கான்ஸ்டான்டைன் பெஸ்கி – வீரமாமுனிவர்

அவர் பெயர் கான்ஸ்டான்டைன் பெஸ்கி, இயேசு சபை குரு அவர் இத்தாலியினை சேர்ந்தவர், போர்த்துகீசியர் இந்தியாவிற்கு வந்த கிறிஸ்தவ துறவி அதாவது நாயக்க மன்னர்கள் காலத்திலே இப்பக்கம் வந்தவர்

அவருக்கும் தமிழ் ஏனோ பிடித்து போயிற்று, இன்னொன்று தமிழ்படிக்காமல் இங்கு கிறிஸ்துவத்தை போதிக்க முடியாது எனும் கருத்தும் உண்டு, அவரின் தமிழ்நலத்தில் சுயநலமும் கலந்திருந்தது

இங்குள்ள நிலமையினை கண்டார், சங்கராச்சாரி போன்ற காவி உடை அணிந்த குருக்களுக்கு இருந்த மரியாதையும் ஐரோப்பியர் அசைவம் உண்பவர் என தமிழர் ஒதுக்கியதையும் கண்டார்

சட்டென்று காவி உடை உடுத்தினார், புனூல் அணிந்தார் புலால் மறுத்தார், நானும் ஐரோப்பிய சாமி என சொல்லிகொண்டார்

தமிழனாக மாறி கிட்டதட்ட பிராமண கிறிஸ்தவ குருமார் சாயலில் இங்கு போதிக்க தொடங்கினார்

திருவையாறு, தஞ்சை திருச்சி என அலைந்தாலும் காமநாயக்கன்பட்டியும் தென்காசியும் அவருக்கு பிடித்தமான பகுதிகள்

ஆனால் தமிழை கசடற கற்றார் என்பது உண்மை, தெலுங்கிலும் புலமை பெற்றார். தன் பெயரை கூட தைரிய நாத சுவாமி என மாற்றினார், பின்பு தைரியம் என்பது வடமொழி என அறிந்து வீரமாமுனிவர் என சுத்த தமிழ்பெயரை கொண்டார்

இந்த கால்டுவெல்ல்லுக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் தேவாரத்தை எல்லாம் லத்தினில் மொழிபெயர்த்தார்

அவர் காலத்தில் ஆங்கிலம் பிரசித்திபெற்ற மொழி அல்ல, லத்தினே பிரதானம், ரோமர்கள் ஆட்சியில் உச்சம் பெற்ற லத்தீன், பின்பு போப் காலத்தில் உலகம் ஆண்டது

இன்று ஆங்கில மொழிக்குள்ள வரவேற்பு அன்று லத்தீனுக்கு இருந்தது, இதனால் முனிவர் செய்த ஒரு காரியம் வரவேற்கததக்கது

அதாவது லத்தீன் தமிழ் அகராதியினை உருவாக்கினார், ஐரோப்பிய மொழிக்கும் தமிழுக்கும் முதல் பாலமிட்டது அவரே, நோக்கம் கிறிஸ்துவத்தை பரப்புவது என்றாலும் நன்மையும் இருந்தது

லத்தீன் நூல்கள் தமிழுக்கும், தமிழ் நூல்கள் லத்தீனுக்கும் மாறின, அப்படி மாறிவந்த நூல்களில் ஒன்றுதான் பரமார்த்த குருக்கள் கதை

தமிழில் பல நூல்களை எழுதினார் முனிவர் அதில் தேம்பவானி முக்கியமனாது

தமிழில் கிறிஸ்தவ இலக்கியமாக முதலில் வந்தது அதுதான், முதல் கிறிஸ்தவ இலக்கியம் அதுதான், கொஞ்சமும் தமிழ் இலக்கணம் பிசிறாமல் வகுக்கபட்டது அது

தெற்கே தமிழ், கிறிஸ்தவம் என உழைத்திருக்கின்றார் இந்த முனிவர், தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டு கிறிஸ்துவத்திற்கு ஆற்றிய தொண்டை விட அதிகம்

இவரை சில இடங்களில் பழிப்பார்கள் காரணம் வேறொன்றுமில்லை

இவரை போலவே ராபர் தே நோபிலி என்பவர் காவி கட்டி அலைந்தார், அவர் கொஞ்சம் அடாவடி பார்ட்டி

இந்த தோமையார் இந்தியா வந்தார், இந்தியா தோமாவழி கிறிஸ்தவ நாடு போன்ற குபீர் குண்டுகளை அவர்தான் தொடங்கி வைத்தார், ஒரு மாதிரியான ஆசாமி அந்த சுவாமி

இப்படி இரு ஐரோப்பியர்கள் காவிகட்டி அலைந்ததால் அவர் செய்த அட்டகாசம் எல்லாம் வீரமாமுனிவர் என்பவர் மேல் பழியாய் விழுந்தது

உண்மை அது அல்ல‌

இங்கு வீரமாமுனிவரின் கடைசி காலங்களில் சர்ச்சைகளும் இருந்திருக்கின்றன, குழப்பமான வரலாறுகள் அவை

அதன் பின் அவர் கேரளா சென்றிருக்கின்றார் அங்கே மரித்திருக்கின்றார் அங்கு கல்லறை எல்லாம் இருந்திருக்கின்றது

திப்பு சுல்தானுக்கும் கேரள கிறிஸ்தவர்களுக்குமான மோதலில் வீரமாமுனிவரின் கல்லறை சிதைக்கபட்டது என்கின்றார்கள்

அவருக்கு இன்று நினைவிடம் இல்லை

ஆனால் முதன் முதலில் தமிழின் பெரும் இலகியங்களை 16ம் நூற்றாண்டிலே லத்தீனுக்கு மொழி பெயத்தவரும் லத்தீன் தமிழ் அகராதி உருவாக்கி தமிழை ஐரொப்பாவிற்கு எடுத்டு செல்ல முயன்றது அவரே

அவருக்கு இன்று பிறந்த நாள் , அந்த லத்தீன் தமிழனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

அன்று கத்தோலிக்க சபைகளில் லத்தீனில்தான் திருப்பலி நடத்துவார்கள், அதற்கு சரியான தமிழ் பதிப்பினை கொடுத்தவர் இந்த வீரமாமுனிவர்

அந்த தமிழும் அதன் வார்த்தைகளும் அவ்வளவு அழகானவை அர்த்தமுள்ளவை

அவ்வகையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் பெரும் நன்றிக்குரியவர் அவர்.

(இது இந்த பாஜக கும்0பலுக்கு கொண்டாட்டமான படம், ஆம் பாருங்கள் எங்கிருந்தோ வந்த இத்தாலியன் இங்கு காவி உடுத்தி, சைவம் உண்டு இந்திய பண்பாடை ஏற்றிருக்கின்றான்

உங்களுக்க்கு ஏன் வெள்ளை ஆடை, கறுப்பு சிகப்பு கயிறு

இந்தியாவில் கிறிஸ்தவராக இருந்தால் இந்த வீரமாமுனிவர் போல் காவிகட்டி கொண்டும் இருக்கலாம் என கிளம்பிவிடுவார்கள்..

இன்னும் சிலர் என்ன சொல்வார்கள் தெரியுமா?

இந்தியாவின் முதல் கிறிஸ்தவ சங்க்பரிவார், பாஜககாரர் வீரமாமுனிவர் வாழ்க வாழ்க)

[ November 8, 2018 ]

Image may contain: 1 person, standing and beard

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s