சிவாஜி

8ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே இத்தேசம் அந்நியருக்கு எதிர்ப்பினை தெரிவித்துகொண்டே இருந்தது, இங்கே ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் எல்லோரும் பெரும் எதிர்ப்பினை சந்தித்துகொண்டே இருந்தனர்

கஜினி முதலான மன்னர்கள் கொள்ளையடித்துவிட்டு ஆப்கனுக்கே ஓடினர், இங்கிருந்து ஆளும் எண்ணமெல்லாம் இல்லை, எதிர்ப்பு அப்படி இருந்தது.

இங்கிருந்து ஆண்டவர்களும் நிம்மதியாக ஆளவில்லை, பெரும் எதிர்ப்புகள்ராஜ்புத்கள் முதல் பல இந்து மன்னர்களிடம் இருந்து வந்துகொண்டேதான் இருந்தது

பின்னாளைய பாபர் வந்து முகல் வம்சத்தை ஸ்தாபித்தாலும் அவருக்கும் ஆப்கன் ஏக்கம் இருந்திருக்கின்றது, அவர் கல்லறை அங்குதான் இருக்கின்றது. இந்தியாவில் தங்கள் வம்சம் ஆளும் என அவர் நினைத்திருக்க வாய்பில்லை

பாபரின் வம்சாவளி அக்பர்தான் இந்துஸ்தானத்தில் ஆள இந்துக்கள் ஆதரவு அவசியம் என உணர்ந்தவர், அப்படி ராஜஸ்தான் இளவரசி ஜோத்பாயினை அவர் திருமணம் செய்து இம்மக்களோடு உறவாடிய பின்புதான் முகலாய வம்சம் இங்கு நிலைபெற்றது , அமைதி திரும்பியது

அந்த அமைதியில்தான் முகலாய அரசு வளம்பெற்றது, ஷாஜகான் போன்றோர் தாஜ்மஹால் போன்றவைகளை கட்ட முடிந்தது, இன்னும் பல கலை அடையாளங்கள் எழும்பின‌.

அதாவது இந்துக்களை அமைதிபடுத்தாமல் இங்கு ஆளவே முடியாது என்ற உண்மை, அவர்களை திருப்திபடுத்தி அமைதியாக்கினால் , இத்தேசம் அமைதியானால் அது எவ்வளவு வளமானது என்ற உண்மை விளங்கிகொண்டிருந்த நேரம்

அமைதியான இந்தியா அன்று செல்வத்தில் கொழித்துகொண்டிருந்தது..

ஆனால் இந்த யதார்த்ததை உணராத மன்னன் ஒருவன் வந்தார் அவர் பெயர் அவுரங்கசீப், கொஞ்சம் அல்ல நிறையவே வித்தியாசமான மன்னர்

ஷாஜகானை சிறையில் அடைத்து ஆட்சிக்கு வந்தவர், ஆனால் மத கடமைகளில் கறாரானவர். மிக எளிமையாக வாழ்ந்தார் என்றுதான் அவரின் வரலாறு சொல்கின்றது, ஆனால் மத விவகாரங்களில் கெடுபிடி

இது இந்திய நிலையினை மாற்றிற்று, ஆங்காங்கு எதிர்ப்பு குரல்கள் எழும்பின, அவற்றில் விஜயநகர இந்து சாம்ராஜ்யம் போலவே முக்கியமானது மராட்டியர் குரல்

சிறிய குரலாக எழுந்த எதிர்ப்பின் சூறாவளியாக தோன்றியவர்தான் சிவாஜி, அவர் தந்தை சிற்றரசர். போர் கலைகளில் வல்லவரானார் சிவாஜி

முதலில் முகலாய பேரரசின் குறுநில மன்னர்களான சுல்தான்களுடன் அவருக்கு மோதல் இருந்தது, பல போர்களில் வென்றார், அவருடைய புகழ் பரவியது

அதாவது மிக சிறிய படையினை வைத்துகொண்டு பெரும் படைகளை வெல்லும் யுத்தபாணி சிவாஜியுடையது, வெற்றி மேல் வெற்றிபெற்றார், அப்பக்கம் சுல்தான்கள், இப்பக்கம் அவர்களுக்கு ஆதரவான தொடக்க பிரிட்டிஷ் படைகள் என இரு பக்கமும் வெற்றிபெற்றவர் சிவாஜி

ஒரு விஷயம் குறிப்பிட்டு சொல்லவேண்டும், அந்நாளில் வலிமையான கடற்படை வைத்திருந்த இந்திய மன்னன் சிவாஜி மட்டுமே, அவர் இருக்கும் வரை வெள்ளையர் அரசாள்வது பற்றி சிந்திக்கவே இல்லை

பல இடங்களில் அவர் வெள்ளையரை தட்டி வைத்திருந்தார்

அவுரங்க சீப்பும் சிவாஜியும் சந்திக்கும் வேளை வந்தது, இருவரும் பலசாலிகள், அவுரங்கசீப்பின் படை மிக பெரிது, யுத்தமும் நடந்தது இருவருமே பேச்சுவார்த்தைக்கு இணங்கினார்கள்,

அதாவது இருவருமே பேச்சுவார்த்தைக்கு இறங்கியிருக்கின்றார்கள், ஆனானபட்ட அவுரங்கசீப்பே பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கின்றார் என்றால் சிவாஜி எப்படிபட்ட பிம்பமாக அவருக்கு தோன்றியிருப்பார் என்பது யாரும் எளிதில் யூகிக்க கூடிய விஷயம்..

ஆனால் அவுரங்கசீப்பின் அணுகுமுறை சிவாஜி யுத்த கைதி என்பது போல இருந்தது

காவலில் வைக்கபட்ட சிவாஜி தப்பினார், பின் வலிமையான படை திரட்டி யுத்தத்தின் தன்மையினை மாற்றினார்

அதாவது தென்னகம் முழுக்க முதலில் கைபற்றினார், செஞ்சி அவர்களின் இரண்டாம் தலைநகராயிற்று, அதன் பின் அசைக்க முடியாத மன்னர் ஆனார்.

அப்சல்கான் என எத்தனை திறமையான தளபதிகள் வந்தாலும் சிவாஜியின் வியூகத்தின் முன் நிற்கமுடியவில்லை

ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம், இந்தியாவில் இந்துக்களை மதித்து நடத்தினால் மட்டுமே ஆளமுடியும் என அக்பர் நிரூபித்ததை மறந்து, இல்லை வாளாலும் ஆளமுடியும் என கிளம்பிய ஒளரங்கசீப்பின் பிடரியில் அடித்தவர் சிவாஜி

சிவாஜியும், நாயக்க மன்னர்களின் விஜயநகர சாம்ப்ராஜ்யமும் எழும்பவில்லை எனில் இஸ்லாமிய இந்தியாவாக என்றோ விஸ்தரிக்கபட்டிருக்கும்,ராஜ்புத் மன்னர்களுக்கு பின் பெரும் எதிர்ப்பினை ஆப்கானிய அரசர்களுக்கு கொடுத்தவர்கள் இவர்கள்.

வெறும் 53 ஆண்டுகள் மட்டும் வாழ்ந்த சிவாஜி கிட்டதட்ட 33 ஆண்டுகால வாழ்க்கையினை போர்முனையிலே கழித்தவர், ஒயாத போர்களில் இருந்தவர்

ஒரு புதியபாணி போர்முறையினை அறிமுகபடுத்தியவர் அவர், கிட்டதட்ட அது செங்கிஸ்கானின் பாணி போன்றது, அந்த யுத்த முறையில்தான் சிவாஜிக்கு பின்னும் மராட்டியம் அவுரங்க சீப்பிற்கு தண்ணிகாட்டியது

தான் நினைத்ததை நடத்தமுடியாமலே மறைந்தார் அவுரங்கசீப்.

அவரின் குழப்பமான நடவடிக்கைக்கு பின் முகலாய அரசும் வலுவிழந்தது, சுருக்கமாக சொன்னால் பெரும் சாம்ராஜ்யமான் முகலாய சாம்ராஜ்யத்தின் சரிவினை தொடங்கி வைத்தவர் சிவாஜி

ஒரு சாதாரண சிற்றரசன், பெரும் முகலாயருக்கு எதிராக, அதுவும் இது பெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யம் என மார்தட்டிய அவுரங்கசீப்பிற்கு எதிராக “இந்து ராஜ்யம்” அமைத்து காட்டியது பெரும் விஷயம், அதுவும் 20 ஆண்டுகளுக்குள் அமைத்தது பெரும் வீரம், ஒப்புகொள்ளத்தான் வேண்டும்.

இது நான் அமைத்த இந்து ராஜ்யம், இதற்கு நான் சத்ரபதி என அவர் முடிசூட்டிகொண்டபொழுது தடுக்க யாராலும் முடியவில்லை

ஆப்கானியர் ஆளவந்த 800 ஆண்டுகாலத்தில் அவர்களுக்கு சவால்விட்டு முடிசூடிய ஒரே இந்திய மன்னன் வீரசிவாஜி

முகலாயரையும், பிரிட்டிசாரையும் ஒருசேர கட்டுபடுத்திய அவரின் ஆற்றல்தான் வரலாற்றில் நின்றது

யுத்தம் என்பது சாதரண விஷயமல்ல, மக்களை வாழ வைக்க வேண்டும், அவர்களிடமிருந்து வரி பெறவேண்டும், பின் படை திரட்ட வேண்டும், பயிற்சி அளிக்க வேண்டும், இன்னும் ஏராள சங்கதிகள் உண்டு, ஒன்றில் சறுக்கினாலும் முடிந்தது விஷயம்

ஆனால் தொடர்ச்சியாக ஏராளமான போர்களை சிவாஜி நடத்தினார் என்றால், அதுவும் பெரும் பேரரசினை எதிர்த்து நடத்தினார் என்றால் அவரின் அணுகுமுறையும், நிர்வாகமும் முக்கிய காரணம்.

இந்திய வரலாற்றில் அந்த வீர சிவாஜி பெரும் இடம் ஏன் பிடித்திருக்கின்றார் என்றால் இப்படித்தான்

இன்று அவரின் பிறந்தநாள்

அன்றே அந்நியருக்கு எதிராக பெரும் கனலுடன் சுழன்று, அவர்களுக்கு சம்மட்டி அடி அடித்த சிவாஜி பெரும் அஞ்சலிக்குரியவர்

அவரை போலவே எல்லா மன்னர்களும் பிரிட்டிசாரை கட்டுபடுத்தி வைத்திருந்தால் வரலாறு மாறியிருக்கும்,

முதன் முதலில் இந்தியாவில் பிரிட்டிசாரை பற்றி எச்சரித்தவர் சிவாஜிதான்

அவர்களை ஆதரித்த பின்னாளைய சுல்தான்களும் ,நிஜாம்களும் பின்பு வாங்கிகட்டி கொண்டனர்

இந்திய வரலாற்றில் பெரும் திருப்பம் கொடுத்தவர் மாவீரன் சிவாஜி, அவருக்கு வீரவணக்கம் செலுத்த இத்தேசம் கடமைபட்டிருக்கின்றது

இன்றைய துளிகள் (3)

டாக்டர் ராமதாஸ் மானமுள்ளவர், சொன்ன சொல் தவறாதவர் என அவரே சொல்லிகொள்வார் அவர் கட்சியினரும் சொல்லி கொள்வார்கள்

முன்பு சூரிய மண்டலலும் உலகில் கடைசி சொட்டு நீர் இருக்கும் வரை திராவிட கட்சியுடன் கூட்டணி இல்லை என்றார், இப்பொழுது பழனிச்சாமி கட்சியினை திராவிட கட்சியிலிருந்து அவரே நீக்கிவிட்டு அங்கு சேர்ந்து கொண்டார்

அங்கு அவருக்கு 7 சீட் கொடுத்திருக்கின்றார்கள்

பாமகவுக்கு 7 சீட் என்றால் பாஜகவுக்கு 10 சீட் வேண்டாமா? என சீறிய பாஜக தரப்பு அப்செட்டில் இருக்கின்றது, அமித்ஷாவின் வருகை ரத்து செய்யபட்டிருப்பது அதை தெரிவிக்கின்றது

அதாவது பாமகவினை விட குறைந்த தொகுதியினை வாங்க பாஜக தயாராக இல்லை, அதை விட கூடுதலாக கொடுக்க அதிமுகவும் தயாராக இல்லை

பழனிச்சாமி மிக சிறந்த ராஜதந்திரியாக ஆடுகின்றார், இவ்வளவு காலம் பாஜக சொற்படி ஆடிவிட்டு ஆட்சியினையும் காப்பாற்றிவிட்டு இப்பொழுது பாஜக முடியும் நேரம் பெப்பே காட்டிவிட்டார்

பாஜகவிற்கு அதிமுக பட்டை நாமம் சாற்றிவிட்ட நேரமிது

இனி பாஜகவிற்கு இரண்டே வாய்ப்பு ஒன்று அதிமுக போடும் 2 சீட்டுகளை பெறுவது அல்லது தினகரனோடு கைகோர்ப்பது

தினகரன் இவர்களை சேர்த்துகொள்வாரா என்பது சந்தேகமே, அதனால் கடைசி புகலிடம் சரத்குமாராக இருக்கலாம்

இந்நிலையிலும் தமிழிசையினை கேளுங்கள், தாமரை மலர்ந்தே தீரும், செயற்கை மழை வரவைப்போம் என்பார்

செயற்கை தாமரையே இனி வைக்க முடியாது அக்கோவ்

******

அட்டகாசமாக ஆடுகின்றார் பழனிச்சாமி , பாமகவிற்கு 7 சீட் கொடுத்ததன் மூலம் பாஜகவினை ஓடவிட்டிருக்கின்றார்

(இதே பாமக நாளை 3 இடத்தில் வென்றாலும் மத்தியில் பாஜக ஆட்சிகு தேவைபட்டால் அங்கு ஓட போவது வேறு விஷயம்)

பாமகவிற்கு 7 கொடுத்து , திமுக கூட்டணியின் பங்கீட்டுக்கும் திரிகொளுத்தி போட்டுவிட்டார் மனிதர்

இனி இங்கும் ஆளாளுக்கு அங்கே பாருங்கள் பாமகவுக்கு 7 என ராகம் பாடிகொண்டே இருப்பார்கள், திமுகவுக்கு நிச்சயம் தலைவலி அது

******

என்னஜி சென்னைக்கு போறேன் 10 சீட்டோட வாறேன்னு சொல்லிட்டு இங்க ஓடி வந்திருக்கீங்க?

ஜி அவனுக எமபாதனுக, இவ்வளவு நாளும் நடிச்சிருக்காங்க, 2 சீட் கூட தரமாட்டானுக போல‌

அவ்வளவு நடிப்பா? பெரிய அதிர்ச்சியா இருக்கு ஜி.

ஆமாஜி, நமக்கே இப்படின்னா சசிகலா தங்கச்சிக்கு எப்படி இருக்கும், உடனே அவங்கள பார்க்கிறோம் மன்னிப்பு கேக்குறோம்..”

அமித்ஜி இவங்களவிட விட நமக்கு கருப்புகொடி காட்டுற திமுக எவ்வளவோ பெட்டர், அவங்கள நம்பலாம் ஜி..”

பிரித்வி :02

பிரித்வி :02

அது கிபி 1191ம் ஆண்டு , இந்தியா மேல் முதன்முறையாக படையெடுத்தான் கோரி முகமது

ஆப்கனையும் இன்னும் சில நாடுகளையும் கைபற்றியபின் அவன் டெல்லி நோக்கி வந்தான், அவனை அரியானாவின் தராய் அருகே எதிர்கொண்டான் பிரித்விராஜன்

மிக கடுமையான யுத்தம் அது, வில்வித்தை முதல் வாள்வீச்சு வரை மிக பெரும் வீரம் காட்டி நின்ற பிரித்விராஜன் முன்னால் கோரியால் நிற்க முடியவில்லை

ஆப்கனை அடக்கிய கோரி முகமது பிரித்வி முன்னால் திணறினான், ஒரு கட்டத்தில் கோரி முகமதுவினை வளைத்துபிடித்தான் பிரித்வி

அன்றே கோரியின் தலையினை சீவியிருந்தால் இந்திய வரலாறே மாறியிருக்கும், ஆனால் உயிர்பிச்சை அளித்து அவனை ஆப்கனுக்கு விரட்டினான் பிரித்வி

அடிபட்ட பாம்பாக ஆப்கன் திரும்பிய கோரி அவமானத்தில் நொந்தான், பெரும் படை திரட்டி மறுபடியும் டில்லி நோக்கி வந்தான்

இம்முறை வலுவான குதிரைபடையோடு வந்தான் கோரி, பிரித்விராஜனிடம் யானைபடை வலுவாக இருந்தது என்பதால் அரபு குதிரைகள் சகிதம் வலுவாக வந்தான் கோரி

இம்முறை கோரியினை விடவே கூடாது என முடிவு செய்த பிரித்வி பல மன்னர்களை திரட்டினான், அப்படியே மாமன் ஜெயசந்திரனிடமும் உதவி கேட்டான்

ஜெய்சந்திரனோ பகைமையினால் உதவ மறுத்தான், உதவ சென்றவர்களையும் தடுத்தான் ஆயினும் களம் கண்டான் பிரித்வி

உதவ மறுத்ததோடு இல்லாமல் கோரிக்கு ஆதரவான காரியங்களை செய்தான் ஜெயசந்திரன்

தன் இருபெரும் எதிரிகளை தனியாக சந்தித்தான் பிரித்வி,

போரில் மாவீரம் காட்டி நின்ற பிரித்வியினை கோரியினால் வெல்ல முடியவில்லை, ஆயினும் அவன் திரட்டி வந்த பெரும்படை அவனுக்கு பலமாக களத்துக்கு வந்து கொண்டே இருந்தது , யுத்தம் நீடித்தது

யுத்த நெறிகளை மீறி காட்டுமிராண்டிதனமான போரில் ஈடுபட்ட கோரி, நள்ளிரவில் பாசறையில் புகுந்து பிரித்வியினை பிடித்தான், இதற்கு ஜெயசந்திரனின் கொடூரமான திட்டமும் இருந்தது

துரோகத்தால் வீழ்த்தபட்டான் பிரித்வி

கடந்த முறை தனக்கு உயிர்பிச்சை அளித்தவன் என்ற நன்றி கூட இல்லாமல் அவனின் கண்களை குருடாக்கினான் கோரி

எதிரி வென்றதும் ராஜபுத்திர பெண்கள் என்ன செய்வார்களோ அதை சம்யுக்தாவும் செய்தாள், ஆம் தீகுளித்து இறந்தாள் அவளோடு பல பெண்கள் செத்தனர்

டெல்லியினை வென்ற கோரி மற்ற ஆப்கன் மன்னர்களை போல கொள்ளை அடித்துவிட்டு ஓடவில்லை, தன் அடிமைகளில் ஒருவனை தன் பிரதிநிதியாக அமர்த்தினான்

அத்தோடு மிக முக்கியமான காரியத்தை செய்தான், ஆம் தனக்கு உதவிய ஜெயசந்திரனை கொன்றான் கோரி. எதற்காக என்றால் அந்நாளைய வழக்கபடி பிரித்வியின் நாடு ஜெயசந்திரன் பக்கம் போயிருக்கும், கொள்ளைகளோடு கோரி ஊர் திரும்ப வேண்டி இருக்கும்

ஜெயசந்திரன் கணக்கு இதுதான், ஆனால் கொடூரமான கோரி காரியம் முடிந்ததும் அவனை காவு வாங்கினான்

குருடானான பிரித்விராஜனை வைத்து தன் சபையில் வேடிக்கை காட்டுவது அவனுக்கு வழக்கமாயிருந்தது

பைபிளில் சாம்சன் எனும் மாவீரனை மொட்டை அடித்து பிலிஸ்தியர் கண்களை குருடாக்கி கட்டி போட்டு வித்தைகாட்டினர் அல்லவா?

அதே காட்சிகள்

பலசாலி அகபட்டால் உடனே அவனை குருடனாக்கி அவனை தடுமாற வைத்து ரசித்து பழிவாங்கும் கொடூர பழக்கம் அன்று இருந்திருக்கின்றது

குருடனான பிரித்வியினை அடிக்கடி சபையில் நிறுத்தி அவமானபடுத்தி விளையாடுவது அவனுக்கு வழக்கமாயிற்று

“ஒரு நாள் நீதான் பெரும் வில்லாளி ஆயிற்றே? இப்பொழுது வில்லும் அம்பும் கொடுத்தால் சரியாக அடிப்பாயா?” என நகையாடினான் கோரி

தன்னால் ஒலிவரும் இலக்கினை துல்லியமாக தாக்கமுடியும் என்றான் பிரித்வி

அரை போதையில் இருந்த கோரி, அவன் கையில் வில்லை கொடுத்து, இப்பொழுது மணி ஒலிக்கும் அதுதான் இலக்கு நீ அதை சரியாக அடிக்க வேண்டும் என உத்தரவிட்டதுதான் தாமதம்

மிக சரியாக கோரியின் மேல் அம்பை செலுத்தினான் பிரித்வி

ஆம், ஓய்வு என்பதாலும் பிரித்வி குருடன் என்பதாலும் கவச உடை இன்றி உத்தரவிட்ட கோரியினை, அவன் குரல் வந்த திசை நோக்கி மிக சரியாக அம்புவிட்டு கொன்றான் பிரித்வி

(இதுகட்டுகதை என சொல்வோர்கள் உண்டு ஆனால் கோரி லாகூரை தாண்டுமுன்பே கொல்லபட்டிருக்கின்றான் என்கின்றது அவனது வரலாறு

உண்மையில் பிரித்விராஜனால் அவன் கொல்லபட்டிருக்க வாய்ப்பு அதிகம்..)

அதன் பின்பு பிரித்வி கொல்லபடுகின்றான், அவனுக்கு வயது 24

24 வயதிற்குள் மங்கா புகழ்பெற்றவன் பிரித்வி, கோரி முகமதுவினை முதலில் ஓட அடித்தவன் அவனே

இந்தியரிடையே ஒற்றுமை இருந்தால் இரண்டாம் முறையும் அவனால் வென்றிருக்க முடியும், ஜெயசந்திரனின் துரோகமும் பிரித்வியினை சாய்த்தது

துரோகத்தால் வீழ்த்தபட்டான் மாவீரன் பிரித்வி, அவனின் வாழ்வும் காதலும் வீரமும் கடைசியில் பழிதீர்த்த நுட்பமும் மங்கா காவிய பாடல்களாயின

இன்றும் வட இந்தியாவின் கிராமிய பாடல்களில் அவன் கதையும் காவியமும் உண்டு

ஆப்கானிய கொடூர மன்னர்களை மாவீரனாக எதிர்கொண்ட அவனின் பெயரை இந்தியா தன் ஏவுகனைக்கு சூட்டியது

ஆம் இந்தியா தன் ஏவுகனைக்கு “பிரித்வி ” என‌ அவன் பெயரையே சூட்டியது

இதை கவனித்த பாகிஸ்தான் அவசரமாக சீனாவிடமிருந்து ஏவுகனை வாங்கிய பாகிஸ்தான் அதற்கு “கோரி” என பெயரிட்டு வைத்திருக்கின்றது

900 ஆண்டுகளை கடந்தாலும் கோரியும் பிரித்வியும் இன்றும் ஏவுகனைகளாக எதிர் எதிரே நிற்கின்றார்கள்

நிச்சயம் பிரித்வி இனி தோற்கமாட்டான், காரணம் அன்று அவனுக்கு துரோகம் செய்ய‌ ஜெயசந்திரன் இருந்தான் இன்று மொத்த இந்தியாவும் அவனுக்கு ஆதரவாய் இருகின்றது

பிரித்த்வி மேம்படுத்தபட்டு பாகிஸ்தானின் எந்த மூலையினையும் அணுகுண்டோடு தாக்கும் அளவு வலிமையானதாக இந்தியாவின் பாதுகாப்பாக நிற்கின்றது

அதில் பிரித்விராஜன் வாழ்ந்துகொண்டே இருக்கின்றான்

(முற்றும்..)

இன்றைய துளிகள் (2)

அதிமுக கூட்டணியில் பாமக: இறுதி ஒப்பந்தம் கையெழுத்தானது; எத்தனை தொகுதிகள் என்பது விரைவில் வெளியாகும் : செய்தி

இந்த தேர்தலுக்கான முதல் கூட்டணி அறிவிக்கபட்டிருகின்றது

ஆக அதிமுக , பாமக, பாஜக என்ற கூட்டணி அமைந்திருக்கின்றது , கிருஷ்ணசாமி இன்னபிற கட்சிகள் கூடுதலாக இணையலாம்

பாமக அப்பக்கம் சென்றுவிட்டதால் விசிக, தேமுதிக போன்ற கட்சிகளை கட்டாயம் சேர்க்கவேண்டிய அவசியத்தில் திமுக உள்ளது

தனிகாட்டு ராஜாவான தினகரன் இன்னும் வியூகங்களை அறிவிக்கவில்லை

******

“ஹேய்… இனி பிஜேபிக்கு எந்த கட்ஷி கூடவும் வாய்ப்பே இல்ல, நாங்க எங்க கட்ஷில இருந்து 20 ஷீட் கொடுக்க ரெட்யா இருக்கோம்…”

******

அதிமுக – பாமக ஏற்கெனவே மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி: ஸ்டாலின்

திமுகவும் காங்கிரசும் கூட்டணி வைத்து கடந்தமுறை வென்றவர்களா என ராமதாஸ் கேட்டால் என்னாகும்?

*******

இவரோடு இருக்கும் வைகோவிற்கும் இன்னும் பலருக்கும் வெட்கம் மானம் சூடு சொரணை எல்லாம் நிரம்ப இருப்பதாக அவரே எண்ணிகொள்கின்றார்

அய்யோ பாவம்

******

சென்னை நட்சத்திர ஹோட்டலில் கூட்டணி பேசினார் ராமதாஸ் : செய்தி

கட்சியின் பெயர் என்ன தெரியுமா? பாட்டாளி மக்கள் கட்சி

******

அட்டகாசமாக ஆடுகின்றார் பழனிச்சாமி , பாமகவிற்கு 7 சீட் கொடுத்ததன் மூலம் பாஜகவினை ஓடவிட்டிருக்கின்றார்

(இதே பாமக நாளை 3 இடத்தில் வென்றாலும் மத்தியில் பாஜக ஆட்சிகு தேவைபட்டால் அங்கு ஓட போவது வேறு விஷயம்)

பாமகவிற்கு 7 கொடுத்து , திமுக கூட்டணியின் பங்கீட்டுக்கும் திரிகொளுத்தி போட்டுவிட்டார் மனிதர்

இனி இங்கும் ஆளாளுக்கு அங்கே பாருங்கள் பாமகவுக்கு 7 என ராகம் பாடிகொண்டே இருப்பார்கள், திமுகவுக்கு நிச்சயம் தலைவலி அது

தமிழ்தாத்தா – உ.வே.சா

பொதுவாக தமிழக ஓட்டுபொறுக்கும் அரசியல்வாதிகளால் ஒரு பலமான கருத்து பரப்பபடும், கடந்த 80 ஆண்டுகால அரசியலில் அது பெரும் கோஷம்.

எல்லோருக்கும் தெரிந்ததுதான், பிராமணர்கள் தமிழர்களின் எதிரிகள். பிராமணர்கள தமிழை அழிக்கநினைப்பார்கள். தமிழ் வாழ்க, பிராமணன் ஒழிக. தமிழ் என்ற வார்த்தை தமிழர்,திராவிடர் என்றெல்லாம் மாறி ஒலிக்கும்.

இப்படிஎல்லாம் கோஷம் எழுப்புபவர்கள் தமிழுக்கு என்ன செய்தார்கள் என நாம் கேட்க கூடாது, கேட்டால் கல்தோன்றி என தொடங்கி, பாவேந்தர் பாடலில் வந்து ஈழம் சென்று முஷ்டி உயர்த்தி நிற்பார்கள். இவர்களின் தமிழ்பற்று பிராமணனை விரட்டுவது, சிங்களனை விரட்டுவது, வடநாட்டு மக்களை, கன்னடனை, தெலுங்கனை, மலையாளியினை பகைவனாக சித்தரிப்பது இவைகள்தான் இவர்களின் தமிழ்பற்று.

பிராமணர்கள் தமிழக எதிரிகள் என்பார்கள், தமிழர்களை அடிமைபடுத்தினர் என்பார்கள், சரி, எந்த பிரமண அரசன் தமிழர்களை ஆண்டான் என கேட்டால் சொல்ல தெரியாது. காரணம் எந்த தமிழ் அரசனும் பிராமணன் இல்லை.

ஆனால் புலவர்களில் பலர் பிராமணர்களாயிருந்து தமிழ் வளர்த்திருக்கின்றனர் என்பதை அவர்களாலும் மறுக்கமுடியாது, இப்படி எல்லாம் கேள்விகேட்டு, பின் எப்படி பிராமணர் தமிழ் எதிரியாயினர் என்றால், ஹி ஹி ஹி என சென்றுவிடுவார்கள்.

தமிழை மிக தீவிரமாக வளர்த்தவர்கள் யாரென்றால் தொல்காப்பியர் அகத்தியர் முதற் சங்ககாலம் என அக்காலங்கள் கடந்தபின் தமிழினை வளர்த்து தீரா அடையாளம் கொடுத்தவர்கள் பவுத்த துறவிகள் அதன் பின் சமணதுறவிகள்.

சீவகசிந்தாமணி,சிந்தாமணி எல்லாம் அதனைத்தான் சொல்கின்றன. சமணர்கள் தமிழுக்கு ஆற்றியதொண்டும் மறக்கமுடியாதது.

அப்படியாக பிராமணர்களிலும் மிக உயர்ந்த தொண்டாற்றியவர்கள் உண்டு, சம்பந்தர் காலம் மாணிக்கவாசகர் காலம், பரிமேலழகர் காலம் என அக்காலங்களை விடுங்கள், அதன் பின் வந்த அருணகிரிநாதர், காளமேகபுலவர் என தமிழ்வளர்த்த பிராமணர்களின் வரிசை பெரிது.

தமிழ்சிறந்த பரிதிமாற் கலைஞரும், மகாகவி என உலகம் கொண்டாடும் பாரதியின் தமிழ்தொண்டு உலகறியும், இவர்கள் எல்லாம் அந்த பிராமணர்களே.

பள்ளிகளில்,கல்லூரிகளில் தமிழாசிரியராய் இருந்து அக்காலத்தில் தமிழ்வளர்த்தவர்களில் பெரும்பாலானோர் பிராமணர்கள் என்பதை மறுக்கமுடியுமா? அப்படியான காலத்தில் தமிழ் எப்படி உயர்ந்திருந்தது?

தமிழை காக்கவந்ததாக புறப்பட்ட கழகங்களில் ஆட்சியில் தமிழ் எப்படி சீரழிந்திருக்கின்றது என்பது ஒன்றும் ரகசியமல்ல‌

உச்சமாக ஓலை சுவடிகளில் அலையும் நிலையிலிருந்த பண்டைய காப்பியங்கலையும், இலக்கியங்களையும் முதன் முதலில் அச்சுக்கு ஏற்றிய பெரும் தமிழ்தொண்டு செய்த உ.வே சாமிநாதய்யரும் பிராமணரே.

அவர் காலத்தில்தான் காகித அச்சடிப்பு கலாச்சாரம் இங்கு வந்தது, வெள்ளையர் பைபிள் முதலானவற்றை அச்சடித்தனர், கொஞ்சமும் தயங்காமல் தமிழ் வாழ, தமிழுக்கு எதிர்காலம் கிடைக்க, தமிழ் செழிக்க அவற்றை அச்சில் ஏற்றும் பெரும் பணிக்கு வந்தார் உ.வே.ச‌

இவரின் உழைப்புதான், இவரின் தேடலும் அக்கறையும் தான் இன்று தமிழ்நூல்கள் அச்சுவடிவில் கிடைக்க முழுகாரணம். தொல்காப்பியம் முதல் திருக்குறள்வரை, ஐம்பெரும் காப்பியம் முதல் ஐங்குறுநூறுவரை அவர்தான் அச்சில் ஏற்றினார்.

அன்று இவை தேடுவாரற்று ஆதீனங்களில், மடங்களில் சில புலவர் வீடுகளில் ஓலைசுவடிகளாய் கிடந்தன, பாதி அழிந்தும்விட்டது, தமிழறிந்து அதன் முக்கியத்துவமறிந்து ஒவ்வொரு ஆதீனமாய் சென்று அதனை பெற்று பின் தாளில் எழுதி, அச்சுக்கு அனுப்பி ஒரு தனிமனிதனாய் இவர் செய்த சாதனை மிக பெரிது.

சுவடிதேடி ஊராய் கால் தேய‌ நடந்தும் மாட்டுவண்டியில் சென்றும் சேகரித்துத் தமிழைமீட்டவர்.

100 புத்தகங்களை அச்சுக்கு ஏற்றி, 3000 மேற்பட்ட தமிழ்புத்தகங்களை வெளியிடசெய்து ஒரு தன்னிகரற்ற சேவையினை தமிழ் உலகிற்கு வழங்கிய ஒரு பெரும் கொடையாளி.

தமிழ் உலகம் கொண்டாட வேண்டிய ஒப்பற்ற உழைப்பாளி.

இன்று அவரின் பிறந்தநாள், பிராமணனாய் பிறந்துவிட்டதால் தமிழகத்திலிருந்து மறைக்கபட்ட பெரும் தமிழறிவு களஞ்சியத்தில் அவரும் ஒருவர்.

ஆனால் நன்றியுள்ள தமிழர்கள், தமிழினை நேசிப்பவர்கள் அவரை மறக்கமாட்டார்கள். அந்த தமிழனுக்கு, தமிழை நேசித்து இறுதிவரை தமிழுக்காய் வாழ்ந்த அந்த பெருமகனின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்வோம்.

சுற்றி இருக்கும் இனத்தை எல்லாம் பகைத்துகொள்வதோ, அந்நிய மொழிகளை விரட்டுவதோ மட்டும் தமிழ் உணர்வு ஆகாது. தமிழை நேசிக்க வேண்டும், தமிழுக்காய் உழைத்த தமிழர்களை நன்றியோடு நினைவு கூறவும் வேண்டும்.

அவ்வகையில் தமிழ்தாத்தா என்றழைக்கபடும் இந்த தமிழ் முப்பாட்டனார் நிச்சயம் மறக்கமுடியாதவர்.

அக்காலத்தில் அப்படி தனிமனிதனாக அவர் அந்த ஏட்டுசுவடிகளை காப்பாற்றாமல் விட்டிருந்தால் இன்று நமக்கு திருக்குறளுமில்லை, கம்பனுமில்லை, இளங்கோவுமில்லை, கணியன் பூங்குன்றனுமில்லை.

எல்லா அரும் காவியங்களும் கரையானுக்கு இரையாகி முடிந்திருக்கும். அப்படி தமிழ்கடவுளின் தூதனாக வந்து தமிழ் அறிவு அடையாளங்களை காப்பாற்றிய பெருமகனார் அவர்.

இன்று இணையம் வரை தமிழின் சங்ககால இலக்கியங்கள் எல்லாம் நிரம்ப கிடக்கின்றன என்றால் அதற்கு உ.வே.சாவின் உழைப்பே மகா முக்கிய காரணம்

தமிழ் செம்மொழி அடையாளம் பெற, அதன் பெருமை வாய்ந்த இலக்கியங்கள் எல்லாம் அச்சில் இருந்தது மகா முக்கிய காரணம். அதன் காரணகர்த்தா நிச்சயம் உவேசா

பிராமணீயத்தில் சில குறைகள் இருக்கலாம், ஆனால் பிராமணர்களில் இவரைபோன்ற மாமனிதர்களும் தமிழறிஞர்களும் நிச்சயம் உண்டு.

அந்த முப்பாட்டனை அவர் பிறந்தநாளில் நினைவு கூர்வதில் தமிழனாய் பெருமை அடைகின்றோம்

பாரதி வாக்கினில் அவரை போற்றுவோம் ,ஆம் இப்பாடல் உ.வே சாமிநாதய்யரை வாழ்த்தி, அவரின் தொண்டுகளுக்கு மகா அடையாளமாக , சாட்சியாக மகாகவி பாரதியால் அன்றே பாடபட்டது

உ.வே.சா பிறந்த நாளில் அதனைவிட நல்ல அஞ்சலி இருக்க முடியாது

செம்பரிதி ஒளிபெற்றான்;பைந்நறவு
சுவைபெற்றுத் திகழ்ந்தது;ஆங்கண்
உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று
எவரேகொல் உவத்தல் செய்வார்?
கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநா
தப்புலவன் குறைவில் கீர்த்தி
பம்பலுறப் பெற்றனனேல்,இதற்கென்கொல்
பேருவகை படைக் கின்றீரே?

அன்னியர்கள் தமிழ்ச்செல்வி யறியாதார்
இன்றெம்மை ஆள்வோ ரேனும்,
பன்னியசீர் மகாமகோ பாத்தியா
யப்பதவி பரிவுன் ஈந்து
பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநா
தன்றனக்குப் புகழ்செய் வாரேல்,
முன்னிவனப் பாண்டியர்நாள் இருந்திருப்பின்
இவன்பெருமை மொழிய லாமோ?

‘நிதிய றியோம்,இவ்வுலகத் தொருகோடி
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறி யோம்’ என்றுமனம் வருந்தற்க;
குடந்தைநகர்க் கலைஞர் கோவே!
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய்,அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்கு வாயே.

ஆம், உ.வே.சா எனும் தலைமகனுக்கு ஒரு நாளும் இறப்பில்லை, அவரின் பணி தமிழ் உள்ளளவும் துலங்கிகொண்டே இருக்கும்

விழுப்புரம் மாவட்டத்தில் கொடுமை

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் அந்த கொடுமை நிகழ்ந்திருக்கின்றது

விஷயம் ஒன்றுமில்லை அங்கொரு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவியினை ஒரு மாணவன் காதலித்திருக்கின்றான், அப்பெண் மறுத்திருக்கின்றாள்

விட்டால் 96 கதை போல் ஆகிவிடும் என அஞ்சினானோ என்னமோ ஒருநாள் வகுப்பில் அந்த பெண்ணை பிடித்து கதற கதற தாலிகட்டிவிட்டான்

கட்டிவிட்டு “நீ தமிழச்சி, இந்த தாலியினை உன்னால் கழற்ற முடியாது, கழற்றினால் நம் கிராமம் விடாது, இனி நீ கலெக்டருக்கு படித்தாலும் என் பொண்டாட்டி” என ரஜினி ஸ்டைலில் சிரித்துவிட்டு சென்றிருக்கின்றான்

விஷயம் கசிந்து பெரும் சிக்கலாகியிருக்கின்றது, பெண் மைனர் என்பதாலும் இன்னும் பல காரணங்களாலும் தாலி அகற்றபட்டிருக்கின்றது

தாலிகட்டிவிட்டு ஸ்டைலாக சுற்றிகொண்டிருந்தவனை பல பிரிவுகளில் வழக்கு போட்டு உள்ளே தள்ளியிருக்கின்றார்கள்

பையன் நிறைய பாக்யராஜ் படங்கள் பார்த்திருப்பான் போல, மாட்டிக்கொண்டான்

பள்ளிக்கு செல்லும் பையன் பையில் தாலி இருக்கின்றதா? என பார்க்கும் அளவு தமிழக நிலை கெட்டு போயிற்று என்பதுதான் பரிதாபம்

கல்விதுறையினை இந்த விஷயத்தில் பாராட்ட வேண்டும், வீட்டில் முடங்கி கிடந்த அப்பெண்ணுக்கு ஊக்கமூட்டி தேர்வு எழுத வைக்கும் முயற்சியில் இறங்கியிருகின்றார்கள்

சிதறல்கள்

ஏதோ பாகிஸ்தானுக்குள் சென்று அடிப்பது பாபர் மசூதியினை இடித்த கரசேவை போல எளிதானது என்றும், போட்டோஷாப் வேலைகளை போல சுகமானது என்றும் பல பக்தகோடிகள் நினைத்துகொண்டிருக்கின்றன‌

“மோடி ஆணையிட்டால் பாகிஸ்தானை சிதறடிப்பேன் என்றும், என் மேல் குண்டு கட்டிவிட்டால் பாகிஸ்தானை தூசியாக்குவேன்..” என சொல்லும் கும்பல்கள் அதிகரித்துவிட்டன‌

இவர்களை பாகிஸ்தான் எல்லையில் விட்டுபாருங்கள் , பெருக்கெடுத்து ஓடும் சிந்துநதியினை கண்டாலே ஓடிவந்துவிடுவான் என்பது வேறு விஷயம்

அந்த மலைகளின் உயரத்தை கண்டாலே அழுதுவிடுவான்

ஆளாளுக்கு பாகிஸ்தானில் புகுந்து அடிப்போம், அதை மீட்போம் இதை மீட்போம் என்றேல்லாம் கத்துகின்றார்களே தவிர, யாராவது சீனாவுக்குள் புகுந்து சிவன் வாழும் கைலாயத்தை மீட்போம் என ஒரு வார்த்தை பேசுகின்றார்களா?

பேசமாட்டார்கள்

காரணம் சீனா அப்பக்கம் சென்றால் எப்படி எங்கே மிதிக்கும் என்பது இவர்களுக்கு நன்றாய் தெரியும்

அதனால் கையாலயத்தையும் கைலாய நாதனையும் சீனனிடமே சிறையிருப்பை வைத்துவிட்டு பாகிஸ்தானை நோக்கி கத்தி கொண்டே இருப்பார்கள்

ஆம் பாகிஸ்தானில்தான் இஸ்லாமியர் இருக்கின்றான் சீனாவில் சிவனே இருக்கின்றான்,

சிவனை வைத்தா அரசியல் செய்யமுடியும்? இஸ்லாமியரை வைத்துத்தான் அரசியல் செய்ய முடியும்

பாவம் கையாலநாதன் , ஒருநாள் சிவசேனையும் பக்த கோடிகளும் சீனனிடமிருந்து தன்னை பக்தகோடிகள் விடுவிக்கும் என பார்த்து கொண்டே இருக்கின்றான்

அவர்களோ கைலாய நாதனை மறந்துவிட்டு பாகிஸ்தானை நோக்கி கத்தி கொண்டே இருக்கின்றார்கள்

******

பாகிஸ்தானை உலக நாடுகள் எல்லாம் கண்டிக்க இரு நாடுகள் மட்டும் தாங்கி பிடிக்கின்றன, ஒன்று சைனா இன்னொன்று சவுதி அரேபியா

ஆம் தாக்குதல் நடந்த அன்று சவுதி செயல் அரசர் பாகிஸ்தானுக்கு புறப்படும் அவசரத்தில் இருந்தார், அவர் தாக்குதலை கண்டித்ததாக தெரியவில்லை அதற்கு காரணம் உண்டு

புல்வாமா தாக்குதலுக்கு சற்று முன்பாக இதே ஜெய்ஷ் இ முகமது அமைப்பு ஒரு காரியம் செய்தது விஷயம் வில்லங்கமும் தந்திரமுமானது

அதாவது புலவாமா பாணியில் ஈரானை தாக்கி கிட்டதட்ட 20க்கும் மேற்பட்ட ஈரான் ராணுவத்தை கொன்றிருந்தது, இது அமெரிக்க சவுதி இஸ்ரேலிய தரப்புக்கு உள்ளூர மகிழ்ச்சி கொடுத்திருந்தது

இதனால் அடுத்து இந்தியாவினை அதே ஜெய்ஷ் இ முகமது இயக்கம் தாக்கும்பொழுதும் இவைகளிடமிருந்து பெரிய ரியாக்சன் இல்லை, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ எதிர்பார்த்தது இதுதான்

இப்பொழுது இந்தியா உலக நாடுகளிடமிருந்து பாகிஸ்தானை தனிமைபடுத்த தொடங்கியுள்ளது, உலக நாடுகள் பாகிஸ்தானில் செய்யும் முதலீடு இந்தியாவில் எப்படி தீவிரவாதத்தை வளர்க்கின்றது என்பதை ஆதாரமாக சொல்கின்றது இந்தியா

இதனால் பல நாடுகள் யோசிக்க தொடங்கிவிட்டன‌

சீனாவோ இந்தியாவில் முதலீடு செய்வதே இதற்காகத்தான் என்பது போல இருக்கின்றது

சவுதி யோசிப்பதாக தெரியவில்லை, ஈரானுக்கு அந்தபக்கம் இருக்கும் பாகிஸ்தானை தன் பரம எதிரியான ஈரானுக்கு எதிராக கொம்பு சீவும் ஆசையிலே இருக்கின்றது

முன்பே பாகிஸ்தானின் அணுகுண்டு விஷயங்களில் சவுதிக்கு பங்கு என்ற ஒப்பந்தம் அவர்களிடம் உண்டு ஆனால் அமெரிக்கா உள்ளே புகுந்து குழப்பியது

இப்பொழுது சவுதியும் பாகிஸ்தானும் குலாவுவதை கண்டால் பல நாடுகளுக்கு சந்தேக கண்கள் விழுகின்றன, அவரும் ஏகபட்ட முதலீடுகளை அறிவிக்கின்றார் அவற்றிற்கான பலன் பாகிஸ்தான் ஈரானுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் எனப்து சொல்லி தெரியவேண்டியதில்லை

ஆனால் அந்த தொந்தரவு ஈரானோடு மட்டும் இராது என்பது பாகிஸ்தானை தெரிந்தோருக்கு தெரியும்

அடுத்து சவுதி செயல்அரசர் இந்தியா வருகின்றார், இந்தியா எப்படி ராஜதந்திரமாக அவரை அணுகபோகின்றது என்பது இனிதான் தெரியும்

*******

எந்த நம்பிக்கையில் செல்கின்றார்கள்? எல்லாம் பாகிஸ்தான் மேலான நம்பிக்கையில்.

பாகிஸ்தானின் நம்பிக்கை என்ன?

“ஒருநாளும் இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பலை கொல்ல கூடாது, காரணம் இந்த கும்பலை அழித்துவிட்டால் இந்தியா உருப்பட்டு வல்லரசாக்கிவிடும்

வெளியிலிருந்து தாக்கும் நம் தீவிரவாதிகளை விட உள்ளே இருந்து நாட்டை அழிக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ் அழிச்சாட்டிய கும்பல் இந்தியாவிற்கு ஆபத்தானது

இந்தியாவினை அழித்து கொண்டிருக்கும் கும்பலை நாமே அழிப்பாதா? ஒருநாளும் கூடாது

அதனால் பாகிஸ்தான் ஒரு காலமும் தங்களை தொடாது என்ற மிகபெரும் நம்பிக்கையில் இருக்கின்றது இந்த ஆர்.எஸ்.எஸ்..”

********

இப்போது சிக்ஸர் அடிப்பது சித்துதான், அன்னார் காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் மொத்த மக்களையும் நாம் சாடுவது தவறு, இது தீவிரவாத செயல் என பேசியிருந்தார், இம்ரான்கானை தற்காத்து பேசியிருந்தார்

இதனால் அவர்மேல் கட்சி நடவடிக்கை எடுத்தது சில சிக்கலுக்கு ஆளானார்

விடுவாரா சித்து?

இன்று ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சாடுகின்றீர்கள்? ஆனால் காந்தகார் விமான கடத்தலில் அதன் தலைவனை இந்தியாவில் இருந்து விடுவித்தது பாஜக அரசு என கொந்தளித்துவிட்டார்

அது உண்மையும் கூட என்பதால் பாஜக பல்லை கடித்து கொண்டு சித்துவினை முறைத்து கொண்டிருக்கின்றது

கிரிக்கெட்டில் மட்டுமல்ல, அரசியலிலும் அவர் சிக்ஸர் சித்துதான்

(பாகிஸ்தான் பஞ்சாபிலும் ஏகபட்ட சீக்கியர் உண்டு, அவர்கள் இந்தியாவின் பஞ்சாபில் உள்ள உறவினைரை காணவும் தொடர்பு கொள்ளவும் ஏககட்டுபாடுகள் உண்டு

அதெல்லாம் மிகபெரும்வலி, அனுபவித்தாலன்றி தெரியாது

பாகிஸ்தானுடன் அணுக்கமான உறவினை பேணுவதன் மூலம் அந்த வலியினை குறைக்கலாம் என்பது சித்துவின் கொள்கை தவிர வேறோன்றுமில்லை)

இன்றைய துளிகள் (1)

இங்கு ஏகபட்ட பீரங்கிகள் இருக்கின்றன, துல்லியமாக சுடும் டாங்கிகளும் உண்டு போதாகுறைக்கு பல்லாயிரம் மைல் பாயகூடிய சக்தி வாய்ந்த ஏவுகனைகளும் இருக்கின்றன‌

பட்டனை தட்டினால் முடிந்தது விஷயம்

இக்காலத்திலும் 300 கிலோ வெடிமருந்து தாருங்கள், முதுகில் சுமந்து பாகிஸ்தானை அழிக்கின்றேன் பேர்வழி என கிளம்பியிருக்கின்றன பல சங்கிகள்

எல்லாவற்றிலும் பலகாலம் பின்னோக்கியே யோசிப்பது அவர்கள் புத்தியிலே கலந்திருக்கும் போல…

*****

கண்ணனும் கருப்பு, ராமனும் கருப்பு கிரண்பேடிக்கு இதை யாராவது எடுத்து சொன்னால் பரவாயில்லை

காக்கையிடமும் நல்ல பண்புகள் உண்டு, இரையினை கண்டுவிட்டால் கூட்டத்தை அழைத்து சேர்ந்தே உண்ணும்.

சுயநலத்தில் நடித்து தனியாக நின்று உண்டு மகிழ்வது வெள்ளையான கொக்கின் குணம்

கிரண் பேடி.. பேட் லேடி….

*****

“வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப, 
சூழ் கழல் மன்னா நின் நகர்ப் புகுந்து….”

என்றோ கண்ணகிக்கு இளங்கோ எழுதிய வரிகள் இன்று வெளியூரிலும் , வெளிநாட்டு நகரங்களிலும் வாழும் ஒவ்வொருவருக்கும் பொருந்துகின்றது

ஊழ்வினை நாடுவிட்டு நாடு விரட்டும், எங்கெல்லாமோ அலைய செய்யும் என்பதை அழகாக சொல்லியிருக்கின்றான் இளங்கோ..

இளங்கோவும் தெய்வீக கவிஞனே..

*****

உதயநிதியினை பார்த்தால் பொறாமையாக இருக்கும் : தமன்னா

உதயநிதியோடு அம்மணி நடித்த படத்தின் விழா ஒன்றில் இப்படி சொல்லியிருக்கின்றார் தமண்ணா

ஆக அம்மணி திமுகவில் இணையும் நாள் தொலைவில் இல்லை போலிருக்கின்றது

*****

அமித்ஷாவும் எடப்பாடியும் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை : செய்தி

இந்து மதத்தின் விரோதியா?

“இந்து மதத்தின் விரோதி என்று என்னைப் பார்த்துச் சொல்வார்கள். அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்

பா.ஜ.கவை எதிர்ப்பது என்பது வேறு, இந்து மதத்தை எதிர்ப்பது என்பது வேறு. இந்திய நாட்டை நாசமாக்கிய நரேந்திர மோடியை எதிர்ப்பது இந்து மதத்தை எதிர்ப்பது ஆகாது. பாரதிய ஜனதா காரர்கள் இந்து மதத்தைக் குத்தகைக்கு எடுத்தவர்கள் அல்ல.

நாட்டையும், நாட்டு மக்களையும் பதற்றத்தில் வைத்து, தனது அரசியல் லாபங்களை அடைய நினைக்கும் பா.ஜ.கவைத் தான் நாம் எதிர்த்து கொண்டிருக்கிறோம்”

இப்படி மிக சரியாக பேசியிருக்கின்றார் ஸ்டாலின், தெளிவான பார்வை, நியாயமான பேச்சு

ஆனால் பேசிய இடம் எது தெரியுமா? முஸ்லீம் லீக் மாநாடு

அந்த மாநாட்டுக்கு ஸ்டாலின் செல்லலாம் பேசலாம்,

ஆனால் கோவை குண்டுவெடிப்பு தினத்தில் செத்தவருக்கு ஒரு அஞ்சலியாவது செலுத்திவிட்டு இப்படி சென்று பேசியிருக்கலாம்

பாஜகவின் பயங்கரவாதத்தை கண்டிப்பேன் என்பது சரி, ஆனால் கோவை குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாதத்தை கண்டிக்க மாட்டோம் என்பது எவ்வகை நியாயம்?

அது பாசிச பாஜக என்றால் இது என்ன வகை திமுக?

தேசத்தின் மிக சிறந்த ஆளுமைகள்

ஆளாளுக்கு தேசத்திற்காய் பொங்குகின்றார்கள், விட்டால் கையில் கிடைத்ததை எடுத்து கொண்டு “பேட்ட” ரஜினி ஸ்டைலில் பாகிஸ்தானுக்குள் புகுந்துவிடுவார்கள் போலிருக்கின்றது

இதில் பல அரைவேக்காடு தலைவர்களும், அகிலேஷ் யாதவ் போல பக்குவமில்லா தலைவர்களும் போர் ஆமாம் போர் என முழங்குகின்றார்கள்

போர் என்பது அடித்துவிட்டு வரும் விஷயமல்ல, தொடங்கினால் அது எளிதில் முடியாது

கார்கில் யுத்தம் நமது எல்லைக்குள் நடந்தது, எல்லை தாண்டி போர் தொடுப்பது என்பது அதுவும் இரு அணுசக்தி நாடுகள், ராணுவ கருவிகள் பலத்தில் சமபலத்தில் இருக்கும் நாடுகள் மோதுவது என்பது கடும் நாசமான விளைவுகளை ஏற்படுத்தும்

மோடி அரசால் நாசமான பொருளாதாரம் இன்னும் ஆகும், எரிபொருள் முதல் அரிசிவரை தட்டுபாடாகும்

போர்சூழல் என்பது கிரிக்கெட் பார்த்து கைதட்டுவது போல் இராது, முழு யுத்தம் என்றால் என்ன என்பதை கொடும் வரலாறு 70 ஆண்டுகளுக்கு முன்புவரை பதிவு செய்திருக்கின்றது

முன்பாவது யுத்தம் வட எல்லையில் நடக்கும் தென்னகம் நிம்மதியாக இருக்கும்

இப்பொழுது அப்படி அல்ல, கோரி, ஷாகீன் என பாகிஸ்தானிய ஏவுகனைகள் தென்னக நகரங்களை குறிவைத்து நிற்கின்றன‌

போதா குறைக்கு அவர்களின் நீர்மூழ்கி வேறு

நிச்சயம் இந்தியா பாகிஸ்தானை வெல்லும், ஆனால் ஓரளவு ஏற்படும் இந்திய சேதத்தை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது

எத்தனையோ இடங்களில் போர் நடத்தும் அமெரிக்கா தன் சொந்த எல்லையில் நடத்துமா என்றால் நடத்த்தாது ஆம் பாதுகாப்பான யுத்தம் என எதுவுமில்லை

யுத்தம் தொடங்க இது சரியான நேரம் அல்ல, இந்திரா தொடங்கிய யுத்தம் எல்லாம் சோவியத்தின் ஆசிபெற்றதாகவே இருந்தது

நல்ல பலசாலியினை பின்னால் வைத்து கொண்டு யுத்தம் நடத்துவதே சாலசிறந்தது, இந்திரா அதனை செய்தார்

இன்றைய காலகட்டத்தில் அப்படி ஒரு பலம் இல்லை , புட்டீன் எதுவும் இத்தாக்குதல் பற்றி பேசவுமில்லை, இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவாகவுமில்லை

யுத்தத்தை தவிர்ப்பதே இப்பொழுது சால சிறந்தது,45 பேருக்கு பழிவாங்க கிளம்புகின்றோம் என 45 ஆயிரம் பேரை சாக கொடுப்பது அறிவுடமை ஆகாது

எல்லா தலைவர்களின் அறிக்கையினையும் பார்க்கின்றோம் ஆனால் இரு தலைவர்களின் அறிக்கையே பக்குவமும் பொறுப்பும் நிறைந்ததாய் இருக்கின்றது

அது ராகுல் மற்றும் பிரியங்காவின் அறிக்கைகள்

உண்மை அறிந்த, நாட்டு பற்று மிக்க , நாட்டை பற்றியும் நாட்டு மக்களின் எதிர்காலத்தையும் நல்வாழ்வினையும் அமைதியினையும் பற்றி கவலைபடும் அறிக்கைகள் அவை

தேசத்தின் மிக சிறந்த ஆளுமைகளாக உருவெடுக்கும் அந்த இருவருக்கும் வாழ்த்துக்கள்,

தேசம் அவர்களால் பெருமை கொள்கின்றது