வெளிகிரக வாசிகள் உண்டா

ஒரு விஷயம் உலகை புரட்டி போட்டிருக்கின்றது, அதுவும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றார்கள்
இந்த விண்வெளியில் மனிதனை தவிர ஏதும் உயிரினம் உண்டா என்பது பல்லாயிர ஆண்டுகளாக கேட்கபடும் கேள்வி அது மனிதன் ராக்கெட்டில் ஏறி விண்வெளிக்கு சென்றபின் அதிகமாயிற்று
வெளிகிரகத்தின் மனிதன் போன்ற உயிரினம் உண்டு என்பது நம்பிக்கை, நாத்திகர்கள் ஒருபடி மேலே போய் அவர்களைத்தான் உலகம் கடவுள் என சொல்கின்றது என சொல்வார்கள்
அதாவது இந்துமத புராணங்களிலும் பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் இந்த வெளிகிரக வாசிகளின் வாகன சாயலில் பல விஷயங்களை காணமுடியும் என்பதால் அது அவர்களுக்கு தோதாயிற்று
கோவில் கோபுரமே ராக்கெட் வடிவம என்பதும், இன்றும் கருவறைக்கு மேற்பகுதி விமானம் என்றும் சொல்லபடுவது முதல் பல விஷயங்களை எடுத்து போடுவார்கள்
யூதர்கள் என்பவர்கள் உலகை அழிக்க பயன்படுத்தபட்ட இனம் என்பதும் அவர்களின் கடவுள் ஒரு அழிவு சக்தி ஏலியன் என்பதும், அவர்தான் அவர்களுக்கு அறிவினை கொடுத்தார் அதனால் அவர்களால் குழப்பம் அதிகமாகும் இன்னொரு வகை செய்தி
இன்றுவரை யூதர்கள் அதை நிரூபித்தும் வருகின்றார்கள் என்பது வேறுவிஷயம், இன்னொரு உலகபோர் கூட அவர்களால் வரலாம்
எனினும் இதுவரை அறிவியலால் நிரூபிக்க முடியா விஷயம் வேற்றுகிரக மனிதர்களை பற்றியது, ஆதாரம் ஏதுமில்லை
பறக்கும் தட்டுக்கள் என்பார்கள், அதெல்லாம் அமெரிக்காவும் ரஷ்யாவும் செய்த உளவு விமானங்கள் என்பதும் அதில் இருந்த குள்ள மனிதர்கள் எல்லாம் திசை திருப்பும் காரியங்கள் என்பதும் வேறு விஷயம்
ஹிட்லர் செய்ய முனைந்த வேகமான வட்ட வடிவ விமானத்தின் மாடலை கைபற்றி இருநாடுகளும் செய்த அட்டகாசம் அவை
ஆனால் உண்மையில் வெளிகிரக வாசிகள் உண்டா என்றால் உண்டு என்கின்றது பல ஆய்வுகள், அன்றிலிருந்தே அவர்கள் அடிக்கடி பூமிக்கு வந்திருக்கலாம்
எகிப்து பிரமீடுகள் உட்பட பல விஷயங்களுக்கு கணித சூத்திரங்களை கொடுத்திருக்கலாம் ஆப்ரிக்கர்களுக்கு பல விண்வெளி ரகசியங்களை சொல்லி இருக்கலாம் என்கின்றார்கள்
ஆம் இன்று விண்வெளி விஞ்ஞானிகள் சொல்லும் பல முடிவுகள் ஆப்ரிக்கர்களுக்கும் இந்தியர்களுக்கும் அன்றே தெரிந்ததில் அதிர்ந்து நிற்கின்றது விண்வெளி ஆராய்ச்சி உலகம்
ஏன் அடிக்கடி வரவில்லை என்றால் ஆய்வாளர்களாக முடிவுக்கு வருவார்கள், அவை நம்மை விட அறிவில் மிக சிறந்த இனமாக இருக்கலாம் அவை தேடியது கிடைக்கா பட்சத்தில் இங்கு வருவதை தவிர்க்கலாம்
உதாரணமாக நாம் ஹெலிகாப்டரில் பறக்கின்றோம், ஒரு ஊருக்கு ஏதோ விஞ்ஞானம் தேடி செல்கின்றோம் அங்கே கட்டுவண்டி கட்டி காளைமாடு பூட்டி இருந்தார்கள் அதுதான் அவர்களின் உச்சகட்ட வளர்ச்சி என்றால் திரும்பி பார்ப்போமா?
இல்லை, அப்படித்தான் நம்மை விட அறிவான இனம் ஒன்று இங்கு வந்திருக்கலாம் என்கின்றார்கள்
இது போக அமெரிக்கருக்கும் ஐரோப்பியருக்கும் விஞ்ஞானத்தின் சில தத்துவங்களை அவர்கள் சொன்னதாகவும் அதில்தான் அந்நாடுகள் படுவேகமாக வளர்ந்ததாகவும் சில‌ தியரி
ஹிட்லருக்கு கூட அவர்களோடு தொடர்பு இருந்தது என்பது ஆதாரமில்லா தியரி
ஏன் அவர்களுக்கு அந்நிய கிரகத்தார் அறிவினை கொடுத்தார்கள் என்றால் உலகம் அழியட்டும் என நினைக்கின்றார்கள் என்பது இன்னொரு ஆராய்ச்சி
(சொல்லமுடியாது இந்த வானத்து தேவர்கள் வந்து சென்றார்கள் என எல்லா மதமும் சொல்கின்றது
ஆக பூமி சண்டையிட்டு அழியட்டும் என்பது அவர்கள் ஏற்பாடாக இருந்தாலும் இருக்கலாம்)
இதெல்லாம் யூகமும், மர்மமும் மட்டுமே எதுவும் முடிவல்ல. ஆனால் உலகின் மர்ம பக்கங்கள் ஏராளம்
ஐன்ஸ்டீன் முதல் பல விஞ்ஞானிகள் இதில் தலையினை பிய்த்தனர், ஹாலிவுட் படங்கள் எல்லாம் கொடூர உருவமே ஏலியன்ஸ் என சொல்லி சம்பாதித்தன‌
ஸ்டீபன் ஹாக்கிங்க்ஸ் மட்டும் சொன்னார், சினிமாவினை பார்த்து முடிவுக்கு வராதீர்கள் அது இயக்குநர் கற்பனை
உண்மையில் அந்நிய கிரகத்தார் நம்மை விட அழகாக இருக்கலாம் இல்லை பூச்சியாக கிருமியாக இருக்கலாம், ஏன் கண்ணுக்கு புலபடாத வகையில் நம் அருகிலே இருக்கலாம், ஆனால் பரந்த விண்வெளியில் அவர்கள் இருக்க சாத்தியம் அதிகம் என்றார்
இன்று நாம் விண்வெளி கிரகங்களில் தங்கம் உண்டா? மீத்தேன் உண்டா என இயற்கை வளங்களை தேடுவது போல அவர்கள் எதையோ தேடி இங்கும் வரலாம், நீரை கூட தேடி வரலாம் என பல விஷயங்களை சொன்னார்
அவரின் சிந்தனையும் முடிவுகளும் ஆச்சரியமான உண்மைகள் என்பதால் அதை ஒதுக்கிதள்ளவில்லை உலகம் பரீசிலனையில் வைத்திருக்கின்றது
இந்நிலையில்தான் அந்த செய்தி வந்திருக்கின்றது
ஆம் இதுவரை விண்வெளி கலனை யாரும் கண்டதில்லை, அதோ வருகிறார் இயேசு, இதோ வருகிறார் இயேசு என்பது போல அங்கே பறந்தது, இங்கே விழுந்தது இங்கே வேகமாக கடந்தது என்பார்களே தவிர் ஆதாரம் ஏதுமில்லை
அமெரிக்காவின் ரோஸ்வெல் பகுதியில் ஒரு பறக்கும் தட்டு கைபற்றபட்டதாகவும் ஒரு நட்சத்திர குள்ளனை பிடித்ததாகவும் செய்திகள் உண்டு ஆனால் ஆதாரமில்லை
முதன் முதலில் பறக்கும் தட்டு பற்றிய ஆதாரம் வந்திருக்கின்றது
ஹவாய் பக்கம் பறந்த அது சிக்கி இருக்கின்றது, இந்த ஹாரிஸ் ஜெயராஜின் பல்லவி போல ஒன்னுமாவாவா என பெயர் வைத்திருக்கின்றார்கள்
அமெரிக்க விண்வெளி நிலையம் அந்த படத்தை தெரிவித்திருக்கின்றது, சர்கார் படத்தை தமிழக அரசியல்வாதிகள் பார்ப்பது போல சதா சர்வ காலமும் விண்வெளியினை நோக்கி தவமிருக்கும் நிலையம் அது
அதாவது வேற்றுகிரக வாசிகள் உண்டா என்பது பற்றிய ஆய்வு நிலையம் அது
அவர்கள் அதை கண்டிருக்கின்றார்கள், ஏதோ எரிகல் அல்லது பாறை என கருதியவர்களுக்கு அதன் நேர்த்தி ஒரு கவனத்தை கொடுத்திருக்கின்றது, நிச்சயம் அது வாகனம் ஆனால் எரிகல் போலவே தயாரிக்கபட்ட வாகனம் என்ற முடிவிற்கு வந்தார்கள்
அது மணிக்கு 50ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தை தாண்டி செல்வதுதான் அவர்களுக்கு பெரும் வியப்பு, அது வாகனமேதான் சந்தேகமில்லை ஆனால் எப்படி இவ்வளவு பெரும் வேகம் சாத்தியம் என தொடர்ந்து ஆராய்ந்தார்கள்
அது அணுசக்தியில் இயங்கவில்லை , கோளின் ஈர்ப்பு விசையும் காரணம் இல்லை பின்னர் எதுதான் காரணம் என ஆய்ந்தவர்களுக்கு இருந்தது அதிர்ச்சி
ஆம், அது சூரியன் போன்ற கிரகங்களின் ஒளியில் இருந்து சக்தி எடுத்து பறக்கின்றது, மானிட குலத்தில் இந்த முன்னேற்றம் எல்லாம் இன்னும் 400 ஆண்டு காலம் ஆனாலும் வராது
ஆக மிகபெரும் அறிவார்ந்த ஒரு உயிரினத்தால் மிக கவனமாக விண் கல் போன்றே உருவாக்கபட்ட விண்வெளி கலம் வழிதவறியோ இல்லை நோட்டமிடும் எண்ணத்திலோ இப்பக்கம் வந்திருக்கலாம் என்கின்றது மேற்குலகம்
அவ்வளவு அறிவார்ந்த இனம் எதை தேடி வந்தது என்ற ஆய்வில் அவர்கள் இருக்கின்றார்கள், நம்மை தேடி வந்தவர்கள் என்றால் நிச்சயம் தகவல் கொடுத்திருக்கலாம் ஆனால் என்பதால் இரண்டே விஷயம் சாத்தியம்
ஒன்று அவர்களுக்கு நாம் தேவையே இல்லை, இன்னொன்று வழிதவறிய கலம் வந்திருக்கலாம், எப்படியோ அது பூமியினை கடந்து சென்றாயிற்று
ஆனால் சங்கம் இதுபற்றிய கனத்த ஆராய்ச்சியினை முடித்து ஆய்வினை அமெரிக்காவிற்கு அனுப்பியாயிற்று
என்ன முடிவு அது?
அந்த வேற்றுகிரகவாசிகள் அந்த ஸ்டீபன் ஹாக்கிங்க்ஸ் சொன்னபடி வேற்றுகிரக வாசிகள் நம் மானிட இனத்தை விட அழகானவர்களாக இருக்கலாம் அல்லவா? அப்படி ஒரு கலம் அன்றே வந்து அதிலிருந்த குழந்தை மும்பை பக்கம் விழுந்திருக்கலாம்
இன்று தலைவி குஷ்புவாக அது ஜொலித்திருக்கலாம், வாய்ப்பு இருக்கின்றது, தலைவி நிச்சயம் பூலோக அழகு அல்லவே அல்ல அவர் வேற்று கிரக அழகு
ஆக அந்த வழிதவறி விழுந்த குழந்தையினை தேடி அவரின் சொந்த இனம் வந்திருக்கலாம் அதை அமெரிக்க டெலஸ்கோப்கள் படமாக எடுத்திருக்கலாம்
இதை தவிர வேறு வாய்ப்பே இல்லை, சங்கத்தின் முடிவினை அமெரிக்க நிலையமும் அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும், அவர்களும் வேறு முடிவுக்கு வரவே முடியாது
(உலகின் வேகமான விஷயம் ஒளி என்றார் ஐன்ஸ்டீன், ஆனால் மகாபாரதம் அதை விட முக்கியமான விஷயத்தை சொல்கின்றது
தர்மன் ஒரு சோதனையில் உலகிலே வேகமான விஷயம் எண்ணங்கள் என்கின்றார்
அதுதான் மகா உண்மை, இந்த மர்ம கலம் அந்த வேகத்தில்தான் பயணிக்கின்றது, நினைத்த மாத்திரத்தில் அதனால் நினைத்த இடத்திற்கு செல்லமுடிகின்றது, மனதால் இயக்கும் கலன்கள் சாத்தியம் எனும் தியரிக்கு மேற்குலகம் சென்றுகொண்டிருக்கின்றது
இதற்கு அடிபப்டை பாரதத்தில் தர்மன் சொன்ன அந்த ஒருவார்த்தை என்பதில் மாற்றுகருத்தில்லை..)
[ November 9, 2018 ]
Image may contain: water
Image may contain: night

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s