மலேசியா வாசுதேவன்

தமிழ் திரையுலகில் சீர்காழி, சவுந்தரராஜன் வரிசையில் ஒரு கணீர் குரல் பாடகர் உண்டு, மகா அற்புதமான பாடகர் அவர். தமிழிசையின் அற்புதமான பாடல்கள், அழியா பாடல்கள் எல்லாம் அவர் குரலில் என்றும் ஒலித்துகொண்டே இருக்கும்

அவர் பெயர் வாசுதேவன், அப்படி சொன்னால் தெரியாது மலேசியா வாசுதேவன் என்றால் புரியும்

அவர் பிறப்பில் மலையாளி நாயர் குடும்பம், ஆனால் மலேசியாவில் வளர்ந்ததால் மலேசிய தமிழராகவே அறியபட்டவர், மலேசிய ரப்பர் தோட்ட தமிழரில் ஒருவர்

நடிப்பு அவர் விரும்பிய விஷயமானது, கலை நடிகராக பல நாடகங்களை நடத்தினார். அந்த உற்சாகமே அவரை சென்னை நோக்கி தள்ளியது

1970களில் சென்னை வந்து போராடினார், பெரும் உழைப்பு, அவமானங்களுக்கு இடையே திருப்புமுனை இளையராஜா குழுவினரை அவர் சந்தித்ததில் கிடைத்தது

இளையரஜா குருநாதர் ஜி.வெங்கடேஷ் இசையில் முதல்பாடலை பாடினார்

நடிகராகும் கனவில் வந்தவருக்கு பாடகர் வாய்ப்பே அந்த திரையுலக வாசலை திறந்துவிட்டது

“ஆட்டுகுட்டி முட்டையிட்டு” பாடல் அவரை அடையாளம் காட்டிற்று, பின் எங்கோ சென்றார்

குறிப்பாக 1980 சிவாஜிகணேசனுக்கு அவரின் குரல் அட்டகாசமாக பொருந்தியது, படிக்காதவன், முதல் மரியாதை போன்ற படங்களின் பாடல்கள் என்றும் முதல்தரம்

ஒரு விஷயம் சொல்லலாம் 1960களிலே சிவாஜிக்கு பாடும் குரல் அவருக்கு இருந்தது, ஆனால் விதி 1980களில்தான் கொண்டு சேர்த்தது

“‘கோடைக்கால காற்றே…’ ‘அள்ளித் தந்த பூமி’, அடியோடு பூங்கொடியே’, தங்கச் சங்கிலி’ ‘ ஆஹா வந்திருச்சி’ ‘வா வா வசந்தமே’ ‘பூங்காற்று திரும்புமா, ‘ஆசை நூறுவகை’, ‘தென் கிழக்கு சீமையிலே’ “வெட்டி வேரு வாசம்” என 1980 முதல் 2000 வரை அற்புதமான பாடல் உலகம் 
அவர் கையில் இருந்தது

குஷ்புவின் பிரத்யோக பாடலான “வைச்சாலும் வைக்காமல் போனாலும் மல்லி வாசம்” என்ற அந்த பாடலின் மலேசியா வாசுதேவன் குரலை மறக்க முடியாது.

ரஜினிக்கு கூட “சிங்கம் ஒன்று புறப்பட்டதே ” அவர் பாடியது, இனி ரஜினி அரசியல் கூட்டம் தொடங்கினால் தொடக்கபாடல் அதுதான்

ஒரு விஷயம் சொல்லலாம்

தமிழ் சினிமாவுலகில் எம்.எஸ் விஸ்வநாதன் கண்ணதாசன் கூட்டனி அற்புதமானது, டி.எம் சௌந்திரராஜன் அதனை முழுமை அடைய செய்தார்

அதன் பின் இளையராஜா, கங்கை அமரன், வைரமுத்து, இளையராஜா போன்றோர் கூட்டணியாக இருந்த பொற்காலம் உண்டு

அந்த பொற்காலத்தில் நிச்சயம் மலேசியா வாசுதேவனுக்கு இடமுண்டு, அந்த அற்புத பாடல் கூட்டணியினை நினைக்கும் பொழுதெல்லாம் அவர் நினைவுக்கு வருவார்,

அவர்களின் அற்புதமான பாடல்கள் வாசுதேவனின் குரலால் முழுமை அடைந்தன‌

ஒரு விஷயத்தில் இளையராஜா கொடுத்து வைத்தவர், கண்ணதாசன் வாலி வைரமுத்து போன்ற கவிஞர்களும், பாலசுப்பிரமணியம் ஜேசுதாஸ் மலேசியா வாசுதேவன் போன்ற அற்புதபாடகர்களும் அவருக்கு வாய்த்தனர்

இளையராஜா எனும் மகா கலைஞனின் வெற்றியில் காலம் அமைத்து கொடுத்த இந்த வாய்ப்புகளும் உண்டு

பல படங்களில் காமெடி, வில்லன், குணசித்திரம் என நடித்திருந்தாலும், மலேசியா வாசுதேவனின் பாடல்கள் நிலைபெற்றவை

சீர்காழி கோவிந்தராஜனுக்கும் டி.எம் சவுந்தராஜனுக்கும் பின்பு உச்சஸ்தானி பாடல்களை ஒரு பாடகன் அட்டகாசமாக பாடினான் என்றால் அது வாசுதேவன் ஒருவரே

மறக்கமுடியா பாடகர் அவர்.

இன்று அவரின் பிறந்த நாள் , கடல்கடந்து வந்த அந்த இசைதமிழனுக்கு ஆழ்ந்த அஞ்சலி

இனம்புரியா சோகத்தை எப்பொழுதும் சொல்லும் “பூங்காற்று திரும்புமா” பாடல் இன்று ஏதோ அர்த்தத்தோடு ஒலிப்பது போல் தோன்றுகின்றது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s