கில்லாடி கிளைவ் 13

கில்லாடி கிளைவ் 13

மீர்பாஜபர் நவாப் ஆனவுடன் அரசின் கஜானா கிளைவிற்காக திறந்துவிடபட்டது, கிட்டதட்ட 9 லட்சம் பவுண்ட் அளவிற்கு அங்கிருந்த செல்வம் கிழக்கிந்திய கம்பெனிக்கு கிடைத்தது
கிளைவ் நினைத்திருந்தால் இதில் பெரும் பகுதியினை சுருட்டி இருக்கலாம், ஆனால் அவன் எடுக்கவில்லை. அவ்வளவும் கம்பெனிக்கே சென்றது
இதனிடையே ஒரு சுவாரஸ்ய சம்பவமும் நடந்தது, கிளைவின் வெற்றியினை அறியாத கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தை மாற்றி அமைத்து பல அதிகாரிகளை அனுப்பியது, மேல் மட்ட பெயரில் கிளைவின் பெயர் இல்லை
காரணம் அக்கால தொலைதொடர்பு முறை அப்படி இருந்தது
ஆனால் வந்து இறங்கிய அதிகாரிகள் கிளைவின் அதிரடியினையும் அவனின் பெரும் வெற்றிகளையும் கேள்விபட்டு அவனை முக்கிய பொறுப்பில் அமர்த்தினார்கள்
கிளைவின் வங்க‌ வெற்றி தாமதமாக பிரிட்டனுக்கு தெரிய வர, அவரை முக்கிய பொறுப்பில் அமர்த்தி அடுத்த லிஸ்டை வெளியிட்டது
அந்த விஷயம் கிளைவினை எட்டியபொழுது இங்கு நிலமை ஏற்கனவே அப்படித்தான் இருந்தது, ஆம் கிளைவ் உச்ச தலைவராயிருந்தார், அவர் செல்வாக்கு கூடி இருந்தது
எவ்வளவு செல்வாக்கனவர் என்றால், இந்திய சிற்றரசர்கள் அவரின் குதிரையினை விழுந்து விழுந்து வணங்கினர் என்றால் நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.
கிளைவ் இந்தியாவில் அந்த டூப்ளேயினை விட பெரும் செல்வாக்கோடு வலம் வந்தார்
அப்பொழுது பிரெஞ்ச் ஆதிக்கம் கோதாவரி விசாகபட்டினம் பகுதியில் மிகுந்திருந்தது, அதை முடக்க ஆந்திர போர்களை தொடங்கினார் கிளைவ்
அவரின் அதிரடியில் கோதாவரி, கிருஷ்ணா, கடப்பா, விசாகபட்டினம் பகுதிகள் பிரிட்டிசாருக்கு கிடைத்தன. இப்பொழுது நெல்லை பகுதி முதல் விசாகபட்டினம் வரை பிரிட்டானியர் ஆதிக்கம் வந்தது, ஒரே உபயம் கிளைவ்
இடையில் ஒரிசா மட்டும் இல்லை
இந்நிலையில் மீர்ஜாபரின் மகனின் அட்டகாசம் எல்லை மீறியது, கிளைவ் அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை ஆனால் மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டது
இந்த சூழ்நிலையினை பயன்படுத்த விரும்பினான் அயோத்தி சுல்தான் சுஜா உத்தவ்ல்லா. அவன் வங்கம் மேல் படையெடுப்பதாக அறிவித்தான்
அலறிய மீர்ஜாப்ர் கிளைவினை நாடினான், அயோத்தி சுல்தானை விரட்டிவிட்டு மீர் ஜாபரை நிறுத்தினான் கிளைவ்
கொஞ்சநாள் நிலமை சுமூகமாக சென்றபொழுது அடுத்த ஆபத்து டெல்லியிலிருந்து வந்தது
அதாவது முகலாய மன்னரான இரண்டாம் ஆலம்கீர் என்பவரை அவர் மந்திரியே சிறைவைத்தான், அதில் ஆலம்கீரின் மகனான ஷா ஆலம் என்பவன் தப்பினான்
தப்பியவன் என்ன செய்தான் என்றால் பெரும் படை திரட்டினான், மராட்டியர் பஞ்சாபியர், தக்காணம், என பெரும் எண்ணிக்கை கொண்ட படை அது
தந்தையினை மீட்க பல இடங்களில் ஆதரவு கோரினான் ஷா ஆலம். ஆம் டெல்லி முகலாய மன்னருக்கு முன்பு கட்டுபட்டவர்கள்தான், மன்னருக்கு ஆபத்து என்றால் அவர்கள் வரவேண்டும்
அப்படி வங்கத்து மீர்ஜாபருக்கும் அழைப்பு விடுத்தான் மீர் ஜாபரோ யோசித்து கொண்டிருந்தான்
மிக பெரும் தந்திரசாலியான மீர் ஜாபருக்கு இப்பொழுது ஆங்கிலேயர் பக்கமா இல்லை ஆலம் ஷா பக்கம் நிற்க வேண்டுமா என்ற பெரும் குழப்பம் ஏற்பட்டபொழுது அவன் அட்டகாசமான முடிவெடுத்தான்
போரில் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் அதே நேரம் பெரும் பணத்தை கொடுப்பதாகவும் உறுதி அளித்தான்
உறுதி அளித்தானே தவிர கொடுக்கும் திட்டமெல்லாம் இல்லை மாறாக கிளைவிற்கு கடிதம் எழுதினான்
கிளைவோ ஆலம்ஷாவிற்கு நீர் பணம் கொடுத்தால் எல்லோரும் உம்மை பணம் கேட்டே மிரட்டுவார்கள் என்பதால் கொடுக்க வேண்டாம் என சொல்லிவிட்டான்
கொடுத்தால் கிளைவ் அடிப்பார் கொடுக்காவிட்டால் ஆலம் ஷா அடிப்பான் என சிந்தித்த மீர்ஜாபர், பாட்னா சுல்தானை வைத்து ஆடினான்
பாட்னா சுல்தானை ஆலம் ஷாவிற்கு எதிராக ஏவிவிட்டான் மீர் ஜாபர், இதனால் ஆலம்ஷாவின் படைகள் பாட்னாவினை முற்றுகை இட்டது
இந்நேரம் பாட்னா சுல்தான் உதவி கேட்பதாக கிளைவிடம் சொல்லிவிட்டான் மீர் ஜாபர்
கிளைவும் நடக்கும் விஷயத்தை கவனித்து கொண்டே இருந்தான், பாட்னா விழுந்தால் அடுத்தால் ஆலம் ஷா மீர் ஜாபர் மேல் பாய்வார் என்பது அவனுக்கு தெரியும்
இதனால் பெரும் படையுடன் கிளம்பினான் கிளைவ், ஆனால் ஆலம் ஷாவின் படையுடன் ஒப்பிடுகையில் கிளைவின் படை வழக்கம் போல் சிறியது
எனினும் கிளைவ் வருகின்றான் என்றவுடன் ஆலம்ஷாவின் படையினர் ஓட்டமெடுத்த்தனர், கூலிக்கு வந்த பிரெஞ்ச் படையினர் மட்டும் நின்றனர், அவர்களை பின்மண்டையில் அடித்துவிரட்டிவிட்டு பாட்னாவினை காத்தான் கிளைவ்
பின் என்ன ஆகும்? பாட்னா கிளைவின் செல்வாக்கினை ஏற்று கொண்டது
ஆலம்ஷாவினை கிளைவ் விரட்டிவிட்டதும், பல சாகசங்களை செய்ததும் மீர் ஜாபரின் மனதை மிகவும் யோசிக்க வைத்தது
ஆம் அவன் தன் மகனை அடுத்த நவாப் ஆக்க எண்ணம் கொண்டிருந்தான், ஆனால் மகனோ மிகபெரும் அயோக்கியனாய் இருந்தான் வங்க மக்கள் அவனை விரும்பவில்லை
நாளை சிக்கல் என்றால் தன்னை விரட்டிவிட்டு இன்னொரு நவாபினை பிரிட்டிசார் நியமிப்பர் என்பதை உணர்ந்த ஜாபர் பெரும் நயவஞ்சக திட்டமிட்டான்
பன்னீர் செல்வம் எடப்பாடியினை விரட்ட திட்டமிடுதல் போல, எடப்பாடி சில நேரம் மோடியோடு ஆடுவது போன்ற சாயல் அது
கிளைவினை வெல்ல பிரெஞ்சிக்காரர்களால்தான் முடியவில்லை , ஆனால் இன்னொருவர்களால் முடியலாம்
அவர்கள் இந்தியாவில் அதிகம் இல்லையே தவிர இந்தோனேஷியா முதலான கிழக்காசிய பகுதி எல்லாம் அவர்கள்தான் ஆள்கின்றார்கள்
அவர்களை அழைத்து இந்த பிரிட்டானியரை விரட்டினால் என்ன?
ஆம் டச்சுகாரர்களுக்கு தூதுவிட்டான் மீர் ஜாபர், “வங்கம் பக்கம் வந்து வெள்ளையரை விரட்டிவிட்டு இங்கு வியாபாரம் செய்யவும், உங்களை வங்கத்து நவாப் உள்ளன்போடு வரவேற்கின்றார்”
டச்சுக்காரர் துணையோடு கிளைவினை விரட்டும் மாபெரும் வஞ்சக திட்டத்தில் இறங்கினான் மீர்ஜாபர்.
ஏற்கனவே மிக அணுக்கமாக மீர்ஜாபரை கண்காணித்த கிளைவிற்கு பொறி தட்டிற்று
டச்சுக்காரரோ இந்தோனேஷியாவில் இருந்து இந்தியா வரை தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த 11 கப்பல்களில் ஜாவா தீவிலிருந்து கிளம்பினர் [ October 20, 2018 ]
(தொடரும்..)
Image may contain: 3 people

சிதறல்கள்

தமிழகத்தில் நானும் இருக்கின்றேன் என எப்படி காட்டுவது என காத்துகொண்டிருந்த வீரமணிக்கு சபரிமலை விவகாரம் இப்பொழுதான் நினைவுக்கு வந்திருகின்றது

வயதானால் அப்படித்தான்

மனிதர், பெண் சமத்துவம் , சம உரிமை அது இது என சபரிமலை பற்றி நிறைய கவலைபட்டிருக்கின்றார்.

அடுத்த வருட பெரியார் விருதினை அந்த ரெகானா பாத்திமாவிற்கு வழங்குவார் போல..

நாம் அவரிடம் கேட்பது இதுதான்

மிஸ்டர் வீரமணி, நீங்கள் பகுத்தறிவாளி. மதநம்பிக்கை கொண்டோர் உங்களுக்கு ஆகாது, அவர்களின் ஆலயத்தில் என்ன நடந்தால் உங்களுக்கு என்ன?

நிச்சயம் சபரிமலையில் ஜாதி இல்லை, எல்லா பக்தரும் செல்லலாம், ஏன் நீங்கள் கூட செல்லலாம் பின்னர் ஏன் உங்களுக்கு கவலை

பெண்களை சபரிமலையில் அனுமதிக்காதது பெரியார் காலத்திற்கு முன்பிருந்த நடைமுறை

வைக்கமில் நடந்த சாதி கொடுமையில் பெரியார் களமிறங்கினார், அதில் ஒரு நியாயம் இருந்தது

ஆனால் சபரிமலை பெண்கள் கட்டுபாடு பற்றி ஏதும் அவர் சொன்னாரா?

நீர் நல்ல பகுத்தறிவுவாதி என்றால் பெரியார் அய்யப்பனை பற்றி அப்பட்டமாக சொன்னதை சொல்ல தயாரா?

உங்களுக்கு மறந்திருக்கலாம், நாங்கள் நினைவுபடுத்துகின்றோம், இப்படித்தான் அய்யப்பனை பற்றி சொன்னார் பெரியார்

(நண்பர்கள் மன்னிக்கவும், நாம் பெரியார் சொன்னதைத்தான் சொல்கின்றோம்)

“சிவன் எனும் பயல் , பெண் வேடத்தில் வந்த விஷ்ணு எனும் பயலை பார்த்து இந்திரியம் ஒழுக ஒழுக ஓடினானாம், அவனை அடைந்தானாம்

அவர்கள் இருவரும் சேர்ந்து அய்யப்பனை பெற்றார்களாம்

ஆணும் ஆணும் சேர்ந்து பெற்ற ஆபாசபிரவி அய்யப்பன், அவனுக்கொரு கோவில் அதுக்கொரு விரதம்”

நீர் உண்மையான பெரியாரிஸ்ட் என்றால் பெரியார் சொன்னதை இப்பொழுது தைரியமாக சொல்லிவிடும் பார்க்கலாம்

முடியுமா? சொல்லிவிட்டு இருந்துவிட முடியுமா?

ஆக பெரியாரின் சொத்துக்களுக்கு காவல் இருக்கும் நீங்கள், அவரின் கடுமையான கருத்து எதனையும் பரப்ப மாட்டீர்கள், சம்பந்தபட்ட நேரத்தில் அதுபற்றி பேசமால் மிக அழகாக எதனையோ பேசி பெரியாரிசம் காட்டுகின்றீர்களா?

நாமும் கவனித்துகொண்டே இருக்கின்றோம் அய்யப்பனை பற்றி, சபரிமலை பற்றி பெரியார் சொன்னதை ஒரு பெரியாரிஸ்டும் மேற்கோள் காட்டவில்லை

ஆம், இந்துக்களின் எழுச்சி அவர்களுக்கு ஒருவித பயத்தை கொடுத்திருக்கின்றது என்பது உண்மை

பெரியார் சபரிமலை பற்றி சொன்னதை சொல்ல அவ்வளவு பயம், ஆனால் வாய்கிழிய இது பெரியார் மண் அது இது என உடான்ஸ் விடுவது

இது பெரியார் மண் அல்ல , பெரியாரின் தீரமிகு பேச்சுக்களும் சிந்தனைகளும் புதைக்கபட்டுவிட்ட மண் [ October 20, 2018 ]

============================================================================

அடேய் பாஜக ஆர்.எஸ்.எஸ் இம்சைகளா, ரோட்டர பிச்சைக்காரனையும் ஹாய் ஜி என அழைத்தே பழக்கபட்டுவிட்டீர்கள்

அது என்னமோ ஜி என்றால் உங்களுக்கு ஜிலேபியாய் இனிக்கின்றது, அது தமிழ்சொல்லா அதற்கு என்ன அர்த்தம் என ஒருகாலமும் நீங்கள் நினைப்பதில்லை

அவ்வளவு அறிவிருந்தால் பாஜகவில் எல்லாம் இருக்க மாட்டீர்கள்

காங்கிரஸ் இப்படி ஜி போட்டுத்தான் இங்கு உருப்படாமல் ஒட்டாமல் போனது, நீங்களும் அப்படியே ஜி போட்டு சீ என ஆக போகின்றீர்கள்

உங்களுக்குள் மோடி ஜி, அமித் ஜி , ராஜாஜி என அழைத்து கொள்ளுங்கள் , அப்படியே ராஜராஜன் ஜி, சோழன் ஜி என்றெல்லாம் பேச ஆரம்பித்திருப்பது சரி அல்ல.. [ October 20, 2018 ]

============================================================================

அந்த ஜமால் கொல்லபட்டதில் அமெரிக்கா கொதித்து நிற்கின்றது, ஏன் என்றால் காரணம் உண்டு

ஜமால் என்பவர் பெரும் பத்திரிகையாளர், 1980களில் ஆப்கனில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா இஸ்லாமிய போராளிகளை திரட்டியபொழுது அவரின் பங்களிப்பு பெரிது

சவுதிக்கு ஆப்கன் செய்திகளை அவர்தான் கொண்டுவந்தார், ஏராளமான சவுதி இளைஞர்கள் அதன் பின்புதான் ஆப்கன் சென்றனர்

ஒஸாமா பின்லேடன் ஆப்கன் செல்ல பெரும் காரணம் இந்த ஜமால்

அதன் பின் அமெரிக்காவின் செல்லபிள்ளை ஆனார், அமெரிக்க குடியுரிமை வாங்கினார், அங்கிருந்து நிறைய எழுதினார் சிக்கலே இல்லை

ஆனால் சிக்கல் எங்கு வந்ததென்றால் சவுதியின் புதிய அரசரை அவர் விமர்சித்ததில் வந்தது, அமெரிக்கா அதை ரசித்ததாக சவுதி நினைத்தது

இந்நிலையில் இவர் ஏன் துருக்கிக்கு வந்தார் என்றால் அன்னாருக்கும் துருக்கிய பெண்மணிக்கும் காதல் வந்துவிட்டது, திருமணம் செய்ய தன் விவாகாரத்து சான்றிதழை சவுதி தூதரகத்தில் வாங்க சென்றபொழுதுதான் கொல்லபட்டிருக்கின்றார்

தன் பத்திரிகை புறா கொல்லபட்டதில் அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அஞ்சலில் செலுத்தும் அளவு சென்றுவிட்டது, கடும் ஆத்திரம்

விவகாரம் எல்லை மீறி செல்வதை உணர்ந்த சவுதி அரசு 700கோடி அமெரிக்காவிற்கு கொடுத்தது அங்கு கடும் சலசலப்பினை ஏற்படுத்திற்று

இந்நிலையில் காணாமல் போன ஜமால் எங்கே என்ற கேள்விக்கு கொல்லபட்டிருக்கலாம் என முதன் முதலாக உதடு திறக்கின்றது சவுதி

இது என்னென்ன அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பது இனிதான் தெரியும்

[ October 20, 2018 ]

============================================================================

பயங்கரவாதத்தை வேரறுக்க “ராமர் பாதையே ” சிறந்தது : யோகி ஆதித்யநாத்

ஆக யாரையாவது கடத்தி சென்றால்தான் ராமர் பாதையில் பழிவாங்குவார்கள் போல‌

ஏற்கனவே வாஜ்பாய் ஆட்சியில் காந்தகாருக்கு விமானம் கடத்தபட்டபொழுது ராமர் பாதை என்னாயிற்று என யாரும் கேட்க கூடாது

[ October 21, 2018 ]

============================================================================

” நானும் கீர்த்தி சுரேஷும் சேர்ந்தா, விஜய் சாரை கலாய் கலாய்னு கலாய்ச்சுருவோம்!” – வரலட்சுமி, சர்க்கார் படத்து படபிடிப்பு குறித்து பேட்டி

எப்படி கலாய்பிங்க மேடம்? “நீங்க அடுத்த சி.எம் ஊழலை ஒழிக்க போகிற சி.எம், உங்க டாடி என்ன சபாநாயகரா?..” என்றா [ October 21, 2018 ]

============================================================================

“பெண்கள் போனால் சபரிமலை புனிதம் கெட்டுவிடுமாம்

ஏண்டா டேய், பாம்பு முதல் தவளை வரை தின்னுபுட்டு சீனன் காவல் காக்குறாண்டா கைலாசத்த, ஒரு பய அத ஏன்னு கேக்குறீங்களா?

நல்ல இந்துண்ணா அத கேளு, சீனன்ட கேளு கைலாய மலையின் புனிதத்தை கெடுக்காதே எங்ககிட்ட தான்னு கேளு

கேட்க மாட்டான், ஒரு பயலும் கேட்கமாட்டான் கேட்டா திரும்ப மாட்டான்

ஆனா இங்க பாபர் மசூதின்னா கத்தி கடப்பாரை தூக்கிட்டு போறது, சபரிமலைன்னா புனிதம் போச்சின்னு கத்துறது

என்னமாதிரி பக்திப்பா.. எப்பா…”

[ October 21, 2018 ]
Image may contain: 1 person, smiling
============================================================================

பெரியார் அதை சொன்னார் இதை சொன்னார் என வழக்கமாக பெண்ணிய வாதிகளும், நாத்திகர்களும் அடிக்கடி பொங்குவார்கள்

ஆனால் இந்த சபரிமலை சர்ச்சையில் பெரியார் என்ன சொன்னார் என்பதை பற்றி ஒரு பெரியாரிஸ்டும் சொல்ல காணோம், திமுகவினரும் மூச்..

ஏன் என்றால் அப்படித்தான், பூராம் பயம் கள்ளத்தனம், போலித்தனம்

அய்யப்பன் கதை என பெரியார் சொல்லி இருப்பது “தந்தைபெரியார் -நூல்:- “இந்துமதப்பண்டிகைகள்” பக்கம்: 41 ‍ 43″ல் இருக்கின்றது

விஷயம் வில்லங்கமானது, ஓரின சேர்க்கை அளவு பெரியார் சொல்லி இருந்தார்

ஒரு பயலாவது அதை சொல்வானா என எதிர்பாத்தால் சத்தம இல்லை

வீரமணி, சுபவீ, அருள்மொழி, இந்த மதிமாறன் என ஒரு பெரியாரிஸ்டுகளும் சொல்லவில்லை

பெரியாரின் பிராதன குணமே அவரின் தைரியம் அது இல்லாமல் பெரியாரிஸ்ட் என சொல்வதில் அர்த்தமில்லை

ஏ டூபிளிகேட்ஸ், பெரியார் சொன்னதை கூட சொல்ல அவ்வளவு பயமா?

கலைஞர் இருந்தால் அட்டகாசமாக பெரியார் சொன்னதை எடுத்துகாட்டி அசத்தி இருப்பார்

நிச்சயம் அவர் இல்லா இடம் இம்மாதிரி இடங்களில் வெற்றிடம்

[October 21, 2018 ]

============================================================================

நீ ஏன் உன் நிலைப்பாட்டினை அடிக்கடி மாற்றிகொண்டே இருக்கின்றாய், உன்னிடம் உண்மை இல்லை, குழப்பம்தான் மிஞ்சுகின்றது என பலர் சாடுகின்றனர்

மகாத்மா காந்தி முன்பே சொல்லி இருக்கின்றார், “உண்மை என்பது வைரம் போன்றது அதற்கு பல முகம் உண்டு”

அப்படியாக ஒரு முகத்தை சொல்லும்பொழுது மகிழும் பலர், அதன் இன்னொரு முகத்தை சொல்லும் பொழுது நம்மை சாடுகின்றனர்

சாடட்டும்

அதற்காக நம் மனம் ஒப்புகொள்ளா விஷயங்களை மற்றவருக்காக எழுதமுடியாது, மனம் சரியென்று சொல்வதை யாருக்காகவும் மாற்ற முடியாது

அப்படி மாற்றினால் கடைசிவரை மாறிகொண்டேதான் இருக்க வேண்டும்

அதனால் சொல்கின்றோம், நாம் எழுதுவதில் உடன்பாடில்லை என்றால் கடந்துவிடலாம்

[ October 21, 2018 ]

===========================================================================

சன் டிவியில் சைமா விருது வழங்கும் விழா ஒளிபரப்பானது

ஏகபட்ட நட்சத்திரங்கள் குவிந்திருகின்றனர் அவர்கள் நடுவில் நிலாவாக ஜொலிக்கின்றார் தலைவி

பாடகி சுசீலாவிற்கு விருது கொடுக்க தலைவியினை அழைத்தபொழுது தலைவியின் அருமை எல்லோருக்கும் விளங்கிற்று

பி.சுசீலா தன் வாழ்நாளில் பெற்ற மிக சிறந்த விருது அதுவாகத்தான் இருக்க முடியும்.

தலைவிக்காக பூ பூக்கும் மாதம் தைமாதம் என பாடியதுதான் சுசீலாவின் தலைசிறந்த பாடல் என்பதும் குறிப்பிடதக்கது

அரங்கம் எல்லாம் தலைவியினை பார்த்தபடியே இருந்தது, கேமரா எல்லாம் தலைவி பக்கம் தானாய் திரும்பியது

எங்கும் தலைவி, எதிலும் தலைவி என தனித்து தெரிந்தார்.

துபாயில் அப்பொழுது குளிர்காற்று கூட வீசியதாம்

நட்சத்திரங்கள் நடுவில் நிலாவாக ஜொலித்ததால்தான் சங்கம் அடிக்கடி சொல்கின்றது

ஒரே நிலா.. ஒரே குஷ்பு [ October 21, 2018 ]

Image may contain: 3 people, people smiling, people standing
=======================================================================

மு.க ஸ்டாலினால் அதிமுகவினை அழிக்க முடியாது : எடப்பாடி பழனிச்சாமி

ஆமாம் , இங்கே எடப்பாடி, பன்னீர், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர் என பலர் இருக்க ஸ்டாலின் ஏன் வந்து அழிக்க வேண்டும்?

இவர்களே போதும், அதைத்தான் எடப்பாடி சொல்கின்றார்.  [ October 21, 2018 ]

============================================================================

குவலயத்தோடு மோது
குஷ்புவோடு மோதாதே… [ October 21, 2018 ]

===========================================================================