சிதறல்கள்

சர்க்கரை இருக்குமிடம் எறும்புகள் படையெடுக்கும், பழமரத்தினை வவ்வால்கள் சுற்றும்

தேர்தல் நேரம் நெருங்குவதால் பாஜகவின் பெருந்தலைகள் தமிழக பக்கம் சுற்றுகின்றன, மறைந்த வாஜ்பாய் ஒய்வுபெற்ற அத்வானி தவிர எல்லோரும் இங்கு குவிகின்றார்கள்

ஆனால் ஒன்றை மறக்கின்றார்கள்

தமிழகத்தில் ஏன் காங்கிரஸ் சுருங்கியது என்பதும் எப்படி திராவிட கட்சிகள் வளர்ந்தன என்பதும் ரகசியமல்ல‌

இங்கு வரும்பொழுது தமிழர் கலாச்சாரத்தோடும், அவர்களின் பழக்க வழக்கங்களோடும் வரவேண்டும் இல்லை அதையொட்டி கட்சி வளர்க்க வேண்டும்

மாறாக ஒருவித மதகெடுபிடியும், உடையும் இன்னபிற அடையாளங்களும், ஜி போன்ற அந்நிய வார்த்தைகளும் இங்கு ஒருநாளும் பலன் அளிக்காது

இங்கு சாதி, இன மோதல்கள் இருக்கலாமே தவிர மதம் என்பது தமிழகத்தின் சிக்கல் அல்ல‌

மண்டைக்காடு, கோவை என மிக சில கலவரங்கள் நடந்திருக்கலாம் அவை நிச்சயம் மதத்தை முன்னிறுத்தி தொடங்கியது அல்ல. எங்கோ தொடங்கி மத கலவரமாக முடிந்தவை அத்தோடு சரி

மற்றபடி தமிழகம் மத நல்லிணக்கம் உள்ள மாநிலம், இங்கு கிறிஸ்தவம் இஸ்லாம் இன்னபிற மதங்களும் பெரும்பான்மை இந்து மக்களும் நல்லிணக்கத்தோடே வாழ்கின்றார்கள்

பன்னெடுங்காலமாக அப்படித்தான் வாழ்கின்றார்கள், இன்னமும் வாழ்வார்கள்

பாஜக‌ மத நல்லிணக்கத்திற்கு அச்சமூட்டும் கட்சியாகவும் , தமிழக கலாச்சாரங்களுக்கு அந்நியமான கட்சியாகவும் இருக்கும் வரை இங்கு அது உருப்பட போவதில்லை

அவர்கள்தான் அந்நிய சாயல் என்றால் இங்கு இருக்கும் மாநில தலமைகளும் உருப்படி இல்லை

தமிழிசை, எச்.ராசா, எஸ்.வீ சேகரை வைத்துகொண்டு இங்கு கட்சி நடத்துவது நிச்சயம் பலனளிக்காது

ஆலமரமாக இருந்த காங்கிரஸ் எப்படி இங்கு சுருங்கியது என்ற காரணத்தை பாஜக படிக்காமல் இங்கு கட்சிவளர்க்க முடியாது, இவ்வளவிற்கும் காங்கிரஸ் மதவாத கட்சி அல்ல‌

தமிழக களத்திற்கு காங்கிரஸே அன்னியபட்டது என்றால் பாஜக எப்படி துளிர்விட முடியும்? இப்போதிருக்கும் பாஜகவினை தமிழகம் ஒருபோதும் ஏற்காது

அதிமுக கூட்டணிக்கு தயங்குவதும், தம்பிதுரையினை விட்டு பல்ஸ்பார்ப்பதும் இதற்காகத்தான்

உபியின் சாயலுக்கும் யதார்த்தத்துக்கும் பாஜக வெல்லலாம், ஆனால் தமிழக சாயலும் தன்மையும் வேறு

அதற்கேற்றபடி பாஜக மாற வேண்டும்,

மதமும் இஸ்லாமிய எதிர்ப்பும் தமிழர்களின் தேவை அல்ல, அல்லவே அல்ல.

பின் தங்கிய உபி, மபி அரசியல் சாயலை முன்னேறிய தமிழகத்தின் மீது திணிக்க முயல்வது சுத்த மடத்தனம். எந்த தமிழனும் அதை ஏற்க போவதில்லை

தமிழர்களின் எதிர்பார்ப்பும் தேவையும் வேறு ஏராளம், நிச்சயம் மதமோ அதன் துவேஷமோ அல்ல‌

பாஜக அதை உணராதவரை இங்கு உருப்பட போவதில்லை , அதுவரை மோடி என்ன? அமித்ஷா என்ன? ஆனானபட்ட ஆதிசங்கரர் வந்தாலும் பாஜக வளர முடியாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s