யாசர் அராபத்

Image may contain: 1 person
November 12, 2015

ஒரு மானிட நேயமிக்க, அதே நேரம் தீவிரமான ஒரு போராளியினை நமது தலைமுறையில் கண்டோம் என்றால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், அது யாசர் அராபத். இன்று நினைவுபடுத்தவில்லை. அந்த பெருமகனாரின் நினைவு நாள் இன்று.

எவ்வளவு பெரும் சக்தியினை எதிர்த்து போராடினார், அதுவும் தொடக்கத்தில் ஈழ போராளிகளுக்கும் (உமா மகேஸ்வரன், பத்மநாபா) போன்றோருக்கு பயிற்சியும் வழங்கி, மானிட போதனைகளையும் வழங்கி போராட வைத்த மாமனிதன்.

இஸ்ரேல் எனும் மனிதநேயமில்லா அரசினை , இரும்பு அரசினை, இண்டிபாதா எனும் மக்கள் போராட்டம் மூலம் உலகினை நோக்க வைத்த பெருமகன்.

முடிந்த வரைக்கும் பார்த்துவிட்டு, இனி மொத்தமாக மக்களை இஸ்ரேல் குதறிவிடும் என்பதால் சமாதான உடன்படிக்கைக்கு வந்து மக்களை காத்தவர்.

நிதானம் தவறி, அமெரிக்க அதிபர் நிக்சனை கொல்வேன், ரீகனை கொல்வேன் அல்லது இஸ்ரேலிய பிரதமர்களுக்கு குண்டு அனுப்புவேன் என்று ஒருக்காலும் இறங்காமல் காயம் தாங்டி போராடியவர்.

அவர் இருக்கும் வரை அலஅக்சா வளாகத்தை தள்ளி இருந்து பார்த்த இஸ்ரேல், அம்மாமனிதனின் மறைவிற்கு பின் நடு மசூதியில் நிற்கின்றது. அப்படி அந்த மண்ணிற்கு காவலாய் நின்ற பெருமகன் அவர்.

தமிழக மீடியாக்களில் வேதாளம், தூங்காவனம் என கனவுலகை விமர்சிக்கும் பத்திரிகைகள் ஒன்று கூட அவரை நினைவுபடுத்தவில்லை.

அவ்வளவு ஏன் சே குவாரேக்கு வீர வணக்கம் நரகாசுரனுக்கு வீரவணக்கம் என கத்துவோர் யாரும் இந்த மாபெரும் போராளிக்கு ஒரு மரியாதை கூட செலுத்தவில்லை. இதுதான் இவர்கள் உலகினை புரிந்துகொண்ட லட்சணம், ஹிட்லரை கொண்டாடுபவர்களுக்கு ஒரு உன்னத போராளி மறந்து போனது ஒன்றும் ஆச்சரியமில்லை. இவர்கள் எந்த போராட்டத்தை உருப்படியாக கற்றார்கள்.

# காரணம் அவர்கள் தலைவன் தமிழகம் தாண்டாதவர், அராபத்தின் பயிற்சிபெற்ற போராளிகளின் அருமை அவருக்கும் தெரியாது, பின் இவர்களுக்கு எப்படி தெரியும்?

# வாழ்க நீ எம்மான்

சிதறல்கள்

பாஜகவுக்கு எதிராக மதச் சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

பாஜகவிற்கு பெரும் முட்டு கொடுத்தவர் சந்திரபாபு நாயுடு, முன்னொரு காலத்தில் பாஜகவின் நெருங்கிய தோழர்

இப்பொழுது மாநில நலனுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் இப்படி சொல்லிகொண்டிருக்கின்றார், சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் பட்சத்தில் மோடி வாழ்க என கிளம்பிடுவார்

[ November 9, 2018 ]

============================================================================

நமக்கு ஒரு சகோதரன் இல்லை என்ற குறை முன்பெல்லாம் உண்டு, அடிக்கடி அந்நினைவு வரும்

அந்த குறையினை தீர்த்து வைத்தவர் Senthil Kumar Chennai என்பவர், அவரோடு இருவரானோம்

சுவாரஸ்யமானவர் அவர், கள்ளம் கபடம் என்பதெல்லாம் இல்லை, யாரிடம் எவ்வளவு சுருட்டலாம் என பாக்கெட்டில் கை போட்டு அலையும் உலகில் அவர் வித்தியாசமானவர்

முகநூலில் மட்டுமே அவரை தெரியும், எப்பொழுதாவது போனில் பேசுவாரன்றி வேறு பழக்கமில்லை.

ஆனால் சென்னைக்கு வந்திருந்த பொழுது ஒரு நொடி என்னை விட்டு அகலவில்லை, பழனிச்சாமி அரசினை மோடி காப்பது போல் அருகிருந்து எம்மை கவனித்து கொண்டார்.

மகா உற்சாகமாக என்னை அழைத்து கொண்டு சென்னை எங்கும் சுற்றினார், அப்படி ஒரு மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது

முகம்பாராமல் அகத்தால் உருவாகும் நட்பும் சாத்தியம் என்பதை அவராலே விளங்கிகொண்டேன்

கலைஞரை சந்திக்க அவர் செய்த முயற்சிகளும், அந்த ஜனவரி 18 மாலை பொழுதில் கலைஞரை இருவரும் சந்தித்த பெரும் நிகழ்வும், அதன் பின் மெரீனாவில் நள்ளிரவு வரை அவரின் நினைவுகளில் மூழ்கி கிடந்ததெல்லாம் மறக்க கூடியது அல்ல‌

அந்த அற்புதமான , உடன்பிறவா சகோதரருக்கு இன்று பிறந்த நாள் , உறுதியாக என்னால் சொல்ல முடியும் வாழ்வில் நான்பெற்ற மிக நல்ல வரம் அவர்

அவருக்கு இறைவன் எல்லா வளமும், நலமும் கொடுத்து பல்லாண்டு காலம் காக்க பிரார்த்தனைகள்

அன்பர் வாழட்டும், செழிக்கட்டும், இந்த அரைவாழ்வு அடுத்த பிறந்த நாளுக்குள் நிறைவாழ்வு ஆகட்டும்

அன்னார் இன்னும் திருமணம் செய்யாமல் அரைவாழ்வு வாழ்கின்றார், நிச்சயம் நயன், கீர்த்தி சுரேஷுக்காக காத்திருப்பது போல் எல்லாம் தெரியவில்லை ஆனாலும் தாமதிக்கின்றார்

விரைவில் அவர் தன் மணவாழ்வினை தொடங்க வாழ்த்துக்கள்

நான் வணங்கும் புனித அந்தோணியார் அவரை மென்மேலும் ஆசீர்வதிக்க‌ட்டும்

என்ன இருந்தாலும் அன்னார் இறுதியாக சென்னையில் சொன்னதை மறக்கவே முடியாது

“தலைவி குஷ்புவினை பார்க்க முடியலைன்னு வருத்தபடாதீங்கண்ணே, கலைஞரையே இப்பதான் பார்த்தோம்

அந்தம்மாவும் ஒருநாள் வீல்சேர்ல இருக்கும்ணே, அப்போ கண்டிப்பா 2 பேரும் கண்டிப்பா பார்த்துவிடலாம் சரியா”

[ November 9, 2018 ]

============================================================================

தனக்கு புராண கதைகளில் நம்பிக்கை இல்லை என அடிக்கடி சொல்வார் கலைஞர்

ஆனால் எதிரிகளை இழுத்து போட்டு அடிக்க விபீஷ்ணன், சுக்ரீவன், பிரகலாதன் போன்ற பெயர்களை அடிக்கடி பயன்படுத்துவார்

இந்த தயாநிதிமாறன் கோஷ்டிக்கும் அவருக்கும் உரசல்கள் ஆரம்பித்த நேரம், முரசொலியில் இப்படி புலம்பினார்

“மாறா நீ பெற்ற பிள்ளையா அந்த பிரகலாதன்?”

அந்த வரி இப்பொழுது உண்மையாகின்றது, பிரகலாதன்கள் சுய உருவினை காட்டிகொண்டிருக்கின்றார்கள்

கலைஞர் ஒரு தீர்க்கதரிசி..

[ November 9, 2018 ]

============================================================================

அரசுக்கு எதிரான கருத்து என சோ ராமசாமியின் நாடகம் தடை செய்யபடும் சூழல், காமராஜரை சந்தித்து நியாயம் கேட்கின்றார் சோ

“உன்ன பத்தி தெரியும்ணேன், உன்னால குழப்பம் வர கூடாதுண்ணே, அதான் அப்படி பேச்சு வந்திருக்கும்ணே” என்றார் காமராஜர்

“ஏன் நான் கார் கூட ஓட்டுவேன், என்னால விபத்து வரும்னு இப்பவே என் டிரைவிங் லைசென்ஸ ரத்து செய்யுமா அரசு” என கேட்டார் சோ,

விவாதம் முற்றிற்று

இறுதியாக காமராஜர் நாடகம் பார்க்க வருகின்றார் , வழக்கமான பாணியில் பின்னி எடுத்தார் சோ ராமசாமி பாதி நாடகத்தில் கோபத்தில் எழும்பி சென்றுவிட்டார் காமராஜர்

ஆனால் நாடகம் தொடர்ந்து நடக்க அவர் தடை செய்யவில்லை

மறுபடியும் அவரை சந்தித்து கேட்டார் சோ, பாதிதானே பார்த்தீங்க, மீதி நாடகம் பார்க்க நாளைக்கே ஒரு சீட் ரிசர்வ் பண்ணட்டுமா?

சத்தம் போட்டு சிரித்தார் காமராஜர்

இன்னொரு நாடகம் எம்.ஆர் ராதாவுடையது, நாடகம் அரங்கேறினால் விடமாட்டோம் என அந்த கோஷ்டி தகறாறு செய்தது காரணம் ராதாவின் நாடகம் ராமரை சீண்டுவது போல் இருந்தது, கொட்டகையினை கொளுத்த ஒரு கும்பல் வந்தது

“டேய் நாடகம் நடக்கும், எவன் தடுப்பான்னு பார்க்குறேன்” என கம்பு தன் அடியாட்கள் சகிதம் சென்றார் ராதா, இரும்பு கேட் பூட்டபட்டிருந்தது, ஆனால் அடிக்க வந்த கோஷ்டி திரும்பி சென்றது

மறுநாள் சொன்னார் ராதா, இரும்பு கதவுல கரென்ட் கனெக்சன் கொடுத்திருந்தேன், தொட்டிருந்தா பூரா பயலும் காலி

அந்த அதிரடியில் அரண்டு நின்றது தமிழகம்

கீமாயணம் எனும் நாடகம் அதில் ராமரை கிண்டல் செய்ததாக வழக்கு, ராதா கைது செய்யபட்டார்

ஆனால் எப்படி நீதிமன்றம் சென்றார், ராமர் வேடம் அணிந்து ஒரு கையில் கள்ளும் இன்னொரு கையில் மாமிசமுமாக சென்று “எசமான் இப்படித்தான் நடித்தேன் என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள்..” என தைரியமாக சொன்னார்.

ஆம், சாட்சி எல்லாம் தேவை இல்லை, நானே சாட்சி ம்ம் உத்தரவிடுங்கள் என நின்ற ராதாவினை வினோதமாக பார்த்தது நீதிமன்றம்

இன்னொரு நாடகம் தடை என சொல்லிற்று அரசு, மீறி நடத்தினார் ராதா , ஆனால் கைது செய்ய வந்தார் இன்ஸ்பெக்டர்

அந்த இன்ஸ்பெக்டர் மிக கடுமையானவர், பலத்த சர்ச்சைக்கு பின் நாடகம் முடிந்தபின் ராதாவினை கைது செய்வதாக ஏற்பாடு

முதல் காட்சி, முதல் வசனம் இப்படி பேசினார் ராதா “எவண்டா இந்த நாய அவுத்துவிட்டது டாமிட், ஓவரா கொலைக்குது, ஒழுங்கா பிடிச்சி அவன கட்ட சொல்லு இல்லண்ணா துப்பாக்கி எடுத்து சுட்டுருவேன் ராஸ்கல்.”

அத்தோடு கிளம்பி சென்ற இன்ஸ்பெக்டர் அதன்பின் வரவே இல்லை

இப்படியான நாடககாரர்கள் அன்று இருந்தார்கள், அவர்களிடம் துணிவு இருந்தது காரணம் உண்மை இருந்தது

அவர்கள் அதிகம் சம்பாதிக்க ஆசைபடவில்லை, தங்கள் கலையில் நாட்டில் உள்ளதை உள்ளபடி தைரியமாக சொன்னார்கள்

வரலாற்றில் நிலைத்தார்கள்

இன்றுள்ள இந்த நாடகமான சினிமாக்காரர்களை நினைத்தால் பரிதாபமாகா இருக்கின்றது, மடியில் கனம் ஒரு மிரட்டலுக்கே வழியில் பயம், அலறுகின்றார்கள்

கடுமையான அரசுகளை எதிர்கொள்வது எப்படி என்பதற்கு எம்.ஆர் ராதாவும், சோ ராமசாமியும் எந்நாளும் தமிழக எடுத்துகாட்டுக்கள், இந்த சினிமா நடிகர்கள் படித்தால் அவர்களை படிக்க வேண்டும்

ராமசந்திரனையும், ரஜினியினையும் படித்தால் இப்படித்தான் ஆகும்…

[ November 9, 2018 ]

============================================================================

தமிழக அரசியல் சினிமா என பல துறைகளில் தவிர்க்க முடியாதவர் தங்க தலைவி

அவர் இல்லாமல் சர்க்கார் என அரசியல் படம் எடுத்தால் எப்படி உருப்படும்? உருப்படவே உருப்படாது

தலைவி இல்லா எல்லா படமும் நாசமாகத்தான் போகும்..

ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்லி சர்க்கார் படத்தை அடிக்க, சங்கமோ ஏன் எங்கள் தங்க தலைவி படத்தில் இல்லை என கேட்டு போராட்டம் நடத்துகின்றது

[ November 9, 2018 ]
Image may contain: 1 person, selfie and closeup

திரைச்செய்திகள்

இந்த நடிகையர் திலகம் படத்தை இப்பொழுதுதான் பார்க்க முடிந்தது , சாவித்திரி கதையின் 75% உண்மையினை சொல்லி இருக்கின்றார்கள் மற்றபடி ஜெமினி பற்றி சொன்னதெல்லாம் சரி அல்ல‌

ஜெமினி அவரை குடிக்க பழக்கவுமில்லை, அவர் வாழ்வு திசைமாற காரணமுமில்லை

மற்றபடி அற்புதமான படம் அது, சாதாரண ஏழை சிறுமி சாவித்திரி 20 வயதிற்குள் சினிமாவில் உச்சம் பெற்று மாபெரும் செல்வத்தில் புரள்கின்றார்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு, அதாகபட்டது சாவித்திரி சிவாஜி எல்லாம் சினிமாவில் சம்பாதித்தார்கள், சாவித்திரி அன்றே லட்சம் லட்சமாக குவித்தார்

இதே காலத்தில் இவர்களுக்கு முன்பாக குவித்தவர்தான் கருணாநிதி, சந்தேகமில்லை 1955ளிலே அவர் வாங்கிய சம்பளமும் அன்பளிப்பும் அப்படி

சாவித்திரி அபியுலா சாலைக்கு வருமுன்பே கோபாலபுரத்தில் சொந்த வீட்டில் குடியேறியவர் அவர், அப்படியே தன் சம்பாததியத்தை முதலீடும் செய்திருந்தார்

சாவித்திரி சினிமாவில் சம்பாதித்தை ஒப்புகொள்கின்றார்கள், ஆனால் கலைஞர் மட்டும் திருட்டு ரயிலில் வந்து ஊழலில் சம்பாதித்தார் என சொல்லி மகிழ்கின்றார்கள்

அவர்கள் அப்படித்தான், ஆனால் சாவித்திரியினை விட அன்றே செல்வத்தை குவித்தவர் கலைஞர்

படத்தில் சொல்ல வேண்டிய விஷயம், கீர்த்தி சுரேஷ். மிக பிரமாதமான‌ நடிப்பு

சாவித்திரி போலவே கெட் அப் மட்டுமல்ல, தலைசாய்த்து ஆடுவது கையினை கன்னத்தில் வைப்பது, அவரை போலவே சிரிப்பது அழுவது என பின்னியிருக்கின்றார்

தட்டு நிறைய லட்டை வைத்துகொண்டு சாவித்திரி போலவே அசால்ட்டாக விழுங்கும் காட்சியில் எல்லாம் பின்னுகின்றார்

அட்டகாசமான நடிப்பு, சாவித்திரியினை கண்முன் நிறுத்திவிட்டார், வாழ்த்தாமல் இருக்க முடியாது

அவருக்குள்ளும் ஒரு மாபெரும் நடிகை இருகின்றார் என்பதை ஒப்புகொள்ளத்தான் வேண்டும்

இந்த வருடத்திற்கான குஷ்பு விருதினை கீர்த்தி சுரேஷுக்கு வழங்க சங்கம் முடிவெடுத்தாயிற்று

[ November 8, 2018 ]

============================================================================

நீர்தான் தைரியமான ஆளாச்சே, எங்கே உங்களின் வரப்போகும் படங்களில் இப்படி காட்சிகளை வைத்துவிடும் பார்க்கலாம்..

வைத்துவிட்டு சொல்லுமய்யா, சும்மா கண்டிக்க கிளம்பிவிட்டாராம்

[ November 9, 2018 ]
Image may contain: text
============================================================================

ஒன்றுமட்டும் நன்றாக புரிகின்றது

அன்றே குமாரசாமி ராஜாவோ, காமராஜரோ இல்லை பக்தவத்சலமோ இப்படி களமிறங்கி இருந்தால் அதாவது சினிமாவினை அடித்து துவைக்க ஆரம்பித்திருந்தால் பல விபரீத விஷயங்கள் நடந்திருக்காது

பின்னாளில் கலைஞரும் செய்திருந்தால் ராமசந்திரனின் இந்த இம்சை படங்களான இதயகனி போன்றவை வந்திருக்காது, உறுதியாக சொல்லலாம் கலைஞர் ராமசந்திரனை அரசியல் ரீதியாக எதிர்த்தாரே அன்றி சினிமா ரீதியாக அவர் முடக்க நினைக்கவே இல்லை

கலைஞரின் சுபாவம் அது, அரசியல் வேறு சினிமா வேறு என்பதில் மிக பெருந்தன்மையாக இருந்தார்

முதன் முதலில் சினிமாவினை கண் வைத்து தேவைபட்டால் மிதிக்க கால் வைத்தவர் ராமசந்திரன்

“அண்ணே, அண்ணே சிப்பாய் அண்ணே நம்ம ஊரு கெட்டு போச்சிண்ணே” என பாடல் எழுதிய கங்கை அமரன் பட்ட பாடு கொஞ்சமல்ல‌

அன்று வளரும் நடிகரான ரஜினி மேல் அவருக்கு அச்சமும் எரிச்சலும் இருந்தது , தன் முடியா படங்களின் இரண்டாம் பாகம் கூட ரஜினியால் முடிக்கபட கூடாது என்பதில் கவனமாக இருந்தார்

சினிமாவில் ஜெமினி கணேசனின் வாரிசாகும் பாக்யராஜை என் கலையுலக வாரிசு என சொல்லி காமெடி செய்யவும் அவர் தவறவில்லை

சினிமாவினை குரங்காக ஆட்டி வைக்க வேண்டும் என்பது அதிமுகவின் கொள்கை

ராமசந்திரன் செய்ததை ஜெயா தொடர்ந்தார், ஜெயா தொடர்ந்ததை இப்பொழுது இந்த அரசும் தொடர்கின்றது

[ November 9, 2018 ]

============================================================================

என்ன சொன்னாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டேன் என்கின்றார்கள் , பழனிச்சாமியினை அனுதினமும் கண்டித்தாலும் சத்தமில்லை

என்னடா செய்யலாம் என மல்லாக்க படுத்திருந்த பாமாகாவிற்கு சர்க்கார் கிடைத்துவிட்டது

கதை அவர்களுக்கு சிக்கலே இல்லை, புகையே சிக்கல்

ஆம், படத்தில் 5 முறை விஜய் புகை பிடித்தாராம், விடுவார்களா? புகை பிடித்த விஜயண்ணாவின் படத்தினை சிறைபிடிப்போம் என கிளம்பிவிட்டார்கள்

நாம் முன்பே சொன்னதுதான்

தமிழகம் ஒரு வித்தியாசமான மாநிலம், யார் எங்கிருந்து எப்பொழுது அடிப்பார்கள் என்றே தெரியாது ஆனால் ஒருவனை குறிவைத்துவிட்டால் இருட்டறையில் முரட்டு குத்தாக குத்துவார்கள்

இந்திராவும், மோடியுமே அலறி அடித்து ஒடிய தமிழகம் இது

இங்கு விஜயண்ணாவினை மட்டும் விடுவார்களா, அரசியலில் எப்படி எல்லாம் அடிப்பார்கள் என்பதற்கு ஆளுநரே சாட்சி

[ November 9, 2018 ]

============================================================================

சர்க்கார் விவகாரம் இன்னும் மகா காமெடி ஆகின்றது

ஏகபட்ட கோஷ்டிகள் ஊர்வலமாய் வந்து இந்த திருவிழாவில் ஆட்டம் போட வருகின்றன‌

ஏற்கனவே ஆசான் ஜெமோவின் கும்பல் ஒருபக்கம் குதிக்க, அதிமுகவினர் மறுபக்கம் குதிக்கின்றன‌

இதில் இந்த பாமக வேறு வந்தாயிற்று, பாமக வந்தால் விடுவாரா ரஜினி? பாபா நினைவுகள் எல்லாம் வந்து அவரும் வந்துவிட்டார்

இதில் முருகதாஸின் ரத்த சோதனை முடிவிற்காக காத்திருந்தவர்களும் வந்தாயிற்று ஆம் முருகதாஸ் நாடாராம், ராக்கெட் ராஜா என்பவர் எல்லாம் வந்துவிட்டதால் விஷயம் உண்மையாக இருக்கலாம்

இன்னும் யாரெல்லாம் வருவார்களோ தெரியாது, சிங்கம் , பிலி , கரடி , யானை என பல ஆட்டங்கள் நடக்கும் அரங்கம் போல சர்க்கார் அரங்கம் சர்கஸ் அரங்கமாக மாறி கொண்டிருக்கின்றது

இன்னும் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு ஆரம்பிக்கவில்லை, அதில் தலைகீழாக தொங்க போவது யார் என தெரிய மிக ஆர்வமாக சர்கஸ் ரசிகர்கள் உள்ளனர்

[ November 9, 2018 ]

===========================================================================

“இந்த கிறுக்கு கவிதை எழுதி என்னத்த கண்டோம், ஆசான் ஜெயமோகன் போல் ஆகவேண்டும்

என்ன செய்யலாம், மூன்றாம் கலைஞரின் அடுத்த படத்திற்கு வசனம் எழுதினால் ஆசான் அளவுக்கு ஹிட் ஆகிவிடலாம்.

தளபதியிடம் மெதுவாக‌ கேட்டு வைப்போம்..”

[ November 9, 2018 ]
Image may contain: 1 person, closeup
==========================================================================

“ஏனுங்க நாட்டு சர்க்கார் காரங்களா
உங்களுக்காக‌ தாமிரபரணியில் எல்லாம் முங்கி இருக்கேன், அடுத்து எங்கே மூழ்கணும் கங்கையிலா

சொல்லுங்க உடனே வந்து மூழ்குறேன், அகோரி சாமியார் ஆகணுமா ஆகுறேன், ஆனால் தம்பிய மட்டும் விட்ருங்க, பாவம் அவன் அழுகை தாங்க முடியல…”

[ November 9, 2018 ]
Image may contain: 2 people, people smiling, people standing
============================================================================

“நெலமையே சரியில்லை சார், டயலாக்கே வேண்டாம்

இங்க என்ன சொன்னாலும் அடிப்பாங்க போல இருக்கு அதுனால இந்த வாலி படத்துல வர்ற மாதிரி வாய் பேசாத கேரக்டரா வச்சிருங்க ப்ளீஸ்..”

[ November 9, 2018 ]
Image may contain: 2 people, beard
============================================================================

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

அடேய் சினிமா அல்ட்ராசிட்டிஸ், கலைஞர் எவ்வளவு பெருந்தன்மையான மனிதர் என இனியாவது உணர்ந்துகொள்ளுங்கள்

இன்று இருந்தாலும் திரைகலைஞர்களுக்கு ஒரு சிக்கல் என்றால் வரத்தான் செய்வார் அந்த மனிதர்

இனி சினிமா கோஷ்டி அடிக்கடி கோர்ட் பக்கம் செல்ல வேண்டி இருக்கும் , அப்படி போகுமுன் அவர் சமாதியில் மன்னிப்பு கேட்டுவிட்டு செல்லுங்கள்

கான்ஸ்டான்டைன் பெஸ்கி – வீரமாமுனிவர்

அவர் பெயர் கான்ஸ்டான்டைன் பெஸ்கி, இயேசு சபை குரு அவர் இத்தாலியினை சேர்ந்தவர், போர்த்துகீசியர் இந்தியாவிற்கு வந்த கிறிஸ்தவ துறவி அதாவது நாயக்க மன்னர்கள் காலத்திலே இப்பக்கம் வந்தவர்

அவருக்கும் தமிழ் ஏனோ பிடித்து போயிற்று, இன்னொன்று தமிழ்படிக்காமல் இங்கு கிறிஸ்துவத்தை போதிக்க முடியாது எனும் கருத்தும் உண்டு, அவரின் தமிழ்நலத்தில் சுயநலமும் கலந்திருந்தது

இங்குள்ள நிலமையினை கண்டார், சங்கராச்சாரி போன்ற காவி உடை அணிந்த குருக்களுக்கு இருந்த மரியாதையும் ஐரோப்பியர் அசைவம் உண்பவர் என தமிழர் ஒதுக்கியதையும் கண்டார்

சட்டென்று காவி உடை உடுத்தினார், புனூல் அணிந்தார் புலால் மறுத்தார், நானும் ஐரோப்பிய சாமி என சொல்லிகொண்டார்

தமிழனாக மாறி கிட்டதட்ட பிராமண கிறிஸ்தவ குருமார் சாயலில் இங்கு போதிக்க தொடங்கினார்

திருவையாறு, தஞ்சை திருச்சி என அலைந்தாலும் காமநாயக்கன்பட்டியும் தென்காசியும் அவருக்கு பிடித்தமான பகுதிகள்

ஆனால் தமிழை கசடற கற்றார் என்பது உண்மை, தெலுங்கிலும் புலமை பெற்றார். தன் பெயரை கூட தைரிய நாத சுவாமி என மாற்றினார், பின்பு தைரியம் என்பது வடமொழி என அறிந்து வீரமாமுனிவர் என சுத்த தமிழ்பெயரை கொண்டார்

இந்த கால்டுவெல்ல்லுக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் தேவாரத்தை எல்லாம் லத்தினில் மொழிபெயர்த்தார்

அவர் காலத்தில் ஆங்கிலம் பிரசித்திபெற்ற மொழி அல்ல, லத்தினே பிரதானம், ரோமர்கள் ஆட்சியில் உச்சம் பெற்ற லத்தீன், பின்பு போப் காலத்தில் உலகம் ஆண்டது

இன்று ஆங்கில மொழிக்குள்ள வரவேற்பு அன்று லத்தீனுக்கு இருந்தது, இதனால் முனிவர் செய்த ஒரு காரியம் வரவேற்கததக்கது

அதாவது லத்தீன் தமிழ் அகராதியினை உருவாக்கினார், ஐரோப்பிய மொழிக்கும் தமிழுக்கும் முதல் பாலமிட்டது அவரே, நோக்கம் கிறிஸ்துவத்தை பரப்புவது என்றாலும் நன்மையும் இருந்தது

லத்தீன் நூல்கள் தமிழுக்கும், தமிழ் நூல்கள் லத்தீனுக்கும் மாறின, அப்படி மாறிவந்த நூல்களில் ஒன்றுதான் பரமார்த்த குருக்கள் கதை

தமிழில் பல நூல்களை எழுதினார் முனிவர் அதில் தேம்பவானி முக்கியமனாது

தமிழில் கிறிஸ்தவ இலக்கியமாக முதலில் வந்தது அதுதான், முதல் கிறிஸ்தவ இலக்கியம் அதுதான், கொஞ்சமும் தமிழ் இலக்கணம் பிசிறாமல் வகுக்கபட்டது அது

தெற்கே தமிழ், கிறிஸ்தவம் என உழைத்திருக்கின்றார் இந்த முனிவர், தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டு கிறிஸ்துவத்திற்கு ஆற்றிய தொண்டை விட அதிகம்

இவரை சில இடங்களில் பழிப்பார்கள் காரணம் வேறொன்றுமில்லை

இவரை போலவே ராபர் தே நோபிலி என்பவர் காவி கட்டி அலைந்தார், அவர் கொஞ்சம் அடாவடி பார்ட்டி

இந்த தோமையார் இந்தியா வந்தார், இந்தியா தோமாவழி கிறிஸ்தவ நாடு போன்ற குபீர் குண்டுகளை அவர்தான் தொடங்கி வைத்தார், ஒரு மாதிரியான ஆசாமி அந்த சுவாமி

இப்படி இரு ஐரோப்பியர்கள் காவிகட்டி அலைந்ததால் அவர் செய்த அட்டகாசம் எல்லாம் வீரமாமுனிவர் என்பவர் மேல் பழியாய் விழுந்தது

உண்மை அது அல்ல‌

இங்கு வீரமாமுனிவரின் கடைசி காலங்களில் சர்ச்சைகளும் இருந்திருக்கின்றன, குழப்பமான வரலாறுகள் அவை

அதன் பின் அவர் கேரளா சென்றிருக்கின்றார் அங்கே மரித்திருக்கின்றார் அங்கு கல்லறை எல்லாம் இருந்திருக்கின்றது

திப்பு சுல்தானுக்கும் கேரள கிறிஸ்தவர்களுக்குமான மோதலில் வீரமாமுனிவரின் கல்லறை சிதைக்கபட்டது என்கின்றார்கள்

அவருக்கு இன்று நினைவிடம் இல்லை

ஆனால் முதன் முதலில் தமிழின் பெரும் இலகியங்களை 16ம் நூற்றாண்டிலே லத்தீனுக்கு மொழி பெயத்தவரும் லத்தீன் தமிழ் அகராதி உருவாக்கி தமிழை ஐரொப்பாவிற்கு எடுத்டு செல்ல முயன்றது அவரே

அவருக்கு இன்று பிறந்த நாள் , அந்த லத்தீன் தமிழனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

அன்று கத்தோலிக்க சபைகளில் லத்தீனில்தான் திருப்பலி நடத்துவார்கள், அதற்கு சரியான தமிழ் பதிப்பினை கொடுத்தவர் இந்த வீரமாமுனிவர்

அந்த தமிழும் அதன் வார்த்தைகளும் அவ்வளவு அழகானவை அர்த்தமுள்ளவை

அவ்வகையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் பெரும் நன்றிக்குரியவர் அவர்.

(இது இந்த பாஜக கும்0பலுக்கு கொண்டாட்டமான படம், ஆம் பாருங்கள் எங்கிருந்தோ வந்த இத்தாலியன் இங்கு காவி உடுத்தி, சைவம் உண்டு இந்திய பண்பாடை ஏற்றிருக்கின்றான்

உங்களுக்க்கு ஏன் வெள்ளை ஆடை, கறுப்பு சிகப்பு கயிறு

இந்தியாவில் கிறிஸ்தவராக இருந்தால் இந்த வீரமாமுனிவர் போல் காவிகட்டி கொண்டும் இருக்கலாம் என கிளம்பிவிடுவார்கள்..

இன்னும் சிலர் என்ன சொல்வார்கள் தெரியுமா?

இந்தியாவின் முதல் கிறிஸ்தவ சங்க்பரிவார், பாஜககாரர் வீரமாமுனிவர் வாழ்க வாழ்க)

[ November 8, 2018 ]

Image may contain: 1 person, standing and beard

பணமதிப்பிழப்பு நடவடிக்கை

இந்த கருப்பு பணத்தை ஒழிக்க போகின்றேன் என மோடி தேன் கூட்டில் கை வைத்து சிக்கிய நாள் இன்று , ஆளாளுக்கு ஏகபட்ட பொங்கல்கள், கத்தல்கள் இன்ன பிற

நாட்டின் வளம் எதில் இருக்கின்றது? மக்கள் செலுத்தும் வரியில் இருக்கின்றது , ரிசர்வ் வங்கி அடிக்கும் ஒவ்வொரு ரூபாயும் கைமாறும் பொழுது குறிப்பிட்ட காசு வரியாக வரவேண்டும் பல கைகள் மாறிவரும்பொழுது ரிசர்வ் வங்கி அச்சடித்த பணம் பல மடங்கு பெருக வேண்டும்

ஆனால் வரியே கட்டாமல் மறைத்து கடைசியில் அந்த ஒரிஜினல் நோட்டையும் மறைத்தால் நிலமை விபரீதமாகும், இந்தியாவில் அதுதான் நடக்கின்றது

வரியாக வரவேண்டிய பணத்தை பதுக்குகின்றார்கள் அதை செல்லாது என அறிவித்தாட்டால் அப்பணம் வெளிவரும் என்ற கணக்கில்தான் அந்த அதிரடி திட்டம் அறிவிக்கபட்டது

ஆனால் யானை வேட்டையாடபடும் பொழுது சிறு உயிர்கள் சாவது போல பல மக்கள் பாதிக்கபட்டனர் , மறுக்க முடியாது

பெரும் தொழிலதிபர்களை வைத்து நடத்தபட்ட குறிக்கு அப்பாவி ஏழைகளும் நடுத்தர மக்களும் பாதிக்கபட்டனர்

இன்னொன்று மோடி அறிவித்தாரே தவிர அதிகாரிகள் ஒருவரும் ஒத்துழைக்கவில்லை, பணக்காரர்களின் கைபாவையான வங்கிகள் அவர்களுக்கு ஏஜென்ட்டாகவே செயல்பட்டன, பெரும் பணக்காரர் வீடுகளில் இருந்து புது நோட்டுகள் கைபற்றபட்டதே சாட்சி

இன்னொரு கோணமும் உண்டு , இதனால் இந்திய பொருளாதாரம் சரியும் , ரூபாய் சரியும் என தெரிந்து 2000 நோட்டுகளுக்கு வந்திருக்கின்றார்கள், இது எதிர்பார்த்தது தான்

நிச்சயம் ரூபாய் நோட்டினை ஒழித்தது அதிரடிதான், நல்ல முயற்சிதான் ஆனால் சரியாக செயல்படுத்ததால் அதில் சிக்கல்கள் வந்தன‌

எனினும் ஒரு விஷயத்தை எல்லோரும் மறக்கின்றனர்

இந்த நடவடிக்கை எடுக்கபட்டபின்புதான் பல பிம்பங்கள் சரிய தொடங்கின , விஜய் மல்லையா, நீரவ் மோடி இன்னபிற சாம்ராஜ்யங்கள் எல்லாம் இதன் பின்பே சரிய ஆரம்பித்தன‌

பல தொழில்கள் பாதிக்கபட்டது உண்மைதான், நல்ல பணத்தில் தொழில் நடந்தால் ஏன் பாதிப்பு வரப்போகின்றது என்பதுதான் தெரியவில்லை

நிச்சயமாக 1990வரை இந்தியாவில் பணபுழக்கம் அதிகமில்லை, தாரளமயமாக்கலுக்கு பின் பணபுழக்கம் வெள்ளமென பாய்ந்தது, நிலங்கள் விலை எல்லாம் அதிகரித்தன‌

ரியல் எஸ்டேட் என்பது கருப்பு பணம் விளையாடும் இடமானது

இந்த நடவடிக்கைக்கு பின் நிலமதிப்பு சரிந்திருக்கின்றது ஒப்பு கொள்ளத்தான் வேண்டும்

ஆயிரம் சொல்லலாம், ஆனால் எம்மை பொறுத்தவரை இந்த நடவடிக்கையால் கருப்புபணம் ஓரளவு ஒழிக்கபட்டது , கருப்பு பணத்தினால் தொழில் நடத்தியவர்கள் பாதிக்கபட்டார்கள், அவர்கள் தொழிலும் பாதிக்கபட்டது என்பது மகா உண்மை

இயல்பாக வளராமல் ஊதிபெரிதாக்கபட்ட இந்திய பொருளாதார பிம்பம் மோடியின் இந்த நடவடிக்கையினால் உடைக்கபட்டது என்பதுதான் விஷயம்

உண்மையும் அதுதான் எங்கிருந்தோ பணம் வந்து குவிந்தது, விலைவாசி கடுமையாக உயர்ந்தது, நிலம் தங்கம் என பணம் எங்கிருந்தோ கொண்டுவந்து கொட்டபட்டது

பெரும் மால்களும் கட்டங்களுமாக எல்லாம் கொஞ்ச காலத்தில் உருமாறியது

அது யார் பணம்? மூலம் என்ன? என்பதெல்லாம் யாருக்கும் விளங்கவில்லை, அன்றாட கூலி 500 , 800 என்பதெல்லாம் சாதாரணமானது மக்களும் மகிழ்ந்தார்கள்

பணபுழக்கம் வந்ததே தவிர அதன் மூலம் தெரியவில்லை, இந்த ஒழிப்பிற்கு பின் அனைத்தும் ஆடிபோய் நிற்கின்றது

நிலவிலை , வீட்டு விலை எல்லாம் சரிந்து கிடக்கின்றன, பல நிறுவணங்கள் ஓட்டம் பிடித்தன், தொழிலதிபர்கள் பறந்தார்கள் இன்னும் ஏராளம்

உறுதியாக சொல்லலாம் அந்த அடியினை மோடி அடிக்காவிட்டால் இன்று நிலம் விலை எல்லாம் எங்கோ சென்றிருக்கும் , வருங்கால சந்ததி ஏதும் நினைத்துபார்க்கவே முடியாத அளவு விலை சென்றிருக்கும்

மிக நல்ல நடவடிக்கை இது, நடைமுறைபடுத்துவதில் சில அசவுரியங்கள் இருந்திருக்கலாம் , மிகபெரும் நாட்டில் அதெல்லாம் தவிர்க்க முடியாதது

மற்றபடி வரவேற்கதக்க நடவடிக்கை என்பதில் மாற்றுகருத்து இருக்கவே முடியாது

எந்தெந்த தொழில் எல்லாம் பாதிக்கபட்டது என புலம்புகின்றார்களோ , ஆழ கவனித்தால் அதெல்லாம் கருப்புபணத்தில் வாழ்ந்த தொழிலன்றி வேறல்ல‌

[ November 8, 2018 ]

வெளிகிரக வாசிகள் உண்டா

ஒரு விஷயம் உலகை புரட்டி போட்டிருக்கின்றது, அதுவும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றார்கள்
இந்த விண்வெளியில் மனிதனை தவிர ஏதும் உயிரினம் உண்டா என்பது பல்லாயிர ஆண்டுகளாக கேட்கபடும் கேள்வி அது மனிதன் ராக்கெட்டில் ஏறி விண்வெளிக்கு சென்றபின் அதிகமாயிற்று
வெளிகிரகத்தின் மனிதன் போன்ற உயிரினம் உண்டு என்பது நம்பிக்கை, நாத்திகர்கள் ஒருபடி மேலே போய் அவர்களைத்தான் உலகம் கடவுள் என சொல்கின்றது என சொல்வார்கள்
அதாவது இந்துமத புராணங்களிலும் பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் இந்த வெளிகிரக வாசிகளின் வாகன சாயலில் பல விஷயங்களை காணமுடியும் என்பதால் அது அவர்களுக்கு தோதாயிற்று
கோவில் கோபுரமே ராக்கெட் வடிவம என்பதும், இன்றும் கருவறைக்கு மேற்பகுதி விமானம் என்றும் சொல்லபடுவது முதல் பல விஷயங்களை எடுத்து போடுவார்கள்
யூதர்கள் என்பவர்கள் உலகை அழிக்க பயன்படுத்தபட்ட இனம் என்பதும் அவர்களின் கடவுள் ஒரு அழிவு சக்தி ஏலியன் என்பதும், அவர்தான் அவர்களுக்கு அறிவினை கொடுத்தார் அதனால் அவர்களால் குழப்பம் அதிகமாகும் இன்னொரு வகை செய்தி
இன்றுவரை யூதர்கள் அதை நிரூபித்தும் வருகின்றார்கள் என்பது வேறுவிஷயம், இன்னொரு உலகபோர் கூட அவர்களால் வரலாம்
எனினும் இதுவரை அறிவியலால் நிரூபிக்க முடியா விஷயம் வேற்றுகிரக மனிதர்களை பற்றியது, ஆதாரம் ஏதுமில்லை
பறக்கும் தட்டுக்கள் என்பார்கள், அதெல்லாம் அமெரிக்காவும் ரஷ்யாவும் செய்த உளவு விமானங்கள் என்பதும் அதில் இருந்த குள்ள மனிதர்கள் எல்லாம் திசை திருப்பும் காரியங்கள் என்பதும் வேறு விஷயம்
ஹிட்லர் செய்ய முனைந்த வேகமான வட்ட வடிவ விமானத்தின் மாடலை கைபற்றி இருநாடுகளும் செய்த அட்டகாசம் அவை
ஆனால் உண்மையில் வெளிகிரக வாசிகள் உண்டா என்றால் உண்டு என்கின்றது பல ஆய்வுகள், அன்றிலிருந்தே அவர்கள் அடிக்கடி பூமிக்கு வந்திருக்கலாம்
எகிப்து பிரமீடுகள் உட்பட பல விஷயங்களுக்கு கணித சூத்திரங்களை கொடுத்திருக்கலாம் ஆப்ரிக்கர்களுக்கு பல விண்வெளி ரகசியங்களை சொல்லி இருக்கலாம் என்கின்றார்கள்
ஆம் இன்று விண்வெளி விஞ்ஞானிகள் சொல்லும் பல முடிவுகள் ஆப்ரிக்கர்களுக்கும் இந்தியர்களுக்கும் அன்றே தெரிந்ததில் அதிர்ந்து நிற்கின்றது விண்வெளி ஆராய்ச்சி உலகம்
ஏன் அடிக்கடி வரவில்லை என்றால் ஆய்வாளர்களாக முடிவுக்கு வருவார்கள், அவை நம்மை விட அறிவில் மிக சிறந்த இனமாக இருக்கலாம் அவை தேடியது கிடைக்கா பட்சத்தில் இங்கு வருவதை தவிர்க்கலாம்
உதாரணமாக நாம் ஹெலிகாப்டரில் பறக்கின்றோம், ஒரு ஊருக்கு ஏதோ விஞ்ஞானம் தேடி செல்கின்றோம் அங்கே கட்டுவண்டி கட்டி காளைமாடு பூட்டி இருந்தார்கள் அதுதான் அவர்களின் உச்சகட்ட வளர்ச்சி என்றால் திரும்பி பார்ப்போமா?
இல்லை, அப்படித்தான் நம்மை விட அறிவான இனம் ஒன்று இங்கு வந்திருக்கலாம் என்கின்றார்கள்
இது போக அமெரிக்கருக்கும் ஐரோப்பியருக்கும் விஞ்ஞானத்தின் சில தத்துவங்களை அவர்கள் சொன்னதாகவும் அதில்தான் அந்நாடுகள் படுவேகமாக வளர்ந்ததாகவும் சில‌ தியரி
ஹிட்லருக்கு கூட அவர்களோடு தொடர்பு இருந்தது என்பது ஆதாரமில்லா தியரி
ஏன் அவர்களுக்கு அந்நிய கிரகத்தார் அறிவினை கொடுத்தார்கள் என்றால் உலகம் அழியட்டும் என நினைக்கின்றார்கள் என்பது இன்னொரு ஆராய்ச்சி
(சொல்லமுடியாது இந்த வானத்து தேவர்கள் வந்து சென்றார்கள் என எல்லா மதமும் சொல்கின்றது
ஆக பூமி சண்டையிட்டு அழியட்டும் என்பது அவர்கள் ஏற்பாடாக இருந்தாலும் இருக்கலாம்)
இதெல்லாம் யூகமும், மர்மமும் மட்டுமே எதுவும் முடிவல்ல. ஆனால் உலகின் மர்ம பக்கங்கள் ஏராளம்
ஐன்ஸ்டீன் முதல் பல விஞ்ஞானிகள் இதில் தலையினை பிய்த்தனர், ஹாலிவுட் படங்கள் எல்லாம் கொடூர உருவமே ஏலியன்ஸ் என சொல்லி சம்பாதித்தன‌
ஸ்டீபன் ஹாக்கிங்க்ஸ் மட்டும் சொன்னார், சினிமாவினை பார்த்து முடிவுக்கு வராதீர்கள் அது இயக்குநர் கற்பனை
உண்மையில் அந்நிய கிரகத்தார் நம்மை விட அழகாக இருக்கலாம் இல்லை பூச்சியாக கிருமியாக இருக்கலாம், ஏன் கண்ணுக்கு புலபடாத வகையில் நம் அருகிலே இருக்கலாம், ஆனால் பரந்த விண்வெளியில் அவர்கள் இருக்க சாத்தியம் அதிகம் என்றார்
இன்று நாம் விண்வெளி கிரகங்களில் தங்கம் உண்டா? மீத்தேன் உண்டா என இயற்கை வளங்களை தேடுவது போல அவர்கள் எதையோ தேடி இங்கும் வரலாம், நீரை கூட தேடி வரலாம் என பல விஷயங்களை சொன்னார்
அவரின் சிந்தனையும் முடிவுகளும் ஆச்சரியமான உண்மைகள் என்பதால் அதை ஒதுக்கிதள்ளவில்லை உலகம் பரீசிலனையில் வைத்திருக்கின்றது
இந்நிலையில்தான் அந்த செய்தி வந்திருக்கின்றது
ஆம் இதுவரை விண்வெளி கலனை யாரும் கண்டதில்லை, அதோ வருகிறார் இயேசு, இதோ வருகிறார் இயேசு என்பது போல அங்கே பறந்தது, இங்கே விழுந்தது இங்கே வேகமாக கடந்தது என்பார்களே தவிர் ஆதாரம் ஏதுமில்லை
அமெரிக்காவின் ரோஸ்வெல் பகுதியில் ஒரு பறக்கும் தட்டு கைபற்றபட்டதாகவும் ஒரு நட்சத்திர குள்ளனை பிடித்ததாகவும் செய்திகள் உண்டு ஆனால் ஆதாரமில்லை
முதன் முதலில் பறக்கும் தட்டு பற்றிய ஆதாரம் வந்திருக்கின்றது
ஹவாய் பக்கம் பறந்த அது சிக்கி இருக்கின்றது, இந்த ஹாரிஸ் ஜெயராஜின் பல்லவி போல ஒன்னுமாவாவா என பெயர் வைத்திருக்கின்றார்கள்
அமெரிக்க விண்வெளி நிலையம் அந்த படத்தை தெரிவித்திருக்கின்றது, சர்கார் படத்தை தமிழக அரசியல்வாதிகள் பார்ப்பது போல சதா சர்வ காலமும் விண்வெளியினை நோக்கி தவமிருக்கும் நிலையம் அது
அதாவது வேற்றுகிரக வாசிகள் உண்டா என்பது பற்றிய ஆய்வு நிலையம் அது
அவர்கள் அதை கண்டிருக்கின்றார்கள், ஏதோ எரிகல் அல்லது பாறை என கருதியவர்களுக்கு அதன் நேர்த்தி ஒரு கவனத்தை கொடுத்திருக்கின்றது, நிச்சயம் அது வாகனம் ஆனால் எரிகல் போலவே தயாரிக்கபட்ட வாகனம் என்ற முடிவிற்கு வந்தார்கள்
அது மணிக்கு 50ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தை தாண்டி செல்வதுதான் அவர்களுக்கு பெரும் வியப்பு, அது வாகனமேதான் சந்தேகமில்லை ஆனால் எப்படி இவ்வளவு பெரும் வேகம் சாத்தியம் என தொடர்ந்து ஆராய்ந்தார்கள்
அது அணுசக்தியில் இயங்கவில்லை , கோளின் ஈர்ப்பு விசையும் காரணம் இல்லை பின்னர் எதுதான் காரணம் என ஆய்ந்தவர்களுக்கு இருந்தது அதிர்ச்சி
ஆம், அது சூரியன் போன்ற கிரகங்களின் ஒளியில் இருந்து சக்தி எடுத்து பறக்கின்றது, மானிட குலத்தில் இந்த முன்னேற்றம் எல்லாம் இன்னும் 400 ஆண்டு காலம் ஆனாலும் வராது
ஆக மிகபெரும் அறிவார்ந்த ஒரு உயிரினத்தால் மிக கவனமாக விண் கல் போன்றே உருவாக்கபட்ட விண்வெளி கலம் வழிதவறியோ இல்லை நோட்டமிடும் எண்ணத்திலோ இப்பக்கம் வந்திருக்கலாம் என்கின்றது மேற்குலகம்
அவ்வளவு அறிவார்ந்த இனம் எதை தேடி வந்தது என்ற ஆய்வில் அவர்கள் இருக்கின்றார்கள், நம்மை தேடி வந்தவர்கள் என்றால் நிச்சயம் தகவல் கொடுத்திருக்கலாம் ஆனால் என்பதால் இரண்டே விஷயம் சாத்தியம்
ஒன்று அவர்களுக்கு நாம் தேவையே இல்லை, இன்னொன்று வழிதவறிய கலம் வந்திருக்கலாம், எப்படியோ அது பூமியினை கடந்து சென்றாயிற்று
ஆனால் சங்கம் இதுபற்றிய கனத்த ஆராய்ச்சியினை முடித்து ஆய்வினை அமெரிக்காவிற்கு அனுப்பியாயிற்று
என்ன முடிவு அது?
அந்த வேற்றுகிரகவாசிகள் அந்த ஸ்டீபன் ஹாக்கிங்க்ஸ் சொன்னபடி வேற்றுகிரக வாசிகள் நம் மானிட இனத்தை விட அழகானவர்களாக இருக்கலாம் அல்லவா? அப்படி ஒரு கலம் அன்றே வந்து அதிலிருந்த குழந்தை மும்பை பக்கம் விழுந்திருக்கலாம்
இன்று தலைவி குஷ்புவாக அது ஜொலித்திருக்கலாம், வாய்ப்பு இருக்கின்றது, தலைவி நிச்சயம் பூலோக அழகு அல்லவே அல்ல அவர் வேற்று கிரக அழகு
ஆக அந்த வழிதவறி விழுந்த குழந்தையினை தேடி அவரின் சொந்த இனம் வந்திருக்கலாம் அதை அமெரிக்க டெலஸ்கோப்கள் படமாக எடுத்திருக்கலாம்
இதை தவிர வேறு வாய்ப்பே இல்லை, சங்கத்தின் முடிவினை அமெரிக்க நிலையமும் அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும், அவர்களும் வேறு முடிவுக்கு வரவே முடியாது
(உலகின் வேகமான விஷயம் ஒளி என்றார் ஐன்ஸ்டீன், ஆனால் மகாபாரதம் அதை விட முக்கியமான விஷயத்தை சொல்கின்றது
தர்மன் ஒரு சோதனையில் உலகிலே வேகமான விஷயம் எண்ணங்கள் என்கின்றார்
அதுதான் மகா உண்மை, இந்த மர்ம கலம் அந்த வேகத்தில்தான் பயணிக்கின்றது, நினைத்த மாத்திரத்தில் அதனால் நினைத்த இடத்திற்கு செல்லமுடிகின்றது, மனதால் இயக்கும் கலன்கள் சாத்தியம் எனும் தியரிக்கு மேற்குலகம் சென்றுகொண்டிருக்கின்றது
இதற்கு அடிபப்டை பாரதத்தில் தர்மன் சொன்ன அந்த ஒருவார்த்தை என்பதில் மாற்றுகருத்தில்லை..)
[ November 9, 2018 ]
Image may contain: water
Image may contain: night

இலவச திட்டங்களை ஒழிப்போம்

இலவச திட்டங்களை ஒழிப்போம் என சர்க்காரின் ஜெயமோகன் வசனத்தை இந்த விஜயண்ணா பேசிவிட்டார் என ஏக சலசலப்பு, விஷயம் அரசாங்கத்தையே சீண்டிவிட சர்க்கார்க்கு சமாதி கட்ட அரசு கிளம்புவது போல் தெரிகின்றது

ஒரு கோஷ்டி கிளம்பி இருக்கின்றது , அதாவது வோட்டுக்காக இலவச பொருள் வழங்குகின்றார்கள் , இது லஞ்சம் , ஊழல், கையூட்டு என கிளம்பியாயிற்று

எல்லா இலவச திட்டங்களையும் பழிக்க முடியுமா?

காமராஜரின் இலவச மதிய உணவு திட்டம் என்பது இலவச திட்டம்தான், ஆனால் அது எவ்வளவு பெரிய நல்ல விளைவினை கொடுத்தது, எவ்வளவு பேர் கல்வி கற்றனர்? அதனால் பலன் பெற்றோர் வீட்டிலே உண்டு

உடையே இல்லா ஏழை குழந்தைக்கும் பகட்டில் திரியும் பணக்கார் குழந்தைக்கும் பொதுவாக சீருடை கொடுத்தால் அதை குறை சொல்ல முடியுமா?

நிச்சயம் ஏழைகளுக்கு அது பெரும் விஷயம்

கலைஞரின் இலவச பஸ்பாஸ் திட்டம் என்ன பழிக்க கூடியதா? அதனால் பலன் பெற்றோர் எவ்வளவு

கலைஞரின் இலவச மின்சார திட்டம் என்பது ஒன்றுதான் விவசாயிகளின் ஓரே ஆறுதல், விவசாயம் என்பது அந்த ஒற்றை கயிறில்தான் ஆடிகொண்டிருக்கின்றது

என்னால் மிக உறுதியாக சொல்லமுடியும் மனிதர் மேல் ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் அவரின் விவசாயிகளுக்கான‌ இலவச மின்சாரதிட்டம் மாபெரும் சாதனை

ஏழை குடிசைக்கும், வருமானமில்லா கோவிலுக்கும் இலவச மின்சாரத்தை கொடுத்த கலைஞரை மறக்க முடியுமா?

டிவி கொடுத்தது தவறு என ஒரு கோஷ்டி கிளம்புகின்றது, டிவி என்பது என்ன அது ஒரு மீடியா , மின்சார பத்திரிகை

மாணவன் நேசனிலே நாட்டு நடப்பினை எழுதி வீடுவீடாக கொடுத்தவர் கலைஞர், மக்கள் அறிவுபெற வேண்டும் என்ற வெறி அவரிடம் இருந்தது

அது குடியரசு, திராவிட நாடு, முரசொலி என தொடர்ந்தது அப்படி பத்திரிகையினால் மக்கள் விழிப்புற வேண்டும் என்ற நோக்கில் அதன் விஞ்ஞான வடிவமான டிவியினைத்தான் அவர் வழங்கினார்

அதில் தவறென்ன கண்டார்கள் அதில் என்ன சன்டிவியும், கலைஞ்ர் டிவியும் மட்டுமா தெரியும்? பிபிசி சி.என்.என் கூட தெரியும், டிவிக்கு கட்சி தெரியாது

இன்னுமொரு கூட்டம் கிரைண்டரை உடை, மிக்சியினை உடை என கிளம்பி இருக்கின்றது, இவனெல்லாம் என்றாவது அம்மிகல்லில் அரைத்தானா? இல்லை ஆட்டுகல்லில் மாவாட்டினானா என்றால் இல்லை

அவனை எல்லாம் 4 நாள் அம்மிகல்லில் அரைக்க சொன்னால்தான் அதன் கஷ்டம் புரியும்

வாழ வழியற்ற மக்களுக்கான திட்டம் அது, அன்றாடம் காய்ச்சிகள் ஏழை பாழைகளுக்கான திட்டம் அது, அதில் பெற்ற பொருளை அமெரிக்காவில் இருந்து வந்த கார்பரேட் கிரிமினல் தூக்கி போட்டு உடைத்தால் சனியனை சாத்த வேண்டாமா?

மாணவர்களுக்கான இலவச சைக்கிளும், இலவச லேப்டாப்பும் ஏழைகளாய், ஏழை மாணவர்களாய் இருந்தால் அன்றி புரியாது

நிச்சயம் சொல்லலாம், கலைஞர் ஏழையாக இருந்து ஏழையாகவே வளர்ந்தவர்

அவருக்கு மாணவர் கஷ்டம் புரிந்தது, விவசாயிகள் கஷ்டம் புரிந்தது, அடிமட்ட மக்களின் வறுமை புரிந்தது

ஜெயாவின் திட்டமெல்லாம் கலைஞர் திட்டத்தின் அடுத்த வெர்ஷனே அன்றி சொந்த திட்டம் அல்ல‌

முத்தாய்ப்பாக கலைஞர் காப்பீடு திட்டம் பற்றி சொல்லலாம், ஆனானபட்ட பணக்கார அமெரிக்காவிலே ஒபாமா கேர் என கொண்டுவரபட்ட மருத்துவ காப்பீடு உண்டு

அதேதான் இங்கும் வந்தது, அதை இலவசம் என தள்ளிவிட முடியுமா?

எத்தனை ஆயிரம் மக்கள் அதனால் பலன்பெற்றார்கள், மறுக்க முடியுமா?

ஆக இலவசத்தால் நாடு கெட்டது என்பவனை தூக்கி போட்டு மிதிக்க வேண்டும், அரசு அதற்கு களமிறங்கினால் நல்லது

எவ்வளவு நலிந்தொரும் வாழ வழியற்றோரும் அத்திட்டங்களால் பலன் பெற்றோர் என்பது சமூகத்திற்கு தெரியுமே அன்றி இந்த சினிமா சர்க்காருக்கு தெரியாது

இந்த சர்க்கார் படம் என்பது கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயம்

விஜயண்ணா என்பவர் திராவிட கட்சிகளை சரித்துவிட்டு முதல்வராக துடிக்கும் நபர், இவரை குரங்கு போல் ஆட்டி வைப்பவர் அவரின் தகப்பனார் சந்திரசேகர்

வசனம் எழுதி இருப்பவர், திராவிட கட்சிகளை வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் சீண்டும் இந்த ஜெயமோகன்

பெரியார் புரட்சியாளர் அல்ல,, கலைஞர் எழுத்தாளர் அல்ல, சிவாஜிக்கு நடிக்க தெரியாது, பாரதியார் மகாகவி அல்ல என்றெல்லாம் அரிய கருத்துக்களை சொன்னவர்

அவரும் இவரும் திட்டமிட்டு எழுதிய வசனங்களே இவை என்பதில் மாற்று கருத்தில்லை, இருவரும் சொன்னால் இயக்குநர் முருகதாஸ் என்ன செய்வார்? மிக்ஸி உடைக்க கிளம்பிவிட்டார்

இந்த விஜயண்ணாவிற்கு நாம் சொல்வது ஒன்றுதான், அண்ணா விஜயண்ணா உங்கள் அப்பன் சொல்வதை நம்பாதீர்கள், நம்பினால் ராமசந்திரனுக்கு இணையாக வளர்வேன் என சொல்லி வீணாய் போன முகமுத்து நிலைதான் உங்களுக்கும்

உங்களுக்கெல்லாம் கனவு நாயகன் யார்? சாட்சாத் ராமசந்திரன்

அவர் என்ன கேமரா முன் இருந்துவந்து தனிகட்சி கண்டாரா?

நிச்சயம் இல்லை, அவர் அண்ணாவோடு இருந்தார், திராவிட கட்சியின் முகமாக அறியபட்டார். ராமசந்திரன் கழக நடிகர் என்பதே அவருக்கு முதல் அடையாளம்

ஆம் கட்சியில் ஒருவராக வளர்ந்தவர் அவர், தனியாக அல்ல‌

பின்னாளில் அவர் கட்சி துவக்கும்பொழுது ஏற்கனவே இருந்த திமுகவினைத்தான் பிரித்து சென்றார் அதுதான் அவர் ஆட்சிக்கு வர எளிதாயிற்று

அவரால் கொண்டுவரபட்ட ஜெயா அதிமுகவின் அஸ்திவாரம் முதல் கைபற்றினர்

திமுக அதிமுக இரண்டும் வலுவாக இருக்க காரணம் அதன் அஸ்திவாரம், அது ஏழைகளாலும் பாட்டாளிகளாலும் மிக வலுவாக போடபட்டது

ஆனால் உங்கள் நிலை என்ன? எந்த கொள்கை? எந்த போராட்டம் அல்லது எந்த தலைவன் பின்னால் அணிவகுதீர்கள் ? எந்த கட்சியில் இருந்தீர்கள்

திடீரென குதித்தால் விஜயகாந்த் போல திடீரென காணாமல் போகவேண்டியதுதான்

ராமசந்திரன் திமுகவில் இருந்ததால்தான் வென்றார், சிவாஜி தன் புகழை மட்டுமே நம்பி தோற்றார்

நிச்சயம் நீர் அரசியலுக்கு வந்தால் சிவாஜி வழிதான் , இல்லை என்றால் விஜயகாந்த் முடிவுதான் சந்தேகமில்லை

அரசியலுக்கு வரும் ஆசை இருந்தால் முதலில் கட்சியில் சேர்ந்து பாடுபடுங்கள், ராமசந்திரன் அதைத்தான் செய்தார்

அவர் நாலுபேரிடம் சொல்ல அவருக்கு நல்ல தலைவன் பெயர் இருந்தது, உங்களுக்கு சொல்ல எந்த தலைவன் பெயர் உண்டு?

முருகதாஸ் பெயரை எல்லாம் சொன்னால் அடித்துவிடுவார்கள்

ராமசந்திரன் என்பவர் திமுகவில் இருந்ததாலதான் வென்றாரே தவிர தனிபட்ட முறையில் கட்சி தொடங்கி அல்ல‌

மற்ற எந்த நடிகனும் தனியாக கட்சி தொடங்கி இங்கு கிழிக்க முடியாது, சிவாஜியும், பாக்யராஜூம், விஜயகாந்தும் , டி.ராஜேந்திரனும் இன்னும் பலரும் சாட்சிகள்

கொள்கை இல்லா கட்சி அப்படித்தான்

அதனால் சொல்கின்றோம் அரசியல் ஆசை இருந்தால் நல்ல கட்சியாக பார்த்து சேர்ந்து தொண்டு செய்யுங்கள் பாடுபடுங்கள்

இல்லை ஒழுங்காக சினிமாவில் நடித்து உங்கள் காக்கா வலிப்பு ஆட்டத்தையும், வாயே திறக்காமல் வசனம் பேசும் வித்தையினையும், எல்லா காட்சிக்கும் லாரி ஹார்ன் அடித்தாலும் அசரா எருமைமாடு போல இருக்கும் முகபாவத்தையும் காட்டி கொண்டு சினிமாவிலே இருங்கள்

அங்கிள் சைமனுக்கும் சிலர் விசிலடிக்கும்பொழுது உங்களுக்கும் சிலர் கிளம்பமாட்டார்களா?

ஆனானபட்ட சிரஞ்சிவியே போதுமடா சாமி என ஓடிவிட்ட அரசியல் இது

அதனால் வீணாக இங்கு வந்து சிக்கி கொள்ளாதீர்கள், அதற்கு முதலில் செய்ய வேண்டியது உங்கள் அப்பாவினை நல்ல முதியோர் இல்லத்தில் சேர்துவிடுங்கள்

இல்லாவிட்டால் உங்களை யாரும் காப்பாற்ற முடியாது

இன்னொன்று பா.ரஞ்சித் ஒரு தலித் வெறியன் என்றால் ஜெயமோகன் பார்ப்பன வெறியன், இவர்களை போன்றவர்களை பக்கத்திலே விடாதீர்கள்

விட்டால் என்னாகும் என்பதற்கு ரஜினியிடமே கேட்டுகொள்ளுங்கள் அவருக்கு எல்லா வகையிலும் அனுபவம் அதிகம்

ஆக இதை எல்லாம் செய்து, உங்கள் தந்தையினை முதியோர் இல்லத்திற்கு அனுப்பினால் நீங்கள் உருப்பட வாய்ப்பு உண்டு

இல்லாவிட்டால் விழும் ஒவ்வொரு அடியும் தாங்க முடியாது, கண்ணுக்குள் நிலவு படத்தில் உங்கள் பாத்திரம் தெரியுமல்லவா? அப்படி ஆகிவிடும் ஜாக்கிரதை

(இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் விஜயண்ணா, உங்கள் “உன்னால் முடியும்” இயக்கத்தால் உங்கள் பிறந்த நாளில் இலவச தையல் மிஷின், இலவச சைக்கிள், இலவச அயன்பாக்ஸ், இலவச ஜட்டிகள் எல்லாம் வழங்கபடுகின்றதே

உங்கள் தந்தையார் கூட அந்த மேடையில் பெருமை பொங்க அமர்ந்திருப்பாரே

அந்த இலவசத்தை என்றாவது நீர் கண்டித்ததுண்டாண்ணா? மனசாட்சியினை தொட்டு சொல்லுங்கள் பார்க்கலாம்..)

[ November 7, 2018 ]

Image may contain: 1 person, smiling, sitting
============================================================================

பழைய செய்திகளை புரட்டினால் சில விஷயங்கள் புரியும்

விஜயண்ணா தன் படம் வெற்றி பெற்றால் இயக்குநருக்கு கார் வழங்குவார், அப்படி முருகதாஸ் மற்றும் அட்லி எல்லோரும் பெற்றார்கள்

அதன் பெயர் ஊழல் இல்லை, லஞ்சம் இல்லை அன்பளிப்பு என்பார்கள் தகப்பனும் மகனும்

ஏம்பா முருகதாஸ் அந்த காரை கொழுத்திவிட்டு இலவச மிக்ஸியினை உடைக்க வாருமய்யா, இல்லாவிட்டால் பாட்டாளி மக்கள் கார் உடைக்க வந்தால் என்னய்யா செய்வீர்?

இந்த விஜயண்ணாவின் “உன்னால் முடியும்” இயக்கம் அவர் பிறந்த நாள் அன்று ஊரெல்லாம் நலிந்தோர் நலதிட்ட விழா என நடத்தி இலவச வேட்டி சேலை, தையல்மிஷின் எல்லாம் வழங்குவார்கள்

அணில் குஞ்சுகளா, இனி அந்த இலவச பொருட்களை “விஜயண்ணா பொறந்துடார் டோய்..” என வழங்க வாருங்கள், அன்று இருக்கின்றது

அடிக்கிற அடியில் விஜயண்ணாவிடமே நியாயம் கேட்க செல்வீர்கள்

[ November 8, 2018 ]

============================================================================

“ஆத்தா, உங்க பேரு கோமளவல்லியா ஆத்தா? எங்களுக்கே சொல்லாம மறைச்சிட்டியே ஆத்தா, இப்போதா தெரியுது ஆத்தா..

இந்த அளவுக்கு கூடவா எங்கள மதிக்காம வச்சிருந்த ஆத்தா,

அந்த விஜய் பய சொல்லித்தான் தெரியணுமா ஆத்தா ? ரெம்ப அவமானமா இருக்கு ஆத்தா?”

[ November 8, 2018 ]

============================================================================

சாமியார் என்பது சரியாகத்தான் இருக்கின்றது

60 ஆயிரம் மனைவியரோடு வாழ்வாங்கு வாழ்ந்தவன் பெயரின் மசாஜ் சென்டர் வைக்க வேண்டுமா? மருத்துவ கல்லூரி வைக்க வேண்டுமா?

இந்த சுஸ்சுருதர் போன்ற மருத்துவ முனிவர் பெயரை எல்லாம் வைக்க மாட்டீர்களா சாமி?

இந்த சுக்கிராச்சாரியார் பெயரையாவது வைத்தால் என்ன?

ராமன் பெயரில் என்ன விமான நிலையம்? விமானத்தில் வந்து சீதையினை கடத்தியது ராவணன் அல்லவா? அவன் பெயரை அல்லவா வைக்க வேண்டும், இந்த ஜடாயு பெயருமா இல்லை?

சாமி, விமான நிலையத்திற்கு ராமன் பெயரை வைத்தால், விமானத்தால் மனைவியினை பறிகொடுத்த ராமன் பெயருக்கு இழுக்கு வராதா?

என்னமோ யோசித்து செய்யுங்கள் சாமி..

[ November 8, 2018 ]

Image may contain: 1 person, smiling, text

 

சர் சி.வி ராமன்

தமிழகத்தில் பிறந்த எத்தனையோ விஞ்ஞானிகள் உண்டு, அவர்கள் எல்லாம் வெள்ளையனால் கொண்டாடபட்டார்கள். சீனிவாச ராமானுஜம் போலவே , சொல்லபோனால் அவரை விட அதிகமாகவே கொண்டாடபட்ட தமிழர் சி.வி ராமன்
திருச்சி திருவானைக்காவலில் பிரிட்டிஷ் இந்தியாவில் அவர் பிறந்தார். காவேரிகரை கொடுத்த அபூர்வ மனிதரில் அவரும் ஒருவர்
சந்திர சேகர வெங்கட் ராமன்
இயற்பியலில் அவர் மேதை. சென்னை விசாகபட்டினம் என படித்தவர்தான் ஆனால் விஞ்ஞானம் அவருக்கு இயல்பாய் வந்தது
பெரும் ஆராய்ச்சி முடிவுகளை அவர் வெளியிட்டபொழுது உலகம் மிக ஆரவாரமாய் அவரை கொண்டாடியது, இதோ நோபல் பரிசு என கொடுத்து கவுரவித்தது
ஆம், வானமும் கடலும் ஏன் நீல நிறத்தில் தோன்றுகின்றது என சொன்ன முதல் விஞ்ஞானி அவர்தான்
அதாவது ஓளி ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவர் சொன்ன முடிவு, சூரிய ஓளியின் 7 நிறங்களில் நீல நிறம் அதிகமாக சிதறடிக்கபடுகின்றது அதனாலே வானமும் கடலும் நீலமாக தெரிகின்றன‌
இந்த முடிவு பவுதீக உலகை புரட்டிபோட்டது. அவர் சொன்ன ஆய்வு முடிவு உண்மை எனவும் நிரூபிக்கபட்டது, 1930ல் அவருக்கு நோபல் பரிசும் கொடுக்கபட்டது.
அக்காலம் ஐன்ஸ்டீன் எல்லாம் ஒளிபற்றி ஆராய்ச்சி செய்த காலம். அந்த நேரத்தில் சிவி ராமனின் முடிவு ஐன்ஸ்டீனையே வியக்க வைத்தது
சாதாரண சாதனை அல்ல அது.
இந்திய விஞ்ஞானி இயற்பியலில் வாங்கிய முதல் நோபல் அது.
அதன் பின் உலகின் எல்லா விருதும் தேடி வந்தது, இங்கிலாந்து வழங்கிய சர் பட்டம் (இம்சை அரசனில் வடிவேலு கேட்பார் அல்லவா?) இத்தாலி , அமெரிக்கா என எல்லா நாடுகளும் கொண்டாடின‌
தன் முதுமை காலத்தை ராமன் மைசூரில் கழித்தார், காரணம் மைசூர் சமஸ்தானம் அவரை சிறப்பு விருந்தினராக அமர்த்தி கவுரவபடுத்தியது.
பின்னாளில் மாநில பிரிவினை வரும்பொழுது அவர் மைசூர் வாசியானார். அதனால் அவர் பிறப்பால் கன்னடன் என சொல்லிவிட முடியாது, பிறந்ததும் கற்றதும் தமிழகத்தில்தான்
இன்று சர் சிவி ராமனின் பிறந்த நாள், உலகெல்லாம் கொண்டாடபட்ட ராமன் ஒரு தமிழர். தமிழர் அறிவின் உச்சம்
ஆனால் இத்ததமிழகத்தில் பேச்சு கலைஞர் அண்ணா, சினிமாகாரன் ராமசந்திரன் இன்னும் சில இம்சைகள் போல அடையாளபடுத்தபட்டாரா? என்றால் இல்லை
ஏன்? ஏனென்றால் அவர் பிராமணர்
தமிழ்நாட்டில் பிறந்த அறிவு சூரியனான அவர் பிராமணர் என்பதால் மறைக்கபட்டார்
என்னதான் திராவிடம், பகுத்தறிவு இம்சைகள் பேசினாலும், அதில் சில சாதித்தோம் என சொல்லிகொண்டாலும் ஒரு விஷயம் உண்மை, உறுத்தும் உண்மை
அறிவாளிகளையும், பெரும் சிந்தனையாளர்களையும், கற்றவர்களையும் கொண்டாட மறுக்கபட்டோம் அல்லது மறக்கடிக்கபட்டோம்
அவர்கள் பிராமணராயிருந்தால் இன்னும் கூடுதல்
வெறும் குப்பைகளையும், பிதற்றல்காரர்களையும் பெரும் பிம்பமாக உருவாக்க தொடங்கினோம், விளைவு பெரும் விபரீதம் எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன‌
அதனை விடுங்கள், இனி திருத்த முடியாது. இங்கு எல்லாமே அப்படித்தான்
ராமன் எப்படி இந்த நீலநிற விஷயத்தை கண்டுபிடித்து நோபல் வாங்கினார்?
விஷயம் ஒன்றுமல்ல , சூரியன் ஏழு குதிரைகள் இழுக்கும் தேரில் வருவதாகவும், கண்ணனும் ராமனும் நீல நிறம் கொண்டவர்களாகவும் சொல்வது இந்துமதம்
விஞ்ஞானம் வந்து சூரிய ஓளியில் 7 வண்ணங்கள் உண்டு என சொல்வதற்கு பல்லாயிரகணக்கான ஆண்டுக்கு முன்பே இந்துக்கள் எப்படி 7 குதிரைகள் என சொன்னார்கள் என்ற வியப்பு அவருக்கு வந்தது.
7 குதிரைகள் என்பது சூரிய ஒளியில் இருக்கும் 7 நிறங்கள் என்பதை விஞ்ஞானம் படித்த ராமன் உணர்ந்தார், அது என்ன கண்ணன் நீலநிறம் என்பது அவரை சிந்திக்க வைத்தது.
அதிலே ஆராய்ச்சியினை செலுத்திய அவர் விஞ்ஞான உண்மையினை கண்டறிந்தார்
ஆம் நிறங்களில் விஸ்வரூபம் எடுப்பது நீல நிறம் என்ற தெளிவு அவருக்கு கிடைத்தது
வானமும், கடலும் நீலமாக இருப்பதன் விஞ்ஞான தத்துவம் அவருக்கு புரிந்தது
இந்த நீல நிற விஸ்வரூபத்தைத்தான் இந்துக்கள் கண்ணனில் கண்டார்களா? என்பது விளங்கிற்று
இந்த நாட்டின் ஆதார மத நம்பிக்கையிலிருந்து விஞஞான விளக்கத்தை கொடுத்தார் ராமன், உலகம் அவரை கொண்டாடியது
இப்படி இன்னும் எத்தனை விஞ்ஞான தத்துவம் இந்துமதத்தில் ஒளிந்திருக்கின்றதோ தெரியாது, அதற்கு இன்னொரு ராமன் வந்தால்தான் தெரியும்
பகுத்தறிவு அது இது என சொல்லி தமிழகத்தில் அந்த தமிழனின் புகழ் மறைக்கபட்டாலும் உலகில் அவருக்கான இடம் அப்படியே இருக்கின்றது
இன்றும் அது ராமன் விளைவு என்றே கொண்டாடபடுகின்றது
வெள்ளையன் அப்படிபட்ட தமிழர்களை சாதி பாராது ஊக்குவித்தான் ராமன் உலகினை புரட்டிபோடும் முடிவினை சொன்னார்
தமிழக திராவிட கட்சிகள் சினிமாவினை வளர்த்தன, பின் அவனின் நிற ஆராய்ச்சி எப்படி இருக்கும்?
“ஊதா கலரு ரிப்பன்” என்ற அளவில்தான் இருக்கும்
இந்த மாபெரும் விஞ்ஞானி ராமனுக்கு, தமிழகத்தில் பிறந்த அந்த மேதைக்கு நினைவிடம் இருக்குமா? அவர் பெயரில் பல்கலைகழகம் உண்டா? கல்லூரி உண்டா? இல்லை விருதுதான் உண்டா? என்றால் இல்லை
அண்ணா, ராமசந்திரன், அவர் அன்னை சத்யபாமா ( அம்மணி மேடம் கியூரிக்கு கதிரியக்கம் சொல்லிகொடுததவர்) என யார் யாருக்கோ அடையாளம் உள்ள தமிழகத்தில் இம்மண்ணின் அறிவு சூரியன், நோபல் வென்றவனுக்கு ஒரு நினைவு அடையாளமும் இல்லை
பின் எப்படி உருப்படும் தமிழகம்? நல்ல விஞ்ஞானிகள், சிந்தனையாளர் எப்படி வருவார்கள்?
பகுத்தறிவு, பிராமண வெறுப்பு, இந்து மத புறக்கணிப்பு என சொல்லி பல நல்ல விஷயங்களையும் தமிழகம் இழந்துவிட்டது. அதனை ஒப்புகொள்ளத்தான் வேண்டும்.
7 குதிரைகள் பூட்டிய சூரிய தேரும், கண்ணனின் நீல நிறமும் வெறும் கட்டுகதை அல்ல, அவை எல்லாம் பெரும் விஞ்ஞான தத்துவம் என உலகிற்கு நிரூபித்தவர் பிறந்த நாள் இது
இந்துமதத்தில் இன்னும் ஏராளமான விஞ்ஞான தத்துவம் உறங்கிகொண்டிருக்கின்றது, மூட நம்பிக்கை எனும் பெயரில் அவைகளை புறக்கணிக்க கூடாது என உலகிற்கு செவிட்டில் அறைந்து சொன்ன இந்தியன் பிறந்த நாள் இது.
இந்துக்களின் ஒவ்வொரு அடையாளத்திலும் ஒரு அறிவியல் இருக்கும் , ஆழ நோக்கினால் பிரபஞ்ச உண்மை வெளிபடும் என முதன் முதலில் நிரூபித்தவர் பிறந்த நாள் இது.
இன்று அந்த சர் சி.வி ராமனின் பிறந்த நாள். எங்கள் தமிழகத்திலும் ஒரு நோபல் விஞ்ஞானி இருந்திருக்கின்றான், அவன் உலக விஞ்ஞானிகளுக்கு, யூத , ஜெர்மன் விஞ்ஞானிகளுக்கு சரிக்கு சமமாக அமர்ந்து விருது வாங்கியிருக்கின்றான் என்பதை நினைத்து பெருமை அடைவோம்.
(இப்பொழுதும் வந்து, பிராமணர் திராவிடர் அல்ல‌. இந்துமதம் அவர்களால் தமிழர் மீது திணிக்கபட்டது. அவர்கள் தமிழர் அல்ல‌
தமிழருக்கு மதமில்லை, ஆக இவர் தமிழராக மாட்டார், திராவிடர் ஆகமாட்டார் என சிலர் சொல்வான் பாருங்கள். அவனை எல்லாம் திருத்தவே முடியாது)
[ November 8, 2018 ]

 

Image may contain: 1 person, closeup

திப்பு சுல்தான்

நவம்பர் 10 திப்பு சுல்தானின் பிறந்தநாள், அன்று சிறப்பாக முன்பு தேசம் கொண்டாடும், இப்பொழுது இந்த எடியூரப்பா போல பலர் கொண்டாட கூடாது என கிளம்பிவிட்டார்கள், உடனே பக்தாஸும் பின் செல்கின்றது. சுயமாக யோசிக்காத கோஷ்டி அது
நவம்பர் 10 நமக்கு மிக முக்கியமான பணி இருப்பதால், அந்த பக்தாஸுக்கு இப்பொழுதே சில விஷயங்களை சொல்லிவிடலாம்
இந்தியாவில் முதன் முதலில் பிரிட்டிசார் முடிசூட்டிகொண்ட இடம் கல்கத்தா, அங்கிருந்தேதான் படை நகர்த்தலை தொடங்கினார்கள்.
எந்த இடத்திலும் அவர்கள் பெரிதாக திணறியதாக சரித்திரம் இல்லை, அசால்ட்டாக அடித்துவிட்டு, முன்னேறிகொண்டிருந்தார்கள்,
வடக்கே பெரும் எதிர்ப்புகள் அவர்களுக்கு அன்று இல்லை. அடிக்கவேண்டும், மிரட்டவேண்டும் அல்லது லஞ்சம் கொடுக்கவேண்டும் அவ்வளவுதான், கம்பெனி கொடி பறக்கும்.
கிளைவ் காலம் வரை அப்படித்தான் இருந்தது, கிளைவிற்கு பின் அவர்களுக்கு பெரும் எதிர்ப்பு , மாபெரும் எதிர்ப்பு இந்தியாவில் வந்தது
ஆம், இந்தியாவில் அவர்கள் சந்தித்த ஒரு பெரும் சவால் மாவீரன் ஹைதர் அலியும், அவரின் மகன் மைசூர் சிங்கம் திப்புசுல்தானும், உண்மையில் ஹைதர் அலி சாதாரண பணியாளர்தான், ஆனால் சீர்கெட்டு கிடந்த மைசூர் சாம்ராஜ்ய நிர்வாகத்தை, ஒரு நாட்டுபற்றாளனாய் நின்று காப்பாற்ற அரியணை ஏறி அதனை செய்தும் காட்டினார்.
ஆங்கிலேயருக்கு பெரும் சிம்மசொப்பணமாய் இருந்தவர் ஹைதர் என்றால், அவர்களுக்கு புலிசொப்பனமாக இருந்தவன் மாவீரன் திப்பு சுல்தான். அவனது ஆட்சி அப்படி, நிர்வாகம் அப்படி,எல்லாவற்றிற்கும் மேல் அவரது மதசகிப்புதன்மை அப்படி.
திப்புவின் மீது சில சர்ச்சைகளை சொல்வார்கள், அதாவது தஞ்சாவூர் பக்கம் மடைகளை உடைத்தான், கொடூரன் என ஏராளம் உண்டு, அந்த கதை வித்தியாசமானது
அதாவது அன்றைய தஞ்சாவூர் அரசர்களிடம் ஒரு பழக்கம் இருந்தது, ஆடிமாதம் காவேரி பொங்கிவந்து டெல்டா பயிர்களை அழித்தால் அதற்கு மைசூர் சமஸ்தானம் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும், இந்த கொடுமையினை வெள்ளையர் தூண்டிவிட்டனர்
பெரும் நஷ்ட ஈடுகேட்டு மைசூர் திப்புவினை படாத பாடுபடுத்தியதால் திப்புவின் படைகள் சில இடங்களில் கோபம் காட்டியதே தவிர, மதவெறியில் அல்ல‌
அப்படி காவேரி நீருக்கு நஷ்டம் கேட்ட கதை தொடர்ந்துதான் விஸ்வேரய்யா கிருஷ்ண்டராஜ சாகர் அணையினையே கட்டினார், அன்று நஷ்ட ஈடு கேட்டுவிட்டு காவேரி காய்ந்துவிட்டது என நாமே அழுகின்றோம்.
இன்னும் உண்டு, அக்கம் பக்கம் இந்து சமஸ்தானங்களோடு வம்பிழுத்தான் என்பார்கள், அது வம்பு அல்ல வெள்ளையனுக்கு அவர்கள் சந்தோஷமாக வரிகட்டி திப்புவினையும் கட்ட சொன்ன எரிச்சல்.
விஷயம் காவேரி அல்ல , பக்கத்து சமஸ்தானம் அல்ல‌ திப்பு சுல்தான்
ஹைதருக்கு பின்னால் மைசூர் அவ்வளவுதான் என இளம் திப்புவினை எடைபோட்டு வந்தனர் வெள்ளையர்.
முதல் மைசூர்போரில் அடிபடும்பொழுதே ஆங்கிலேயருக்கு தெரிந்தது, “இவன் வேறமாதிரி” என்று,
இரண்டாம் மைசூர் போரில் வெள்ளையனுக்கு திப்பு உயிர்பிச்சை அளித்தபொழுதே தெரிந்தது இவன் வெல்லமுடியாதவன் என்று.
அப்படித்தான் இருந்தார் திப்பு, பிரென்ஞ் மாவீரன் நெப்போலியன் தன் காலத்தில் ஒரு சகவீரனை மதித்து ராணுவ உதவி அளிக்க தயாராக இருந்தார் என்றால் அது திப்பு மட்டுமே,
காரணம் வீரனின் பெருமை வீரனுக்குத்தான் தெரியும்.
ஆனால் ஐரோப்பாவில் பலபோர்களில் அவர் பிசியாக இருந்ததால் உதவிக்கு வரமுடியவில்லை.
கொஞ்சமும் சோர்ந்துபோகாத திப்பு சுல்தான் மூன்றாம் மைசூர் போரில், 500 அடிவரைபாயும் ஏவுகனைகளை பயன்படுத்தி ஆங்கிலேயரை அலறவிட்டார், உண்மையில் அந்தபோரோடு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவினை விட்டே ஓடும் நிலைக்கு தள்ளபட்டது, திப்புவின் வெற்றி நிலை அப்படி.
படைகளால் வெல்லமுடியாத அம்மாவீரனை வேறுமாதிரி அடக்க எண்ணினர் வெள்ளையர், அதாவது அவன் இஸ்லாமியனாக இருந்தாலும் எல்லா மதங்களையும் நேசித்தார்,மதித்தார். புகழ்பெற்ற சிரிரங்கபட்டினம் ஆலயத்திற்கு அவர் அள்ளிகொடுத்த நகைகளும், சிலைகளுமே அதற்கு சாட்சி.
கிட்டதட்ட 200 இந்து ஆலயங்களுக்கு அவர் நன்கொடை அளித்ததும் வரலாறு. ஒரு மிக சமத்துவமான ஆட்சியினை செய்துகொண்டிருந்ததுதான் அவர் பலம், அவரது படையில் சரிக்குசரி இந்துக்களும் இருந்தனர்.
இங்குதான் வெள்ளையர் சிந்தித்து இந்து முஸ்லீம் வேற்றுமையினை வளர்த்தனர், பல வழிகளில் அவர் இந்துவிரோதி என சித்தரிக்கபட்டு, இறுதி போரில் தான் மிக நம்பிய தனது திவானால் வஞ்சகமாக வீழ்த்தபட்டார்.
சுருக்கமாக சொல்வதென்றால் திப்பு வீழ்ந்தபின் வெள்ளையன் வாய்விட்டு சொன்னான்” இனிமேல்தான் இந்தியா நமக்கானது”
இன்றுவரை அவர் கழுத்தில் பாய்ந்த குண்டினை செலுத்தியது வெள்ளையனா? என்ற சந்தேகம் உண்டு.
ஆனால் இந்த வெற்றியில் வெள்ளையன் ஒரு பாடம் படித்திருந்தான். இந்தியாவினை துப்பாக்கி முனையில் ஆள்வது கடினம், ஆனால் இந்து முஸ்லீம் பிரிவினையில் ஆள்வது மகா சுலபம்.
அந்த சிரிரங்கபட்டிண களத்தில் வெள்ளையன் படித்தபாடம்தான் பின்னாளில் 150 வருடம் அவன் இங்கு ஆளவும், இந்த தேசம் இன்று 3 ஆக உடையவும், இன்று முகநூல் வரை அந்த பிரிவினை வளர்ந்து நிற்கவும் காரணம்.
நிச்சயமாக அவன் மாவீரன், இந்த மண்ணிற்கு கிடைத்தவரம். இன்றும் அவன் பயன்படுத்திய ஏவுகனையின் வடிவம் அமெரிக்காவில் உண்டு.
ஏவுகனை உலகின் பிதாமகன், ஹிட்லரின் வளர்ப்பான‌ வான் ப்ரவுண் நெற்றியில் அடித்தார்போல் சொன்னார் ” நான் ஒன்றும் கண்டுபிடிப்பாளன் அல்ல, திப்புசுல்தான் எனும் இந்தியனின் கண்டுபிடிபினை மேம்படுத்தினேன்”.
அதனாலதான் அமெரிக்கன் அப்துல்கலாமினை அப்படி சொன்னான், இவர் “இரண்டாம் திப்புசுல்தான்”.
இன்று மனசாட்சியே இல்லாமல் அவரை திட்டி தீர்க்கின்றார்கள், அந்தோ பரிதாபம். இவர்களுக்கும் இறுதியுத்ததில் வெள்ளையருக்கு கதவினை திறந்துவிட்ட அந்த தேசதுரோகிக்கும் என்ன வித்தியாசம் இருக்கமுடியும்?
மாவீரன் மருதநாயகம், மாவீரன் திப்புசுல்தான்,சீக்கியர்களின் ரஞ்சித் சிங் இவர்கள் எல்லாம் வெள்ளையரை எதிர்த்த அடையாளம் அல்லவா? இவர்கள் இந்துக்கள் இல்லை என்றால் இந்தியர்கள் இல்லை என்பது நிச்சயம் கண்டிக்கதக்கது.
தேசவிரோதிகளை எல்லாம் மதத்தின் பெயரால் கண்டிக்க தயங்குபவர்களுக்கு, எல்லா மதத்தினரையும், எல்லா ஆலயங்களையும் மிக சமமாக கருதி, குறிப்பாக இந்து ஆலய அடையாளங்களை பாதுகாத்த அந்த மாவீரனை பழிக்க ஒரு தகுதியும் இருப்பதாக உண்மையான தேச அபிமானிகள் நினைக்கவே மாட்டார்கள்.
பெரும் வீரனாயினும், ஒரு பக்கபலம் இல்லாமல் போரிட்டான் திப்பு. மராட்டியர் உதவிக்கு வரவில்லை, மலையாள மன்னர்களும் உதவிக்கு வரவில்லை, அப்படி ஒற்றுமையாக வந்திருந்தால் அன்றே வெள்ளையன் கதை முடிந்திருக்கும், இந்திய வரலாற்றில் பெரும் தவறு இது.
தூரத்தில் நெப்போலியன் உதவ தயாராக இருந்தும், பக்கத்து நாட்டுகாரர்கள் முகம் திருப்பி வெள்ளையரோடு கைகோர்த்தார்கள் அல்லவா? இங்குதான் இந்தியாவின் தலைவிதி திருத்தி எழுதபட்டது.
அந்த தவறினை செய்துதான் இந்நாடு இப்படி பின் தங்கிவிட்டது, இன்னும் அவன் இஸ்லாம் என்றே சொல்லி அதே தவறினை செய்வீர்களாயின் இந்நாடு இன்னும் 100 வருடம் நிச்சயம்
பின்னோக்கி சென்று, ஆப்கன் நிலையினைத்தான் அடையும்.
இவர்கள் சொல்வதனால் எல்லாம் அம்மாவீரனின் புகழ் மங்காது. இந்தியாவின் புலி என வெள்ளையன் எழுதிவைத்த சரித்திரமும். அவன் அடக்க சடங்குகளில் வெள்ளையர் காட்டிய உயர் மரியாதையும் காலத்தின் கல்வெட்டு பக்கங்கள்.
அவன் உருவாக்கிய அந்த ஏவுகனை அவனின் அறிவுதேடலுக்கு பெரும் சாட்சி.
அவ்வளவு ஏன் அவர் இறந்த பின் அந்த வாளினை வீசிபார்த்தோர் ஆச்சரியத்தில் உறைந்தனர், அது பல மூலிகை இன்னும் பல உலோகளால் ஆன எடை மிக குறைந்த மகா உறுதியான வாள், அதிலே அவனின் ஆற்றல் தெரிந்தது.
திப்புசுல்தான் மங்கா புகழ்பெற்ற மாபெரும் உச்ச வரலாற்று நட்சத்திரம்,
விஜய்மல்லையா மீது ஆயிரம் விமர்சனம் இருக்கலாம், ஆனால் வெள்ளையன் பாதுகாத்த திப்புவின் வாளினை அவர்தான் ஏலத்தில் எடுத்து இந்தியா கொண்டுவந்தார்..
பாகுபலி போல மிக பிரமாண்டமாக எடுக்க கூடிய இந்திய கதைகளில் முதலிடத்தில் இருப்பது ஹதர் அலி, திப்பு சுல்தான் கதைதான், நிச்சயமாக அது மிக மிக விறுவிறுப்பான வரலாறு, சில படங்கள் வந்தன ஆனால் பெரும் தாக்கமில்லை.
மருதநாயகம் படம் வந்தால் கூட ஹைதர் அலி நிச்சயம் வருவார், காரணம் ஹைதர் அலியினை ஒருமுறை வெள்ளையனுக்காக மருதநாயகம் தோற்கடித்திருந்தான், அவனும் வீரனல்லவா?
ஆனால் பின்பு மருதநாயகம் வெள்ளையனை எதிர்க்கும்பொழுது ஓடி வந்து உதவிகரம் நீட்டியவர் ஐதர் அலி, அவரின் பெருந்தன்மை அது, கொண்டாடபடவேண்டிய விஷயம் அது
பாகுபலி போல, ஜோதா அக்பர் போல எடுத்தால் மிக நன்றாக இருக்கும், ஒருவகையில் அது ஹைதர் அலி திப்புவிற்கான நன்றிகடன் கூட‌
ஆனால் இத்தேசத்தில் எடுக்கமுடியும் என நினைக்கின்றீர்கள்? ஒருகாலமும் முடியாது, அதுவும் இன்றிருக்கும் நிலையில் நிச்சயம் முடியாது
நவம்பர் 10, திப்புவின் நினைவுநாள், ஒரு இந்திய மன்னனுக்கு இந்தியராக வீரவணக்கம் செலுத்தலாம்.
இங்கு சிலர் வாள்வாள் என கத்துவதால் அவனின் வாளுக்கான பெருமை கூட மங்காது
வரலாற்றில் நின்றுவிட்ட மைசூர் புலி திப்பு .
[ November 8, 2018 ]
Image may contain: one or more people

ரஷ்ய புரட்சி

உலக வரலாற்றில் மானுடம் கண்ட திருப்பங்களில் மகத்தானது ரஷ்ய புரட்சி. எத்தனை புரட்சிகள் உலகில் நடந்திருந்தாலும் ரஷ்ய புரட்சியின் மகத்துவமே உலகிற்கு பெரும் மாற்றங்களை கொடுத்தது
அதற்கும் முன் போலந்து வலயம், பிரெஞ்ச் புரட்சி, அமெரிக்க சுதந்திரம் என பல நிகழ்ந்தாலும் ரஷ்ய புரட்சி என்பது வரலாற்றை மாற்றி போட்டது
அந்த புரட்சி நடந்த நூற்றாண்டு விழா நாளை தொடங்குகின்றது, அந்த செங்கொடி எழுந்து நூறு ஆண்டுகள் ஆகின்றது
ரஷ்ய புரட்சியினை பாரதி வரவேற்று பாடிய காலமும், பெரியார் அதனை வரவேற்று பின் தன் போக்கினையே மாற்றிய அந்த காலமும் நினைவுக்கு வருகின்றது.
1917ல் ரஷ்யாவில் எழுந்த செங்கொடி, உலகெல்லாம் போலவே இந்தியாவிலும் பறந்திருக்கலாம், வாய்ப்பு இருந்தது . ஆனால் இங்கு அணியபட்டிருக்க வேண்டிய செஞ்சட்டை கருப்பு சட்டையானது
பின் அது திராவிட கட்சிகளாகி ஆட்சிக்கும் வந்தது. சர்வ நிச்சயமாக இங்கு பொதுவுடமை கொடியே கேரளா போல பறந்திருக்க வேண்டும் ஆனால் அப்படி அமையவில்லை, பெரியார் ஏனோ கம்யூனிஸ்ட் என தன்னை அறிவிக்கவில்லை
ஆனால் திராவிட கொள்கையினை அவர் கம்யூனிச சாயல் இல்லாமல் சொல்லவில்லை. பெரியார் பேசிய எழுதிய எல்லாமும் அந்த செங்கொடி தேசத்து சாயலே
அவர்கள் போப்பையும் கிறிஸ்துவத்தையும் எப்படி எல்லாம் விமர்சித்தார்களோ பெரியார் அதில் இந்துமதத்தையும் புராணத்தையும், பிராமணியத்தையும் பொருத்தினார், அவ்வளவுதான் புரட்சியாளர் ஆனார்
ரஷ்யாவின் கிறிஸ்தவ குருமார்கள் செய்ய அட்டகாசத்தை இங்கு பிரமணர்கள் செய்தார்கள், அக்காலம் அப்படி இருந்தது அதனை பெரியார் எடுத்துகொண்டார்
ஆனால் நிலசுவாந்தார்களை குறி வைத்த அந்த ரஷ்ய பொதுவுடமையினை எடுக்கவில்லை. கவனித்தால் புரியும் பெரியார் பிராமணியத்தை எதிர்த்தாரேயன்றி பண்ணைமுறையினை, பண்ணையார்களை எதிர்த்தாரா என்றால் இல்லவே இல்லை
காரணம் அவரும் பெரும் பண்ணையாராய் இருந்ததால், ரஷ்ய புரட்சியில் எது தனக்கு தேவையோ அதை மட்டும் எடுத்து கடவுள் இல்லை ஆனால் முதலாளித்துவம் உண்டு என்றார்
இது பிரிட்டிஷ்காரனுக்கும் சிக்கல் இல்லாத விஷயமாக இருந்ததால் அவனும் கண்டுகொள்ளவில்லை
பொதுவுடமை கோட்பாடு பரவாமல் தடுக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கையாளாக பெரியார் செயல்படுகின்றார், பொதுவுடமை கொள்கை பரவினால் பிராமணியம் தானாக அழியும்பொழுது பெரியார் ஏன் செஞ்சட்டை அணியாமல் கருப்பு சட்டை அணிகின்றார் என்ற கேள்விகளுக்கு பெரியாரிடம் இருந்து மவுனமே பதில் ஆனது
கடைசிவரை அவர் பதில் சொல்லவில்லை
பண்ணையாருக்கு கீழ் இருந்த பாட்டாளிகள் அவருக்கு சூத்திரர்களாக தெரிந்தார்களே தவிர வாழ வழியிலா அடிமைகளாக, உரிமையில்லா கூட்டமாக தெரியவே இல்லை
பெரியார் இப்படி திசைதிருப்பி தமிழகத்தை மாற்றியிருக்காவிட்டால் இன்று நிச்சயம் கேரளா போல் இங்கொரு கம்யூனிஸ்ட் முதல்வராகியிருப்பார்
தமிழிசை, ராசா இனபிற கும்பல் எல்லாம் பேசிகொண்டிருக்க முடியாது, ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு கடும் சவால்விடும் கேரளா போல தமிழகமும் சவால் விட்டு கொண்டிருந்திருக்கும்
ஆனால் பெரியார் செய்த குழப்பமான முடிவால் என்னவெல்லாமோ நடந்துவிட்டது. 
லெனினும் மாவோவும் உருவாகியிருக்க வேண்டிய தமிழகத்தில் குறைந்தபட்சம் ஜோதிபாசுவும், நம்பூதிரிபாடும் உருவாகியிருக்கவேண்டிய தமிழகத்தில் “புரட்சி தலைவன்” ராமசந்திரனும் “புரட்சி தலைவி” ஜெயலலிதாவும் உருவாகிவிட்டார்கள்
பெரியாரை விடுவோம், செங்கொடி பறந்த காலத்திற்கு செல்லலாம்
எப்படிபட்ட சாதனைகளை எல்லாம் அந்த செங்கொடி செய்தது
ஜார் மன்னன் எனும் கொடுங்கோலனை வீழ்த்தி, ரஷ்புடீன் எனும் சாமியாரை விரட்டி மக்களே மக்களை ஆள்வார்கள் என உயர்ந்தது அந்த கொடி
வர்க்கபேதமற்ற சமூகத்தை உருவாக்க தத்துவம் சொன்ன மார்க்ஸின் கொள்கைகளுக்கு வடிவம் கொடுத்த சமூகத்தின் அடையாளமாக, மத சாமியார்களின் கட்டுபாட்டினின்று தன்னை விடுவித்த சமூகத்தின் அடையாளமாக அது உயரபறந்தது
அதுவரை தொழிலாளர் என்போர் விலங்குகளில் ஒருவர் என எண்ணபட்ட உலகிற்க்கு , தொழிலாளி என்பவன் வாழபிறந்தவன் என சொல்லி அவனுக்கு உயர்ந்த வாழ்வு அளித்தது அந்த கொடி
அந்த கொடியின் கீழான ஆட்சியில்தான் தொழிலாளர்கள் நிம்மதியாக சுவாசித்தனர், நிம்மதியாக வாழ்ந்தனர். முதலாளிகளுக்கும் நில சுவாந்தார்களுக்கும் மட்டுமே கிடைத்த வசதிகள் அத்தொழிலாளிகளுக்கும் கிடைத்தன‌.
விவசாயியும், சுரங்க தொழிலாளியும் கப்பல் ஏறி உல்லாச பயணமாக விடுமுறை கொண்டாடியது எல்லாம் அந்த ஆட்சியில்தான்
கூட்டுறவு பண்ணைகள் எல்லாம் உருவானது அங்குதான்
அந்த தொழிலாளிகள் வாழ்வாங்கு வாழ்வதை கண்ட மற்ற நாட்டு மக்களும் சிந்திக்க, பல அரசுகள் அஞ்சின, பல அரசுகள் சலுகைகளை அள்ளி கொடுத்தன‌
இன்று தொழிலாளர் உலகம் காணும் ஓய்வூதியம், பணிக்கொடை, வேலை பாதுகாப்பு, இன்னும் பிற படிகள் உட்பட பாதுகாப்புகள் எல்லாம் அதன் மூலம் உலகம் பெற்றுகொண்டவையே
இந்த உலகிற்கு எவ்வளவு பெரும் பாதுகாவலாய் நின்றது அந்த செங்கொடி.
ஹிட்லர் எனும் அரக்கனை அந்த செஞ்சேனைதான் வீழ்த்திற்று, ஹிட்லரின் பாசிச ஆட்சியிலிருந்து உலகை காத்தது நிச்சயம் அந்த பொதுவுடமை படை
அந்த வெற்றிக்கு பின்புதான் இந்தியா உட்பட்ட நாடுகளின் விடுதலை சாத்தியமானது, ஒருவேளை பிரிட்டன் அல்லது ஹிட்லர் வென்றிருந்தால் இந்திய விடுதலை சாத்தியமே இல்லை
சோவியத் யூனியனின் எழுச்சியே உலக சரித்திரத்தை புரட்டி போட்டது. அதன் பாதுகாவலிலே மக்களுக்கான அரசுகள் எழும்பின‌
சீனா, வியட்நாம், அந்நாளைய வடகொரியா எல்லாம் அப்படித்தான் ஆட்சிமாற்றம் கண்டது
சோவியத் இருக்கும் தைரியத்தில்தான் சேகுவேராவும், காஸ்ட்ரோவும் உருவானார்கள். அமெரிக்கா நொடியில் நசுக்க திட்டமிட்ட கியூபாவினை காத்து நின்றது சோவியத் யூனியன்
எகிப்து சூயஸ் கால்வாயினை கைபற்றி பிரிட்டனை அடித்து விரட்டி தன் சொத்தை தனதாக்கி கொள்ள உதவியதும் அதுவே
அந்த சோவியத் இருந்த தைரியத்தில்தான் அரபு நாட்டில் பாலஸ்தீன் எழுச்சியும் அந்த போராட்டமும் வலுபெற்றது, பாலஸ்தீன் இருப்பிற்கு சோவியத் மகா முக்கியம்
வங்கப்போரில் இந்தியாவினை அமெரிக்காவின் மிரட்டலில் இருந்து இந்தியாவினை காத்து நின்றதும் அந்த செங்கொடியேதான்.
இந்திராவின் இந்தியா எழுச்சிபேறவும் அது இன்று ஓரளவு பாதுகாப்பான தேசமாக நிற்கவும் அந்த செங்கொடி தேசம் கொடுத்த உதவிகள் கொஞ்சமல்ல‌
அணுசக்தி முதல் ஏவுகனைகள வரை நமக்கு அந்த‌ சோவியத் செய்த ரகசிய உதவிகள் கொஞ்சமல்ல‌
பெண் விடுதலையினை உலகிற்கு சொன்னதும், பால்காரி தெரஸ்கோவாவினை விண்வெளிக்கு அனுப்பியதும், மகளிர் நலனில் உலகிற்கு முன்மாதிரியாய் இருந்தது அந்த செங்கொடி நாடுதான்
மகளிருக்கும் குழந்தைகளுக்கும் அது கொடுத்த சலுகையினை இனி எந்த அரசும் கொடுத்துவிட முடியாது.
கல்வியும் மருத்துவமும் தன் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, எந்த மானிடருக்கும் எந்த நேரமும் வழங்க அது தயாராக இருந்தது. இன்று உலகின் மருத்துவ முன்னேற்றம் அடைந்த நாடாக கியூபா இருக்க, அந்த செங்கொடியின் சாதனையே காரணம்
விவசாயிகள் எப்படி காக்கபட வேண்டும்? முதலாளித்துவம் எப்படி கட்டுபடுத்தபட வேண்டும் என உலகிற்கு சொன்ன தேசம் அது
அத்தேசம் இருக்கும் வரை உலகின் தேசிய இனங்கள் அப்படியே இருந்தன. சோவியத் வலுவான காலத்தில் உலகில் நடந்த ஒரே தவறு திபெத் ஆக்கிரமிப்பு , அதற்கு ஆயிரம் காரணங்கள், மற்றபடி எல்லா இனங்களும் ஒரு வித பாதுகாப்போடே இருந்தன.
முதலாளித்துவ சக்திக்கு நிரகான சக்தியாக சோவியத் உலகை காத்தது.
எகிப்தின் கர்ணல் நாசர் போல பல ஜாம்பவான்கள் தணித்து நின்றனர்.
மதவெறி கும்பல் உலகில் எங்கும் தலை தூக்கிவிடாமலும், முதலாளித்துவ கைகூலிகளின் படை உருவாகிவிடாமலும் காத்து நின்றது செங்கொடி
ஆப்கனில் சோவியத் படைகள் இருந்த காலம் வரை காஷ்மீரில் தீவிரவாதிகள் அட்டகாசம் என்ற செய்தி வந்தது உண்டா? நிச்சயம் இல்லை
ஆப்கனிலிருந்து செங்கொடி நீங்கிய பின்பே காஷ்மீருக்கு ஆப்கானிய தீவிரவாதிகள் அணிவகுத்து வந்து சோதனை கொடுத்தனர். அது இன்றும் நீடிகின்றது
ஆப்கனில் தீவிரவாதிகளுக்கு உதவிய அமெரிக்கா பின் மதவாததின் உண்மை தெரிந்தபின் அவமானத்தில் தலைகுனிந்த அந்த செங்கொடியின் மகிமையினை மனதிற்குள் உணர்ந்து நிற்கின்றது, ஏன் உலகமே உணர்ந்துகொண்டது.
காலத்தின் கோலத்தில் செங்கொடி மாஸ்கோவில் கீழிறங்கிய பின்பே இவ்வுலகில் நடக்க கூடா விஷமெல்லாம் நடந்தன,
உலகமே மாறியது சதாம் போன்றவர்கள் கொல்லபட்டனர். உலக சமநிலை ஓய்ந்தது, இன்று எங்கு நோக்கினாலும் பெரும் குழப்பம்
வல்லான் வகுத்ததே நீதியானது. ஈழம் போன்ற பகுதிகள் எரிய தொடங்கின‌
ஒரு விஷயம் உறுதியாக சொல்லமுடியும், அந்த செங்கொடி மட்டும் மிக வலுவாக பறந்துகொண்டே இருந்திருக்குமானால் முள்ளிவாய்க்கால், சிரியா, ஆப்கன் போன்ற கொலை கூடங்கள் எல்லாம் உதித்திருக்காது
இன்றைய உலகின் நிலையற்ற தன்மை வந்திருக்காது
12 மணிநேர வேலை, வேலை செய்தால் தான் கூலி மற்றபடி ஒரு சலுகையுமிலை என்றிருந்த தொழிலாளார் உலகினை நேரடியாகவும் மறைமுகமாகவும் மாற்றி காட்டியது அந்த செங்கொடி தேசம்
ஆனால் இன்றோ மறுபடி உலகம் அந்த கொத்தடிமை முறை நோக்கி செல்கின்றது. அது ஐடி முதல் எல்லா தொழில்களிலும் தெரிகின்றது
ஓவர்டைம் அது இது என சொல்லி எல்லா தொழிலாளர்களும் பிழியபடுகின்றார்கள், சனி ஞாயிறு இரவு பகல் என்பதெல்லாம் இல்லை.
மறுபடி அந்த தொழிலாளர் அடிமை முறை நோக்கி இந்த உலகம் சென்றுகொண்டிருக்கின்றது.
கம்யூனிசம் ஒன்றும் மார்க்ஸ் முதலில் சொன்னது அல்ல, பொதுவுடமை கோட்பாடு பைபிளிலே இருக்கின்றது. ஆதி கிறிஸ்தவர்கள் அப்படி பொதுவுடமை வாழ்வுதான் வாழ்ந்திருக்கின்றார்கள், என்று கிறிஸ்தவம் ரோமாபுரியினை கைபற்றியதோ அதன் பின்புதான் சிக்கல் தொடங்கியிருக்கின்றது
அந்த பொதுவுடமை வாழ்வினை கடவுள் இல்லை என்ற புள்ளியில் மறுபடியும் வாழ கொடி உயர்ந்தது நவம்பர் 7, 1917
அந்த தேசம் நன்றாகத்தான் இருந்திருக்கின்றது, சோவியத் மக்கள் எல்லாரும் எல்லாமும் பெற்று மிக்க நலமாக வாழ்வாங்கு வாழ்ந்திருக்கின்றார்கள்
ஆனால் மானிட சுபாவம் வித்தியாசமானது. ஆளுக்கொரு சிந்தனை ஆளுக்கொரு விருப்பம் என உள்ள மனிதர்கள் பொதுவுடமை கொள்கையினை கொஞ்சம் மறக்க தொடங்கினார்கள். இன்னொன்று முன்னோர் கண்ட சிரமும் அவர்கள் பட்ட பாடுகளும் அடுத்தடுத்த தலைமுறைக்கு தெரியவில்லை
விளைவு சோவியத் சிதறியது
ஆனாலும் பழைய சோவியத் முடிமக்களுக்கு அந்த செங்கொடி பறந்த காலம் மகா சொர்க்கமாக, மிகுந்த நல்லாட்சி நடந்த காலமாகவே தெரிகின்றது
இந்த உலகத்தையே புரட்டிபோட்ட மாபெரும் நிகழ்வின் நூற்றாண்டு நாளை கொண்டாட படவேண்டும்
ஆனால் எங்கும் அதற்கான வேலைகள் நடந்ததாக தெரியவில்லை. அவசர உலகம் அந்த நன்னாளை தவறவிடுகின்றதோ எனும் அச்சம் ஏற்படுகின்றது
அந்த நாளால்தான் கியூபா முதல் வடகொரியா வரை உலக அரங்கில் நிற்க முடிகின்றது, சீனா எல்லாம் ஆசிய சக்தியாக நிற்க முடிகின்றது
உலக அரசியலை விடுங்கள், பிரணாய் விஜயனும் இங்கு அமர்ந்திருக்கும் பழனிச்சாமியும் முதல்வராக அமர அந்த செங்கொடி கொடுத்த நம்பிக்கையே காரணம்.
நகைப்பாக இருக்கலாம், ஆனால் அதிமுகவின் மூலம் திமுக திமுகவின் மூலம் திக, திகவின் மூலம் பெரியார் என சென்றால் நிச்சயம் அந்த செங்கொடிதான் காரணம்
செங்கொடி உயர்ந்திருக்காவிட்டால் இவை எல்லாம் நடந்திருக்காது
அவ்வகையில் உலகின் ஒவ்வொருவர் தலைவிதியினையும் மாற்றிகாட்டிய நாள்
யார் நினைக்கின்றார்களோ இல்லையோ, மானிடத்தை நேசிக்கும், சமத்துவத்தை நேசிக்கும் யாரும் அந்நாளை கொண்டாடலாம்
மானிட குலத்தின் மகத்தான நாள் அந்த நவம்பர் 7.
அதுவும் நூற்றாண்டு விழா என்பதால் அந்த நினைவுகளில் மூழ்கி , அந்த செங்கொடியால் பெற்றுகொண்ட சகல நன்மைகளுக்காகவும் நன்றி தெரிவிக்கலாம்
[ November 8, 2018 ]
Image may contain: 1 person, text