சிதறல்கள் தொடர்ச்சி

“நமக்குத்தான் படிப்பு இல்ல , நம்ம கட்சியில் படித்த ஒரே மனுஷன் இவர்தான்னு நிதியமைச்சர் ஆக்கிவைச்சா இவரு நாட்டை சுத்தமா கெடுத்துட்டாரு, இவரால வெளில தலைகாட்ட முடியல‌

வெளிநாட்டுல எல்லாம் போய் படிச்சாராம்? போலி பட்டம் வச்சிருப்பாரோ?”

***************

ஈழத்தில் தமிழரை கொல்கின்றார்கள் என ஓலமிட்ட பயலை எல்லாம் சொந்த நாட்டு ராணுவத்தார் செத்து கிடக்கும்பொழுது காணவே இல்லை

சிரியாவில் கொல்கின்றார்கள், பாலஸ்தீனத்தில் கொல்கின்றார்கள் என ஓலமிட்ட கும்பலையும் இப்பொழுது காணவே இல்லை

ஒரு கும்பலை இலங்கைக்கும் ஒரு கும்பலை சிரியாவுக்கும் அனுப்ப வேண்டிய நேரமிது

*******************

சின்னதம்பி யானை பிடிபட்டது

நல்லது, இத்தோடு அதை காட்டுக்குள் விட்டுவிடவும்,

அடுத்த யானை வரும்பொழுது அதற்கு “சிங்கார வேலன்” “அண்ணாமலை” என பெயர் வைக்க வேண்டாம், வைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வனதுறைக்கு சங்கம் எச்சரிக்கின்றது

********************

மோடி அரசு என்ன செய்தது என்ன சாதித்தது என்பதை சுருக்கமாக சொல்லிவிடலாம்

மோடிக்கு முன்பு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு என்ன இருந்தது? இப்பொழுது என்ன இருக்கின்றது?

பெட்ரோல் விலை 2008களில் இருந்ததை விட சல்லியாக இப்பொழுது இருக்கும்பொழுது ஏன் இந்த பெட்ரோல்விலை ஏற்றம்?

எந்த ஆட்சியில் 2000ரூபாய் நோட்டினை இந்தியா கண்டது? கரன்சியில் ரூபாயின் மதிப்பினை ஏற்றினால் நாட்டின் பணம் வீழ்ச்சி என்பதன் அர்த்தமா இல்லையா?

தற்காலிக ஏற்பாடு என்றவர்கள் இறுதிவரை 2000ரூபாயினை மாற்றாதது ஏன்?

ரிசர்வ் வங்கியின் உபரிநிதியில் கை வைக்க துணிந்த முதல் மற்றும் ஒரே அரசு இது, ஏன் அப்படி ஒரு அவசியம்?

பொருளாதார ரீதியாக இந்த அரசு மாபெரும் தோல்வி அடைந்திருக்கின்றது அதை யாராலும் மறுக்க முடியாது

எங்கள் ஆட்சியில் பாதுகாப்பு மிக சிறப்பு என்றார்கள், இப்பொழுது அதிலும் கோட்டைவிட்டு கிளம்புகின்றார்கள் அவ்வளவுதான் விஷயம்

*****************

காஷ்மீரில் ஒரு தலித் கொல்லபட்டிருந்தால் இங்கு சமூக நீதி என்னானது? என காப்பாற்ற மொத்த திராவிட மற்றும் தலித்திய தலைவர்கள் எல்லாம் கிளம்பியிருப்பார்கள்

எப்படியெல்லாமோ ஆடி தீர்த்திருப்பார்கள்

ஆனால் 45 வீரர்கள் கொல்லபட்டதில் ஒரு திராவிட கருப்பு சட்டையோ இல்லை வேறு இம்சைகளோ ஒரு வார்த்தை பேசியதாக கூட தெரியவில்லை , ஏன் கண்டித்ததாக கூட தெரியவில்லை

இதுதான் இவர்களின் நாட்டுபற்று.

சிதறல்கள்

பயங்கரவாத தாக்குதலை அரசியலாக்க வேண்டாம் : மோடி

காங்கிரஸ் ஆட்சியில் தாக்குதல் நடந்தால் 56 இன்ஞ் மார்பு என கையில் அளவு நாடாவோடு சீறிவார் மோடி

ஆனால் இவர் ஆட்சியில் நடந்தால் 56 இன்ஞ் மார்பும் கிடையாது, சத்தமும் கிடையாதாம்

முன்பு இம்மாதிரி விஷயங்களில் காங்கிரசு அமைச்சருக்கு சேலை வளையல் எல்லாம் அனுப்புவார்கள் பாஜகவினர் என்பது குறிப்பிடதக்கது

இப்போது காங்கிரசார் வளையலும் சேலையும் அனுப்பினால் என்னாகும்? நிர்மலா சீத்தாராமன் சாவகாசமாக அள்ளி கொண்டு செல்வார் என்பது வேறுவிஷயம்

************************

நிச்சயம் இந்த தாக்குதல் கண்டிக்கதக்கது, அதற்காக போர் தொடுக்கவேண்டும் என பலர் கொக்கரிக்க தொடங்கியாயிற்று

போர் தொடங்கினால் என்னாகும்? எமர்ஜென்ஸி சட்டம் கொண்டுவந்து மோடி அட்டகாசமாக தொடர வழிசெய்யும்

ஆம், நாட்டுக்கு நெருக்கடி என எமர்ஜென்சியினை அறிவித்துவிட்டு அவர்போக்கில் இருப்பார் மோடி

எந்த முடிவினையும் அவர் எடுக்கலாம், கருப்பு கொடியினை எல்லாம் தூக்கி போட்டு மிதிக்கலாம் அனுதினமும் கருப்பு பணத்தை ஒழிக்கலாம்

என்னென்ன விளையாட்டு உண்டோ எல்லாம் அவர் ஆடலாம்

அதற்கா ஆசைபடுகின்றீர்கள்?

போர் தொடங்க இது நேரமல்ல, அடிக்க வேண்டிய நேரம் ஒன்று உண்டு அப்பொழுது நொறுக்கலாம்

இப்பொழுது தொடங்கினால் தேர்தலும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது, மோடிக்கு என்ட் கார்டே கிடையாது

இனி எவனும் போர் தொடங்கட்டும் என பேசுவான்?

******************

காஷ்மீர் தாக்குதலை கண்டித்து பாஜகவின் நிகழ்ச்சிகள் எல்லாம் ரத்து செய்யபடுகின்றன என்கின்றது செய்திகள்

ஆனால் பாஜக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தமிழகம் வந்திருக்கின்றார் பலமான கூட்டணி அமைக்க போகின்றாராம்

ஒருவேளை இவர் பாஜகவில் இல்லையோ? அப்படி இருப்பதாக‌ பொய் சொல்லியிருப்பாரோ?

******************

அரசியல் பேச்சுக்கான நேரம் அல்ல’- புல்வாமா தாக்குதலால் முதல் பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்த பிரியங்கா

பொறுப்பு என்பது இதுதான், பக்குவம் என்பதுதான் இதுதான்

உடனே வந்து காங்கிரஸ் தலைவராக பதவிஏற்றுகொள்ளுங்கள் தாயே, பாரதம் காத்திருக்கின்றது

அதிரடி பாணி – இஸ்ரேல்

ஈரான் அணுகுண்டு செய்வதை தடுக்க இஸ்ரேல் கடும் பிரயர்த்தனத்தை 10 ஆண்டுகளாக செய்துவருவது உலகம் அறிந்தது

இஸ்ரேல் குண்டுவீசலாம் என அஞ்சிய ஈரான் அந்த அணுகுண்டு ஆலையினை பூமிக்க்கு அடி ஆழத்திலே அமைத்தது வேறுவிஷயம்

குண்டுவீசமுடியாவிட்டால் என்ன? விஞ்ஞானிகளை தூக்கிவிட்டால் வெற்று யுரேனியத்தை வைத்து ஈரான் என்ன செய்யும் என கருதிய இஸ்ரேல் மொசாத்தை களமிறக்கியது

கிட்டதட்ட 3 தலமை விஞ்ஞானிகளை ஒழித்தது இஸ்ரேல், அதெல்லாம் அதிரடி பாணி

விஞ்ஞானியின் கார் டிராபிக்கில் நிற்கும் எங்கிருந்தோ மோட்டார் சைக்கிளில் வரும் இருவர் சரியாக சிக்னல் விழும் நேரம் காந்த குண்டினை காரின் பெட்ரோல் பக்கம் ஒட்டிவிட்டு செல்வார்கள், கொஞ்ச நேரத்தில் கார் வெடிக்கும் விஞ்ஞானி காலி

இன்னும் ஒருவர் வெளிநாடு சென்றார் பிணமாக வந்தார்

இதன் பின் இன்னொருவர் பற்றி தகவல் இல்லை ஒன்று கொன்றவர் சொல்லவேண்டும் இல்லை செத்த தரப்பு சொல்லவேண்டும், இரண்டுமே மவுனம் என்றால் எப்படி?

நான்காவதாக ஒருவர் மிஞ்ஞ்சினார் அல்லவா? அவர்தான் இப்பொழுது விஷயம்

அவர் இப்பொழுது ஈரான் அணுகுண்டு தயாரிக்கின்றது என சொல்ல அமெரிக்காவில் தயாராகி கொண்டிருக்கின்றார் என்ற செய்தி கசிகின்றது

ஆம், அவரை ஈரானில் இருந்து கடத்தி துருக்கி வழியாக பிரான்ஸ் கொண்டு சென்று அங்கு ஒரு கோணிபையில் கட்டி படகில் போட்டு லண்டனில் சேர்த்துவிட்டது மொசாத்

லண்டன் அவரை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டது என்கின்றார்கள்

அவர் விடுமுறை கழிந்து வருவார் என எதிர்பார்த்த ஈரானுக்கு எங்கோ உதைத்தது , களத்தில் ஈரானின் உளவுதுறையினை இறக்கினால் விஷயம் வில்லங்கமானது புரிந்திருக்கின்றது

தங்கள் கட்டுபாட்டை மீறி ஈரானில் இருந்து அவர் கடத்தபட முடியாது என ஈரானின் புரட்சிபடையும் உளவுபடையும் அறுதியிட்டு சொல்லும்பொழுது இஸ்ரேல் தன் வழக்கமான மனநெருக்கடி கொடுக்கும் வேலையினை செய்கின்றது

ஒருவனை மனதால் குழப்பிவிடுவது அவர்களுக்கு கைவந்த வாய்வந்த கலை, பைபிள் காலமுதல் அப்படித்தான்

மனம் கலங்கிவிட்டால் மாவீரனும் வீழ்ந்துவிடுவான் அல்லவா? எந்த ஆயுதமும் அவனுக்கு பலனளிக்காது, மகாபாரதத்தில் கண்ணன் சொல்வது இதுதான்

கர்ணனை அப்படித்தான் வீழ்த்தினான், பீஷ்மரும் அப்படித்தான் வீழ்ந்தார், விதுரரும் அப்படித்தான் ஒதுங்கினார்

ஏன் துரோணரே அப்படி மனகுழப்பத்தில் இருக்கும்பொழுதுதான் கொல்லபட்டார்

இதே தந்திரம் கொண்டது இஸ்ரேல்

அணுவிஞ்ஞானி கடத்தபட்டார் என ஈரான் கவலை கொள்ள, அவர்களிடம் அந்த விஞ்ஞானியே மொசாத்தின் ஆள்தான், அவராகத்தான் மொசாத்திடம் வந்தார்

3 விஞ்ஞானிகளை கொல்ல உதவியதே அவர்தான் என ரகசியமாக விஷயத்தை கசியவிட்டிருக்கின்றது இஸ்ரேல்

இதை நம்ப முடியாமல், நம்பாலும் இருக்க முடியாமல் தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றது ஈரான்

பாருங்கள், இனி ஈரான் அணுகமிஷனில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை சந்தேகத்தோடு பார்ப்பார்கள், கடும் குழப்பம் அதிகரிக்கும் , அந்த அணுகமிஷன் இனி தளரும் ஈரானின் அணுகுண்டு கனவு கனவாகவே போகும்

இன்னொரு பக்கம் உண்மையிலே அவர் அமெரிக்காவிடம் இருக்கின்றாரா? இல்லை காணாமல் போன அவரை வைத்து இஸ்ரேல் ஏதும் ஆடுகின்றதா எனும் அடுத்த தலைவலியும் ஈரானுக்கு உண்டு

ஆம் காணாமல் போனவர் இன்னும் வாய்திறக்கவில்லை, அவர் ஈரான் அணுகுண்டு செய்கின்றது நானே சாட்சி என ஆதாரங்களை கொடுத்தால் ஒரே நிமிடத்தில் உலக நிலை மாறும்

ஆனால் அவர் இன்னும் வாய்திறக்கவில்லை

ஈரான் மிக பரபரப்பாக அந்த அறிக்கையினை எதிர்பார்க்கின்றது , ஆனால் வரவில்லை

உண்மையில் அந்த விஞ்ஞானி என்ன ஆனார் என தெரியவில்லை, மிக பெரும் துருப்புசீட்டான அவரை மொசாத் என்ன செய்தது என்று தெரியவில்லை

ஆக மொசாத் மாபெரும் காரியத்தை சாதித்துவிட்டு மகா அமைதியாக அடுத்தகட்ட நடவடிக்கையினை மகா மர்மாக செய்கின்றது என உலகம் அனுமானிக்கின்றது

சிரியா ஊடாக இஸ்ரேலின் எல்லையினை தொட்டு நின்ற ஈரான் இப்பொழுது மாபெரும் அதிர்ச்சியில் இருக்கின்றது

அடுத்த பரபரப்பான காட்சிகள் எப்பொழுதும் நடக்கலாம்

கலிலியோ

இன்றைய உலகம் அறிவியல் மயமானது, எல்லாமே அறிவியல் வித்தைகள் அதுவன்றி எதுவுமில்லை

பல்லாண்டுகாலமாக மூடநம்பிக்கையிலும் இன்னும் பல மத நம்பிக்கையிலும் இருந்த மானிட குலத்தை சிந்தனையின் பால் திருப்பிவிட்டான் சாக்ரடீஸ்

அதை அறிவியல் பக்கம் திருப்பியது டாலமியும் அரிஸ்டாட்டில் போன்றவர்கள்

டாலமி பூமி மையமானது அதை சுற்றி எல்லா கோள்களும் இயங்குகின்றன என்றார், அரிஸ்டாட்டிலோ இல்லை சூரியன் மையமானது அதை எல்லா கோள்களும் சுற்றி வருகின்றன என்றார்

இந்த சர்ச்சை ஆங்காங்கே இருந்தாலும் கிறிஸ்தவம் வந்து அது பைபிளில் கிழக்கே சூரியன் உதிக்கின்றது என சொல்லியிருப்பதால் பூமியே மையம் என சொல்லிவிட்டது அதை யாரும் மறுத்தால் அது மததுரோகம், சாய்த்துவிடுவார்கள்

நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் எனும் விஞ்ஞானி அரிஸ்டாட்டிலின் கொள்கை சரியானது என 1400களில் சொன்னார்

ஆனால் வலுவான கிறிஸ்தவம் அந்த சத்தம் வெளிவராமல் பார்த்துகொண்டது, ஒரு கட்டத்தில் பக்கவாதம் தாக்கிய கோப்பநிக்கஸ் இறந்தும் போனார், பைபிளுக்கு எதிராக பேசியதால் அவர் செத்தார் என்ற செய்தியும் பரவியதால் அவரின் கொள்கை அடக்கமானது

வழக்கம் போல் சூரியனே பூமியினை சுற்றிவருவதாக உலகம் நம்பிகொண்டிருந்தது, பைபிளை கண்களில் ஒற்றிகொண்டிருந்தது

இந்நிலையில்தான் 1500களின் இறுதியில் அவர் வந்தார்

அவர் இத்தாலிக்காரர், இந்த சாய்ந்த கோபுரம் உண்டல்லவா அந்த பைசா நகரில் பிறந்தவர் மனிதருக்கு நமது ஊர் சீனிவாச ராமானுஜம் போல கணிதமும் இயற்பியலும் அட்டகாசமாய் வந்தது

ஆனால் தந்தையோ மருத்துவம் படிக்க அனுப்பினார், அதில் வேண்டுமென்றே தோற்றுவிட்டு மறுபடியும் கணிதம் படித்தார்

கணிதத்தில் பட்டம்பெற்ற பின் போர்ச்சுகல்லின் பதுவா நகரம் (புனித அந்தோணியார் வாழ்ந்த நகரம்) சென்று அந்த பல்கலைகழகத்தில் 18 ஆண்டுகாலம் ஆசிரியராக பணியாற்றினார்

அங்குதான் அவருக்கு அறிவியல் ஆர்வம் துளிர்விட்டது, பெண்டுலம் ஆடுவதை கண்டு சில கணக்கீடுகளை செய்தார் கொஞ்சம் கொஞ்சமாக அது வளர்ந்து அவரை மாபெரும் மனிதனாக அது மாற்றிற்று

வரலாற்றில் முதல் டெலஸ்கோப் செய்து வானத்தை உற்று நோக்கிய முதல் நபர் அவரே

கப்பல்களில் பயன்பட்ட சிறிய டெலஸ்கோப்களை பயன்படுத்தி அந்த மாபெரும் கருவியினை உருவாக்கினார்

அதில்தான் நிலவினை கண்டார், வியாழனை கண்டார் அதன் நிலவுகளை கண்டார் இன்னும் என்னவெல்லாமோ கண்டார்

ஒரு கட்டத்தில் உண்மையினை உரக்க சொன்னார், சூரியனும் நட்சத்திரங்களும் பூமியினை சுற்றிவரவில்லை பூமிதான் சூரியனை சுற்றிவருகின்றது

நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸின் ஆன்மா அவரில் இறங்கியது, கோப்பர்நிக்கஸ் சொன்னதெல்லாம் உண்மை என நிரூபித்தார்

விடுமா கத்தோலிக்க உலகம்?

அவர் வாழ்ந்த பகுதி பிரிட்டன், ஜெர்மன் என்றிருந்தால் சிக்கல் இல்லை ஆனால் இத்தாலி பிரான்ஸ் போர்ச்சுக்கல் எல்லாம் போப்பாண்டவரின் கட்டுபாட்டு பகுதிகள், பைபிளே பிரதானம், போப்பே சகலமும்

திமுகவில் ஒருவன் உண்மை திராவிடம் பேசமுடியுமா? காங்கிரஸில் நாட்டுபற்றாக ஒன்றை சொல்லமுடியுமா? இல்லை நல்ல இந்து கொள்கையினை பாஜகவில்தான் சொல்லமுடியுமா?

முடியாது எல்லாம் அரசியல்

இதே அரசியல் அன்று ரோமிலும் இருந்தது, “நீ கத்தோலிக்க கிறிஸ்தவனா? போப்பை தயக்கமின்றி ஏற்றுகொள்..” இல்லாவிட்டால் கிறிஸ்துவிரோதி வாழதகுதியறவன்

கலிலியோவினை ரோமை சபை விடவில்லை, அதுவும் போப் எட்டாம் அர்பன் என்பவர் சங்கிலி போட்டு இழுத்து வர சொன்னார்

எவ்வளவோ மேடைகளில் கூட்டங்களில் பூமி சூரியனை சுற்றுகின்றது எல்லா கோள்களும் அப்படியே சுற்றுகின்றது என உரக்க சொன்ன அந்த மேதை அங்கு விலங்கிடபட்டிருந்தார்

‘தி டயலாக் ஆஃப் தி டூ பிரின்சிபல் சிஸ்டம் ஆஃப் தி வேர்ல்டு’ என்ற இயற்பியலுக்கான பைபிளை எழுதிய அந்த விஞ்ஞானி பைபிள் கும்பல் முன் கைதியாக நின்றிருந்தார்

தெர்மாஸ்கோப், ஹைட்ரோஸ்டாடிக் பாலன்ஸ், தெர்மா மீட்டர், டெலஸ்கோப் என மாபெரும் கண்டுபிடிப்புகளை கொடுத்த அவருக்கு விலங்கு எனும் அரசனின் கருவி மாட்டபட்டிருந்தது

அவரை கடுமையாக மிரட்டினார்கள், கொலை செய்வதாக கூட மிரட்டினார்கள்

75 வயது முதியவர் என பார்க்காமல் போப் அர்பனின் அட்டகாசம் அதிகமாக இருந்தது

பூமி மேல் கதிரவனும் நிலவும் எழுந்தருளுமாறு கடவுள் படைத்தார் என்பதை மறுத்து, பூமியும் நிலவும் சூரியனை சுற்றுகின்றது என சொல்வது மதவிரோதம் என அவர்மேல் குற்றம்சாட்டபட்டது

மரணதண்டனை என மிரட்டபட்டார் கலிலியோ

75 வயது முதியவருக்கு வேறு வழிதெரியவில்லை “நான் சொன்னது எல்லாம் பொய், பைபிள் சொன்னதுதான் உண்மை , பொய் சொன்னதற்கு மன்னிப்பு கோருகின்றேன்” என மனமொடிந்து சொன்னார் கலிலியோ

“அப்படியே பாவமன்னிப்பும் வாங்கிவிட்டு போ.” என சொல்லி அவருக்கு பாவமன்னிப்பும் கொடுத்தார் போப்

மாபெரும் கண்டுபிடிப்பினை சொன்ன அந்த கலிலியோ “பூமி உருண்டையாது அது தன்னை சுற்றி சூரியனையும் சுற்றுகின்றது” என புலம்பியபடியே ரோம் நகரின் தெருக்களில் தள்ளாடி நடந்தான்

அவர் விளம்பரத்திற்காக பொய் சொல்லியிருக்கின்றார், போப்பாண்டவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார் என்பதோடு கலிலியோவின் பேச்சு ஐரோப்பாவில் அடங்கியது

அந்த மாபெரும் விஞ்ஞானி மோசடிக்காரன் என பழிக்கபட்டார், அப்படியே இறந்தும் போனார்

காலம் கடந்தது, நியூட்டன் போன்றோர் உலகை அதிரவைத்தனர் பல பல கண்டுபிடிப்புகள் வந்தன, கலிலியோவின் டெலஸ்கோப் பல மாதிரி மாற்றபட்டு பல உண்மைகளை சொன்னது

நெப்போலியன் அடித்த அடியில் போப்பாண்டவர் தமிழக காங்கிரஸ் போல் சுருங்கியே போனார், அதிகாரமில்லை

பல்வேறு கப்பல் பயணமும் விமான பயணமும் உலகம் உருண்டை என சொன்னது

ஒரு காலத்தில் அனுமானமாக சொல்லபட்ட விஷயங்கள் மனிதன் செயற்கைகோளில் ஏறி வான் சென்று பார்த்ததும் ஆதார பூர்வமாக நிரூபிக்கபட்டது

ஆம் கலிலியோ சொன்னதெல்லாம் உண்மை என்றானது, அவனின் புத்தகங்களும் தியரிகளும் விஞ்ஞான உலக பைபிளின் பக்களானது

நவீன இயற்பியல், நவீன அறிவியலின் தந்தை என கலிலியோ கொண்டாபட ஆரம்பித்தார்

ரோம் ஆலயத்தில் அவமானபடுத்தபட்ட அவருக்காக நினைவாலயங்கள் எல்லாம் எழும்பின, அவரின் பொருட்களும் புத்தகங்களும் அங்கு காக்கபட்டன, முக்கியமாக அந்த தொலைநோக்கி அங்கு நிறுவபட்டது

எந்த கத்தோலிக்க பைபிள் முன்னால் நான் சொன்னதெல்லாம் பொய் என சொல்லிவிட்டு கலிலியோ அழுதாரோ, அதே கத்தோலிக்க உலகம் தன் தவறுகளை உணர்ந்தது

1990களில் திருந்தந்தை ஜாண்பால், ஆம் தன்னை சுட்டவனை கூட மன்னித்தாரே அந்த பெருமகனார் கலிலியோ பற்றி வாய்திறந்தார்

350 ஆண்டுகாலமாக திருச்சபை காத்த அமைதியினை அவர் உடைத்தார்

“கலிலியோவிற்கு திருச்சபை அநீதி செய்தது, அவரின் அறிவாற்றல் முன்னால் தன் நம்பிக்கையின் கண்களை அது கொடூரமாக காட்டிற்று அதற்கு மன்னிப்பு கோருகின்றேன்” என பகிரங்கமாக சொன்னார்

ஆம் 350 வருடங்களுக்கு முன்பு ரோம் வீதிகளில் “நான் சொன்னதெல்லாம் உண்மை, ஒரு காலத்தில் என்னை புரிந்து கொள்வீர்கள்” என தனியே புலம்பியபடியே அழுது சென்ற கலிலியோவின் ஆன்மா அன்று சாந்தமானது

கூடவே கோப்பர்நிக்கஸின் ஆத்மாவும் அமைதியானது, கலிலியோவினையாவது அழைத்து கேட்டார்கள், கோப்பர்நிக்கஸை கண்டுகொள்மாலமே அவமானபடுத்தினார்கள்.

மகா அற்புத கண்டுபிடிப்பினை உலகிற்கு சொல்லி மதத்தாலும் அதன் சமூக கட்டுபாடுகளாலும் பைத்தியகாரன் என பட்டம் சூட்டபட்டு செத்த பரிதாபத்திற்குரியவன் அவன்

கிட்டதட்ட நமது ஊர் பாரதிக்கும், சீனிவாச ராமானுஜனுக்கும் அதே சாயல் உண்டு

மாபெரும் தகுதி பெற்றவர்கள் அறிவாளிகள் வாழும் பொழுது தூற்றபடுவதும் பின்பு உண்மை அறிந்து அவர்கள் இல்லா காலத்தில் அவரை வணங்குவதும் உலக நியதி

உலகின் மகா கொடுமையான நியதி இது, இன்று அந்த கலிலியோவின் பிறந்த நாள்

இந்த விஞ்ஞான உலகிற்கு மாபெரும் திருப்புமுனை கொடுத்த இயற்பியல், கணிதம், வானவியல் என பல துறைகளின் பிதாமகனான அந்த கலிலியோவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

அஞ்சலி போதுமே

நாடு இருந்தால்தான் இங்கு ஆரியம் திராவிடம் தலித்தியம் பெரியாரியம் அம்பேத்காரியம் வெங்காயம் ஆதிதமிழரியம் , இட ஒதுக்கீடு தட ஒதுக்கீடு இன்னும் ஏகபட்ட இம்சைகள் எல்லாம் பேசமுடியும்

உண்மையில் இம்மாதிரி இம்சைகளுக்கு வாழ்வு அளித்துகொண்டிருப்பது இந்தியா எனும் மாபெரும் நாடே

ஒருவேளை இவர்கள் நினைத்தது போல தனி திராவிட நாடோ தனி தமிழ்நாடோ, தனி தலித்நாடோ கிடைத்தால் என்னாகும்?

ஒன்றும் ஆகாது இவர்கள் அரசியல் செய்ய ஒன்றுமே இருக்காது, தலைவெடித்து செத்துவிடுவார்கள்

தலை என்ன? இதோ காஷ்மீரில் நிகழ்ந்தது போல அனுதினமும் அவர்கள் நாட்டிலும் நடக்கும், ஏகபட்ட தொல்லைகள் வரும்

கொள்கை புடலங்காய் எல்லாம் வேறு, யதார்த்தம் வேறு

அதனால் இந்தியா எனும் மாபெரும் நாடே நீங்கள் ஏராளமான அரசியல் செய்ய வாய்பளித்திருக்கின்றது, அது இல்லை என்றால் உங்களுக்கு பிழைப்பே இல்லை

மனசாட்சியினை ஆழ கேட்டுபாருங்கள் உண்மை விளங்கும்

ஏ இந்திய தேசியமே ஏ தமிழர் விரோத தலித் விரோத இன்னும் ஏகபட்ட விரோதங்களை சொல்லி உங்களால் பிழைப்பு நடத்த முடிகின்றது

இன்னொரு நாடென்றால் சாத்தியமா? ஏன் தனிநாடானாலும் சாத்தியமா? சத்தியமாக இல்லை

இந்தியா என்றொரு நாடு இருப்பதால் உங்களால் ஆயிரம் கேள்விகளை கேட்டு அரசியல் செய்யமுடிகின்றது,

அதுஇல்லாவிடில் எங்கே சென்று கேட்பீர்கள்? எப்படி பிழைப்பீர்கள்?

சீனனிடமோ, பாகிஸ்தானியிடமோ ஏன் ஒருவேளை அமெரிக்காவே ஆளவந்தாலும் ஒரு வார்த்தை பேசமுடியும்? தூக்கி போட்டு மிதித்தே கொல்வார்கள்

பாகிஸ்தானில் இருந்து பிரிந்தால் கிழித்துவிடுமோம் என்ற வங்க தேசம் இன்று உலகின் தரித்திர தேசங்களில் ஒன்றாயிற்று

ஆம் ஒரு எதிரி இருக்கும் வரைதான் பிழைக்க முடியும், நீங்கள் இந்திய தேசியம் இருக்கும்வரைதான் அதை குறை சொல்லி நீங்கள் வாழமுடியும்

இல்லாவிடில் நீரில்லா மீன் போல் ஆகிவிடுவீர்கள்

இந்தியா இல்லாவிட்டால் என்ன பேசுவீர்கள்? என்ன அரசியல் செய்து கிழிப்பீர்கள்?

அதனால் அந்த மாபெரும் இந்தியாவிற்காக உயிர்விட்டு அதைகாத்து அப்படியே உங்கள் பிழைப்பையும் காக்க உயிர்விட்டிருக்கும் அந்த உத்தமர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அமைதியாய் இருங்கள்

இல்லாவிடில் உங்களுக்கும் அந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்திற்கும் என்ன வித்தியாசம்?

அவசியமா?

காஷ்மீர் தாக்குதலுக்கு நிர்மலா சீத்தாராமன் பதவி விலக வேண்டும் என சில அரைவேக்காடுகள் பேசிகொண்டிருக்கின்றன‌

சரி அவரை பதவி விலகிவிட்டு யாரை அமர்த்த வேண்டும் என்றால் முக ஸ்டாலினை என்பார்கள

1999ல் வாஜ்பாய் அமைச்சரவையில் திமுகவும் இருந்தது, காந்தகார் விமான கடத்தல் முதல் கார்கில் போர் வரை அப்பொழுதுதான் நடந்தது

அப்பொழுதெல்லாம் ஒரு திமுகவினர் அந்த வாஜ்பாய் அரசை குற்றம் சொல்லவில்லை

காரணம் இவர்கள் அந்த அமைச்சரவையில் இருந்தார்கள் அதனால் நாட்டுபற்று நிரம்ப வழிந்து “ஒற்றுமையே பலம், அரசை விமர்சிக்க இது நேரமில்லை” என் நாட்டுபற்றோடு திரிந்தார்கள்

2008 மும்பை தாக்குதல் மத்திய அரசின் தோல்வி என எல்லோரும் சொன்னபொழுது இல்லை “இது அரசை விமர்சிக்க வேண்டிய நேரமில்லை, இது நாட்டுபற்றோடு ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம்” என்றார்கள்

ஆம் அப்பொழுதும் மன்மோகன்சிங் அமைச்சரவையில் திமுக இருந்தது, ஒரு பயலும் அப்பொழுது அரசை குறை சொல்லவில்லை

ஆக திமுகவினருக்கு நாட்டுபற்று நிரம்பியிருக்க அவர்களை பதவியிலே வைத்திருக்க வேண்டும் போலிருக்கின்றது

கருப்பு நாள் 14/02/2019

கோவையில் கொடூர இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லபட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்திகொண்டிருக்கும் போதே
காஷ்மீரில் அதே பாகிஸ்தானிய கொடூர இஸ்லாமிய தீவிரவாதிகளால் நம் வீரர்கள் கொல்லபட்டிருக்கின்றார்கள்

இந்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உருவாக்கமான ஜெய்ஷ் இ முகமட் எனும் தீவிரவாத அமைப்புக்கும் இந்தியாவுக்கும் கடுமையான மோதல் எப்பொழுதும் உண்டு

1994ல் அதன் தலைவனான மசூத் அசாரை பிடித்து சிறையில் இட்டது இந்தியா, அதன் பின் கொஞ்சகாலம் அடங்கி இருந்தார்கள்

வாஜ்பாய் காலத்தில் அவர்களாலும் அவர்களின் சகல பாடிகளான லஷ்கர் போன்ற இயக்கங்களாலும் கார்கில் போரே நடந்தது

அதில் வால் நறுக்கபட்ட அந்த கொடூர இயக்கம் அதன்பின் 1999ல் காந்தகாருக்கு ஏர் இந்தியாவின் விமானத்தை கடத்தி பணயகைதிகளை பிடித்து மிரட்டி அந்த மசூத் அசாரை நம்மிடம் இருந்து பெற்றுகொண்டது

அன்றெல்லாம் இந்திய பிடி ஆப்கனில் இல்லை, அது பின்லேடன் கோட்டையாக இருந்தது. இன்று ஏன் இந்தியா அங்கு கொட்டி கொடுக்கின்றது என்றால் இம்மாதிரி பழைய பெரும் வலிகள் எல்லாம் உண்டு

விடுவிக்கபட்ட மசூத் அசார் ஓயவில்லை மறுபடி மறுபடி இந்தியா மேல் தாக்குதல் தொடுத்துகொண்டே இருந்தான், பாராளுமன்ற தாக்குதலில் அவனின் ரகசிய கரங்கள் இருந்தன‌

பின்பு மும்பை தாக்குதலில் லஷ்கர் இயக்க பெயர் அடிபட்டது

பதான் கோட் தாக்குதலுக்கு சூத்திரதாரி இவனே

அவன் எங்கிருக்கின்றான் என்றால் பாகிஸ்தானிலும் அதன் காஷ்மீரிலுமே இருப்பான், அடிக்கடி பகிரங்கமாகவும் தோன்றுவான் ஆனால் அவன் இல்லை என பாகிஸ்தானும் சொல்லும், உலக வல்லரசுகளும் அதை கண்டுகொள்ளாது

இது உலக அரசியல், பின்லேடனுக்கு ஒரு நீதி மசூத் அசாருக்கு ஒரு நீதி

அந்த மாபாதாகனின் திட்டம் நேற்றும் பலித்திருக்கின்றது, காஷ்மீரில் நடந்த கொடூர கோழைதனமான தாக்குதலில் அருமை வீரர்கள் 45 வீரர்கள் கொல்லபட்டிருகின்றார்கள்

இந்த தாக்குதல் ஹமாஸ் பாணி தாக்குதல் மிக துல்லியமாக ராணுவ வீரர்களை மட்டும் தாக்குவது, தீவிரவாதிகள் தங்கள் திட்டத்தை மாற்றி இருப்பது தெரிகின்றது, பதான் கோட்டும் இதே சாயலே

இந்த வகை தாக்குதல் புதிது, இஸ்ரேலுடனான இந்திய நெருக்கத்தை விரும்பா பல சக்திகள் ஒன்றிணைந்து எச்சரிக்கை செய்திருப்பது போலவே தோன்றுகின்றது

இஸ்ரேலுக்கு விழும் அடியின் அதே சாயலில் அடித்திருக்கின்றார்கள்

உலகம் இந்த நாசகார செயலை கண்டிக்கின்றது , இந்தியாவிற்கு ஆதரவு பெருகுகின்றது

2008க்கு பின் இரும்பு வேலி போடபட்டிருந்த இந்தியாவில் அதுவும் மோடி வந்தபின் பெரும் அசம்பாவிதங்கள் நடக்காத காஷ்மீரில் இப்பொழுது கருப்புநாளாக விடிந்திருக்கின்றது

“100 முறை என் திட்டம் தோற்கலாம், நீங்கள் முறியடிக்கலாம் ஆனால் ஒருமுறை என் திட்டம் நிறைவேற 1000 முறை முயற்சிப்பேன்” எனும் தீவிரவாத தத்துவம் நிறைவேறியிருக்கின்றது

நாட்டுக்காக ஏராளமானோர் உயிர்நீத்த இந்தியாவில் இந்த 45 தியாக வீரர்களும் சேர்ந்து கொண்டார்கள் அவர்களுக்கு அஞ்சலிகள்

ஆனால் அந்த கொடூரதீவிரவாத இயக்கத்திற்கு இந்தியா சொல்லிகொள்வதெல்லாம் கடைசி இந்தியன் இருக்கும் வரை ஒருபிடி இந்திய‌ மண்ணை கூட உங்களால் தொடமுடியாது

45 உயிர்களுக்கு பதிலாக ஆயிரகணக்கான உயிர்களை நீங்கள் கொடுக்கும் காலம் வரும் என அவர்கள் ரத்தத்தின் சாட்சியாக சபதமேற்கின்றோம்

எம்தேசம் 45 வீரர்களுக்கு அழுகின்றது , அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலும் இரங்கலும் தெரிவித்து அவர்களுக்கு இத்தேசமே உடனிருக்கும் என உறுதி கொடுக்கின்றது

200 கிலோ வெடிபொருளை வெடித்தவன் தான் ஜெய்ஸ் இ முகமட் உறுப்பினர் என ஆதாரத்தை பதிவு செய்துவிட்டு செத்திருக்கின்றான்

அந்த இயக்க தலைவன் பாகிஸ்தானிலேதான் இருக்கின்றான்

சர்வதேசம் இதற்கான நீதியினை சொல்லட்டும்

அவர்கள் ஒருபக்கம் சொல்லட்டும், இந்திய நீதிஎன்றால் என என்பது விரைவில் தெரியும்

வட எல்லையில் நடந்துவிட்ட பெரும் கொடூரத்திற்காக தென் எல்லை துடிக்கட்டும்

தமிழகத்தில் மானமுள்ள இந்தியர்கள் இருந்தால், மனசாட்சியுள்ள இந்தியர்கள் இருந்தால் இன்று வீதியெங்கும் அஞ்சலி செலுத்தட்டும்

ஒரு காசு பெறாத நடிகனுக்கும் நடிகைக்கும் என்னவெல்லாமோ செய்யும் மட தமிழ் சமுதாயம் இந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தட்டும்

சட்டசபை முதல் கன்னியாகுமரி கடல் வரை அஞ்சலிகள் பெருகட்டும், நாட்டுபற்று ஓங்கட்டும்

மெரினாவில் மாபெரும் கூட்டம் கூடி இந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தட்டும், அது தமிழகத்தாரின் கடமையும் கூட‌

தமிழக நகர்களெங்கும், வீடுகளெங்கும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தட்டும்

( கருப்புகொடி பைத்தியங்கள் முடிந்தால் இப்பொழுது மசூத் அசாரை பாதுகாக்கும் பாகிஸ்தான் தூதரகம் முன்பு காட்டட்டும், தேசவிரோதிகள் அதை பாரத பிரதமருக்கு செய்வார்களே அன்றி அடுத்த எதிரி நாட்டுக்கு செய்யவே மாட்டார்கள்.)

இந்தியாவின் வீதிகள் எல்லாம் இன்று மக்களின் கண்ணீரால் ஆறுகளாக ஓடுகின்றன‌

கொல்லபட்டவர்களில் தூத்துகுடி வீர இந்தியனும் ஒருவர் என்கின்றது செய்திகள்

அந்த மாவீரனுக்கு வீரவணக்கம், மாவீரன் கட்டபொம்மனின் தியாகத்திற்கு இணையான தியாகம் இது

தங்களின் இரத்தைத்தை அன்னை பூமிக்காக சிந்தியிருக்கும் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

45 வீரர்களின் ரத்தத்தில் 45 கோடி இந்தியர்கள் வருவார்கள் பகை முடிப்பார்கள், அதில் மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமட் இயக்கம் நிச்சயம் அழிந்தே போகும்

வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்