வா திருமகனே வா. மறுபடியும் பகைமுடிக்க வா

முப்படை தளபதிகளும் சற்றுமுன் கூடி பல சந்தேகங்களை தீர்த்திருக்கின்றனர், இந்த விஷயங்களுக்கு சம்பந்தமில்லா கடற்படை தளபதியும் உடனிருந்தார் கவனித்தீர்களா? எதற்காக? நாங்கள் எந்த யுத்தத்திற்கும் தயார் என காட்டுவதற்காக‌

இந்திய அதிகாரிகள் பாகிஸ்தானின் எப் 16 வீழ்த்தபட்ட விஷயத்தை சொன்னார்கள், உண்மையில் மிக் 21 ரக விமானம் ஏவுகனைகளோடு எழும்பி வானிலிருந்து விமானங்களை தாக்கும் வகைக்கே பயன்பட்டிருக்கின்றது

அப்படித்தான் பாகிஸ்தான் எப்16 விமானங்களை ஏவுகனையால் அடித்திருக்கின்றார்கள் ஒரு விமானம் விழுந்திருக்கின்றது, மற்றவை திரும்பி சென்றிருக்கின்றன‌

அபிநந்தன் அந்த விமானங்களை விரட்டி சென்று பாகிஸ்தானில் சிக்கி இருக்கின்றார்

பாகிஸ்தான் ஒன்றும் அவரை இந்தியர் என்பதற்காக கவுரவமாக நடத்தவில்லை, விமானிகள் பிடிபட்டால் அவர்கள் தரத்திற்கேற்ப கவுரவமாக நடத்தவேண்டும் என்பது பாகிஸ்தானும் ஏற்றுகொண்ட சர்வதேச விதி

அதனால்தான் சிலரிடம் சிக்கி அடிபட்ட அபி காயம் துடைக்கபட்டு மிக அழகாக தேநீர் எல்லாம் கொடுக்கபட்டு காட்சிபடுத்தபட்டார், உலக பொது நியதி இது

மற்றபடி பாகிஸ்தானியர் உத்தமர் எல்லாம் இல்லை

அபியும் தன் பெயர் அடையாளம் மட்டும் சொன்னார், பொதுவாக எதிரி விமானி அகப்படும்பொழுது விமானபடையின் மொத்த ரகசியத்தையும் அறிய சம்பந்தபட்ட நாடு முயலும் இதனால் பிடிபடுபவர்கள் இத்தோடு நிறுத்துவார்கள் இது உலக வழக்கம்

அபியும் அதை கம்பீரமாக செய்தார்

இந்தியாவும் பாகிஸ்தானும் எத்தனையோ போர்களை நடத்தியிருக்கின்றன, அடிக்கடி இதுபோல் பட்சிகள் அகப்படும் கொஞ்சநாளில் விட்டுவிடுவார்கள்

(உளவாளிகள் விவகாரம் வேறு, அதனை இன்னொரு பதிவில் காணலாம்)

ஏகபட்ட சம்பவம் உண்டு எனினும் சில விஷயங்கள் வரலாறாவை

அப்பொழுது 1965 இந்திய பாகிஸ்தான் யுத்தம் நடந்தது இங்கு லால்பகதூர் சாஸ்திரியும் அப்பக்கம் ராணுவ ஆட்சியாளார் ஜெனரல் அய்யூப்கானும் ஆண்டுகொண்டிருந்தனர்

ஒரு இந்திய‌ விமானம் ராவல்பிண்டி அருகே வீழ்த்தபட்டது , விமானி பிடிக்கபட்டார், அவரிடம் விவரம் கேட்கபட்டது என் பெயர் கே. சி கரியப்பா என்பதோடு நிறுத்திகொண்டார் விமானி

முழு பெயரை அவர்கள் கேட்க “கொண்டாரா எம் கரியப்பா” என விரிந்தது அந்த பெயர், அதை கேட்ட அதிகாரிகளுக்கு பொறி தட்டியது, பின் அய்யூப்கானுக்கு விஷயம் கொண்டுசெல்லபட்டது

அய்யூப்கான் விரைந்து வந்தார், நீங்கள் ஜெனரல் கரியப்பா மகனா என வியந்து கேட்டார், அவ்வளவுதான் ரேடியோவினை தட்டினார்

“கேசி கரியப்பா என்றொரு இந்திய விமானி பிடிபட்டிருக்கின்றார், விரைவில் விடுதலை செய்வோம்” என அறிவித்துவிட்டு தன் சகாக்களிடம் பழைய விஷயங்களை அசைபோட்டார்

அய்யூப்கானும் கரியப்பாவும் பிரிட்டன் ராணுவத்தில் சுதந்திரத்திற்கு முன்பு பணியாற்றியவர்கள், கரியப்பா மேல் அய்யூப்கானுக்கு பெரும் மரியாதை இருந்தது

விஷயத்தை இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் தூதரிடம் போனில் சொல்லிவிட்டு விஷயத்தை முடித்தார் கான்

சீனியர் கரியப்பாவினை சந்தித்த பாகிஸ்தான் தூதர் “உங்கள் மகன் கேசி கரியப்பாவினை நாளை விடுதலை செய்வோம்” என அறிவித்தார், மறுத்து சொன்ன கரியப்பா “பாகிஸ்தான் சிறையிலுள்ள எல்லா இந்தியரும் என் மகனே முடிந்தால் எல்லோரையும் மொத்தமாக விடுவியுங்கள் என் மகனை மட்டும் என்றால் வேண்டாம்” என்றார்

யோசித்த அய்யூப்கான் எல்லா வீரர்களையும் விடுவித்தார்

ஆம் பாகிஸ்தான் ஆட்சியாளர்களில் கொடூரமானவர் என்ற கானுக்கு இப்படியும் ஒரு பக்கம் இருந்தது

வெளிவந்த ஜூனியர் கரியப்பா என்ன செய்தார்? 1971ம் ஆண்டு யுத்தத்தின்பொழுது மறுபடியும் பாகிஸ்தான் மேல் குண்டு வீசினார்

இப்படி வீரர்கள் கைது செய்யபடுவதும் விடுவிக்கபடுவதும் உலகெங்கும் காணும் நிகழ்வுகள், அதுவும் இந்தியா பாகிஸ்தானுக்கு சாதாரணம்

இதனால் இம்ரான்கான் ஒன்றும் உத்தமராகிவிடமாட்டார்

சமாதானம் பேசவருபவர் அந்த மசூத் அசாரை கொன்றுவிட்டு, லஷ்கர் கமாண்டரை சுட்டுவிட்டு தாவுத் இப்ராஹிமை ஒப்படைத்துவிட்டு பேச வரட்டும் , நாமும் பேசலாம்

சும்மா நடிப்பெல்லாம் இங்கு எடுபடாது, சிவாஜி நடிபினையே பார்த்த நாடு இது

இம்ரான்கான் மிகசிறந்த நடிகன், தன் நாடு வசமாக சிக்கிவிட்ட தருணத்தில் மிகசிறந்த நடிப்பினை வெளிபடுத்துகின்றார்

குறுக்குவழி ஒன்றும் அவருக்கு புதிதல்ல, கிரிக்கெட்டிலே பந்தின் நூலை பிரித்து அவர் செய்த சர்ச்சைகள் ஏராளம்

மனிதர் நம்ப கூடியவர் அல்ல, அல்லவே அல்ல‌

அய்யூப்கானே கைதிகளை விடுவித்த பாகிஸ்தானில் இது ஒன்றும் புதிதல்ல‌

நாளை வாகா எல்லையில் அபி ஒப்படைக்கபடுகின்றார்

ஒரு விஷயத்திற்காக அவரை பெரும் ஆராவாரத்தோடு கன்ணீர் சிந்தி வரவேற்கின்றோம்

ஆம் அவர் வீழ்ந்துகிடந்ததும் நடந்த சம்பவத்தை பார்த்த சாட்சி இப்படி சொல்கின்றது

‘அவர் கீழே விழுந்து எழும்பினார், உடலில் காயம் இருந்தது, இது இந்தியாவா பாகிஸ்தானா என கேட்டார், நாங்கள் இந்தியா என்றோம்

உடனே ஜெய் ஹிந்த் என உரக்க கத்தினார், நாங்கள் அடித்தோம் இது பாகிஸ்தான் என உணர்ந்த அவர் ஓடிசென்றார்

சில வரைபடங்கள் அடங்கிய பேப்பரை விழுங்கினார், இன்னும் சில ஆதாரங்களை அழித்தார், இறுதியாக கைதுப்பாக்கி எடுத்து எங்களையும் சுட்டுவிட்டு தானும் சுட்டுகொள்ளும் முடிவில் இருந்த பொழுதுதான் பாகிஸ்தான் ராணுவம் வந்து பிடித்தது”

ஆம் வானிலிருந்து விழுந்து மறுபிறப்பு பெற்றதும் அவர் எவ்வளவு கம்பீரத்துடன் ஜெய்ஹிந்த் என சொல்லியிருக்கின்றார் பார்த்தீர்களா?

கடைசி நிமிடத்திலும் ஒரு தகவலையும் எதிரி பெற்றுவிட கூடாது என எப்படி போராடியிருக்கின்றார் பார்த்தீர்களா?

அந்த தியாக திருமகனின் பெரும் வீரத்தில் அசந்து போய் இருக்கின்றது தேசம்

அவரை உச்சிமுகர்ந்து வரவேற்க இந்தியர் எல்லோரும் காத்திருகின்றோம்

“உன்னை போல் மாவீரர்களின் தன்னலமற்ற சேவையில் நிலைத்த்து நிற்குதையா இந்த தேசம்…

இத்தேசத்து ஒவ்வொருவர் நாவும், இதேசத்து காற்றும் முக்கடலும் அதன் அலைஉம் உன்பெயரை சொல்லி சொல்லி பெருமையுடன் அழைக்கின்றது

வா திருமகனே வா. மறுபடியும் பகைமுடிக்க வா”

அபிநந்தன் விடுதலை

அபிநந்தன் நாளை விடுதலை , இம்ரான்கான் அறிவிப்பு

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் விதிகளை பாகிஸ்தான் மதிக்க வேண்டும் என அமெரிக்கா அறிவித்த சிலமணிதுளிகளில் பாகிஸ்தான் இறங்கிவருகின்றது என்றால் அமெரிக்க எச்சரிக்கை எத்தகையது என்பதை புரிந்துகொள்ளலாம்

இந்தியதரப்புக்கு இது மிகபெரும் வெற்றி, ராஜதந்திரத்திற்கும் உலக அரங்கில் இந்தியாவின் அங்கீகாரத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி

இதில் ஒருவிஷயம் ஆழமாக நோக்க கூடியது

எப்பொழுதும் ஒருவித பந்தா காட்டி இந்தியா என்றால் ஒதுங்கும் அமெரிக்கா இப்பொழுதுமட்டும் ஏன் காட்டமாக இறங்கியது?

விஷயம் இல்லாமலில்லை

பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்த அமெரிக்க ஆசீர்வாதமும் இருந்தது, தாங்கள் அடிக்க வேண்டிய இலக்கை இந்தியாவினை வைத்து சாத்த திட்டம் தீட்டியது அது என்கின்றார்கள்

ஆம் மொத்தம் 6 இடங்களை இந்தியா நொறுக்கியது, அதில் ஒன்றுதான் இந்தியாவின் தேவையான ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் முகாம்

மீதி அமெரிக்க எதிரிகளின் முகாம்

தன் இலக்கினையும் அமெரிக்க இலக்கினையும் ஒரே நேரத்தில் அடித்து சாகசம் செய்தது இந்தியா

இதனால் தொடர்ந்து எழுந்த பதற்றம் காரணமாக இந்தியா சவால் எடுத்தது அதில்தான் அபிநந்தன் சிக்கிகொண்டார்

இப்பொழுதும் எப்படி அமைதிகாப்பது என எண்ணிய அமெரிக்கா சரியான ராஜதந்திர நடவடிக்கையில் இறங்கி உதவிவிட்டது

பாகிஸ்தான் என்னதான் மறுத்தாலும் “உங்கள் நாட்டில் கொல்லபட்ட தீவிரவாதிகளின் பட்டியலை நாங்கள் வெளியிடட்டுமா? ” என கேட்டால் பாகிஸ்தான் கதறுவதை தவிர வேறு வழியில்லை

அபிநந்தன் விடுதலை தவிர பாகிஸ்தானுக்கும் வேறு தெரிவு இல்லை

நிச்சயம் மனமகிழ்ச்சியோடு விடுவிக்கமாட்டார்கள் தங்கள் நாட்டில் தங்கள் விமானத்தை வீழ்த்தியவனை விடுவிக்கின்றோமே எனும் வயிற்றேரிச்சல் நிச்சயம் இருக்கும்

விடுதலையாகின்றார் அபிநந்தன்

இந்தியா மிக கவனமாக இருக்க வேண்டிய நேரமிது, இந்த மாபெரும் அவமானத்தை பொறுக்கா பாகிஸ்தான் தன் சிலீப்பர் செல்களுக்கு கட்டளையிடலாம், விரும்பதகா சம்பவங்களை அரங்கேற்ற அவர்கள் துடிக்கலாம்

இது மகிழ்ச்சியான தருணம்,, ஆனால் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணமும் இதுவே

ஒவ்வொரு இந்தியனும் சீருடை அணியா ராணுவத்தினர் என்பதால் மிகுந்த விழிப்போடு தேச பாதுகாப்பை பாதுகாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு

எப்படியோ பாகிஸ்தான் விமான பைலட்டுகள் நிம்மதி பெருமூச்சுவிடும் நேரமிது

அப்பாடா பிடிபட்ட இந்திய விமானியினை அனுப்பிவிட்டார்கள், இனி நாம் பிடிபட்டாலும் இந்தியா நிச்சயம் அனுப்பும் அதனால் யுத்தம் வந்தால் இந்திய எல்லை கடந்தவுடன் ஹாய் சொல்லி குதித்துவிடலாம் என அவர்களுக்கும் நிம்மதி

பாகிஸ்தான் பிரதமருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கின்றொம், அபிநந்தனை வெளியேற்றுவது போல உங்கள் நாட்டின் தீவிரவாத இம்சைகளையும் எங்காவது அடித்து விரட்டுங்கள்

இந்திய சரித்திரத்தில் நின்றுவிட்ட அபிநந்தனுக்கு வாழ்த்துக்கள் மற்றும் வரவேற்புக்கள்

அந்த மிக் 21 விமானத்தை மட்டும் தொடவே வேண்டாம் என அன்போடு கேட்டுகொள்கின்றோம்

ஏன் ஏவுகனைகள் வீசபடவில்லை?

இந்தியா ஏன் பாகிஸ்தான் மேல் ஏவுகனையினை ஏவவில்லை, எதற்கு விமானதாக்குதல் என்றேல்லாம் ஏக கேள்விகள், கேட்பது யாரென்றால் திமுகவினர்

அவர்களுக்கு ஒரே நோக்கம் செத்துபோன தீவிரவாதிகள் வந்து இந்திய ராணுவம் எங்களை கொல்லவில்லை மோடி ஒழிக என சொல்வது வேறொன்றுமில்லை

ஏன் ஏவுகனைகள் வீசபடவில்லை?

ஏவுகனைகள் பல நேரங்களில் குறிப்பிட்ட இலக்கினை தாக்காதவை, பின்லேடனை குறிவைத்து அமெரிக்கா 19996ல் வீசிய ஏவுகனைகள் ஆப்கனில் இலக்குமாறின அவன் தப்பினான்

இதனால்தான் 2011ல் பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் சகிதம் இறங்கி அவனை ஒழித்தது அமெரிக்கா

இந்த தாக்குதல் துல்லிய‌ தாக்குதல் அதுவும் மலைசரிவு பகுதிகள், அங்கு ஏவுகனை சரிவராது என்பதால் இந்திய ராணுவம் மிராஜ் விமானங்களை அனுப்பியது

இன்னொரு கேள்வியும் கேட்கின்றார்கள் அதுதான் ஆபத்து

ஜெய்ஸ் இ முகமது தலைவன் மசூத் அசாரை கொல்லாமல் ஏன் பயிற்சி தீவிரவாதிகளை கொன்றார்கள்?

தலைவனின் இடத்தை அறிதல் கடினம், ஆனானபட்ட இஸ்ரேலே நஸ்ருல்லா எனும் ஹிஸ்புல்லா இயக்க தலைவன் இடம் தெரியாமல் அல்லாடுகின்றது

அம்மாதிரியான தலைவர்களுக்கு நிரந்தர வசிப்பிடம் என எதுவும் கிடையாது

கோபாலபுரம் வேளச்சேரி போல நிரந்தர முகவரி அவர்களுக்கு கிடையாது

இந்த முகாமில் இருந்த‌ தீவிரவாதிகள் நிச்சயம் பயிற்சி முடிந்தவுடன் காஷ்மீருக்குள்தான் வருவார்கள் என்பதால் மொத்தமாக முடித்தது இந்தியா

திமுகவினரின் வருத்தம் என்ன தெரியுமா?

தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் ஏவுகனையின்றி விமான குண்டுகளால் தகர்க்கபட்டதும் அதில் பயிற்சி தீவிரவாதிகள் கொல்லபட்டதுமாம்

இவர்கள் முட்டாள்களன்றி வேறுயார்?

இங்கே இருந்து கொண்டு நான் தமிழன் , நான் புயலில் சிக்கியபொழுது, நான் கதவிடுக்கில் சிக்கியபொழுது, நான் பக்கத்து வீட்டுக்காரன் வீட்டுகாரனிடம் சிக்கியபொழுது காக்க வராத இந்திய ராணுவம்..

என் வீட்டு பூனைகுட்டியினை நாய் தூக்கி சென்றபொழுது வராத ராணுவம் , என் வடையினை காக்கா தூக்கியபொழுது வராத விமானபடை தேவையில்லை என சொல்லிகொண்டிருப்பதில் அர்த்தமில்லை

நாளையே தென்னக கேந்திரங்களான கூடன்குளம், மகேந்திரகிரி, ஐ.என்.எஸ் கட்டபொம்மன் போன்ற மகா முக்கிய இடங்கள் இருக்கும் நிலைகளை குறிவைத்து பாகிஸ்தானிய கப்பல் கன்னியாகுமரி பக்கம் வந்தாலோ இல்லை அவர்களின் நீர்மூழ்கிகள் வந்தாலோ இல்லை அவர்களின் விமானம் வந்தாலோ காப்பது யார்?

யாழ்பாணத்து பனங்கொட்டையோ இல்லை இங்கிருக்கும் மான உணர்வாளர்களோ அல்ல‌

கலைஞர் குடும்பமோ இல்லை வேறு அரசியல் குடும்பங்களோ ராணுவ சீருடையில் காக்க வராது

கருப்புசட்டை கும்பல் எல்லாம் பாகிஸ்தானின் நாசகாரி கப்பலை பெரியாரின் கைதடியுடன் எதிர்க்க முடியாது

அந்நிலையில் உங்களை காப்பதற்கு இந்திய ராணுவம் ஒன்றே வரும், வேறு யாரும் வரமாட்டார்கள்

யுத்தம் வெடிக்கும் பட்சத்தில் தென்னக எல்லையினை காக்க இந்தியன் நிரம்பிய இந்திய ராணுவமே இங்கு முற்றுகையிட்டு உன்னையும் என்னையும் காக்கும்

பாகிஸ்தானுக்கு தமிழர் தெலுங்கர் எனும் வித்தியாசமெல்லாம் தெரியாது,

கசாப் மும்பையில் சுடும்பொழுதும் , மும்பையில் குண்டுகள் வெடிக்கபட்டபொழுதும் இந்தியர் என்றே வெடித்தது

திமுக திக தலித் பாஜக காங்கிரஸ் என்பதெல்லாம் தெரியாது, அவனுக்கு நாமொரு இந்தியன்

இந்தியர் எனும் வகையில் காஷ்மீரி செத்தாலும் கன்னியாகுமரிக்காரன் செத்தாலும் அவனுக்கு ஒன்றுதான்

நாமெல்லாம் இந்தியன் என்பது பாகிஸ்தான்காரனுக்கும் சீனனுக்கும் இவர்களை தெற்கே அழைத்து வழிகாட்டபோகும் இலங்கைக்கும் தெரிந்திருக்கின்றது

இங்குள்ள பல தமிழ் பக்கிகளுக்கு தெரியாததுதான் மகா சோகம்

இவர்கள் முட்டாள்களன்றி வேறுயார்?

இந்தியரின் எதிர்பார்ப்பு

அபிநந்தன்,, தன் குடும்பத்தை இத்தேசம் காக்கும் எனும் நம்பிக்கையில் கம்பீரமாக பாகிஸ்தான் சிறையில் இருக்கின்றார்

இங்கு பல கட்சிகள், பல தலைவர்கள் அவரின் குடும்பத்தாரை சந்திக்க முயற்சி எடுத்திருகின்றார்கள் ஆனால் பல காரணங்களுக்காக அவர் குடும்பத்தார் அதை விரும்பவில்லை

ஆறுதல் எனும் பெயரில் விளம்பரம் தேடுவோர் ஒருபக்கம், பத்திரிகை டிவி இம்சைகள் மறுப்பக்கம்

இன்னும் கணவன் பிரிவு எப்படி? தந்தை பிரிவு எப்படி? என உருகி உருகி இந்த மீடியாக்கள் கேட்கும் கொடூர விஷய கேள்விகள் இன்னொருபக்கம்

மொத்தத்தில் அக்குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பளித்து பெரும் நெருக்கடியின்றி காக்க வேண்டியது கடமை அதைத்தான் அரசும் ராணுவமும் செய்கின்றது

மற்றபடி ஒவ்வொரு இந்தியனும் அக்குடும்பத்திற்கு துணை நிற்கின்றான், அந்த பொய்யா நம்பிக்கையில்தான் அபிநந்தன் அங்கே வேள்வி தீயிலும் நிம்மதியாக இருக்கின்றார்

அவர் வரும்நாளை அக்குடும்பத்தோடு எல்லா இந்தியரும் எதிர்பார்த்தே இருக்கின்றனர்

இன்றைய துளி – 28/02/2019 (2)

சமத்துவ மக்கள் கட்சி

சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளராக சரத்குமார் போட்டியின்றி தேர்வு

அவரை தவிர யாருமே இல்லா கட்சியில் எப்படி போட்டி வரும்?

தாடி பாலாஜி சிக்கல்

காஷ்மீர் சிக்கலை விட தாடி பாலாஜி சிக்கல் மிக பெரிதாக இருக்கும் போலிருக்கின்றது

அப்படித்தான் தமிழக ஊடகங்கள் விவாதித்தி கொண்டிருக்கின்றன‌

விரைவில் ஐநா சபை தாடிபாலாஜி விவகாரத்தில் தலையிட்டாலும் ஆச்சரியம் ஏதுமில்லை

 தியாகுவின் சர்ச்சைக்குரிய பேச்சு

இவரை கண்ட இடத்தில் தூக்கி போட்டு மிதிக்கவும்

புலிகளுக்கு வாலிபிடித்த, இந்திய சர்க்காரிடம் உயிர்பிச்சை கேட்டவெனெல்லாம் நாட்டை பற்றி பேசுவது மாபெரும் அவமானம்

இவருக்கு மரணதண்டனையினை ரத்து செய்தது மாபெரும் வரலாற்று தவறு

போய்யா தீயசக்தி திராவிடா, பாரதம் ஒருபோதும் வீழாது

அபிநந்தன் என்ன சாதி? என்ன இனம்?

மிக தாமதமாக அந்த ஆராய்ச்சியினை தொடங்கியிருக்கின்றார்கள் லேப் & அத்தாரிட்டி சர்டிபிக்கேட் கோஷ்டி

என்ன ஆராய்ச்சி?

அபிநந்தன் என்ன சாதி? என்ன இனம்?

தொடர் கொலை மிரட்டல்

தொடர் கொலை மிரட்டல், முகநூலில் அவதூறு; மே.17 இயக்க திருமுருகன் காந்தி காவல் ஆணையரிடம் புகார்

இவர் மட்டும் அந்நிய நாட்டு தீவிரவாதிகளான புலிகளுக்கு ஆதரவாக இந்நாட்டை பழிப்பாராம்

நாட்டின் முன்ன்னாள் பிரதமரை கொன்ற அந்நியநாட்டு தீவிரவாதிகளை விடுவிக்க சொல்வாராம்

இந்நாட்டின் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் சவால்விடுவாராம்

ஆனால் இவரை யாரும் கண்டித்தால் உடனே புகார் செய்வாராம்

புகாரை ஈழபுலிகளின் அலுவலகத்தில் அல்லவா இவர் செய்ய வேண்டும்? இந்நாட்டை திட்டிவிட்டு இந்நாட்டு காவல் நிலையங்களுக்கு வருவதேன்

நல்ல காவல் அதிகாரி இருந்தால் தேசவிரோத காரியம், அந்நிய நாட்டுதீவிரவாத கும்பலுக்காக மே 17 இயக்கம் நடத்துதல் ஆகிய பிரிவுகளில் உள்ளே தள்ளட்டும்

அடித்திருக்கின்றார்கள் : இம்ரான்

இந்தியா தாக்குதல் நடத்தியதாக சொல்லும் இடங்கள் பத்திரிக்கையாளர்களுக்கு காட்டப்படும் : இம்ரான்கான்

இந்தியா எங்கே தாக்குதல் நடத்தினோம் என துல்லியமாக அதாவது முகவரி சகிதம் சொல்லாதபொழுது இவர் எதை காட்டுவாராம்?

சம்பந்தமே இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று இதுதான் அந்த இடம் பாருங்கள் என்பார், அங்கு தாக்குதலுக்கான தடயமே இருக்காது

இந்தியா கண்டிப்பாக அந்த இடத்தை சொல்லாது

பின் இம்ரான்கானும் அவரின் இந்திய ரசிகர்களும் வெற்றி புன்னகை பூப்பார்கள்

அடிபட்டவன் முதுகை காட்ட சொன்னால் தன் அடிபடாத முதுகை காட்டுவது இம்ரான் ஸ்டைல்

ஆனால் அடித்திருக்கின்றார்கள் என ஒப்புகொள்கின்றார் அல்லவா இம்ரான் அதுதான் இந்தியாவின் வெற்றி

இந்திய தரப்புக்கு இது அதிர்ச்சிதான்

சிரிய போரில் ரஷ்ய பக்கம் நில்லாதது, சில விவகாரங்களில் இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் நெருங்குவது, அணுசக்தி விவகாரங்களுக்கு வேறு கூட்டாளிகளை தேடுவது என பல விவகாரங்களை மனதில் வைத்து ரஷ்யா இந்த பதற்ற நேரத்தில் அமைதி காக்கின்றது

ரஷ்யா பல சிக்கல்களை சந்தித்தபொழுது இந்தியா காட்டிய அமைதிக்கு அது பதிலடி கொடுக்கின்றது

இந்திய தரப்புக்கு இது அதிர்ச்சிதான், புட்டீன் என்பவர் ஒருமாதிரி மனிதர் அல்லவா?

இனி அவரை சமாதானபடுத்த ஏதாவது செய்தாக வேண்டும் இந்தியா

பேச்சுவார்த்தை : மலாலா

இரு நாட்டுதலைவர்களும் கைகுலுக்கி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: மலாலா

ஏம்மா உன்னை சுட்ட தாலிபன்களிடம் உன்னால் கைகுலுக்கி பேசமுடியுமா?

சிக்கல் பாகிஸ்தானிடம் உள்ளது, அவர்களிடம் இதுவரை பேசிய எந்த பேச்சு பலனளித்தது, இந்தியாவிடம் கைகுலுக்கிகொண்டே ஒருபக்கம் தீவிரவாதிகளுக்கு இன்னொரு கையால் தடவிகொடுப்பவர்கள் அவர்கள்

எத்தனையோ ஒப்பந்தங்கள் போடபட்டும் முடிவு எடுக்கபட்டும் எதை மதித்தார்கள் அவர்கள்?

அவர்கள் திருந்தும் வரை கைகொடுப்பதில் எந்த பலனுமில்லை

வாஜ்பாய் கூட லாகூருக்கு பஸ் விட்டு பார்த்தார், சண்டாளர்கள் அதில் ஏறிவந்து கார்கிலில் அமர்ந்து கொண்டனர்

திருந்தாத கூட்டத்திடம் உறவு பாராட்டுவதில் அர்த்தமே இல்லை