கில்லாடி கிளைவ் 12

கில்லாடி கிளைவ் 12

உண்மையில் இந்திய வரலாற்றை மாற்றியவன் யாரென்றால் அந்த மீர்ஜாபர், மிக பெரும் பேராசைக்காரனும் அதே நேரத்தில் மகா தந்திரகாரனுமாகவும் இருந்தான்
நவாபின் படையில் இருந்து கொண்டே கிளைவுடன் தொடர்பில் இருந்து, பின் யுத்தத்தில் கிளைவுடன் வருவதாக உறுதியும் சொல்லிவிட்டு கடைசியில் படையினை கலைத்துவிட்டு இருவருக்கும் பொதுவாக இருந்து கொண்டான்
நவாபினை தப்பி ஓடும்படி திட்டமிட்டு கொடுத்தவனும் அவனே, கிளைவிடம் சென்று தன்னை மன்னிக்கும்படி நின்றதும் அவனே
கிட்டதட்ட தமிழகத்து பன்னீர் செல்வத்தின் சாயல் அவனிடம் இருந்தது
மீர் ஜாபர் துரோகி என தெரிந்தாலும் வெளிகாட்டவில்லை கிளைவ், அவனுக்கு தேவை வங்கத்தில் தனக்கு தலையாட்டும் நவாப், இவனை நவாப்பாக்கிவிட்டு அவன் போக்கில் இருந்தாலும் மனம் நம்பவில்லை
அந்த ஓர்மிசென்ட் என்றொருவனை பார்த்தோமே நினைவிருக்கின்றதா? அவன் தன் பத்திரத்தோடு சபைக்கு வந்தான்
எந்த பத்திரம்?
வெள்ளை பத்திரம் ஒன்றை கிளைவ் மோசடியாகவும், சிகப்பு பத்திரம் ஒன்றை ஓர்மிசென்டிற்காகவும் எழுதினான் என பாத்தோமல்லவா? அந்த பத்திரத்தோடு வந்தான்
சபை கூடிற்று, தன் சிகப்பு பத்திரத்தை எடுத்து வாசித்தான் அதில் 3 லட்சம் பொன்னும் இன்னும் பல சலுகைகளும் இருப்பதாக எழுதபட்டு வாட்சன் முதலானோர் கையெழுத்தும் இருப்பதாக வாசித்துவிட்டு எப்பொழுது தரபோகின்றீர்கள் என்றான்
தர்க்கம் நீண்டது
“என்ன சொல்கின்றீர் ஓர்மிசென்ட், நாங்கள் ஒப்புகொண்டோமா?
ஆம் நீங்களே ஒப்புகொண்டு எல்லோரும் கையெழுத்து போட்டிருக்கின்றீர்கள் பாருங்கள்
இல்லை நாங்கள் சிகப்பு பத்திரத்தில் கையெழுத்து போடவே இல்லை, வெள்ளை பத்திரத்தில்தான் போட்டோம்
இல்லை இது மோசடி
எது மோசடி, நானும் சபையாரும் வாட்சனும் கையெழுத்திட்ட வெள்ளை பத்திரம் இதோ, 5 ஆயிரம் பொன்னுக்குத்தான் எழுதியிருக்கின்றொம் நீர் பொய் பத்திரம் வைத்திருக்கின்றீர்”
ஓர்மிசென்டுக்கு தலை சுற்றியது, ஆம் அப்படி ஒரு பத்திரம் தயாரித்தது கிளைவ் தவிர யாருக்க்கும் தெரியாது, வாட்சனே வெள்ளையில்தான் கையெழுத்திட்டார்
வசமாக தான் ஏமாற்றபட்டதை உணர்ந்த ஓர்மிசென்ட் அழுதான் புரண்டான்
கிளைவ் மெதுவாக சொன்னான், நீ வீரனென்றால் வீரத்தில் சந்திதிருப்பேன் நீ துரோகி, துரோகத்தால் சாய்த்தேன்
இதன் பின் ஓர்மிசெண் கிட்டதட்ட பைத்தியம் நிலைக்கு சென்றான் என்கின்றது வரலாறு, அவனும் என்ன செய்யமுடியும்? சதி ஆலோசனையினை சொல்லிவிடுவேன் என மிரட்டித்தான் காரியம் சாதிக்க எண்ணினான் , இனி என்ன செய்ய முடியும்? நவாபையே காணவில்லை
எண்ணி எண்ணி அழுது செத்தும் போனான் ஓர்மிசென்ட்
நிச்சயம் கிளைவ் செய்தது துரோகம் சந்தேகமில்லை ஆனால் துரோகிகளிடம் வாளா வீசமுடியும்? துரோகத்தால்தான் சரிக்க முடியும்
கிளைவிற்கு இந்தியர் மேல் மரியாதை ஏன் இல்லை என்றால் இம்மாதிரி ஆட்களால்தான்
பிரிட்டானியரின் அரச விசுவாசம் பிரசித்திபெற்றது, இன்றுவரை பிரிட்டன் அரச குடும்பத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் அபிமானம் அப்படி
அரச விசுவாசம் என்பது ரத்தத்தில் கலந்தது, பின்னாளில் அகண்ட இந்தியாவினையே விக்டோரியா ராணி கேட்டவுடன் கொடுத்தது கம்பெனி
ஆனால் இந்தியர் நிலை?
மன்னனை சுற்றி ஒருவனும் விசுவாசமாக இந்தியாவில் இல்லை, பூராவும் சுயநலம். எங்கிருந்தோ வந்த தனக்காக வெறும் அதிகாரத்திற்காக அரசனையே காட்டி கொடுக்க இந்தியர் ரெடி
இதில்தான் அதுவும் மீர் ஜாபர், இந்த ஓர்மிசென்ட் போன்றோரை பார்த்தபின்புதான் நெல்லில் இருந்து உமி நீங்குவது போல் கிளைவின் இந்தியர் மீதான அபிமானம் கீழானது
இந்தியர் பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் எந்த இழி செயலையும் செய்வர் என மனமார நம்பினான், இந்திய ஆட்சியாளர்களும் அதை நிரூபித்தனர்
சிராஜின் கொடுங்கால் ஆட்சியே தான் இங்குகாலூன்ற வாய்பாயிற்று என கருதிய கிளைவ், நல்லாட்சி கொடுக்க தொடங்கினான்
வியாபாரமோ ஆட்சியோ ஆங்கிலேயர் நேர்மையானவர்கள், நாணயமானவர்கள் யாரையும் ஏமாற்றமாட்டார்கள் என்ற எண்ணம் மக்களிடம் ஏற்பட கடும்பாடுபட்டான்
அது வேலையும் செய்தது, வெள்ளையர் வங்க மக்களின் அனுதாபத்தை உடனே பெற்றனர்
மக்களுக்கு வசதி பெருக பெருக வெள்ளையர்களை அவர்கள் எதிரிகளாக கருதவில்லை கிளைவ் எதிர்பார்த்தது இதுதான்
இந்நேரம் இந்த மீர்ஜாபரின் நரிமூளை வேறுவிதமாக சிந்தித்தது
எப்படியும் இனி வெள்ளையர் நம்பக்கம் ஆனால் அடிபட்ட பாம்பான உத்தவ்லா சும்மா இருக்கமாட்டார், நிச்சயம் வந்து தன்னை நொறுக்குவார் என்ன செய்யலாம்?
தன் ரகசிய படையினை நவாபிடம் அனுப்பினான், அவர்கள் செய்தி சொன்னார்கள்
நவாபே மீர்ஜாபர் உங்கள் விசுவாசி, இப்பொழுதும் நாட்டை உங்களிடம் ஒப்படைக்க துடிக்கின்றார். அவர் ராஜதந்திரமாக வெளளையரிடம் நடிக்கின்றார், இப்பொழுது நீர் வரவேண்டும் வந்து அரியணையில் அமரவேண்டும் அதன் பின் கிளைவிற்கு இருக்கின்றது வேட்டு
நவாபும் அதை நம்பி சென்றான், மீர்ஜாபரை நம்பி சென்றான்
நம்பி வந்தவனை தன் வாளால் வெட்டி கொன்றான் மீர்ஜாபர்
அப்படி ஒரு மிக தந்திரமான மனமும் மூர்க்கமான குணமும் அவனிடம் இருந்திருக்கின்றது
கிளைவ் துடித்து போனான், நிச்சயம் சிராஜ் உத்தவ்லாவினை கொல்வதை அவன் விரும்பவில்லை. மீர் ஜாபரின் கீழ்தரமான புத்தி அவனுக்கு கடும் எச்சரிக்கையினை கொடுத்தது
என்றாவது ஒரு நாள் மீர்ஜாபர் தனக்கு எதிராக திரும்புவான் அதற்கு தயாராக இருக்கவேண்டும் என மகா எச்சரிக்கையாக இருந்தான் கிளைவ்
மீர்ஜாபரோ எந்த புள்ளியில் வெள்ளையரை விரட்டலாம் என திட்டமிட்டு கொண்டிருந்தான்
வீரத்தில் மட்டுமல்ல சாதுர்ய்யத்திலும் தேர்ந்தவனான கிளைவ் அதற்கான சந்தர்ப்பத்தை பார்த்துகொண்டிருந்தான்
அது டச்சுகாரர் வடிவில் வந்தது [ October 11, 2018 ]
(தொடரும்)
Image may contain: one or more people and text

நவராத்திரி திருவிழா

நவராத்திரி திருவிழா கொலுவுடன் தொடங்கியிருக்கின்றது, இந்து நண்பர்களுக்கு அடுத்த 9 நாட்களும் முக்கியமான நாட்கள், மகா சிரத்தையாக ஒன்பது நாட்களும் நோன்பிருப்பார்கள், பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாட்டத்தோடு நிறைவு பெறும்.
ஒன்பது நாட்கள் நோன்புடன் பிரார்த்தித்து, பத்தாம் நாள் ஆசியோடு நிறைவு செய்வது என்பது இந்து மதத்தில் மட்டுமல்ல, பழமையான ஆசிய,ஐரோப்பிய மதங்களிலும் உண்டு, கலாச்சாரங்களிலும் உண்டு.
அவ்வளவு ஏன் ரோமன் கத்தோலிக்க மதத்தில் ஒரு கத்தோலிக்க ஆலய திருவிழாவோ அல்லது சிறப்பு ஜெபங்களோ 9 நாள் தொடர்ந்து பிரார்த்தித்து பத்தாம் நாள் நிறைவு செய்யவேண்டும் என்பது சட்டம்.
அதனை ஆங்கிலத்திலும், லத்தீனிலும் “நவனா” என்றே அழைப்பார்கள், லத்தீனிலும் ஒன்பது என்பதற்கு நவம் என்றே பெயர். தமிழில் நவநாள்.
கத்தோலிக்கத்தில் கன்னிமேரிக்கான வழிபாடு இன்றும் நவனோ என்றே அழைக்கபடுகின்றது
அதனடிப்படையில் அனைத்து கத்தோலிக்க திருவிழாக்களை பாருங்கள் 9 நாள் ஜெபம், பத்தாம் நாள் கிடா வெட்டி கொண்டாட்டம் + தேர் பவனி என நிறைவு செய்வது, என இதே நவராத்திரியை “நவநாள்” என கொண்டாடுவார்கள்.
(11ம் நாள் திருவிழா செலவு கணக்கு பார்பார்கள்)
பிரிவினை கிறிஸ்தவர்கள் வேறுமாதிரி, ஆளாளுக்கு ஒரு போதனை, ஆளாளுக்கு ஒரு கொள்கைகளும் பத்திரிகைகளும், இப்பொழுது ஆளாளுக்கு டி.விகள், அதிரடியான மிரட்டல்கள் கூடவே சாபங்கள், அவர்கள் வேறு மாதிரி, மாட்டிகொண்டால் அவ்வளவுதான்,, பிராண்டி எடுத்துவிடுவார்கள்.
இந்தியாவில் தீபாவளி போலவே ஒட்டுமொத்த இந்திய மக்களும் கொண்டாடும் திருவிழா இந்த பூசை திருவிழா, வங்காளத்தில் துர்கா பூஜை, வட இந்தியாவில் காளி பூஜை கூடவே ராவண வதமான ராம்லீலா தென்னிந்தியாவில் தசரா, முத்தாய்ப்பாக ஆயுதபூஜை என கொண்டாடி மகிழும் வேளை இது.
ஒன்பது நாளும் விரதம் இருக்கவேண்டும், விரதம் இருக்கிறேன் என உண்ணாமல் இருக்கிறேன் அதனால் உறங்குகிறேன் என்றால் பராசக்திக்கே பனிமலை உருகும் அளவு கோபம் வருமல்லவா?
விரதம் என்றால் தியானிக்க வேண்டும், உணவை மறந்து இறைசக்தியை நோக்கி மனம் திருப்ப வேண்டும், ஒருவேளை கண்ணோ, மனமோ எங்காவது தறிகெட்டாலும் கூட அதனை கட்டுபடுத்தி இழுத்துவர சில காட்சிகள் வேண்டும், விரத காலம் எனும் நினைவு மனதில் இருந்துகொண்டே இருக்கேவேண்டும், அந்த உணர்வினை ஏற்படுத்தவே அமைக்கபட்டது தான் கொலு அலங்காரம்.
கொலு என்றால் அழகோடு வீற்றிருத்தல் என பொருள், கொலு மேடை அமைப்பதற்கென்றே முன்னோர் அழகான விதிகளை வகுத்தனர், 7 அல்லது 9 அடுக்கில் அமைக்கலாம்,
முதல் அடுக்கில் ஒர் உயிர் அதாவது புல்,தாவர வடிவம், 2ம் அடுக்கில் சங்கு போன்ற ஈருயிர்களின் வடிவம், 3ம் படியில் கரையான் போன்ற மூவுயிர் உருவம்.
4ம் படியில் வண்டு நாலுயிர் உருவம், 5ம் அடுக்கில் விலங்கு,பறவை போன்ற ஐஉயிர் வடிவங்களும், 6ம் அடுக்கில் மனிதன் அதாவது நல்ல மனிதர்கள் அல்லது தலைவர்கள் சிலை என வைத்து
7ம் அடுக்கில் மனிதனிலிருந்து தெய்வ நிலைக்கு சென்ற மகான்கள்,ரிஷிகள் உருவமும், 8ம் அடுக்கில் தேவர்கள்,தேவதைகளும், 9ம் அடுக்கில் மூல கடவுளும் கொண்டு அமைக்கவேண்டும்,
7ம் அடுக்கின் சிலைகள் பஞ்சபூதங்களில் ஒன்றான மணலால் மட்டும் அமைக்கபடவேண்டும் என்பது சாஸ்திர விதி, காரணம் மண்ணில் இருந்து வந்தவன் மனிதன்.
9 நாளும் விரத காலங்களில் இதனை பார்க்கும் பொழுதெல்லாம் மனிதனுக்கு இறைவனின் தத்துவத்தில் தனது நிலை புரியும், தானும் மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும், மனித நிலையிலிருந்து இறங்கவே கூடாது என்ற வைராக்கியம் உருவாகும், பின்பற்றினால் மனிதன் மனிதனாக இருப்பான், அல்லது தெய்வமாவான்.
மனிதன் அப்படி ஆவானோ இல்லையோ, ஒவ்வொரு வீட்டிலும் வைக்கும் கொலுவிற்கும், கூட்டு பிரார்த்தனை மற்றும் பாடல்களின் மூலம் ஒரு சமூக பிணைப்பும் அதிகமாகும்.
இதுதான் கொலுவின் தத்துவம், நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் சக்தி தேவிக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் பிரதான பூசைகள் நடைபெறும், சர்க்கரை பொங்கல்,சுண்டல் என மாலைபொழுது களைகட்டும்.
மிக மிக சுகமான காலங்கள், மகிழ்வான தருணங்கள், ஒவ்வொரு நாளுக்கும் ஒரு இறை தத்துவங்கள், என இந்து நண்பர்கள் கடவுளை நினைத்து உருகும் காலமிது.
சில விஷயங்கள் மதம் சார்ந்தவை, விஜய தசமி பாரம்பரிய நம்பிக்கை சார்ந்தது, ஆனால் இன்னும் சில விஷயங்கள் மத எல்லைகளையும் தாண்டி எல்லா மக்களுக்கும் போதனைகளை கொடுப்பது.
அதன் சிறப்புகள் மிக உயரமானது, எல்லா வகையிலும் இறைவனை போற்றி நிற்பது, வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் இறைவனை காண்பது எப்படி என்பதை பாரதம் உலகிற்கு சொன்ன பெரும் போதனையின் அடையாளங்கள் அவை.
[ October 11, 2018 ]
No automatic alt text available.
========================================================================
ஊரெல்லாம் கொலு வைத்திருக்கின்றார்கள், தமிழ் சினிமாவிலும் ஏகபட்ட கொலு காட்சிகள் உண்டு எனினும் கமலஹாசனின் மன்மத லீலை கொலு காட்சி மறக்க முடியாதது
அதில் கமலஹாசனுக்கு ஒரு மாதிரியான கேரக்டர், ஒரு மாதிரியான என்றால் “உரலுக்கு சேலை கட்டினாலும் உற்று பார்ப்பான் பரந்தாமன்” எனும் கலைஞரின் வசனத்திற்கு பொருந்தும் பாத்திரம்
அப்படிபட்ட கமலஹாசன் வீட்டில் கொலுநடக்கும், அதற்கு ஒரு விலைமாதுவும் வருவார், கூட்டத்தில் எல்லோரும் சிரிக்க கோபபட்ட விலைமாது, “உங்கள் எல்லோரின் கணவனும் என்னோடு பழக்கம் ஒருவரை தவிர..” என சொல்லிவிட்டு சென்றுவிடுவார்
எல்லா பெண்களும் தலையினை பிய்த்து கொண்டிருக்க, வீடு திரும்பிய கமலஹாசனிடம் மனைவி கேட்பார், “ஏங்க அந்த பெண் சொன்னாள் இந்த தெருவில் எல்லா ஆம்பிளையும் அவளோட பழக்கமாம், ஒரே ஒருத்தன் மட்டும் இல்லையாம்”
உடனே கமலஹாசன் சொல்வார், “அப்படியா? அந்த முக்குவீட்டுகாரனா இருக்கும், பெரிய கஞ்சப்பய”
அலறிஅடித்தபடி மனைவி அது நீங்கள் இல்லையா என கேட்க “அது..அந்த உத்தமன் நான் தான், நானே தான், நான் மட்டும்தான்” என சொல்லிகொண்டே இருப்பார் கமலஹாசன்
இப்பொழுது மய்யம் என அடிக்கடி கமலஹாசன்” நானே உத்தமன், நான் ஒருவனே தமிழ்நாட்டினை காப்பாற்ற போகின்றேன்” என பேசும் பொழுது இந்த காட்சிதான் நினைவுக்கு வரும்
அந்த காமெடியினைத்தான் அவர் மய்யம் மேடையிலும் செய்கின்றார்
காட்சியில் அந்த விலைமாது எல்லோர் கணவரும் என்னோடு பழக்கம் ஒரே ஒருவரை தவிர என சொல்லிவிட்டு சென்றவுடன் எல்லா பெண்களும் திகைத்து நிற்பார்கள் அல்லவா?
இந்த நிர்மலா தேவியினை பார்த்தாலும் அந்த காட்சி நினைவுக்கு வருகின்றது, ஆளாளுக்கு எதிர்கட்சி ஆளும்கட்சி, ஆளுநர், கல்வி அதிகாரிகள் என நிர்மலா தேவி என்றாலே அலறி கொண்டு கனத்த மவுனம் சாதிக்கின்றனர்
அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஒரு குரலையும் தமிழகத்தில் கேட்க முடியாது. அப்படி ஆளாளுக்கு அஞ்சி நிற்கின்றார்கள் [ October 11, 2018 ]
Image may contain: one or more people and people standing

சிதறல்கள்

அமெரிக்காவின் வர்த்தகப் போரை இணைந்து எதிர்கொள்ள இந்தியாவுக்கு சீனா அழைப்பு

1950களிலே நேரு இந்தோ சீனா பாய் பாய் என்றார், அதாவது ஆசியாவின் இருபெரும் சகோதர சக்திகள் ஐரொபிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிற்கவேண்டும் என்றார்

சீனாவிற்கு ஐ.நாவில் நிரந்தர இடம் வாங்கி கொடுத்ததில் நேருவின் பங்கு மகத்தானது

ஆனால் நன்றிகெட்ட சீனா நயவஞ்சமாக 1962ல் முதுகில் குத்தியது, படையெடுத்து வந்து வஞ்சித்தது

1970களிலே நிக்சனை சந்தித்து அமெரிக்க பக்கம் சாய்ந்தார் மாவோ, சோவியத்தும் இந்தியாவும் வருந்தி நின்றன‌

அமெரிக்காவுடன் சேர்ந்தபின்பே அசுரவேகத்தில் வளர்ந்தார்கள், இன்று அவர்களுக்குள் இடிக்கின்றது

சீனாவினை நம்ப யாரும் இப்பொழுது தயாராக இல்லை, பாகிஸ்தானை தவிர இப்பொழுது அவர்களுக்கு நண்பர்கள் இல்லை

இன்று இவர்களுக்காக இந்தியா உடன் செல்ல வேண்டுமாம், ஒரு மண்ணும் வரமுடியாது , போங்கடா நன்றிகெட்ட சப்பை மூக்கர்களா

[ October 11, 2018 ]

============================================================================

தமிழகத்தில் தொழில் தொடங்கத் தேவையான வசதிகள் செய்து தரப்படும்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

யாருக்கு குட்கா வியாபாரிகளுக்கா? [ October 11, 2018 ]

============================================================================

ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது – பிரான்ஸ் பத்திரிகையின் தகவலால் மீண்டும் சர்ச்சை

அதுவும் நிர்மலா சீத்தாராமன் பிரான்ஸில் இருக்கும்பொழுது இந்த செய்தி வந்திருப்பதுதான் இந்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சி

மத்திய அரசு வெளிவரமுடியா சர்ச்சையில் சிக்கிவிட்டது, பிரான்ஸ் இதை பல இடங்களில் அழுத்தமாக சொல்லிகொண்டே இருக்கின்றது

ரபேல் தலைவலியினை தீர்க்க மறுபடி ராமர் கோவிலை கிளறிவிடும் பெரும் தந்திரத்தில் பாஜக இருக்கலாம், பிரவீன் தொகாடியாவின் பேச்சுக்கள் அப்படித்தான் இருக்கின்றன‌

இந்த வருடம் டிசம்பர் 6 வழக்கமானதாக இருக்காது எனும் அச்சம் இப்பொழுதே மேலோங்குகின்றது [ October 11, 2018 ]

============================================================================

MG ராமசந்திரன் தனிகட்சி தொடங்கியபின் கலைஞர் ஒரு சட்டம் கொண்டுவந்தார், மிக சிறப்புவாய்ந்த சட்டம் அது

பொதுவாழ்வில் இருப்போர் தங்கள் சொத்து கணக்கை வருடம் ஒருமுறை தாக்கல் செய்ய வேண்டும் என்ற சட்டம் அது, சில காலம் அது நடைமுறைபடுத்தபட்டது

கலைஞரின் மகத்தான சாதனை அது, அவர் தன் கரங்கள் சுத்தமானது என நிரூபித்திருந்தார்

பின் மிசாவில் அவர் அரசு கலைக்கபட்டது, 1977ல் ராமசந்திரன் அரியணை ஏறினார்

அவர் செய்த முதல் வேலை அந்த சட்டத்தை குப்பையில் எறிந்தது

ஆம் கணக்கு கேட்டு கட்சி தொடங்கிய ராமசந்திரன் ஆட்சிக்கு வந்தவுடன் கணக்கு காட்டும் சட்டத்தை நீக்கியே விட்டார்

அதுதான் புரட்சி

============================================================================

 

நேற்றைய ராமசந்திரன் பதிவில் ஒருவரி விடுபட்டுவிட்டது

ராமசந்திரன் தனிகட்சி தொடங்கியபின் கலைஞர் ஒரு சட்டம் கொண்டுவந்தார், மிக சிறப்புவாய்ந்த சட்டம் அது

பொதுவாழ்வில் இருப்போர் தங்கள் சொத்து கணக்கை வருடம் ஒருமுறை தாக்கல் செய்ய வேண்டும் என்ற சட்டம் அது, சில காலம் அது நடைமுறைபடுத்தபட்டது

கலைஞரின் மகத்தான சாதனை அது, அவர் தன் கரங்கள் சுத்தமானது என நிரூபித்திருந்தார்

பின் மிசாவில் அவர் அரசு கலைக்கபட்டது, 1977ல் ராமசந்திரன் அரியணை ஏறினார்

அவர் செய்த முதல் வேலை அந்த சட்டத்தை குப்பையில் எறிந்தது

ஆம் கணக்கு கேட்டு கட்சி தொடங்கிய ராமசந்திரன் ஆட்சிக்கு வந்தவுடன் கணக்கு காட்டும் சட்டத்தை நீக்கியே விட்டார்

அதுதான் புரட்சி [ October 11, 2018 ]

==========================================================================

சின்மயி விவகாரத்தில் காலம் பதில் சொல்லும் என தன் மீதான களங்கத்தை அமைதியாக கடந்து செல்கின்றார் வைரமுத்து

நிதானமான வார்த்தைகள்

ஆனாலும் “என்னை பயன்படுத்தி வளர நினைத்தார்கள், வளர்ந்தார்கள். அக்காலத்தில் என் அவசியம் இருந்ததால் அன்று அமைதி காத்துவிட்டு இன்று நான் தேவை இல்லை என்பதால் இன்று பழிக்கின்றார்கள்

மொத்தத்தில் என்னை பயன்படுத்திவிட்டார்கள்” என கவிஞர் ஒரே போடாக போட்டிருந்தால் சின்மயி ராகம் பாட முடியும்?

கவிஞர்களுக்கு தைரியமும் வேண்டும் அய்யா.

“பத்தினிகளையும், குடும்ப பெண்களையும் நான் தொடுவதில்லை” என சொன்ன கண்ணதாசனும்,

“அவள் ஒன்றும் பத்தினியும் அல்ல நான் ஒன்றும் முனிவனும் அல்ல..” என சொன்ன அண்ணாவும்

அட அவ்வளவு ஏன் “எவன் காசிலேயும் ஓசி குடி குடிக்கல்ல, எவன் பாக்கெட்டில் இருந்தும் சிகெரெட் எடுத்து புகைக்கல்ல, எந்த பொண்ணையும் தேடி சென்று கற்பழிகல்ல அண்டர்ஸேண்ட்” என 1980களில் பத்திரிகையாளர்களிடம் சீறி நின்ற ரஜினியும் கண்களுக்குள் வந்து போகின்றார்கள்.

வைரமுத்து இவர்களிடம் இருந்து நிறைய கற்க வேண்டும்.

[ October 11, 2018 ]

Image may contain: 2 people
========================================================================

“அந்த சின்மயி வச்சி எவ்வளவு பாட்டு ரெக்கார்டு பண்ணிருக்கோம்..

இனி சான்ஸ் கொடுக்கலண்ணா நம்மளையும் கோர்த்துவிட்டுருமோ, ஏதோ நமக்குண்ணு ஒரு கவுரவம் இருக்கு

வெரி டெலிகேட் பொசிஷன்…”

[ October 11, 2018 ]
Image may contain: 1 person, closeup
============================================================================

“இந்த மணிசார் படத்துக்காக நாம கொஞ்சநாள் அமைதியா இருந்ததுல என்னலாமோ நடக்குது

வைரமுத்து எல்லாம் நம்ம லைன்ல கிராஸ் ஆகுற அளவு போயிட்டு . இதெல்லாம் நம்ம ஏரியா.

பாம்புன்னா புஸ்புஸ்னு சீறணும் , சிம்புண்ணா கிசுகிசு வந்துட்டே இருக்கணும்,

இனி விட கூடாது உடனே களம் இறங்கணும்,
இதோ வர்றேன்..”

[ October 11, 2018 ]
Image may contain: 1 person, beard
==========================================================================

ஆளுநர் சென்னாரெட்டி என்னை கையை பிடித்து இழுத்தார் என பகிரங்கமாக சொன்னவர் ஜெயலலிதா

தமிழகத்தில் “மீ டூ” கோஷத்தை அன்றே தொடங்கி வைத்தது அவர்தான்

அம்மையார் இல்லாவிட்டாலும் அவரை இந்த “மீ டூ” வில் சேர்க்க வேண்டும் என அந்த கோஷ்டியினை கேட்டு கொள்கின்றோம்

இந்த “மி டூ” கோஷம் ஜெயா சமாதியிலிருந்து தொடங்கினால் மிக சரியாக இருக்கும்

 [ October 11, 2018 ]
Image may contain: 2 people, people smiling, closeup
============================================================================

இந்திய பங்குசந்தை மிகபெரும் சரிவினை சந்தித்திருக்கின்றது, இது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவின் மிகபெரும் எதிரொலி

உலக அரங்கில் இந்தியா எடுக்கும் சில நிலைப்பாடுகள் இந்நாட்டில் சிக்கலை கொண்டுவரலாம் என முதலீட்டாளர்கள் அஞ்சுவதால் நடக்கும் விபரீதங்கள்

இந்திய பொருளாதாரம் கேள்விகுறியாவதின் தொடக்க புள்ளி இது

நிச்சயம் இது நல்ல அறிகுறி அல்ல, இந்திய பொருளாதாரம் படு மோசமான குழியில் விழுகின்றது என்பதே இதன் பொருள்

இப்பொழுதும் பாஜக கும்பலிடம் கேளுங்கள், என்ன சொல்வார்கள் தெரியுமா?

“அண்ணே இந்த ப.சிதம்பரம் சொத்து, கார்த்தி சிதம்பரம் சொத்து எல்லாம் மோடி முடக்கிட்டார்னே, அந்த படுபாவி பயலுக பங்கு சந்தைய கவுத்துட்டானுகண்ணே, அயோக்கிய காங்கிரஸ் பயலுகண்ணே..”  [ October 11, 2018 ]

============================================================================

ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விற்கப்படுகிறது- தமிழக அரசு முடிவு

பின்னே, அதை பார்க்க பார்க்க அதன் பின்னால் ஓடி புரண்டு விழுந்து உருண்டு வணங்கிய காலம் நினைவுக்கு வருமா இல்லையா?

வலிகொடுக்கும் நினைவுகளை கிளறும் எல்லாவற்றையும் தொலைத்துவிடுவதுதான் சரி [ October 11, 2018 ]

============================================================================

எம்ஜிஆர் சிகிச்சை விவரங்களை அப்பல்லோவிடம் கேட்கிறது ஆணையம் – ஜெயலலிதா மரண வழக்கில் திருப்பம்

அப்படியே இனி அமெரிக்க புரூக்ளின் மருத்துவமனையிலும் எம்ஜிஆர் சிகிச்சை பற்றி விசாரிப்பார்கள்

வி.என் ஜாணகி சாவிலும் மர்மம் உண்டா என்றெல்லாம் விசாரிப்பார்கள்

இன்னும் இந்திராவின் உடலை துளைத்த குண்டுகள், காந்தி நெஞ்சை துளைத்த தோட்டா வரை ஆறுமுகச்சாமி கமிஷன் விடாமல் கேட்டு தன் தீவிர விசாரணையினை மேற்கொள்ளும் [ October 11, 2018 ]

============================================================================

சின்மயின் கருத்தை கவனிக்க வேண்டும் என தமிழிசை ஆதரவு

யக்கோவ் உங்க தைரியம் சூப்பர், இப்படித்தான் பாதிக்கபட்ட பெண்ணுக்கு ஒரு பெண்ணாக நீங்கள் துணை நிற்க வேண்டும்

அப்படியே இந்த பேராசிரியை நிர்மலா தேவிக்கும் ஆதரவு தெரிவித்துவிடுவீர்கள் , அவருக்கும் நியாயம் பெற்று தருவீர்கள் என தமிழகம் எதிர்பார்க்கின்றது

செய்வீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா? [ October 11, 2018 ]

 

இந்திய அமைதிபடை

இதே அக்டோபர் 10ம் தேதிதான் 29 வருடங்களுக்கு முன்பு இந்திய அமைதிபடை புலிகள் மோதல் தொடங்கியது.

ஈழவரலாற்றில் முக்கியமான காலம் அது, புலிகள் ஈழதமிழரின் எதிர்காலத்தை,நிம்மதியினை ஒழிக்க தொடங்கிய நிகழ்வு அது

ஏதோ அமைதிபடை என்பது புதிதாக சென்றது அல்ல, முன்பே சென்றது, இது தெரியாமல் பலர் புலம்புவர்

அமைதிபடைக்கு முன்பே ஜேவிபி கிளர்ச்சியும் அதனை அடக்க இந்திய ராணுவம் கொழும்பிற்கு சென்றதும் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? தெரியாவிட்டால் விட்டுவிடலாம். அதாவது அன்றிலிருதே இன்னொரு மூன்றால் நாடு இலங்கையில் தலையிடுவதை இந்தியா அனுமதிப்பதில்லை.

வடமராட்சியில் புலிகள் வளைக்கபட்ட பின் , அன்றே கொள்ளிவைக்க ஜெயவர்த்தனே கிளம்பிய நிலையில்தான் ஐநா அனுமதியுமின்றி ராஜிவ்காந்தி உணவு வீசி, புலிகளால் தமிழரை காக்கமுடியாது என்ற நிலை வந்தபின்பே அமைதிபடை அனுப்பபட்டது

ஈழ தமிழ்மாநில அரசின் பாதுகாவலாக அது நிற்கும் என்றே அனுப்பபட்டது

ஈழ போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் இந்தியாவினை ஒதுக்கிதான் வைத்தார், போராளிகளுக்கு பயிற்சிகள் தொடங்கிய காலத்திலும் வேண்டா வெறுப்பாக இறுதியில் வந்து சம்பிரதாயத்திற்குதான் கலந்து கொண்டனர் புலிகள்.

மற்ற இயக்கத்திற்கு இந்தியா வழங்கும் பயிற்சி பற்றி உளவு பார்க்கவும் தாங்கள் பின் தங்கிவிட கூடாது என்ற உள்நோக்கமும் கொண்ட புலிகளின் தந்திர நிலை அது

அவ்வப்போது இந்தியாவுடன் மோதும் சூழ்நிலை வரலாம் என்று எதிர்பார்த்தேதான் இருந்தார்.

அமைதிபடை சென்று இறங்கியதும் எல்லா குழுக்களும் ஆயுதம் ஒப்படைக்க, புலிகளும் சிலவற்றினை ஒப்படைத்து சுதுமலை மேடையில் “இந்தியாவினை நம்பி ஆயுதங்களை ஒப்படைக்கின்றோம்” என பிரபாகரன் சொன்னவுடன் கூட்டம் மகிழ்ச்சியில் ஆர்பரித்தது,

ஆனால் பிரபாகரனின் முகம் சிலநொடி சட்டென இருண்டது,

அமைதிபடை காலம் அமைதியாகத்தான் தொடங்கியது, 17 புலிகளை சிங்களன் கைது செய்யும்போது அவர்களிடம் சயனைடு இல்லை, ஆனால் புலிகள் சென்று பார்த்துவிட்டு வந்தபின் சயனைடு வந்தது, கொஞ்சநேரத்தில் அவர்கள் சாக பிரச்சினை வெடித்தது, பழி இந்தியா மேல்.

அதன்பின் புலிகளின் வரிவசூல் ஒப்பந்தத்தால் பாதிப்படைய, தீலிபனின் உண்ணாவிரதம் தொடங்கியது, அவனை காப்பாற்ற புலிகள் ஒரு முயற்சியும் எடுக்கவில்லை, அவன் செத்ததும் அவன் உடலோடு மக்கள் முன் சென்று ஒரு உணர்ச்சி எழுச்சி உண்டாக்கினர்.

அதன்பின் அது போராக வெடித்தது, இந்தியபடை சுற்றுலா செல்வது போல் சென்றிருந்தது, அந்த இடங்களின் வரைபடம் கூட அவர்களிடம் இல்லை, புலிகள் தங்களுடன் மோதுவார்கள் என கனவிலும் நினைக்கவில்லை,

புரியாத புது இடத்தில் அது திணறியது. புலிகளின் தாக்குதல் அகோரமாக இருந்தது, இந்திய படைக்கு புலி எது? மக்கள் எது என தெரியவில்லை. தடுமாறியது.

உதாரணம் பனை உச்சியிலிருந்து ராணுவத்தை சுடுவார்கள், ஒரு வீட்டின் உள்ளிருந்து சுட்டுவிட்டு ஓடுவார்கள், ராணுவம் உள் செல்லும், விளக்கிற்காக சுவிட்சை போட்டால் குண்டு வெடிக்கும் இப்படி ஒரு வித்தியாசமான களம் அது.

மக்கள் யார், புலிகள் யார் என இந்தியபடைக்கு தெரியாது, மருத்துவமனையில் மக்களோடு நோயாளியாக படுத்திருக்கும் புலி, தெருவில் செல்லும் ராணுவம் மீது சுட்டுவிட்டு படுத்துகொள்ளும், ராணுவம் என்ன செய்யும்? ஒரே ஒரு முறை திருப்பி தாக்கியதில் மருத்துவமனை அழிந்தது, அதனை பெரும் செய்தியாக்கினர் புலிகள்.

மாலை மக்களை ஒன்றாக அமரவைத்து சில பாதுகாப்பு விஷயங்களை சொல்வார்கள் இந்திய ராணுவத்தார், நடு கூட்டத்திலிருந்து ஒரு புலி சுடும், திரும்ப மொத்த மக்களை கொல்லவா முடியும்? ராணுவம் திணறும்.

திண்ணையில் வெற்றிலை இடிக்கும் பாட்டி ராணுவம் வீட்டை கடந்ததும், முந்தானையில் இருக்கும் ரிமோட்டை அமுக்குவார், வாகனம் சிதறும். பள்ளி மாணவிகள் உள்ளாடைகளில் தோட்டா முதலான ஆயுதம் கடத்தபடும், எப்படி சோதிக்க?

சில மாணவிகள் செக்போஸ்டை கடக்கும்போது அசால்டாக புத்தக பையினை எறிவார்கள் அது வெடிக்கும், சோதனை மற்ற மாணவிகள் மீது நடக்கும், அதற்கும் இந்திய ராணுவம் கற்பழிக்கின்றது என செய்தி பரவும்.

ஒரு கட்டத்தில் தவறான தகவலை பரப்பவிட்டு 300 ராணுவத்தினரை மொத்தமாக கொன்று, அவர்கள் உடலை அம்மணமாக ஒப்படைத்தனர் புலிகள், சர்வதேச சட்டபடி அது ஒரு தேச அவமானம், இந்திய ராணுவ உச்சம் அவமானத்தால் தலைகுனிந்த நேரம் அது. அப்படி செய்திருக்க கூடாது.

எந்த நாடும் தன் நாட்டில் அந்நிய ராணுவம் இருக்க அனுமதிக்க்காது, உண்மையில் மோதி இருக்கவேண்டியது சிங்கள படை, ஆனால் தமிழ் மக்களும், இந்திய ராணுவமும் பாதுகாப்பில்லாமல் இருக்க மிக மகிழ்ச்சியாக இருந்தது சிங்கள இனம் மட்டுமே, புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து மகிழ்ந்தார் பிரேமதாச.

இதுதான் உலகின் 4ம் பெரும் ராணுவமான இந்திய ராணுவத்தை புலிகள் விரட்டிய வரலாறு, நேருக்கு நேர் எல்லாம் மோதவில்லை, இன்னொன்று இந்திய ராணுவம் அழிவுகளை குறித்து கவனமாக போராடிற்று, அப்படியும் பிரபாகரனை முடக்கிய சமயத்தில்தான் விபி சிங் படை மீட்டார்.

இதே தந்திரத்தை, அதாவது மக்களோடு மறைந்து தாக்கும் வித்தையினை 2009ல் சிங்களனிடம் காட்டிய புலிகள் மொத்தமாக வாங்கி கட்டி அழிந்தனர், யாரைபற்றியும் கவலைபடாத சிங்களம் மொத்தமாக அழித்தது.

பிரபாகரனின் உடல் கோவணத்துடன் கிடந்தது, அன்று 300 இந்திய ராணுவ வீரர் உடல்களை அம்மணமாக்கி கொடுத்த வினை, பின் அவருக்கே திரும்பியது. யுத்த களத்தில் ஒரு உச்சகட்ட அவமானம் அது. அதனால்தான் சிங்களன் அந்த படத்தினை திரும்ப திரும்ப காட்டினான்.

அந்த அமைதிபடையினை மட்டும் விரட்டியிருக்காவிட்டால், இன்று வடக்கு கிழக்கு இணைந்த ஈழ மாகாண முதல்வராக ஒரு தமிழன் இருப்பார், பின்புலத்தில் இந்தியா இருக்கும், இந்திய தளமும் அந்நாட்டில் தொடர்ந்து இருந்திருக்கும், ஈழ மக்கள் இவ்வளவு துன்பம் அடைந்திருக்கமாட்டார்கள், 25 வருட அழிவும், முள்ளிவாய்க்கால் கொடுமையும் நடந்திருக்காது.

இந்திய ராணுவம் அன்று பின் வாங்க ஒரே காரணம் புலிகளின் பிரச்சார ஊடகங்களும், சிங்கள அரசு புலிகளுக்கு கொடுத்த மகா ஒத்துழைப்புமே, இன்று வரை அது அப்படியே நிலைத்துவிட்டது, அமைதிபடை அழித்தது, கற்பழித்தது. புலிகளின் ஊடகபலம் அப்படி.

இதோ ராஜிவ் கொலை குற்றவாளி 5 புலிகள், 2 தமிழகத்தார் என்பதை 7 தமிழர்கள் என லாவகமாக மறைத்தார்கள் அல்லவா? அப்படியே தான்.

அமைதிபடை காலத்தில் 1500 இந்திய வீரர்கள் செத்தனர், பெரும்பாலும் சீக்கிய சகோதரர்கள், அவர்களுக்கு இலங்கையில் இன்றும் நினைவு மண்டபம் உண்டு, அவர்கள் பெயர் எல்லாம் பொறிக்கபட்டுள்ளன.

மக்களை முன்னிறுத்தி செய்யபடும் இடத்தில் எமது பெருமை மிக ராணுவம் தன் உயிரை இழக்குமே ஒழிய, அப்பாவிகளை கொல்லாது என்பதற்கு பெரும் அடையாளமாக அது உள்ளது, இலங்கை செல்லும் எல்லா இந்திய ராஜதந்திரிகளும் அதனை வணங்க தவறுவதே இல்லை.

நிச்சயம் கண்ணீரால் வணங்கவேண்டிய இடம் அது, இந்த புலிகளால் ஒரு நாளில் லட்சகணக்கான அப்பாவி மக்கள் சாவார்கள் என முன்னறிவித்த இடம் அது, அந்த , முள்ளிவாய்க்கால் காலத்தையும் அமைதிபடை காலத்தையும் ஒப்பிட்டு அமைதிபடை காலத்தில் இருந்த ஈழத்தவரிடம் கேட்டால் சொல்வார்கள்

“சிங்கள ராணுவம் என்பது எவ்வளவு இரக்கமில்லாத அமைப்பு என்பது எங்களுக்கு பின்னாளில்தான் விளங்கிற்று,

அப்படி பார்க்கும்பொழுது இந்திய ராணுவம் ஓரளவு பொறுமையுடந்தான் போராடிற்று, முடிந்த அளவு பொறுமை காத்தது, அழிவுகளையும் அவமானங்களையும் பொறுத்துகொண்டது.

மக்கள் அழிவுகளை பற்றி கவலை இன்றி அடித்து நொறுக்கி இருக்குமானால் புலிகளை வீழ்த்த அதற்கு 1 நாள் கூட ஆகியிருக்காத.

ஆயிரம் அர்த்தம் நிறைந்த வார்த்தை அது,

உதவ வந்த அந்த படையினை விரட்டிவிட்டு, மொத்த வன்னிமக்களையும் முள்ளிவாய்க்காலில் சிங்களனிடம் ஒப்படைத்துவிட்டு, இனபடுகொலை, வெள்ளைகொடி படுகொலை, மனித உரிமை மீறல் என்றெல்லாம் சொல்வதை 1500 வீரர்களையும் ஒரு தலைவனையும் இழந்து, பெரும் பழி சுமத்தபட்ட‌ இந்த பெரும் தேசம் எப்படி எடுத்துகொள்ளும்?

ஈழத்தில் என்ன பிரச்சினை என்பதற்கு முன்பு ராஜிவ்காந்தி அருமையான பதில் சொன்னார்,

“ஒரு நபர் தன் ஆயுதத்தை கீழே வைத்தால் மறுநொடி கொல்லபடுவோம் என அஞ்சுகின்றார், ஆயுதம் இல்லாமல் அவரால் வாழமுடியாது. தன் ஆளுகைகுட்பட்ட நாட்டில், காலம் வரை ஆயுத துணையோடு வாழும் முடிவில் அவர் இருக்கின்றார், அதுதான் பெரும் பிரச்சினை” ,

பின்னாளைய வரலாறு அதனை உண்மை என காட்டிற்று.

அமைதிபடை செல்லும்பொழுதே அமைதிபடை அங்கு அமைதியினை கொண்டுவராது வேறு வகையில் தீர்வு காணுங்கள் என சொன்னவர் கலைஞர், புலிகளுக்கு அவர் ஆதரவு அப்படி

புலிகளுக்காகவே அவர் அப்படி சொன்னார்.

ஈழ நாடு அடைந்தால் இங்கு திமுக சும்மா இருக்குமா? என சந்தேகபட்டது டெல்லி

ஈழநாடு அமைந்தால் திமுக 10 வருடம் தமிழக அரசியலிலே இருக்காது , காங்கிரசே ஆட்சியில் அமரட்டும் என உருக்கமாக சொன்னார் கலைஞர்

அந்த எளிய மனிதனின் சொல்லை யார் கேட்டார்கள்?

அவர் கண்டிப்பை மீறி அமைதிபடை சென்றபொழுது ராஜிவ்காந்தியுடன் கை கொடுத்து நின்றது ராமசந்திரன் அருகில் ஜெயலலிதா

பின்னால் இருந்து சிரித்தது மா.நடராசன்

அமைதிபடையின் சர்ச்சை காலத்தில் அமைதிபடை திரும்ப வரவேண்டும் என குரல் வர, அதே ராஜிவுடன் நடராஜன் ஜெயலலிதா எல்லோரும் சிரித்து கூட்டணி பேசினார்களே தவிர அமைதிபடை திரும்ப வருவது பற்றி பேசவே இல்லை, காரணம் ராஜிவ் மகிழ்ச்சி முக்கியம்

விபிசிங் ஆட்சியில் கலைஞரே அமைதிபடையினை மீண்டு வர செய்தார், அன்று பிரபாகரனை 3 நாளில் கொல்லும் அளவு அது மணலாற்றில் வளைத்திருந்தது

அமைதிபடை திரும்பியபொழுது வரவேற்கமாட்டேன் என முதலமைச்சராக இருந்த கலைஞர் சொன்னார், அது நிச்சயம் தவறு

புலிகளுக்காக இம்மாநில முதலமைச்சர் இந்திய ராணுவத்தை அப்படி அவமதிக்க கூடாது, ஆனால் கலைஞர் அந்த சவாலை எடுத்தார்

ஆனால் என்னாயிற்று?

கால் நக முடிக்கு கூட கலைஞரை மதிக்கா பிரபாகரன் சென்னையில் பத்மநாபாவினை கொல்ல கலைஞர் அரசு கவிழ்ந்தது

அடுத்த 6 மாதத்தில் புலிகள் ராஜிவினை கொல்ல திமுக தடை செய்யும் அளவிற்கு சிக்கலானது நிலை

தான் செய்த தவறுகளுக்காக கண்ணீர் விட்ட கலைஞர் அத்தோடு புலிகளை கைகழுவினார்

1990 இதே தேதியில் 1500 வீரர்ர்களை இழந்து அதன் பின் ஒரு தலைவனையும் இழந்த இந்தியா 2009ல் அமைதி காத்து பழிவாங்கிற்று

அந்த அமைதிபடை திருப்பி அனுப்பட்டபொழுது அதுசாகசம் என ஆர்ர்பரித்த புலிகள், 2009ல் அது மாபெரும் தவறு என உணர்ந்தபொழுது எல்லாம் முடிந்திருந்தது

கொழும்பில் இன்றும் அமைதிபடையாக சென்று உயிர்நீத்த 1500 வீரர்களுக்கு நினைவிடம் உண்டு, அங்கு செல்லும் இந்திய அதிகாரிகள் எல்லாம் அஞ்சலி செலுத்துவார்கள்

ஆனால் அவர்கள் பிணம் வந்த சென்னைக்கும், அவர்கள் கரையேறிய சென்னை கடற்கரையிலும் ஒரு நினைவு சின்னமும் இல்லை

எம்மை பொறுத்தவரை இந்த ஜெயா, ராமசந்திரன் சமாதிகளை விட மகா முக்கியமான விஷயம்
அந்த வீரர்களுக்கு அதே மெரினாவில் ஒரு நினைவிடம் அமைக்க வேண்டும்

முடிந்தால் அந்த கல்லறைகளை அகற்றிவிட்டே அமைக்கலாம் , ஒன்றும் சிக்கல் இல்லை

நாட்டிற்காக உயிர்விட்ட வீரர்களுக்கு நாட்டு சொத்தை அபகரித்த குற்றவாளியின் கல்லறையினை இடித்துவிட்டு நினைவாலயம் அமைப்பது மிக சரியான செயலே தவிர, தவறு ஆகவே ஆகாது.

அதுவே வருங்கால சந்ததிகளுக்கு இந்தியா ஈழத்தில் எடுத்த முயற்சிகளுக்கும், அதில் உயிர்விட்ட இந்தியருக்கும் மாபெரும் சான்றாக அமையும்

தமிழகத்தில் கொலைகாரன் படத்தை பிடித்து திரியும் பதர்களின் முகத்தை கிழித்து வருங்காலத்தில் அவர்களின் வஞ்சக பொய்கள் அழிந்து போகவும் வழி செய்யும்

நிச்சயம் அந்த நினைவாலயம் அமைக்கபட்டு வருடா வருடம் இதே நாளில் வணங்கபட வேண்டும்

வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்

மனோரமா

மனோரமா

ஆணாதிக்கம் மிக்க தமிழ் திரையுலகில் ஒரு சில பெண்களே அடையாளமிட்டார்கள், ஆனால் ஒரு கட்டத்தில் விலகிவிட்டார்கள்
சுந்தராம்பாள், கணம்பாள், டி.ஆர் ராஜகுமாரி என ஒரு வரிசை உண்டு. சாவித்திரி சரோஜா தேவி, சவுகார் ஜாணகி என அடுத்த வரிசை உண்டு , ஜெயலலிதா அரசியலில் நடிக்க வந்தார் , அப்போல்லோ நடிப்பினை மட்டும் உலகம் பார்க்கவில்லை
மற்றபடி எல்லா நடிகைகளும் ஒரு கட்டத்தில் இடைவெளி எடுத்தவர்கள் அல்லது ஓடியவர்கள் ஆனல் தமிழ் சினிமாவில் இறுதிவரை நிலைத்து நின்று பெயரிட்டுகொண்டவர் மனோரமா.
இயற்பெயர் கோபிசாந்தா, தஞ்சாவூர் அருகே பிறந்தவர், குடும்பம் வறுமையில் சிக்க பின் பள்ளத்தூரில் குடியேறிய குடும்பம் அது, 12 வயதிலே நாடக கம்பெனிகளில் நடிக்க தொடங்கினார். இந்த காலகட்டத்தில் இவர் பெயர் பள்ளத்தூர் பாப்பா.
வைரம் நாடக சபாவில் மனோரமா எனும் பெயரில் நடித்துகொண்டிருந்த இவர், நடிப்பு திறமையினால் பெரும் நாடகங்க‌ளில் நடிக்க வைக்கபட்டார்,
பெரும் நடிகர்கள் என்றால் அண்ணாவின் நாடகங்கள், கலைஞரின் நாடகங்களில் எல்லாம் அவர்களோடு நடித்தார்.
அந்தகாலங்களில் அண்ணா,கலைஞர் எல்லாம் நாடகம் போடுவார்கள், திராவிட கருத்துக்கள் கடுமையாக எதிரொலிக்கும்,
இருவருமே மிக சிறந்த நாடக ஆசிரியர்,வசனகர்த்தா எல்லாவற்றிற்கும் மேல் மிகசிறந்த நடிகர்கள், அதாவது நாடகத்தில் மட்டும் நன்றாக நடிப்பவர்கள் என மிக அழுத்தமாக சொல்லிகொள்கிறேன்.
பின்னாளில் கண்ணதாசனின் மாலையிட்ட மங்கையில் அறிமுகமானார் மனோரமா, அதுதான் முதல்படம்.
அதன்பின் தமிழக படங்களிலும், தெலுங்கு படங்களிலெல்லாம் நடித்தார், ஒரு சிங்கள மொழிபடத்திலும் அவர் நடித்த செய்தி உண்டு, ஆனால் படம் வரவில்லை.
ஒரு நடிகைக்கு தேவை குரலசைவு, முகபாவம் எல்லாவற்றிற்கும் மேல் உடல்மொழி, இந்த மூன்று விஷயங்களிலும் சந்தேகமே இல்லாமல் முதல் இடம் மனோரமாவிற்கு.
தமிழ் திரையுலகம் மகா விசித்திரமானது, அதுவும் ரசிகர்கள் மிக கண்டிப்பானவர்கள். ஒருவர் ஒரு வேடத்தில் மிக பிரமாதமாக நடித்தால் அவர் அந்த வேடத்திற்காக ஒதுக்கிவைக்கபடுவார். எம்ஜிஆரின் வாள் சண்டை, சிவாஜி கணேசனின் அழுகை,மோகனின் மைக் , ராமராஜனின் பசுமாடு என அது மிக பெரிது, அப்படியே மிக சிறந்த வில்லன் நடிகராகான ரஜினிகாந்தும் ஹீரோவாகவோ வைக்கபட்டார்.
அப்படி மனோரமாவும் நகைச்சுவை நடிகை என குறிக்கபட்டாலும், எல்லா வேடங்களிலும் நடித்து தான் மிகசிறந்த நடிகை என்பதை நிரூபித்தார். அவர் இருக்கும் காட்சிகளில் அவர் மட்டும்தான் தெரிவார், அப்படித்தான் தில்லானா மோகனம்பாளில் சில இடங்களில் சிவாஜிகணேசனையும் மிஞ்சினார்,
எம் ஆர் ராதாவிற்கு பின் அது மனோரமாவிற்கு மட்டும் சாத்தியம்.
சோ ராமசாமி, நாகேஷ், எம் ஆர் வாசு, சுருளிராஜன் என அக்கால கட்டத்தில் அவர் கொடுத்த காமெடி காட்சிகளாகட்டும், பின்னாளில் சின்னதம்பி, சின்ன கவுண்டர் போல கொடுத்த குணசித்திர வேடமாகட்டும், விசு படங்களின் பாத்திரமாகட்டும், பின்னாளைய பாட்டி வேடங்களாகட்டும், அவர் தனித்து நின்றார்.
உலகில் 90 சதவீத சினிமா நட்சத்திரங்களின் சொந்த வாழ்வு மகா சோகம் நிறைந்தது, அதிலும் 95% தமிழக நட்சத்திரங்களின் சொந்த வாழ்வு சந்தோஷமாக அமைவதில்லை, அதற்கு மனோரமாவும் விதிவிலக்கு அல்ல, சந்தித்த சவால்கள் ஏராளம்.
ஆனாலும் அந்த கவலைகள் எல்லாம் தன் திரைவாழ்வினை பாதிக்காமல் பார்த்துகொண்டார், தடுமாறிய இடமென்றால் வடிவேலு போல அரசியல் பிரச்சாரத்தில் மாட்டியது, ஆனாலும் சீனியர் அல்லவா? மீண்டு வந்துவிட்டார்.
கிட்டதட்ட 1000 படங்களுக்கு மேல் நடித்தவர், 5 முதல்வர்களோடு பணியாற்றியவர், 100 பாடல்களை சொந்தமாக பாடிய ஒரு பாடகி, 4 தலைமுறை நடிகர்களுடன் போட்டியிட்டு நடித்த ஒரு மிக சிறந்த நடிகை என அவருக்கு பல முகங்கள் உண்டு.
பத்திரிகையாளர் சோ மிக சிறந்த நகைச்சுவை நடிகர், அவரின் பல காட்சிகள் நெஞ்சைவிட்டு அகலாதவை, அவருடன் மனோராமா சொந்த குரலில் பாடி ஆடிய “ஜாம் பஜார் ஜக்கு” , “கைபடாத ரோசாப்பூ” போன்ற பாடல்களெல்லாம் சென்னை மொழிவழக்கினில் இருவரும் பின்னி எடுத்த படங்கள்.
ஒரு நடிகன் நல்ல நடிகன் என்றால், தங்களின் பாதிப்பைனை அடுத்த தலைமுறையினரிடம் பதிய வைக்கவேண்டும், ஒரு பாதிப்பினை ஏற்படுத்த வேண்டும், சிவாஜி கணேசன், சந்திரபாபு, எம் ஆர்ராதா போன்றோர் அதனைத்தான் செய்தனர், பின் ரஜினிகாந்தும் அதனையே செய்தார், நடிப்பால் பாதித்தார்.
ஆனால் தமிழக நடிகைகளில் அப்படி சாதித்த ஒரே நடிகை மனோரமா மட்டுமே, பல நடிகைகள் தன் நடிப்பினை பின் தொடருமாறு அவர் பாதித்திருந்தார்.
இன்றுசின்னதிரை நாடகங்களிலும், திரையியுலகிலும் சில நடிகைகள் மனோரமாவின் இடத்தினை பிடிக்க படாதபாடு பட்டுகொண்டிருப்பது ஒன்றும் பரம ரகசியம் அல்ல,
இதுதான் மனோரமாவின் வெற்றி, மாபெரும் வெற்றி.
இன்று அந்த அற்புத நடிகையின் நினைவு நாள் நாள்
இன்றும் திரைபடங்களில் பாட்டி வேடத்தில் “சாப்டியாய்யா ” என அவர் வந்து நிற்கும்பொழுது, பலருக்கு தங்கள் பாட்டி நியாபகம் வராமல் போகாது
அவ்வளவு உருக்கமான பாசம் நிறைந்த குரல் அது. அன்னை, அண்ணி, பாட்டி என எல்லா குடும்ப உறவுகளுக்கும் தன் நடிப்பால் தனி இடம் பெற்று கொடுத்தவர்.
“மன்மத லீலை” பட வெற்றிவிழா, மேடையில் கண்ணதாசன் சொன்னார், ” பாலசந்தர் எத்தனையோ நடிகைகளை அறிமுகபடுத்தினார், என்னால் மனோரமாவினை மட்டும்தான் அறிமுகபடுத்த முடிந்தது”
பாலசந்தர் சொன்னார், ” நான் ஆயிரம் நடிகைகளை கொண்டு வந்தாலும், அது நீங்கள் கொண்டுவந்த ஒரே ஒரு மனோரமாவிற்கு ஈடாகுமா?”
ஆயிரம் அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் பாலசந்தருடையது, அது நிதர்சனமான உண்மையும் கூட.
தமிழகத்தை ஆண்ட ராணிகளில் மங்கம்மா மறக்க முடியாதவர் என்பது போல, திரையுலகினை ஆண்ட பெண்களில் மனோரமா என்றுமே மகாராணி
இன்று அவரின் நினைவு நாள், அந்த அற்புதமான நடிகைக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

[ October 10, 2018 ]

Image may contain: 2 people, people smiling, closeup

சிதறல்கள்

பூஜை திருநாட்களையொட்டி எல்லா வீடுகளிலும் கொலு வைக்கின்றார்களாம், அதாவது அழகான பொம்மைகளை சிலைகளை வைத்து அலங்கரிக்கின்றார்களாம்

இந்த பொம்மையினை விடவா அழகான கொலு பொம்மை உலகில் உண்டு?

ஆனால் ஏனோ இந்த பொம்மையினை யாரும் வைக்கவில்லை என தகவல்கள் சொல்கின்றன, பெரும் விசித்திரம் இது

இம்முறை சங்கத்தார் வீடுகளில் கொலுவில் இந்த பொம்மை இருந்தாக வேண்டும் என சங்கம் வலியுறுத்துகின்றது,

சங்கத்து செயலாளர் Periya Samy அவர்கள் வீட்டில் இந்த அழகிய பொம்மை முதன் முதலாக‌ கொலு மேடையினை அலங்கரிக்க‌ போகின்றது

[ October 10, 2018 ]
Image may contain: one or more people and closeup
==========================================================================

மிஸ்டர் மீசை கோப்பால், இந்த வைரமுத்து மேல் வரும் புகார் பற்றி எல்லாம் கவர் ஸ்டோரி எழுத மாட்டீரா?

அதாவது திமுக, திமுகவின் அனுதாபி என்றால் நீர் எழுதவே மாட்டீராம், வேறு கட்சி என்றால் விழுந்தடித்து எழுதுவீர் என்கின்றார்களே உண்மையா?

திமுக அனுதாபிகள் என்றால் மூன்றாம் கண்ணை நக்கீரர் மூடிகொள்வாரா?

நடிகைகள் விவகாரம் என்றால் எண்ணெய் வயல் கண்ட அமெரிக்காவாக பறக்கும் நக்கீரன், வைரமுத்து என்றால் புட்டீனை கண்ட டிரம்பாக பம்முவது ஏன்?

[ October 10, 2018 ]
Image may contain: 1 person, beard and closeup
======================================================================

ஆளாளுக்கு “மி டூ” #Metoo என கிளம்புகின்றார்கள், இந்த பெண்களின் அட்டகாசம் அளவுக்கு மீறி செல்கின்றது

ஆனால் தமிழக நிலை என்ன?

ஒரு பெண்ணை ஆளவைத்து, அவர் அருகில் ஒரு பெண் அமர்ந்து தமிழ்நாட்டினை பாடாய்படுத்தி அந்த கொடூரம் இன்றுவரை தொடர்கின்றது

எவ்வளவு ஆட்டம்? எவ்வளவு சுருட்டல்? எவ்வளவு பெரும் சீரழிவுகள்

இன்றைய மகா காமெடி அரசு அவர்களால் வந்து தொலைத்தது, இதனால் தமிழகமும் அதன் மக்களும் படும்பாடு கொஞ்சமல்ல‌

மொத்த தமிழகமும் “நாங்களும் பாதிக்கபட்டோம், பெண்களால் பாதிக்கபட்டோம்” #Wetoo என கிளம்ப வேண்டிய நேரமிது

[ October 10, 2018 ]

Image may contain: 2 people, people sitting
Image may contain: 2 people, people smiling, people standing
============================================================================

1972ல் இதே நாளில்தான் திமுகவில் இருந்து நீக்கபட்டார் ராமசந்திரன்

கலைஞருக்கு எதிரான அஸ்திரமாக ராமசந்திரன் இந்திராவினால் ஏவபட்ட நாள் இது, தன் வாழ்வின் மிகபெரும் பிழையாக கலைஞர் அந்த காரியத்தை செய்த நாள் இது

பாகிஸ்தானை பிரிய விட்டிருக்க கூடாது எனும் இந்தியாவின் பெரும் தவறு போல நிச்சயம் ராமசந்திரனையும் நீக்கி இருக்க கூடாது

இதயகனி என்றார்கள், முகம் காட்டினால் போதும் என்றார்கள் இப்படி எல்லாம் அவரை வளர்த்துவிட்டு நுனி கிளையில் இருந்து அடிகிளையினை வெட்டினார்கள்.

கட்சி உடைந்ததில் இருவருக்கும் சமபங்கு உண்டு, இருவரின் சுயநலத்திலே அது உடைந்தது

பெரியாரே மன்றாடியும் ராமசந்திரன் இறங்கிவரவில்லை

விளைவு இன்றுவரை தமிழக சோகம் தொடர்கின்றது

ஆனால் யானை தடம் தப்பியது போல தடுமாறிய கலைஞர் பின்பு கட்சிகளை இணைக்க விரும்பினார், பல நடவடிக்கைகளை எடுத்தார், அப்பொழுது இணைப்பு பற்றி விரும்பாமல் ஓடியது ராமசந்திரனே

இதில் ஒரு விசித்திரம் உண்டு

ஆனால் கட்சி கணக்கு வேண்டும் என கேட்டு கட்சி தொடங்கிய ராமசந்திரனின் கட்சி கணக்கும் கட்சிக்காரர் கணக்கும் இன்றுவரை தெரியாது

அப்படி ஒரு சவாலால் கட்சியே உடைந்தபின்னும் திமுகவின் சொத்து கணக்கும், கட்சிக்காரன் கட்சி கணக்கும் இன்றுவரையும் தெரியாது

இதெல்லாம் பற்றி நாம் பேச கூடாது, அரசியலில் இதெல்லாம் சகஜம்

[ October 10, 2018 ]

Image may contain: one or more people
============================================================================

ஆமா.. நா தெரியாமத்தான் கேக்குறேன், இங்க எவ்வளவோ ரெய்டு நடந்து, குட்கா ஊழல் கூட அமைச்சர் மேல வந்திச்சி, முதலமைச்சர் மேல கூட வழக்கு வந்திச்சி. அப்ப்பொல்லாம் கம்முண்ணு இருக்குற நீங்க, இந்த நிர்மலா தேவின்னா மட்டும் ஏன்யா பொங்குறீங்க?

ஊழல் ஊழல்னு முக ஸ்டாலின் கத்துனா கண்டுக்கவே மாட்டீங்க, ஆனா நிர்மலா தேவின்னா மட்டும் ஏன் அலறுறீங்க?

ஏற்கனவே சம்பவம் வெளிவந்த நேரம் ஒரு கமிஷன் போட்டு அறிக்கையினை நீங்களே வாங்கிட்டீங்க, இப்போ நக்கீரன்ல எழுதிட்டான்னு மறுபடியும் கைது அளவுக்கு போயிட்டீங்க‌

வேற ஒரு விஷயத்திலியும் வேகமில்ல, நிர்மலா விவகாரம்னா ஏன்யா இப்படி கால்ல வெந்நீர் ஊத்துனமாதிரி பறக்குறீங்க, யாருக்கும் ஒண்ணும் சரியாவே படவில்லை, என்னமோ போங்க..” [ October 10, 2018 ]

Image may contain: one or more people and closeup
Image may contain: 1 person, smiling
============================================================================

ஒரு விஷயம் உறுத்தி கொண்டே இருக்கின்றது

தமிழகத்தை காக்க ஒரே வழி இந்த சகாயத்தை ஆதரிப்பது என்றார்கள், அவர் போல் உத்தமர் இல்லை என சூடமேற்றி சத்தியம் செய்தார்கள். கலெக்டெருக்கு படித்த காமராஜர் என்றார்கள், ஏகபட்ட அலப்பறைகள்

அவரும் அதில் மகிழ்ந்தார், தமிழகத்தை காக்க போவது நானே என்றார்

உருப்படியாக ஏதும் செய்தாரா என்றால் இன்றுவரை இல்லை, அந்த கிராணைட் ஊழல்பற்றி விசாரித்தார் அறிக்கை எல்லாம் அனுப்பினார்

அது தூங்குகின்றது தெரிந்தததுதான். ஆனால் அறிக்கை தயார் செய்தவர் என்ற வகையில் அன்னாரிடமிருந்து ஒரு சத்தமும் வரவில்லை

சகாயத்திற்கு டிராபிக் ராமசாமி எவ்வளவோ பரவாயில்லை

போலி சகாயத்திற்கும் அவரின் அடிப்பொடி கும்பல்களுக்கும் முகமூடி கிழியும் நேரமிது

இன்னொரு பக்கம் பாருங்கள் தனி மனிதனாக கலக்குகின்றார் பொன் மாணிக்க வேல், எத்தனையோ எதிர்ப்புகள் வந்தாலும் அஞ்சாமல் அசரடிக்கின்றார்

சிலை திருட்டில் தொடங்கி இப்பொழுது ஆலயங்களே தரைமாக்கபட்டு வேலைபாடு அமைந்த தூண்கள் எல்லாம் கடத்தபட்டிருக்கின்றன என்ற அதிர்ச்சி தகவலை எல்லாம் வெளிகொணர்கின்றார்

எவ்வளவு மிரட்டல்கள்? எவ்வளவு சூழ்ச்சிகள் அத்தனையும் எதிர்த்து மனிதர் மிக பெரும் போராட்டம் நடத்துகின்றார்

ஆனால் ஒரு குரல் அவருக்கு ஆதரவாய் ஒலிக்கும்? எவனாவது அவர் அரசியலுக்கு வரவேண்டும் பொதுவாழ்விற்கு வரவேண்டும் என கிளம்புகின்றானா?

இல்லை

காரணம் சகாயம் கிறிஸ்தவர், பொன்மாணிக்க வேல் இந்து என்பது அன்றி வேறு காரணம் இருக்க முடியாது

ஆக தமிழகத்தை யார் ஆளவேண்டும் என வேறுயாரோ முடிவெடுத்து இங்கு சிலரை அடையாளம் காட்டுகின்றார்கள் என்பது தெரிகின்றது, அதற்கு மதிமயங்கிய கூட்டமும் பின் செல்கின்றது

எம்மை பொறுத்தவரை சகாயத்தை விட பொன்மாணிக்க வேல் ஆயிரம் மடங்கு சிறந்தவர், அவரை போன்றவர்கள் அரசியலுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை மிக சிறந்த முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகள் அவருக்கு கொடுக்கபட வேண்டும்

கிரானைட்டில் கள்ள மவுனம் காக்கும் சகாயத்தை விட கலையழகு பொக்கிஷங்களுக்காக பெரும் போராட்டம் நடத்தும் பொன்மாணிக்கவேல் நிச்சயம் உயர்ந்தவர்

அவரை அறநிலையத்துறை நிரந்தர பொறுப்பாளராக நியமித்தாலே அது மிகபெரும் நற்காரியமாகும்

பொன்மாணிக்கவேலுக்கு ஆதரவளித்து அவரை உற்சாகபடுத்தி அவர் இன்னும் செயற்கரிய சாதனைகளை செய்ய, தமிழர் அடையாளங்களை மீட்டெடுக்க துணை நிற்பது ஒவ்வொரு தமிழனின் பொறுப்பும்
கடமையாகும் [ October 10, 2018 ]

Image may contain: 1 person, selfie and closeup
Image may contain: 1 person, closeup
==========================================================================

“யார் செஞ்ச புண்ணியமோ நம்ம காலத்துல இந்த “மீ டூ” இம்சை எல்லாம் இல்லை

இருந்தால் என்ன ஆயிருக்கும்.. அம்மா, நினைத்தாலே உடலெல்லாம் நடுங்குகின்றதே.

அண்ண்ணா…………..

நல்ல வேளை நான் பிழைத்துகொண்டேன்..”

[ October 10, 2018 ]
Image may contain: 1 person, smiling, sunglasses, hat and closeup

வைத்தியநாத அய்யர்

பிராமணர் எல்லாம் பொல்லாதவர்கள், சாதி பார்ப்பவர்கள் அடுத்த சாதியினை ஆலயத்திற்குள் விடாத கொடுமதியாளர்கள் அவர்களை விரட்டாமல் சமூக நீதி இல்லை என சொல்லிகொள்ளும் கும்பல் இங்கு எக்காலமும் உண்டு

அப்படியே இந்த சமயசீர்திருத்தம், சமூக சீர்திருத்தம் எல்லாம் வெள்ளையனும் திராவிட இயக்கமும் கொண்டுவந்தது என சொல்லும் கும்பலும் எக்காலமும் உண்டு

உண்மையில் இங்கு இந்துசமயத்தின் பல கொடுமைகளை இந்துக்களே எதிர்த்து சீர்படுத்தினர். இந்த உடன்கட்டை ஏறும் கொடுமையினை தடுத்த மோகன்ராய் ஒரு இந்து, குழந்தை திருமணமத்தை தடுக்கும் சாரதா சட்டத்திற்கு காரணமானவர் இந்து

நாராயணகுருவும், அய்யா வைகுண்டரும் செய்யா புரட்சி இல்லை அவர்களும் இந்து

அந்த வரிசையில் தமிழகம் கண்ட மாமனிதர் வைத்தியநாத அய்யர்

ஆம் அவர் அய்யர், ஆனால் போராடியதெல்லாம் தாழ்த்தபட்ட மக்களுக்காக‌

அவர் அன்றே வழக்கறிஞர் என்றாலும் போராட வந்தார், உப்பு சத்தியாகிரகத்தில் வேதாரண்யத்தில் கலந்து கொண்டு வெள்ளையனால் அடியும் உதையும் வெறும் தரையில் 400 மீட்டர்கள் இழுத்து செல்லபட்ட சித்திரவதைகள் எல்லாம் பெற்றவர், அப்பழுக்கற்ற சுதந்திர போராட்ட வீரர்

எப்படிபட்ட அப்பழுக்கற்றவர் என்றால் உப்பு சத்தியாகிரகத்தில் குடும்பத்தோடு கலந்து கொண்டவர், அவர் மனைவி மகன் என குடும்பமே சிறையில் இருந்த காலம் உண்டு

ஒருமுறை சிறையில் இருந்தபொழுது மூத்த மகன் இறந்தான் அவருக்கு பரோல் கிடைக்கவில்லை சிறையிலே அழுதார், மகள் திருமணத்திற்கு பரோலில் ஒரு நாள் வந்திருந்தார்

கவனியுங்கள், சட்டம் படித்தவர். கொஞ்சம் வெள்ளையனுக்கு ஒத்துழைத்திருந்தால் ஏராளமான கைதிகளுக்கு வாதாடி சம்பாதித்திருக்கலாம், வக்கீல் எத்திராஜ் அளவு சம்பாதித்து கல்லூரி எல்லாம் கட்டி இருக்கலாம்

ஆனால் மனிதர் பாரதி சாதி, வாழ்வை நாட்டிற்காக தொலைத்தார்

வைத்தியநாத அய்யர் எதில் தனித்து நிற்கின்றார் என்றால் முதன் முதலில் தாழ்த்தபட்ட மக்களை ஆலயத்தில் அனுமதிக்க வேண்டும் என போராடினார் அல்லவா? அங்கு நிற்கின்றார்

ஆம் மதுரையில் தாழ்த்தபட்ட சாதியினர் ஆலயத்தில் நுழைய தடை இருந்தது, அவர்கள் நுழைந்தால் பஞ்சம் வந்துவிடும் என்ற மூட நம்பிக்கை இருந்தது

1924லே வைக்கம் சென்ற பெரியார் கூட மதுரை பக்கம் வருவதற்கு யோசிக்கும் அளவிற்கு நிலமை சிக்கலாய் இருந்தது, பகுத்தறிவு பகலவன்கள் அப்பக்கம் வர நிரம்ப யோசித்தனர்

1937ல் மதுரை வந்த காந்தி அந்த ஆலயத்தில் தாழ்த்தபட்டோர் நுழையமுடியாது என அறிந்து, அவர்கள் நுழையாத ஆலயத்தில் நானும் நுழையமாட்டேன் என அறிவித்தார் என்றால் நிலமையின் வீரியத்தை புரிந்துகொள்ளுங்கள்

ஆனால் வைத்தியநாத அய்யர் துணிந்தார், அவருக்கு பசும்பொன் தேவர் முழு ஆதரவு அளித்தார், எல்லாவற்றிற்கும் மேலாக அன்றைய முதல்வர் ராஜாஜி மதுரை ஆலயத்தில் எல்லா சாதியும் நுழைய தடை இல்லை என அறிவித்தார்

சாதி வெறியர், ஆச்சாரவாதி , உடம்பெல்லா விஷம் என பலரால் சொல்லபட்ட ராஜாஜிதான் அந்த அறிவிப்பினை செய்தார்

கவனியுங்கள் மதுரை ஆலயத்தில் தாழ்த்தபட்டோர் நுழைய போராடியதும் பிராமணன், உத்தரவிட்டதும் பிராமணன்

உத்தரவு வந்தும் நிலமை சுமூகமாக இல்லை, கோவில் கோஷ்டி அராஜகத்தில் இறங்கியது, பின் பசும்பொன் தேவர் வந்ததும் அக்கோஷ்டி கோவிலை இடமாற்றுகின்றோம் என தமிழ்சங்கம் பக்கம் ஓடிவிட்டது

(ஆம் தாழ்த்தபட்டோர் வந்தால் ஆலய அர்ச்சனை செய்யமாட்டோம் என சொல்லி ஓடிய கும்பல் பின் 1945ல்தான் கோவிலுக்குள் வந்தது..)

வைத்தியநாத அய்யர் தாழ்த்தபட்டவர்களுடன் கோவிலுக்குள் நுழைந்தார், மிகபெரும் புரட்சி அங்கு நடந்தது. அதுதான் புரட்சி

காந்தி அதனை பாராட்டி நாடெல்லாம் சொன்னார், தன் பத்திரிகை எங்கும் எழுதி மகிழ்ந்தார், அதன்பின் அவரும் மதுரை ஆலயம் நுழைந்து வழிபட்டார். வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி அது

நாடே திரும்பி பார்த்தது

மதுரை ஆலயத்தில் தாழ்த்தபட்டோருக்கான முதல் வெற்றி அது.

அதன் பின் திராவிட சிங்கங்கள் மதுரை பக்கம் வந்தன, சில திகவினரின் அத்துமீறிய செயலால் பெரியாரை ஆபத்து சூழ்ந்தபொழுது அவரை காப்பாற்றியதில் வைத்தியநாத அய்யருக்கு பங்கு உண்டு

பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பார்ப்பானை அடி என சொன்ன பெரியார் அன்று அய்யரால் காப்பாற்றபட்டார்

அதன் பின்னும் தாழ்தபட்ட மக்களுக்காக ஹரிஜன் சேவா சங்கம் போன்ற சங்கங்களை நடத்தி அவர்களுக்காக பாடுபட்டார்

மக்கள் சேவையே மகேசன் சேவையாக, தன் உயிருள்ள வரை இந்திய நாட்டிற்கு உழைத்த தன்னலமற்ற தியாகியாக, அஞ்சா நெஞ்சராக, மனித நேயப் பண்பாளராக, மிகச் சிறந்த தேசபக்தராக, காந்தீயவாதியாக, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் பாதுகாவலராக, இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சியாளராக இப்படி பல பரிமாணங்களில் வாழ்ந்து தேசீயத்தையும் தெய்வீகத்தையும் காத்தவர் வைத்தியநாத ஐயர்

தேசியமும் தெய்வீகமும் இரு கண்களாக கண்டது தேவர் மட்டுமல்ல இந்த வைத்தியநாத‌ அய்யரும் கூட‌

தமிழகத்தி மறக்கமுடியாத மாமனிதர் அவர், இவரை போன்ற பெருமனிதர்களின் வரலாற்றை மறைத்துத்தான் திராவிட பிம்பமும் பெரியார் பிம்பமும் கட்டமைக்கபட்டிருகின்றது

காரணம் அரசியல், இந்திய தேசியத்தில் தமிழகம் கலந்துவிட கூடாது எனும் திருட்டு அரசியல்

Image may contain: 1 person, eyeglasses