காக்னிசென்ட் – லஞ்சம்

காக்னிசென்ட் எனப்படும் அமெரிக்க நிறுவணம் சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் சென்னையில் கட்டபட்ட கட்டங்களுக்கு தடையில்லா சான்றிதழ் பெற லஞ்சம் கொடுத்திருக்கின்றதாம்

விஷயம் அமெரிக்க நீதிமன்றத்தில் பற்றி எரிகின்றது, தமிழகத்தில் முறைகேடில் ஈடுபட்டது என அமெரிக்காவில் விவகாரம் விஸ்வரூபமாகின்றது

இதுதான் வாய்ப்பு விட கூடாது என திமுக வரிந்து கட்டுகின்றது, பெரும் ஆதாரங்களோடு களத்திற்கு வருகின்றார் ஸ்டாலின்

ஆனால் அதே விஷயம் இவர்கள் பக்கம் திரும்பும் என்பதை ஏனோ மறக்கின்றார்

ஆம் இந்த சர்ச்சை நடந்தது 2012 முதல் 2014ம் ஆண்டுகளில் என்கின்றது ஆவணங்கள்

அப்பொழுது இந்திய பிரதமர் யார்? மன்மோகன் சிங் அவர் அமைச்சரவையில் அங்கம் வகித்த கட்சி எது திமுக‌

இவ்விஷயம் உலக அரங்கில் அதிமுகவின் ஆட்சி என அறியபடவே இல்லை, அவர்களை பொறுத்தவரை அதிமுக என்பது மிக சிறிய மாநில கட்சி

இந்தியாவினை அப்பொழுது ஆண்டது மன்மோகன் சிங்கும் அவரின் திமுக கூட்டணியுமே

உலகம் அப்படித்தான் நோக்கும்

இன்று அதிமுக காக்னிசென்ட் ஊழல் என திமுக கொடிபிடிக்க, உலகமோ மன்மோகனின் ஆட்சி கால இந்தியாவில் கான்னிசென்ட் முறைகேடு செய்துள்ளது என்றுதான் சொல்லிகொண்டிருக்கின்றது

ஒரு மாபெரும் அமெரிக்க நிறுவணம் பாரத பிரதமருக்கு தெரியாமலா சென்னையில் லஞ்சம் கொடுத்தார்கள்? அது சாத்தியமா? என்றெல்லாம் எதிர்குரல்கள் வருகின்றன‌

மன்மோகன் ஆட்சியில் யார் கூட்டணி சாட்சாத் திமுக‌

காக்னிசென்ட் என்ற மிகபெரும் நிறுவணம் ஏன் மத்திய அரசின் உதவி பெறாமல் மாநில அரசுக்கு அள்ளி கொடுத்திருக்கின்றது

ஒருவேளை அவர்கள் அதிகம் கேட்டிருப்பார்களோ? அதை இனி அமெரிக்க கோர்ட்தான் நமக்கு சொல்லும்

முன்பெல்லாம் புயல், சுனாமி, பயங்கரவாத தகவல் என சொல்லிகொண்டிருந்த நாடு அமெரிக்கா, இப்பொழுது ஊழல் செய்திகளையும் சொல்ல தொடங்கியிருக்கின்றது, நல்ல முன்னேற்றம்

இன்றைய துளிகள் தொடர்ச்சி …

என்ன ரஜினி, தேர்தலுக்கு வரலைன்னு சொல்லிட்டீங்க?

கமல், நமக்கு என்ன அசைன்மென்ட் கொடுத்திருகாங்க, ஒண்ணு பாஜக பக்கம் போகணும் இல்ல அவங்களுக்கு ஆதரவா வோட்ட பிரிக்கணும்

ஆமா ரஜினி அதுக்குத்தான் இவ்வளவுபாடு

கமல், பாஜக மேல தமிழ்நாட்டு மக்களுக்கு அவ்வளவு நல்ல அபிப்ராயமில்ல, இப்போ நானும் அவங்க கூட நின்னா அவ்வளவுதான், அடிச்சி அண்டர்வியரோடு விட்டிருவாங்க மானம் போனா திரும்ப வராது

அப்போ போர்களத்துக்கு வரவே மாட்டீங்ளா ரஜினி? அண்டர்வியர் மேல அவ்வளவு பயமா?

வெற்றி எங்கே இருக்க்கோ அங்கே சேரணும் இல்லாட்டி அமைதியா இருக்கணும், அதுதான் நம்ம இமேஜ் காப்பாத்திக்க நல்லது

அப்படின்னா என்னை அண்டர்வியரோடு அனுப்ப போறாங்களா ரஜினி?

அட உங்களுக்கென்ன கமல், ஏற்கனவே பல படங்கள்ல அப்படித்தானே வந்திருக்கீங்க, அரசியலிலும் அப்படித்தான் வரப்போறீங்க, நோ வொர்ரி அந்த அவமானம் உங்கள பாதிக்காது”

*****

பிராமணன் இந்திய ராணுவத்தில் உண்டா, அவன் நாட்டுக்காக செத்தானா என ஏகபட்ட திராவிட கும்பல்கள் கேட்டுகொண்டே இருக்கின்றன‌

பிராமண இனம் தமிழகத்தில் அய்யர், தெலுங்கில் அய்யங்கார், கேரளாவில் நம்பூதிரி, வடக்கே சாஸ்திரி, ஷர்மா வங்கத்தில் சாட்டர்ஜி, பானர்ஜி, காஷ்மீரில் பண்டிட் என பல பெயர்களில் அழைக்கபடுகின்றது

இதை நாம் மட்டும் சொல்லவில்லை, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரே பல இடங்களில் சொல்லியிருக்கின்றார்

“பார்ப்பான் ஒவ்வொரு இடத்திலியும் ஒவ்வொரு பெயரில அதிகாரம் செய்றானுங்க, பேருதான் வேறங்க ஆனா எல்லா பயலும் பார்பானுங்கங்க” என பல மேடைகளில் சொல்லி பல ஏடுகளில் எழுதியவர் பெரியார் அதில் உண்மையும் உண்டு

இந்தியாவில் தளபதிகள் முதல் பல பதவிகளில் பிராமணர் இருந்தனர், ஏன் உளவுதுறை உருவாக்கபட்டபொழுது அதன் தலைவரும் மிக சிறந்த உளவாளிகளும் பிராமணராகவே இருந்தனர்

இந்தியாவின் முதல் “பரம்வீர் சக்ரா” எனும் ராணுவத்திற்கான விருதினை பெற்றவர் சோம்நாத் ஷர்மா எனும் பிராமணர்

ஒவ்வொரு யுத்தத்திலும் செத்த ஏகபட்ட பிராமண ராணுவ வீரர்கள் உண்டு

அவ்வளவு ஏன் 3 நாட்களுக்கு முன்பு புல்வமா தாக்குதலில் கொல்லபட்ட பங்கஜ் திரிபாதி, மகேஷ் சர்மா, குமார் ராவட் என்ற மூன்று பேரும் பிராமண சமூகம் என்கின்றது செய்தி

பிராமணர் என்றால் தமிழ்நாட்டு கோவிலில் மணியடிக்கும் அய்யர், சங்கராச்சாரி , எஸ் வீ சேகர், எச்.ராசா, குருமூர்த்தி மட்டுமே என இவர்களாக முடிவு செய்து ஏதாவது பேசிகொண்டிருப்பது

அதெல்லாம் இருக்கட்டும், சுதந்திர போராட்ட வீரன் என ஒரு திக காரனை காட்டிவிடுங்கள், ஒரு கருப்புசட்டைகாரனை காட்டிவிடுங்கள் பார்க்கலாம்

அட அவ்வளவு ஏன்? நாட்டுக்காக செத்த ஒரு திக, திமுக உறுப்பினரை காட்டுங்கள் பார்க்கலாம்

திகவும் திமுகவும் செய்தது என்ன?

இலங்கையில் இந்நாட்டு ராணுவத்தினை கொன்று குவித்த புலிகளை ரகசியமாக தமிழகத்திற்கு வரவழைத்து காயத்திற்கு மருந்து போட்ட மிக பெரிய சேவை என்பதை தவிர, அந்த தேசதுரோகத்தினை தவிர ஒன்றுமே இல்லை

இந்தியா பதிலடி தொடக்கம்

புல்வாமாவில் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடக்கின்றது, இந்திய பதிலடி தொடங்கியாயிற்று

சண்டையில் இந்திய வீரர்கள் 4 பேர் சுட்டுகொலை என செய்திகள் வருகின்றன, அப்படியே தீவிரவாதிகளின் கமாண்டரும் கொல்லபட்டிருக்கின்றார்

காஷ்மீரில் இருந்து வரும் சில செய்திகள், அதாவது உலக மீடியாக்களுக்கு கிடைக்க பெறும் செய்திகள் பாஜக கும்பலுக்கு ஆதரவாக இல்லை

காஷ்மீரில் தீவிரவாதம் மோடி ஆட்சியில் ஒடுக்கபட்டுவிட்டது என மார்தட்டவும், காஷ்மீரின் சில பகுதிகள் தீவிரவாதத்தில் இருந்துவிடுபட்டது இது மோடியின் சாதனை என சொல்ல துடியாய் துடித்திருக்கின்றார்கள்

இந்த புலவாமா பகுதி ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் கோட்டையாய் இருந்திருக்கின்றது, 2017 டிசம்பரில் அதன் கமாண்டர் நூர் என்பவரை இந்திய ராணுவம் கொன்றிருகின்றது

அவர் மகா முக்கியமானவர் என்பதால் கொஞ்ச காலம் தீவிரவாதிகள் பின் வாங்கி அமைதி காத்திருக்கின்றார்கள்

ஆனால் விளம்பர அவசியத்திலும் தேர்தல் நெருங்குவதாலும் காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியில் அமைதி என ஏகபட்ட கணக்குகளோடு எதற்கோ அவசரபட்டிருகின்றார்கள்

புலவாமா தீவிரமாதமற்ற பகுதி என அறிவிக்கபடும் நேரம் நெருங்கியும் இருக்கின்றது

ஆனால் பதுங்கிய தீவிரவாதிகள் 2017ல் தங்கள் கமாண்டருக்கு பழிவாங்கும் விதமாகவும், தாங்கள் புலவாமாவில் வலுவாக இருக்கின்றோம் என காட்டவும் மிக துல்லியமாக அடித்திருக்கின்றார்கள்

கூட்டி கழித்து பார்த்தால் வெற்று விளம்பரத்திற்கு கொடுக்கபட்ட விலையாக கூட இருக்கலாம்

ஆம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்பதை அடித்த நாடு ஒரு காலமும் சொல்லாது, உக்ரைன் பக்கம் ரஷ்யா, பாலஸ்தீனில் சிரியாவில் இஸ்ரேல், ஆங்காங்கே அமெரிக்கா என எல்லா நாடுகளும் செய்ய கூடிய விஷயம் அது

அடிபட்டவர்கள் சொல்லித்தான் விஷயமே தெரியும் அதுவும் திருடனுக்கு தேள் கொட்டியது போல சில இயக்கமும் நாடுகளும் சொல்லாமலே இருக்கும்

உதாணம் சிரியா

ஆம் எங்கள் நாட்டில் தீவிரவாத முகாம் இருந்தது, அதை எதிரிநாடு அடித்தது என எந்த நாட்டாலும் சொல்லமுடியாது , ராஜதந்திர அடி அது

அடித்த நாடும் சொல்லாது சொன்னால் எல்லை கடந்த அனுமதி இல்லா தாக்குதலாகும்

சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை அரசியல் காரணத்திற்காய் வெளி சொன்னது மாபெரும் தவறு, வேர் பாகிஸ்தானில் இருக்க இங்கு கிளை கமாண்டரை கொன்றுவிட்டு தீவிரவாதம் ஒழிந்தது என கொக்கரித்தது இரண்டாம் தவறு

உலகிலே சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கினை அதாவது சொல்ல கூடா விஷயங்களை பெரும் சாதனை போல் சொல்லி வாங்கி கட்டி கொண்ட ஒரே அரசு பாஜக அரசுதான்

காஷ்மீரில் ஏன் பொது வாக்கெடுப்பு நடத்தவில்லை? – கமல்ஹாசன்

காஷ்மீரில் ஏன் பொது வாக்கெடுப்பு நடத்தவில்லை? இந்திய அரசு எதற்கு பயப்படுகிறது? – கமல்ஹாசன் கேள்வி

மகா மட்டமான அரசியல் அறிதல் துளியுமில்லா , மடத்தனமான அரசியல்வாதி என கமலஹாசன் நிரூபித்துவிட்டார்

இதைவிட ஒரு பெரும் முட்டாள் அரசியல்வாதி யாரும் இருக்க முடியாது , அங்கிள் சைமன் கூட இருக்க முடியாது

எங்கே பொதுவாக்கு எடுத்தால் குஜராத்தின் ஜுனாகத் போல இஸ்லாமிய மக்கள் இந்தியா பக்கம் சென்றுவிடுவார்களோ என அஞ்சி போர்தொடுத்த நாடு பாகிஸ்தான்

இந்தியா அல்ல .

இந்தியா முறையாக ஹரிசிங்கின் கோரிக்கைக்கு பின்பே களமிறங்கிற்று

காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானிடம் இருக்க, சிறுபகுதி அக்ச்சாய் சின் என சீனாவிடம் இருக்க, இந்தியாவில் இருக்கும் காஷ்மீரில் மட்டும் எப்படி பொதுவாக்கெடுப்பு நடத்த முடியும்?

1949ல் உலகம் இந்தியாவினை நிர்பந்தித்தபொழுது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேறாமல் எதுவும் சொல்வதற்கில்லை என்ற இந்திய நிலைப்பாடு இன்றுவரை தொடர்கின்றது

பாகிஸ்தானும் சீனாவும் காஷ்மீரை அப்படியே வைத்துகொள்ளுமாம், இந்தியா மட்டும் வாக்கெடுக்க வேண்டுமாம்

மிக பெரும் பைத்தியகாரதனமான இந்த உளறலை பொறுத்துகொள்ள நல்ல இந்தியனால் முடியாது

கமலஹாசனுக்கு ஸ்ருமதி ராணி கேட்ட கேள்விதான் சரி

மனிதருக்கு கொஞ்சமும் அரசியல் ஞானமில்லை, அறிவுமில்லை

இந்த மனிதர் கொஞ்சமும் அரசியலுக்கு லாயக்கற்றவர், கமலஹாசன் ஏதும் நாட்டுக்கு செய்வதாக இருந்தால் அரசியலைவிட்டு வெளியேறுதல் நலம்

ஓய்வில்லா உழைப்பு

என்னதான் சர்ச்சை என்றாலும் சில நியாயங்களை சொல்லியாக வேண்டும்

அண்ணாவும் கலைஞரும் அந்நாளைய திமுகவினரும் கட்டை வண்டி ஏறி, கால் தேய தேய கிராமங்கள் எல்லாம் நடந்து கட்சி வளர்த்தனர்

திமுக வேகமாக வளர அவர்களின் ஓய்வில்லா உழைப்பே காரணம்

இன்றுபோல் அன்று ஊடகமோ இல்லை போக்குவரத்து வசதியோ இல்லை, கற்சாலைகளிலும் ஒற்றையடி பாதைகளிலும் அவர்கள் ஓடி ஓடி கட்சி வளர்த்தனர்

அதனால் உறுதியாக சொல்லலாம் கிராமங்களுக்கு செல்வதோ இல்லை அங்கு சென்று கூட்டம் நடத்துவதோ அவர்களுக்கு புதிதல்ல‌

ஆதியில் பெரியார் செய்தார் அதன்பின் அண்ணா செய்தார், கலைஞர் செய்தார் அதைத்தான் இன்றைய தலமையும் செய்கின்றது

ஆனால் அன்றைய பெயர்கள் எல்லாம் திமுக கூட்டம், விழிப்புணர்வு கூட்டம், உழைப்போர் உரிமை கூட்டம் என நடைபெறும்,

கிராம சபை என்ற பெயரில் நடைபெறாது , ஆனால் இன்றைய கிராம சபை கூட்டங்களை அன்றே வேறுபெயரில் நடத்தினார்கள், கொடி ஏற்றினார்கள் என்பது வரலாறு

வித்தியாசம் தெரியாது?

என்ன அநியாயமோ தெரியவில்லை, பரிதாபத்திலும் படுபயங்கர பரிதாபம்

சொந்த நாட்டு ராணுவத்திற்கும் அந்நிய நாட்டு தீவிரவாத கூட்டம் அதுவும் இந்திய ராணுவத்தையும் சொந்த நாட்டு பிரதமரையும் கொன்று குவித்த கூட்டத்திற்குமா வித்தியாசம் தெரியாது?

சொந்த நாட்டு சீருடைக்கும் லோகோ எனப்படும் சின்னமுமா தெரியாத தேசம் இது?

இதோ இந்திய வீரர்களுக்கு அஞ்சலி என்ற பெயரில் படுபயங்கர புலிகளுக்கு பல இடங்களில் அஞ்சலி செலுத்துகின்றார்கள்

அரசியல்வாதிகளுக்கு ஒரு மண்ணும் தெரியாது, ஈழம் என்பது காஷ்மீருக்கு அருகில் இருக்கின்றது என்றால் உடனே நம்பிகொள்வார்கள்

ஆனால் அரசின் காவல்துறை அப்படி செய்யலாமா?

அதுவும் இந்தியாவினை எதிரியாக நினைத்து போராடிய அந்த கொடூர இயக்கத்திற்கு இந்திய கொடியோடு இந்திய காவலர் அஞ்சலி செலுத்தலாமா?

இதெல்லாம் தேசிய அவமானம் என்ற வகையில் வராதா?

இதெல்லாம் மாபெரும் அவமானம், மாபெரும் இழுக்கு , களங்கம்

இதோ கம்பீரமாக அஞ்சலி செலுத்துகின்றார்கள்

சொந்த ராணுவே தெரியாத மாநிலத்தில் எடப்பாடி முதல்வராகவும், தமிழிசை பிரபல அரசியல்வாதியாகவும் சீமான் தமிழின உணர்வாளராகவும் அறியபடுவதில் என்ன ஆச்சரியம்?

அட ரஜினியும் கமலும் விஜயும் அஜித்தும் அரசியல் முகமாக அறியபடுவதிலும் என்னதான் ஆச்சரியம்

இந்த அஞ்சலி உணர்வு வரவேற்கதக்கது ஆனால் சொந்த ராணுவம் எது என தெரியாத விஷயம் சோகமானது

இனி ராணுவத்திற்கு அஞ்சலி என்ற பெயரில் சந்த வீரப்பனுக்கும், சேத்துகுளி கோவிந்தனுக்கும் செலுத்திவிட கூடாதே என்பதுதான் சோகம்

காஷ்மீரில் தாக்கிய தீவிரவாதிகளை விட மகா மோசமான காரியத்தை செய்திருக்கின்றார்கள், தேசிய அவமானம் இது

(விஷயம் இப்படி இருக்க, நாம் தமிழர் ஆட்சியில் இதுதான் நடக்கும் என ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர் தும்பிகள்..)

உண்மைகளை பேசினால்?

உண்மைகளை பேசினால் இப்பக்கம் சங்கி என்கின்றார்கள், அப்பக்கமோ பிரியங்காவினை வரவேற்றால் காங்கிரஸ் என்கின்றார்கள்

கலைஞரின் ஒருபக்கத்தை சொன்னால் மகிழ்கின்றார்கள் இன்னொரு பக்கத்தை சொன்னால் முறைக்கின்றார்கள்

டிடிவி தைரியமானவர் என்றால் அவரிடம் டோக்கன் வாங்கிவிட்டாயா? என்கின்றார்கள். பழனிச்சாமி ஆட்சியிலும் நல்ல திட்டம் உண்டு என்றால் ஆரிய அடிவருடி என்கின்றார்கள்

எதையும் பேசமுடிவதில்லை..

ஒரு மனிதன் பொதுவான நியாயத்தை சொல்லவும் கட்சி அடையாளம் வேண்டுமாம், அதை சுமக்காதவன் பைத்தியக்காரனாம்

ஆக கட்சி அடையாளமில்லாதவன் அரைமனிதன்

அதனால் ஒரு கட்சி அடையாளம் கண்டிப்பாக தேவை போலிருக்கின்றது