உச்சரித்தால் வரும் பெயர். சே என்பது ஒரு வியப்புச்சொல் என்கின்றார்கள், அதாவது நமது பகுதியில் வியப்பின் உச்சத்தில் ஒரு உணர்ச்சியாக சொல்வோம் அல்லவா?, வாசிம் அக்ரம் கலக்கும்பொழுது, எதிரணியாக இருந்தாலும் “ச்ச்ச‌ என்ன பவுலர் ” என்போம் அல்லவா? அந்த உணர்ச்சிமிக்க உச்சரிப்புத்தான் என்கின்றார்கள்.
தென் அமெரிக்க பழங்குடியினர் சொல் அது (அவர்களுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு அதிகம்) , சே என்றால் நமது எனும் பொருளில் வருமாம்.
அர்ஜெண்டினாவில் பிறந்தவர், தந்தை இடதுசாரி, இவர் வீட்டில் பெரிய குடும்பத்தின் செல்லபிள்ளை. அக்காலங்களில் ஸ்பெயினை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடந்த காலம், குவேரா அந்த பிண்ணணியில் வளர்ந்தார். ஒரு மனிதன் படிக்கவேண்டிய அத்தனை வரலாறுகளை, அதாவது மார்க்ஸ்,ஏங்கெல்ஸ்,லெனின் என சகலரையும் படித்தார்.
முக்கியமாக தென் அமெரிக்க நாடுகளில் முதல் புரட்சியாளனாக கருதபடும் ஜோஸ் மார்த்தி எனும் பெரும் போராளியினை குருவாகவே நினைத்து வளர்ந்தார்,
பின் மருத்துவ கல்லூரி மாணவர்தான், ஆயினும் விடுமுறையில் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்காவினை சுற்றினார். மனம் நொந்தார்.
காரணம் இந்த உலகிலே இயற்கை செல்வங்கள் கொட்டிகிடக்கும் பூமி அது, பெய்யாத மழை இல்லை, விளையாத பொருள் இல்லை. தரையினை தோண்டினால் முழுக்க கனிம வளம். ஆனால் மக்கள் ஏழைகள், இதுதான் அவரை சிந்திக்க வைத்தன.
அப்பொழுது கியூபா புலிக்கு தப்பி சிங்கத்திடம் விழுந்திருந்தது, அதாவது ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் வாங்கி, அமெரிக்க கைபொமையான பாடிஸ்டாவிடம் சிக்கி இருந்தது, பிடல்காஸ்ட்ரோ கைதுசெய்யபட்டு நிபந்தனை பேரில் விடுவிக்கபட்டிருந்தார்.
பொதுவாக தென்னமெரிக்க நாடுகள் மகா வித்தியாசனமானவை, எல்லா ஊழலையும் ஆள்பவர் செய்வார், இதுக்குமேல் சுரண்ட ஒன்றுமில்லை என்றவுடன் சொத்துபத்துக்களோடு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுவார், அடுத்த அதிபர் வருவார், பின் அவர் சொத்து சேர்க்க ஆரம்பிப்பார்.
கனிம வளத்திற்காக, அமெரிக்க,ஐரோப்பிய நாடுகள் இப்படி ஆட்டிகொண்டிருந்தன, அப்படி கியூபாவின் பெரும் செல்வம் கரும்பும் தன் சீனியும்.
நான் இரும்பு மனிதன், எனக்கு பின் அமெரிக்கா இருக்கின்றது என காட்டாட்சி நடத்திகொண்டிருந்த பாடிஸ்டாவிற்கு எதிராக தாககுதல்களை நடத்திக்கொண்டிருந்தார் பிடல் காஸ்ட்ரோ, அது தோல்வியில் முடிந்துகொண்டிருந்தது.
அப்பொழுதுதான் அங்கு சென்றார் சே, அதுவரை நடந்த கொரில்லா முறையினை மாற்றினார், மிக துல்லியமான தாக்குதல்கள். அதன் பிண்ணணியில் மக்களை இணைக்கும் அரசியல் என கியூபாவில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திகாட்டினார், பாடிஸ்டா பறந்தே விட்டார். (பெரும் வரலாறு இது,விரிவாக சொன்னால் 1 வாரம் ஆகும்).
ஆட்சி காஸ்ட்ரோவின் கைகளில் வந்தது, உலகெல்லாம் மிரட்டிய அமெரிக்காவிற்கு தன் காலடியில் பெற்ற தோல்வி சகிக்கவில்லை, ஆனாலும் மக்கள் சக்திமுன் என்ன செய்ய?
ஆட்சிக்கு வந்த காஸ்ட்ரோ, சே க்கு பெரும் பொறுப்புக்களை கொடுக்க முன்வந்தார், கிட்டதட்ட நம்பர்1 இடம். நினைத்திருந்தால் சாகும்வரை கியூப ராஜதந்திரியாக வாழும் வாய்ப்பு சே விற்கு வந்தது.
பதவியினை துச்சமாக நினைப்பவன் போராளி, தனக்கு அதில் விருப்பமில்லை. உலகெல்லாம் போராடும் மக்களுக்கு உதவுவதே தன்பணி என சொல்லிவிட்டு , யாருக்கும் சொல்லாமல் கண்டம் கடந்தார். ஆம் எல்லை கடந்து கியூப விடுதலைக்கு போராடியவர், இப்பொழுது ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டிற்கு வந்தார்.
ஆனால் ஆப்ரிக்கர்களை இணைப்பது அவருக்கு தமிழ்நாட்டில் ஈழ ஆதரவோ,காவேரி பிரச்சினை ஒருங்கிணைப்பு போலவோ வெகு சிரமாக இருந்தது, ஆளாளுக்கு ஒரு நியாயம் பேசிக்கொண்டிருந்தார்கள். மனம் நொந்த சே மீண்டும் தென்னமெரிக்கா திரும்பினார்.
இந்த காலகட்டத்திற்குள் சே வினை காணாத அமெரிக்கா, காஸ்ட்ரோ பதவி சண்டையில் கொன்றுவிட்டதாக கதை கட்டிவிட்டது, காஸ்ட்ரோவிற்கும் பதில் சொல்ல தெரியவில்லை, காரணம் சே இருக்குமிடம் அவருக்கும் தெரியவில்லை, ஆனால் இப்படி சொன்னார், “எனது நண்பன் நிச்சயம் எங்காவது அடிமைபட்ட இனத்திற்காக உழைத்துகொண்டிருப்பான்”.
மீண்டும் சே வந்து மக்களிடம் தோன்றினார், தென் அமெரிக்கா முழுக்க அவருக்கு ஆதரவு பெருகிற்று, வாழும் லெனினாக கூட அல்ல, அதற்கும் மேலாக உலகம் அவரை கொண்டாடிற்று, அவரின் மனிதநேயம் அப்படி.
கியூப அரசின் சார்பாக உலகெல்லாம் சுற்றினார், உலகென்றால் அன்று சுதந்திரம் பெற்றிருந்த நாடுகளின் மக்களை காண சென்றார், இந்தியாவும் வந்து இந்திய விவசாயிகளின் நிலையினை கண்டு அதனை நேருவுடன் விவாதித்தார், இந்திய கியூப உறவுகள் தொடரவேண்டும் என்றார்,
இலங்கைக்கு சென்று தேயிலை தோட்ட தமிழர்களை சந்தித்தார்.உலகிலே மலையக தமிழர்களையும் மனிதர்களாக மதித்து சந்தித்த ஒரே தலைவர் இன்றுவரை அவர் ஒருவர்தான்.
இப்படியாக உலகெல்லாம் கொண்டாடபட்ட அந்த சே, அமெரிக்காவிற்கு எப்படி எரிச்சலூட்டியிருப்பார். அமெரிக்க தலமை வேறுவிதமாக சிந்தித்தது, பக்கம் பக்கமாக அறிக்கைகள் மேலிடத்திற்கு அனுப்பபட்டன, அவை இப்படி சொன்னது.
உலகெங்காம் கடும் செல்வாக்கினை பெற்றுவரும் சே, இப்படியே விட்டால் தென் அமெரிக்க நாடுகளை இணைத்து சோவியத் ஒன்றியம் போல ஒன்றை எளிதாக அமைத்துவிடலாம்( சாத்தியம் இருந்தது), அதாவது மத உரிமைகளில் அவர் விட்டுகொடுத்தால் எல்லா கத்தோலிக்க நாடுகளும் இணைய தயார். ஒரு லெனினை,ஸ்டாலினை மண்டையில் போட்டு தள்ளாததன் விளைவு, நமக்கு நிரந்தர எதிரியினை உருவாக்கிவிட்டது.
சே உழைக்கும் மக்களால் கொண்டாடபடுகின்றார் என்றால், அதன் மறுஅர்த்தம் அமெரிக்கவிற்கு அவரின் வளர்ச்சி நல்லதே அல்ல.
அதற்காக சே வினை விமான நிலையத்தில் சுடமுடியாது, சே வின் பெரும் பலவீனம் அல்லது பெரும் பலம் எங்கு உரிமை போராட்டம் நடக்கின்றதோ அங்கு நிற்பது, சண்டையோடு சண்டையாக போட்டு தள்ள திட்டமிட்டது அமெரிக்கா.
சிஐஏ களத்தில் இறங்கிற்று, காஸ்ட்ரோ கடும் பாதுகாப்பில் கியூபாவில் வாழசொல்லியும் சொல்லாமல் கொள்ளாமல் பறந்தார் சே.
சிஐஏ கண்ணி வைத்த இடம் பொலிவியா, அங்கு சண்டையினை தீவிரபடுத்தினார்கள், வழக்கம்போல வந்து நின்றார் சே. சண்டை உச்சத்தை அடைந்தது.
அந்த மாலைபொழுதில் ஒரு ஆற்றைகடந்தார், அங்கு ஆடுமேய்த்துகொண்டிருந்த பெண்மணியினை பார்த்து பரிதாபபடு 50 பெசோ கொடுத்து நலம் விசாரித்து சென்றார், அப்பெண்மணி சி.ஐ.ஏ உளவாளி என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
அமெரிக்க படைகள் சுற்றிவளைத்தன, அக்கிராமத்தின் ஒரு பள்ளியில் சிறைவைக்கபட்டார், சுற்றிபார்த்து அவர் சொன்ன சொல் வரலாற்றில் நின்றது, “இது என்ன இடம்,பள்ளி கூடமா? இவ்வளவு அசுத்தமா?, நல்ல பள்ளிகூடங்கள் நாட்டின் பெரும் தேவையல்லவா”
சாகும்பொழுதும் எப்படி சிந்தித்திருக்கின்றார் பார்த்தீர்களா? இதுதான் சே.
விசாரித்து தீர்பளித்தால் சிக்கல் பெரிதாகும், உலகம் கொந்தளிக்கும் என கருதிய அமெரிக்கா அங்கேயே சுட்டுகொல்ல தீர்மானித்தது, நெஞ்சை நிமிர்த்தி இரு கைகளையும் விரித்து நின்றார் அவர், அன்று அவருக்கு வயது வெறும் 39.
எல்லை கடந்து வந்து தனது நாட்டிற்காய் போராடிய ஒப்பற்ற தலைவன் சே வின் மரணம் கியூப மக்களை மட்டுமல்ல, உலக மக்களையே சோக கடலில் ஆழ்த்தியது
அந்த சுட்டவீரன் சொன்னான், ,முகத்தில் தாடியோடு,கலைந்த முடியோடு அவர் கைவிரித்து நின்றகாட்சி சே வின் காட்சி அப்படியே இயேசுபிரானை கண்முன் நிறுத்திறு என சொல்லி பின்னர் அழுதான்.
அது நிதர்சனமான உண்மை, ஒடுகபட்டோருக்கு போராடிய இயேசுவின் வரிசையில் நிச்சயம் இந்த நாத்திக சே விற்கும் இடம் உண்டு.
ஒரு தேசத்தில் போராட சென்றபொழுது அவரிடம் கேட்டார்கள், “எங்களுக்காக நீங்கள் ஏன் போராடவேண்டும்? என்ன அவசியம்”
ஆஸ்மா நோயாளியான அவர், அன்று நோயின் அதிக தாக்கத்திலும் மெதுவாக சொன்னார் “அக்கிரமத்தினை கண்டு, விடுதலைக்காக போராடினால் நீ நிச்சய்மாக எனது நண்பன்”
இன்று அக்டோபர் 9 அவரின் நினைவு தினம்.
அவரை நினைவு கூற கம்யூனிஸ்டாகவோ அல்லது தென் அமெரிக்கனாகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை.
சக மனிதனை நேசிக்க தெரிந்த, உலகெல்லாம் சிதறி ஈழ தமிழரை போல அகதிகளாய் வாழும் , சிரியாவிலிருந்து, லிபியாவிலிருந்து,பர்மாவிலிருந்து பராரியாய் திரியும் மனிதர்களை பார்த்து ஒரு துளி கண்ணீர் விடும் மனம் போதும்.
மகான்களும், அவதாரங்களும் மட்டும் நிலையான அடையாளத்தை பெறுவதில்லை, மனிதனை மனிதனாக நேசிக்க தெரிந்த யாரையும் இந்த உலகம் மறக்காது.
அதில் சே என்றும் முதல் இடத்தில் இருப்பார்.
ஈழ மலையகத்தில் அவர் தன் கையினால் நட்டுவைத்த மரம் இன்றும் உண்டு, அது பெரிதாக வளர்ந்திருக்கும் அளவிற்கு இன்று அங்கு பிரச்சினைகளும் வளர்ந்திருக்கின்றன.
ஆனால் ஒன்றுமட்டும் உண்மை, பத்மநாபா மட்டும் சே வின் சம காலத்தில் ஈழத்தில் போராடியிருப்பாரென்றால், நிச்சயம் அவரோடு இணைந்து கொள்ள சே ஓடிவந்து முதல் ஆளாக நின்றிருப்பார்.
காரணம் இதுவரை வரலாறு கண்ட மனிதநேயமிக்க போராளிகளில் எல்லை கடந்து மனிதம் வாழட்டும் என போராடிய ஒரே போராளி சே மட்டுமே.
அவரிடம் தன்னலம் என்பதெல்லாம் இல்லை, அவர் மனதில் நிறைந்திருந்ததெல்லாம் மாணிட நேயம் மட்டுமே.
அவர் நிச்சயம் இரண்டாம் இயேசு கிறிஸ்து, அவரின் வாழ்வும் , போராட்டமும் அடுத்தவர் நலனுக்காக செத்த தியாகமும் அதைத்தான் சொல்கின்றது
அவ்வகையில் இந்த அக்டோபர் 9, இன்னொரு கருப்பு வெள்ளி வகை.
Image may contain: 1 person, smiling, beard

பா ராகவன்

பா ராகவன்

இன்றைய தமிழ் எழுத்தாளரில் நம்பர் 1 அவர்தான். கிரீடம் நிரந்தரமாக சூட்டியாயிற்று.
கண்ணுக்கு எட்டியவரையில் இன்னொருவன் அவர் இடத்தை நெருங்குவது இப்போதைக்கு சாத்தியமே இல்லை.
ஆழ்வாரும் , அடியார்களும் , கண்ணதாசனும், கொஞ்சம் ஸ்டீப் ஜாப்ஸும், அதிகம் நளனும் கலந்த அற்புத எழுத்தாளர் அவர்
பா ராகவன்
எம்பெருமானுக்கு இன்று பிறந்தநாள்
வாழ்த்துக்கள் தெய்வமே, பல்லாண்டு வாழ்க, இன்னும் பலநூல்கள் எழுத. எமக்கெல்லாம் உலகினை திறந்து காட்ட‌
உண்மையில் நல்ல இஸ்லாமிய தலைவனும், நல்ல கிறிஸ்தவனும் தமிழகத்தில் இருந்திருப்பான் ஆனால் அந்த “நிலமெல்லாம் ரத்தம்” எனும் 5000 ஆண்டுகால வரலாற்றை அற்புதமாக எழுதியற்தாக மணிமண்டபமே கட்டியிருப்பான்
தமிழகத்தில் அப்படி யாரும் இல்லை போல, போகட்டும்
சந்தணத்திற்கும், நட்சத்திரங்களுக்கும் விளம்பரம் தேவையில்லை.
எழுத்துக்கு தலைகீழ் திருப்பம் கொடுத்த தங்கமகனே, நீர் வாழ்க‌
வாழ்க நீ எம்மான், வாழிய வாழியவே

[ October 8, 2018 ]

Image may contain: 1 person, eyeglasses and closeup

இந்திய விமான படையின் 86ம் ஆண்டு விழா

இன்று இந்திய விமான படையின் 86ம் ஆண்டு விழா
வெள்ளையன் காலத்திலே 85 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கபட்டது நம் விமானபடை. அன்று இரண்டாம் உலகபோருக்காக வெள்ளையன் தொடங்கினான்
சுதந்திர இந்தியாவில் அதுவும் சீன போருக்கு பின் நம் விமானபடை வலுபடுத்தபட்டது.
இன்று மிக சிறந்த விமானபடை வரிசையில் இந்தியாவிற்கும் இடமுண்டு. கார்கில் போரில் இந்திய விமானபடையின் அபார நடவடிக்கையாலே வெற்றி கிட்டியது.
அதற்கு முந்தைய காலகட்டங்களின் பல போர்களில் இந்திய விமானபடையின் பங்களிப்பு பெரிது, பாகிஸ்தானுடனான எத்தனையோ போர்களில் அது சாதித்தது
இலங்கைக்கு அமைதி நடவடிக்கையாக உதவி பொருட்களுடன் பறந்து இலங்கையினை மிரட்டிய அந்த விமானபடை சாகசங்களை எல்லாம் மறக்க முடியாது
இந்திய விமானபடை இன்று வலுவானதாயினும் அது கடந்துவந்த பாதை சிக்கல் நிறைந்தது. ரஷ்ய உதவியுடன் பலபடுத்தபட்ட நம் விமானபடை பின் இன்று உலகின் மிக சிறந்த விமானங்களுடன் முதல் வரிசையில் இருக்கின்றது
இந்திய தயாரிப்பான ஆளில்லா தேஜஸ் ரக விமானங்களும் அதற்கு வலுசேர்க்கின்றன‌
மிக், ஜாகுவர், மிராஜ், சுகோய் என மிக நவீன ரக விமானத்துடன் , எம்7 ரக ஹெலிகாப்டர்களுடனும் ஆசியாவின் மிக கம்பீரமான விமான படையாக திகழ்கின்றது
அமெரிக்காவும் தன் எப் ரக விமானங்களை கொடுத்து வலுபடுத்தும் என சொல்கின்றார் டிரம்ப், வம்புக்கு போகாத ஆனால் வந்த சண்டையினை விடாத இந்திய விமானபடை மேல் அவருக்கும் அபிமானம் அதிகம்
உலகின் மிக சிறந்த விமானபடையினை வைத்திருக்கும் நாடு என்பதில் பெருமை கொள்வோம்
யுத்தகாலங்களில் இந்திய விமானிகள் செய்திருக்கும் தியாகமும் அர்பணிப்பும் கொஞ்சமல்ல‌
பிதாமகன் அர்ஜன் சிங்கிலிருந்து, பிடிபட்டு பாகிஸ்தான் ராவல்பிண்டி ஜெயிலில் சித்திரவதை அனுபவித்தது வரை வீரர்களின் தியாகம் பெரிது
அந்த தியாக வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி மிக கம்பீரமாக நமது விமானப்டை தன் தினத்தை கொண்டாடுகின்றது [ October 8, 2018 ]
அதற்கு வீரமிகுந்த‌ வாழ்த்துக்கள், எந்த சூழலிலும் இந்நாட்டின் பாதுகாப்பிற்கு எப்பொழுதும் தயார் என மிக விழிப்பாக காவல்காக்கும் விமான படைக்கு ராயல் சல்யூட்
வந்தே மாதரம்
No automatic alt text available.

பி.ஆர் பந்துலு

பி.ஆர் பந்துலு

அவர் கோலார் பக்கம் கர்நாடகாவில் பிறந்தவர், பேசா படங்கள் வந்தபொழுதே நடிக்க வந்தவர், பலருடன் பணி புணிபுரிந்தார், பின் சொந்தமாக கம்பெனி தொடங்கி தடுமாறி கொண்டிருந்தார்
ஓரளவு அவர் வெளிதெரிந்த காலங்களில்தான் சிவாஜி கணேசனின் பிரவேசம் நடந்தது. சிவாஜிக்கும் பந்துலுவிற்கும் அப்படி ஒரு சிநேகம் ஒட்டிகொண்டது
கத்துவார்கள், சண்டையிடுவார்கள் இருவரும் பேசாமல் முரண்டு பிடித்த காலங்களும் உண்டு. ஆனால் பிரியவில்லை
சிவாஜி மேல் மிக பிரியமும் உரிமையும் கொண்டிருந்தவர் பந்தலு
அப்பொழுதுதான் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன்,கர்ணன் போன்ற காவிய படங்கள் எல்லாம் வந்தன, இயக்கி தயாரித்தவர் பந்துலு
பராசக்திக்கு பின் சிவாஜி கடும் வேகத்தில் முன்னேறி கொண்டிருந்தார் அவரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கணேசன் தான் எல்லா தயாரிப்பாளர் படத்திலும் நடிக்குது என புலம்பிகொண்டிருந்தார் ராமசந்திரன் எனும் நடிகர்
சிவாஜிக்கு நடிக்க தெரியுமே தவிர அரசியல் தெரியாது, ஆனால் ராமசந்திரனுக்கு நடிக்க தெரியாதே தவிர யாரை எப்பொழுது பயன்படுத்த வேண்டும் , எப்பொழுது விரட்ட வேண்டும் , எதை எப்படி பிரிக்க வேண்டும் என்ற அரசியல் அத்துபடி
ஒருவரை கணித்துவிடுவதில் ராமசந்திரன் கெட்டிக்காரர்
அப்படித்தான் சின்னப்பா தேவரை கடைசி வரை சிவாஜியினை நெருங்கமுடியாமல் கட்டுபடுத்தி வைத்திருந்தார் ராமசந்திரன், இருவரும் ஒரே சாதி என்றாலும் சிவாஜி பக்கம் தேவரால் செல்ல முடியவில்லை
அப்படிபட்ட ராமசந்திரன் பந்துலுவிற்கும் ஸ்கெட்ச் போட்டார், எப்படி?
ஏதோ வருத்ததில் பந்துலுவும் சிவாஜியும் இருந்தபொழுது ராமசந்திரனுக்கு வாய்ப்பு கிடைத்தது
அது முரடன் முத்து தொடர்பான சர்ச்சை, சிவாஜிக்கு 100ம் படம் என அவர் சொல்லிகொண்டிருக்க, சிவாஜிக்கு முரடன் முத்துதான் 100ம் படம் , நடிகனுக்கு தன் பட கணக்கு தெரியாதா என பந்துலு சொல்லிவிட இருவரும் பிரிந்தனர்
கிட்டதட்ட இளையராஜா வைரமுத்து பிரிந்தது போன்ற நிலை அது
அந்த கட்டத்தில் ராமசந்திரன் புகுந்தார், யாரிடமும் வலிய செல்லாத ராமசந்திரன் பந்துலுவினை கட்டி பிடித்து அண்ணா என அலறினார்
இதில் சிவாஜி பந்துலு நட்பு முறிந்தது
ராமசந்திரனின் ஆயிரத்தில் ஒருவன் படங்கள் வர ஆரம்பித்தன, ராமசந்திரனின் கணக்கு தப்பவில்லை, ராமசந்திரன் வெற்றிபடிகளில் வேகமாக ஏறினார்
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தை பந்துலு இயக்கிகொண்டிருந்த பொழுது மரணம் அடைந்தார், அதற்கு ராமசந்திரனின் மேக் அப் காரணமாக இருக்கலாம் என நாமாக முடிவு செய்து கொண்டோம்
அந்த முகத்தை படம்பிடித்த அதிர்ச்சியில் பந்துலு உயிர் துறந்திருக்கலாம்
காரணம் இல்லாமல் இல்லை, சிவாஜியினை கட்டபொம்மனாக, வஉசியாக அச்சு அசலாக காட்டிய பந்துலு, ராமசந்திரனை சுந்தரபாண்டியனாக காட்ட முடியாமல் உயிர்விட்டிருக்கலாம்
“அடேய் ராமசந்திரா இது உனக்கு சரிவராத வேடம், சிவாஜிக்கு பொருந்த கூடிய வேடம் சண்டாளா..” என சொல்லமுடியா நிலையில் அவர் இதயம் மாரடைப்பால் நின்றிருக்கலாம்
இன்று பந்துலுவின் நினைவு நாள் [ October 8, 2018 ]
எதை எல்லாமோ கெடுத்த ராமசந்திரன், யார் வாழ்வினை எல்லாமோ முடித்த ராமசந்திரன் பந்துலுவினையும் முடிக்க‌ தவறவில்லை
Image may contain: 1 person, closeup

பட்டுகோட்டை கல்யாண சுந்தரம்

எல்லா துறையிலும் பிறவியிலே திறமையானவர்கள் உண்டு, அப்படி அல்லாமல் கஷ்டபட்டு தன்னை உருவாக்கியவர்கள் உண்டு , தமிழக கவிஞர்களில் பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் முதல் வகை, பிறவி கவிஞன்
மிக சிறுவயதிலே உலகத்தை கவனித்தவன் அப்பொழுதே கம்யூனிச பொதுவுடமை கருத்துக்கள் அவனை பாதித்தது, தமிழோடும் பொதுவுடைமை தத்துவத்தோடும் வளர்ந்தார்
19 வயதிற்குள் 16 தொழில்களை செய்திருந்தார் விவசாயம் முதல் நடனம் வரை அதில் உண்டு, மீன்பிடியும் உண்டு அவர் எல்லா மக்களின் துயரமும் அறிந்தது அக்காலத்தில்தான், அதுதான் பின் பாடலாய் ஒலித்தது
பாரதிதாசனிடம் தமிழ்கற்றார், அப்படியே கவிஞராய் மலர்ந்தார்
அவர் பாட்டெழுதியது வெறும் 3.5 வருடம் மட்டுமே, அந்த மிககுறுகிய காலத்தில் காலத்திற்கும் நிற்கும் பாடல்களை கொடுத்து சென்றார்
உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையா தாஸ் போன்றோரின் ஒரு மாதிரி லாகிரியில் ஒலித்துகொண்டிருந்த தமிழ்பாடல்களுக்கு சுருக்கென்று எளிய தமிழில் திருப்பம் கொடுத்தவர் இவர்
பின்னாளில் இவர் போட்ட வழியில்தான் கண்ணதாசனும் , வாலியும் எளிய தமிழில் பயணித்தார்கள்
3.5 வருடத்திற்குள் அவன் எழுதிய பாடல்கள் 99% எளிய மக்களின் துயரம் பற்றியவை, விவசாயிகளுக்கும், ஆலை தொழிலார்களின் குரலாகவும் அவன் பாடியது
அவனளவு ஏழைகளுக்காக பாடிய கவிஞன் இன்றுவரை தமிழகத்தில் இல்லை, இனி வரப்போவதுமில்ல‌
விவசாயிகளின் வரிகளாக‌
“காடு வெளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம்”
உழைத்து வாழ்வோம் எனும் நோக்கில்
“உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது – மனம்
கீழும் மேலும் புரளாது”
மூட நம்பிக்கைக்காக
“செம்பும் கல்லும் தெய்வமென்று
நம்புவோர்கள் பித்தரென்று
சித்தர்கள் உரைத்த மொழி மெய்தானே?
சிற்பிகள் செதுக்கி வைத்த
சித்திரச் சிலைகளுக்குள்
தேவி வந்திருப்பதுவும் பொய்தானே?”
சிறுவர்களை தட்டி எழுப்பும் விதமாக‌
“வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது
சொல்லிவைப்பாங்க – உன்
வீரத்தைக் கொளுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க…”
பொதுவுடமை தத்துவத்திற்காக‌
“தனிவுடமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா! நீ
தொண்டு செய்யடா!
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா!– எல்லாம்
பழைய பொய்யடா!”
பெண் விடுதலைக்காக‌
“தன் கணவனை இழந்தவள் கட்டழகியானாலும்
கடைசியில் சாகமட்டும் உரிமையுண்டு – இதில்
கதைகளும் கட்டிவிடும் ஊர் திரண்டு!”
பித்தலாட்ட கும்பலுக்காக‌
“தன் ரேகை தெரியாத பொய்ரேகை காரரிடம்
கைரேகை பார்க்க வரும் முறையாலும் – அவன்
கண்டது போல் சொல்லுவதை ஆறறிவில்
நம்பிவிடும் வகையிலும் ஓரறிவு அவுட்டு
அறிவுக் கதவை சரியாய் திறந்தால்
பிறவிக் குருடனும் கண் பெறுவான்.”
தொழிலாளிக்காக‌
“பட்டினிக்கும் அஞ்சிடோம்!
நெஞ்சினைப் பிளந்த போதும்
நீதி கேட்க அஞ்சிடோம்!
நேர்மையற்ற பேர்களின்
கால்களை வணங்கிடோம்!.”
“தேனாறு பாயுது! செங்கதிர் சாயுது!
ஆனாலும் மக்கள் வயிறு காயுது”
கலை என்பதற்கு மாவீரன் லெனினின் வரிகள் இப்படி இருக்கும்,
“கலை மக்களுக்குச் சொந்தமானது. அதன் வேர் வஞ்சிக்கப்பட்ட பெரும்பாலான உழைப்பாளி மக்களுக்கு இடையில் படர்ந்திருக்க வேண்டும். அது அவர்களை ஒன்றுபடுத்தி அவர் தம் உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் நிறைவேறச் செய்வதாய், அவர் தம் கலையுணர்வைத் தூண்டுவதாய் அமைதல் வேண்டும்.”
இந்த வரிகளுக்கு வாழ்வாய் வாழ்ந்தவன் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
பெரும் புகழ்பெற்று அவன் சாகும்பொழுது வயது வெறும் 28
அந்த 28 வயதில் அவன் கண்ட மரணம்தான் கண்ணதாசனுக்கும், வாலிக்கும் வழிவிட்டது. அல்லாவிட்டால் அந்த சிம்மாசனம் கடைசி வரை அவனுக்குத்தான் இருந்திருக்கும்,விதி அது அல்ல‌
மிக சொற்பமாக பெண்கள், காதல் பாடலும் எழுதியிருந்தான், “வாராயோ வெண்ணிலாவே” அதில் அபாரம், அதனை விட அழகான பாடல் ஒன்று உண்டு, இன்றுவரை அந்த வரிகள் உயர்ந்த
இடத்திலே இருக்கின்றன, எந்த கவிஞனின் வரிகளும் அதை எட்டவில்லை
“ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ”
(குஷ்பூ படத்தினை பார்க்கும் பொழுதெல்லாம் , இந்த வரிகள்தான் காதில் ஒலிக்கும், அவருக்காகவே எழுதபட்ட வரிகள் என்பது எம் எண்ணம்..)
எளிய தமிழால், எளிய மக்களுக்கு பாடல் சொன்ன தமிழ்கவிஞனின் நினைவுநாள் இன்று
மறக்கமுடியாத கவிஞன் அவர், பாட்டுகோட்டையினை கட்டியாண்ட கவிராஜன் அவன்..
அவனுக்கு ஆழ்ந்த அஞ்சலிலிகள் [ October 8, 2018 ]
Image may contain: 1 person, selfie and closeup