குஷ்பு

சபரிமலை குறித்து உங்கள் கருத்து?

கடவுளுக்கு ஆண் பெண் பேதமில்லை, எனினும் பல்லாண்டு கால நம்பிக்கை உடனே மாறாது , உடனே மாற்றவும் முடியாது.

சபரிமலை போராளி பெண்கள் பற்றி?

பக்தி இல்லாமல் பதினெட்டு படி தாண்டி அவர்களுக்கு கிடைக்க போவது என்ன? ஒன்றுமில்லை

நீங்கள் மூட நம்பிக்கையினை நம்புகின்றீர்களா?

நம்பிக்கைக்கும், மூட நம்பிக்கைக்கும் வித்தியாசம் உண்டு

ராகுல்காந்தி உட்பட தீர்ப்பை பலர் வரவேற்க கேரள காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பது ஏன்?

கேரளா காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு கடவுள் பக்தியும், நம்பிக்கையும் இருக்க கூடாது என சொல்ல முடியுமா? இது சர்வாதிகார கட்சி அல்ல.

ஓரினசேர்க்கை சட்டபூர்வமானது குறித்து?

இதெல்லாம் அவரவர் மனநிலையினை பொறுத்த விஷயம், சட்டத்தால் இதை தடுக்கவும் முடியாது, பாதுகாக்கவும் முடியாது

திருமணம் தாண்டிய உறவு பற்றிய தீர்ப்பு குறித்து?

இது இரு குடும்பங்கள் தீர்க்க வேண்டிய விஷயம், பாதிக்கபடுவது அவர்கள்தான். ஊரார் பஞ்சாயத்து செய்ய ஒன்றுமில்லை. மற்றபடி தீர்ப்பை பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை

மி டூ புகார் பற்றி?

பெண்ணுக்கு இழைக்கபடும் பாலியல் கொடுமை வலியானது, அவர்கள் எப்பொழுதோ அதை சந்தித்தாலும் அதை வெளி சொல்ல வாய்ப்பு கொடுக்கபட வேண்டும், வரவேற்கின்றேன்

அதுபற்றி பேசும் பிரபலங்கள் பற்றி?

எல்லா பெண்களும் அனுதினமும் சந்திக்கின்றார்கள் ஆனால் பிரபல பெண் பேசினால்தான் முக்கியத்துவமாகின்றது, சாதாரண பெண்களும் பேச வாய்பளிக்க வேண்டும்

புகார்கள் உண்மையா?

குற்றம் சாட்டுகின்றார்களே தவிர, குற்றம் சாட்டபட்டவர் இன்னும் பேசவில்லை அவரும் பேச வாய்பளிக்க வேண்டும்

இப்பொழுது மிக தாமதமான பெண்கள் புகார் பற்றி?

லஞ்சம் கொடுப்பதும் தவறு, வாங்குவதும் தவறு.

அரசியல்வாதிகள் மேலான பாலியல் புகார் பற்றி பொங்குகின்றீர்கள், சினிமாவில் உள்ள பாலியல் புகார் பற்றி என் பேசவில்லை?

சினிமாக்காரர்கள் தேர்தலில் வரவில்லை, மக்கள் பொறுப்பு கொடுக்கவில்லை, இது வேறு துறை. அரசியல் பொறுப்பு என்பது நாட்டை நடத்தும் முக்கியமான துறை

அப்படியானால் சினிமா துறை பாலியல் அத்து மீறலை ஏற்றுகொள்கின்றீர்களா?

எங்கள் நிறுவணத்தில் நடந்த சர்ச்சையில் சம்பந்தபட்டவர்களை நீக்கி இருக்கின்றேன்

வைரமுத்து தண்டிக்கட வேண்டுமா? அவர் திரை துறையில் இருந்து அகற்றபட வேண்டுமா?

வைரமுத்துவினை யாரும் அங்கு நியமிக்கபடவில்லை, அவர் பாடலை கேட்கமாட்டோம் என சொல்ல வேண்டியது தமிழக மக்கள், அவர்கள் சொல்வார்களா?

சின்மயி பற்றி?

அவர் பாடகர், அவர்களுக்கொரு சங்கம் உண்டு. அங்கெல்லாம் ஏன் அவர் புகார் கொடுக்கவில்லை?

அப்படியானால் சினிமா உலகில் தண்டனையே இல்லையா?

அரசு துறையான காவல்துறையில் இருக்கும் விசாகா கமிட்டியே என்ன செய்கின்றது என தெரியவில்லை, ஆனால் சினிமா பெண்கள் பற்றிய பாதுகாப்பை சினிமா உலகம் பார்த்துகொள்ளும்

சினிமாவில் பாலியல் அத்துமீறல் இல்லையா? பெண்கள் பாதுகாப்பு உண்டா?

அங்கும் இதுபற்றி புகாரளிக்க பிரிவு உண்டு, ஆனால் புகார்கள் அங்கு வந்ததாக தெரியவில்லை

ஸ்ரிரெட்டி சொன்னாரே?

அவர் என்னை பயன்படுத்திவிட்டு வாய்ப்பு தரவில்லை என்றுதான் சொன்னாரே தவிர கதற கதற கற்பழித்தார் என்று அல்ல, அவர்கள் அழைத்தால் ஏன் அந்த பெண் சென்றார்?

பாலியல் தொந்தரவினை சகிக்காமல் பெண்கள் சினிமாவில் சாதிக்க முடியுமா?

அப்படியானால் சாதித்த பெண்கள் எல்லாம் இதை ஏற்றுகொண்டார் என்கின்றீர்களா? மடத்தனமாக இல்லை

‍‍ எவ்வளவு அறிவார்ந்த பதில்கள், எவ்வளவு நிதானமான அட்டகாசமான உண்மைகள்

கலைஞருக்கு பின் பத்திரிகையாளருக்கு அட்டகாசமாக பதில் சொல்லும் ஒரே தலைவர் குஷ்பு

கேள்விகளை எதிர்கேள்விகளாக மாற்றி கேட்ட லாவகமும் , சிந்திக்க வைத்த கேள்விகளும் தலைவி தனிபெரும் சிந்தனையாளர் என்பதை காட்டிற்று

நேற்றைய தந்தி டிவி நேர்காணலில் கலைஞரின் சமயோசித பதில்களை நினைவுபடுத்தினார், அட்டகாசம்

எந்த கேள்வியும் அவருக்கு சிக்கலாக இல்லை என்பது அவரின் அறிவு முதிர்ச்சியின், பக்குவத்தின் வெளிப்பாடு

தலைவிக்கு சங்கமும் கோடிகணக்கான தொண்டர்களும் உண்டென்றால் இந்த அறிவிற்கும் தைரியத்திற்கும்தான்

தலைவி வாழ்க…..

Image may contain: 1 person, sitting and text
============================================================================

அரசியல் பேட்டி கொடுப்பதென்றால் ரஜினிக்கு என்னவென்றே தெரியவில்லை, தலை சுத்துது என சுகர் நோயாளியாக இல்லை ரேபிஸ் நோயாளியாக‌ கத்திவிட்டு செல்கின்றார்

கமலஹாசன் பேட்டியில் அவர் என்ன பேசுகின்றார் என்பது அவரே பலமுறை கேட்டாலும் புரியாது

மிக நிதானமாக, கவனமாக பத்திரிகைகளை கையாள்வதில் தலைவி குஷ்பு மிளிர்கின்றார்

ஏம்பா ரஜினி, கமல் கொஞ்சமாவது தலைவியிடம் இருந்து அரசியல் பேட்டி கொடுப்பது எப்படி என கொஞ்சமாவது கற்றுகொள்ளுங்கள்

வெட்கபடாதீர்கள், அரசியலுக்கு வந்தபின் என்ன வெட்கம் வேண்டியிருக்கின்றது??

[ October 24, 2018 ]
Image may contain: 1 person, smiling, sitting

சிதறல்கள்

ஐ.எஸ் இயக்கத்தை தாக்குகின்றோம் என சிரியா மசூதிகளை தாக்கி இருக்கின்றது அமெரிக்கா

இதுவே ரஷ்யா தாக்கி இருந்தால் அய்யகோ மசூதியினை தாக்குவதா இஸ்லாமியரே கொந்தளிப்பீர் என உலகில் சென்னை வரை கிளம்புவார்கள்

ஆனால் அமெரிக்கா தாக்கினால் சத்தம் இருக்காது, உலக மீடியா தர்மம் இப்படி

[ October 24, 2018 ]

============================================================================

இந்த உலகம் இன்றல்ல, அன்றே வியாபார ரீதியானது. ஒன்றை கொடுத்து ஒன்றை பெறுவது என்பது ஆதாமின் அடுத்த காலத்திலே இருந்திருக்கின்றது

உலகின் ஆதி தொழில் அப்படித்தான் உருவானது, பெண் ஆணுக்கு எது தேவையோ அதை கொடுத்து தனக்கு தேவையானதை வாங்கி இருக்கின்றாள்

இது பைபிளில் இருக்கின்றது, சங்க இலக்கியத்தில் இருக்கின்றது

ஏன் உலகில் எந்த இனங்களுக்கு வரலாறு, கலாச்சாரம் , இலகியம் என உண்டோ எல்லா இனங்களிலும் இது பதிவு செய்யபட்டிருக்கின்றது

இதை கொடுத்தால் இதை தருவேன் என்பது வியாபாரம், சினிமா எனும் வியாபார உலகிலும் அது நடந்திருக்கலாம்

கல்லா கட்டும் வரை கட்டிவிட்டு இப்பொழுது குதியோ குதி என குதிப்பது நியாயம் ஆகாது

பத்தினி தெய்வங்கள் அன்றே “ஏ துச்சாதனா..” என சீறி இருக்கலாம், ஆனால் அன்றோ கண்ணனிடம் கோபியர் போல இருந்துவிட்டு இப்பொழுது “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா..” என சீறினால் சிரிப்புத்தான் வரும்

[ October 24, 2018 ]

============================================================================

தமிழகத்தில் ஆத்தூர் கிராமத்தில் 13 வயது சிறுமியினை பாலியல் பலாத்காரம் செய்யும்பொழுது கொன்றிருக்கின்றான் கிராதகன் ஒருவன்

அதுவும் தாய் முன்னாலே அந்த பிஞ்சின் கழுத்தை வெட்டி எடுத்திருக்கின்றான்

மிகபெரும் கொடுமையும், சமூக அவலமும் இது

ஆனால் ஒரு ஊடகமும் பேசவில்லை, ஒருவரும் பொங்கவில்லை

அந்த பிஞ்சு குழந்தைக்காக அழுகின்றோம், அந்த கயவனை உடனே கொல்லாவிட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு செத்துவிட்டது என்றே அர்த்தம்

ஊடகங்கள் என்பது ஏற்கனவே செத்துவிட்டது என்பது வேறு விஷயம்

[ October 24, 2018 ]

===========================================================================

ஈழத்தில் தமிழக பகுதியில் ராணுவம் வெளியேற வேண்டும் , தமிழர் பகுதியினை தமிழரிடம் ஒப்படைக்க வெண்டும் என்றெல்லாம் ஆளாளுக்கு இங்கு முழங்குவார்கள்

அதிலும் சிக்கல் உண்டு , புலிகள் சும்மா செல்லவில்லை ஏராளமான கண்னி வெடிகளை புதைத்துவிட்டே சென்றனர், மக்களிடம் அப்பகுதியினை கொடுத்தால் நிச்சயம் பலி எண்ணிக்கை கூடி கொண்டே இருக்கும்

இதனால் கண்னிவெடிகளை அகற்றும் பணி 2009லே தொடங்கியது, கண்னி வெடி என்பது சந்தையில் கிடக்கும் காய்கறிகளை பொறுக்குவது போல் எளிதானது அல்ல‌

அதை கருவி வைத்து தேட வேண்டும், அங்குலம் அங்குலமாகத்தான் நகர முடியும், ஒரு அடி அவசரபட்டு எடுத்து வைத்தாலும் முடிந்தது விஷயம்

இதனால் ஜப்பான் நாட்டு நிறுவணத்தின் உதவியோடு அகற்றினார்கள், இன்னும் அகற்றியபாடு இல்லை

கிட்டதட்ட 11 ஆயிரம் கன்னிவெடிகள் அகற்றபட்டு அங்கு மக்கள் குடியேற அனுமதிக்கபட்டிருகின்றனர், இன்னும் மீட்பு நடக்கின்றது

இதில் என்ன செய்திருக்க வேண்டும்?

புலிகள் புதைத்ததை அவர்கள் தம்பிகளும் அண்ணனும் எடுக்க வேண்டும் , தமிழருக்காக அந்த தியாகத்தை அவர்கள் செய்தாக வேண்டும் என இந்த சைமன், வை.கோ, நெடுமாறன், திருமுருகன் காந்தி, வேல்முருகன், கொளத்தூர் மணி , திருமா கோஷ்டியினை அனுப்பி இருக்க வேண்டும்

எதையுமே செய்யதெரியாத இவர்கள் கண்ணிவெடியினை மட்டும் சரியாகவா எடுப்பார்கள்?

தமிழகம் நிம்மதியாக இருக்கும் [ October 24, 2018 ]

Image may contain: one or more people, people standing, mountain, outdoor and nature

ஜமால் கொலை

ஜமால் கொல்லபட்டதில் துருக்கி கடும் கொந்தளிப்பில் இருகின்றது, 18 பேரை கைது செய்திருக்கின்றது எங்கள் நாட்டில் நடந்த இந்த படுகொலைக்கு நியாயம் கிடைக்காமல் விடமாட்டோம் என கொந்தளிக்கின்றது

இவ்வளவிற்கும் ஜமால் துருக்கி குடிமகன் அல்ல, துருக்கிக்கு வந்தவர், கொலை நடந்த இடம் துருக்கி அவ்வளவுதான்

அருமை இந்தியாவிலோ முன்னாள் பிரதமரை கொன்ற அடுத்த நாட்டுகாரர்களை விடுவியுங்கள் என்ற குரல்கள் எல்லாம் வருகின்றன‌

துருக்கியருக்கு தன்மானமும், உணர்ச்சியும் இருக்கின்றது…

[ October 24, 2018 ]

============================================================================

ஜமால் கொலையினை சவுதி திட்டமிட்டுத்தான் செய்தது, மிக நுட்பமாக செய்தார்கள் எப்படி?

அந்த ஜமால் போல் ஒருவரை செட்டப் செய்து, அவர் துருக்கி தூதரகத்தில் நுழைவதையும் அவர் வெளியேறுவதை எல்லாம் வீடியோ எடுத்து ஜமால் பத்திரமாக வெளிவந்தார் என ஆதாரம் எல்லாம் செய்துவிட்டுத்தான் கொலை நடந்திருக்கின்றது

ஆரம்பத்தில் இந்த வீடியோவினை மாறி மாறி காட்டியது சவுதி, ஆனால் சிக்கி கொண்டது எப்படி?

ஜமாலை எங்கே என பெரும் கேள்விகள் எழும்ப்பட்டது, அவர் துருக்கியில் இல்லை, துருக்கியினை தாண்டவுமில்லை என்பதால் சந்தேகம் வலுத்தது

விஷயம் சர்வதேச‌ வில்லங்கம் ஆனபின் சவுதி அவர் கொல்லபட்டிருக்கலாம் என இறங்கி வந்தது.

துருக்கி உளவுதுறை மிக நுட்பமாக கவனித்திருக்கின்றது, கொலை நடக்க போவது அதற்கு தெரிந்திருக்கலாம் என்கின்றார்கள்

ஜமாலை அவர்கள் காப்பாற்றி இருக்கலாம், ஆனால் அவரை காப்பாற்றவா இருக்கின்றது துருக்கி உளவுதுறை?

அது அட்டகாசமாக சவுதி செய்த எல்லா காரியங்களையும் பதிவு செய்திருக்கின்றது, கொலையாளிகள் இரு விமானங்களில் வந்தது . அவர்கள் சவுதி தூதரகம் வந்தது பின் பெரிய பெட்டியில் ஜமால் உடலை கொண்டு சென்றது என எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கின்றது

இதிலும் ஒரு சறுக்கல் இருக்கின்றது, ஜமாலின் உடல் சவுதிக்கு வரவில்லை அப்படி ஏமாற்றி இருக்கின்றது சவுதி உளவுதுறை என்றும், துருக்கியில்தான் ஜமாலின் உடல் வீசபட்டிருக்கலாம் என்கின்றன சில செய்திகள்

துருக்கி உளவுதுறை அதில் கோட்டை விட்டிருகின்றது , ஜமாலின் உடலை துருக்கியிலே போட்டுவிட்டு துருக்கி உளவுதுறையினை ஏமாற்றி சென்றிருக்கின்றது சவுதி கோஷ்டி

மிக சரியான விஷயம் அது , பின்னாளில் ஏதும் சவுதியில் கொலை தொடர்பான ஆதாரம் கிடைத்தால் மகா சிக்கல் என்பதால் இந்த முன்னெச்செரிக்கை.

இதில் சவுதி அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டது, ஆம் கொலை விஷயம் தெரிந்தாகிவிட்டது இனி கொலையாளிகள் சிக்கினால் விஷயம் விபரீதமாகும்

என்ன செய்யலாம்? தமிழ் சினிமா வில்லன்கள் செய்யும் காரியத்தில் இறங்கிவிட்டது

அந்த கொலை கும்பலில் ஒருவர் மர்மமாக செத்துவிட்டார், இன்னும் சிலர் விரைவில் சாகலாம்

உளவுதுறை என்பது இதுதான், சாதிக்கும் வரை சிக்கல் இல்லை சாதித்தாலும் வெளிதெரியாது

சொதப்பிவிட்டால் அத்தோடு முடிந்தது வாழ்வு..

எப்படியோ துருக்கி சவுதி உளவுதுறைகளின் ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கின்றது [ October 24, 2018 ]

மருதுபாண்டியர்

சுதந்திர போராட்டத்தை இந்தியாவில் தொடங்கிய வீரர்களில் முக்கியமானோர் மருது சகோதரரர்கள் அவர்களின் வீரமும் தியாகமும் பெரிது .

சாதரண குடும்பத்து சகோதரர்கள், ஆனால் தங்கள் வீரத்தாலும் விசுவாசத்தாலும் சிவகங்கை அரசின் தளபதிகளாயினர், முத்துவடுகநாதரின் நம்பிக்கைகுரியவர்களாயினர்.

இருவருமே மருதநாயகம் போல பலசாலிகளாகத்தான் இருந்தார்கள், பீரங்கிகளை அனசாயமாக‌ தூக்கி திருப்பும் அளவிற்கு உடல்கட்டு இருந்திருக்கின்றது

மருதநாயகம் எனும் கான்சாகிப்பின் நாடு என அறியபட்ட அப்பகுதி நாட்டின் காடும், கான் நாடு என்றே அறியபட்டது. அந்த கான் நாட்டின் புலிகள் கூட அவர்களுக்கு அஞ்சி இருக்கின்றன.

முத்துவடுகநாதர் காலத்திற்கு பின் வேலுநாச்சியார் பதவியிழந்து அலையும் பொழுது அவரை காடுகளிலும் பின் ஹைதர் அலி பாதுகாவலிலும் வைத்திருந்தவர்கள் அவர்களே

பின் போர்தொடுத்து வெள்ளையனை விரட்டி மறுபடியும் வேலுநாச்சியாரை அரசி ஆக்கியதும் அவர்களே

வேலுநாச்சியார் வீழ்த்தபட்டபின்னும் சிவகங்கை மன்னர்களாக வெள்ளையனை எதிர்த்து நின்றதும் அவர்களே

கட்டபொம்மனுக்கு பின் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததும், பாஞ்சாலங்குறிச்சியில் ஊமைதுரை பெரும் போர் நடத்தவும் காரணம் அவர்கள்.

தென்னகத்தாரை எல்லாம் திரட்டி திருச்சி கோட்டையில் தென்னகம் சுதந்திர நாடு என ஜம்புதீவு அல்லது ஜம்வீத்யூத் பிரகடனம் என சுதந்திர நாட்டினை அறிவித்ததும் அவர்களே

த‌மிழ் இலக்கியங்களில் நாவலன் தீவு என தமிழகத்தினை சொல்வார்கள் அல்லவா, அந்த நாவலந்தீவுதான் சமஸ்கிருதத்தில் ஜம்பு தீவு

எப்படியோ இந்நாட்டு சுதந்திர பிரகடன உரையினை வாசித்த மாவீரர்கள் முதலில் அவர்கள்தான், இந்திய வரலாற்றில் அவர்கள்தான்.

அதன் பின்பு 1947ல் நேருதான் வாசித்தார்.

பின் ஹைதரும் திப்புவும் கொல்லபட, மருதுபாண்டியருடன் இருந்த பலர் உள்நாட்டு காட்டிகொடுப்பால் கொல்லபட, குறிப்பாக இந்த புதுகோட்டை மன்னன் தொண்டைமான் போன்றோரின் சதிசெயல்களால் மருதுபாண்டியர் தோற்றனர்

பின்னும் அகபடவில்லை, ஆனால் கோவில்களுக்கு அள்ளி கொடுத்தவர்கள் மருதுபாண்டியர். அதுவும் காளையார் கோவில் கோபுரம் அவர்களால் கட்டபட்டது.

மருதுபாண்டியரை அவர்களால் பிடிக்க முடியவில்லை. சில விஷேஷ ஆயுதங்களில் அவர்கள் பாதுகாப்பாய் இருந்தனர், குறிப்பாக வளறி (வளை எறி) போன்ற ஆயுதம் அது

தாக்கிவிட்டு திரும்ப கைக்கே வரும் பூமராங் வகையது, தமிழரின் சிறப்பான ஆயுதம். மருதிருவர் அதில் கைதேர்ந்திருந்தனர்

ஆங்கிலேயர் அதில் தடுமாறினர், அப்படியான பல வகை சாகசங்களால் வெள்ளையரை அடித்திருந்ததால் அவர்களுக்கு அச்சம் இருந்தது.

மருதுபாண்டியர் இருக்கும் வரை தென்னகம் தங்களுக்கு இல்லை என்பதில் அஞ்சி இருந்தனர் ஆங்கிலேயர்

அதனால் மருதுகளின் பலவீனத்தில் அடித்தனர், மருதிருவரின் பலஹீனம் பக்தி

மருதுபாண்டியர் சரணடையாவிட்டால் காளையார் கோவில் கோபுரத்தை தகர்ப்போம் என் அறிக்கையிட்டனர் வெள்ளையர்.

அது பொறுக்காது, தம்மை விட ஆலயமே முக்கியம் என சரண்டைந்து, தங்கள் உடலை அந்த ஆலயத்திற்கு முன்பே புதைக்குமாறும், இதுகாரும் ஆலயங்களுக்கு தாங்கள் செய்த உதவிகள் தொடர்ந்து நடக்குமாறும் வெள்ளையனிடம் உறுதிபெற்றுகொண்டே தூக்கு மேடை ஏறினர் அவர்கள்

“தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்” என்ற பசும்பொன் தேவரின் புகழ்மிக்க வாசகம் இவர்களிடமிருந்தே பிறந்தது.

மருது சகோதர்கள் முடிவுக்கு பின் வெள்ளையன் செய்த காரியம் வளறி எனும் ஆயுத தடை. அது செய்யவும் கற்பிக்கவும் தடை விதிக்கபட்டது

இன்று வழக்கிலே இல்லாமல் ஒழிக்கபட்டது, வெள்ளையனின் சதி அப்படி இருந்திருக்கின்றது.

(இம்மாதிரியான தமிழக அடையாளம் எல்லாம் மீட்டெடுக்கபட வேண்டும், ஆனால் கீழடியிலே நம்மால் ஒன்றும் செய்யமுடியாத பொழுது இதெல்லாம் எப்படி)

இன்று அந்த மாவீரர்கள் தூக்கிலடபட்ட நாள், இந்த தேதியில் ரகசியமாக கொல்லபட்டாலும், மக்களுக்கு அஞ்சி அவர்களின் உடலை வெள்ளையன் உடனே கொடுக்கவில்லை

27ம் தேதிதான் அவர்கள் உடல் காளையார் கோவில் எதிரில் புதைக்கபட்டது

மண்ணும், மதமும் உயிரைவிட மேலானது என வாழ்ந்த அந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது நம் கடமை

இத்தேசம் கண்ட மாபெரும் வீரர்களில் என்றுமே மருதுபாண்டியருக்கு உயர்ந்த இடம் உண்டு, தமிழரின் வீரம் அது

அந்த வீர வேங்கைகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

பெரிய மருதுவின் மகனை வெள்ளையர் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தினர், மலேசிய பினாங்கு நகருக்கு செல்லும் பொழுதெல்லாம் மருதுபாண்டியர் நினைவும் வரும்.

மறக்க முடியா வீரமும் தியாகமும் அவர்களுடையது.

அவர்கள் உடல் கொல்லபட்டிருக்கலாம்,

ஆனால் இந்நாட்டு விடுதலையிலும் அவர்கள் அள்ளிகொடுத்த ஆலயங்களும் அவர்கள் செய்வித்த தேர்களும், அவர்களால் கட்டி காக்கபட்ட காளையார் கோவில் கோபுரமும் உள்ளவரை அவர்கள் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

[ October 24, 2018 ]

Image may contain: one or more people

சிதறல்கள்

வைகுண்டராஜன் அண்ணாச்சி, உங்களுக்கே இது அடுக்குமா?சிரிப்பு வரவில்லையா?

திருச்செந்தூர் முருகன் மேல் சத்தியமாக சொல்லுங்கள்??

[ October 23, 2018 ]
Image may contain: 1 person, smiling, text
======================================================================

என்னை கையினை பிடிச்சி இழுத்தியா என்ற சீரியலில் இதுவரை பெண்கள்தான் புகார் அளித்தார்கள்

முதன் முதலில் ஒரு ஆண் ஒரு ஆண் மேல் சொல்லும் புகார் கிளம்புகின்றது, அதுவும் ஆன்மீக பேச்சாளர் சுகி சிவம் மேல் திரும்புகின்றது.

தமிழகத்திற்கு இது புதிதான குற்றசாட்டு.

அவரும் பதில் சொன்னதாக தெரியவில்லை, பிரச்சினையினை கிளறுபவர் பிரபல பத்திரிகையாளர்

இது எளிதில் கடந்து செல்லும் விஷயம் அல்ல, பற்றி எரிய போகும் விஷயம்

சுகி.சிவம் ஏன் இப்படி சிக்குகின்றார், மனிதர் சிவபெருமான் மோகினி வடிவில் வந்த விஷ்ணுவிடம் மயங்கியது போல மயங்கிவிட்டாரோ என்னமோ?

ஓவர் பக்தி போலிருக்கின்றது

எப்படியும் சுகி.சிவம் கோர்ட்டுக்கு செல்வார், விரைவில் இந்த மிடூ இம்சைகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கபடும் போல் தெரிகின்றது

[ October 23, 2018 ]

Image may contain: text
============================================================================

அமைச்சர் ஜெயக்குமாரின் டீரீம் கேர்ள், அதாவது கனவில் அவர் கழுத்தை பிடித்து ஆட்டும் பெண்ணுக்கு வட சென்னையாம்

ஆக இந்த வாரம் இரு “வட சென்னை” படங்கள் ரிலீஸ்….

[ October 23, 2018 ]

============================================================================

பண்டிகை என்றால் பட்டாசுகள் தான் நினைவுக்கு வரும், அது எப்படியோ இந்த கலாச்சாரத்தில் கலந்துவிட்டது

இனி அது இல்லா பண்டிகைகளை நினைத்துபார்க்க முடியாது

பட்டாசு புகை மாசு என்பதெல்லாம் போலி வாதங்கள். நிலக்கரி ரயில், நிலக்கரி எரிக்கபடும் அணல் மின் நிலையங்கள், புகைவிடும் வாகனம், தொழிற்சாலை புகை என அனுதினமும் 24 மணிநேரமும் புகை வாழும் நாடு இது

அரசு பேருந்துகள் விடும் புகை கணக்கென்ன? யாராவது கேட்பார்களா?

இதில் வருடத்தில் ஒருநாள் மக்கள் குதூகலமாக கொண்டாடும் நாளில் பட்டாசு வெடிக்க கூடாது என்பதெல்லாம் அவர்கள் மகிழ்ச்சியினை கெடுப்பதற்காகவே சொல்லபடுபவை

எல்லா வகை காசு மாசையும் தடுத்தபின்புதான் பட்டாசு பக்கம் வரவேண்டுமே தவிர, ஒரே காரணம் பட்டாசு அல்ல.

மக்களின் நியாயமான சந்தோஷங்களை கெடுப்பது சரி அல்ல, ஏற்றுகொள்ள கூடியதும் அல்ல‌

குறிப்பாக குழந்தைகள் அந்த பட்டாசுகளை மிக ரசிப்பவர்கள். தீபாவளியினை அவர்கள் எதிர்பார்ப்பதே அந்த குதூகலத்திற்குத்தான், அதற்காகத்தான்

அந்த மனதை நோகடித்துவிட்டு, அவர்களை ஏமாற்றிவிட்டு யாருக்காக இச்சமூகம் தீபாவளி கொண்டாட போகின்றது

வரவர இத்தேசத்தில் ஒரு பண்டிகை கூட நிம்மதியாக மக்கள் கொண்டாட கூடாது என சிலர் நினைப்பார்கள் போல‌

எல்லா பண்டிகைக்கும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி கிளம்பிவிடும் கூட்டம் அதிகரிக்கின்றது

இப்படிபட்டவர்களை அனுமதிப்பது சரியல்ல‌

தீபாவளி அதனின் உற்சாகத்தோடு கொண்டாடபட பட்டாசுகள் அவசியம் தேவை. ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் இந்நாடு ஒன்றும் அழிந்துவிடாது.

குழந்தைகளின் மகிழ்விற்காக அந்த பட்டாசு அனுமதிக்கபட்டே தீரவேண்டும்.

குழந்தைகளை கூட மகிழ்ச்சியாய் இருக்க விடாத சமூகம் எப்படி உருப்படும்?

மத்தாப்பும், சக்கரமும் இன்ன பிற விஷயங்களும் குழந்தைகள் விளையாட்டு உரிமை. ஆண்டுக்கு ஒருமுறை விளையாடுகின்றன‌

அவற்றை தடுப்பதில் யாருக்கு உரிமை இருக்கின்றது?

இன்னொரு கும்பல் ஒலிமாசு என கிளம்புகின்றது, தமிழக அரசியல்வாதிகளின் கூச்சலை விட என்ன ஒலிமாசு வந்துவிட்டது? முதலில் அதை தடுங்கள் பார்க்கலாம்..

(தேர்தல் வெற்றி, பிரச்சாரம், தலைவர்கள் வருகை , பட ரிலீஸ் போன்றவற்றில் போடபடும் பட்டாசுகளை தடை செய்வது பற்றி எவனும் பேசுவதாக தெரியவில்லை)

8 10 மணிவரைதான் பட்டாசு வெடிக்கலாம் என்பதெல்லாம் யாரும் மதிக்கபோவதாக தெரியவில்லை, அப்படி சட்டமீறல் என கிளம்பினால் 100 கோடிபேரை தண்டிக்க வேண்டி இருக்கும், சாத்தியமே இல்லை

எச்.ராசா இப்பொழுதுதான் கோர்ட்டாவது மயிராவது என சொல்லியிருக்க வேண்டும், ஆதரவு பெருகியிருக்கும்

ஆனால் மனிதர் முந்திகொண்டார்

அதற்கென்ன தீபாவளியென்று நாள் முழுக்க வெடி வெடிக்கும் ஒவ்வொருவரும் எச்.ராசா சொன்னதைத்தான் சொல்ல போகின்றார்கள்

மக்கள் நீதிபதி வீட்டுமுன்னாலே வெடிக்கத்தான் போகின்றார்கள் அவரும் பார்த்து சிரித்துவிட்டு போகத்தான் போகின்றார்

[ October 23, 2018 ]

=========================================================================

பதவி, பணத்தை விரும்பினால் விலகி விடுங்கள்: ரசிகர்களுக்கு ரஜினி அறிவுறுத்தல்

இதற்கு கட்சி தொடங்கவே மாட்டேன் என நேரடியாகவே அறிவித்துவிடலாம் அய்யா

பிழைக்கவிடவில்லை என்பதற்காக காமராஜரையே விரட்டிய கட்சிக்காரர்கள் வாழ்ந்த தமிழகம் இது, அள்ளி எடுக்கலாம் என்பதற்காக பழனிச்சாமி கொலுவீற்றிருக்கும் பூமி இது

இங்கு போய் இப்படி பேசினால் எடுபடுமா?

அரசியலில் விருப்பமில்லை என்றால் நேரடியாக சொல்லுங்கள் அய்யா..

(ஆனால் கனத்த தொகையில் டிக்கெட் வாங்கும் ரசிகன், சொந்த செலவில் பேனர் கட்டி பால் ஊற்றும் ரசிகன் பற்றி எல்லாம் ரஜினி பேசமாட்டார்

எங்கே, அதிக டிக்கெட் கொடுத்து என் படம் பார்க்காதீர்கள், போஸ்டர் அடிக்காதீர்கள், வீண் செலவு செய்யாதீர்கள் என சொல்லட்டும் பார்க்கலாம்..

என் படத்தினை அதிக‌ பணம் செலவழித்து பார்க்காதீர்கள் என சொல்வாரா என்றால் ஹாஹாஹாஹா) [ October 24, 2018 ]

============================================================================

சிவகங்கை மாவட்டத்தில் தடை உத்தரவாம்

எதற்கு?

மருதிருவர் குருபூஜை, தேவர் குருபூஜை உட்பட பல விழாக்கள் கொண்டாடபடுவதால் அசம்பாவித நடவடிக்கைகள் தடுக்க தடையாம்

மருது பாண்டியர் நாட்டின் சுதந்திரத்திற்காய் உயிர்விட்டவர்கள், பசும்பொன் தேவர் நேதாஜியின் படைக்கு தமிழகத்திலிருந்து ஆள் அனுப்பி இறுதிவரை நேதாஜியின் தூணாக நின்றவர்.

அப்படிபட்ட தேசாபிமானிகளின் விழாக்கள் இவை.

மாபெரும் சுதந்திர வீரர்களின் நினைவு அஞ்சலிகளை கூட தடை போட்டு அனுசரிக்கும் அளவிற்கு ஜாதிவெறி மிக்க சமூகத்தை இந்த சுதந்திர இந்தியா உருவாக்கிவிட்டதை எண்ணி நாண வேண்டியிருக்கின்றது.

அடிமை இந்தியாவில் அன்று நாட்டுபற்றை வளர்த்தார்கள், சுதந்திர இந்தியாவோ சாதி பற்றை வளர்க்கின்றது

நாட்டுபற்றை ஒரு பயலும் வளர்த்ததாக தெரியவில்லை, பாஜகவினர் மார்தட்டுவார்கள் அது சுத்த இந்துமத பற்று அன்றி நாட்டுபற்று அல்லவே அல்ல.

நாட்டுபற்று எனும் பொதுநலத்தை வளர்த்தால், இந்த சாதி , மதம் எனும் மிக குறுகிய மனப்பான்மை கொடுமை கொஞ்சம் கொஞ்சமாக ஒழியும்.

அடுத்த தலைமுறையாவது திருந்தட்டும், [ October 24, 2018 ]

==========================================================================

சிதறல்கள்

நாகர்கோவிலை மாநகராட்சியாக்கும் பணிகள் தீவிரம் : செய்தி

சும்மாவே 2 தென்னை மரத்தை வைத்து கொண்டு பல கோடி மதிப்புள்ள தோப்பு என கதை விடும் ஏரியா அது, இனி மாநகராட்சி வேறு

கிட்டதட்ட நியூயார்க் அளவுக்கு அங்கு இனி நில மதிப்பு விலையினை சொல்வார்கள், நாடு தாங்காது. [ October 23, 2018 ]

============================================================================

சபரிமலை கோவில் தமிழனுக்கானது உறவே, நாம் தமிழர் ஆட்சியில் அதை மீட்போம்ன்னு இந்த தை மாசம் கத்தலாம்னு இருந்தேன்

அதுக்கும் வச்சிட்டானுக ஆப்பு…

[ October 23, 2018 ]
Image may contain: 1 person, sitting
============================================================================

சின்மயிக்கு ஆதரவாக மாதர் சங்கம் பொங்கி எழுகின்றது

ஏம்மா மாதரசிகளா, அந்த சிந்து எனும் பெண்ணுக்கு ஆதரவாக எல்லாம் பொங்க மாட்டீர்களா?

அந்த சிந்து என்பவர் என்ன வெளிநாட்டு பெண்ணா?

அமைச்சருக்கு எதிராக கொஞ்சம் பேசினால்தான் என்ன? [ October 23, 2018 ]

============================================================================

ஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல – வழக்கு தொடருவேன்: அமைச்சர் ஜெயக்குமார்

ஆடியோவினை விடுங்கள் அமைச்சரே, டி.என்.ஏ டெஸ்டுக்கு அழைத்தால் என்ன செய்வீர்கள்? [ October 23, 2018 ]

============================================================================

இன்னொரு நபர் என்றால் இந்த பத்திரிகைகள் காட்டும் புலனாய்வு, கவர் ஸ்டோரி இன்னபிற அட்டகாசங்கள் என்ன?

தேடிபிடித்து அமர வைத்து இந்த டிவிக்கள் செய்யும் அழிச்சாட்டியம் என்ன?

ஒருவேளை அவன் திமுகவாக இருந்துவிட்டால் பலர் செய்யும் அலப்பறைகள் என்ன?

ஆனால் ஒரு அமைச்சர் சிக்கி இருக்கின்றார், எல்லோரும் அனந்த புத்தர் கோலத்தில் கனத்த அமைதி

பத்திரிகை, டிவி எல்லாம் ஆழ்ந்த யோக நிலையில் குண்டனி சக்தி பெற தவமிருக்கின்றன‌

ஒரு சத்தம், ஒரு செய்தி இல்லை

அட பாதிக்கபட்ட பெண் யாரென கூட இந்த புலிகள் காட்ட அஞ்சி நிற்கின்றன‌

இனி எவனாவது பத்திரிகை சுதந்திரம் , பெண் பாதுகாப்பு, பெண் உரிமை, பெரியார் கொடுத்த பெண் சுதந்திரம், எழுத்துரிமை, கருத்துரிமை, ஊடக தர்மம் அது இது என கிளம்பட்டும் , அன்று இருக்கின்றது.. [ October 23, 2018 ]

============================================================================

இலங்கையில் தமிழ்பெண்கள் கற்பழிக்கபட்டார்கள் ஏ இந்திய அரசே தடுத்தாயா? திமுக தடுத்ததா? காங்கிரஸ் தடுத்ததா என கிளம்பிய ஒரு பயலையும் ஜெயக்குமாரால் பாதிக்கபட்ட தமிழக பெண் விவகாரத்தில் காணவே இல்லை

ஏம்ம ஈழ அல்ட்ராசிட்டிஸ், கடல் தாண்டிய கற்பழிப்பு என்றால் கொதிப்பீர்களா? காலடியில் தமிழச்சிக்கு அவமானம் என்றால் பொத்திகொண்டிருப்பீர்களா?

ஒரு பயலையும் காணோம். [ October 23, 2018 ]

============================================================================

எப்ப்பா.. என்னதெல்லாம் செய்றாங்கடா இந்த மன்னார்குடி கோஷ்டி

ஆத்தா ஏன் அனாதையா மர்மமா செத்துச்சுண்ணு இப்பதான் புரியுது…

நமக்கே இந்தபாடுன்னா நம்ம ஆத்தா எவ்வளவு பட்டிருக்கும்?

[ October 23, 2018 ]
Image may contain: 1 person, eyeglasses and closeup
==========================================================================

“அந்த ஆளு சிக்கினது கூட கவலை இல்ல பங்காளி, ஆனா நீங்க‌ பிடல் நான் சேகுவாரேன்னு சொல்லிட்டு சிக்கிட்டாரு பாத்தீங்க‌ளா, அதுதான் வலிக்குது

இனி உலகம் உங்கள ஆட்டோ சங்கருன்னும் என்னை பிரேமான்ந்தான்னும் நினைச்சிராது, அதுதான் தாங்க முடியலை பங்காளி” [ October 23, 2018 ]

============================================================================

இப்போதைக்கு சமூக அக்கறையும், தமிழக நலனும், பெண்கள் பாதுகாப்பும் பற்றி கவலைபடும் ஒரே தொலைகாட்சி ஜெயா தொலைகாட்சி மட்டுமே

விரைவில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அதன் தைரியம் பேசபடலாம், மிக சிறந்த மக்கள் நேய தொலைகாட்சி என அதற்கு விருதுகளும் தரபடலாம்

[ October 23, 2018 ]

============================================================================

பெண்களை பாலுணர்வுடன் பார்த்தால் அவர்கள் உள்ளுணர்வு இரும்பாக மாறும் – தமிழிசை சவுந்தரராஜன்

அக்கோவ், எதற்கெடுத்தாலும் திமுக ஸ்டாலின் என கத்தும் நீங்கள், அட வைரமுத்து விஷயத்தில் கூட ஸ்டாலினை இழுத்த நீங்கள் ஜெயக்குமார் விஷயத்தில் மட்டும் பூசி மெழுகுவது ஏன்?

சொல்லுங்கள் அக்கா சொல்லுங்கள், ஒரு பெண்ணாக இருந்தும் கண்டிக்க தயக்கம் ஏன்? தடுமாற்றம் ஏன் அக்கா?

அவரை ஏதும் சொன்னால் தாமரை மலராது என அச்சமா?

[ October 23, 2018 ]

============================================================================

மொகலாயர் சம்பந்தபட்ட அனைத்து பெயர்களையும் மாற்ற வேண்டும் : பாஜக எம்பி

பிரியாணி எனும் அற்புத சொல்லையும் கூட்டாஞ்ச்சோறு என மாற்றி தொலைத்துவிடாதீர்கள்…. [ October 23, 2018 ]

============================================================================

எச்.ராசா மன்னிப்பு கோரினார். சாவர்க்கர், ஹோவேல்கர் எல்லாம் பிரிட்டானியர் விசுவாசிகளாக இருந்தார்கள் என பலர் சொல்லிகொண்டே இருக்கின்றனர்

சொல்பவர்கள் யாரென பார்த்தால் திராவிட சிகாமணிகள்

சுதந்திர நாள் துக்க நாள் என்றும், வெள்ளையன் சென்றுவிட்டால் நாம் வாழமுடியாது என்றெல்லாம் சொன்ன அந்த 
பெரியாரின் சீடர்கள்

பெரியாரும் வெள்ளையனுக்கு பகிரங்கமான ஆதரவாளராகத்தான் இருந்தார், அதை பற்றி எல்லாம் யாரும் சொல்லமாட்டார்கள்

[ October 23, 2018 ]