சபரிமலை – உச்ச நீதிமன்ற தீர்ப்பு

சபரிமலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி பெண்களை அனுமதிப்போம் என்கின்றது கேரள அரசு

பெண்கள் வந்தால் மறித்து திருப்பி அனுப்புவோம் என கொந்தளித்து நிற்கின்றது கேரளம்

இந்நிலையில் நாளை நடைதிறக்கபடுகின்றது

மிக பதற்றமான சூழலில் இருக்கின்றது சபரிமலை ஏரியா

வெறும் விளம்பரத்திற்காக அன்றே என்னை கையினை பிடித்து இழுத்தார்கள் என சொல்லி பல பெண்கள் கிளம்பும் நேரமிது

எத்தனை போராளிகள் அங்கு படையெடுத்து விளம்பரம் தேடுவார்களோ தெரியாது

ஆனால் கேரள கொந்தளிப்பினை காணும்பொழுது விளம்பரம் தேட சென்றால் விபரீதம் ஆகிவிடும் என்றே தெரிகின்றது

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை காக்க துடிக்கும் கேரள அரசு முல்லை பெரியாறு விவகாரத்தில் இன்னும் பல நதிகள் விவகாரத்தில் மட்டும் ஏன் உச்சநீதிமன்றத்தை மதிக்கவில்லை என சிந்தித்தால் ஒன்று புரிகின்றது

கலவரம் ஏற்படவேண்டும் என விரும்புவது கேரள கம்யூனிச அரசும் கூட‌, அது ஒருமாதிரி பாஜக எதிர்ப்பு அரசியல் செய்வது அட்டகாசமாக தெரிகின்றது.

ஆம் முல்லைபெரியாரில் உச்சநீதிமன்றத்தை மதிக்கமாட்டோம் சபரிமலை என்றால் மட்டும் மதிப்போம் என்பது அரசியல் அன்றி வேறல்ல‌

பாஜக எதிர்ப்பு அரசியலை செய்கின்றார் விஜயன்

ஆனால் கேரளாவில் பாஜகவும் ஆ.எஸ்.எஸ்ஸும் வளர உதவி செய்கின்றார் பிணராயி விஜயன் என்பதை தவிர சொல்ல ஒன்றுமில்லை

சபரிமலை அதன் தனித்துவத்தில் நிற்பதே சால சிறந்தது

[ October 16, 2018 ]

Image may contain: one or more people, crowd and outdoor
========================================================================

ரெஹானா பாத்திமா எனும் பெண் சபரிமலை செல்கின்றாராம், நல்லது

அம்மணி இஸ்லாமியர் போல் தெரிகின்றது

சவுதியில் புனிதமான கபாவில் எல்லோரும் நுழையவே முடியாதாம், அதுபற்றி அம்மணி ஏதும் பேசுமா இல்லை சவுதி சென்று கபாவில் நுழையுமா என நாம் கேட்க கூடாது

அங்கெல்லாம் தலைவெட்டி கடாசிவிடுவதால் அதுபற்றி எல்லாம் அம்மணி யோசிக்காது

இவரை போன்றவர்கள் புரட்சி பேசி விளையாட கிடைத்த இடம் சபரிமலை,

மற்ற இடத்தின் தனித்துவம் எல்லாம் அப்படியே இருக்க வேண்டும்

சவுதி கபா எல்லாம் அப்படியே இருக்க வேண்டும் ஆனால் சபரிமலையில் மட்டும் சமத்துவம் வேண்டும் என்பது என்னமாதிரி கொள்கையோ தெரியவில்லை [ October 19, 2018 ]

Image may contain: 2 people, people smiling, text
============================================================================

பற்றி எரிகின்றது கேரளா, சபரிமலை கோவிலை மூடும் அளவு நிலமை சென்றாயிற்று

கேரள கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆழகுழி தோண்டியாயிற்று. இறுதி சடங்கு நடைபெற்று கொண்டிருக்கின்றது

காங்கிரஸ் கோஷ்டி மவுனமாக சிரிக்கின்றது 
அவர்களுக்கு ஐய்யப்பன் இப்பொழுது இஷ்ட தெய்வம் ஆகிவிட்டார்.

[ October 19, 2018 ]

============================================================================

“இங்க பாருங்க கலைஞரே, சக்தியினை உடலில் பாதி வைத்தவர் சிவபெருமான் என்கின்றார்கள், விஷ்ணு பெண்ணாகி வந்து சிவனோடு கூடி பெற்றெடுத்தவன் அய்யப்பன் என்கின்றார்கள்

ஒன்றைரை பெண்ணும் அரை ஆணும் கலந்து பிறந்த அய்யப்பன் ஆலயத்தில் நுழைய பெண்களுக்கே உரிமை அதிகம்

ஆனாலும் சபரிமலைக்கு செல்வதுதான் பக்தி என்றல்ல, செல்லாமல் இருப்பது ஆத்திகம் என்பதுவமல்ல‌

பெரியார் பாணியில் போராட அது வைக்கமும் அல்ல, போராடாமல் விட்டுவிட அது கொடநாட்டு மலை பங்களாவும் அல்ல‌

தலைவைத்து நாம் போராட அது கல்லகுடியுமல்ல, அங்கு ரயில் வருவதுமல்ல‌”

“யோவ் பலரை குழப்புறவன் நான், என்னையே குழப்புறியா? என்னய்யா சொல்லவருகின்றாய்” [ October 19, 2018 ]

Image may contain: 2 people, people sitting
============================================================================

கபாவில் பெண்களை அனுமதிக்கவில்லை அதை சொல்லாத ராகானா பாத்திமா, சபரிமலைக்கு மட்டும் குதித்தோடி வருவதேன் என சொன்னால் ஆளாளுக்கு கிளம்புகின்றார்கள்

இதில் சில இஸ்லாமிய நண்பர்களின் அட்டகாசம் தாளவில்லை

கேட்டால் சபரிமலைக்கு பெண்கள் வரகூடாது என எங்கே எழுதபட்டிருக்கின்றது என எதிர் கேள்விகள்

ஏனப்பா, கபாவில் பெண்கள் நுழைய கூடாது என குரானில் எங்கு சொல்லியிருக்கின்றது [ October 19, 2018 ]

============================================================================

அக்கா சல்மா

சபரிமலை பற்றி என்னவெல்லாமோ சொல்கின்றீர்கள், நல்லது

ஆனால் மெக்காவிற்கோ மதீனாவிற்கோ இஸ்லாம் அல்லாதவர்கள் எளிதில் செல்ல முடியுமா? இதெல்லாம் தீண்டாமையில் வராதா?

கபாவினை பெண்கள் உள்ளே புகுந்து வழிபடத்தான் முடியுமா? இவ்வளவிற்கும் உலகின் முதல் மசூதி

இதெல்லாம் உங்கள் பகுத்தறிவு கட்சி பேசாதா? உங்கள் கட்சி தலைவரோ இல்லப் பெரியாரின் வீரமணியோ அதனை கண்டித்து அறிக்கை இட மாட்டார்களா?

இந்த பெண்சமத்துவம் பற்றி, பெண் உரிமை பற்றி பேசினால்தான் என்ன?

உங்கள் இயக்க பெருங்கவிஞர் மனுஷ்ய புத்திரர் இதனை கண்டித்து கவிதை எழுதமாட்டாரா?

எங்கே கனிமொழியினையோ இல்லை ஸ்டாலினையோ வீரப்புயல் வீரமணியினையோ அப்படி ஒரு அறிக்கையினை இட சொல்லுங்கள் பார்க்கலாம்

[ October 19, 2018 ]

============================================================================

பாவம் இந்த புள்ள‌

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்றவுடன் ஆசையாய் விரதம் எல்லாம் இருந்திருக்கின்றது ஆனால் பரிதாபம் வேட்டி கட்ட தெரியவில்லை, , அலங்கோலமாய் கட்டியிருக்கின்றது

ஏம்மா, ஒருவார்த்தை சொல்லியிருந்தால் JaiGanesh S Nadarஎன்பவர் வந்து எப்படி எல்லாம் வேட்டி கட்ட சொல்லி கொடுத்திருப்பார் தெரியுமா?

[ October 19, 2018 ]
Image may contain: 1 person
===========================================================================

“சபரிமலை ஐயப்பனால் நான் காப்பாற்றபட்டிருக்கின்றேன், பத்துநாளாக என்னை பிய்த்தவர்கள் இப்பொழுது பத்தினம் திட்டா பக்கம் போய்விட்டார்கள்

இனி என்ன? ஐயப்பன் செய்த நன்றிக்கு இருமுடி கட்டி கிளம்ப வேண்டியதுதான்

யாரது ஜேசுதாசா? வாருங்கள் “ஹரிகராசனம்” பாடலை தமிழில் எழுதி பாடுவோம்” [ October 19, 2018 ]

============================================================================

சபரிமலை கோயிலில் பழக்கப்பட்டுவரும் பண்பாடுதான் முக்கியம், பெண்பாடு முக்கியமில்லை: தமிழிசை சௌந்தரராஜன்

பண்பாடு, பெண்பாடு என்ன ஒரு ரைமிங்

அக்கோவ் பெண்பாடு, பண்பாடு எல்லாம் இருக்கட்டும் உங்களால் தமிழகம் படும்பாடு பெரும்பாடு. [ October 19, 2018 ]

============================================================================

சபரிமலைக்கு அந்த ரெஹானா சென்றதற்கு இஸ்லமியர்களே அதிகமாக கண்டிக்கின்றார்கள், அவர்களை வாழ்த்துவோம்

நல்ல இஸ்லாமியர்கள் மிக சரியான கண்டனத்தை செய்கின்றார்கள்

நாமும் கிறிஸ்தவனாகிவிட்டபடியால் அந்த லிசி, ஸ்வீட்டி என்பவர்களை எல்லாம் வன்மையாக கண்டிக்கின்றோம்

கிறிஸ்தவர்களுக்கு எடத்துவா முதல் புனித அல்போன்சா கல்லறைவரை ஏகபட்ட புனித ஸ்தலங்கள் கேரளாவில் உண்டு

அங்கே சென்று வணங்கலாம், புரட்சி செய்யலாம் இன்னபிற போராளி கோலம் எல்லாம் பூணலாம்

ஆனால் இவர்கள் சபரிமலைக்குத்தான் வருவேன் என்றால் அது உள்நோக்கமும் கபட எண்ணமும் கொண்டது

புனிதமான கிறிஸ்தவ ஆலயங்களில் பிற மதத்தவர்களுக்கு நற்கருணை கொடுக்கமாட்டார்கள், அவர்கள் கட்டுபாடு அப்படி

பெண்கள் அங்கு திருப்பலி நிறைவேற்ற முடியாது மறை உரை ஆற்ற முடியாது என ஏக கெடுபிடிகள்

அதை எல்லாம் கண்டிக்காமல் சபரிமலைக்குத்தான் வருவேன் என கிளம்பும் அந்த கிறிஸ்துவச்சி ஸ்வீட்டி என்பவரை மிக கடுமையாக கண்டிக்கின்றோம்

அவர் நல்ல கிறிஸ்தவராக இருக்கவே முடியாது, வாடகை கிறிஸ்தவராக இருக்கலாம்

நாமும் கவனிகின்றொம், ஒரு இந்து பெண் கூட சபரிமலைக்கு கிளம்பவில்லை. அவர்களுக்கு அந்த ஸ்தலத்தின் புனிததன்மை தெரிகின்றது, கட்டுபட்டு நிற்கின்றார்கள்

ஆனால் மற்ற மதத்து பெண்கள் ஏன் பொங்க வேண்டும்? அவர்களுக்கும் சபரிமலைக்கும் என்ன சம்பந்தம்?

இந்த உள்நோக்கம் கொண்ட கயவ கசவாளிகளை, தன் மதத்தில் அன்றி அடுத்தவர் மதத்தில்தான் புரட்சி செய்வேன் எனும் அயோக்கிய சிகாமணிகளை வன்மையாக கண்டிக்கின்றோம்

இவ்விஷயத்தில் தலைவி குஷ்புவே சபரிமலைக்கு கிளம்பினாலும் சங்கம் கண்டிக்காமல் விடாது, தலைவியும் சங்கத்திற்கு விரோதமாக கிளம்ப மாட்டார்

இவ்விஷயத்தில் நாம் கண்டிப்பது மாற்றுமத பெண்களையும், அந்த முதல்வர் பிணராய் விஜயன் என்பவரையும்

ஆம், முல்லை பெரியாறு விவகாரம் என்றால் அப்பீல் செய்வாரம், சுப்ரீம் கோர்ட்டை மதிக்க மாட்டாராம்

ஆனால் சபரிமலை என்றால் சிரமேற்கொண்டு அமல்படுத்துவாராம்

கம்யூனிஸ்டுகளின் கடைசி கோட்டையான கேரளம் அங்கும் அழிவது இறைவன் செயல் என்றால் யார் என்ன செய்ய முடியும்

அம்மா ஸ்வீட்டி ஒழுங்காக எடத்துவாவிற்கோ இல்லை பாலக்காடு பக்கம் அல்போன்சா கல்லறைக்கோ சென்று பாவத்தை கழுவிகொள்

வீணாக அடுத்தமதத்தவர் நம்பிக்கையினை புண்படுத்த வேண்டாம்

அந்த ரேகானா என்பவர் மியா கலிபா வகை போலிருக்கின்றது, இஸ்லாமியரே அவளை கண்டித்தபின் நாம் என்ன சொல்ல‌

சபரிமலை அதன் தனித்துவத்தில் நிற்கட்டும்.

அவ்வகையில் கேரள மக்களை வாழ்த்துகின்றோம், அவர்கள் போராட்டம் வெற்றி அடையட்டும் [ October 19, 2018 ]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s