சிதறல்கள்

ஜமால் கொலையில் பல தகவல்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றது
முதலில் நம்பியார் ஸ்டைலில் “டேய் அந்த கசோகியினை தூக்கிட்டு வந்து என் முன்னால உயிரோடு போடுங்கடா” என்றுதான் மன்னர் சொல்லியிருகின்றாராம்
அப்படி அந்த 15 பேர் கொண்ட குழு சென்றிருக்கின்றது, முதலில் ஜமாலை பேசி மசியவைத்து சவுதிக்கு கொண்டு செல்லத்தான் திட்டமாம், முடியாத பட்சத்தில் மயக்க ஊசி போட்டு கொண்டு செல்ல டாக்டர் சகிதம் சென்றிருக்கின்றார்கள்
மிக நுட்பமான திட்டம்தான், ஜமால் சவுதி தூதரகம் உள்ளே வந்தது சிசிடிவில் இருப்பது போல் அவர் வெளி சென்றார் என்பதை காட்டுவதற்காக அவரை போல் ஒருவரை வெளியே எல்லாம் அனுப்பியிருக்கின்றார்கள்
விஷயம் எதில் சொதப்பியது என்றால், இவர்கள் சவுதிக்கு வா என்றதும் ஜமால் கத்தியிருக்கின்றார், அது பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது
கத்திவிட்டார் இனி இவரை சவுதிக்கு அழைத்தது தெரிந்துவிடும் என்ற அச்சமும், மன்னர் உத்தரே மகேசன் உத்தரவு என்ற கடமை உணர்வும் சேர்ந்த குழப்பத்தில் இருந்திருக்கின்றது சவுதி உளவுதுறை
இவர் வரமாட்டேன் என்கின்றார், மன்னரோ தூக்க சொல்லியிருக்கின்றார், போடு ஊசியினை என குத்தியிருக்கின்றார்கள்
ஏற்கனவே வெளிதெரியாத நோயால் இருந்த ஜமால் பொட்டென போய்விட்டார் என்கின்றார்கள்
எப்படியோ அவரை கொல்ல திட்டமிடவில்லை, மாறாக அவரை கடத்த முயன்றபொழுது ஏற்பட்ட சிக்கலில் அவர் தவறுதலாக இறந்துவிட்டார் என்கின்றன சில செய்திகள்
இன்னும் பரபரப்பு ஓயவில்லை, ஓய்போவதுமில்லை
இம்மாதிரியான விஷயங்களில் மொசாத் புலி, அவர்கள் பயிற்சி அப்படி
சவுதி எனும் பூனை புலிபோல வேடம் போட்டு மாட்டிகொண்டது
நல்ல வேளையாக நம்ம ஊர் வைரமுத்து இப்படியாக பாடகிகளை கடத்தமுயன்று கொலை வழக்கில் எல்லாம் மாட்டவில்லை [ October 26, 2018 ]

============================================================================

ஹாங்காங் என்பது சீனாவின் கவுரவ அடையாளமாக சீனா கருதுகின்றது. சீனாவுடன் போர் புரிந்த வெள்ளையரிடம் அதை சமாதானத்திற்காக‌ குத்தகைக்கு வைத்தது
அந்த போர் அபினி போர் என வரலாறு சொல்லும், தன் குடிமக்களை போதை அடிமையாக்கி பிரிட்டிசார் ஹாங்காங்கை கைபற்றியதாக அது கருதிற்று
ஒப்பந்தம் முடிந்து 1997ல் ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கபட்டபொழுது சுயமரியாதை காக்கபட்டதாக கர்வபட்டது சீனா
ஆனால் ஹாங்காங் என்பது வளர்ந்துவிட்ட பகுதியும் மாறுபட்ட சுதந்திர கலாச்சாரமும் கொண்டது என்பதால் இன்றுவரை சுயாட்சி பிரதேசமாகவே சீனா கையாள்கின்றது
அந்த ஹாங்காங்கிற்கு இதுவரை கடல்வழிமட்டும்தான் இருந்தது, இப்பொழுது உலகம் வியக்கும் வகையில் பாலம் கட்டி அசத்திவிட்டார்கள்
உலகின் மிக நீண்ட பாலம் இதுதான், பாம்பன் பாலத்தை விட பல மடங்கு நீளமாது
இதில் ஒரு சிக்கலும் வந்தது, பாலம் கட்டினால் கப்பல் எப்படி போகும்? சிக்கலை எளிதாக தீர்த்தார்கள்
பாதி பாலத்தை கடலுக்குள் சுரங்கமாக விட்டு, பாதாளம் வழியாக ஹாங்காங்கோடு இணைத்தாயிற்று, மேலே கப்பல் கீழே சுரங்கத்தில் கார்கள்
இப்படி ஹாங்காங்கை மட்டுமல்ல அருகிருக்கும் மக்காவ் தீவினையும் பாலம் கட்டி இணைத்துவிட்டார்கள், ஹாங்காங் வியாபாரத்திற்கு என்றால் மக்காவ் சூதாட்டத்திற்கு பேர் போன தீவு
ஆம், சீனர்களின் சூதாட்டம் உலகறிந்தது, இன்னொன்று மக்காவ் போர்த்துகீசியரின் கையில் இருந்ததால் கோவா போன்று பல காரியங்களுக்கு பிரசித்தி
இப்படியாக அருகிருக்கும் தீவுகளுக்கு எல்லாம் பாலம் கட்டும் சீனா, விரைவில் தைவானுக்கு கட்டுவோம் என காமெடி செய்தாலும் செய்யலாம்
தைவன் தனிநாடு என்றாலும் எங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா சொல்ல, தைவானோ மறுக்கின்றது
சொல்லமுடியாது விரைவில் தைவானுக்கு பாலம் கட்டினாலும் கட்டும் சீனா
நாம் தமிழர் ஆட்சியில் கச்சதீவுக்கும் இப்படி அங்கிள் சைமன் பாலம் கட்டுவார் என உற்சாகமாக கனவில் இருக்கின்றது அங்கிள் கோஷ்டி
[ October 26, 2018 ]

============================================================================

ஒரு விஷயம் உன்னிப்பாக கவனித்தால் புரிகின்றது
இதுகாலம் கலைஞரின் உற்ற நண்பர்களாக இருந்தவர்கள் மேல் புகார்கள் குவிகின்றன‌
வைரமுத்தினை தொடர்ந்து சுபவீ என்பவரும் சிக்குகின்றார். சுபவீ மீது பாலியல் சர்ச்சை இல்லை எனினும் பாலியல் சர்ச்சையில் சிக்கியவரை காப்பாற்ற கட்ட பஞ்சாயத்து செய்ததார் என்ற சர்ச்சை வருகின்றது
மேடையில் பகுத்தறிவு பெண் விடுலை என பேசும் சுப வீ, உண்மையில் பெண் உரிமையினை மதிக்காதவர் என பாதிக்கபட்ட பெண்கள் கிளம்புகின்றார்கள்
வைரமுத்துவின் மேலான புகாரை சின்மயி தொடங்கி வைக்க, ஒரு டஜன் புகார்கள் குவிந்தாயிற்று. அவர்கள் சொல்லும் குற்றசாட்டு “மேலிடத்தில் என் செல்வாக்கு என்ன தெரியுமா?” என மிரட்டினார் வைரமுத்து
இப்பொழுது சுபவீ மேலான குற்றசாட்டை Kavignar Thamaraiதொடங்கி வைக்க‌ பல பெண்கள் வந்து நிற்கின்றனர், அதே சாயல் குற்றசாட்டுக்கள், “கலைஞரிடம் சொல்லியாச்சி” என்றே சுபவீ மிரட்ட தொடங்குவார்.
ஆக கலைஞர் பெயரை சொல்லி பலர் கடும் அழிச்சாட்டியம் செய்திருகின்றன, கலைஞர் இல்லா நிலையில் பலமிழந்த அவர்களை நேரம் பார்த்து ஆளாளுக்கு போட்டு அடிக்கின்றார்கள்
பல பெண்கொடுமை குற்றசாட்டுகளை எதிர்கொள்வோ, கலைஞர் நண்பர்கள் எனும் சங்கிலியில் இணைகின்றார்கள்
இன்னும் யாரெல்லாம் சிக்குவார்களோ தெரியாது, ஆனால் பட்டியல் நீளலாம்
உண்மையிலே கலைஞர் இவர்கள் அழிச்சாட்டியத்தினை கண்டு கொள்ளாமல் இருந்தாரா என்பது அவர் வந்து சொல்லாமல் யாருக்கும் தெரியபோவதுமில்லை என்பது வேறு விஷயம்
ஆனால் அவர் இல்லாத காலத்தில்தான் அவர் பெயரை சொல்லி எப்படி எல்லாம் அட்டகாசம் செய்திருக்கின்றார்கள் என்பது வெளிவருகின்றது
விரைவில் கலைஞர் சமாதியிலும் தர்மயுத்தம் அல்லது அடித்து சத்தியம் செய்தல் போன்ற காட்சிகள் நடைபெறலாம் போலிருகின்றது
[ October 26, 2018 ]
Image may contain: text
============================================================================

தீர்ப்பு கொடுத்துட்டாங்க‌ தீர்ப்பு, அண்ணன் ராசா சொன்னது சரியாகத்தான் இருக்கின்றது

ஏன்யா, திடீர்னு 20 தொகுதிக்கு தேர்தல் என அறிவித்தால் நாங்கள் வேட்பாளருக்கு எங்கே போவோம்?

[ October 26, 2018 ]
Image may contain: 1 person, closeup
============================================================================

20 தொகுதிக்கு தேர்தல் வந்தால் யாரை எதிர்த்து என்ன பேசுறது? எத சொல்லி வோட்டு கேட்க?

இந்த‌ முன் ஜாமீன் எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு உள்ளே போயிர வேண்டியதுதான், வேற வழி இல்ல‌

தம்பிக கேட்டால் “தந்திரோபயமான பின்வாங்கல்” ன்னு சொல்லி சமாளிப்போம்

[ October 26, 2018 ]
Image may contain: 1 person, closeup
============================================================================

மக்கள் டிவியில் சில மருத்துவர்கள் மருத்துவ ஆலோசனை வழங்கி கொண்டே இருக்கின்றார்கள், எல்லா நோய்க்கும் அவர்களிடம் குணப்படுத்தும் ஆலோசனை இருக்கின்றது, இலவசமாக அள்ளி அள்ளி வழங்குகின்றார்கள்

ஆனால் இப்படிபட்ட மிகசிறந்த மருத்துவ சிகாமணிகள் இருந்தும் காடுவெட்டி குருவினை அவர்கள் தவறவிட்டதுதான் சோகம்

[ October 26, 2018 ]

============================================================================

 

 

சிதறல்கள்

கோலி ஆயிரம் சதங்கள் அடிக்கட்டும், ஆனால் லாரா அடித்த ஒரு ஹூக் ஷாட்டுக்கு ஈடாகாது. [ October 25, 2018 ]

============================================================================

கபில் தேவ் ஆடியது மால்கம் மார்ஷல், விவியன் ரிச்சர்ட்ஸ் இன்னும் ஏகபட்ட ஜாம்பவான்கள் நிரம்பிய காலம், கபில் தேவின் தைரியமும் போராட்டமும் கொஞ்சம் அல்ல‌

சச்சின் காலமோ வால்ஷ், அம்புரோஸ் எனும் அரக்க பவுலர்கள் காலத்தில் தொடங்கியது

பின் மெக்ரத், ஆலன் டொனால்டு என பெரும் ஜாம்பவான்களோடு போராடினார்

வாசிம் அக்ரம், வாக்கர் யூனுஸ், சமிந்தா வாஸ் என்பவர்களோடு போராடினார்

சுழற்பந்து வித்தகர்கள் என வரலாறு எழுதிவிட்ட இந்த வார்னே, முரளிதரனோடு போராடினார்

உலகின் மிகவேக பந்து வீச்சாளர் என்ற நிலையில் இருந்த அக்தரை சமாளித்தார்

சச்சினின் காலம் உலகின் அதி அற்புத பந்துவீச்சாளர்கள் நிரம்பிய காலம்

ஆனால் கோலி காலம் அப்படியா? இன்றைய தேதியில் அச்சுறுத்தும் பவுலர்கள் என ஒருவரை காட்டுங்கள் பார்க்கலாம்

சச்சினின் காலம் கலைஞர் அரசியல் போல் போராட்டம் நிறைந்த காலம்

ஆனால் கோலிகாலம் பழனிச்சாமிக்கு முக ஸ்டாலின் வைடு பாலாக வீசும் காலம் போன்றது.

எப்படி சிவாஜி கணேசனையும் விஜய்சேதுபதியினையும் ஒப்பிடுவது அபத்தமோ, எம்.ஆர் ராதாவினையும் சந்தாணத்தையும் ஒப்பிடுவது அபத்தமோ அப்படித்தான் சச்சினையும் கோலியினையும் ஒப்பிடுவதும் மகா அபத்தம்

[ October 26, 2018 ]

============================================================================

சர்க்கார் விவகாரம் சன் பிக்சர்சுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ், படம் வெளிவருவதில் சிக்கல்

ஏம்பா விஜய், இரும்பு மனிதர் பழனிச்சாமி ஆட்சியில் நீர் மைக் கிடைத்தவுடன் என் சர்க்காரில் அது ஒழிக்கபடும் அது கிழிக்கபடும் என பேசினால் இப்படித்தான் ஆகும்.

கனவிலே சர்க்கார் காணும் உமக்கே இப்படி என்றால், சர்க்கார் நடத்துபவர்களுக்கு எப்படி இருக்கும்?

அந்த தலைவா படத்து காட்சிகள் திரும்ப நடக்கின்றதா இல்லையா?

இனி என்ன செய்ய வேண்டும் “அம்மா எனக்கு உதவுங்கள்” என முன்பு அழுதது நினைவிருக்கின்றதா?

அப்படி “அய்யா பழனிச்சாமி அய்யா” என அழுங்கள்.

“தலைவா” என்றாலே அந்த அடி,

இதில் “சர்க்கார்” என்றால் அடி எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்

[ October 25, 2018 ]

============================================================================

இந்தியாவில் ஆபாச இணைய தளங்களை முடக்குகின்றார்களாம், எங்கோ வட இந்தியன் ஒருவன் இந்த தளத்தினை பார்த்து கற்பழித்துவிட்டேன் என்றானாம், அதனால் முடக்க போகின்றார்களாம்

இந்தியா எப்படி நாடு?

உலகிற்கே காம சூத்திரமும், கொக்கோகமும் கொடுத்த நாடு

(அதை படித்துவிட்டு வெள்ளையன் ஜெயதேவனை கைது செய்ய தேடியதும் பின் அவர் என்றோ வாழ்ந்த முனிவர் என உணர்ந்து ஹிஹீஹ் என்றதும் வேறுகதை)

இங்கா இவற்றை தடை செய்ய போகின்றார்கள்??

வள்ளுவனே காமத்துபால் என எழுதும் அளவு அது இங்கு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது

தலைவன் எம்.ஆர் ராதா ரத்த கண்ணீரில் சொல்வார்

“முன்னோர்கள் எவ்வளவு ஆராய்ச்சி செய்தார்கள் என்பதை கஜுரகோ கோவிலில் பார், மற்ற‌ ஆலய சிற்பங்களில் பார்

அஜந்தா எல்லோரா குகைகளில் பார்

எப்படிபட்ட ஆராய்சி அது, அவர்கள் விட்டு சென்ற ஆராய்ச்சியினைத்தான் நான் காந்தாவிடம் செய்து கொண்டிருக்கின்றேன்”

உண்மை அதுதான், இந்நாட்டின் ஓவியங்களும், ஆலய சிலைகளும் அதனை புனிதமாக கொண்டாடி கொண்டிருக்க, அதை ஆபாசம் என்பது எப்படி சரியாகும்

இந்துமதம் காமத்தை தன் வாழ்வின் அங்கமாக கொண்டாடியது, அதை ஆலய சிற்பங்களில் வடிக்கும் அளவு புனிதமாக போற்றியது

அதையும் மீறி முடக்குமோம் என்றால் முதலில் தாலிபான்கள் புத்தர் சிலையினை உடைத்தது போல இந்தியாவில் அனைத்து ஆலயங்களையும் தகர்க்க வேண்டும்

முடியுமா?

அதனால் சொல்லலாம், இந்த ஆலயங்களில் அது புனிதமாக கொண்டாட படும்பொழுது, ரதி மன்மதன் என அதற்கு உருவம் கொடுத்து கொண்டாடும் நாட்டில் ஆபாச தளங்கள் இருந்தால் என்ன இருக்காவிட்டால்தான் என்ன?

[ October 25, 2018 ]

===========================================================================

இடைத்தேர்தல்கள் நடத்துவதைவிட முழு சட்டமன்றத் தேர்தலை நடத்தலாம்- ப.சிதம்பரம்

அருமையான யோசனை, நிச்சயம் அதனை செய்யலாம்

ஆனால் அப்பொழுதும் காங்கிரசுக்கு கிடைக்ககூடியது 8 தொகுதிதான் மிஸ்டர் சிதம்பரம் [ October 25, 2018 ]

============================================================================

இந்த ஏ.ஆர் ரகுமான் இனி வைரமுத்துவிற்கு வாய்ப்பு தரமாட்டாராம் சொல்லிவிட்டார் என்கின்றார்கள்

வாலியும், முத்துகுமாரும் இல்லா நிலையில் வைரமுத்துவும் இல்லை என்றால் ரகுமானின் பாடல் எப்படி இருக்கும்?

சர்க்கார் படத்தில் நிக்கலு பிக்கலும்மா, மக்கரு குக்கரும்மா என்ற வகையில்தான் இருக்கும்

அன்றொரு நாள் ஒரு கச்சேரியில் நிகழ்ந்துவிட்ட விரும்பதாகாத சம்பவத்தில் இருந்து டி.எம் சௌந்தரராஜனுடன் பாடுவதில்லை என சொல்லி அதில் நிலையாய் நின்றார் பி.சுசிலா

ஆம் அவள் உத்தமி

இந்த திடீர் கண்ணகிகள் அன்றே வைரமுத்துவினை கன்டித்து அவர் வரிகளை பாடமாட்டோம் என கிளம்பி இருக்கலாம், செய்தார்களா?

செய்யவில்லை, மாறாக எவ்வளவோ காலம் கடந்தபின், நன்றாக கச்சேரி செய்து கல்லா கட்டியபின் இன்று சும்மா ஒரே சத்தம்.

இளையராஜா வைரமுத்து பிரிந்தார்கள், நஷ்டம் இளையராஜாவிற்கே அன்றி வைரமுத்துவிற்கு அல்ல‌

இப்பொழுது ரகுமான் இல்லை என்றாலும் வைரமுத்துவால் நிற்க முடியும், ரகுமானால் முடியுமா என்பதுதான் கேள்வி

தமிழும், கிராமத்திய மனமும், சொல்லாட்சியும் இருக்கும் வரை வைரமுத்துவிற்கு கவலை இல்லை

இந்த சின்மயி கும்பலிடம் கேட்கும் கேள்வி ஒன்றுதான்

அம்மா சின்மயி, வைரமுத்து எழுதிய வரிகளை நான் கச்சேரியில் பாடமாட்டேன் என சொல்லமுடியுமா?

சொல்லிவிட்டு கச்சேரி நடத்த முடியுமா?

வைரமுத்துவின் அழிக்கமுடியா முத்திரை என்பது இதுதான், அவர் வரியினை எந்த பாடகியும் பாட கூடும், ஆனால் உங்கள் நிலை?

வைரமுத்து தமிழ் சொத்து, அவர்மேல் குற்றம் இருந்தால் ஆதாரத்தோடு நீதிமன்ற கதவுகளை தட்டலாம், அதை விடுத்து அவரை புறக்கணிப்போம் என்பதெல்லாம் முடியா காரியம்

வைரமுத்து தமிழ் நதி, ஆயிரம் சோலைகளை அதனால் உருவாக்க முடியும்

வைரமுத்து தென்றல், எந்த புல்லாங்குழலிலும் அதனால் இனிய இசையினை வரவைக்க முடியும்

ரகுமான் இந்த பூச்சாண்டி காட்டாமல், பில்தே பல்தே என பாட்டு போடுவது அவருக்கு மிக நல்லது [ October 25, 2018 ]

============================================================================

இந்த சண்டைகோழி 2 படத்தின் சில‌ காட்சிகள் ஓடிகொண்டிருக்கின்றன‌

நடிகனாக வாழ்ந்தால் ராஜ்கிரனாக வாழவேண்டும், எல்லா படங்களிலும் நல்லி எலும்பு கடிக்கும் யோகம் அவருக்குத்தான் இருக்கின்றது, கொடுத்து வைத்த மகராசன்

இந்த வரலட்சுமியினை பார்க்கும் பொழுது இறுதி சுற்று படத்தில் ரித்திகா சிங்கிற்கு பதிலாக இவரை அமர்த்தி இருக்கலாம், அட்டகாசமாக பொருந்தி இருப்பார் என்றே தோன்றுகின்றது.. [ [ October 25, 2018 ]

============================================================================

சின்மயி அங்கு சுற்றி இங்கு சுற்றி இப்பொழுது தலைவி குஷ்புவிடம் வம்பிழுப்பது போல் தெரிகின்றது

தலைவியினை டிவிட்டரில் வம்பிழுக்கின்றார் சின்மயி

ஆனால் தலைவி மகா அமைதி ஏன்?

தெரிந்த கதைதான். சுத்தமாக குளித்து விபூதி பூசி வரும் கோவில் யானை சாக்கடை பன்றியினை பார்த்து ஒதுங்கி சென்றால் அது பயம் அல்ல‌

அச்சேறு தன் மேல் பட்டுவிட கூடாது எனும் கவனம்

தலைவி அதைத்தான் செய்கின்றார்

ஆனால் சங்கம் பொறுக்காது,
அம்மணிக்கு சங்கம் பகிரங்க எச்சரிக்கை விடுகின்றது

தலைவியினை தேவை இன்றி சீண்டினால் சின்மயி என்பவர் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

[ October 26, 2018 ]

============================================================================

மக்கள் அந்த அம்மா முதலமைச்சர் என்றுதான் வாக்களித்தார்கள், அவர் இல்லா நிலையில் ஆட்சி கலைத்துவிட்டு தேர்தலை நடத்துவதுதான் முறை

ஆனால் அவர்களோ விளையாடி கொண்டிருக்கின்றார்கள். 18 பேர் செல்லாது என அறிவிக்கபட்டாயிற்று

ஆக தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கு பிரதிநிதிகள் இல்லை, ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் ஏக பட்ட குழப்பங்கள்

உள்ளாட்சி பிரதிநிதியுமில்லை, எம்.எல்.ஏவும் இல்லை என்றால் அத்தொகுதிகளின் நிலை என்ன?

இதை எல்லாம் கேட்க வேண்டியவர் ஆளுநர், அவரோ நக்கீரன் பத்திரிகையினை முறைத்தபடி அமர்ந்திருக்கின்றார், இதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை

ஏக குழப்பம், ஏக அழிச்சாட்டியம் என தமிழக மக்களுக்கு கடும் வெறுப்பினை கொடுக்கின்றார்கள்

இதை எல்லாம் பார்க்கும் பொழுது எம்.ஆர் ராதா அந்த ராமசந்திரனிடம் சொன்னதுதான் நினைவுக்கு வருகின்றது

அழகாக சொன்னான் தலைவன்

“டேய் ராமசந்திரா, உனக்கு எதுக்குடா அரசியல்? அங்கெல்லாம் காமராஜர் மாதிரி நல்லவங்க இருக்காங்க, அண்ணா மாதிரி அறிவாளி இருக்காங்க அவங்க பாத்துபாங்க‌

நீ இங்க‌ ஒழுங்கா நடிச்சா மட்டும் போதும், போய் ஒழுங்கா சினிமாவுல நடி”

[ October 26, 2018 ]

============================================================================

பெரியம்மை (small pox) , சின்னம்மை (chicken pox) என பல நோய்கள் அக்கால உலகில் இருந்தது. இன்று மத ,சாதி கலவரங்களுக்கு இருக்கும் பயம் அன்று அந்த நோய்க்கு இருந்தது

வந்துவிட்டால் சில விக்கெட்டுகளை அல்ல, சுனாமி போல வாரி சுருட்டிவிட்டு செல்லும்

இதற்கு மருந்து கண்டுபிடித்தவர் எட்வர்ட் ஜென்னர் என்பவர், அதன் பின் யாரும் அந்நோயால் சாகவில்லை.

இதே நாளில் 1977ல் பெரியம்மை ஒழிந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது

ஆனால் இதே பெரியம்மையும் சின்னமையும் தமிழகத்தில் வேறு வடிவில் வந்தன‌

கிட்டதட்ட 30 ஆண்டுகள் கடுமையாக பாதித்தது, தமிழகம் கடும் அவஸ்தைபட்டது

அப்படி ஒரு அவஸ்தை, அது படுத்தியபாட்டின் பல வடுக்கள் தமிழகமெங்கும் இருக்கின்றன‌

இதில் பெரியம்மை இப்பொழுது இல்லை, சின்னம்மை வைத்தியசாலையில் முடக்கபட்டு, அதை முற்றிலுமாக தடுக்கும் கட்டத்தில் இருக்கின்றது.

பழைய வீரியம் இல்லை என்பதால் இப்போதைக்கு ஆபத்த்தில்லை

இதனால் உலகம் போலவே பெரியம்மை சின்னம்மை நோயிலிருந்து தமிழகமும் விடுபட்டாலும் பெரியம்மை விட்டு சென்ற கிருமிகளின் தாக்கம் ஓரளவு இருக்கின்றது

அந்த கிருமிகளை ஒழிக்காமல் செய்து தமிழக நலன் கெடுக்க பலர் சதி செய்கின்றார்கள். அந்த மனிதகுல விரோதிகளை ஐநாவில் புகார் செய்ய வேண்டும்

எஞ்சி இருக்கும் அந்த கிருமிகளும் விரைவில் அழிக்கபட வேண்டும்

[ October 26, 2018 ]

============================================================================

சிறையில் கன்னடம் கற்கின்றார் சசிகலா : செய்தி

நிரந்தரமாக கர்நாடகாவிலே தங்கிவிடும் திட்டம் இருக்கலாமோ என்னமோ?

கன்னடர்களுக்கும் ஒரு தியாக தலைவி கிடைக்க வேண்டுமா இல்லையா?

[ October 26, 2018 ]

============================================================================