96 படத்தின் கதை

இந்த 96 படத்தின் கதை என்னுடையது என ஒரு இயக்குநர் கிளம்பிவிட்டார்
உண்மையில் அந்த படம் பள்ளிகூடம், ஆட்டோகிராப் படத்தின் சாயல்,
அதற்கும் முன்னாடி செல்ல வேண்டுமென்றால் ஒருதலை ராகத்திற்கு செல்லலாம்
ஒருதலை ராகத்தின் கடைசியில் நாயகன் அந்த கல்லூரியினை மீண்டும் பார்க்க ஆசைபடுவதுதான் 96 படத்தின் மையகரு அல்லது வெள்ளைகரு
இப்பொழுது இந்த 96 போன்ற கதைகளுக்கு வழிகாட்டியது சந்தேகமே இல்லாமல் பேஸ்புக் குரூப் அதற்கும் வேல் வாட்சப் குரூப்
வாட்சப் குரூப் வந்ததிலிருந்து எல்கேஜி முதல் கடைசியாக வேலைபார்த்த கம்பெனி பெயர் வரை குரூப்புகள் வந்தன, இந்த குரூப்புகள் டார்ச்சர் தாங்காமல் வெடித்த போன்களே உண்டு என்கின்றார்கள்
(சாதி,மத , ஊர், தெரு, குடும்பம் என குரூப்கள் ஏராளம் என்பது தனி கதை)
இதில் சிலர் ஆண்நண்பர்களுக்கு ஒரு குரூப், பெண் நண்பர்களுக்கு தனி குரூப் என்றெல்லாம் சாகசமாக மெயின்டைன் செய்திருக்கின்றார்கள்
குரூப் என்றால் சும்மா இருப்பார்களா? உடனே ஆங்காங்கு சந்திக்க கிளம்பிவிட்டார்கள்
நமக்கும் அப்படி ஒரு குரூப் வந்தது, 12ம் வகுப்பு கோஷ்டி. நாமும் கெட் டுகதெர் வைத்திருகின்றோம் ஓடிவா என்றார்கள்
அடேய் அந்த கணக்கு வாத்தியார், புரியாத பிசிக்ஸ் வாத்தியார், கற்பனையில் பாடம் நடத்திய கெமிஸ்ட்ரி வாத்தியார், இன்னும் சில டீச்சர்கள் படுத்தியபாட்டில் அந்த முகங்களை இனி பார்க்கவே கூடாது என ஓடிவந்தவனிடமா கேட்கின்றாய் முடியாது என விரட்டியாயிற்று
ஆனால் அவர்களோ ஏற்பாடு செய்தார்கள், சந்தித்து படமெல்லாம் எடுத்தார்கள், அனுப்பினார்கள். யாவருக்கும் மகிழ்ச்சி. அதில் சிலர் ஆசிரியர்கள் ரிட்டையர்டு ஆகி இருந்தார்கள். அவர்கள் அன்றே ஆகியிருந்தால் நான் உருப்பட்டிருப்பேன் என படம் பார்த்தபொழுது சொல்லிகொண்டேன்
அதில் ஒரு நண்பனை போனில் பிடித்து இந்த சந்திப்பு குறித்து கேட்டபொழுது அவன் ரசித்து ரசித்து சொன்னான், “லேய் அவா வந்திருந்தால, ஆளே மாறிபோயிட்டால, என் மேல அவளுக்கும் லவ் இருந்தாம்ல அவ அண்ணன்காரன் நான் லவ் லெட்டர் குடுக்கும் போது அடிச்சாம்லா அதை எல்லாம் பாத்திருக்கால‌
அப்படியா? பேசினாளா?
ஆமால அந்த புளியமரத்து பின்னால நின்னு பேசினோம்ல யாருக்கும் தெரியாமா?
அப்புறம்
இன்னொருத்தி உண்டுல்லா அவளும் வந்திந்தால, அவளும் பேசினால‌
என்ன சொன்னா?
நான் லவ் சொல்லிருந்தா பண்ணியிருப்பாளாம், ஆனா நான் இவா பினால அலைஞ்சதுல பேசலியாம், கதவுக்கு பின்னால பாக்கும் போது சொன்னல‌
டேய் நீ என்னதான் செஞ்ச?
அதாம்ல, படிக்கும் போது எவள எங்கெல்லாம் இருந்து சைட் அடிச்சேனோ, அங்கெல்லாம் அவா அவாகிட்ட பேசிட்டு வந்துட்டேம்ல‌
எங்கயாவது ரெஸ்டாராண்ட் கூட்டிட்டு போனா என்னல?
அதெல்லாம் முடியாதுல, வெளிய அவளுக புருஷன் எல்லாம் நின்னானுகல, நம்மள பத்தி தெரிஞ்சிருக்கும் போல‌
சரி பாத்தாச்சி அப்புறம்?
அவ்வளவுதாம்ல இனி போரடிச்சிட்டு குரூப்ப கலச்சிட்டு போயிரலாம், வேற வேலய பாக்கலாம்
வேற வேலைன்னா காலேஜ் கெட் டுகதரா?
ஆமால அதான்
சரி வேலைய பாரு.
எங்கல பார்க்க ஸ்கூல் படிக்கும் போது அவளோட பென்சில திருடி வச்சிருந்தேன், இப்போ ஹேர்பின் கொடுத்துட்டு போயிருக்கா, பார்த்துட்டே இருக்கேம்ல ஏதோ செய்துல‌
இது அவாகிட்ட, இன்னொருத்திகிட்ட என்ன வாங்கின?
அதாம்ல நான் அவாகிட்ட வளையல்தான் கேட்டேன் அவா அது தங்கம்னு தரமாட்டேன்னு சொல்லிட்டு அவளும் ஹேர்பின் கொடுத்துட்டு போயிட்டா”
ஆக இப்படி இந்த வாட்சப் குரூப்பால் எத்தனை கெட் டுகெதர் நடந்ததோ, எவ்வளவு பேர் சென்னை பக்கம் புலம்புகின்றானோ தெரியாது, நிச்சயம் ஏராளம்பேர் இருக்கும்
அவர்களின் புலம்பலை மொத்தமாக கேட்டு இந்த இயக்குநர் கதை எடுத்திருக்கலாம், குறிப்பாக நம் நண்பரின் புலம்பல் அதிகமாக பாதித்து இருக்கலாம்
96 போன்ற கதைகளுக்கு உரிமை கொண்டாடும் தகுதி வாட்சப் ஓணர் ஒருவருக்கே உண்டு
ஆம் அவர்தான் அனைத்து வகை, புலம்பல், காமெடி, காதல், உருக்கம் என எல்லா வரிகளையும் பார்த்து கொண்டே இருக்கின்றார்
நண்பரிடம் கடைசியாக கேட்டது இதுதான்
“சரி இனி எப்போ இந்த கெட் டுகதெர்?
போல மயிராண்டி, இந்த எச்.எம் வேற இதான் சாக்குண்ணு பள்ளிக்கு நன்கொடை குடுங்க, அன்பளிப்பு கொடுங்கண்ணு கறந்துட்டார், அவளுக வேற சும்மா வந்துட்டு போயிட்டாளுக ஒரு பைசா தரல.
அவளுகள பார்க்க சகிக்கவுமில்ல பயமா இருக்குல, இனி இதெல்லாம் வேண்டவே வேண்டாம், நினைச்சே பாக்க கூடாதுல”
[ November 2, 2018 ]
Image may contain: night and text

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s