வீரபாண்டிய கட்டபொம்மன்

ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் தமிழர்களை எழுப்பி இந்திய சுதந்திரபோராட்டத்தில் தமிழக பங்களிப்பு பற்றி கேட்டால் கூட முக்கால் தூக்கத்திலே கட்டபொம்மனை பற்றி சொல்வார்கள், தமிழக வரலாற்றில் ஏக்கர் கணக்கில் இடம்பிடித்து பெரும்புகழ் அடைந்தவர் கட்டபொம்மன்,

கட்டபொம்மன் காலத்திற்கு சற்றுமுன் நாயக்க அரசு ஆற்காடு நவாப்பிற்கு கைமாறிற்று, மொத்த தமிழக பகுதிக்கும் நவாப் தான் முதல்வர். ஆனால் பாளையக்காரர் எனப்படும் குறுநிலமன்னர்கள் அப்படியே நாயக்கர்களாய் இருந்தார்கள், அப்படி மதுரை அரசின் 72 பாளையங்களில் ஒன்று பாஞ்சாலங்குறிச்சி,

வீரபாண்டியபுரம் எனும் ஊரில் பிறந்து வளர்ந்த கெட்டிபொம்மு எனும் பெயரால் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆனார் (அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன் கதைதான்)

ஒருவழியாக கிளைவின் அதிரடியில்,கல்கத்தா தொடங்கி வெள்ளையன் ஒவ்வொரு அரசனாக பெண்டு நிமிர்த்தி மொத்த இந்தியாவை விழுங்கி தென்னகம் வந்து ஆற்காடு நாவாப்பையும் பிடித்தனர். நவாப் வடிவேலு பாணியில் “சொன்னார் நாட்டை நான் வச்சிக்கிறேன்..கப்பத்தை நீ வச்சிக்க”

இதுதானே வெள்ளையருக்கு வேண்டும், நவாப் பாளையத்தாரிடம் வரிபிரிப்பார், அதனை கமிஷன் எடுத்துகொண்டு வெள்ளையருக்கு கொடுப்பார், அவர்களும் “தேங்க் யூ..தேங்க் யூ” என வாங்கிகொள்வர். யாராவது வரிகொடுக்காமல் அடம்பிடித்தால் அவர்களை வெள்ளையனுக்கு கை காட்டிவிடுவார், அவர்கள் வந்து அன்னாரை தண்டிப்பார்கள், வல்லாட்சி நடந்தது.

அப்படி நவாப் முதலில் கைகாட்டியது பூலித்தேவன், ஒரு குறுநிலமன்னர் எப்படியோ நாயக்கரை மீறி ஆட்சி செய்த தமிழ்மன்னன். பெரும் படையோடு வந்து அவரை ஆட்சி அகற்றியது யூசுப்கான் எனும் ராமநாதபுர தளபதி, சினிமா தமிழருக்கு அவர் பெயர் நன்றாக தெரியும், வேறுயாருமல்ல கமலஹாசனின் கனவில் வரும் அபூர்வமாக வரும் ஆண்களில் ஒருவர்,

அவர் மருதநாயகம்.

பூலித்தேவனை இறுதி வரை யாரும் கைதுசெய்யவில்லை. பெர்முடா மர்மம் போல இவரும் விடை தெரியா மகா மர்மம்.

ஆனால் நாயக்க மன்னர்களின் உதவி கிட்டவில்லை, தனிமனிதனாக போராடினார்,வீழ்ந்தார்.

மிக சரியாக 40 வருடம் கழித்து ஒரு நாயக்க மன்னனும் அதேபோல வெள்ளையனை எதிர்க்க ஆரம்பித்தார், ஆச்சரியமாக அவருக்கும் எந்த பாளையமும் உதவவில்லை, உயிரை விட்டார்.

அந்த நாயக்கமன்னன் தான் கட்டபொம்மன், எல்லோருக்கும் அவரைபற்றி தெரியும் என்பதால் அ,ஆ,இ.. என தொடங்கவேண்டாம். ஆனால் அவரை ஆழ்ந்து படித்தால் பல உண்மைகள் தெரியும்.

அதாவது அந்த காலத்தில் வெள்ளையருக்கு பெரும் சவால் மாவீரன் திப்புசுல்தான். சவால் என்றால் ராக்கெட் வீசி வெள்ளையனை அதிரசெய்யும் அளவிற்கு திகில் கொடுத்தார், இவரை அடக்காமல் இந்தியா நமக்கெல்ல என கம்பெனி முடிவுசெய்த நேரம். கடும் பண நெருக்கடியால் வரிகளை உயர்த்தினர்.

பெட்ரோல் விலை உயர்ந்தால், காய்கறிவிலையும் உயரும் அல்லவா?, நவாப்பும் வரி உயர்த்தினார். இங்குதான் கட்டபொம்மனுக்கு கோபம் வந்தது, ஆனால் நியாயமான வரியை அவன் செலுத்த்திதான் வந்தான்.

“வாருங்கள் இதற்கொரு முடிவு கட்டுவோம்” என எல்லா பாளையத்தையும் அழைத்தான் யாரும் வரவில்லை, மறைமுகமாக அந்த பாளையத்தாரை எச்சரித்தான், எச்சரிப்பு என்றால் எல்லை தகறாறு, “நீங்கள் வரவில்லை என்றால் உங்கள் கிராமங்களில் வரிபிரிப்பேன்” என்ற அதிரடி, அப்படி செய்த் காட்டினார்.

மற்ற‌ பாளையத்தார் கட்டபொம்மனை குறிவைத்தார்கள். வரிசை பெரிது எட்டயபுர பாளையம்,சிவகிரிபாளையம் என எல்லோருக்கும் கட்டபொம்மன் எதிரி ஆனார்.
உச்சமாக கூடுதல் வரியை செலுத்தவில்லை என கட்டபொம்மனுக்கு உரித்தான‌ திருவைகுண்டம் பகுதியை வெள்ளையர் கைபற்றினர்.

அப்பகுதி முப்போகம் விளைந்து அள்ளிகொடுக்கும் பகுதி சுருக்கமாக சொன்னால் இன்றைய பெட்ரோல் கிணறு.
பாஞ்சாலங்குறிச்சி வானம்பார்த்த பூமி.

வரி வசூல் பிரச்சினை இருந்தபொழுதே ஒரு பஞ்சகாலத்தில் திருவைகுண்டம் நெல்குடோனை அடித்து சென்றான் கட்டபொம்மன், இங்குதான் பிரச்சினை பெரிதானது.
ஆனால் திப்பு சுல்தானை தீவிரமாக எதிர்கொண்ட வெள்ளையர், கட்டபொம்மனை பின்னாளுக்கு மாற்றினர்.

அதாவது சர்ச்சைக்கிடமான கலெக்டர் ஜாக்சன் துரையை கூட இடம்மாற்றி தாங்கள் உத்தமர் என்பது போல காட்டிகொண்டனர், அதே நேரம் கட்டபொம்மனுக்கு பின்னால் எந்த பாளையமும் செல்லாதவாறு தந்திரமாக பார்த்தும் கொண்டனர்.

அக்காலம் கம்பெனி ஆட்சி, கம்பெனியி எப்படிபட்ட ஆட்களை இந்தியாவிற்கு கொண்டுவந்தது? லண்டன் தெருக்களில் ரவுடிதனம் செய்தவர்கள், படிக்காதோர், கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாதோர், கொலை செய்துவிட்டு தலைமறைவானோர் எல்லோரையும் பிடித்து இந்தியாவில் நீ கலெக்டர், நீ தாசில்தார், நீ எழுதுவியா? அப்படியானால் கவர்ணர் என அனுப்பிகொண்டிருந்தார்கள்

ஜாக்சன் துரை அப்படி பட்டவன். கட்டபொம்மன் முதலில் செலுத்திய வரிகளை குழப்பி அவனுக்கு சினமூட்டியதே ஜாக்சன் துரைதான், அது பெரும் சர்ச்சையாகி ஜாக்சன் மாற்றபட்டாலும் கட்டபொம்மன் வெள்ளையன் கண்களில் அச்சமூட்டுபவனாகவே இருந்தான்.

ஒருவழியாக மைசூர் புலியினை மதவெறி தூண்டிவிட்டு சாய்த்தபின் மொத்த கோபத்தை கட்டபொம்மன் மேல் காட்டினர், பின்னர் விரட்டினர். வீரமங்கை வேலுநாச்சியாருக்கு பின் மருது சகோதரர்கள் ராமநாதபுரம் பக்கம் போராடிகொண்டிருந்தனர்.

அவர்களிடம் உதவிபெரும் பொருட்டுதான், கட்டபொம்மன் புதுகோட்டை ராமநாதபுரம் பகுதிகளில் சுற்றிகொண்டிருந்தார், அப்படி நடந்திருந்தால் வரலாறு மாறி இருக்கலாம்.

எட்டப்பன் காட்டிகொடுத்தான் என்பது வரலாற்று பதிவாயினும் உண்மையில் கட்டபொம்மன் கைதுக்கு காரணம் புதுகோட்டை சமஸ்தானம் என்பது இன்னொரு கோணம்.

புதுகோட்டையில் கைது செய்து பெரும் குற்றபத்திரிகை வாசித்தனர். அடுத்த பாளையங்களை அச்சுறுத்தியது,நெல்குடோனை கொள்ளையிட்டது (அது கொள்ளையா?), வரிகட்ட மறுத்தது, என என்னவெல்லாமோ குற்றம் சொல்லி அவரை தூக்கிலிட்டது கம்பெனி.

இது நடந்த வீர சம்பவம், ஒரு பெரும் வரலாறு, ஒரு சுதந்திர போராட்டம். நடந்தநாள் அக்டோபர் 16

நெல்லை பகுதியில் 1940வரை கதைபாடலாக அல்லது ஜக்கம்மா கோயில்கொடை போன்ற கொண்டாட்டங்களில் நடைபெற்ற நாடகம் இது. அப்பொழுதெல்லாம் கட்டபொம்மனை பற்றி நெல்லை தாண்டி யாருக்கும் தெரியாது.

சிலம்பு செல்வர் ம.பொ.சி தான் முதன்முதலாக “அட இங்கேயும் ஒருத்தன் வெள்ளைக்காரனை அடிச்சிருக்கான்” என ஆச்சரியபட்டு அந்த வரலாற்றை வெளிகொணர்ந்தார்.
உண்மையில் தமிழருக்கும், தமிழக உரிமைகளுக்கும், வரலாறுகள் நிலைத்திருக்கவும் பாடுபட்ட தமிழர்களுள் தலையானவர் ம.பொ.சி.

இன்று கட்டபொம்மனின் நினைவுநாள், ம.பொ.சி கண்ணில் பட்டபின் கட்டபொம்மன் தமிழகம் தாண்டி,இந்தியா தாண்டி எகிப்து அதிபரால் கூட கொண்டாடபட்டார் , உபயம் சிவாஜி கணேசன்

தனக்கு மங்கா புகழ் கிடைக்க காரணமான கட்டபொம்மன் தூக்கிலடபட்ட இடத்தினில் சிவாஜி கணேசன் சொந்தமாக நினைவு சின்னம் நிறுவினார்

கயத்தாறில் முன்பு கட்டபொம்மன் தூக்க்கிலிடபட்ட இடத்தில் மக்கள் கல் வைத்து அஞ்சலி செலுத்துவார்களாம், மிக பெரும் கல் குவியல் குவிந்து கிடந்தது என்கின்றார்கள்

பின்னாளில் சிவாஜி சிலை வைக்கும்பொழுது அதெல்லாம் அப்புறபடுத்தபட்டு விட்டதாம், என்ன தான் சிவாஜி கணேசன் கட்டபொம்மனுக்கு சிலை வைத்தாலும், மக்கள் குவித்து வைத்த அந்த கற்குவியலே மாபெரும் நினைவு சின்னம்

அது அழிந்திருக்க கூடாது.

மக்கள் நாடி பார்ப்பதில் கலைஞருக்கு நிகர் இல்லை, மக்கள் அபிமானம் பெற்றவர் யாராக இருந்தாலும் கலைஞர் ஓடிப்போய் இணைத்துகொள்வார், அவர் இறந்திருந்தால் சிலைவைத்து போற்றுவார், அவரின் அரசு ஒரு பாஞ்சாலங்குறிச்சியில் மாதிரி கோட்டையை கட்டிவைத்து அவரின் அடையாளத்தை பாதுகாத்தது.

ஆயினும் பழம் கோட்டையின் அழிவுகளை கலைஞர் கை வைக்கவில்லை. அது வேலியிடபட்டு அப்படியே இருக்கின்றது.

இன்று கட்டபொம்மன் மாவட்டம் பெயர் மாற்றமாகிவிட்டது, கட்டபொம்மன் போக்குவரத்து கழகும் மாறிற்று,

ஆனால் ஐ.என்.எஸ் கட்டபொம்மன் ஒருகாலமும் மாறபோவதில்லை, காரணம் ராணுவத்திற்குத்தான் போராட்டத்தின் கடினமும்,பெருமையும் புரியும்.

கட்டபொம்மனை தூக்கிலிட்ட மரம் இப்போது இல்லை, அவரை விசாரித்த சிறை பாழ்பட்டு கிடக்கிறது. கோட்டை தரைமட்டமாக்கபட்டிருக்கின்றது. அவரை தூக்கிலிட்ட கயிறு நெடுங்காலம் பத்திரமாக இருந்தது இப்பொழுது காணவில்லையாம்,

என்ன செய்வது அரசாங்க கோப்புகளே காணாமல் போகும் தேசம் இது.

அங்கிருந்து 90 கி.மீ தொலைவில் பத்மநாபபுரம் அரண்மனை மிக அழகாக எழுந்து நிற்கிறது நிற்கட்டும். ஆனால் இரண்டையும் காணும் ஒரு இந்தியனின் மனதில் உயர்ந்து நிற்பது இன்னும் பாஞ்சாலங்குறிச்சி மண்கட்டை இடம்தான் சந்தேகமே இல்லை ,

இதுதான் கட்டபொம்மனின் வெற்றி.

தாமிரபரணி நதிக்கரை நெல்லின் மீது உங்களுக்கு என்ன உரிமை என கேட்ட கட்ட பொம்மனுக்கும், ஈராக்கிய எண்ணையின் மீது உங்களுக்கு என்ன உரிமை என கேட்ட சதாம் ஹூசைனுக்கும் என்ன வித்தியாசம் காட்டமுடியும்?

இருவரும் தூக்கு கயிற்றுமுன் வீரமாக முழங்கினார்கள், அவர் அரேபியாவின் கட்டபொம்மன் என்றால் இவர் நெல்லையின் சதாம் உசைன். நிச்சயமாக சொல்லலாம்.

வீரபாண்டிய கட்டபொம்மன் படம், எகிப்திலும் இன்னபிற சினிமா விரும்பும் அமைப்புக்களாலும் கொண்டாடபட்டுகொண்டிருந்த பொழுது, தமிழக நிலமை எப்படி தெரியுமா? சென்னையில் சினிமா முடிந்து வெளியே வரும்பொழுது இருவர் பேசிகொண்டார்கள்

“இந்த சிவாஜி கணேசனே இப்படித்தாம்பா, முடிவுல செத்துபோய்ருவாரு..இது மட்டும் நம்ம வாத்தியார் படமா இருந்துண்ணு வச்சிக்கோ”..அப்புடியே அவ்ளோபேரையும் சாய்ச்சிபுட்டு அந்த பாணார்மேன பந்தாடிருப்பாரு..

ஒரு வெள்ளக்கார பயலும் பாஞ்சாலங்குறிச்சிகுள்ள நுழைச்சிருக்க முடியாது..”

கனவு காண்பது மட்டுமல்ல, கனவிலே வரலாற்றையும் மாற்றி மகிழ்வான் தமிழன். இந்த மகோரா எனும் சனியன் அப்படி தமிழகத்தை கெடுத்து வைத்திருக்கின்றது

எப்படியோ நல்ல வேளையாக அவர் கட்டபொம்மன் படத்தில் நடிக்கவில்லை நடித்திருந்தால், அது வெளிநாட்டில் திரையிடபட்டிருந்தால் உலகம் என்ன சொல்லியிருக்கும்??
நல்ல வேளையாக இந்திய மானம் தப்பியது.

நெல்லை சீமையின் பெரும் வீரனும் இந்நாட்டின் மிகபெரும் சுதந்திர போராட்ட வீரனுமான அந்த கட்டபொம்மனுக்கு வீர வணக்கம்.

[ October 16, 2018 ]

Image may contain: one or more people and people standing
Image may contain: one or more people, people standing, sky and outdoor
=====================================================================

முன்பெல்லாம் கட்டபொம்மன் விழா என்றால் முதல் ஆளாக பாஞ்சாலங்குறிச்சி சென்று தேம்ஸ் நதிகரையிலே.. கிரேக்க மன்னன் டிரோடமஸ்.. என்றெல்லாம் சீறி கொண்டிருப்பார் வைகோ

இப்பொழுது அறிவாலயத்தில் ஸ்டாலினை முதல்வராக்க படாதபாடு பட்டு கொண்டிருகின்றார் [ October 16, 2018 ]

இளையராஜா

ஆர்மோனியத்தை நம்பி சென்னை வந்தேன், யாரையும் தேடி செல்லவில்லை : இளையராஜா

இதே இளையராஜா முன்பு சில பேட்டிகளில் பல இசை மேதைகளை தேடி தேடி சென்று கர்நாடக சங்கீதத்தை கூர்படுத்தியதையும் இன்னும் சில இசைஅமைப்பாளர்களிடம் இசையினை மேம்படுத்தியதையும் சொல்லி இருந்தார்

அன்று அவர் சிலரை தேடி சென்றது நிஜம், அன்னக்கிளிக்காக தயாரிப்பாளர் முன் தவமிருந்தது நிஜம்

இளையராஜா சகோதரர்கள் வாய்புக்காக அலைந்தது நிஜம், யாரும் வாயில் வந்து ஊட்டவில்லை

ஆனால் இன்றோ எல்லோரும் என்னை தேடிவந்தார்கள் என்கின்றார் இளையரஜா.

வளர்ந்தபின் ஏணி எனக்கு உதவவில்லை அல்லது ஏணி இல்லாமல் மேலே வந்தேன் என சொல்வது இதுதான்

[ October 16, 2018 ]

============================================================================

இளையராஜா திறமையானவர் சந்தேகமில்லை, ஆனால் தன் வெற்றிக்கு தான் ஒருவனே காரணம் என்பதுதான் அவரின் சறுக்கல்

திரைப்பாடல் என்பது கூட்டுமுயற்சி, கவிஞர் இசை அமைப்பாளர் பாடகர், இசைக்கும் வித்வான்கள் இன்னபிற வித்வான்கள் எல்லோரின் கூட்டுமுயற்சி

இளையராஜாவிற்கு அற்புதமான கவிஞர்கள் பாடகர்கள் கிடைத்தார்கள் எல்லாவற்றிற்கும் மேலாக அட்டகாசமான இயக்குநர்கள் கிடைத்தார்கள்

இசையோ, பாடலையோ நிர்ணய்ம் செய்வது படத்தின் கதையே, அதுதான் பாடலையும் இசையினையும் வெற்றி பெற செய்கின்றது

இளையராஜா காலம் வித்தியாசமான காலம், படங்கள் பாடல்களை கொண்டாடிய காலம் என்பதால் பெரும்பாலான கதைகள் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவே இருந்தது

மற்றபடி இளையராஜா ஒருவரே படத்தை தூக்கி நிறுத்தியவர் அல்ல‌

நாயகனோ, முதல் மரியாதையோ, மூன்றாம் பிறையோ, முள்ளும் மலருமோ
இளையராஜா ஒருவருக்காக ஓடியது அல்ல‌

கதையே கலைஞனுக்குள் இருக்கும் திறமையினை வெளிகொண்டு வரும் திறவுகோல் அது இசை அமைப்பாளரோ, இல்லை இயக்குநரோ எதுவோ, கதையே முக்கியம்

கரகாட்டகாரனில் இளையராஜா அவர் பங்கை ஒழுங்காக செய்தார் என்றால், செந்திலும் கோவை சரளாவும் அவர்கள் பங்கை அட்டகாசமாக செய்திருந்தார்கள்

பாடல் என்பதும் கூட்டு முயற்சி, உதாரணத்திற்கு வைரமுத்துவுடன் சேர்ந்திருந்தபொழுது பலமுறை தேசிய விருது வாங்கினார் இளையராஜா, ஆனால் வைரமுத்து பிரிந்தபின் என்னாயிற்று

ஆனால் வைரமுத்து அதன் பின் 5 முறை வாங்கி காட்டினார் என்பது வேறுவிஷயம்

(இதை சொன்னால் நான் சின்மயிக்கு எதிரானவன் என வரிந்து கட்டுவார்கள்)

வைரமுத்துவும் வாலியும் ரகுமானோடு சேர்ந்து அருமையான பாடல்களை கொடுத்தார்கள், ஆனால் ரகுமான் எல்லா புகழும் இறைவனுக்கே என சொல்லிவிட்டு நகர்ந்தார், எங்கும் தான் ஒருவனே காரணம் என சொல்லவில்லை

இளையராஜா திறமையானவர், ஆனால் நான் மட்டுமே என அவர் சொல்வதுதான் சினிமா எனும் கூட்டு துறையில் சரிவராத வாதம்

[October 17, 2018 ]

Image may contain: 1 person, closeup

சிதறல்கள்

தங்கள் “செக்க சிவந்த வானம்” படத்தின் பிரமோஷனுக்காக மணிரத்னமும் அவரின் மனைவியும் நீண்ட காத்திருப்புக்கு பின் தலைவியினை கண்டனர்

தலைவியின் ஆதரவிற்காக தவித்து நிற்பவர்களில் மணிரத்னம் குடும்பமும் உண்டு என்பதில் சங்கம் பெருமை அடைகின்றது..

தலைவி ஆதரவின்றி இளைஞர்களின் அபிமானத்தை பெறுவது சாத்தியமில்லை என் உணர்ந்துவிட்ட மணிரத்தினத்திற்கு நன்றி

[ October 15, 2018 ]
Image may contain: 3 people, people smiling, closeup and indoor
============================================================================

ஏம்மா சின்மயி நீர் நாயக்க சாதி என்கின்றார்களே அப்படியா?

அங்கிள் சைமன் வைரமுத்துவிற்கு மிக கடுமையாக அதாவது வைரமுத்து கையபிடிச்சி இழுத்தாலும் ஆதரிப்பேன் என வக்கலாத்து வாங்குவதில் சந்தேகம் அதிகரிக்கின்றது [ October 15, 2018 ]

============================================================================

சாதி ஆராய்ச்சி முற்றிபோய் அய்யப்பன் செட்டியார் என்றொரு கோஷ்டி கிளம்பி இருக்கின்றது

இனி பகவதி அம்மன் நாயராகவும் அடையாளபடுத்தபடலாம்

இந்த விஷ்ணு என்பவர் நீல வண்ணம் என்பதால் அவரும் தலித் ஆகலாம் இல்லை பாற்கடல் மேல் இருப்பதால் கோனார் ஆகலாம்

பிரம்மன் என்பவர் சந்தேகமில்லாமல் பிள்ளைமார் சாதி ஆகலாம், எப்பொழுதும் எழுதிகொண்டே இருக்கின்றார்

பாவம் சிவபெருமான் என்பவர்தான், அவரை எந்த சாதியில் சேர்க்க போகின்றார்களோ தெரியாது, மிக சிக்கலான நிலை அவருடையது

[ October 15, 2018 ]

============================================================================

இந்த அய்யப்பன் செட்டியார் என்பதை யார் எழுப்பினார் என்றால் விஷயம் திருமாளவன் மேல் வந்து நிற்கின்றது

அன்னாரின் பேட்டி ஒன்றில் பொளந்து கட்டுகின்றார், அதாவது புத்த சமண மதத்தாரை பிராமணர் தீண்டதகாதவர்களாக விலக்கினார்களாம்

தீண்டதகாத கூட்டம் இப்படி உருவாகிற்றாம், அந்த பொல்லாத பார்ப்பணியம் சிலரை வர்ணாசிரம தத்துவபடி கடவுளாக்கிற்றாம், அதில் செட்டியாரான ஐயப்பன் கடவுளாகிவிட்டாராம்

ஏன் ஐயப்பன் செட்டியார் என்றால் சாத்தன் என்பது தலைவன் என பொருளாம், சாத்தன் சாத்தனார் என்பதெல்லாம் சிலப்பதிகாரத்தில் வரும் சமணபெயராம் அது மருவி சாஸ்தா ஆயிற்றாம்

இந்த கண்டுபிடிப்பிற்காக உடனே திருமாவிற்கு பெரும் டாக்டர், அல்லது மா டாக்டர் என்றொரு பட்டம் கொடுக்க வேண்டும்

எப்படி எல்லாம் குழப்புகின்றார் திருமா?

சாத்தன் எனும் சொல்லுக்கு பெரியவர் என்றும் பொருள், சாத்து எனும் சொல் சேர்ந்திருக்கும் கூட்டம் எனும் பொருளிலும் வரும்

சாஸ்தா எனும் சொல்லுக்கு மூலவர் என பொருள், ஆற்றங்கரையிலும் நீர்நிலை அருகிலும் அத்தெய்வம் அமர்ந்திருக்கும்

சித்தூர் சாஸ்தாவின் சாயலும் சபரிமலை ஐயப்பன் சாயலும் ஒரே போன்றிருக்கும் இரண்டும் பழமையானவை

சாஸ்தா என்பவர் காவல்தெய்வம், குறிப்பாக நீர் நிலைகளின் அருகில் அவருக்கு ஆலயம் அமைக்கபட்டிருக்கும், சில உபதேவதைகளோடு அமர்ந்திருப்பார். அவரவர் வலிமைக்கு தக்கபடி 1008 தேவதை, 108 தேவதை அல்லது ஆக கடைசியாக 21 உபதேவதை கொண்ட சாஸ்தாக்கள் உண்டு.

சாத்து எனும் தமிழ்சொல்லுக்கு சேர்ந்து இருப்பது என பொருள், பெரும்பாலும் ரத,கஜ, நாக, துதி பரிவாராங்களுடன் அமர்ந்திருப்பார். மிக கண்டிப்பாக நீர் ஆதாரங்களின் கரையில் மட்டும் இருப்பார்.

சும்மா யாரோ குழப்பவாதிகள் பேசியவதை வைத்து கொண்டு தன் சாதிய கண்ணோட்டத்தை புகுத்தி திருமா பேசிகொண்டிருப்பது பெரும் அயோக்கியதனம்

சமணரும் பவுத்தரும் சைவ உணவாளிகள், அசைவம் உண்போர் பக்கம் அவர்கள் தள்ளியே இருந்தனர்

பிராமணரும் அதையே பின்பற்றினரே தவிர புதிதாக எதுவும் அல்ல‌

இது தெரிந்தும் திருமா வம்புக்கு ஐயப்பன் செட்டியார் என வந்து நிற்பது பெரும் குழப்பம் விளைவிக்கும் செயலாகும்

சாஸ்தா வழிபாடு என்பது இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் முக்கியமானது, ஆதிகாலத்தில் இருந்தே தொடர்ந்திருக்கின்றது

புதிய சீழ்தலை சாத்தனாராக உதித்து கட்டுகதைகளை விடும் திருமா தன் சீழ்பிடித்த சிந்தனையினை நிறுத்துவது நல்லது

ஒரு அடிப்படை தத்துவம் கூட தெரியாமல் கொடிபிடிக்கும் திருமாவினையும் அவரின் அடிப்பொடிகளையும் நினைத்தால் பரிதாபமே மிஞ்சுகின்றது

[ October 15, 2018 ]

============================================================================

நாம் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனாலும் இதை ஆதரிக்கின்றோம்

கேட்டால் வடக்கே இருந்து வரும் டிரைவர்களுக்கு தமிழ் தெரியாதாம், ஆங்கிலம் தெரியாதாம் அதனால் இந்தியில் எழுதவேண்டுமாம்

சரி, தமிழகத்திலிருந்து வடக்கே செல்லும் டிரைவர்களுக்கு இந்தி தெரியுமா? ஆங்கிலம் தெரியுமா?

வடக்கே முதலில் தமிழில் எழுதிவிட்டு தெற்கே இந்தியில் எழுதட்டும்

இந்தி தெரிந்தவர்களுக்கு நாட்டின் எல்லா இடத்திலும் வசதி, இந்தி தெரியாதோருக்கு ஒரு வசதியும் இல்லை அவர்கள் படாதபாடு படட்டும் என்பதெல்ல்லாம் என்ன வகை நியாயம்?

முதலில் வடக்கே மைல்கற்களில் தென்னக மொழிகள் வரட்டும், அதன் பின் இங்கே இந்தியில் எழுதி ஹை ஹை என குதிரை ஓட்டலாம்

[ October 15, 2018 ]

Image may contain: outdoor
===========================================================================

கடும் பிரச்சினைகளும் சர்ச்சைகளும் வரும்பொழுது இந்த பாரதிராஜாவினை எங்கே என தேடினால் மனிதர் என்ன செய்திருகின்றார் தெரியுமா?

ஈழம் சென்று கிளிநொச்சியில் பல்லிளித்து கொண்டிருக்கின்றார்

எந்த பாரதிராஜா?

இலங்கைக்கு யாரும் செல்ல கூடாது, ரஜினி செல்லவே கூடாது என கொடிபிடித்த அதே பாரதிராஜா

ஏம்பா திருமாவளவரே,

ரஜினி என்றால் செல்ல கூடாது, பாரதிராஜா சென்றால் சத்தம் காட்டாமல் இருப்பீரா? கொஞ்சம் கத்தினால்தான் என்ன?

[ October 15, 2018 ]
Image may contain: one or more people and people standing
=========================================================================

ரஜினி யாழ்பாணம் செல்ல முயன்றபொழுது மிக கடுமையாக எதிர்த்த திருமாவளவன் எனும் போலி ஈழஅபிமானி இப்பொழுது பாரதிராஜா யாழ்பாணம் சென்றிருக்கும் பொழுது சத்தமே இல்லை

திருமா எனும் ஈழவியாபாரியினை வன்மையாக கண்டிக்கின்றோம்,

அவரோடு சேர்ந்து ரஜினியினை எதிர்த்த அத்தனை ஈழவிஷ போராளிகளையும் இப்பொழுது சத்தமே இல்லை என்பதால் அனைவரையும் கண்டிக்கின்றோம்

கண்டிக்க நினைப்பவர்கள் எம்மோடு சேர்ந்து கண்டிக்கலாம்

[ October 16, 2018 ]

============================================================================

திமுகவின் செய்தி தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் நீக்கபட்டுவிட்டாராம்

காரணம் கலைஞர் சிலை திறப்பு தொடர்பாக ஏதோ சொல்லிவிட்டாராம்

இளங்கோவனின் தந்தை டிகேசீனிவாசகம் திமுகவின் தத்துவ மேதை என கலைஞரால் கொண்டாடபட்டவர், அக்குடும்பமே திமுகவிற்காக உழைத்த குடும்பம், அப்படிபட்ட இளங்கோவன் பதவியில் இருந்து நீக்கபட்டிருகின்றார்

ஸ்டாலின் ஜெயலலிதா ஆகிவருவதும், திமுக ஜெயா காலத்து அதிமுக போல் ஆகிவிட்டதும் தெரிகின்றது

அதிமுக இப்பொழுது என்ன ஆனது என எல்லோருக்கும் தெரியும்

ஜெயா எம்ஜிஆர் விசுவாசிகளை பழிவாங்கியது போல ஸ்டாலின் கலைஞரின் விசுவாசிகளை குறிவைத்திருப்பது புரிகின்றது

இன்னொரு பக்கம் இந்த கனிமொழி அமெரிக்காவில் ஐ.நா மாநாட்டில் முழங்கிகொண்டிருக்கின்றார், அவர் ஜாமீன் வாங்கியதற்கே சென்னையினை முன்பு அதிர வைத்த திமுக அமைதி காக்கின்றது

அவரை வாழ்த்த கூட யாருமில்லை, கலைஞர் இருந்தால் இப்படி நிச்சயம் இருக்காது, பெரியார் சொன்ன பெண்விடுதலை என கிளம்பி இருப்பார்கள்

திமுகவில் நடப்பது எதுவும் சரியாகபடவில்லை, இது கட்சிக்கு நல்லதுமில்லை

[ October 16, 2018 ]

============================================================================

இந்த மோடி அரசு என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருக்கின்றது, அதாவது இவர்கள் ஆயிரம் சொல்லலாம் ஆனால் சம்பந்தபட்ட நாடுகள் ஏற்றுகொள்ளுமா?

இந்திய ஓட்டுநர் உரிமம் பல நாடுகளில் செல்லும் என அறிவித்தார்கள், ஆனால் சம்பந்த நாடுகளோ சிரித்துகொண்டு அதை காதில் வாங்கவே இல்லை

இது எங்கள்நாடு, நாங்கள் வைத்ததுதான் வாகன சட்டம் என அவர்கள் போக்கில் இருக்கின்றார்கள்

இப்பொழுது கச்சா எண்ணெய்க்கு இந்திய பணத்தை டாலருக்கு பதிலாக ஏற்றுமதி நாடுகள் பெறவேண்டும் என்கின்றது இந்தியா, ஒரு நாடும் கண்டுகொள்ளவில்லை

இந்தியா எண்ணெயினை மிகபெரும் அளவில் இறக்குமதி செய்யும் நாடு, டாலரில் நடைபெறுவதால் அமெரிக்காவின் வருமானம் அதிகம்

எக்காரணம் கொண்டும் அதை எளிதில் விடாது அமெரிக்கா, சதாம் உசேன் வீழ முதல் காரணமே வணிகத்தில் டாலரை மாற்றியதுதான்

எண்ணெய் வளநாடுகள் முழுக்க அமெரிக்கா கையில் இருக்க, டாலரை விரட்டும் சாத்தியம் மிக குறைவு

இவர்களாக ஆயிரம் சொல்லிகொண்டே இருக்கின்றார்கள், உலக நாடுகள் எதுவும் கண்டுகொள்வதாக தெரியவில்லை

[ October 16, 2018 ]