புல்லட்டில்

1970களில் முக ஸ்டாலின் மிசாவில் அடிவாங்கும்பொழுது ஒருவர் எடப்பாடி கிராம வீதிகளில் புல்லட்டில் சுற்றிகொண்டிருந்தார்

அந்த சாதாரண புல்லட் சவாரிக்காரன் பின்னொரு நாளி முக ஸ்டாலினுக்கு பெரும் அரசியல்தலைவலியாக மாறுவான் என யாராவது நம்பியிருக்க முடியுமா?

காலம் யாரை எப்பொழுது எங்கே நிறுத்தும் என்பது நம் கையில் இல்லை என்பதும், குறித்த நேரம் வரும்பொழுது பல தத்துவங்கள் விளங்கும் என்பதும் இதுதான்

விதியின் கரங்கள் இழுக்கும் பொழுது தெரியாது, எங்கவாது நிறுத்து வைத்து அது சிரிக்கும்பொழுதுதான் தெரியும் என்பது பழனிச்சாமி விஷயத்தில் தெளிவாகின்றது

புல்லட்டில் பின்னால் இருப்பது பன்னீர்செல்வம் அல்ல, அவர் அப்பொழுது தேனி பக்கம் சைக்கிளில் சுற்றிகொண்டிருந்திருபார்

அண்ணன் யோசிச்சிட்டே இருக்கேன்

தம்பி, ஒண்ணு நுட்பமா விளங்கிகிடனும், நடக்குறது நாடாளுமன்றத்துக்கான தேர்தல், நாம போட்டி போட்டு 40 தொகுதிலியும் ஜெயிச்சிட்டா நம்மள பிரதமராக்கிருவாங்க‌

அப்புறம் தமிழர் பிரச்சினைய பேசமுடியாது, காஷ்மீர பாரு, பீகார பாருண்ணு தமிழர் பிரச்சினையில இருந்து நம்மள காலிபண்ணிருவானுக‌

ஈழவிடுதலைக்காக அண்ணன் கொடுத்த துப்பாக்கி பயிற்சி எல்லாம் நான் பாகிஸ்தான் போரில் வீணாக்கணும்

அதுமட்டுமா ராஜபக்சே வந்தா கைகொடுக்கணும் கும்பிடனும், அதுதான் இவங்க திட்டம், தாங்குமா? நடக்குமா?

ஈழபிரச்சினை காவேரின்னு நமக்கு ஏகபட்ட வேலை இருக்கு அதை எல்லாம் காஷ்மீர் , சிக்கிம் பார்டர் சிந்து நதின்னு திருப்பிருவானுக‌

தமிழ்நாடெல்லாம் விவசாயம் செய்ய வேண்டிய, ஆடுமாடு மேய்க்க வேண்டிய நான் 4 நாட்டுக்கு போகணும், பார்லிமென்ட் போகணும் இப்படி சிக்க வச்சிருவானுக‌

இதெல்லாம் நுட்பமான தந்திரம் தம்பி, தமிழருக்காக பேசுற ஒரே ஆளு சீமான், அவன பிரதமராக்கி இந்திய தேசியத்துக்கு பொதுவா பேசவச்சிட்டா இந்த இனம் நாதியற்ற இனமாகி போயிரும்

இதுக்குத்தான் தேர்தல்ல இருந்து ரஜினி விலகி நம்மள சிக்க வைக்க பார்க்குறாறு, தம்பிகள் இதுபற்றி பேசவேண்டாம் இந்த பெரும் தமிழர் விரோத தந்திரத்த எப்படி முறியடிக்கலாமுண்ணு அண்ணன் யோசிச்சிட்டே இருக்கேன்”

தேர்தல் துளி – 21 பெப்ரவரி 2019 (2)

பயப்படாம வாங்க

“அண்ணே புரொகிராம் சொல்லுங்க..

இப்போ இந்திய கம்யூனிஸ்ட்கிட்ட பேசபோறோம்

3 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட்

அப்புறம்

3.30க்கு வாசன் வருவார்

அப்புறம்

4 மணிக்கு மார்கிஸ்ட் கம்யுனிஸ்ட் தொகுதி புடுங்க வருது

அப்புறம்

5 மணிக்கு திருமா வருவார், அவரோட மல்லுகட்டனும்

அப்புறம்

6 மணிக்கு வைகோ வருவார், அவருக்கும் தொகுதி கொடுக்கணும்..

அப்புறம்

அதுக்கப்புறம் நம்ம கட்சிக்குள்ள சண்டை வரும், கனிமொழி குரூப் , தயாநிதி குருப்புண்ணு அடுத்த பங்கீடு

அண்ணே அதை நாளை வச்சுக்கலம்ணே முடியலண்ணே

அட இதுக்கே இப்படின்னா எப்படி? ராஜ்சபா எம்பி பங்கீடும் இப்பவே முடியணும்னு அடுத்த பஞ்சாயத்து இருக்கு

அண்ணே விட்ருங்கண்ணே…

இல்ல தம்பி, தொகுதிபங்கீடுண்ணா உட்கட்சிக்கும் சேர்த்துண்ணு எல்லோரும் முடிவா வந்திருக்காங்க, விடமுடியாது வாங்க‌

அண்ணே வேண்டாம்ணே

இல்ல தம்பி பயப்படாம வாங்க, பார்த்துக்கலாம்..

கருப்பு எம்ஜிஆர் கூட்டணி

“கொஞ்சநாளா உடம்பு சரியில்ல நாட்டு நடப்பு தெரியல‌, நீங்க பாஜக தரப்புல இருந்து வந்திருக்கீங்களா? இல்ல காங்கிரசா இல்ல வேற ஏதும் கமலஹாசன் கட்சியா?

கேப்டன் கிண்டல் எல்லாம் வேண்டாம், நான் இப்பொ காங்கிரஸ்

அப்படியா நானும் என் கட்சில சேர வந்துட்டீங்கண்ணு நினைச்சேன்

இல்ல, நலம் விசாரிக்க வந்தேன், ஏன் இப்படி ஆயிட்டீங்க‌?

பாவி பயலுக, கருப்பு எம்ஜிஆர்னு எப்போ சொன்னானுகளோ அப்ப தொடங்குன நோய் இன்னும் தீரல சார்

நான் “அடுத்த எம்ஜிஆர்”னு என்னை சொன்னேன், நீங்க “கருப்பு எம்ஜிஆர்”னு உங்களை சொன்னீங்க , இரண்டுபேரும் எப்படி ஆயிட்டோம் பார்த்தீர்களா?

ஆமாங்க, அந்த ஆளு பேரை சொல்லிட்டு வந்த ஒருத்தனும் உருப்படல, “சின்ன எம்.ஜி.ஆர்” கூட ஜெயில்ல இருக்காரு

அதெல்லாம் இருக்கட்டும், நீங்க பழசெல்லாம் மறந்துட்டுகூட்டணிக்கு வரணுமாம் ராகுல் சொன்னாரு

ராகுலுக்கும் எனக்கும் என்ன? உண்மைய சொல்லுங்க ஸ்டாலின் தான சொன்னாரு

ஆமாங்க, எல்லாத்தையும் மன்னிச்சிட்டு வந்துருங்க, 2 பேருக்கும் இல்ல எங்களோட சேர்த்து 3 பேருக்கும் நல்லது

என் மண்டபத்தை இடிச்சத கூட மன்னிச்சிருவேன் ஆனா அந்த வைகோவ கூட வச்சிருக்காருல்ல அத மன்னிக்கவே மாட்டேன், அவர அடிச்சி துரத்திட்டு வாங்க‌

அய்யோ அவரால ஸ்டாலின் படுறபாடு முடியலிங்க, உள்ளேயும் வைக்க முடியல, வெளியில அனுப்பனும்னு முடிவு பண்ணினா முன்னால திமுகவ கேவலமா திட்டுன வீடியோவ அவரே ரிலீஸ் பண்ணி சிரிக்கிறார், வெளிய விட்டா அவ்வளவுதான்

சரி, 10 சீட் தரசொல்லுங்க கூடவே சுதீஷ ராஜ்யசபா எம்பி ஆக்கணும், முடிஞ்சா கொடுங்க இல்ல பழனிச்சாமி 20 கொடுக்க தயாரா இருக்காரு

20 ….ஆ

ஆமாய்யா அவரு வள்ளல், தமிழ்நாட்டில் சீட் இல்லண்ணா இந்தியாவுல வேற எங்க வேணும்னாலும் வாங்கிதருவாராம்

இல்லீங்க எங்களுக்கே 10 தான்

அதான் 10 இருக்குல்ல‌ அதுல 5 நீங்க குடுங்க திமுக 5 கொடுக்கட்டும் , கணக்கு சரியா வரும்

அது…

இனி இந்தபக்கம் வருவீங்க…”

சாகசமாக காங்கிரஸ் கூட்டணி ?

மிக சாகசமாக காங்கிரஸ் கூட்டணியினை உறுதி செய்தார் கனிமொழி , உடன்பிறப்புக்கள் சிலாகிப்பு

இதில் என்ன சாகசம்?

காங்கிரசால் அதிமுக பக்கம் செல்லமுடியாது அங்கே கையில் கம்போடு காவல் இருக்கின்றது பாஜக‌

மூன்றாம் அணி என்னாகும் என்பது காங்கிரசுக்கு தெரியாததல்ல‌

கடந்த தேர்தலில் திமுகவும் காங்கிரசும் தனித்து நின்று ஒரு இடமும் கிடைக்காமல் முதுகில் வாங்கிய அடி இருவருக்கும் மறக்குமா?

காங்கிரஸ் இல்லா காலங்களில் திமுக வாங்கியிருக்கும் அடி கொஞ்சமல்ல, அது போக மம்தா பேனர்ஜி பெயரை சொல்லி எல்லாம் திமுக இங்கு வாக்கு வாங்க முடியாது

இருவருக்கும் வேறு தெரிவு இல்லை, வாழ்வா சாவா போராட்டத்தில் இருக்கும் ஸ்டாலினுக்கு சுத்தமாக வேறு வழி இல்லை

ஆக வேறுவழியே இருவருக்கும் இல்லை

இதில் என்ன சாகசத்தை கனிமொழி செய்தார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி?

எப்படி சமாளிக்க போறோம்?

“அவர் போக்குல ஸ்டாலின் 10 தொகுதி தமிழ்நாட்டில கொடுத்திட்டார்

இந்த 10 சீட்டுக்கு 10 ஆயிரம் பஞ்சாயத்து வரும், அவரா பார்பார், நாமதான் பார்க்கணும். எப்படி எல்லாம் கோஷ்டி கோஷ்டியா வருவாங்க தெரியுமா?

கண்டிப்பா ஜெயிக்க மாட்டானுக, ஜெயிக்கிற தொகுதிய கேட்டு வாங்கவும் மாட்டானுக‌
ஆனா இவனுகளோட செய்யுற‌ பஞ்சாயத்து இருக்கே அய்யோ…..

வர்ற கடிதம், பேக்ஸ் எல்லாம் அவனுக மொட்டை கடிதமாவே இருக்கும், டெல்லிக்கு வர்ற பிளைட்ல எல்லாம் அவனுகதான் வருவானுக‌

தேர்தல் முடியுரவரை தமிழ்நாட்டு காங்கிரஸ்காரனுக தூங்கவிட மாட்டானுகளே. எப்படி சமாளிக்க போறோம் மைசன்?

தேர்தல் வரைக்குமா? அதுக்கு பின்னாடி ஏன் தோற்றோம் தெரியுமான்னும் ரவுண்டுகட்டி வருவாங்க மம்மி, அதுதான் பயமா இருக்கு..”

5 தொகுதி

“அக்கோவ் 5 தொகுதில உங்களுக்கு சீட் இல்லியாம் , செய்தி வருது

என்ன நிறுத்தினாலும் நாம ஜெயிக்கவா போறோம்? சீட் கிடைக்காத வரைக்கும்தான் மதிப்பும் கெத்தும் தம்பி, கிடைச்சி தோத்துட்டா எல்லாம் போச்சி , அந்த லட்டு டப்பா எடு, கொண்டாடுவோம்”

தேர்தல் துளி – 21 பெப்ரவரி 2019 (1)

திமுகவை யாராலும் தோற்கடிக்க முடியாது: முக ஸ்டாலின் பேச்சு

இதுவரை தோற்ற படு தோல்வி பற்றி கேளுங்கள், அது போன மாசம் நான் சொல்றது இந்த மாசம் என வடிவேலு பாணியில் பதில் வரும்

கூட்டணி உடன்பாடு

காங்கிரஸுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள்: திமுக கூட்டணியில் உடன்பாடு

அந்த பத்து தொகுதியில் ஒன்றை தலைவி குஷ்புவிற்கு ஒதுக்க வேண்டியது காங்கிரசின் கடப்பாடு

கட்டாய திருமணம்

அதிமுக கூட்டணி கட்டாய திருமணம் : திருநாவுக்கரசர்

மிஸ்டர் திருநா, எத்தனையொ முறை தமிழக அரசு டெல்லி காங்கிரசால் டிஸ்மிஸ் செய்யபட்டது, அதெல்லாம் கட்டாய விவாகரத்தா?

அதிமுக கூட்டணி

ஜெயலலிதாவால் அமைக்க முடியாத கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது: செல்லூர் ராஜூ

அதாவது ஜெயா இருக்கும் வரை மிரட்டபடாத அதிமுக மந்தை அவர் இல்லா காலத்தில் நரி புகுந்த ஆட்டுமந்தையாகிவிட்டது என பொருள்

வலுவான கூட்டணி

என்னதான் மாங்காய் புளியங்காய் என கலாய்த்தாலும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசினாலும் இப்போதைக்கு வலுவான கூட்டணி அதிமுக கூட்டணி, அது இன்னும் வலுவான கூட்டணியாக மாறிகொண்டிருக்கின்றது

ஒரு அராஜக ஆட்சி நடப்பதாக சொல்லும்பொழுது எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் கடப்பாடு பிரதான எதிர்கட்சிக்கு உண்டு கலைஞர் அதைத்தான் செய்தார்

எதிரியினை தனிமைபடுத்துவது அரசியலில் ஒரு சாணக்கியதனம்

இங்கோ எதிர்கட்சி தனிமைபடுத்தபட்டு ஆளும் கட்சி பல கூட்டணிகளோடு வீற்றிருக்கும் அதிசயம் அரங்கேறியிருக்கின்றது

இதன் விளைவு நல்லதாக இருக்க வாய்ப்பு குறைவு

இது முக்கோண போட்டி திமுக அதிமுக தினகரன் என மூன்று முக்கிய சக்திகள் களம் காணும் போட்டி

இதில் தினகரனால் தெற்கே ஏற்படும் சரிவை பாமக மூலம் வடக்கே ஈடுகட்ட துல்லியமாக திட்டமிட்டிருக்கின்றது பழனிச்சாமி தரப்பு

ஆக ஒரு எதிரி பலம்பெற விட்டுவிட்டது திமுக‌, இன்னும் யாரெல்லாம் பலம்பெற வாய்ப்பு கொடுப்பார்களோ தெரியாது, ஆனால் கொடுப்பார்கள்

செய்த தவறையும் செய்துவிட்டு அதை மறைக்க அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாமக தங்கள் பக்கம் வராமலே போக அவர்களை திட்டி தீர்த்து மாபெரும் தவறை மேலும் செய்கின்றது திமுக

இன்றைய துளிகள் (1)

மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓராண்டு நிறைவு- கட்சி அலுவலகத்தில் கொடியேற்றினார் கமல்

ஓராண்டாக என்ன செய்தார், மய்யம் எங்கே வளர்த்திருக்கின்றது என பார்த்தால் ஒன்றுமே இல்லை

கட்சி தொடங்கும் பொழுது அருகில் இருந்த ஸ்ரீபிரியா உள்ளிட்டவர்களை கூட இப்பொழுது காணவில்லை

சொல்லிகொள்ளாமல் ஓடிவிட்டார்கள் போலிருக்கின்றது

திரையில் கமலஹாசன் ஜெயித்திருக்கலாம் ஆனால் அரசியலில் கேப்டன் விஜயகாந்த் பக்கம் கூட அவரால் வரமுடியாது என்பதுதான் நிஜம்

பிஞ்சு குழந்தைகளுக்கு கூடுதல் சுமை

வெள்ளையன் கல்வி கொடுக்க ஆரம்பித்த காலத்தில் உயர் படிப்பெல்லாம் அதிகமில்லை

இதனால் 8ம் வகுப்பும் ஒரளவு எழுதபடிக்க தெரிந்த 5ம் வகுப்பும் அவனது ஆட்சிக்கு தேவையான கல்வியாய் இருந்தது, அதெல்லாம் பழங்காலம்

இன்று பி.எச்டி படிப்பே கட்டைபீடி போல ஆளாளுக்கு கையில் வைத்திருக்கும் காலத்தில் 5ம் வகுப்பு 8ம் வகுப்பு கடும் கட்டாய தேர்வு என்பது கற்காலத்திற்கு திரும்புவதை போன்றது

அல்லது கடுமையான உள்நோக்கம் கொண்டது

பிஞ்சு குழந்தைகளுக்கு கூடுதல் சுமை கொடுக்கும் இத்திட்டம் நிறுத்தபட வேண்டும், கிராமபுற மாணவர்களை கல்வியிலிருந்து விரட்டும் ஆபத்தும் இதிலிருக்கின்றது

நிச்சயம் இது அகற்றபட வேண்டும் என்பதில் மாற்றுகருத்தே இல்லை

சவுதி முதலீடு

பொருளாதார வலிமையான நாடான சவுதி இந்தியாவில் 100 பில்லியன் டாலருக்கு முதலீடு செய்ய முன்வந்திருக்கின்றது

நிச்சயம் இது நல்ல விஷயம், ஈரானோடும் நல்லுறவு சவுதியிடமிருந்தும் முதலீடு என்பது இந்தியாவின் ராஜதந்திர வெற்றி

ஏராளமான இந்திய தொழிலாளர்கள் சவுதியில் பணியாற்றும் நிலையில் சவுதி இந்திய ஒத்துழைப்பு மகா அவசியம்

காவி அரசு என்ற நிலையிலும் இஸ்லாமிய நாடுகளுடன் நல்ல உறவினை பேணுவது நல்ல விஷயம்

ஆனால் அதே இஸ்லாமிய நல்லுறவினை இந்தியாவிலும் மோடி தொடர்ந்தால் நன்றாகத்தான் இருக்கும்

தமிழக மாப்பிள்ளை

தமிழக மாப்பிள்ளை கிடைத்தால் திருமணம் செய்ய தயார் : தமண்ணா அறிவிப்பு

Senthil Kumar Chennai , Omm Prakashபோன்றவர்கள் கூடி விவாதித்து ஒரு முடிவுக்கு வந்து தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுத்து தமண்ணாவிடம் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லது

வாய்ப்புகிடைக்காதவர்கள் ஹன்சிகா அறிவிப்பு வரும்வரை காத்திருக்கவும்

சீன பாரம்பரியம்

சொந்த ஊரில் இருந்து சிலமைல் தள்ளி சென்றாலே தன் பாரம்பரியத்தை மறப்பவன் தமிழன், ஆனால் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தன் பாரம்பரியத்தை இழுத்து செல்வதில் சீன இனம் தன்னிகரற்றது

அப்படி சீன புத்தாண்டை கொண்டாடுகின்றார்கள், சந்தேகமில்லை அக்காலத்தில் பொங்கல் விழா தமிழகத்தில் 1 மாதம் கொண்டாடபடும் என்பார்கள் அல்லவா அப்படி அவர்கள் புத்தாண்டும் கிட்டதட்ட 1 மாதம் இழுக்கும்

1 மாதமென்றால் முழுக்க அல்ல மாறாக முக்கிய நேரங்களை கொண்டாடுவது

தமிழருக்கு காணும் பொங்கல் என்றொரு பண்டிகை உண்டல்லவா? அதாவது பொங்கலின் மூன்றாம் நாள் உறவினரை காண்பது. அதன் அர்த்தம் என்னவென்றால் சும்மா உறவினரை மட்டும் காண்பதல்ல ஏதும் திருமண சம்பந்தம் இருந்தால் பேசிமுடிப்பதும் உண்டு

ஆம் கன்னி பொங்கல் காணும் பொங்கல் என்பது அதுதான் அக்காலத்தில் கன்னிபெண்களை காணும் சம்பிரதாயமாகவும் அது இருந்திருக்கின்றது

சுயவர திருவிழாகவும் அது இருந்திருக்கின்றது

அப்படி சீனருக்கு சீன புத்தாண்டின் 15ம் நாள், அக்காலத்தில் நமது ஊரில் மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடுவது போல சீனருக்கு சில சம்பிரதாயம் உண்டு

அதாவது சிகப்பு ஆரஞ்சு அவர்களுக்கு செழுமை மற்றும் தங்கத்திற்கான அடையாளம், அக்காலத்தில் சீன கன்னிகள் /காளைகள் தனக்கு பிடித்தவனுக்கு அதை கொடுப்பார்கள் என்பதும், பையனோ பெண்ணோ கிடைக்காத போன்ற கோஷ்டிகள் தங்கள் ஆசையினை அதன் மேல் எழுதி கடலிலோ ஆற்றிலோ எறிவார்கள் என்பதும் அவர்கள் வழக்கம்

அதை ஆற்றிலோ கடலிலோ எடுப்பவர்கள், அட நம்மை போல ஒருவர் ஆள் தேடுகின்றார்களே என தேடிவருவார்கள் என்பது அடிப்படை நம்பிக்கை

அக்கால சீன சுயவரம் இது.

இந்த பன்னெடுங்கால நம்பிக்கை கலாச்சாரத்தை இன்றும் சீனர்கள் கொண்டாடுகின்றார்கள்

இது மாறிவிட்ட காலம் அல்லவா? அதனால் ஆரஞ்சுபழத்தில் கைபேசி நம்பர், ஈமெயில் முடிந்தால் இன்ஸ்டாகிராம் அடையாளம் என எல்லாம் எழுதி எறிகின்றார்கள்

வேடிக்கையாக இருந்தாலும் தங்கள் பாரம்பரியத்தை காப்பதில் அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி

நிச்சயம் விஞ்ஞான உலகில் நாகரீக உச்சத்தி வாழ்ந்தாலும் தங்கள் பாரம்பரியத்தை விடாமல் காப்பாற்றிவருகின்றார்கள்

இதனால் ஜோடி சேர்தார்களா வாழ்ந்தார்களா என்பது அல்ல பிரச்சினை, அவர்கள் கலாச்சாரத்தை விஞ்ஞான காலத்திலும் காத்து வருகின்றார்கல் அல்லவா? அதுதான் விஷயம்

‘சாப் கொ மே” (Chap Goh Me ) என இதை கொண்டாடுகின்றார்கள், கடந்த செவ்வாய் அன்று கொண்டாடினார்கள்

மிக சரியாக மாசி மகம் என தெப்பதிருவிழா போன்ற கொண்டாட்டங்கள் நடக்கும் பொழுது இதுவும் நடப்பது ஆச்சரியம்

கூட்டி கழித்து பார்த்தால் தமிழரின் பொங்கல் கலாச்சாரமும் அதன் கொண்டாட்டமும் காணும் கன்னி பொங்கலும் இன்னபிறவும் சீன புத்தாண்டையொட்டி வருவதால் அக்காலத்தில் தமிழகமும் புத்தாண்டை தை மாதமே கொண்டாடியிருக்கலாம் வாய்ப்பு இருக்கின்றது

சீனரின் சிங்க டிராகன் நடனம் இன்னும் பழம் கலாச்சாரங்களை பார்க்கும் பொழுது சிலப்பதிகாரம் கண்ணுக்குள் வருகின்றது

தமிழருக்கும் இந்திர விழா, பூந்தொடை விழா என ஏகபட்ட விழாக்கள் இருந்திருக்கின்றன, தொன்று தொட்டு கொண்டாடியிருக்க்கின்றார்கள்

இன்று எல்லாம் போயிற்று, அதை கொண்டாடிய குறிப்பு இலக்கியங்களில் உண்டே தவிர இன்று கொண்டாடுவோர் அல்லது அக்கொண்டாட்டம் அறிந்தோர் யாருமில்லை

ஜல்லிகட்டும் பொங்கலும் மட்டுமே எஞ்சி இருக்கின்றன, ஏக்க பெருமூச்சு மட்டுமே மிஞ்சுகின்றது

கலாச்சாரங்களை தொலைப்பதில் தமிழனை விட இன்னொரு இனம் இருக்கவே முடியாது.

அவன் விதி அப்படி

உலக தாய்மொழி தினம்

இன்று உலக தாய்மொழி தினமாம், அதனால் என்னரும் தாயே தமிழே என பலர் கலைஞர் பாணியிலும், எடுடா கொலை வாளை என பாரதிதாசன் பாணியிலும் பலர் முழங்கிகொண்டிருக்கின்றனர்

தாய்மொழி என்பது ஒவ்வொருவருக்கும் தாயினை விட முக்கியமானது, மொழியே ஒருவனுக்கு சகலமும், மொழி வழியே அவன் உலகை அறிகின்றான், புரிகின்றான் தன் நிலை பகிர்கின்றான்

தாய்மொழி ஒருவனுக்கு உயிர் சந்தேகமில்லை, ஆனால் மற்ற மொழிகளை படிப்பது ஒன்றும் தவறல்ல. தமிழகத்தில் என்ன நடந்ததென்றால் இந்தி வலுகட்டாயமாக ஆட்சி மொழி என அறிவிக்கபட்டது முதல் தவறு

1930களிலே அக்கொடுமை ஆரம்பித்தது, இந்தியில் 14 வகையான இந்தி உண்டு என்கின்றார்கள். இதில் 2 கோடிபேர் மட்டும் பேசும் இந்தி எல்லா மக்கள் மேல் வலுகட்டாயமாக திணிக்கபட்டது நிச்சயம் தவறு

இதுதான் இங்கு போராக மாறிற்று பின் அரசியலாக மாறிற்று, பின் என்னவெல்லாமோ ஆயிற்று

இந்தி எதிர்ப்பே தமிழுணர்வு ஆயிற்றே தவிர, தமிழை எப்படி வளர்ப்போம், பாதுகாப்போம் என்ற பிரக்ஞை எல்லாம் கொஞ்சமும் இல்லை

இதனால் தமிழகத்தில் தமிழ் தடுமாறிற்று, இங்கு தமிழ் வளர்ந்திருக்க வெண்டுமானால் பல விஷயங்கள் சட்டமாக்கபட்டு தமிழ் திணிப்பு நடந்திருக்க வேண்டும்

அதனை செய்யாமல் தமிழ் மிக கடுமையாக சீரழிந்துவிட்டது, இந்தி எதிர்ப்பில் மிக முண்ணணியில் நின்றவர்கள் தண்டவாளத்தில் உருண்டவர்கள் டிவி கூட தமிழ் உச்சரிப்பில் கவனமற்று போயிற்று. அந்த தமிழை கேட்டாலே கோபம் வருமளவு தமிழ்கொலை நடக்கின்றது

இவை எல்லாம் ஒப்புகொள்ள வேண்டிய விஷயங்கள், இன்னும் தமிழ் இங்கு சீரடையவில்லை

தமிழும் இல்லா, முறையான ஆங்கிலமும் இல்லா ஒரு மாதிரியான மொழி பேசும் தலைமுறை இங்கு உருவாகிகொண்டிருப்பது தமிழுக்கு மகா ஆபத்து

தமிழை காப்பவர்களில் ஈழத்தவர்கள் குறிப்பிடதக்கவர், அவர்களின் பெரும் போராட்டமே தமிழுக்காக என்பது மறக்க முடியாதது, ஆனால் முறையற்ற தலமையின் கீழ் நாசமானது

மலேசியாவிலும் இன்னும் ஈழம் போன்ற‌ சில நாடுகளிலும் அந்த செந்தமிழ் பசுமை மாறாமல் இருக்கின்றது, கேட்க கேட்க சுகம். காதில் தேன் வந்து பாய வைப்பது அந்த தமிழ்தான்

உலகில் தமிழ் சீரழிந்து கிடக்கும் ஒரே இடம் தமிழகம், அதனை முடிந்த அளவு விரைவில் மீட்டல் வேண்டும்

இப்படி வீழ்த்தியதில் கட்சி, அரசியல், சினிமா , ஊடகம் என எல்லா தரபிற்கும் பெரும் பங்கு உண்டு

அதில்தான் சுத்த தமிழில் பாடல் எழுதுவேன் என Kavignar Thamarai சொல்வதும், அவர் தவமிருப்பதும் மகா ஆச்சரியமாக பார்க்கபடுகின்றது.

Kavignar Thamarai உணர்வுள்ள‌ தமிழச்சி , அவர் கடமையினை அவர் செய்வது ஆச்சரியமாம்

நல்ல நீர் அருந்துபவரை என்னவெல்லமோ கலந்த சாக்கடை நீர் அருந்துபர் பார்ப்பது போல் பார்க்க வேண்டிய ஆச்சரிய பார்வையினை நிச்சயம் Kavignar Thamarai மீது வீசவேண்டும்,

ஆனால் அவை எல்லாம் இங்கு நடக்கவில்லை

தாமரை பாணியில் எல்லோரும் கிளம்பிற்றால் நிச்சயம் தமிழில் மாற்றம் வரும். நல்ல தமிழ் எங்கும் பொங்கும்

இது அடித்து மிரட்டி கொண்டுவரவேண்டிய விஷயம் அல்ல, ஒவ்வொரு தமிழனும் தமிழின் சிறப்பறிந்து, அதனை காக்கும் அவசியமறிந்து பேசினாலே போதும்

இந்த அறிவிப்பு பலகை, கடை பலகை, டிவி, வானொலி, திரைப்படம் என கொஞ்சம் கொஞ்சமாக சுத்த தமிழை கொண்டுவந்தால் அடுத்த தலைமுறை அட்டகாசமாக விழிக்கும், நிச்சயம் செய்ய வேண்டிய விஷயம் இது

இன்று ஏன் உலக தாய்மொழி தினம்

விஷயம் இதுதான் பாகிஸ்தான் பிரிந்தபின் கிழக்கு பாகிஸ்தானுக்கும் மேற்கு பாகிஸ்தானுக்கும் மொழி தகறாறு வந்தது. கிழக்கு பாகிஸ்தானியர் வங்கம் ஆட்சிமொழி என்றனர் மேற்கு பாகிஸ்தான் உருது என்றது

பிரச்சினை கலவரமானது 1952ல் துப்பாக்கி சூடுவரை சென்று மாணவர்கள் இதே நாளில் பலியாகினர்

இது பெரும் நிகழ்வாக கருதபட்டு இந்நாள் தாய்மொழி நாள் ஆயிற்று

ஆனால் இதற்கு முன்பே 1939ல் தமிழகத்தில் இந்தியினை எதிர்த்து பெரும் போர் வெடித்தது, நடத்தியது திமுக அல்ல அன்று திராவிட கழகம் கூட இல்லை

நீதிகட்சி அதனை நடத்தியது கலைஞருக்கு அன்று வயது 14 அவரும் திருவாரூர் பக்கம் ஊர்வலம் எல்லாம் சென்றார்

அந்த போராட்டம் தமிழகம் மட்டுமல்ல சென்னை மாகாணம் முழுக்க நடந்தது, அதில் சிறைக்கு சென்று கொடுமை அனுபவித்த நடராசன் முதலாவதும் தாளமுத்து இரண்டாவதுமாய் செத்தார்கள்

முதல் மொழிப்போர் தியாகிகள் இவர்கள்தான். நடராசன் இறந்த ஜனவரி 15ம் தேதிதான் நிச்சயம் தாய்மொழி தினம் ஆகியிருக்க வேண்டும்

ஆனால் ஆகவில்லை ஏன்?

வெள்ளையன் ஆட்சியில் மொழிக்காக ஒருவன் இறந்தால் உலகம் கண்டுகொள்ளாது ஆனால் சொந்தநாட்டு ஆட்சியில் மொழிக்காக ஒருவன் இறந்தால் ஓடிவரும்

தமிழன் சாவு அன்றிலிருந்தே வீணாகத்தான் போயிருக்கின்றது

அந்த தாளமுத்து நடராசன் நினைவாகத்தான் சென்னையில் ஒரு அரசு கட்டத்திற்கு அவர்கள் பெயர் சூட்டபட்டது

எப்படி ஆயினும் இந்த பிப்ரவரி 21க்கு சிறப்பு உண்டு

ஆம், 1939ல் வெடித்த எதிர்ப்பினை கண்டு ராஜாஜி அரசு பினவாங்கி 1940 இதே பெப்ரவரி 21ல் இந்தி ஆணையினை திரும்பபெற்றது

பின் பலமுறை ராஜாஜி கோஷ்டி இந்தியினை திணிக்கபார்த்தும் தமிழகமும் திராவிட இயக்கமும் முறியடித்து ராஜாஜியினை வீட்டுக்கும் அனுப்பின‌

ஆனால் ஆட்சிக்கு வந்தபின் திராவிட இயக்கம் தமிழை சரியாக காக்கவில்லை வளர்க்கவில்லை என்பதில் மாற்று கருத்து இல்லை, அதே நேரம் மக்களிடமும் தமிழுணர்வு விட்டுபோயிற்று என்பதும் மறுக்கமுடியாத விஷயம்

அது இருக்கட்டும், உலக தாய்மொழி தினம் பெப்ரவரி 21 என உலகம் சொல்ல, இது இந்தியினை தமிழகம் திருப்பி அடித்த வெற்றிநாள் என தமிழகம் கொண்டாட வேண்டும்

ஆனால் யாரும் அப்படி கொண்டாடியதாக தெரியவில்லை

திமுகவில் சொல்ல ஆளில்லை, எதிர்கட்சிகளுக்கோ சொன்னால் நீதிகட்சி திமுகவிற்கு விளம்பரம் என சொல்லவுமில்லை

இங்கு எல்லாமே அப்படித்தான் அரசியல் , பின் எப்படி தமிழ் வளரும் ?

இந்நாள் இந்தியினை தமிழகம் வெற்றிகரமாக விரட்டிவிட்ட பொன்னாள் என்பதால் இதனை தாய்மொழி தினமாக ஒவ்வொரு தமிழரும் கொண்டாடலாம்

வெல்க தமிழ்..