சிதறல்கள்

கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார் ரஜினிகாந்த் : செய்தி

இதற்கு முந்தைய செய்தி பேட்ட திரைப்படத்தின் படபிடிப்பு நிறைவு பெற்றது என்பது

ஆக தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் விரைவில் ரஜினி படம் வெளிவர இருக்கின்றது என்பது. [ October 23, 2018 ]

============================================================================

ஜெயக்குமார் உடனே பதவி விலக வேண்டும், திமுக ஆர்.ராசா வலியுறுத்தல்

1968ல் இதே போன்றதொரு சிக்கல் கலைஞருக்கு வந்தபொழுது அவர் ராஜினாமா செய்தாரா? என யாரும் திருப்பி கேட்டால் ராசா என்ன சொல்வாரோ தெரியாது..

[ October 23, 2018 ]

============================================================================

அப்படி என்னய்யா பண்ணிட்டான் என் கட்சிக்காரன்?

கட்சி கலாச்சாரத்த காப்பாத்துனது ஒரு தப்பா?…

எப்படிபட்ட பாரம்பரியமுள்ள கட்சி இது தெரியுமா?…

[ October 23, 2018 ]
Image may contain: 6 people
=====================================================================

பங்கு, இப்படி ஆளும் அமைச்சர்கள் ரகசியமாக பிள்ளை பெற்று பின் மாட்டிகொண்டு மறுப்பதும் பின் ஒப்புகொள்வதும் சாதாரண விஷயம் அல்ல,

அந்த பெரியவருக்கே அந்த காலத்தில் அப்படி ஒரு பெண்குழந்தை பிறந்து, அந்த ராசியில்தான் அவர் முதல்வர் ஆனார் என அக்கட்சியினரே சொல்வார்கள்

இவரும் அப்படி முதல்வர் ஆயிட்டா என்னய்யா பண்றது? கொஞ்சம் கவனமா இருக்கணும் பங்காளி

[ October 23, 2018 ]
Image may contain: 2 people
============================================================================

தினகரன் சார்பு எம்.எல்.ஏக்கள் எல்லாம் குற்றாலத்தில் சந்திக்கின்றனர் : செய்தி

பெரிய ஜி8 நாடுகளின் தலைவர்கள், இவர்கள் ஒரே இடத்தில் சந்திப்பது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி

அட தினகரன் உறுமினால் மொத்தமாக வந்து விழுந்துகிடக்கும் கோஷ்டி அது, அந்நிலையில் இப்படி ஒரு விளம்பரம்

ஏதோ சர்வதேச விஞ்ஞானிகள் கூடி ஆராய்ச்சி முடிவினை வெளியிட போவது போல ஒரு பிம்பம். [ October 23, 2018 ]

============================================================================

அந்த வாஷிங்டன் பத்திரிகையாளர் ஜமால் கொல்லபட்டதில் விஷயம் வெடிக்கின்றது

சவுதி அவ்விவகாரத்தை ஒப்புகொண்டாலும் டிரம்பிற்கு அழுத்தம் அமெரிக்க பத்திரிகைகள் கொடுக்கும் அழுத்ததில் டிரம்பால் தாக்குபிடிக்க முடியவில்லை

சவுதியின் செயல்பாட்டில் தனக்கு திருப்தி இல்லை என சொல்லிவிட்டார்

இப்பொழுது பிரிட்டன் பிரதமர் தெரசே மே காட்சிக்கு வந்து சவுதியினை கண்டிக்கின்றார், ஜெர்மன் பிரான்ஸ் நாடுகளும் கண்டிக்க தொடங்கிவிட்டன‌

சவுதியோ இதன்விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கின்றது, என்ன விளைவு? எண்ணெய் தரமாட்டோம் என அடம்பிடிக்கும் அதுதான் விளைவு வேறொன்றுமில்லை

ஏன் விஷயம் இவ்வளவு பெரிதாகின்றது என்றால் பத்திரிகை உலகால், பத்திரிகைகள் இந்த படுகொலையினை விடுவதாக இல்லை

இன்னொரு கோணமும் உண்டு

அமெரிக்காவிடம் இருந்து 11,500 பில்லியன் டாலருக்கு ஆயுதம் வாங்க ஒப்பந்தம் செய்திருகின்றது சவுதி

இந்த ஆயுதம் வாங்கபட்டால் ஏமனில் சவுதி சதிராட்டம் ஆடும், ஈரானுக்கும் நல்லது அல்ல‌

இதனால் ஈரானிய கரங்கள் அமெரிக்க சவுதி இடையே பிளவை ஏற்படுத்த வந்திருகலாம் என்கின்றது ஒரு செய்தி

இல்லை சவுதி வாங்கும் ஆயுதம் ரகசியமாக தீவிரவாதிகள் கைக்கு சென்று இஸ்ரேலை தாக்கும் அபாயம் இருப்பதால் இஸ்ரேல் முந்திகொண்டது என்கின்றது இன்னொரு தரப்பு

ஆனால் இஸ்ரேலோ நாங்கள் நடத்தும் படுகொலை இவ்வளவு மொக்கையாக இருக்காது என மவுனமாக சிரிக்கின்றது

விஷயம் சவுதிக்கு பெரும் தலைவலிதான் சந்தேகமில்லை

உலகில் ஒரு பத்திரிகையாளருக்கு நடந்திருக்கும் அநீதிக்கு மொத்த பத்திரிகை உலகமும் பொங்கி வல்லரசுகளை காட்சியில் இறக்குகின்றன‌

இங்கோ இந்த சவுக்கு சங்கர் என்பவரை சில நாட்களாக காணவில்லை, எந்த கட்சி அலுவலகத்திற்கு சென்றாரோ? யார் தூக்கி சென்றார்களோ தெரியாது

[ October 23, 2018 ]

============================================================================

பட்டாசுகளுக்கு நிச்சயம் சீனாதான் தாய்பூமி, அவர்கள் அந்த வெடிபொருட்களை வைத்து என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்றால் வான வேடிக்கை செய்து பேய் விரட்டினார்கள்

அரசன் முடி சூடுதல், வருடபிறப்பு கொண்டாட்டம் போன்ற நாட்களில் வெடித்து மகிழ்ந்தார்கள்

ஆனால் அதை வைத்து ஆயுதம் செய்யலாம் என அவர்களுக்கு தெரியவில்லை என்பதுதான் சோகம், சந்தோஷத்திற்கு வெடிப்பார்களே தவிர சண்டை என்றால் கத்தி, கோடாரி, அரிவாள் தான்

மங்கோலியரின் புண்ணியத்தில் சீனா ஐரோப்பா வரை நீண்டு ஆங்காங்கே அது யுத்த வெடிபொருளானது, பாபர் அப்படித்தான் பீரங்கியோடு இந்தியா வந்தான்

(பாஜக கும்பலிடம் கேளுங்கள் பீரங்கியால் ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டினான் என அளந்து விடுவார்கள்)

அதாவது மார்க்கோபோலோ சீனா செல்லும் வரை நிலை அப்படித்தான் இருந்தது, வெடி பொருட்கள் ஐரோப்பியர் கண்களில் பட்டபின்புதான் யுத்தத்திற்கு அதை பயன்படுத்தும் நுட்பம் வந்தது

சுரங்கம் தோண்டுவதற்கு பெருமளவில் அது பயன்பட்டது, உலகம் மாற ஆரம்பித்தது அதன் பிறகுதான்

நமது பக்கங்களில் ஆழ் கிணறு தோண்டும் வேலையினை இந்த வெடிபொருட்கள் எளிதாக்கின, நிலத்தடி நீர்மட்டத்தின் ஆபத்திற்கு அதுதான் தொடக்கபுள்ளி

பின் யுத்த வெற்றியினை நிர்ணயிக்கும் சக்தியாக அந்த வேடிக்கை வெடிபொருள் ஆனது

விஷயம் இதுதான், சீனாதான் பட்டுக்கும், காகிதத்திற்கும், பட்டாசுக்கும் தாய்பூமி

சிவகாசி என்பது வானம் பார்த்த வறண்ட பூமி , அங்கிருந்து அய்ய நாடார் என்பவர் தொழில் வாய்ப்பிற்காக சீனா எல்லாம் சுற்றி வந்து சிவகாசியில் பட்டாசு ஆலையினை தொடங்கினார்

அதிலிருந்து சிவகாசி பட்டாசு பூமியாய் ஆயிற்று

இப்பொழுது சிக்கல் என்னவென்றால், தாராளமயமாக்கல் உள்ளிட்ட சட்டங்களில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதால் எல்லா பொருளும் இங்கு வந்து குவியும் இந்தியா தடுக்க முடியாது , ஒப்பந்தம் அப்படி

அப்படி சிவகாசி பட்டாசும் சீனாவிற்கு செல்லும் ஆனால் சீன பட்டாசுகளின் விலை முன் சிவகாசி பட்டாசு விலை அதிகம் என்பதால் சந்தை இல்லை

இப்பொழுது சீன பட்டாசை புறக்கணிக்க வேண்டும் சிவகாசியினை வாழவைக்க வேண்டும் என பெரும் குரல் எழுகின்றது, நல்லது

அப்படியே இந்த வியாபார உலகில் எங்கிருந்தெல்லாமோ விவசாய பொருட்கள் , உணவு பொருட்கள் இங்கு குவிகின்றன‌

அதை எல்லாம் விரட்டிவிட்டு உள்ளூர் விவசாயி பொருளை வாங்கி அவனை காக்க வேண்டும் என யாரும் குரல் எழுப்பவில்லை என்பதுதான் சோகம்

பட்டாசு என்பது கொழுத்த வியாபாரம் என்பதால் வியாபார குரல்கள் எழும்புகின்றன‌

விவசாயிக்கு யார் உண்டு? அவன் அற்ப அழிந்துவரும் உயிரினம்

[ October 23, 2018 ]

============================================================================

சிதறல்கள்

ஒரு நொடி சிந்திதது ஒரு “உறை” போட மறந்தவர்தான் , மாநில நிதி நிலையினை உரையாக வாசிப்பவராம்

தனிபட்ட முறையிலே பெரும் கவனகுறைவில் இருந்துவிட்டவர், மாநில நிதி துறையில் என்னென்ன கவன குறைவுகளை வைத்திருக்கின்றாரோ??

[ October 22, 2018 ]

============================================================================

இப்பொழுதும் என்ன நடந்தது என கேளுங்கள், அக்கட்சியிலிருந்து “நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேண்டுமென்றாள்..” என்ற பாடல்தான் வரும்

உண்மையில் அவர்கள் இப்பொழுது பாட வேண்டிய பாடல் எது தெரியுமா?

“இளமை எனும் பூங்காற்று, பாடியது ஓர் பாட்டு….” [ October 22, 2018 ]

============================================================================

லஞ்ச குற்றச்சாட்டில் சிபிஐ, ‘ரா’வின் முக்கிய அதிகாரிகள் சிக்குகின்றனர்

உள்நாட்டில் சிபிஐ விசாரித்த எந்த வழக்கிற்கும் முடிவு தெரியவில்லை, எந்த சோதனைக்கும் விளக்கம் இல்லை

வெளிநாட்டில் ரா உளவாளிகளை கோழி அமுக்குவது போல் அமுக்குகின்றனர் அல்லது முந்தி கொண்டு தலையினை கொடுக்கின்றனர்.

கூட்டி கழித்து பார்த்தால் விஷயம் சரிதான். [ October 22, 2018 ]

===========================================================================

தமிழகத்தை மிரட்டும் டெங்கு, பன்றிக்காய்ச்சல்; மருத்துவ அவசர நிலையைப் பிரகடனம் செய்க: அன்புமணி

சாதி அபிமானத்தை மட்டும் விட்டுவிட்டால் இந்த ராமதாசும், அன்புமணியும் நல்ல அரசியல்வாதிகள் சந்தேகமில்லை

ஆனால் அந்த சனியனை விடாமல் அல்லது விடமுடியாமல் சிக்கிகொண்டார்கள்

நிச்சயம் அவசர நிலையினை பிரகடனம் செய்யும் நேரமிது, தமிழக நிலவரம் குறிப்பாக தென் பகுதி நிலவரம் அப்படித்தான் இருக்கின்றது.

[ October 22, 2018 ]

============================================================================

பருவமழை விரைவில் தொடங்கும் என எப்படி கணித்தார்கள்?

விஷயம் மிக எளிதானது

இதோ மயில் தோகையினை விரித்துவிட்டது, இதை விட என்ன ஆதாரம் வேண்டும்???

{ October 22, 2018 ]
Image may contain: 1 person, smiling, selfie and closeup
========================================================================

கண்ணதாசன் முதலில் திமுகவில் இருந்தார், நாத்திகம்தான் பேசினார்

மதுவும் மாதுவுமாக அவர் வாழ்வும் கழிந்தது, எவ்வித வரையரைகளுக்கும் கட்டுபடாமல் வாழ்ந்தார், ஆனால் பாடல்களில் கம்பனின் துல்லியம் இருந்தது

வாழ்க்கை சுழலும், சுயநல அரசியலும் அவருக்கு பல தத்தவங்களை உணர்த்தின, குடித்தார், குழம்பினார், தவித்தார், துடித்தார்

ஒரு விபத்தொன்றில் சிக்கி மருததுவனையில் இருந்தபொழுதுதான் காஞ்சி பெரியவர் அவருக்கு பிரசாதம் கொடுத்து அவரை இந்துமதம் பற்றி எழுத சொன்னார்

அதன் பின் அவர் கொடுத்ததுதான் இரண்டாம் கீதையான அர்த்தமுள்ள இந்துமதம்

கவிஞர்கள் ரசனையும் உணர்ச்சி குவியலும் கொண்டவர்கள் அந்த மாபெரும் ரசனையின் உச்சத்தில்தான் அவர்களால் அழியா காவியங்களை படைக்க முடியும்

கம்பன் முதல் எத்தனையோ கவிஞர்கள் பெண் மோகம் கொண்டிருந்தார்கள், இலக்கியவாதிகள் பலரும் அவ்வழியே

அவர்கள் வாழ்வும் மனமும் அப்படித்தான் விதிக்கபட்டிருக்கின்றது

கண்ணதாசன் பெரும் இக்கட்டில் இருந்து மீண்டு அர்த்தமுள்ள இந்துமதம் எழுதினார்

யாரும் குடிகாரன் என்றோ, மாதுபிரியன் என்றோ அவரின் எழுத்தை புறக்கணிக்கவில்லை மாறாக கொண்டாடினார்கள்

வைரமுத்துவும் திராவிட இம்சைகளில் இருந்து தப்பி பகவானின் திருவடிக்கு வரட்டும்

அழியா இறைகாவியங்களை அர்த்தமுள்ள இந்துமதம் போல எழுதட்டும்

வைரமுத்து யார் வாழ்வினையும் கெடுக்கவில்லை, யாருடைய கண்ணீருக்கும் காரணமாகவும் இல்லை, நடப்பதெல்லாம் அரசியல் விளையாட்டு

ஆண்டவன் விளையாட்டாகவும் இருக்கலாம்

அவர் ஆத்திகராகட்டும், நிச்சயம் அவரின் எழுத்துக்கள் பெரும் பக்தி இலக்கியங்களை கொடுக்கும், அவரின் எழுத்து மேல் அவ்வளவு நம்பிக்கை இருக்கின்றது

நிச்சயம் அவரால் முடியும் என தெரிந்துதான் ஆண்டவன் அழைக்கின்றான்

ஒரு காலத்தில் திருடனாய் இருந்த வால்மிகிதான் ராமாயணம் எழுதினான்

திராவிட மேடையில் இந்து தெய்வங்களை கடுமையாக விமர்சித்த கண்ணதாசனே அர்த்தமுள்ள இந்துமதம் எழுதினார்

அப்படி வைரமுத்துவும் வரட்டும், வரலாற்றில் நிலைக்கட்டும்

கடும் சர்ச்சைகளில் ஒரு அற்புத கவிஞன், சொல் வித்தகன் , காலம் கொடுத்த அற்புத எழுத்தாளன் ஒருவன் தொலைந்துவிட கூடாது என்பதுதான் நம் அவா

அந்த தமிழ் கற்பூரம் கடவுளில் கரையட்டும் , அழியா காவியங்கள் எழும்பட்டும்

[ October 22, 2018 ]

============================================================================

பிரதமர் வேட்பாளராக நாங்கள் ராகுலை முன்னிறுத்தவில்லை : ப.சிதம்பரம்

இதை ராகுல் காந்தியும் ஒப்புகொண்டதாக தெரிகின்றது

அப்படியானால் காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் யார்? சந்தேகமே இல்லை தலைவி குஷ்பு தான்

அருமை இந்தியாவே, இரண்டாம் இந்திரா, இந்தியாவின் தாட்சர், பாரத்ததை காக்க வந்த கோல்டா மேயர் குஷ்புவினை விட்டு விடாதே

அவரையும் விட்டுவிட்டால் உனக்கு கதியே இல்லை

பல்லாயிரம் முனிவர்களும் யோகிகளும் வாழ்ந்த இந்நாட்டின் கடைசி காவல் அரண் குஷ்பு ஒருவரே [ October 22, 2018 ]

============================================================================

என் மீதான சர்ச்சை தினகரன் கோஷ்டியின் திட்டமிட்ட சதி, இதனை சட்டபடி சந்திப்பேன் : ஜெயக்குமார் பேட்டி

நாட்டாமை படத்தில் விஜயகுமார் சொல்லும் “நிறுத்துடா, அவங்களுக்கு பாய் நீதாண்டா கொடுக்கணும், அதில நீயே படுத்திட்டா எப்படிடா?” எனும் வசனம் நினைவுக்கு வந்து போகின்றது

எப்படியோ ஜெயகுமார் கோஷ்டியும் தினகரன் கோஷ்டியும் அடித்து கொண்டால் சரி, இதில் எது ஒழிந்தாலும் தமிழகத்திற்கு நல்லது

[ October 22, 2018 ]
Image may contain: 1 person, beard and outdoor
========================================================================

 

சிதறல்கள்

பொதுவாக சர்ச்சைகளில் சிக்கி கொள்ளாதவர் ஏ.ஆர் ரகுமான். இசை தவிர வேறு செய்திகளில் அவரை பார்க்க முடியாது

முழுக்க இசை இசை என எம்.எஸ் விஸ்வந்தானுக்கு பின் தமிழகம் கண்ட இசை அமைப்பாளர் அவர். எவ்வித சர்ச்சையும் அவரை பற்றி வந்ததே இல்லை

இப்பொழுது சர்ச்சை அவரின் சொந்த சகோதரி வடிவில் வருகின்றது, வைரமுத்து பற்றி என்னவெல்லாமோ சொல்கின்றார் சகோதரி

ரகுமான் சிறந்த இசை அமைப்பாளர் சந்தேகமில்லை ஆனால் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றதில் வைரமுத்துவின் வரிகளுக்கும் பெரும் பங்கு உண்டு

இளையராஜாவினை பிரிந்து முட்டையில் இருந்து வந்த குஞ்சாக ரகுமான் நின்றபொழுது வைரமுத்துவின் வரிகளே அவருக்கு இறக்கை வளர்த்தன, பறக்க கற்றும் கொடுத்தது

ரகுமானின் வளர்ச்சியில் வைரமுத்துவிற்கு மகத்தான பங்கு உண்டு

ரகுமானின் ஆரம்ப காலங்களில் எல்லாம் வைரமுத்துவின் வரிகள் ரகுமானுக்கு அப்படி வேர்பிடித்து கிளைபரப்பி கொடுத்தன, யார் மறுக்க முடியும்?

இன்று ரகுமான் ஆலமரமாக வளர்ந்துவிட்டார், ஆனால் அன்று அந்த சிறிய செடிக்கு நீர் ஊற்றியது யாரென்றால் வைரமுத்து

அந்த சிறிய தீபொறியினை பெரும் தீபமாக வளர வைத்ததில் வைரமுத்துவின் காற்றும் இருக்கின்றது.

அதை எல்லாம் மறந்துவிட்டு அவர் சகோதரி வைரமுத்துவினை கடுமையாக விமர்சிக்கின்றார்

இதை எல்லாம் ஆதிகாலத்திலே சொல்லி இருக்கலாம், அப்பொழுதெல்லாம் ரகுமான் வளர வைரமுத்து தேவையாய் இருந்ததால் அம்மணி சொல்லாமல் இருக்கலாம்

இன்று ரகுமான் உலக அளவில் சென்றுவிட்டதால் இனி வைரமுத்து தேவை இல்லாதவராக இருக்கலாம்

சின்மயியும் இதைத்தான் செய்தார், இப்பொழுது இந்த ரகானா வந்திருகின்றார்

ஆக “வேப்பிலை கறிவேப்பிலை அது யாரோ நான் தானோ யாரோ நான் தானோ..” என்ற அவரின் வரிகள் வைரமுத்துவிற்கே பொருந்தும்

வைரமுத்து மேல் ஆயிரம் தவறு இருக்கலாம், ஆனால் இந்த கண்ணகி தேவதைகள் அன்றே அவரை செவிட்டில் அறைந்தால் என்ன?

அப்பொழுதெல்லாம் அவரை பயன்படுத்திவிட்டு இப்பொழுது வந்து குத்துவது எல்லாம் என்ன வகை நியாயமோ தெரியவில்லை

ஆளாளுக்கு பயன்படுத்தி இருக்கின்றார்கள் அதன் பின் அவரை வீசி எறிகின்றார்கள்

“ஊரை தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்மணி..” என வைரமுத்து தன் வரிகளாலே ஆறுதல் தேடும் நேரம் இது

ஏ.ஆர் ரகுமான் இதுபற்றி என்ன சொல்வாரோ தெரியாது

ஆனால் வைரமுத்து பற்றி தெரிந்தும் காற்றுவெளியிடை வரை பணிபுரிந்திருப்பாரா என்றால் நிச்சயம் இல்லை

தனக்கு வாழ்வளித்த, தன் ஆரம்ப காலங்களில் துணை நின்ற வைரமுத்துவிற்கு ஆறுதலாக ரகுமான் ஏதும் சொல்ல வேண்டிய நேரமிது

இல்லாவிட்டால் “செய்நன்றி கொன்ற பாவத்திற்கு” அவர் ஆளாக நேரிடும்

நன்றி கொன்ற யாரும் உருப்பட்டதில்லை என்பது திரையுலக சரித்திரம்

ஒருவேளை சகோதரி புகாரளித்தும் ரகுமான் வைரமுத்துவோடு தொடர்ந்திருந்தால் என்றால் அது என்னவகையில் வரும் என்றால் வடிவேலு பேக்கரி காமெடி லெவலில் வரும்

நிச்சயம் ரகுமான் அப்படிபட்டவர் அல்ல‌

[ October 22, 2018 ]

Image may contain: 2 people, people smiling, people standing and outdoor
===========================================================================

இவ்வளவு படம் நடிச்சிருக்கேன், கதாநாயகிய சினிமாவுல கூட‌ தொட்டதில்ல, ஆஞ்சநேயர் பக்தன்

சொல்ல முடியுமா என் மேலே மி டூ
ஆதாரம் இருந்த நீ காட்டு

நானும் புத்தனும் ஒன்னு, இத அறியாதவன் வாயில மண்ணு

நானும் காந்தியும் மீ டூ,
நானும் அப்துல் கலாமும் மீ டு { October 22, 2018 ]

===========================================================================

ஜெயாவிற்கு சொத்துகுவிப்பு வழக்கு நடத்திய திமுக, வானதி சீனிவாசனின் மிக்பெரும் சொத்துகுவிப்பு பற்றி ஏன் கண்டுகொள்ளவில்லை என யாரும் கேட்க கூடாது

அரசியல் கணக்கில்லாமல் இங்கு வழக்குமில்லை, சில விஷயங்களில் அமைதியுமில்லை [ October 22, 2018 ]

===========================================================================

“எந்த யழவு நேரத்தில உம்மை இங்கு கவர்னர் ஆக்கினோமே தெரியலை

அப்பொழுது இருந்தே ஒரே பெண்கள் சர்ச்சையா வருது, என்ன ராசியா இது? ..”

[ October 22, 2018 ]
Image may contain: 2 people
============================================================================

“ஒரு காலத்துல எவ்வளவு கிசுகிசு நம்மள பத்தி எழுதுனாங்க, எவ்வளவு செய்தி வந்திச்சி..

இப்போ மி டூல கூட நம்ம பெயர் இல்லியே…”

[ October 22, 2018 ]
Image may contain: 1 person
=========================================================================

கேரள விவகாரத்தை கவனித்தால் சில விஷயங்கள் புரியும்

அங்கே கிறிஸ்தவ பாதிரி அட்டகாசத்தை அந்த மாநில அரசு கண்டுகொண்டதாக தெரியவில்லை, ஒருமாதிரி ஒதுங்கி இருந்தது

அந்த ஹிதாயா எனும் பெண் இஸ்லாமாக மாறி பாதுகாப்பு கேட்ட நேரத்தில் அது மிகபெரும் பாதுகாப்பை கொடுத்தது

ஆனால் இந்துக்களின் விவகாரத்தில் மட்டும் மோதல் போக்கை கடைபிடிக்கின்றது

இந்தியாவில் கம்யூனிஸ்ட் ஆளும் கடைசி மாநிலமான கேரளாவில் அதற்கு இறுதி ஆணி அடிக்கபட்டு கொண்டிருக்கின்றது [ October 22, 2018 ]

===========================================================================

பிஷப் பிராங்கோ பாலியல் புகார் வழக்கு: முக்கிய சாட்சியான பாதிரியார் மர்ம மரணம்

நீதியினை காக்க உயிரை விடுபவன் பேறுபெற்றவன் என பைபிளில் சொல்லபட்டிருக்கின்றது [ October 22, 2018 ]

============================================================================

உணர்ச்சி மிகுதியால் தவறுதலாக பேசிவிட்டேன் – சென்னை உயர்நீதி மன்றத்தில் ஹெச்.ராஜா விளக்கம்

அது எப்படி மன்னிப்பு கேட்கலாம் என சிலர் கிளம்புகின்றனர்

எச்.ராசா என்ன செய்திருக்க வேண்டும், எனக்கு அல்மய்சர் எதுவுமே நினைவு இல்லை, டாகடரை பார்த்தால் கூட பிராண்டி விடுகின்றேன் என சொல்லி மன்னிப்பு கேட்காமல் வந்திருக்க வேண்டும் அது சாதுர்யம்

வழக்கை 18 ஆண்டுகாலம் இழுத்திருக்க வேண்டும் மயிர் என்றால் உச்சி முடி மரியாதை என்றெல்லாம் தமிழில் விளக்கி நீதிபதி தலையினை பிய்க்கும்படி செய்திருக்க வேண்டும்

எனக்கு உடல் சரியில்லை, என் வீட்டு டிரைவருக்கு வயிற்று போக்கு, காரில் பெட்ரோல் இல்லை என்றெல்லாம் வாய்தா வாங்கி இருக்க வேண்டும்

இல்லாவிட்டால் என்ன செய்திருக்க வேண்டும், என்னை 4 பல்பிடுங்கிய பாம்புகளோடு சிறையில் அடையுங்கள் குறிப்பாக பாளையங்கோட்டை சிறையில் அடையுங்கள் நானும் பாட்டுபாடி தலைவராக வேண்டும் என கேட்டிருக்க வேண்டும்

மாறாக மன்னிப்பு கேட்டது தவறு. [ October 22, 2018 ]

============================================================================

பாஜகவிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவோம் : அருள்மொழி

முதலில் திராவிடர் கழகத்தை வீரமணியிடம் இருந்து காப்பாற்றுங்கள் பார்க்கலாம் [ October 22, 2018 ]

============================================================================

26ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குகின்றது :செய்தி

அதாவது தமிழக மாணவர்களுக்கு விடுமுறை காலம் தொடங்குகின்றது, அவர்களுக்கு ஏக மகிழ்ச்சி

கூடவே ஆசிரியர்களுக்கும் கடும் எதிர்பார்ப்பு [ October 22, 2018 ]

சிதறல்கள்

“என்ன கைய பிடிச்சி இழுத்தியா?” போட்டியில் வைரமுத்து வெற்றி அடைந்தார், சின்மயி அவுட்்

ஆம், சின்மயியும் அவர் தாயாரும் சொல்லும் குற்றசாட்டுக்கள் அடிப்படை ஆதாரம் கூட இல்லாததாயிற்று

வைரமுத்து நேரடியாக சின்மயிடம் தவறாக பேசவில்லை, சின்மயி விரலை கூட தொடவில்லை, சம்பவம் நடந்ததாக சின்மயி சொல்வது சுவிஸில் அதுவும் இன்னொருவர் மூலமாக வைரமுத்து தன்னை அணுகினார் என்றார்

சென்னையில் அனுதினமும் பார்க்க கூடிய, ஏன் நல்லவிதமான தொழில் உறவில் இருந்தும் கூட சின்மயியிடம் தன் விருப்பத்தை தெரிவிக்கா வைரமுத்து சுவிஸில் அதுவும் யார் மூலமாகவோ தெரிவித்தார் என்பது ஏற்புடையது அல்ல‌

அந்த சுவிஸ் நபரும் வைரமுத்து அப்படி சொல்லவில்லை என சொல்லிவிட்டதால் சின்மயி விக்கெட் வீழ்ந்தது

சின்மயி கோர்ட்டுக்கு போனாலும் நிரூபிக்க முடியா விவகாரம் இது.

இப்பொழுது அடுத்த சுற்றில் தியாகராஜனும், அர்ஜூனும் சிக்கி இருக்கின்றார்கள்

ஆச்சரியமாக மனைவி பிரிந்து வாழும் பிரசாந்த் சிக்காத பொழுது தியாகராஜன் சிக்கி இருக்கின்றார்

வைரமுத்து வெளிவந்தது போல் இவர்கள் வருவார்களா? இல்லை குற்றம் நிரூபிக்கபடுமா என தெரியவில்லை

சுருக்கமாக சொல்ல போனால் செத்துபோன நடிகர்கள் எல்லாம் பாக்கியவான்கள்

[October 22, 2018 ]

============================================================================

 

நான் யாருக்காக வாழ்கின்றேன், எதற்கு வாழ்கின்றேன் என எனக்கே தெரியவில்லை ஆனால் எனக்காக வாழ்பவர் என் தாய்க்கு பின் என் மனைவி, அதாவது பாகம்பிரியாள்

அன்னாருக்கு இன்று பிறந்தநாள், என்னையும் ஒருத்தி கட்டி அழவேண்டும் என்பதற்க்காகவே தியாக பிறப்பொன்று பிறந்த நாள்.

காரணம் என்னோடு வாழ்வதென்பது உலகின் மிக கடினமான காரியம், அதுவும் மனைவியாக வாழ்வதென்பது மிக மிக கொடுமையான விஷயம்.

உதாரணம், அழகிய கார்கள் அணிவகுத்துவரும்பொழுது அதானை காட்டி பார்த்தீர்களா என்பாள், இந்த 100 கார்களுக்கு எவ்வளவு பெட்ரோல் வேண்டும், அப்படியானால் உலகெல்லாம் எவ்வளவு வேண்டும், எத்தனைஆயிரம் லிட்டர்கள் நொடிக்கு காலியாகும், அரபுசிக்கலுக்கு அதுதான் காரணம் என்பேன் தலையில் அடித்த்து கொள்வாள்

பட்டுசேலைகளை காட்டி, எப்படி அழகு என்பாள், உனக்கு பட்டின் வரலாறு தெரியுமா?, பட்டு சாலை தெரியுமா? அதனால் வந்த சிலுவை போர் தெரியுமா?, இந்த காஞ்சிபுரம் பட்டு நெசவாளர்கள் பிரச்சினை கூட படமாக வந்தது என்றால் அப்படியே நகர்ந்துகொள்வாள்

அழகான கட்டங்களை காட்டி எப்படி இருக்கிறது என்பாள், இதன் அழகிற்காக எத்தனை ஆயிரம் மலைகள் உடைக்கபட்டிருக்கும், எவ்வளவு செம்மண் அழகபட்டிருக்கும் அவை எல்ல்லாம் அழிந்து இது உருவாகி இருக்கிறது என்பேன், பேசாமல் திரும்பிகொள்வாள்

காரணம் நான் அப்படித்தான், அவளும் தண்ணீர் தெளித்துவிட்டாள்.

குஷ்பு படம் ஓடும்பொழுது சேனலை திருப்புவதை தவிர வேறு ஒரு குறையும் அவளிடம் காணமுடியாது.

எனக்கு நன்றாக தெரியும், அவளால் நான் சஞ்சரிக்கும் உலகில் வரமுடியாது, என்னால் அவளின் சராசரி வாழ்வோடு ஒட்ட முடியாது

ஆயினும் சாகச பயணம் தொடர்கின்றது

எனக்காக அவளின் தவ வாழ்வு தொடர்கிறது, அவள் புதுபடங்களை வைத்தால் நான் சிவாஜியில் மூழ்கிவிடுவேன், பொறுக்கமுடியாமல் சிலநேரம் அழுதே விடுவாள், நான் வியட்நாம் வீடு பார்த்து பத்மினிக்காக அழுதுகொண்டிருப்பேன்.

இப்படியாக தியாக வாழ்க்கை ஒன்றை அவள் வாழ்ந்துகொண்டிருக்கின்றாள், யாருக்காக? நிச்சயம் எனக்க்காக…..

நல்ல தாயும், நல்ல மனைவியும் ஆண்டவன் கொடுக்கும் வரம் என்பார்கள், நிரம்ப பெற்றிருக்கின்றேன்

ஒருவனுக்கு சொத்து, வீடு இன்னபிற வசதிகள் பெற்றோர் கொடுக்கலாம், ஆனால் நல்ல மனைவி தெய்வத்தால் மட்டுமே கொடுக்கபடுவாள் என்கிறது பைபிள்

அப்படி கொடுத்த தெய்வம் , அவளை ஆசீர்வதிக்கட்டும், அவள் பல்லாண்டு வாழட்டும்

காரணம் அவள் வாழ வாழத்தான் நானும் வாழமுடியும்.

அவ்வையார் அன்றே அழகாக சொன்னார்

“இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் – இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்”

அவளே சகலமும், அவளே எல்லாமும். பாகம்பிரியாள் என சொல்வதில் மிகை ஏதுமில்லை

அந்த தியாகியினை வல்ல இறைவன் ஆசீர்வதிக்கட்டும், அவளின்றி அமையாது வாழ்வு

[ October 22, 2018 ]

============================================================================

காலா வெற்றிவிழா ஏன் நடத்தவில்லை என யாராவது கேட்டுவிடுவார்களோ என்று பயமாக இருந்தது நல்ல வேளையாக கேட்கவில்லை

கட்சி எல்லாம் இப்போ ஏன் தொடங்கணும்? , “நான் விரும்பும் தமிழகம்”னு ஏற்கனவே உயில் எழுதி வச்சிட்டேன், காலம் வரும்போது வக்கீல் வாசிப்பார்.

அப்பொழுது ரசிகர்கள் கட்சி தொடங்கி நடத்தினா போதாதா?

“உண்மையான ரசிகனா இருந்தா என் கனவினை நிறைவேற்றுன்னு…” உயில்ல்ல‌ நாலுவரி இருக்கு அது போதும். [ October 22, 2018 ]

============================================================================

ராவணன் ராமர் பக்கம் யாரையும் கொல்லவில்லை அவன் நல்லவன். ராமனே ராவணின் தம்பியரை கொன்றார், ராவணன் குடும்பத்தை கொன்றான் என ஒரு கோஷ்டி கிளம்பி இருக்கின்றது

ராமன் எனும் நல்லவனை நம்பிய யாரும் சாகவில்லை, ஆனால் ராவணன் பக்கம் தவறே இருந்தும் அவனுடன் வீம்புக்கு நின்றவர்களே கொல்லபட்டனர்

நியாயம் இருந்த இடத்தில் தெய்வம் இருக்கும், அது ராவணால் கொல்லபடாதவகையில் ராமனையும் அவனுடன் இருந்தவர்களையும் காத்தது

மகாபாரதத்திலும் இதுவேதான் நடந்தது

ராமன் முதலில் தூதுவிட்டான், சீதையினை ஒப்படைக்க சொன்னான், ஆனால் போரை துவக்கியது ராவணன்

அத்தனை அழிவினையும் தேடியது ராவணனே அன்றி வேறுயாரும் அல்ல‌

அயோக்கியனுடன் சென்ற யாரும் நிலைக்கவில்லை, ராமனை நம்பியதால் குரங்குக்கு கூட இங்கு கோயில் வந்தது

ராமாயண தத்துவம் அதுதான். [ October 22, 2018 ]

===========================================================================

துருக்கி சவுதி ஊடகவியலாளர் ஜமால் கொல்லபட்ட சர்ச்சை இன்னும் தீரவில்லை, இப்போது டிரம்பும் சீற்றத்தை குறைத்து ஒரு மாதிரி மழுப்பி கொண்டிருக்கும் பொழுது அடுத்த அதிர்ச்சி நடந்திருக்கின்றது

இம்முறை இஸ்தான்புல்லில் ஈரானிய டிவி நிறுவணர் கரிமீயன் என்பவர் கொல்லபட்டிருக்கின்றார்

அன்னார் டிவி என்ன செய்யும் என்றால் அது பாரசீக மொழி டிவி, மேல்நாட்டு டிவி காட்சிகளை பாரசீக மொழியில் மொழிபெயர்த்து அரபு பக்கம் டிவி நடத்திகொண்டிருந்தது

பொதுவாக மேல்நாட்டு கலாச்சாரத்தை விரும்பாத ஈரான் இதை சந்தேக கண்ணோடு பார்த்தது, சும்மாவே ரேடியோ முதல் டிவி வரை தன் நாட்டு மக்களிடம் அமெரிக்கா ஏதும் சொல்லி புரட்சி ஏற்படுத்துமோ என அஞ்சும் நாடு ஈரான்

இதனால் இந்த டிவியினை கைக்கூலி டிவியாக கண்டித்து இவருக்கு 6 வருட சிறை எல்லாம் விதித்தது

அவரோ துருக்கு இஸ்தான்புல்லில் இருந்து அமெரிக்கா செல்லும் முடிவில் இருந்தார்

இந்நிலையில் அவர் சுட்டுகொல்லபட்டிருக்கின்றார்

யார் சுட்டு கொன்றார்கள் என்பத்துதான் மில்லியன் டாலர் கேள்வி

ஈரான் இன்னும் வாய்திறக்கவில்லை, அதே நேரம் துருக்கிக்கும் ஈரானுக்குமான நல்லுறவை கெடுக்க நினைத்த சக்திகள் செய்த சதி எனும் கோணத்தையும் மறுக்க முடியாது

எப்படியோ ஜமாலை தொடர்ந்து கரீமியன் கொல்லபட்டதில் துருக்கி ஏகபட்ட அப்செட்டில் இருக்கின்றது

உளவுதுறை விளையாட்டுக்கள் எப்படி இருக்கும் என்றால் இப்படித்தான், துருக்கிக்கு தலைவலி கொடுத்தாயிற்று.

தமிழகம் இந்த அளவிற்கு எல்லாம் இல்லை, நிர்மலா விவகாரம் வந்தால் சின்மயி விவகாரம் வரும் , கொஞ்ச நாளில் யாவரும் நலம்

[ October 22, 2018 ]

=========================================================================

“சிந்து சிந்து” என பொதுவாக பாஜக கோஷ்டிதான் அலையும், சிந்து நதி இந்தியாவில் பாய வேண்டும், அகண்ட பாரதம் வேண்டும் என அந்த கோஷ்டிதான் சொல்லி கொண்டே இருக்கும்

இப்பொழுது தமிழகமும் “சிந்து சிந்து” என ஆரம்பித்துவிட்டது போல் தெரிகின்றது

அவர் அடிக்கடி பாடுவார் என்பது தெரியும், ஆனால் “நானொரு சிந்து காவடி சிந்து” என பாடியிருக்கின்றார் என்கின்றது செய்திகள்

என்னென்னவோ செய்திகள் கசிகின்றன‌

ஆனால் ஆதியும் புரியவில்லை , அந்தமும் தெரியவில்லை

புரியுது ஆனால் புரியவில்லை [ October 22, 2018 ]

============================================================================

இன்னும் அவரிடம் யாரும் இந்த “நாக் அவுட் ” பற்றி நேரடியாக கேட்கவில்லை, விஷயம் பெரிதாகவில்லை அல்லது பெரிதாக பலர் விரும்பவில்லை

நிச்சயம் அதிகம் பேசும் அவரிடம் கேட்கத்தான் வேண்டும் ஆனால் கேட்கமாட்டார்கள்

காரணம் , இவரிடம் அவர்கள் சீண்டினால் அவரோ 1968 சம்பவத்தை திருப்பி கேட்டுவிடுவார்

துருப்பு சீட்டு அவரிடமும் உண்டு என்பதால் எதிர்கோஷ்டி அமைதி

இவ்விவகாரத்தில் ரஜினி வாய்திறக்கமாட்டார் அவருக்கு யாருக்கும் பதில் சொல்லி பழக்கமில்லை

கமலோ வாய்திறக்கவே முடியாது

யாரும் ஏதும் சீண்டினால் திருப்பி அடிக்க அவர் களத்தில் கிளவுசும் கையுமாக இறுதி சுற்று மாதவன் போல நிற்பதால் கனத்த அமைதி..

[ October 22, 2018 ]

============================================================================