சிதறல்கள்

பாஜகவுக்கு எதிராக மதச் சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

பாஜகவிற்கு பெரும் முட்டு கொடுத்தவர் சந்திரபாபு நாயுடு, முன்னொரு காலத்தில் பாஜகவின் நெருங்கிய தோழர்

இப்பொழுது மாநில நலனுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் இப்படி சொல்லிகொண்டிருக்கின்றார், சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் பட்சத்தில் மோடி வாழ்க என கிளம்பிடுவார்

[ November 9, 2018 ]

============================================================================

நமக்கு ஒரு சகோதரன் இல்லை என்ற குறை முன்பெல்லாம் உண்டு, அடிக்கடி அந்நினைவு வரும்

அந்த குறையினை தீர்த்து வைத்தவர் Senthil Kumar Chennai என்பவர், அவரோடு இருவரானோம்

சுவாரஸ்யமானவர் அவர், கள்ளம் கபடம் என்பதெல்லாம் இல்லை, யாரிடம் எவ்வளவு சுருட்டலாம் என பாக்கெட்டில் கை போட்டு அலையும் உலகில் அவர் வித்தியாசமானவர்

முகநூலில் மட்டுமே அவரை தெரியும், எப்பொழுதாவது போனில் பேசுவாரன்றி வேறு பழக்கமில்லை.

ஆனால் சென்னைக்கு வந்திருந்த பொழுது ஒரு நொடி என்னை விட்டு அகலவில்லை, பழனிச்சாமி அரசினை மோடி காப்பது போல் அருகிருந்து எம்மை கவனித்து கொண்டார்.

மகா உற்சாகமாக என்னை அழைத்து கொண்டு சென்னை எங்கும் சுற்றினார், அப்படி ஒரு மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது

முகம்பாராமல் அகத்தால் உருவாகும் நட்பும் சாத்தியம் என்பதை அவராலே விளங்கிகொண்டேன்

கலைஞரை சந்திக்க அவர் செய்த முயற்சிகளும், அந்த ஜனவரி 18 மாலை பொழுதில் கலைஞரை இருவரும் சந்தித்த பெரும் நிகழ்வும், அதன் பின் மெரீனாவில் நள்ளிரவு வரை அவரின் நினைவுகளில் மூழ்கி கிடந்ததெல்லாம் மறக்க கூடியது அல்ல‌

அந்த அற்புதமான , உடன்பிறவா சகோதரருக்கு இன்று பிறந்த நாள் , உறுதியாக என்னால் சொல்ல முடியும் வாழ்வில் நான்பெற்ற மிக நல்ல வரம் அவர்

அவருக்கு இறைவன் எல்லா வளமும், நலமும் கொடுத்து பல்லாண்டு காலம் காக்க பிரார்த்தனைகள்

அன்பர் வாழட்டும், செழிக்கட்டும், இந்த அரைவாழ்வு அடுத்த பிறந்த நாளுக்குள் நிறைவாழ்வு ஆகட்டும்

அன்னார் இன்னும் திருமணம் செய்யாமல் அரைவாழ்வு வாழ்கின்றார், நிச்சயம் நயன், கீர்த்தி சுரேஷுக்காக காத்திருப்பது போல் எல்லாம் தெரியவில்லை ஆனாலும் தாமதிக்கின்றார்

விரைவில் அவர் தன் மணவாழ்வினை தொடங்க வாழ்த்துக்கள்

நான் வணங்கும் புனித அந்தோணியார் அவரை மென்மேலும் ஆசீர்வதிக்க‌ட்டும்

என்ன இருந்தாலும் அன்னார் இறுதியாக சென்னையில் சொன்னதை மறக்கவே முடியாது

“தலைவி குஷ்புவினை பார்க்க முடியலைன்னு வருத்தபடாதீங்கண்ணே, கலைஞரையே இப்பதான் பார்த்தோம்

அந்தம்மாவும் ஒருநாள் வீல்சேர்ல இருக்கும்ணே, அப்போ கண்டிப்பா 2 பேரும் கண்டிப்பா பார்த்துவிடலாம் சரியா”

[ November 9, 2018 ]

============================================================================

தனக்கு புராண கதைகளில் நம்பிக்கை இல்லை என அடிக்கடி சொல்வார் கலைஞர்

ஆனால் எதிரிகளை இழுத்து போட்டு அடிக்க விபீஷ்ணன், சுக்ரீவன், பிரகலாதன் போன்ற பெயர்களை அடிக்கடி பயன்படுத்துவார்

இந்த தயாநிதிமாறன் கோஷ்டிக்கும் அவருக்கும் உரசல்கள் ஆரம்பித்த நேரம், முரசொலியில் இப்படி புலம்பினார்

“மாறா நீ பெற்ற பிள்ளையா அந்த பிரகலாதன்?”

அந்த வரி இப்பொழுது உண்மையாகின்றது, பிரகலாதன்கள் சுய உருவினை காட்டிகொண்டிருக்கின்றார்கள்

கலைஞர் ஒரு தீர்க்கதரிசி..

[ November 9, 2018 ]

============================================================================

அரசுக்கு எதிரான கருத்து என சோ ராமசாமியின் நாடகம் தடை செய்யபடும் சூழல், காமராஜரை சந்தித்து நியாயம் கேட்கின்றார் சோ

“உன்ன பத்தி தெரியும்ணேன், உன்னால குழப்பம் வர கூடாதுண்ணே, அதான் அப்படி பேச்சு வந்திருக்கும்ணே” என்றார் காமராஜர்

“ஏன் நான் கார் கூட ஓட்டுவேன், என்னால விபத்து வரும்னு இப்பவே என் டிரைவிங் லைசென்ஸ ரத்து செய்யுமா அரசு” என கேட்டார் சோ,

விவாதம் முற்றிற்று

இறுதியாக காமராஜர் நாடகம் பார்க்க வருகின்றார் , வழக்கமான பாணியில் பின்னி எடுத்தார் சோ ராமசாமி பாதி நாடகத்தில் கோபத்தில் எழும்பி சென்றுவிட்டார் காமராஜர்

ஆனால் நாடகம் தொடர்ந்து நடக்க அவர் தடை செய்யவில்லை

மறுபடியும் அவரை சந்தித்து கேட்டார் சோ, பாதிதானே பார்த்தீங்க, மீதி நாடகம் பார்க்க நாளைக்கே ஒரு சீட் ரிசர்வ் பண்ணட்டுமா?

சத்தம் போட்டு சிரித்தார் காமராஜர்

இன்னொரு நாடகம் எம்.ஆர் ராதாவுடையது, நாடகம் அரங்கேறினால் விடமாட்டோம் என அந்த கோஷ்டி தகறாறு செய்தது காரணம் ராதாவின் நாடகம் ராமரை சீண்டுவது போல் இருந்தது, கொட்டகையினை கொளுத்த ஒரு கும்பல் வந்தது

“டேய் நாடகம் நடக்கும், எவன் தடுப்பான்னு பார்க்குறேன்” என கம்பு தன் அடியாட்கள் சகிதம் சென்றார் ராதா, இரும்பு கேட் பூட்டபட்டிருந்தது, ஆனால் அடிக்க வந்த கோஷ்டி திரும்பி சென்றது

மறுநாள் சொன்னார் ராதா, இரும்பு கதவுல கரென்ட் கனெக்சன் கொடுத்திருந்தேன், தொட்டிருந்தா பூரா பயலும் காலி

அந்த அதிரடியில் அரண்டு நின்றது தமிழகம்

கீமாயணம் எனும் நாடகம் அதில் ராமரை கிண்டல் செய்ததாக வழக்கு, ராதா கைது செய்யபட்டார்

ஆனால் எப்படி நீதிமன்றம் சென்றார், ராமர் வேடம் அணிந்து ஒரு கையில் கள்ளும் இன்னொரு கையில் மாமிசமுமாக சென்று “எசமான் இப்படித்தான் நடித்தேன் என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள்..” என தைரியமாக சொன்னார்.

ஆம், சாட்சி எல்லாம் தேவை இல்லை, நானே சாட்சி ம்ம் உத்தரவிடுங்கள் என நின்ற ராதாவினை வினோதமாக பார்த்தது நீதிமன்றம்

இன்னொரு நாடகம் தடை என சொல்லிற்று அரசு, மீறி நடத்தினார் ராதா , ஆனால் கைது செய்ய வந்தார் இன்ஸ்பெக்டர்

அந்த இன்ஸ்பெக்டர் மிக கடுமையானவர், பலத்த சர்ச்சைக்கு பின் நாடகம் முடிந்தபின் ராதாவினை கைது செய்வதாக ஏற்பாடு

முதல் காட்சி, முதல் வசனம் இப்படி பேசினார் ராதா “எவண்டா இந்த நாய அவுத்துவிட்டது டாமிட், ஓவரா கொலைக்குது, ஒழுங்கா பிடிச்சி அவன கட்ட சொல்லு இல்லண்ணா துப்பாக்கி எடுத்து சுட்டுருவேன் ராஸ்கல்.”

அத்தோடு கிளம்பி சென்ற இன்ஸ்பெக்டர் அதன்பின் வரவே இல்லை

இப்படியான நாடககாரர்கள் அன்று இருந்தார்கள், அவர்களிடம் துணிவு இருந்தது காரணம் உண்மை இருந்தது

அவர்கள் அதிகம் சம்பாதிக்க ஆசைபடவில்லை, தங்கள் கலையில் நாட்டில் உள்ளதை உள்ளபடி தைரியமாக சொன்னார்கள்

வரலாற்றில் நிலைத்தார்கள்

இன்றுள்ள இந்த நாடகமான சினிமாக்காரர்களை நினைத்தால் பரிதாபமாகா இருக்கின்றது, மடியில் கனம் ஒரு மிரட்டலுக்கே வழியில் பயம், அலறுகின்றார்கள்

கடுமையான அரசுகளை எதிர்கொள்வது எப்படி என்பதற்கு எம்.ஆர் ராதாவும், சோ ராமசாமியும் எந்நாளும் தமிழக எடுத்துகாட்டுக்கள், இந்த சினிமா நடிகர்கள் படித்தால் அவர்களை படிக்க வேண்டும்

ராமசந்திரனையும், ரஜினியினையும் படித்தால் இப்படித்தான் ஆகும்…

[ November 9, 2018 ]

============================================================================

தமிழக அரசியல் சினிமா என பல துறைகளில் தவிர்க்க முடியாதவர் தங்க தலைவி

அவர் இல்லாமல் சர்க்கார் என அரசியல் படம் எடுத்தால் எப்படி உருப்படும்? உருப்படவே உருப்படாது

தலைவி இல்லா எல்லா படமும் நாசமாகத்தான் போகும்..

ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்லி சர்க்கார் படத்தை அடிக்க, சங்கமோ ஏன் எங்கள் தங்க தலைவி படத்தில் இல்லை என கேட்டு போராட்டம் நடத்துகின்றது

[ November 9, 2018 ]
Image may contain: 1 person, selfie and closeup

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s