ஜமால் கசோக்கி

ராஜதந்திரம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு துருக்கி அட்டகாசமாக செய்திருக்கின்றது
அதாவது ஜமால் கசோக்கி எனும் சவுதிக்காரர் அமெரிக்காவில் இருந்து கொண்டு இல்லை வெளிநாடுகளில் இருந்து கொண்டு சவுதி அரசை விமர்சித்து எழுதி பெரும் தலைவலி கொடுத்தார்
துருக்கி பெண்ணை மணப்பது தொடர்பாக துருக்கிக்கு வந்த அவர் அங்கிருக்கும் சவுதி தூதரகத்தில் சில ஆவணங்கள் வாங்க சென்றபொழுது பொறிவைத்து பிடிக்கபட்டு கொல்லபட்டார்
அந்த நபர் அமெரிக்காவில் இருந்ததால், அமெரிக்க குடியுரிமை கொண்டிருந்ததால் இதை சும்மா விடபோவதில்லை என டிரம்ப் குதியோ குதி என குதித்தார்
பின் சில திரைமறைவு வேலைகளுக்கு பின் அடங்கினார்
விஷயம் அமைதியாவதை கண்ட துருக்கி தன் துருப்பு சீட்டை வீசியது, ஆம் ஜமால் கொல்லபடுவதன் சில வீடியோவினை வெளியிட்டு இருகின்றது
பொதுவாக ஒரு நாட்டில் இயங்கும் வெளிநாட்டு தூதரகத்தில் அந்த நாடு தலையிட முடியாது என்பது விதி
ஆனால் ஜமால் சவுதி தூதரகத்தில் கொல்லபடுவதை எப்படியோ வீடியோ எடுத்த துருக்கி அதை வைத்து ஆட்டத்தை தொடங்கிவிட்டது
இதைபோல எல்லா தூதரகமும் வேவுபார்க்க பட்டிருக்கலாம், அமெரிக்க தூதரகமே பார்க்கபட்டிருக்கலாம் என்பதால் அலறுகின்றது அமெரிக்கா
ஜமாலை சித்திரவதை செய்து கொன்று துண்டு துண்டாக வெட்டி இருக்கின்றார்கள், இதை துருக்கி வெளியிட்டதும் அமெரிக்காவால் வாய்திறக்காமல் இருக்க முடியாது, கடுமையாக கண்டித்தார் டிரம்ப்
சவுதி அக்கொலை குற்றசாட்டை மறுத்தாலும் சவுதி கொலையாளிகள் தனி விமானத்தில் வந்து போனவீடியோவினை காட்டி மிரட்டுகின்றது துருக்கி
சிக்கலான நிலையில் டிரம்ப் தன் வலிமையான ஆயுதமான பாம்பியோவினை அனுப்பிவிட்டார்
பாம்பியோ வந்து பல விஷயங்களை அமைதி ஆக்க முயற்சிக்கின்றார்
முதற்கட்டமாக அமெரிக்காவிற்கு சவுதி 700 கோடி கொடுக்கின்றது, எதற்காம் என்றால் அமெரிக்கா உலகெல்லாம் எடுக்கும் நற்காரியங்களுக்கு நன்கொடையாம்
இது ஜமால் கொலையில் தங்களை காப்பாற்ற சவுதி கொடுக்கும் லஞ்சபணம் என்பது யாருக்கு தெரியாது
தன் நாட்டில் நடந்த கொலையில் தன் இரு எதிரிகளை மோதவிட்டு ரசிக்கின்றது துருக்கி, சும்மா சொல்ல கூடாது துருக்கியின் உளவுதுறை வலுவாகத்தான் இருக்கின்றது
இலங்கையில் பிடிபட்ட ரா உளவாளி கொழும்பு ஆப்பரேஷனில் சொதப்பி சிக்கி கொண்டார்
ரா எதற்கோ திட்டமிட்டிருக்கின்றது, ஆனால் சீன பாகிஸ்தானிய அமெரிக்க உளவுதுறையோ இல்லை மொசாட்டோ இலங்கை அரசிடம் இவரை பிடித்து கொடுத்தாயிற்று
மொசாத்தின் கரங்கள் கொழும்பில் அக்காலம் முதலே உண்டு, அமைதிபடை காலங்களில் அதிகம் உண்டு
ஆக இந்திய உளவாளியினை கையும் களவுமாக பிடித்து அவனின் ரா அடையாள அட்டை உட்பட கொண்டு போய் இந்திய தூதரகத்தில் நிறுத்தி நியாயம் கேட்டிருகின்றது இலங்கை
இந்திய தூதரகமோ அவன் மனநோயாளி என சொல்லிவிட்டது
இந்தியாவில் பிரதமர் முதல் பூரா பயலும் மன நோயாளி போல, தமிழக ஈழ கும்பல் முதல் எல்லோரையும் பார்த்தால் அப்படித்தான் தெரிகின்றது என மனதிற்குள் சொல்லிகொண்ட இலங்கை இப்பொழுது நடவடிக்கையில் இறங்கிவிட்டது
என்ன நடவடிக்கை?
அந்த இந்திய உளவாளியினை இனி உண்மையாகவே மனநோயாளி ஆக்கும் நடவடிக்கை, அவர் இனி காதல் பரத் போலத்தான் வெளிவருவார்
உளவு வேலை இப்படித்தான், மாட்டிகொண்டால் ஒன்று சாக வேண்டும் இல்லை பைத்தியகார பட்டம் பெறவெண்டும் எந்த சக்தியும் காப்பாற்றாது, அது சாத்தியமுமில்லை
ஆக துருக்கி உளவுதுறை சாதிக்கும் பொழுது இந்திய உளவுதுறை மோடி, பழனிச்சாமி போலவே சறுக்கி பெரும் அவமானபட்டு நிற்கின்றது
[ October 19, 2018 ]

(in picture jamal kashoggi )

Image may contain: 1 person, eyeglasses, beard, closeup and text

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s